புதன், 20 டிசம்பர், 2017

முத்தலாக் ஒரு பார்வை

بسم الله الرحمن الرحيم
முத்தலாக் ஒரு பார்வை

قوله تعالي؛ فإن طلقها فلا تحل له من بعد حتي تنكح زوجا غيره...(2:230)
قوله عليه الصلوة والسلام...عن ابن عمر رضي الله عنه ان النبي صلي الله عليه وسلم قال ابغض الحلال الي الله الطلاق (رواه ابوداود)
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது.அவனுடைய ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மீதும் அவர்களின் வாழ்க்கை வழிமுறையை மிகச் சரியாக பின்பற்றிய உன்னமிகு நபித்தோழர்கள், மற்றும்  இன்பத்திலும் துன்பத்திலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தினர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.
இஸ்லாம் ஈருலகிலும் நாம் வெற்றி பெறுவதற்கான எல்லா வாழ்க்கை நெறிமுறைகளையும் நிறைவாக நமக்கு வழங்கி இருக்கிறது. ஆனால் இஸ்லாமியர்கள் மார்க்கத்தின் வழிகாட்டுதல்களின் படி நடப்பதில்லை. இது தான் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படை.  காரணங்களாகும்.

குறிப்பாக குடும்ப வாழ்வில் நமக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சினைகளைக்கூட மார்க்க முறைப்படி சரி செய்து கொள்வதில்லை இதனால் குடும்பத்தில் பிளவு,கணவன் மனைவிக்கு மத்தியி்ல் பிரிவு, இது போன்ற பிரச்சினைகள் இன்று ஒவ்வொரு மஹல்லாவிலும் அதிகம் காணப்படுகிறது.

அதிகமாகி விட்ட தலாகின் காரணிகள்.

முதலாவது :- திருமணம் முடிக்கும் ஆணும் பெண்ணும் தங்களுக்கான கடமைகளையும், உரிமைகளையும் சரியாக அறியாமல் மணவாழ்வைத் தொடங்குவது.

இரண்டாவது :-  ஆணாதிக்கச் சிந்தனை மிகைப்பது.

மூன்றாவது :- மார்க்கத்தில் தலாக் சம்பந்தமாக சொல்லப்பட்ட எச்சரிக்கைகளை அறியாமல் இருப்பது.  அல்லது அறிந்தும் மனோ இச்சைக்கு வழிப்படுவது.

நான்காவது :- தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில்   மீடியாக்கள் வாயிலாக பெண்களுக்கு ஆண் துணையில்லாமல் வாழ முடியும் என்ற துணிவு ஏற்பட்டுள்ளது. மேலும் டிவி சீரியல்களின் வருகையினால் வெட்க உணர்வு குறைந்து போய் விட்டதும் விவாகரத்து ஏற்படுவதற்கான காரணிகளாகி விட்டது.

ஜந்தாவது :- மேலும் நவீன தொடர்பு சாதனங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் மூலமாக அந்நிய ஆண்களோடு தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதும் விவாகரத்து அதிகரிக்க காரணமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இறை அச்சமின்மை" துணிந்து தலாக் விடுவதற்கு வழிசெய்கிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு  உத்தராகண்ட் மாநிலத்தைச் சார்ந்த ஷாயிரா பானு என்ற பெண் தனது 13 வருட குடும்ப வாழ்க்கைக்குப் பின் தன் கணவர் தன்னை  முத்தலாக் முறையில்  விவாகரத்து செய்து விட்டதாகவும் இதன் மூலம் இஸ்லாம் பெண்களுக்கு அநீதம் இழைப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தலாக்கை ஆய்வுக்குட்படுத்தியது  மறுகனம்  இஸ்லாமிய எதிரிகள் எப்போது வாய்ப்பு கிடைக்கும் குட்டையை குழப்பலாம் என்று கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க  இந்த வழக்கை பயன்படுத்தி இன்று நம் ஷரீஅத்தில் கைவைக்க துவங்கி விட்டார்கள். ஷரீஅத் சட்டத்தை மாற்றி அமைக்க நாடாளுமன்றத்தில் முத்தலாக் நடைமுறை செல்லாது என்று செயற்கையான ஒரு தீர்ப்பை பெற்று அதற்கு தண்டனை அளிக்கவும் துணிந்து விட்டார்கள் இவை அனைத்தும் நாம்  இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டல்களை சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவாகும். எனவே தலாக் சம்மந்தமான விபரங்களையும் அதன் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

அத்தோடு அப்படி ஒரு சட்டம் வருமானால் அதை எதிர்த்து களமாட வேண்டிய கட்டாய பொறுப்பும் நமக்கு ஏற்பட்டுள்ளது நாம் இவற்றை கண்டு கொள்ளாமல் இருந்தால் இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவோம்.

