بسم الله الرحمن الرحيم
இஸ்லாமும்
சமூக நீதியும்
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ
مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ
عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (الحجرات
13)
۔۔۔۔۔۔۔«يَا
أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا
لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا
أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى۔۔۔۔۔۔ احمد
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏற்றத்தாழ்வுகளற்ற
ஒரு சமுதாய அமைப்பை கட்டமைப்பதுதான் சமூக நீதி
சமூகநீதி
காக்கப்பட வேண்டுமெனில் இரண்டு காரியங்களை செய்தாக வேண்டும்.
1- மனிதர்களுக்கிடையில் வேற்றுமை உணர்வை
களைந்து நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை விதைத்து வளர்ப்பது.
2- சமூக நீதிக்கு பாடுபடுபவர் தன் தனிப்பட்ட வாழ்விலும் அதை
நடைமுறைப்படுத்திக் காட்டுவது
இவ்விரு விஷயங்களையும் இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தின்
வழியே முஹம்மது நபி ஸல் அவர்கள் சிறப்பாக செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.
மனித
குலம் அனைவரும் ஒரு தந்தை தாயின் பிள்ளைகள் என்ற உணர்வைத் தருகிறது.
அல்-குர்ஆனின் 7 இடங்களில் மனித குலத்தை ஆதமுடைய மக்கள் என்றே அழைக்கிறான், அடையாளப்படுத்துகிறான்.
அல்-குர்ஆனின் 7 இடங்களில் மனித குலத்தை ஆதமுடைய மக்கள் என்றே அழைக்கிறான், அடையாளப்படுத்துகிறான்.
இறைத்தூதர்
(ஸல்) அவர்களும் அதே முறையில் 100 க்கும்
அதிகமான ஹதீஸ்களில் குறிப்பட்டுள்ளார்கள்.
இன்று சிலர்
தங்களின் மத அடிப்படையிலேயே பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திக்கொண்டு அரசியல்
ஆதாயத்திற்காக வெளியில் சமூ கநீதி போராளி
போல காட்டிக்கொள்கின்றனர்.
இன்னும் சிலர்
இனவெறியர்களாக, வேறு சிலர் மொழிவெறியர்களாக, மற்ற சிலர் தன்னைவிட உயர் வகுப்பில்
இருப்பவருக்கான அந்தஸ்த்து தன் சமுதாத்திற்கு வேண்டும் என்று குரல் கொடுக்கும் அதே
வேளையில் தங்களைளைவிட கீழ்நிலையில் இருப்போர் தங்களுக்கு நிகராக வந்து விடக்கூடாது
என்பதில் குறியாக இருக்கின்றனர்.
(எ.கா)
ஆனால், 18ஆவது
இயலில், பிறப்பின்
அடிப்படையில்,
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்
என்று நான்கு வருணங்களின் பெயர்களையும், அவர்களுக்கான 'கடமைகள் அல்லது தருமங்களையும்' தீர்த்துச்
சொல்லிவிடுகிறார் கிருஷ்ண 'பகவான்'! இதோ அதனைப் படியுங்கள் (அத் .18- 41முதல்
47 வரை). "எதிரிகளை
எரிப்பவனாகிய அர்ஜுனனே! பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரகளுடைய கருமங்கள்
அவர்களின் பிறப்புக்குத் தக்கவாறு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சாந்தமான
குணம், சுய
கட்டுப்பாடு,
தவ
வலிமை, தூய்மை, அமைதி, நேர்மை, ஞானம், நல்லறிவு, கடவுள்
நம்பிக்கை ஆகியவை பிராமணனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும்.
