بسم الله الرحمن الرحيم
நோயும் நோய் நிவாரணியும்.
***********************************
قول الله عز و جل : وإذا مرضت فهو يشفين
ولنبلونكم بشيئ من الخوف والجوع ونقص من الأموال والانفس والثمرات وبشر الصابرين
قول النبي صلى الله عليه وسلم : لكل داء دواء... (رواه أبو داود )
அகிலங்களை படைத்து பரிபாலனம் செய்யும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை வைத்திருக்கிறான். அது போல எல்லா வியாதிகளுக்கும் நிவாரணிகளையும் ஏற்படுத்தி இருக்கிறான். மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.
சமீப காலமாக பெயர் கூற முடியாத பல நோய்கள் சமூகத்தை ஆட்டிப் படைப்பதை பார்க்கிறோம்.குறிப்பாக டெங்கு காய்ச்சல் என்ற ஒரு வகை உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இதன் மூலம் இது வரை
19,000 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் குழந்தைகளும், பெண்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் நடவடிக்கையை விட டெங்கு மிக வேகமாக பரவி வருகிறது சராசரியாக நாளொன்றுக்கு நான்கைந்து மரணங்கள் நிகழ்கிறது தமிழக அரசு செய்வதறியாது திகைப்பதை நாம் பார்க்கிறோம்.
எனவே நோய்கள் குறித்தும் நோய் நிவாரணி குறித்தும் நம் மார்க்கம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். பிறருக்கும் போதிப்போம்.
நோய்க் காரணிகள்...
1. இறைவனின் சோதனை.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ⚪
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2;155)
நமக்கு ஏற்படும் நோய்கள் இறைவனின் சோதனையாலும் ஏற்படுகிறது. அதை பொறுமையாலும் துஆவின் மூலமும் எதிர் கொள்ள வேண்டும்.
2. மனிதர்களின் அலட்சியம்.
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ⚪
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன் : 42:30)
நோய்க் காரணிகளில் ஒன்று மனிதர்களின் அலட்சியப் போக்காகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை உட்கொள்வது, தமக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களை செய்வது, வயிறு நிரம்ப சாப்பிடுவது போன்றவையாகும். தமிழில் 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்று சொல்வார்கள். அது போல எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை.
அல்லாஹ் திருமறை குர்ஆனில்
كلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين⚪
"சாப்பிடுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் அவன் வீண் விரயம் செய்பவர்களை பிரியப் பட மாட்டான்" என்று அறிவுறுத்துகிறான்.
உணவுகளை கீழே கொட்டுவது மட்டும் வீண் விரயமல்ல தேவையில்லாமல் வயிற்றில் கொட்டுவதும் தான்! கீழே கொட்டுவதால் விரயம் மட்டும் தான் வயிற்றில் கொட்டுவதால் நோயும் பாவங்களும் சேர்ந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். "நிரப்பப்படும் பாத்திரங்களில் மிகக் கெட்டது வயிராகும்"
3. சுகாதாரம் பேணாமை.
"والله يحب المطهرين"
"அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்"
சுத்தம் சுகாதாரத்தை இஸ்லாம் வலியுறுத்தியதைப் போல எந்த மார்க்கமும் வலியுறுத்தியதில்லை ஆனால் சுத்தத்தின் விஷயத்தில் நம் சமூகம் தான் மிகவும் பின்னடைவில் இருக்கிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சுத்தமான வஸ்துக்களை மட்டுமே சாப்பிடும் படி வலியுறுத்தியிருக்கிறார்கள். எனவே தான் மதுவும், கெட்டுப் போன நாற்றமெடுக்கும் பொருட்களும், உடலுக்கு தீங்கிழைக்கும் பொருட்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துகிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சுத்தமாக இருப்பதை எவ்வளவு வலியுறுத்தி கூறினார்கள் என்றால் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்குவது மட்டுமல்ல ஐவேளை தொழுகைக்கும் மிஸ்வாக் செய்வதை சுன்னத்தாக்கினார்கள்.
"لولا أن أشق علي أمتي لأمرتهم باالسواك عند كل صلوة"
(رواه الترمذي)
"என் உம்மத்தாருக்கு சிரமம் ஏற்படும் என்று இல்லையானால் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் (பற்களை சுத்தம் செய்யுமாறு) நான் ஏவியிறுப்பேன்"
என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல் :திர்மிதீ)
அதுமட்டுமல்ல சுத்தமில்லாமல் தொழுகையில் நுழைய முடியாது.
