வியாழன், 23 மார்ச், 2017

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்


بسم الله الرحمن الرحيم
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்
******************************************
முன்னுரை: அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகச் சிறந்த அருட்கொடை பகுத்தறிவுதான். இதனை கொண்டே மற்ற உயிர்களை காட்டிலும் மனிதன் தனித்து விளங்குகின்றான்.
அறிவின் முக்கியத்துவம்:
1. 
நேர்வழி கிடைத்திட சிந்தித்தல் அவசியம்: 
قال الله تعالي : ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين (يونس : 99)
10:99.
மேலும் உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
قال الله تعالي : لَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏  اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ‏ 
26:3. (
நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
26:4.
நாம் நாடினால் அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குணிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
சூரா அல்அன்ஆமில் 75 வது வசனம் முதல் இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முயற்சித்த வரலாறு,
2.  இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தவும் அறிவு தேவை:
       عن عائشة، عن النبي صلى الله عليه وسلم، قال: " رفع القلم عن ثلاث: عن النائم حتى يستيقظ، وعن الصغير حتى يكبر، وعن المجنون حتى يعقل أو يفيق "  (نسائي : 3432 )
மூவரை விட்டு (நன்மை தீமையை பதிவு செய்யும்) பேனா உயர்த்தப்படும். தூங்குபவன் விழிக்கும் வரை, சிறுவன் பருவ வயதை அடையும் வரை, பைத்தியக்காரன் தெளியும் வரை. (நஸயி : 3432)
அறிவைப் பயன்படுத்தாதோர் நரகவாசிகளே!
قال الله تعالي : ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون (الأنعام : 179 
7:179.
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
غافلون  என்றால் தமக்கு முன் நிகழும் எதைப் பற்றியும் அக்கரை கொள்ளாமல், கவனக்குறைவாக இருப்பவர்கள் என்றே பொருளாகும். இப்பொருளின்படி முஸ்லிம்களில் தமக்கு முன்னால் நடை பெறக்கூடிய தவறுகள், அநியாயங்கள், சீர்கேடுகள் போன்றவைகளை கண்டும் காணாமல் செல்பவர்கள் இக்கூற்றின் கீழ் இடம் பெறுவார்கள்.
முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய அதிமுக்கிய விஷயங்கள்
1.  கல்வி
கல்வி என்பது ஒரு மனிதனின் அறிவுடன் மட்டும் தொடர்புடைய விஷயம் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் பொருளாதாரம், அதிகாரம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவை.
கல்வியில் முஸ்லிம்களின் இன்றைய நிலை: 
1. 
கல்வியறிவு அற்றவர்கள்.
முஸ்லிம்களில் 41 சதவீதம் படிப்பறிவு இல்லாதவர்கள். 8ம் வகுப்புவரை படித்தவர்கள் 15 சதவீதம் பேர் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் 7.8 சதவீதம் பேர் டிப்ளமோ வரை படித்தவர்கள் 4.4 சதவீதம் பேர் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் 1.7 சதவீதம் பேர் என்று புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. 
கல்வியை பெறாத ஒவ்வொரு தரப்பாருக்கும் கல்வியை அவசியம் வழங்கியாக வேண்டும். கல்வியை அறவே பெறாதவர்கள் குறித்து இவர்கள் இனி கல்வியை கற்று என்ன செய்யப் போகின்றார்கள்? என்று எண்ணாமல் இவர்களுக்கும் கல்வியை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் பல கட்டங்களில் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சமுதாயத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும். உம் 
Ø  திறமைமிக்க தம் மகனை படிக்க வைக்காமல் வேளைக்கு அனுப்புவது.
Ø  திறமைமிக்க தன் மகளை தகுதியற்றவனுக்கு மணமுடித்து வைப்பது.
Ø  வரதட்சனையை பெற விடாப்பிடியாக வேண்டுவது.
Ø  தேர்தலில் தவறானவர்களுக்கு வாக்களிப்பது.