வீரம், துணிவு, உறுதி, திறமை, போரில்
புறங் காட்டாமை,
கொடைமை, இறைமை ஆகியவை
சத்திரியனாகப் பிறந்தவனின் கருமங்கள் ஆகும். உழவு, கால்நடை பராமரிப்பு, வணிகம்
ஆகியவை வைசியனாகப் பிறந்தவனது கருமங்கள் ஆகும். ஏவல் பணி
செய்வது சூத்திரனாகப் பிறந்தவனது கருமம் ஆகும்." இதற்கு
மேல் என்ன வேண்டும்? அவரவர் பிறப்புக்குத் தக்கவாறு வருணத்தையும், வேலைகளையும்
பிரித்துக் கொடுத்துள்ளதாகக் கீதை சொல்கிறது. திறமைக்கோ, நேர்மைக்கோ
இங்கு எந்த வேலையும் இல்லை. எல்லாம் பிறப்பினால் முடிவு செய்யப்படுகிறது.
அந்த முடிவின்படி, எல்லாப் பயல்களுக்கும் ஏவல் வேலை செய்வதுதான்
சூத்திரனின் கடமை. அந்தக் 'கேடுகெட்ட' கடமையைச் செய்யும்போது கூட, 'கடமையைச்
செய்ய வேண்டுமே தவிர அதற்குரிய பயனை எதிர்பார்க்கக் கூடாது' என்கிறது
கீதை.
இந்த
நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க.அரசு!
இப்படியே இனத்தால், நிறத்தால்,மொழியால் இன்னும் சில காரணத்தால் மனித சமுதாயத்தை பாகுபடுத்தி அடித்துக் கொல்லும் அவலம் உலகின் ஏதாவது ஒரு மூலையில் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
ஜாதிச்சண்டையை ஒழிக்கவும் இனவெறித்தாக்குதல்களை கட்டுப்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதைவிட
பன்மடங்கு அதிக இனவெறி கொண்ட அரபக மக்களிடையே இருந்த இன, நிற, மொழி சார்ந்த
ஏற்றத்தாழ்வை களைவதில் வெற்றி கண்டார்கள்.
(இதை நாம் மட்டும் சொல்லவில்லை.)
இஸ்லாத்தை பொறுத்தவரை
உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு யாருமில்லங்க பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ
ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது. .. !! இஸ்லாத்தை பத்தி
நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கொஞ்சம் டவுட்டு வரும் இல்லையா? முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தின்
இந்த சமத்துவம் குறித்து சொன்னவற்றில் சிலவற்றை கீழே சேர்த்து இருக்கிறேன்
பாருங்கள்.. :)
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
-டாக்டர் அம்பேத்கார்.
இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.
டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
கவிக்குயில்" sarojini-naidu
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
- அறிஞர் அண்ணா
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
-டாக்டர் அம்பேத்கார்.
இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.
டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
கவிக்குயில்" sarojini-naidu
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
- அறிஞர் அண்ணா
இஸ்லாம்
வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும்.
இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த
உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை
உணர்ந்து கொள்கிறார்கள்.
– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
எப்படி இருந்தவர்கள்?
அதைப்புரிய
வேண்டுமென்றால் குறைஷிகளிடம் இருந்த இன வெறியை முதலில் நாம் அறிய வேண்டும்.
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا
يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ، وَكَانُوا يُسَمَّوْنَ الحُمْسَ، وَكَانَ سَائِرُ العَرَبِ
يَقِفُونَ بِعَرَفَاتٍ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ، ثُمَّ يَقِفَ بِهَا، ثُمَّ يُفِيضَ
مِنْهَا» فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ
النَّاسُ} [البقرة: 199] البخاري
4520
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதிமிக்கவர்கள்' எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்' எனும் (திருக்குர்ஆன் 02:199
வது) இறைவசனமாகும். ஸஹீஹுல் புஹாரீ 4520.
لا يقفون فيها لأن قريشا كانت لا تخرج من الحرم يوم عرفة وعرفة ليست
من الحرم]
மக்கா
வெற்றியின் போது கஃபா மேலேறி பிலால் (ரலி) அவர்கள்
பாங்கு சொன்னபோது நடந்த நிகழ்வு
قَالَ
ابْنُ عَبَّاسٍ: لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ أَمَرَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا حَتَّى عَلَا عَلَى ظَهْرِ الْكَعْبَةِ فَأَذَّنَ، فَقَالَ
عَتَّابُ بْنُ أَسِيدِ بْنِ أَبِي الْعِيصِ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي قَبَضَ أَبِي
حَتَّى لا يرى هذا اليوم.