ஒரே நேரத்தில் மூன்று தலாக் விடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தாலும் தலாக் நிகழ்ந்து விடும் ஆனால் இந்த கயவர்கள் நிகழாது என்று  'காலத்தால் அழியாத அல்லாஹ்வின்  சட்டத்தை' அழித்து விட முயன்றுள்ளனர் மூன்று தலாகை முறையாக விடுவதற்கு மார்க்கம் நமக்கு வழிகாட்டியுள்ளது.

மனைவியை முறையாக  பிரிய முயலும் ஒரு கணவன் ஒவ்வொரு மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் சுத்தமான காலத்தில் ஒரு தலாக் வீதம் மூன்று தலாக் விடுவது "சுன்னத்தான தலாக்" என்று இஸ்லாம் நமக்கு  வழிகாட்டியிருக்க இந்த அபத்தமான சட்டம் நடைமுறைக்கு வந்தால் முறையாக தலாக் விடுபவரும் பாதிக்கப் படுவார்.

மனவாழ்வு கசந்து விட்டவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அருமையான மார்க்க வழிகாட்டல்கள் :-
----------------------------------------------------------------:-
தலாக் என்பதற்கு மணவாழ்வை முறித்துக் கொள்வது...உறவை கழற்றி விடுவது என்பது பொருள்....ஆணுக்கு தலாக் விடுவதற்கு அனுமதித்தது போலவே இஸ்லாம் பெண்களுக்கும் [குலஹ்] خلع அடிப்படையில் கணவனை பிரிவதற்கு அனுமதித்துள்ளது. ஆனால் இதை முறையாக செய்வதற்கும் அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1. தலாக் விடுவதில் மார்க்க நடைமுறை
*********************************************
திருமண வாழ்வில் மனக் கசப்பு ஏற்படும் போது அதை எதிர்கொள்வதற்கான அழகிய வழிமுறைகள் மார்க்கத்தில் காட்டப்பட்டுள்ளது
1) அறிவுரை கூறுங்கள்
*****************************
கணவனுக்கு மனைவி மீது சில உரிமைகளை இறைவன் வகுத்துள்ளான்.கணவனுக்கு கட்டுப்படுவதைக் கடமையாக்கியுள்ளான்

سنن أبي داود  1863 عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ
سنن الترمذي 1079 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا
صحيح البخاري -5193 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَأَبَتْ أَنْ تَجِيءَ، لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ»

எனவேதான் எந்தப் பெண்கள் தம் கணவனுக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று இறைவன் கூறுகின்றான்.
واللاتي تخافون نشوزهن فعظوهن4:34
கணவனை மீறி ஒரு மனைவி நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால். அவளுக்கு அறிவுரை கூற வேண்டும். தனக்கு மாறு செய்வதால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்க வேண்டும்
2) படுக்கையில் விலக்கிவையுங்கள்
******************************************
واهجروهن في المضاجع
உபதேசத்தின் மூலம் அவர்கள் திருந்தாவிட்டால் படுக்கையில் அவர்களை விலக்கி வையுங்கள்  என இறைவன் கூறுகின்றான்.
அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ளாமல் அவளுக்கு முதுகை காட்டியவாறு அவளுடன் படுக்கையில் உறங்குவான் என்று இப்னு அப்பாஸ் ரலி விளக்கம் கூறுகின்றார்கள்.( இப்னு கஸீர்)

سنن أبي داود - (6 / 45)
1830 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا أَبُو قَزَعَةَ الْبَاهِلِيُّ عَنْ حَكِيمِ بْنِ  مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ قَالَ أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ أَوْ اكْتَسَبْتَ وَلَا تَضْرِبْ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ
قَالَ أَبُو دَاوُد وَلَا تُقَبِّحْ أَنْ تَقُولَ قَبَّحَكِ اللَّهُ
விலக்கிவைப்பதும் கூட வீட்டில் மட்டும்தான் அவ்வாறு செய்ய வேண்டும் இருவருக்கு மத்தியி்ல் இருக்கும் பிரச்சினையை வெளியில் செல்லும் போதோ மற்றவர்களுக்கு முன்னாலோ காட்டிக் கொள்ளக்கூடாது.

