வெள்ளி, 10 ஜனவரி, 2020

அரசியலில் தடம் பதிப்போம்


அரசியலில் தடம் பதிப்போம்
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد: قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ      الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
முன்னுரை: அல்லாஹ் உலகில் மனிதனுக்கு பல அருட்கொடைகளை வழங்குகின்றான். அவற்றுள் முக்கியமானது ஆட்சி அதிகாரங்களாகும். இதனை அல்லாஹ் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோர்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி மனிதர்களின் தான் நாடியோர்களுக்கு வழங்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (سورة آل عمران : 26)
(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.''
ஆட்சியாளர்கள் இரு வகை:
ஆட்சி அதிகாரத்தை பெற்றோர்களில் இரு வகையினர் உண்டு.

1.   முஸ்லிம்கள்.

2.      முஸ்லிம் அல்லோரதோர்கள்.  இவர்களிலும் நல்லோர்கள் தீயோர்கள் என இரு பிரிவினர் உண்டு.

சிறந்த ஆட்சியாளர்கள்:

1.   சுலைமான் (அலை) அவர்கள்:
قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35) فَسَخَّرْنَا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخَاءً حَيْثُ أَصَابَ (36) وَالشَّيَاطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ (37) وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ (38) هَذَا عَطَاؤُنَا فَامْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ (39) وَإِنَّ لَهُ عِنْدَنَا لَزُلْفَى وَحُسْنَ مَآبٍ (ص:35 -40)

''என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய்'' எனக் கூறினார்.ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சமந்து) சென்று கொண்டிருந்தது. மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;. சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).''இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக் கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்). மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சியில் எறும்புகளுக்கும் பாதுகாப்பு உண்டு:
وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ (17) حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَاأَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18) فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ (سورة النمل : 17 -19)
ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பற்வைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி;) ''எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)'' என்று கூறிற்று. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ''என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!'' என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 27:17 -19(
ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)'' என்று ஏறும்புகள் கூறியதிலிருந்து மேற்கண்டவர்கள் அறிந்து கொண்டே உங்களை நசுக்கமாட்டார்கள் என்பதை எறும்புகள் அறிந்திருந்ததை அறிய முடிகின்றது.
2.   முஹம்மது (ஸல்) அவர்கள்:
மிகக் கொடியவர்களான யூதர்களுக்கும் உரிய நீதி :
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ (المائدة : 82)

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்'' என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، وَهُوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ» قَالَ: فَقَالَ الأَشْعَثُ: فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ اليَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ بَيِّنَةٌ»، قُلْتُ: لاَ، قَالَ: فَقَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} آل عمران: 77 إِلَى آخِرِ الآيَةِ  (صحيح البخاري )
'ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின் மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), 'உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, '(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்' என்று கூறினார்கள். நான்இ 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!' என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ: - زَعَمَ أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ - سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ: أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقُوا فِيهَا، وَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا، وَقَالُوا لِلَّذِي وُجِدَ فِيهِمْ: قَدْ قَتَلْتُمْ صَاحِبَنَا، قَالُوا: مَا قَتَلْنَا وَلاَ عَلِمْنَا قَاتِلًا، فَانْطَلَقُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ، فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا، فَقَالَ: «الكُبْرَ الكُبْرَ» فَقَالَ لَهُمْ: «تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَهُ» قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ، قَالَ: «فَيَحْلِفُونَ» قَالُوا: لاَ نَرْضَى بِأَيْمَانِ اليَهُودِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْطِلَ دَمَهُ، فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ (صحيح مسلم : 6898)
ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார்.
என் குலத்தாரில் சிலர் கைபர் நோக்கிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டனர். அவர் கிடந்த இடத்தில் இருந்த (யூத) மக்களிடம் அவர்கள்'எங்கள் நண்பரை நீங்கள் (அநியாயமாகக்) கொன்றுவிட்டீர்கள்' என்று கூறினர். (அந்த யூத) மக்கள் 'நாங்கள் (அவரைக்) கொல்லவுமில்லை. (அவரைக்) கொலை செய்தவர் யார் என எங்களுக்குத் தெரியவுமில்லை' என்று கூறினர். எனவே (கைபர் சென்ற) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். அங்கு எங்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டோம்' என்று கூறினர். அப்போது (பேச்சைத் துவங்கிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களை நோக்கி (நபி(ஸல்) அவர்கள் 'பெரியவர்களைப் பேசவிடு! பெரியவர்களைப் பேசவிடு!' என்று கூறினார்கள். பிறகு (கொல்லப்பட்டவர்களின் நண்பர்களைப் பார்த்து) நபி(ஸல்) அவர்கள் 'அவரைக் கொலை செய்தவர் யார் என்பதற்குச் சாட்சி கொண்டுவாருங்கள்!' என்று கூறினார்கள். அவர்கள், 'எங்களிடம் சாட்சியில்லை' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (யூதர்களான) அவர்கள் சத்தியம் செய்யட்டும்' என்றார்கள். அதற்கு (கொல்லப்பட்டவரின் நண்பர்களான) அவர்கள் 'யூதர்களின் சத்தியத்தை நம்பி) ஏற்றுக் கொள்ளமாட்டோம்' என்று கூறினர்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல் தாமே நூறு தர்ம ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்கள்