Ø  இன்னும் பல…. (தாங்கள் அறிந்த விஷயங்கள்)
தீர்வு: இவர்களுக்கு வேண்டிய அறிவை முதியோர் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிவாசல்களில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும். இத்திட்டம் மேலப்பாளையத்தில் பல இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
عن عبد الله بن عباس عن عمر قال كنت أنا وجار لي من الأنصار في بني أمية بن زيد وهي من عوالي المدينة وكنا نتناوب النزول على رسول الله صلى الله عليه وسلم ينزل يوما وأنزل يوما فإذا نزلت جئته بخبر ذلك اليوم من الوحي وغيره وإذا نزل فعل مثل ذلك فنزل صاحبي الأنصاري يوم نوبته فضرب بابي ضربا شديدا فقال أثم هو ففزعت فخرجت إليه فقال قد حدث أمر عظيم قال فدخلت على حفصة فإذا هي تبكي فقلت طلقكن رسول الله صلى الله عليه وسلم قالت لا أدري ثم دخلت على النبي صلى الله عليه وسلم فقلت وأنا قائم أطلقت نساءك قال لا فقلت الله أكبر – خ : 87  
'
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். அவரின் முறை வந்தபோது என்னுடைய அன்சாரித் தோழர் சென்றுவிட்டு வந்த என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். 'அவர் அங்கே இருக்கிறாரா?' என்றும் கேட்டார். நான் பதறிப்போய் வந்தேன். அப்போது அவர் (நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரை விவாகரத்துச செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) 'ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறது' என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். 'நபி(ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'எனக்குத் தெரியவில்லை' என்றார். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'தங்களின் துணைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டீர்களா?' என்று நின்ற நிலையில் கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லையே' என்றார்கள். உடனே நான் 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று சொன்னேன்' என உமர்(ரலி) அறிவித்தார்.                                                                                                                 
عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ؟ قَالَ: أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ، كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا " خ: 70 
70. '
அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்' எனஅபூ வாயில் அறிவித்தார்.
2.  Academic  கல்வியை மட்டும் பெற்றவர்கள்.
இவர்கள் இஸ்லாமிய கல்வியின்றி பள்ளிப் படிப்பை மட்டும் படித்தவர்கள். இவர்களில் பலருக்கு குர்ஆன் ஓதவோ, மார்க்கச் சட்டங்களைப் பற்றியோ போதிய விளக்கமோ இருப்பதில்லை. இதனால் இவர்களில் பலர் ; மார்க்கத்தின் வழியில் எதையும் அணுக முயற்சிக்க மாட்டார்கள். உம்: 
Ø  ஆலிம்களை பயன்படுத்தத் தவறுவது. அல்லது அவர்கள் கற்ற கல்வியை பொதுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவாது என்று எண்ணுவது,
Ø  அவர்களின் மூலம் சமுதாயத்திற்கு என்னென்ன நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமோ அதனை செய்யத் தவறுவது, 
Ø  ஒவ்வொரு விஷயத்திற்கும் மார்க்கத் தீர்ப்புகள் எவ்வளவு முக்கியம்? என்பன போன்ற பல விஷயங்களை சிந்திக்க முடியாமை,
Ø  ஆலிம்களை தொழுகை முதலிய மார்க்கத்தின் அடிப்படை விஷயங்களை செய்வதற்கே ஆலிம்கள் பயன்படுவார்கள் எனும் மன நிலையில் இருப்பது.
3.  Academic கல்வியை மட்டும் கற்கும் மாணாக்கர்கள்:
முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படுகின்ற பள்ளிக் கூடங்களில் படிக்கின்ற முஸ்லிம் மாணாக்கர்கள். இவர்களைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். காரணம்
Ø  இவர்கள் படிக்கும் பள்ளிக் கூடம் கிருத்தவர்களால் நடத்தப்படுமானால் இவர்களுக்கு பைபிளும், இந்துக்களால் நடத்தப்படமானால் ஹிந்துத்துவமும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
Ø  முஸ்லிம்கள் இவர்களுக்கு தீவிரவாதிகளாகவும், கிருத்தவர்கள் மட்டுமே உலகில் அன்பை பரப்புபவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.