"مفتاح الصلاة الطهور "
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் "தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும் " (நூல்: திர்மிதீ)
حث النبي صلى الله عليه وسلم على غسل الثياب وتنظيفها ، فعند أبي داود في سننه (4062) عن جابرِ بنِ عبدِ الله ، قال: أتانا - رسولُ الله - صلَّى الله عليه وسلم - فرأى رجُلاً شعِثاً قد تفرَّقَ شَعرُهُ ، فقال: "أما كان هذا يَجدُ ما يُسَكِّنُ به شَعْرَهَ؟ " ورأى رجُلاً آخر عليه ثيابٌ وسِخَة فقال: "أَما كان هذا يجدُ ما يَغسِلُ به ثوبَهُ؟ ". والحديث صححه الشيخ الألباني في السلسلة الصحيحة (493) .
ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆர்வப் படுத்தினார்கள்.
தலைவிரி கோலமாக இருந்த மனிதரை பார்த்து இவருக்கு இவருடைய முடியை ஒழுங்கு படுத்த ஏதும் கிடைக்கவில்லையா? என்று கூறினார்கள்.( நூல் : அபூ தாவூத்)
5-ترغيب النبي صلى الله عليه وسلم أمته ببناء المساجد في البيوت ، مع تنظيفها وتطييبها ، فعن عائشة رضي الله عنها قَالَتْ:" أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وسلم ببنيان المساجد في الدور ، وأمر أن تنظف وتطيب ". أخرجه أحمد في "المسند" (26386) ، وصححه الشيخ الألباني في "السلسلة الصحيحة" (2724)
வீடுகளில் மஸ்ஜித்களை ஏற்படுத்திக் கொள்ளும் படியும் அதை சுத்தமாக பராமரிக்கும் படியும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஏவினார்கள். (நூல் : அஹ்மத்)
6-حث النبي صلى الله عليه وسلم أمته على تنظيف أفنية البيوت وتطهيرها ، حيث قال صلى الله عليه وسلم :" طَهِّرُوا أَفْنِيَتَكُمْ ، فَإِنَّ الْيَهُودَ لَا تُطَهِّرُ أَفْنِيَتَهَا " . أخرجه الطبراني في "المعجم الأوسط" (4057) ، وحسنه الشيخ الألباني في "السلسلة الصحيحة" (236) .
உங்களுடைய வீட்டு முற்றங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் யூதர்கள் வீட்டின் முற்றங்களை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் என்று நபிகள்நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல் :தப்ரானி)
ولم يقف الأمر بالنظافة على مجرد النظافة الشخصية ، ونظافة المساجد والبيوت ، بل وصل الأمر إلى تنظيف الطرق ، حتى أصبح ذلك عادة مطردة تعلمها الصحابة رضوان الله عليهم ونقلوها ، حتى إن محمد بن سيرين يقول : لَمَّا قَدِمَ أبو موسى الْأَشْعَرِيُّ الْبَصْرَةَ، قَالَ لَهُمْ:" إِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ بَعَثَنِي إِلَيْكُمْ لِأُعَلِّمَكُمْ سُنَّتَكُمْ ، وَإِنْظَافَكُمْ طُرُقَكُمْ " . أخرجه ابن أبي شيبة في "مصنفه" (25923) بإسناد صحيح
மஸ்ஜித்களையும், வீடுகளை மட்டும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சுத்தம் செய்ய சொல்லவில்லை தெருக்களை சுத்தம் செய்யும் படியும் கட்டளை பிறப்பித்தார்கள். அது ஸஹாபாக்களுக்கு வழக்கமாகிப் போனது தாங்களும் கடைபிடித்து பிறர்களையும் ஏவக் கூடியவர்களாக மாறினார்கள்.