3) அடித்துத் திருத்துங்கள்
*********************************
واضربوهن فان اطعنكم فلا تبغوا عليهن سبيلا
விலக்கிவைப்பதின் மூலமும் திருந்தாவிட்டால் லேசாக அவர்களை அடியுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.

صحيح مسلم عن جابر عن النبي صلى الله عليه وسلم: أنه قال في حجة الوداع: "واتَّقُوا اللهَ في النِّساءِ، فإنهن عندكم عَوَانٌ، ولكم عليهن ألا يُوطِئْنَ فُرُشكم أحدا تكرهونه، فإن فَعَلْن فاضربوهن ضَرْبا غير مُبَرِّح، ولهن رزْقُهنَّ وكِسْوتهن بالمعروف" .
பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின்  கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.

سنن أبي داود - (6 / 50)
1834 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي خَلَفٍ وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ ابْنُ السَّرْحِ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ذُبَابٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ فَجَاءَ عُمَرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ذَئِرْنَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ فَرَخَّصَ فِي ضَرْبِهِنَّ فَأَطَافَ بِآلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ طَافَ بِآلِ مُحَمَّدٍ نِسَاءٌ كَثِيرٌ يَشْكُونَ أَزْوَاجَهُنَّ لَيْسَ أُولَئِكَ بِخِيَارِكُمْ

இயாஸ் பின் அப்தில்லாஹ்( ரலி) அவர்கள் கூறியதாவது.அல்லாஹ்வின் அடிமைப் பெண்கள்( அதாவது மனைவியறை) நீங்கள் அடிக்காதீர்கள் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் ஒரு தடவை உமர்( ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்( ஸல்) அவர்களிடம் வந்து.பெண்கள் தங்கள் கணவர்களை மீறி நடக்கிறார்கள் என முறையிட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மனைவியரை அடிப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
இதையடுத்து ஏராளமான பெண்கள் தம் கணவர்களைப் பற்றி முறையிடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்களின் குடும்பத்தினரைச் சுற்றிவரத் தொடங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் ஏராளமான பெண்கள் தம் கணவர்களைப் பற்றி முறையிடுவதற்காக முஹம்மதின் குடும்பத்தாரைச் சுற்றி வருகிறார்கள்  ( இவ்விதம் அடிக்கும்) இவர்கள் உங்களில் நல்லவர்கள் அல்லர் என்று கூறினார்கள்

4) நடுவர்களை ஏற்படுத்துங்கள்
*************************************
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏ 
கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:35)

அலி( ரலி) அவர்களிடம் வந்த வழக்கு
*******************************************
உபைதா( ரஹ்) அவர்கள் கூறியதாவது ஒரு மறை நான் அலி ( ரலி) அவர்களுடன் இருந்தேன் அப்போது அவர்களிடம் ஒரு பெண்ணும் அவளுடைய கணவரும் அங்கு வந்தார்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் பலபேர் வந்திருந்தார்கள் பின்னர் பெண்ணின் குடும்பத்தார் ஒரு நடுவரையும் ஆணின் குடும்பத்தார் ஒரு நடுவரையும் நியமித்தார்கள். அலி ( ரலி) அவ்விருவர்களிடமும். உங்களுடைய கடமை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சேரந்து வாழ்வது நல்லது என நீங்கள் கருதினால் அவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
( தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்)

5) ரஜஇய்யத்தான ஒரு தலாக் & சட்டங்கள்.
********************************************
ஐந்தாம் கட்ட நடவடிக்கையாகத்தான் மார்க்கம் திருந்துவதற்காக மீட்டிக்கொள்ளும்படியான ஒரு தலாக்கை அனுமதிக்கிறது...மறுபடியும் சர்ச்சை தொடர்ந்தால்
ஆறாவது கட்டமாக மற்றொரு தலாக் ..இதைத்தான் திருமறை குர்ஆன் الطلاق مرتان.    மீட்டிக்கொள்ளும்படியான தலாக் இரு முறை எனக்குறிப்பிடுகிறது.