தீய ஆட்சியாளர்கள்:
1.   ஃபிர்அவ்ன்:
قال الله تعالي : وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (الأعراف : 141)

நினைவு கூறுங்கள்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.

தீயோர்கள் ஆட்சி செய்தால்?
1.   மனித உரிமைகளை பறிப்பார்கள்.
2.   நீதி செலுத்த மாட்டார்கள்.
3.   மக்களை நிம்மதியிழக்கச் செய்வார்கள்.
4.  இன்னும் பல ......... நம்முடைய நாட்டில் நடப்பது போல.

நாம் என்ன செய்ய வேண்டும்?
1.   உரிமைகளை ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டும்.

قال الله تعالي : فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِنْ رَبِّكَ وَالسَّلَامُ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى (47) إِنَّا قَدْ أُوحِيَ إِلَيْنَا أَنَّ الْعَذَابَ عَلَى مَنْ كَذَّبَ وَتَوَلَّى (طه : 48)

''நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்'' (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
''எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது'' (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).

2.   உரிமைகளை பாதுகாக்க போராட வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ» صحيح مسلم : 225

நபிகள் நாயகம் ஸல் அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் என் பொருளை அபகரித்துக் கொள்ள வருகிறார் நான் என்ன செய்வது என்று வினவ நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். அவருக்கு உனது பொருளை கொடுக்க வேண்டாம் என்று.  அதற்கவர் கூறினார் அவர் என்னோடு சண்டையிட்டால்? நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் நீயும் அவரோடு சண்டையிடு அதற்கவர் அவர் அச்சண்டையில் என்னை கொலை செய்து விட்டால்? (என் நிலை என்ன) என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நீ ஷஹீதாக கணிக்கப்படுவாய் என்க அதற்கவர் நான் அவரை கொலை செய்து விட்டால் என்னவாகும்? என்றார் அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவன் நரகிலிருப்பான் என்று கூறினார்கள். )நூல்: முஸ்லிம்(
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»  صحيح البخاري : 2480
யார் தன் பொருளை பாதுகாக்க போராடி கொலை செய்யப்பட்டாரோ அவர் ஷஹீதாவார்,
நூல் புகாரி 2480 . அறிவிப்பாளர் அப்துல்லா இப்னு அம்ர் ரலீ அவர்கள் .

3.   அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கீழ் காணும் விஷயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

1.   ஈமானை வலுப்படுத்த வேண்டும்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ (النور : 55)

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ''அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;'' இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.



2.   முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வலிமைப் பெற வேண்டும்.

3. உலமாக்கள் முஸ்லிம்களின் சிந்தனைகளை ஒருங்கிணைப்பதில் சிறப்புடன் பங்காற்ற வேண்டும்.

4.   இந்தி ஆட்சிப் பணிகளில் உள்ள அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும். உம்: I. A. S, I.P.S,  I.F.S,
இக்கல்வியின் பலன்கள் மகத்தானவை:
1. போதிய பொருளாதாரம்.
2.  உரிய மரியாதை
3.   இந்நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு
4.   மக்களுடன் நேரடி தொடர்பு
5. அரசுக்கும் மக்களுக்குமிடையில் பாலமாக செயல்பட முடியும்.
6.    மக்களின் உரிமைகளை வழங்க முடியும்.
7.   மக்களின் உள்ளங்களை வெல்ல முடியும்.
8. நீதியை நிலைநாட்டிட முடியும்.
9. மாற்றார்களின் உள்ளத்தில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் கண்ணியத்தை ஊன்ற முடியும்.
10. முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தடுத்து நிறுத்த முடியும். இதைத்தான் இன்றைய உயர்சாதி வர்க்கத்தினர்கள் செய்கின்றனர். என்றாவது ஒரு நாள் அவர்கள் வெளியில் வந்து நம்மைப் போல் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி இருக்கின்றார்களா? எவ்வித போராட்டங்களுமின்றி மத்தியில் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர்களுக்கு கிடைக்கக்கூடிய இடஒதுக்கீட்டில் 10 % பெற்று விட்டார்கள். ஆனால் நாமோ பல போராட்டங்கள் நடத்தியும் மாநிலத்தில் 3.5 %  பெற்றுள்ளோம்.