ஹஜ்ரத் அபூ மூஸா அல்அஷ்அரீ ரலி அவர்கள் பஸரா நாட்டிற்கு வந்த போது அந்த மக்களிடம் கூறினார்கள் 'ஜனாதிபதி என்னை உங்களிடம் ஒரு நல்ல நடைமுறைகளை கற்பிக்க அனுப்பி வைத்தார் உங்களுடைய தெருக்களை நீங்கள் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று (கற்றுக் கொடுக்கும் படி கூறினார்) (நூல் : இப்னு அபீ ஷைபா)
அனைத்து மார்க்க சட்ட நூல்களும் சுத்தத்தை வலியுறுத்துகிற பாடங்களைக் கொண்டு தான் துவங்குகிறது. எனவே சுத்தம் இல்லாதது தான் நோய்களுக்கான மிக முக்கியமான காரணியாகும்.
நோய் நிவாரணியும், தீர்வும்.
1.உணவில் கட்டுப்பாடு.
நாம் உண்ணக் கூடிய உணவு சுத்தமானதாகவும், அளவாகவும் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
روى الترمذي في صحيحه(1) عَنْ المِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ـ يَقُولُ: مَا مَلأ آدَمِيٌّ وِعَاءً شَرٌّا مِن بَطْنٍ، بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ قَالَ أَبو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ * كما رواه ابن ماجه في سننه.
"ஆதமுடைய மகன் நிரப்பும் பாத்திரத்தில் வயிற்றை விட மிகக் கெட்ட பாத்திரம் ஏதுமில்லை. அவனுடைய முதுகுத்தண்டை நிமிர்த்தும் அளவு சில கவள உணவே அவனுக்கு போதுமானது. சாப்பிடும் போது (வயிற்றில்)மூன்றில் ஒரு பகுதி உணவுக்கும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீருக்கும், மூன்றில் ஒரு பகுதி மூச்சு விடவும் இருக்கட்டும்" (நூல் : திர்மிதீ )
2. நோன்பு நோற்பது.
நஃபிலான நோன்புகளை நோற்பது குடலை சுத்தப்படுத்தி நோய்கள் வராமல் பாதுகாக்கும். நோய் வருவதற்கு முன்பே தற்பாதுகாப்பாக இது அமைகிறது.
நோன்பு நரகிலிருந்து மட்டுமல்ல நோயிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும்.
3. துஆ செய்வது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நோய்களிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்கும் படி கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
عن العباس بن عبد المطلب قال : قلت يا رسول الله علمني شيئا أسأله الله , قال : ( سل الله العافية) فمكثت أياما ثم جئت فقلت : يا رسول الله علمني شيئا أسأله الله , فقال لي : ( يا عباس , يا عم رسول الله , سل الله العافية في الدنيا والآخرة ) (رواه الترمذي )
அல்லாஹ்விடம் கேட்பதற்கு ஒரு துஆவை கற்றுத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று அப்பாஸ் ரலிஅவர்கள் கேட்க
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தனது பெரிய தந்தை அப்பாஸ் ரலி அவர்களுக்கு ஈருலகிலும் ஆரோக்கியமான வாழ்வை அல்லாஹ்விடம் கேட்கும் படி கூறினார்கள்.
وقال الجزري في عدة الحصن الحصين : "لقد تواتر عنه صلى الله عليه وسلم دعاءه بالعافية وورد عنه صلى الله عليه وسلم لفظا ومعنى من نحو من خمسين طريقا" ومن أشهر هذه الأحاديث الصحاح قوله صلى الله عليه وسلم ( ما سئل الله شيئا أحب إليه من أن يسأل العافية ) ( وقال صلى الله عليه وسلم ( سلوا الله العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية)
அல்லாமா جزري ரஹ் அவர்கள் 'ஹிஸ்னுல் ஹஸீன்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் عافية தை குறித்து ஐம்பதுக்கும் நெருக்கமான துஆக்களை கூறியுள்ளார்கள். அதில் பிரபல்யமானது "அல்லாஹ்விடம் عافية - தை விட அவனுக்கு பிரியமான ஒரு விஷயத்தை கேட்டு விட முடியாது "
(நூல்: அஹ்மத் )
மற்றும் " அல்லாஹ்விடம் பத்தினித் தனத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கேளுங்கள் ஈமானுக்கு (நம்பிக்கை) பிறகு ஆரோக்கியத்தை விட சிறந்த ஒன்றை யாரும் கொடுக்கப் பட முடியாது. (நூல் : திர்மிதீ )
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்கு பின்பும் இந்த துஆக்களை ஓதக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
நமக்கு நோயை தருபவனும் அவன் தான் அதிலிருந்து நிவாரணத்தையும் அவனே தருகிறான் ஸையிதுனா இப்ராஹீம் நபி அலை அவர்கள் கூறியதை இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
"وإذا مرضت فهو يشفين"
"நான் நோயுற்றால் அவனே நிவாரணமளிக்கிறான்" இது எவ்வளவு மரியாதையான வார்த்தை நோய் என் தவறுகளால் ஏற்படுகிறது இறைவன் தன் கருணையால் எனக்கு நிவாரணமளிக்கிறான்.
