நபி வழித் திருமணம்.
قوله تعالي- فانكحوا ما طاب لكم
من النسآء مثني وثلاث ورباع۔۔۔۔
[وآتيتم احديهن قنطارت
فلا تأخذوا منه شيأ...[سورة النساء
قوله عليه الصلوة والسلام: النكاح سنتي فمن
رغب عن سنتي فليس مني...(ابن ماجه)
திருமணம் செய்வது நபி வழி.
وعن أبي أيوب مرفوعا : { أربع
من سنن المرسلين } ، فذكر منها النكاح ، رواه الترمذي
நான்கு விஷயங்கள் நபிமார்களின் வழிமுறையாகும். என்று அதில் திருமணத்தையும் நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்.( நூல் திர்மிதி)
وعن الحسن ، عن سمرة : { أن
النبي صلى الله عليه وسلم نهى عن التبتل }. رواه الترمذي ،
நபி ஸல் அவர்கள் துறவறத்தை தடை செய்தார்கள். (நூல் திர்மிதி)
وعن أنس رفعه : { من رزقه الله
امرأة صالحة فقد أعانه على شطر دينه ، فليتق الله في الشطر الثاني }. رواه الحاكم
யாருக்கு அல்லாஹ் ஸாலிஹான மனைவியை அமைத்துத் தருகிறானோ
அவருடைய மார்க்கத்தில் பாதியை பரிபூரணமாக்க உதவி செய்கிறான் மீதிப் பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் ஹாகிம்)
அவருடைய மார்க்கத்தில் பாதியை பரிபூரணமாக்க உதவி செய்கிறான் மீதிப் பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் ஹாகிம்)
திருமணம் என்பது இஸ்லாமின் அடையாளச் சின்னம் அதைத்
தவிர்ப்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விரும்பவில்லை. எனவே தான் " திருமணம்
எனது வழிமுறை யார் அதைப் புறக்கணிப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவல்ல" என நபிகள்
நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாத்தில் திருமணம்
என்பது மிக எளிமையானது.
" إن أعظم
النكاح بركة أيسره مؤونة"[رواه أحمد والحاكم] وقال : صحيح على شرط مسلم
" அபிவிருத்தியால் நிரம்பிய திருமணம் என்பது செலவுகள் குறைந்த திருமணமாகும்"( நூல்: அஹ்மத்)
" அபிவிருத்தியால் நிரம்பிய திருமணம் என்பது செலவுகள் குறைந்த திருமணமாகும்"( நூல்: அஹ்மத்)
இஸ்லாமிய திருமணம் என்பது பத்திரிக்கை, பந்தல், ஊர் விருந்து, ஊர்வலம்' போன்ற ஆர்ப்பாட்டம்' ஆடம்பரம், ஏதுமால்லாத அமைதியான
எளிமையான நிகழ்வாகும்.
இன்னும் சொல்வதானால் இஸ்லாமிய பார்வையில் திருமணம் ஒரு வணக்கமாகும்.
இன்னும் சொல்வதானால் இஸ்லாமிய பார்வையில் திருமணம் ஒரு வணக்கமாகும்.
இஸ்லாமிய திருமணத்திற்கு தேவை.....
1.மணமக்களின் பூரண சம்மதம்.
2. இரண்டு சாட்சிகள்.
3. மஹர் தொகை.
4. இறைக் கட்டளையை நினைவூட்டும்
குத்பா" எனும் மணமக்களுக்கான உபதேசம்.
2. இரண்டு சாட்சிகள்.
3. மஹர் தொகை.
4. இறைக் கட்டளையை நினைவூட்டும்
குத்பா" எனும் மணமக்களுக்கான உபதேசம்.
இவ்வளவு தான். இங்கு பந்தல்களும், பந்திகளும் தேவையில்லை.
ஆனால் இன்றைய நிலை திருமணம் என்ற பெயரில் எவ்வளவு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் அரங்கேறுகின்றன.
இன்று தனது பொருளாதார பலத்தை நிரூபிக்கவும், தனது பதவி அதிகாரத்தை வெளிப்படுத்துவும்,
தனது செல்வாக்கை பிரபல்யப் படுத்தவும், பிறருக்காக பகட்டுக்காக என்று திருமணத்தின் நோக்கங்கள் தடம்புரண்டு போய் விட்டது.
