வியாழன், 7 பிப்ரவரி, 2019

சுன்னத் வல்ஜமாஅத் தெளிவு பெற வேண்டிய கட்டாயம்.


சுன்னத் வல்ஜமாஅத் தெளிவு பெற வேண்டிய கட்டாயம்.
******
قول الله عز و جل :
**
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ العقاب
قوله عليه الصلاة والسلام :
****
"ستفترق أمتي على ثلاث وسبعين فرقة، كلها في النار إلا واحدة)) قيل: ومن هي يا رسول الله؟ قال: ((الجماعة)). وفي رواية أخرى: ((ما أنا عليه وأصحابي))
(رواه أبو داود والترمذي)
புகழனைத்தும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கு மட்டும் உரித்தாகட்டுமாக! அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் சத்திய ஸஹாபாக்கள் மற்றும் அவர்கள் வழிநடந்த நல்லடியார்கள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயமாகும். அல்லாஹ் திருமறை குர்ஆனில் கூறுகிறான்.

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ العقاب
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.(அல்குர்ஆன் 59:7)
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3: 31)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டித் தந்த வழியில் எந்த மாற்றமும் செய்யாமல் ஸஹாபாக்கள் வாழ்ந்து காட்டினார்கள் அந்த வாழ்வியலைத் தான் நாம் சுன்னத்தான வாழ்வு என்றும் அதைப் பின்பற்றுபவர்களுக்கு "அஹ்லுஸ் ஸுன்னாகள்" என்றும் குறிப்பிடுகிறோம்.
ஸஹாபாக்களின் காலகட்டத்திற்கு பின்னால் நம்பகத்தன்மை குறைந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஸஹாபாக்களின் வழியிலிருந்து வெளியேறிய வழிகெட்ட கூட்டங்களில் முதலானது خارجية காரிஜிய்யா என்ற கூட்டம் . இவர்களின் தவறான கொள்கைகளில் பிரதானமானது " பெரும் பாவம் செய்தவர்கள் ஈமானை விட்டு வெளியேறி காஃபிராகி விட்டார்கள் என்பது... ( அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை பெரும் பாவம் செய்தவர்களும் முஸ்லிம்கள் தான் அவர்களிடம் ஈமானுக்கு புறம்பான செயல்கள் ஏற்படாத வரை)
இவர்களைத் தொடர்ந்து  معتزلة முஃதஜிலா என்ற ஒரு  கூட்டம் உருவானது இவர்களின் வழிகெட்ட கொள்கைகளில் கவனிக்கத்தக்கது  "பெரும் பாவம் செய்தவன் ஈமானிலிருந்து வெளியேறி விட்டான் ஆனால் குஃப்ரில் நுழையவில்லை இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலையில் இருக்கிறான் என்பது இன்னும் பல...
هو أبو حذيفة واصل بن عطاء المخزومي (700 - 748)، الملقب بالغزال الألثغ، كان تلميذاً للحسن البصري، ومؤسس فرقة المعتزلة. حصل الخلاف بينه وبين الحسن في حكم مرتكب الكبيرة، فاعتزل حلقة الحسن، فقال الحسن "اعتزلنا واصل" فتسمت فرقته بالمعتزلة وانضم إليه عمرو بن عبيد. كانت زوجته هي أخت عمرو بن عبيد. توفي في عام 131 هـ الموافق لـ 748 م في المدينة المنورة
இந்த கொள்கையை தோற்றுவித்தவர் வாஸில் இப்னு அதாஎன்பவர் ஆகும் . இவர்  ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களின் மாணவர்களில் ஒருவராகா இருந்த்தார் . பெரும் பாவம் செய்தவர்கள் முஃமினா? அல்லது ஈமானிலிருந்து வெளியேறிவரா? என்பதில் வாஸில் தனது ஆசிரியரோடு கருத்து வேற்றுமை கொண்டு அவர்களின் சபையிலிருந்து வெளியேறிவர்..... இவர் வெளியேறிய சமயத்தில் ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் 'اعتزلنا واصل' (வாஸில் நம்மிடமிருந்து நீங்கி விட்டார் ) என்று கூறினார்கள் இதிலிருந்து தான் معتزلة கள் ( அஹ்லுஸ் ஸுன்னாவிலிருந்து நீங்கியவர்கள்) என்று இப்பிரிவினருக்கு சொல்லப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறிய நரகம் செல்லும் வழிகெட்ட கூட்டங்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரு பிரிவினர்களின் வழிவந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ستفترق أمتي على ثلاث وسبعين فرقة، كلها في النار إلا واحدة)) قيل: ومن هي يا رسول الله؟ قال: ((الجماعة)). وفي رواية أخرى: ((ما أنا عليه وأصحابي))
(رواه أبو داود والترمذي)
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  என்னுடைய உம்மத் (சமுதாயத்தினர்) எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரிந்து போவார்கள். அவர்களில் ஒரு பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் நரகம் செல்வார்கள் என்று கூறினார்கள். சுவர்க்கம் செல்லும் ஒரு பிரிவினர் யார் என நாயகத் தோழர்கள் கேட்டனர். என்னுடைய( சுன்னத்தான) வழி முறைகளையும் என்னுடைய தோழர்களான ஸஹாபிகளின் வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்கள் தான் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ لَعَدُوِّهِمْ قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ إِلَّا مَا أَصَابَهُمْ مِنْ لَأْوَاءَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ"( رواه أحمد )
என் சமூகத்தில் ஒரு கூட்டம் உலக அழிவு நாள் வரை எதிரிகளை மிகைத்திடும் வகையில் உண்மையின் மீது  நிலைத்திருப்பார்கள் அவர்களின் எதிர்ப்பாளர்கள் சிரமங்கள் தருவதை தவிர வேறு எந்த இடையூறும் செய்திட முடியாது . (நூல் : அஹ்மத்)