இறைவனிடம் நாம் தவறாமல் கேட்க வேண்டிய ஆரோக்கியமான வாழ்வை தரும் துஆக்களில் சில :-
"اللهم إني أعوذ بك من البرص والجذام والجنون ومن سيئ الاسقام " (رواه أبو داود)
عن عبدالله بن عمر - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ((اللهم إني أعوذ بك من زوال نعمتك، وتحوُّل عافيتك، وفُجاءة نقمتك، وجميع سخطك))؛ رواه مسلم
عن عثمان بن عفان رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
( مَنْ قَالَ : بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ ) .
رواه أبو داود ( 5088 )
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ ، قَالَ : ( أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ : أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ ، لَمْ تَضُرَّكَ ) .
رواه مسلم ( 2709 ) .
3. عن عبد الله بن خبيب رضي الله عنه قال : خَرَجْنَا فِي لَيْلَةِ مَطَرٍ وَظُلْمَةٍ شَدِيدَةٍ نَطْلُبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ لَنَا ، فَأَدْرَكْنَاهُ فَقَالَ : ( أَصَلَّيْتُمْ ؟ ) فَلَمْ أَقُلْ شَيْئًا ، فَقَالَ : ( قُلْ ) ، فَلَمْ أَقُلْ شَيْئًا ، ثُمَّ قَالَ : ( قُلْ ) ، فَلَمْ أَقُلْ شَيْئًا ، ثُمَّ قَالَ : ( قُلْ ) ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ مَا أَقُولُ ؟ قَالَ : ( قُلْ : ( قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي وَحِينَ تُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ ) . رواه الترمذي ( 3575 )
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த மருத்துவத்தில் சில:-
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
وعند مسلم: إن في الحبة السوداء شفاء من كل داء إلا السام. والسام الموت.
கருஞ்சீரகத்தில் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது மரணத்தை தவிர.
(நூல் : முஸ்லிம்)
فقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال: عليكم بالشفاءين العسل والقرآن. رواه الحاكم وصححه ووافقه الذهبي
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். "நீங்கள் இரண்டு நிவாரணிகளை பற்றிப் பிடியுங்கள் ஒன்று தேன் மற்றொன்று அல்குர்ஆன்"
(நூல் : ஹாகிம்)
ورد في الصحيحين عن أنس بن مالك: (خير ما تداويتم به الحجامة)
"நீங்கள் மருத்துவம் செய்வதில் சாலச்சிறந்தது ஹஜாமத் ஆகும்" ( இரத்தம் குத்தி எடுப்பது)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த மருத்துவத்தை புறக்கணித்து விட்ட அவர்களின் சமூகம் நோய்களில் சிக்கித் தவிப்பதும், ஆஸ்பத்திகளில் வலம் வருவதும் ஆச்சரியப் படும் விஷயமல்ல..!
இஸ்லாம் ஆரோக்கியமான வாழ்விற்கு காட்டித் தந்த வழிகளை நாம் கடைபிடித்தால் நாம் ஆரோக்கியத்தில் முன்னுதாரணமாக திகழலாம்.
«3876» حدثنا محمد بن عبادة الواسطي حدثنا يزيد بن هارون أخبرنا إسماعيل بن عياش عن ثعلبة بن مسلم عن أبي عمران الأنصاري عن أم الدرداء عن أبي الدرداء قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الله أنزل الداء والدواء وجعل لكل داء دواء فتداووا ولا تداووا بحرام)).