Ø  கல்வி என்பது பொருளீட்டுவதற்கான ஆயுதம் என்றும் அதற்கப்பால் அதற்கு வேலை இல்லை என்ற சிந்தனையும் இவர்களுக்குள் உருவாக்கப்படுகின்றது.
Ø  இவர்களை நுகர்வுமயமாக்களுக்குள் புகுத்தி, வாழ்க்கை என்பது நுகர்வதற்கு மட்டுமே எனும் சிந்தனையை விதைக்கின்றார்கள். 
Ø  குர்ஆன், ஹதீஸ், மார்க்கச் சட்டங்கள் எதுவும் இவர்களுக்கு ஓரளவேனும் கிடைப்பதில்லை.
Ø  ஜூம்ஆவும் கிடைப்பதில்லை. அதனை அவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
Ø  சம்பிரதாயத்திற்காக மக்தப் மதரஸாக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
Ø  வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் ஹிஜாப் இன்றி பள்ளிக்கூடம் செல்கின்றார்கள்.
Ø  முஸ்லிம் மாணவ மாணவிகள் இஸ்லாமிய கலாச்சாரம் இல்லாமலேயே உருவாக்கப்படுகின்றார்கள்.  
Ø  இவர்களின் தாக்கத்தால் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற பல பள்ளிக்கூடங்களிலும் ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களுக்கு நடமாட முஸ்லிம் மாணாக்கர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, நடனமாட வைக்கப்படுகின்றார்கள்.  
Ø  இன்னும்……….. பல மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகள்.
தீர்வு: 
*********
1. 
இரு கல்வியையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக் கூடங்களை முஸ்லிம்கள் மஹல்லாவாரியாக உருவாக்க வேண்டும். 
2. 
இஸ்லாமியமயமாக்கப்பட்ட கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டும். அக்கல்விக்கூடத்தில்
1. 
தஜ்வீதுடன் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தல்,
2. 
ஹிப்ழ் பிரிவு (இல்லையேல் வருங்காலத்தில் ஹாபிழ்கள் குறைந்து விடுவார்கள்)
3. 
கிராஅத்
4. 
அரபி மொழியை பயிற்றுவித்தல்.
5. 
ஃபிக்ஹ்
6. 
இஸ்லாமிய வரலாறு
7. 
தஃப்ஸீர்.
8. 
ஹதீஸ்
9. 
மாணவிகளுக்கு ஹிஜாப் மற்றும் நிகாப்பை பள்ளிச் சீருடையாக்குதல்,
10. 
முழுக்க முழுக்க இஸ்லாமிய கலாச்சாரம்
11. 
பள்ளிக்கூடத்தில் பள்ளிவாசல்
12. 
தினசரி ழுஹர், அஸ்ர் ஜமாஅத்
13. 
ஜூம்ஆ
14. 
தர்பிய்யா வகுப்புக்கள்
15. 
ஆலிம்கள், ஆலிமாக்களை பணியமர்த்துதல்.
16. 
அவர்களை உயர் பொறுப்பில் வைத்தல்
17. 
மார்க்கம் அறிந்த முதல்வரை பணியமர்த்துதல்,(இவை அனைத்தும் Time Matric Hr Sec School  ல் உள்ளது)
18. 
இதனை தொடர்ந்து சமூகத்திற்கும் பயனிளிக்கும் கல்லூரி படிப்புகள் போன்ற காரியங்களை படிப்படியாக அவசியம் செய்து முடிக்க வேண்டும். இல்லையே எதிர்கால இளைஞர்கள் நம் கையில் இல்லை. அவர்களைக் கொண்டு சமூகத்திற்கு எவ்வித பலனும் ஏற்படாது. சொன்னாலும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
குஜராத், மத்தியபிரதேசம் போன்ற பகுதிகளில் பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு சாமியார்களால் நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் பயின்ற மாணவர்களின் செயல்பாடுகள் அதிமுக்கிய காரணமாகும்.