புகாரீ ஷரீஃபின் ஷரஹ் "உம்ததுல் காரீ"யில் இமாம் பத்ருத்தீன் அல் அய்னீ ரஹ் அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும்  மார்க்கத்தில் மிகைத்து நிலைத்து நிற்கும் கூட்டம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று விளக்கமளித்துள்ளார்கள்.
அஹ்லுஸ் ஸுன்னா என்ற பெயர் எப்படி வந்தது?
-------------------------------------------------------------------
بعد القرن الهجري الثاني بحسب ما ذكر ابن خلدون وغيره أن جماعة من السلف تعلقوا بظواهر نصوص متشابهة وبالغوا في إثبات الصفات فوقعوا في التجسيم، وبالمقابل فأن المعتزلة بالغوا في التنزيه فأنكروا صفات ثابتة، وأما أهل السنة حينها فكان منهم جماعة مثل: أحمد بن حنبل وداود بن علي الأصفهاني وآخرون أخذوا بمنهج المتقدمين عليهم من أصحاب الحديث كمالك بن أنس وغيره فقالوا في النصوص المتشابهة: نؤمن بها كما هي ولا نتعرض لتأويلها، وكان جماعة من أهل السنة في عصر السلف أيدوا عقائد السلف بحجج كلامية وبراهين أصولية. بعد حدوث بدعة المعتزلة والمشبهة وغيرها وانتشار مقولاتهم في أواخر عصر السلف بحسب ما ذكر ابن خلدون وغيره قام أبو الحسن الأشعري وأبو منصور الماتريدي بإيضاح عقائد السلف من أهل السنة ودفع الشبه عنها وتأييدها بالأدلة العقلية والنقلية بمناهج كلامية وكتبا عن مقالات الفِرق، فكان من ذلك تمايز هذه الفِرق التي كتب العلماء عنها في "كتب الفِرق" جلها في القرن الرابع الهجري ومنهم عبد القاهر البغدادي من فقهاء المذهب الشافعي في كتابه: "الفَرق بين الفِرق"، ذكر فيه أهل السنة والجماعة هي الفِرقة الثالثة والسبعون وأنهم جماعة واحدة من فريقي الرأي والحديث، وكلهم متفقون على قول واحد في أصول الدين، وربما اختلفوا في بعض فروعها اختلافا لا يوجب تضليلا ولا تفسيقا، وكانت التسمية تطلق على أهل السنة والجماعة تمييزا لهم عن الخوارج والمعتزلة والمجسمة وفرق التشيع وغيرها من الفِرق.