(رواه أبو داود )
அல்லாஹ் தான் நோய்களையும் அதற்கான நிவாரணங்களையும் இறக்கி வைத்தான் அவன் எல்லா நோய்களுக்கும் நிவாரணத்தை படைத்துள்ளான் எனவே நோய்களுக்கு சிகிச்சை செய்யுங்கள் ஆனால் அல்லாஹ் தடுத்த ஹராமானதைக் கொண்டு மருத்தும் செய்யாதீர்கள். என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
( நூல் : அபூ தாவூத் )
நாம் என்ன தான் மருத்துவம் செய்தாலும் நிவாரணம் இறைவனின் கைகளில் தான் உள்ளது. அவன் நிவாரணத்தை நாடவில்லை எனில் எந்த சிகிச்சைகளும் பயனளிக்காது. எனவே அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும் மருந்துகள் மீதல்ல.....
டெங்கு காய்ச்சல்.
காய்ச்சல்கள் குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
وفي صحيح مسلم عن جَابِر بْن عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيَّبِ فَقَالَ مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ تُزَفْزِفِينَ قَالَتْ الْحُمَّى لَا بَارَكَ اللَّهُ فِيهَا فَقَالَ: ((لَا تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ))
"நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உம்முஸ் ஸாயிப் ரலி என்ற பெண்மணியின் வீட்டுக்கு சென்று ام السائب- பே உனக்கு என்ன ஆனது களைத்துப் போய் இருக்கிறாயே ! என்று கேட்க அதற்கு அந்த பெண்மணி எனக்கு காய்ச்சல் அல்லாஹ் அதை பரகத் அற்றதாக ஆக்குவானாக என்று திட்டினாள். அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் நீங்கள் காய்ச்சலை திட்டாதீர்கள் அது இரும்பின் துருவை நெருப்பு நீக்குவதைப் போல உங்களுடைய பாவங்களை நீக்கி விடும்"
(நூல்: முஸ்லிம்)
நோய் விசாரிப்பது.
நோயுற்றவர்களை சந்திப்பதும், அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டித் தந்த அழகிய வழிமுறையாகும்.
3616 - ﺣﺪﺛﻨﺎ ﻣﻌﻠﻰ ﺑﻦ ﺃﺳﺪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺨﺘﺎﺭ، ﺣﺪﺛﻨﺎ ﺧﺎﻟﺪ، ﻋﻦ ﻋﻜﺮﻣﺔ، ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺩﺧﻞ ﻋﻠﻰ ﺃﻋﺮاﺑﻲ ﻳﻌﻮﺩﻩ، ﻗﺎﻝ: ﻭﻛﺎﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫا ﺩﺧﻞ ﻋﻠﻰ ﻣﺮﻳﺾ ﻳﻌﻮﺩﻩ ﻗﺎﻝ: «§ﻻ ﺑﺄﺱ، ﻃﻬﻮﺭ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ» ﻓﻘﺎﻝ ﻟﻪ: «ﻻ ﺑﺄﺱ ﻃﻬﻮﺭ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ» ﻗﺎﻝ: ﻗﻠﺖ: ﻃﻬﻮﺭ؟ ﻛﻼ، ﺑﻞ ﻫﻲ ﺣﻤﻰ ﺗﻔﻮﺭ، ﺃﻭ ﺗﺜﻮﺭ، ﻋﻠﻰ ﺷﻴﺦ ﻛﺒﻴﺮ، ﺗﺰﻳﺮﻩ اﻟﻘﺒﻮﺭ، ﻓﻘﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻓﻨﻌﻢ ﺇﺫا» (رواه البخاري)
3616. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், 'கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்' என்று கூறுவார்கள். (தம் அந்த வழக்கப்படியே) நபி(ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், 'கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்' என்று கூறினார்கள்.
(இதைக் கேடட்) அந்தக் கிராமவாசி, 'நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகிக் கொதிக்கிற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 61.
எனவே நாம் காய்ச்சலுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் அதே சமயம் அதை திட்டக் கூடாது. நிராசையாகவும் கூடாது இறைவனின் கருணை மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் நோயை நமக்கு வழங்கியவன் இறைவன் ஒருவேளை நம் பாவங்களை மன்னிக்க அவைகளை காரணமாக்கி இருக்கலாம்.
வல்ல ரப்புல் ஆலமீன் நமக்கும் நமது மனைவி மக்களுக்கும் நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்வை தந்து அதில் நல்லமல்கள் செய்து வாழ தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.