وقال الْحَارِثُ بْنُ هِشَامٍ:
مَا وَجَدَ مُحَمَّدٌ غَيْرَ هَذَا الْغُرَابِ الْأَسْوَدِ مُؤَذِّنًا وَقَالَ
أَبُو سُفْيَانَ: إِنِّي لَا أَقُولُ شَيْئًا أَخَافُ أَنْ يُخْبَرَ بِهِ رَبُّ السَّمَاءِ، فَأَتَى
جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَخْبَرَهُ بِمَا قَالُوا،
فَدَعَاهُمْ وَسَأَلَهُمْ عَمَّا قَالُوا فَأَقَرُّوا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى
هَذِهِ الْآيَةَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا
خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
(13) القرطبي
எப்படி
இந்நிலைக்கு மாறினார்கள்..?
இத்தகைய மனநிலை கொண்ட மக்களை அதே பிலால் (ரலி) க்கு பெண் கொடுக்கவும் தயாராகும் பக்குவத்தை நபி )ஸல்( அவர்களால் தரமுடிந்தது.
எத்தைகைய நிலையில் பிலால் (ரலி) அவரகள் இருந்தார்கள்
உமைய்யதுப்னு கலபிடம் அடிமையாக இருந்தார்கள் கொடுமை செய்து வந்தான்
ஒரு நாள் சாட்டையால் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அபூபக்கர் ரலி அவர்கள் விலைக்கு வாங்கி உரிமை விட்டார்கள்.
, عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ الْجُمَحِيِّ عَنْ أُمِّهِ , قَالَ: «رَأَيْتُ
أُخْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ تَحْتَ بِلَالٍ»
الدارقطني
இவையனைத்தும் எப்படி சாத்தியப்பட்டது?
மனிர்கள் எல்லோரும் ஒரு தாய் தந்தையின் மக்கள்.என்னைப்போலதான் அவன். அவனைப்போலதான்
நான் என்ற சமத்துவ, சகோதரத்துவ உணர்வை வளர்க்காமல் சமூக நீதியை நிலைநாட்ட
வாய்யப்பே இல்லை.
எனவேதான் குர்ஆனும் ஹதீஸும் மனிதகுல வரலாற்றை
பின்னோக்கி சிந்திக்க வைக்கிறது.
உலக அளவில்..
முதன் முதலில் 1805 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆரம்பமானது.
1929 இல் 200 கோடி (அடுத்த 122 ஆண்டுகளில்)
1959 இல் 300 கோடி (அடுத்த 32 ஆண்டுகளில்)
1973 இல் 400 கோடி (அடுத்த 14 ஆண்டுகளில்)
1986 இல் 500 கோடி (அடுத்த 13 ஆண்டுகளில்)
1998 இல் 600 கோடி (அடுத்த 12 ஆண்டுகளில்)
தற்போது 700 கோடி (அடுத்த 14 ஆண்டுகளில்) பேர் உள்ளனர்.
இன்னும் 14 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டிவிடும்.
1805 இல் 100 கோடிதான்
இப்படியே
பின்னோக்கிப் பார்த்தால் லட்சம், ஆயிரம், நூறு என்றாகி விடும் நூஹ் நபி கப்பலில்
80 பேர்தான்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ
مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ
عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (الحجرات
13)
۔۔۔۔۔۔۔۔«يَا
أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا
لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا
أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى۔۔۔۔۔ احمد
பிறப்பால்
உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே;
உங்களின் தந்தையும் ஒருவரே. அறிந்து
கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர்
அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு
வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும்
ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின்
மேன்மையை நிர்ணயிக்கும்.
(அஹ்மத்)
இஸ்லாம் மனிதர்களுக்கிடையில்
வேறுபாடுகளை களைய மனிதகுல வரலாற்றை பின்னோக்கி சிந்திக்க வைத்தது நல்ல பலனையும்
கண்டது.
அதன் வெளிப்பாடு பின் வரும் நிகழ்வு
عَنِ
المَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ
حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ
رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ
خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ،
فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ
مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ» البخاري
30
'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே!
நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான்.
எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார். புஹாரி 30.
சட்டங்களை நடைமுறைப்படுத்துதிலும் சமத்துவம் பேணினார்கள் பேணச்சொன்னார்கள்
عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ
المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا: وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالُوا: وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ
بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ،
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَشْفَعُ فِي حَدٍّ
مِنْ حُدُودِ اللَّهِ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قَالَ: إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ
قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا
سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ
فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا " البخاري
3475
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள். ஸஹீஹுல் புஹாரி 3475.
சமூகநீதி பிடிக்காத ஆதிக்க வெறியர்கள் இஸ்லாத்தை விட்டு
வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஙஸ்ஸான் நாட்டு மன்னர்
தன்னை முகத்தில் அடித்து தாக்கியவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் அல்லது
கை வெட்டப்பட வேண்டும் என்று கோறினார். ஆனால் அபூ உபைதா (ரலி) அவர்கள் "பதிலுக்குப்பதில் நீங்கள்
அவரை அடிப்பதே நீதி"
எனக்கூறி சமூகநீதியை நிலைநாட்ட முனைந்த போது (நபி ஸல் காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றவராக இருந்தும்) இஸ்லாத்திலுள்ள
சமூகநீதி பிடிக்காததால் மதம் மாறினார்.
وَكَتَبَ
رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى جَبَلَةَ بْنِ الأَيْهَمِ
مَلِكِ غَسَّانَ يَدْعُوهُ إِلَى الإِسْلامِ. فَأَسْلَمَ وَكَتَبَ بِإِسْلامِهِ إِلَى
رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَهْدَى لَهُ هَدِيَّةً وَلَمْ
يَزَلْ مُسْلِمًا حَتَّى كَانَ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ. فَبَيْنَمَا هُوَ
فِي سُوقِ دِمَشْقَ إِذْ وطيء رَجُلا مِنْ مُزَيْنَةَ. فَوَثَبَ الْمُزَنِيُّ فَلَطَمَهُ.
فَأُخِذَ وَانْطُلِقَ بِهِ إِلَى أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ. فَقَالُوا: هَذَا
لَطَمَ جَبَلَةَ. قَالَ: فَلْيَلْطِمْهُ. قَالُوا: وَمَا يُقْتَلُ؟ قَالَ: لا. قَالُوا:
فَمَا تُقْطَعُ يَدُهُ؟ قَالَ:
لا. إِنَّمَا أَمَرَ اللَّهُ. تَبَارَكَ
وَتَعَالَى. بِالْقَوَدِ. قَالَ جَبَلَةُ: أَوَتَرَوْنَ أَنِّي جَاعِلٌ وَجْهِي نِدًّا
لِوَجْهِ جَدْيٍ جَاءَ مِنْ عُمْقٍ! بِئْسَ الدِّينُ هَذَا! ثُمَّ ارْتَدَّ نَصْرَانِيًّا
وَتَرَحَّلَ بِقَوْمِهِ حَتَّى دَخَلَ أَرْضَ الرُّومِ. فَبَلَغَ ذَلِكَ عُمَرَ فَشَقَّ
عَلَيْهِ وَقَالَ لِحَسَّانَ بْنِ ثَابِتٍ: أَبَا الْوَلِيدِ. أَمَا عَلِمْتَ أَنَّ
صَدِيقَكَ جَبَلَةَ بْنَ الأَيْهَمِ ارْتَدَّ نَصْرَانِيًّا؟ قَالَ: إِنَّا لِلَّهِ
وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ. وَلِمَ؟ قَالَ:
لَطَمَهُ
رَجُلٌ مِنْ مُزَيْنَةَ. قَالَ: وَحُقَّ لَهُ. فَقَامَ إِلَيْهِ عُمَرُ بِالدِّرَّةِ
فَضَرَبَهُ بِهَا. الطبقات الكبرى
ஏற்றத்தாழ்வை களையும் பயிற்சியை இஸ்லாம்
வீட்டிலிருந்தே துவக்கச்சொல்கிறது.
وَقَالَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ فِي العَطِيَّةِ» البخاري
عَنْ
عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَهُوَ
عَلَى المِنْبَرِ يَقُولُ: أَعْطَانِي أَبِي عَطِيَّةً، فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ
رَوَاحَةَ: لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَعْطَيْتُ
ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً، فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا
رَسُولَ اللَّهِ، قَالَ: «أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا؟» ، قَالَ: لاَ،
قَالَ: «فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ» ، قَالَ: فَرَجَعَ فَرَدَّ
عَطِيَّتَهُ البخاري 2587
ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். ஸஹீஹுல் புஹாரீ 2587.
ஏனெனில்
வீட்டிலிருக்கும் பலதரப்பட்டவர்களிடம் நீதமாக நடக்க முடியாதவரிடம்
நாட்டிலிருப்பவர்களிடம் சமூக நீதியை கடைபிடிப்பாரென்று எப்படி
எதிர்பார்க்க முடியும்?
இஸ்லாத்தில் எள்ளளவும் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதற்கு
தொழுகையே பெரும் சாட்சி
தொழுகை வெறும் வணக்கமாக மட்டும் இல்லாமல் சமத்துவத்தை
எடுத்துரைக்கும் ஒரு வழியாகவும் இருக்கின்றது.
இமாம் முன்னால் நின்று தொழுகை நடத்துகிறார் என்றால் அவருக்கு இருக்கிற தனிப்பட்ட முன்னுரிமையினால் அல்ல. ஒரு சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் சீராக செயல் பட வேண்டும் என்பதை பழக்கப்படுத்துவது. அதேவேளை அந்த கண்ணியமான பொறுப்பை அதற்குத் தேவையான விபரமும் அறிவும் பெற்ற
எந்த ஒரு நபரும் ஏற்க முடியும். சில மதங்களில் இருப்பது போல ஒரு குறிப்பட்ட வகுப்பினர்
மட்டும்தான் மதகுருவாக, அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்பது போன்ற பாரபட்சமான
நடைமுறை அறவே கிடையாது.
பயிற்சி பெற்ற
இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த ஆணையை
நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆகமவிதிகளின் படியே அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்று
கூறியிருக்கிறது.
அனைத்து
துறைகளிலும் சமூக நீதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு பிறப்பித்த அந்த அரசாணையை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நம் இந்திய திருநாட்டில் எந்தளவு சமூகநீதி
பேணப்படுகிறது என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டு.
படித்தவன், படிக்காதவன், ஏழைப் பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், நல்ல வம்சமுடையவன், கீழ்ச்சாதிக்காரன்,என்ற பாகுபாடெல்லாம் இஸ்லாத்தில் ஒரு போதும்
கிடையாது. இஸ்லாத்தின் ஐந்து
கடமைகளில் ஒன்றான தொழுகையில் யாரும் யாரோடும் நிற்கலாம். செருப்பு தைக்கும்
தொழிலாளி கோடீஸ்வரனுக்கு அருகிலும், துப்புரவு செய்யும்
ஒருவனின் பாதத்திற்கு கீழ் பெரும் முதலாளியின் நெற்றிப் படலாம். எவ்வித ஏற்றத்தாழ்வும் (மற்ற சமூகத்தில் இருப்பது
போன்று) கிடையாது.
இஸ்லாத்திலுள்ள சமூகநீதி கோட்பாடு பற்றி சும்மா
பெருமை பேசிக்கொண்டு மட்டும் இருப்பதால் எந்தப்பலனுமில்லை.
ஒவ்வொருவரும் தன் பொருப்பிலிப்பவர்கள் தங்கள்
கட்டுப்பாட்டிலிருப்பவர்களுக்கிடையில் காட்டிவரும் பாகுபாடு வேற்றுமைகளை களையாமல் (செயல்வடிவிலும் சமூக நீதி
பேணப்படாமல்)
இஸ்லாத்தில் இருக்கும் சமூக நீதி
கோட்பாடு மட்டும் வெகுஜனங்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்க
உதவாது.