பெண்களுக்கான மத்ரஸாக்கள்:
      عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَتَيْنِ؟ فَقَالَ: «وَاثْنَتَيْنِ» خ: 101
'(
நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண் 'இரண்டு குழந்தைகளை ஒரு பெண் இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தைகளை ஒருபெண் இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்' அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
2.  பொருளாதாரம்
***********************
பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பொருளாதாரத்தில் ஒரு சமுதாயம் நலிவுற்றிருக்கும் போது அவர்கள் மற்ற விஷயங்களில் போதிய கவனம் செலுத்த முடியாது. ஆகையால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை மேல்நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள்
1. 
நமக்கான வக்ஃப் சொத்துக்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
2. 
முஸ்லிம் இளைஞர்கள்  கூலிக்கு வேலை செய்வதை விட்டு விட்டு சுய தொழில் செய்ய வலியுறுத்த வேண்டும். (மதுரைக்கு அருகிலுள்ள ஒரு முஸ்லிம் ஊரில் சம்பள வேலைக்கு செல்வோருக்கு பெண் தரக்கூடாது என்ற சட்டம் உள்ளது) 
3. 
செல்வந்தர்களிடமிருந்து பொருளாதாரத்தைப் பெற்று வட்டி இல்லா வங்கியின் மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
4. 
ஜகாத், ஸதகாக்களை முறையாக வசூலித்து ஏழைகளுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நிரந்தரமாக உயர்த்திட வழிவகை செய்ய வேண்டும். (உம்: சிறு, குறு தொழில் தொடங்க உதவுவது)
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ المَدِينَةَ فَآخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ فَعَرَضَ عَلَيْهِ أَنْ يُنَاصِفَهُ أَهْلَهُ وَمَالَهُ، فَقَالَ: عَبْدُ الرَّحْمَنِ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ دُلَّنِي عَلَى السُّوقِ، فَرَبِحَ شَيْئًا مِنْ أَقِطٍ وَسَمْنٍ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعْدَ أَيَّامٍ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَهْيَمْ يَا عَبْدَ الرَّحْمَنِ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ قَالَ: «فَمَا سُقْتَ فِيهَا؟» فَقَالَ: وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ» خ:3937
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.  முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!' என்று கூறினார். அப்போது நான் 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவர் 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'நீ மண முடித்துவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை!' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!' என்றார்கள்.
3.  அரசியல்
****************
இஸ்லாமிய ஷரீஅத்தின் பார்வையில் ஜனநாயக  அரசியல் கூடாது. எனினும் தீயோர்களை தடுப்பதற்காக அரசியலில் ஈடுபடுவது தவறில்லை. அந்த வகையில் அரசியலில் முஸ்லிம்களின் சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும்.  நமக்கான அரசியல் தளத்தை அமைக்க வேண்டும்.
அரசியலில் முஸ்லிம்கள் நேரடியாக ஏன் ஈடுபட வேண்டும்?
1. 
ஷரீஅத்தை காப்பதற்காக!
• 
முத்தலாக் விவகாரம்,
• 
முஸ்லிம் தனியார் சட்டம்,
• 
பள்ளிவாசல்களை பாதுகாப்பதற்காக!
2. 
இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக!
• 
பாபரி பள்ளி வாசல்,
• 
அரசு வேலை வாய்ப்புகள்
• 
வக்ஃப் சொத்துக்கள்
3.  உரிமைகளை இழக்காமல் இருப்பதற்காக!
4. 
மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதற்காக!
• 
குஜராத்,மும்பை போன்று முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களில் நமது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டது போல் கொலை செய்யப்படாமல் இருப்பதற்காக!
5.  மாற்றார்களுக்கும் இஸ்லாமியர்களின் நேர்மையை அறியச் செய்து, இஸ்லாத்தை பரப்புவதற்காக!
                                                                                                                                                                                                                                                                                   
முடிவுரை: நமது பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்போம், தெளிவான முடிவெடுப்போம், அதனை செயல்படுத்தி வெற்றி பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.