(طلاق رجعي)
மீட்டிக் கொள்ளும் படியான தலாக்கை பொருத்த வரையில் மனைவி கணவன் வீட்டிலேயே 'இத்தா' இருப்பாள் ஏனென்றால் கணவன் மனைவிக்கு மத்தியி்ல் உள்ள மனக் கசப்புகள் மறந்து இருவரும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இந்த வகையான தலாகில் கணவன் வீட்டிலேயே மனைவி இத்தா இருக்க நெருக்கடி ஏதும் இல்லாமல் இருக்கும் போது இவள் வீட்டிலிருந்து வெளியேற கூடாது. கணவனும் வெளியேற்றக் கூடாது.
அவளுக்கான செலவினமும்தங்குமிடமும் கணவனின் மீது கட்டாயமாகும் அவள் இத்தாவுடைய காலம் முடியும் வரை மனைவியாகவே தொடருகிறாள்.
திருமறை குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு தான் உத்தரவிட்டுள்ளான்.

الأصل أن تعتد المطلقة في بيت زوجها ، كما قال تعالى : ( يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا ) (الطلاق/1)
நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
(அல்குர்ஆன் : 65:1)
لكن إن كان اعتداد المطلقة في بيت زوجها يخشى منه حصول الضرر المحقق لها ، جاز أن تعتد في بيت أهلها .

قال القرطبي رحمه الله : " ( لا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ ) أي ليس للزوج أن يخرجها من مسكن النكاح ما دامت في العدة ، ولا يجوز لها الخروج أيضا لحق الزوج إلا لضرورة ظاهرة ، فإن خرجت أثمت ولا تنقطع العدة. والرجعية والمبتوتة في هذا سواء. وهذا لصيانة ماء الرجل. وهذا معنى إضافة البيوت إليهن ؛ كقوله تعالى : ( وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ) ، وقوله تعالى : ( وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ ) فهو إضافة إسكان وليس إضافة تمليك. وقوله : ( لا تُخْرِجُوهُنَّ ) يقتضي أن يكون حقا في الأزواج. ويقتضي قوله : ( وَلا يَخْرُجْنَ ) أنه حق على الزوجات " انتهى

இதன் பிறகும் இருவரும் இணைந்து வாழ முடியாது என்ற நிலை வரும் போது மார்க்கம்
ஏழாவது இறுதிக்கட்ட நடவடிக்கையாக மூன்று தலாக் மூலம் நிரந்தரமான பிரிவை அனுமதிக்கிறது...ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தின் இந்த வழிகாட்டல்களை மீறுவதால் நிறைய சங்கடங்களுக்கு நாம் ஆளாகிறோம்.

قوله تعالى : ( الطلاق مرتان ) روي عن عروة بن الزبير قال : كان الناس في الابتداء يطلقون من غير حصر ولا عدد وكان الرجل يطلق امرأته فإذا قاربت انقضاء عدتها راجعها ثم طلقها كذلك ثم راجعها يقصد مضارتها فنزلت هذه الآية ( الطلاق مرتان ) يعني الطلاق الذي يملك الرجعة عقيبه مرتان فإذا طلق ثلاثا فلا تحل له إلا بعد نكاح زوج آخر .
قوله تعالى : ( فإمساك بمعروف ) قيل : أراد بالإمساك الرجعة بعد الثانية والصحيح أن المراد منه : الإمساك بعد الرجعة يعني إذا راجعها بعد الرجعة الثانية فعليه أن يمسكها بالمعروف والمعروف كل ما [ ص: 270 ] يعرف في الشرع من أداء حقوق النكاح وحسن الصحبة ( أو تسريح بإحسان ) أن يتركها بعد الطلاق حتى تنقضي عدتها وقيل الطلقة الثالثة .
قوله تعالى : ( أو تسريح بإحسان ) وصريح اللفظ الذي يقع به الطلاق من غير نية ثلاثة : الطلاق والفراق والسراح وعند أبي حنيفة الصريح هو لفظ الطلاق فحسب وجملة الحكم فيه أن الحر إذا طلق زوجته طلقة أو طلقتين بعد الدخول بها يجوز له مراجعتها بغير رضاها ما دامت في العدة وإن لم يراجعها حتى انقضت عدتها أو طلقها قبل الدخول بها أو خالعها فلا تحل له إلا بنكاح جديد بإذنها وإذن وليها فإن طلقها ثلاثا فلا تحل له ما لم تنكح زوجا غيره وأما العبد إذا كانت تحته امرأة فطلقها طلقتين فإنها لا تحل له إلا بعد نكاح زوج آخر