அல்லாமா இப்னு கல்தூன் ரஹ் அவர்கள்  குறிப்பிடுகிறார்கள் முன்னோர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் ஸிஃபாத்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் ஸிஃபாத்களில் அடியார்களுக்கு ஒப்பானவைகளை எந்த விளக்கமும் கூறாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் குர்ஆனில் எங்கெல்லாம் متشابهة ஆன (நம் அறிவுக்கு உடனடியாக  விளங்காத) ஆயத்துகள் வருகிறதோ உதாரணமாக   "அல்லாஹ்வுடைய கரம் அவர்களின் கரங்களின் மீதுள்ளது" போன்ற ஆயத்துகளில் "அல்லாஹ்விற்கு கரம் உள்ளது அது எப்படி உள்ளது என்று நாம் கேள்வி கேட்க மாட்டோம் அது பற்றி நமக்கு தெரியாது அதை அப்படியே நம்பிக்கை கொள்வோம்" என்று முடிவெடுத்த போது அல்லாஹ்வுடைய ஸிஃபாத்களை அடியார்களின் தன்மையோடு ஒப்பிடுவதிலிருந்து அல்லாஹ்வை பரிசுத்தப் படுத்துகிறோம் என்று கிளம்பியவர்கள் இந்த முஃதஜிலாக்கள் எனவே அப்படிப்பட்ட ஸிஃபாத்கள் அல்லாஹ்விற்கு இல்லை என்று மறுக்கத் துவங்கினார்கள் இவ்வாறாக பல விஷயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கைகளில் இருந்து தடம் புரண்டு வழிகேட்டிலே வீழ்ந்து போனார்கள்.
முன்னோர்கள் அந்த "முதஷாபிஹான ஆயத்துகளுக்கு" சொன்ன விளக்கங்களை தெளிவுபடுத்துவதற்காக ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டிலே  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைக் கோட்பாடுகளை வரையறுத்து  متأخرين களில்  ( பின்னோர்கள் - முன்னவர்களின் வழி வந்தவர்களில்) இரண்டு பெரும் இமாம்கள் முற்பட்டார்கள்.
وأهل السنة والجماعة هم السواد الاعظم الفرقة الناجية وقد حدث بعد سنة مائتين وستين للهجرة انتشار بدعة المعتزلة والمشبهة وغيرهما فقيض الله إمامين جليلين أبا الحسن الاشعري المتوفى سنة 324 هـ وأبا منصور الماتريدي المتوفى سنة 333 هـ رضي الله عنهما فقاما بايضاح عقيدة أهل السنة التي كان عليها الصحابة ومن تبعهم بإيراد أدلة نقلية وعقلية مع رد شبه المعتزلة والمشبهة وغيرهمافنسب اليهما اهل السنة فصار يقال لاهل السنة أشعريون وماتريديون .
அவர்களில் ஒருவர்
الإمام الهمام ابو منصور" "الماتريدي
மற்றொருவர் "الإمام الهمام ابو الحسن الأشعري" ஆவார்கள் இவர்கள் இருவரும் முன்னோர்களின் கருத்துக்களுக்கு மக்களின் மனம் ஏற்றுக் கொள்ளும் படியான விளக்கங்களை கூறி தெளிவுபடுத்தினார்கள் உதாரணமாக "அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு இருக்கிறது "  என்பது போன்று அந்த பொருள் விளங்காத ஆயத்துகளுக்கெல்லாம்  விளக்கங்களைக் கூறி "கிதாபுல் ஃபிரக்" என்று ஒரு ஆக்கத்தை உருவாக்கினார்கள் இது தான் அஹ்லுஸ் ஸு ன்னத் வல் ஜமாஅத்தின் முதல் கொள்கை விளக்க நூலாகும்...
இதைத் தொடர்ந்து இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் "الفرق بين الفرق"  ('அல் ஃபர்கு பய்னல் ஃபிரகி'  "இஸ்லாத்தில் பல பிரிவினர்களுக்கு மத்தியில் உள்ள வித்தியாசங்கள்") என்ற கொள்கை விளக்க நூல்கள் எல்லாம் உருவானது.
அதே போல அலீ ரலீ அவர்கள் தான் கிலாஃபத்தை கொண்டு முந்தியவர்கள் என்ற கருத்தில் ஹஜ்ரத் அபூபக்கர் ரலீ மற்றும் உமர் ரலீ உஸ்மான் ரலீ போன்ற  خلفية راشدين களின் விஷயத்தில் வறம்பு மீறிய கருத்துக்களை முன் வைக்கும் ராஃபிலாக்கள்- ஷீஆக்கள்  போன்றவர்களும் வழிகெட்ட கூட்டத்தினரே அஹ்லுஸ் ஸுன்னாவிலிருந்து நீங்கியவர்களே...
ஆக இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வைத்து தான் அஹ்லுஸ் ஸுன்னாவும் வழிகெட்ட கூட்டமும் பிரித்தறியப்படுகிறதே தவிர உட்பிரிவுச் சட்டங்களில் ஏற்படுகிற சாதாரண வித்தியாசங்களை வைத்தல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
அஹ்லுஸ் ஸுன்னாவில் உள்ள மாதுரீதீ இமாமைப் பின்பற்றுபவர்களுக்கும் , அஷ்அரீ இமாமைப் பின்பற்றுபவர்களுக்கும் மத்தியில்  அஸலான கொள்கையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை மாறாக உட்பிரிவுச் சட்டங்களில் செயல்ரீதியான கருத்து வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கிறது ஹனஃபிய்யாக்களுக்கும் , ஷாஃபியாக்களுக்கும் மத்தியில் உள்ளதைப் போல அது எந்த வகையிலும் தடுக்கப்பட்டதல்ல மாறாகاختلاف الائمة رحمة للأمة    "இமாம்களின் கருத்து வேற்றுமை சமுக மக்களுக்கு பெரும் கிருபை" என்ற வகையைச் சார்ந்ததாகும்.
இதனடிப்படையில் தான் இமாம்கள் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு இவ்வாறு விளக்கம் கூறியுள்ளார்கள்...
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர் யார்?
கேள்வி :
நம் நாட்டில் எல்லா இயக்கத்தினரும் தங்களை அஹ்லுஸ்ஸு ன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.   தேவ்பந்த் உலமாக்கள், தப்லீக் ஜமாஅத்தினரையும் கடுமையாக சாடி அவர்களை காபிர்கள்  என ஏசும் ஒரு இயக்கத்தினரும், தங்களை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறுகின்றனர். உண்மையில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்பது என்ன?