5.   இந்திய அரசியலைக் கைப்பற்றுவோம். ஏன்?
இன்று மத்தியில் ஆளும் அரசிற்கு குடியுரிமை திருத்த மசோதாவில் நாடு தளுவிய அளவில் எதிர்ப்புகள் இருந்தாலும் எதற்கும் அடிபணியாமல் தங்களின் கொள்கையில் பிடிவாதமாக செயல்படுவதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பெரும்பாண்மை பலம்தான். அது இல்லையெனில் இச்சட்டத்தை அவர்களால் கொண்டு வந்திருக்க முடியாது. ஆதலால்
1. நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக,
2. மேலும் தேவையான உரிமைகளைப் பெறுவதற்காக
3. மற்றவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்வதற்காக,
4.  இன்னும் பல..............நன்மைகளுக்காக அரசியல் அதிகாரத்தைக் கைப்பறற்றியே தீர வேண்டும்.

எப்படி கைப்பற்றுவது?
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மக்களின் வாக்குகளை கைப்பற்றுவதேயாகும். வாக்குகளை கைப்பற்ற வேண்டுமானால் மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க
1. நம் வாழ்க்கையில் மக்களுடனான பழக்க வழக்கங்களில் அழகிய பண்புகளை கடைபிடிக்க வேண்டும்.
2. அவர்களுக்கு முன், அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் சிறந்த அறிவாளியாக திகழ வேண்டும்.
3. அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக திகழ வேண்டும்.
4. அவர்களின் பொருளாதார வரவுகள் நம்மின் மூலம் அமைய வேண்டும்.
5. அவர்களுக்கு உரிய மரியாதையை, அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
6. அவர்களின் தேவைகளை இயன்றவரை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
7.          இறையச்சமும், நற்பண்பும், அறிவும், உழைப்பும், நேர்மையும் ஒருங்கேப் பெற்றவர்களை முஸ்லிம்களின் சார்பில் தேர்தல் களத்தில் இறக்க வேண்டும்.
8. வெற்றி பெற்ற பின்னும் அவரின் பிடி முஸ்லிம் தலைவர்களின் கையில் இருக்க வேண்டும்
9.         ஒரு போதும் ஊழல் கரைப் படிய அனுமதிக்கக்கூடாது.
10. சிறுக சிறுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
11. வெற்றி பெற்ற தொகுதியில் மக்களுக்கு அனைத்து வகையான சேவைகளையும் செய்ய வேண்டும்.
12. மக்களுக்கு வேண்டியவைகளை அவர்கள் கேட்கும் முன் செய்து முடிக்க வேண்டும்.
13. பிறகென்ன நம்மை அல்லாஹ் நாடினாலே தவிர அசைக்க முடியாது.
இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த பிழைகள்:
முஸ்லிம்களின் உள்ளங்களில் விதைக்கப்பட்ட தவறான எண்ணங்களின் ஒன்று நாம் சிறுபான்மையினர்கள். நமக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். நம்மால் அரசியலில் வெல்ல முடியாது என்பதாகும்.
இது தவறான எண்ணமாகும். ஏனெனில் நம்முடைய முன்னோர்கள் சிறுபான்மையினராக இருந்தும் 900 ஆண்டுகள் இந்தியாவை எப்படி ஆண்டார்கள்? இந்திய மக்கள் தொகையில் 5% இருக்கும் உயர்சாதியினர் இன்று எப்படி ஆளுகின்றார்கள்? அப்படியானால் நம்மால் ஏன் முடியாது?

முடிவுரை: அல்லாஹ்வின் உதவியைப் பெற்று மக்களின் அன்போடு ஆட்சி அதிகாரத்தில் நாம் உட்காரும் நாளை உறுதி செய்யும் வகையில் நம்முடைய செயல்பாடுகளை இனி வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.