இஸ்லாம் வருவதற்கு முன்பு மக்கள் கணக்கில்லாமல் நிறைய தலாக் விடுபவர்களாக இருந்தார்கள். எனவே இரண்டு தலாக் வரை தான் மீட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மூன்றாவது தலாக் விட்டு விட்டால் வேறொரு கணவரை அந்த பெண் திருமணம் செய்து அவர் உறவு கொண்ட பிறகு எதார்த்தமாக தலாக் நிகழ்ந்த பிறகு தான் இந்த கணவன் அவளை திருமணம் முடிக்க இயலும் என்பதை இந்த ஆயத் விவரிக்கிறது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ......

பிரிய நினைத்தால் மூன்றாவது தலாக் விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒன்று அல்லது இரண்டு முறை தலாக் சொன்ன பிறகு இத்தா முடியும் வரை மீட்டிக்கொள்ளாமல் விட்டு விட்டாலே பிரிவினை நிகழ்ந்து விடும்.
இவ்வாறு செய்வதே சாலச்சிறந்தது ஏனெனில் தலாக் விட்ட பிறகு மனம் திருந்தி வாழ நினைத்தாலும் பெரிய சிரமம் இல்லாமல் நிகாஹ்வை புதுப்பித்துக் கொண்டு சேர்ந்து வாழ முடியும்.
மூன்று தலாக் விட்டால் பெரும்    சிரமத்திற்கு பின்பு தான் சேர முடியும். இந்த சட்டமே மூன்று தலாக் விடுவதை மார்க்கம் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது...

2.  காரணமின்றி தலாக் விடுவது&கேட்பதன் விபரீதம் :-


سنن أبي داود - 1863 عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ
سنن أبي داود
1899 عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ

1863:அபூதாவூத் ஷரீ :. பில் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது. .ஹலாலான காரியங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் கோபமூட்டும் காரியம் தலாக் ஆகும்"
ஏனென்றால் இரு இஸ்லாமியக் குடும்பத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.பின்பு அவர்களுடைய உறவு இவர்களுடைய உறவு என சமூகத்தில் பெரிய பிளவை ஏற்படுத்தி விடுகிறது
1899:-இதே போல அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகிய கிரந்தங்களில் வரும் ஹதீஸ் ثوبان رضي அறிவித்துள்ளார்கள் "எந்த பெண் சரியான (பிரச்சினையின்றி)காரணமில்லாமல் தனது கணவனிடம் தலாக் கேட்பாளோ அவளுக்கு சுவனத்தின் வாடை கூட ஹராமாகி விட்டது. "
இன்று சமுதாயத்தில் நடக்கும் பாதிக்கு மேற்பட்ட தலாக்குகள் ما به باس. பெரிய காரணம் எதுவுமில்லாமல் கொத்தமல்லி, கருவேப்பிலை காரணங்களுக்கெல்லாம் தலாக் நடைபெறுகிறது.

3. மூன்று தலாகின் சட்டங்கள்.