அவர்கள்
கொள்கைகள் செயல்முறைகள், அறிகுறிகள் யாது?

பதில் :
சுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். ஜமாஅத் என்பது நாயகத் தோழர்களான ஸஹாபிகளின் ஜமாஅத் (குழு) என்பதை குறிக்கும். அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அறியப்பட்ட சுன்னத்தான வழிமுறைகளையும், நாயகத் தோழர்களான ஸஹாபிகளின்  நடைமுறைகளையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுபவர்களை சுன்னத் வல்ஜமாஅத்தினர் எனக் கூறப்படும். இதை சற்று விபரமாக அறிவோம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  என்னுடைய உம்மத் (சமுதாயத்தினர்) 73 பிரிவுகளாக பிரிந்து போவார்கள். அவர்களில் ஒரு பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் நரகம் செல்வார்கள் என்று கூறினார்கள். அந்த சுவர்க்கம் செல்லும் ஒரு பிரிவினர் யார் என நாயகத் தோழர்கள் கேட்டனர். என்னுடைய( சுன்னத் தான) வழிமுறைகளையும் என்னுடைய தோழர்களான ஸஹாபிகளின் வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியவர்கள் தான் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதன் விளக்கமாவது,
அவர்கள் (மீதமுள்ள 72 கூட்டத்தினர்) தீய கொள்கைகளால் தவறான நடத்தைகளால் நரகம் புகுவார்கள். இந்த தீய கொள்கைகள் குஃப்ரு என்னும் இறை மறுப்பின் எல்லையை எட்டி விட்டால் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். இல்லையேல் தண்டனை பெற்ற பின் நரகிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
சுன்னத்தையும் ஜமாஅத்தையும் பின்பற்றுதல் ஒவ்வொரு முஃமீன் (விசுவாசி) மீதும் கடமையாகும். சுன்னத் என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அவர்களால் அறியப்பட்ட வழிமுறையாகும். ஜமாஅத் என்பது ஸஹாபிகள் ( நாயகத் தோழர்கள்) ஒன்றுபட்ட வழியாகும். குறிப்பாக நாற்பெரும் கலீபாக்களில் இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்- பிறருக்கு வழி காட்டவும் தக்கவர்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த நல்ல அடைமொழியை எல்லோரும் தங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது உண்மையே! ஆனால் யாருக்கு இது பொருந்தி வரும்? '
பஹ்ருர் ராயிக்'என்பது எல்லா அரபிக் கல்லூரிகளிலும் இருக்கக்கூடிய எல்லா உலமாக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பெரும் பிக்ஹு  கிரந்தமாகும். அதில் ஹஜ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு ஹதீஸிற்கு விளக்கமளிக்கையில், "அஹ்லுஸ் ஸு ன்னத் வல் ஜமாஅத்" தினரின் பத்து அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன.