"இவ்வுலக
வாழ்க்கை ஓர் அற்ப சுகம் அந்த அற்ப சுகங்களில் மிகச்சிறந்தது நல்லொழுக்கமுள்ள
பெண்ணாகும்" என நபி ஸல் அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு ஆஸ் ரலி அவர்கள்
அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்]
இன்னும் திருமணத்தின் மூலம் விளையும் பயன்களை
நாம் நிறைய கூறலாம்.....
இரத்தினச் சுருக்கமாக சொல்வதானால்
திருமணம் ஓர் நபி வழி. மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
திருமணம் ஓர் நபி வழி. மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وعن ابن عباس رضي الله عنه
رفعه : { لا صرورة ، في الإسلام }. رواه أحمد ، وأبو داود ، والحاكم
"இஸ்லாத்தில் துறவறம் என்பது கிடையாது" (நூல்: அஹ்மத்)
திருமணமத்தில் தவிர்க்கப் பட வேண்டிய
விஷயங்கள்.
நிறைய சீர்திருத்தங்களும், மாற்றங்களும், திருமணத்தில் செய்ய வேண்டியதிருந்தாலூம் ஒரு
சில மிக முக்கியமான விஷயங்களை கவனிப்பது திருமணத்தின் உண்மையான நோக்கங்களை நாம் அடைய வழி வகை செய்யும்.
முதலாவது : ஆண் தனது
ஆண்மையை நிரூபிப்பது. அதாவது வரதட்சணை பெறாமல் மஹர் கொடுத்து திருமணம் செய்வது.
ஏனெனில் குர்ஆனில் இறைவன்
" الرجال
قوامون علي النساء بما فضل الله بعضهم علي بعض وبما انفقوا من اموالهم......
"ஆண்கள் பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் அல்லாஹ் சிலர்களை விட சிலர்களுக்கு உயர்வை வழங்கியிருக்கிறான். மேலும் ஆண்கள் பெண்களுக்கு தங்களது பொருட்களிலிருந்து செலவு செய்கிறார்கள்."
" உங்களில் ஒருவர் அந்தப் பெண்களுக்கு ஒரு பொருட் குவியலையே (மஹராக) தந்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்"
என்று கூறியிருப்பது சம்பாதித்து கொடுப்பதும், மஹர் கொடுத்து (வரதட்சணை பெறாமல்) திருமணம் முடிப்பதுமே ஆண்மைக்கான
இலக்கணமாகத் தெரிகிறது.
இரண்டாவது: சமூகத்தில் திருமணம் இலகுவாகுவது. அதாவது இதற்கு பல பரிமாணங்கள் உண்டு.
1. செலவு குறைவாக இருப்பது.
2. சக்தி படைத்த ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய அனுமதிப்பது.
இந்த விஷயத்தில் நமது சமூகம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் திருமணம் சிரமமானால் விபச்சாரம் சுலபமாகி விடும், விபச்சாரம் பெருகி விட்டால் கொலை அதிகமாகும், கொலை அதிகமானால் குழப்பங்களூம் பிரச்சினைகளும், நம்மை ஆட்கொள்ளும், இது உலக அழிவிற்கு இட்டுச் செல்லும்.
முடிவுரை :
நிறைய செலவழித்து திருமணம் செய்யும் பழக்கம்
மக்களிடம் பரவுவதால் வசதியற்ற குமருகள் தேங்கியும், ஏங்கியும்
போகிறார்கள்.
"நீங்கள் விரும்பும் பெண்களில் இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ திருமணம் முடித்துக் கொள்ளுங்கள்"
என்ற இறைவனின் தெளிவான கட்டளையை மீறி
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறைக்கு ஒத்துவராத, என் புருஷன்
எனக்கு மட்டும் தான், போன்ற கோஷங்கள் நிறைய கணவன் மார்களை
விபச்சாரர்களாக மாற்றி விட்டது. எனவே இறைக் கட்டளைக்கு
பயந்து நாம் நம்மை சீர்திருத்திக் கொண்டால் திருமணத்தின் மூலம் விளையும் எல்லா
நன்மைகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடைந்து
கொள்ளலாம் வல்ல ரஹ்மான் நபி வழியில் நடந்திட நல்லுதவி புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.