وفي خبر عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم أنه قال { من كان على السنة والجماعة استجاب الله دعاءه وكتب له بكل خطوة يخطوها عشرة حسنات ورفع له عشر درجات ، فقيل له : يا رسول الله متى يعلم الرجل أنه من أهل السنة والجماعة ؟ فقال : إذا وجد في نفسه عشرة أشياء فهو على السنة والجماعة : أن يصلي الصلوات الخمس بالجماعة ، ولا يذكر أحدا من الصحابة بسوء وينقصه ، ولا يخرج على السلطان بالسيف ، ولا يشك في إيمانه ، ويؤمن بالقدر خيره وشره من الله تعالى ، ولا يجادل في دين الله تعالى ، ولا يكفر أحدا من أهل التوحيد بذنب ، ولا يدع الصلاة على من مات من أهل القبلة ، ويرى المسح على الخفين جائزا في السفر والحضر ، ويصلي خلف كل إمام بر أو فاجر }

அப்துல்லாஹ்இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
"யார் அஹ்லுஸ் ஸு ன்னத் வல் ஜமாஅத்தின் மீது ஆகியிருப்பாரோ (நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சுன்னத்தான நடைமுறைகளை பின்பற்றுவாரோ) அல்லாஹ் அவரது துஆக்களை அங்கீகரித்துக் கொள்வான் அவரது ஒவ்வொரு எட்டுக்கும் பத்து நன்மைகளை எழுதுவான்  இன்னும் அவருக்கு பத்து அந்தஸ்துகளை உயர்த்துவான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறிய போது ஒரு மனிதன் அஹ்லுஸ் ஸு ன்னத்தில் இருக்கிறான் என்று எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்று வினவப்பட்டது அதற்கு நபியவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் தன் மனதில் இந்த பத்து விஷயங்களை பெற்றுக் கொண்டால் அவன் சுன்னத் ஜமாஅத்தில் இருக்கிறான்.

1.ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவார். அதாவது ஜமாஅத்தை தவறவிட்டு தனியாகத் தொழுவதை சரியென கருத மாட்டார்.

2. நாயகத் தோழர்களான சஹாபி களைப் பற்றி தீயதை கூற மாட்டார்கள். நாயகத் தோழர்களை குறை கூற மாட்டார்கள்.

3.( நீதியான) அரசருக்கு எதிராக ஆயுதப் புரட்சி செய்ய மாட்டார்கள்.
4.தம்முடைய ஈமானில் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.
5.நல்லவை அல்லாதவை ஆக எல்லாமுமே அல்லாஹ்வின் சித்தப்படியே நடக்கின்றன என விசுவாசம் கொள்வார்கள்.
6. அல்லாஹ்வின் மார்க்கமான தீனுடைய விஷயங்களில், வீண் தர்க்கம், விதண்டாவாதங்கள் செய்யமாட்டார்கள். (குதர்க்கங்கள்- வீண் வாதங்கள் செய்து மக்களிடையே குழப்பங்களையும்- கோஷ்டிகளையும் உருவாக்க மாட்டார்கள்)
7. ஏதாவதொரு  பாவங்கள் ஏற்பட்டுவிட்டாலும் முஸ்லிமானவர்களை காஃபிர் என கூறமாட்டார்கள் (*இது ஒரு முக்கியமான அம்சமாகும். எந்த ஒரு முஸ்லீமையும் காஃபிர் எனக் கூறுவது பெரும்பாவமும் குற்றமுமாகும். ஒருவரை காஃபிர் என தீர்ப்பு செய்வதற்கான 99 காரணங்கள் பொருந்திவர ஒரே ஒரு காரணம் அவர் காஃபிர் அல்ல என்பதற்கு பொருந்தி வருமானாலும்  காஃபிர்  என கூறலாகாது என்று தான் நம்முடைய பிக்ஹு மற்றும் அகாயித்  கிரந்தங்கள் கூறுகின்றன.
(*ஷரஹ்பிக்ஹுல் அக்பர்  முன்தஹா 199).
ஆக ஒரு முஸ்லிமை காஃபிர் என கூறிப் பிரச்சாரம் செய்வோர்" அஹ்லுஸ்ஸு ன்னத் வல் ஜமாஅத்தினர்" அல்லர்.
8. இறந்துவிட்ட எந்த முஸ்லிமாயினும் அவரின் ஜனாஸா தொழுகை தொழுவார்.( அதாவது ஏதாவது குற்றம்  செய்துவிட்டதால்" அந்த மனிதருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்று கூறலாகாது.

9. இமாம் நல்லவரானாலும், கெட்டவரானாலும் இமாமை பின்தொடர்ந்து ஜமாஅத்தாக  தொழுவார். (இமாமை பிரிந்து தனியாகத் தொழுவதை சிறப்பென கருதமாட்டார். )
10. மோஜாக்கள் ( மஸஹ் செய்ய தகுதியான காலுறைகளின்) மீது மஸஹ்செய்வதை ஜாயிஸ் என கருதுவார்.
மேற்கண்ட விளக்கங்களின் மூலம் அஹ்லுஸ் ஸு ன்னத் வல் ஜமாஅத்தினர் என்பவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் காட்டித் தந்த வழியில் நடந்தவர்கள் என்றும், இந்த வழியை பின்பற்ற தவறியவர்கள் வழிகெட்டவர்கள் என்பதும் தெளிவாகிறது. ஆனால் சமீப காலமாக அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு குர்ஆன் ஹதீஸ் ஃபிக்ஹூடைய கிதாப்கள் என ஏற்கத் தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லாமல் புதுவித விளக்கம் கூறி மக்களை குழப்பும் கூட்டங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது வருகிறது.  அதிலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களை கண்ணியப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அவர்கள் மார்க்கத்தில் இல்லாதவைகளை மார்க்கமாக்க முயலுகிறார்கள்.  இந்த வழிகேட்டிலிருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பு உண்மையான  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உலமாக்களான நம் மீது இருக்கிறது.  நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

عن أم المؤمنين أم عبدالله عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ))؛ رواه البخاري ومسلمٌ،

"யார் நம்முடைய இந்த காரியத்தில்  ( மார்க்கத்தில்) அதில் இல்லாததை புதிதாக உண்டாக்குவாரோ அது மறுக்கப்படும்" (நூல் : புஹாரீ முஸ்லிம் )

இன்று நபியை புகழ்ந்துரைப்பதில் ஒரு புதிய நடைமுறையை உருவாக்கி அதை செய்தவர் சுன்னத் ஜமாஅத்தை சார்ந்தவர் என்றும் அதை செய்யாதவர் வஹ்ஹாபி என்றும் புதிய கருத்துருவாக்கம் நடந்து வருகிறது  அதிலும் சில மேதாவிகள் இவ்வாறு புகழ்ந்து படிக்காதவர்கள் காஃபிர்கள் என்ற பெரும் இட்டுக் கட்டுக்கே சென்று விடுகின்றனர்.
இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் எந்த நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பித்அத்களை கடுமையாக எதிர்த்தார்களோ அந்த நபியை புகழ்வதாக கூறிக் கொண்டு தான் இவ்வளவு காரியங்களும் நடக்கிறது.
எனவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்பது நாவால் புகழ்வதாக சொல்வதற்கு பெயரல்ல... மாறாக  நபிகள் நாயகம் ஸல் அவர்களும் அவர்களுடைய சத்திய ஸஹாபாக்களும் எந்த வழியில் நடந்தார்களோ அதை கடைபிடிப்பதே அஹ்லுஸ் ஸு ன்னத்தாகும்...
அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப் படுத்துவதிலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றுவதிலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை ஆதரவு வைத்து நேர்மையாக நடந்து கொள்ளும் நல்ல தவ்ஃபீக்கை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.