صحيح مسلم 3746 عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ الطَّلاَقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبِى بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلاَفَةِ عُمَرَ طَلاَقُ الثَّلاَثِ وَاحِدَةً فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّاسَ قَدِ اسْتَعْجَلُوا فِى أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ. فَأَمْضَاهُ عَلَيْهِمْ.
صحيح مسلم  3747 أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَ لاِبْنِ عَبَّاسٍ أَتَعْلَمُ أَنَّمَا كَانَتِ الثَّلاَثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَأَبِى بَكْرٍ وَثَلاَثًا مِنْ إِمَارَةِ عُمَرَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ نَعَمْ.
صحيح مسلم 3748 عَنْ طَاوُسٍ أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَ لاِبْنِ عَبَّاسٍ هَاتِ مِنْ هَنَاتِكَ أَلَمْ يَكُنِ الطَّلاَقُ الثَّلاَثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبِى بَكْرٍ وَاحِدَةً فَقَالَ قَدْ كَانَ ذَلِكَ فَلَمَّا كَانَ فِى عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِى الطَّلاَقِ فَأَجَازَهُ عَلَيْهِمْ.
سنن أبي داود 1880 عَنْ طَاوُسٍأَنَّ رَجُلًا يُقَالُ لَهُ أَبُو الصَّهْبَاءِ كَانَ كَثِيرَ السُّؤَالِ لِابْنِ عَبَّاسٍ قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ الرَّجُلَ كَانَ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا جَعَلُوهَا وَاحِدَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ إِمَارَةِ عُمَرَ قَالَ ابْنُ عَبَّاسٍ بَلَى كَانَ الرَّجُلُ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا جَعَلُوهَا وَاحِدَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ إِمَارَةِ عُمَرَ فَلَمَّا رَأَى النَّاسَ قَدْ تَتَابَعُوا فِيهَا قَالَ أَجِيزُوهُنَّ عَلَيْهِمْ
وقد اختلف العلماء فيمن قال لامرأته أنت طالق ثلاثا فقال الشافعي ومالك وأبو حنيفة وأحمد وجماهير العلماء من السلف والخلف : يقع الثلاث . وقال طاوس وبعض أهل الظاهر : لا يقع بذلك إلا واحدة . وهو رواية عن الحجاج بن أرطأة ومحمد بن إسحاق والمشهور عن الحجاج بن أرطأة أنه لا يقع به شيء ، وهو قول ابن مقاتل ورواية عن محمد بن إسحاق .

எடுத்த உடனே மூன்று தலாக் முறையற்ற செயலாக இருந்தாலும் ஒரு மனிதர் தன் மனைவியை மூன்று தலாக் விட்டால் அது நிகழ்ந்துவிடும்.

3746: 47 : 48 :-முஸ்லிம் ஷரீ :. பில் ஒரு ஹதீஸ் வருகிறது. இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்...
மூன்று தலாக் என்பது நபி ஸல் அவர்களின் காலத்திலும், அபூபக்கர் ரலி அவர்களின் காலத்திலும்'உமர் ரலி அவர்களின் துவக்க இரண்டு ஆண்டு காலத்திலும் ஒரு தலாக்காக கணிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.அதற்குப் பிறகு உமர் ரலி அவர்கள் தலாக்கின் விஷயத்தில் மக்கள் பேணிக்கையாக இருப்பதற்காக மூன்று தலாக்காக செல்லுபடியாக்கினார்கள்.
இந்த ஹதீஸை  வைத்து இமாம்களை மறுக்கும் கூட்டத்தார்கள் மூன்று தலாக் விட்டால் ஒன்று தான் கூடும் எனக் கூறினாலும் நம்முடைய நான்கு இமாம்களும், பெரும்பான்மையான உலமாக்களும் மூன்று தலாக் விட்டால் மூன்றாக நிறைவேறும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸுடைய விளக்கத்தை நன்கறிந்த அவர்கள் நபி ஸல் அவர்களின் காலத்தில் ஒரு தலாக்கை உறுதிப்படுத்தவே கூறப்பட்டது. எனவே மூன்றை ஒன்றாகக் கருதினார்கள். ஆனால் பிற் காலத்தில் ஸஹாபாக்களோடு பிறர்களும் கலந்து விட்டமையால் நம்பிக்கை குறைவு ஏற்பட்டது எனவே உமர் ரலி அவர்கள் இனிமேல் யாரும் மூன்று முறை தலாக் சொல்லி விட்டு ஒன்று என வாதிடக்கூடாது என சட்டம் இயற்றினார்கள்.

மூன்று தலாக் விடப் பட்ட பெண்ணுக்கு
ஹன:.பி மத்ஹபின் படி نفقة سكني  உண்டு.

இமாம் ஷா:.பி ரஹ் அவர்களின் கருத்துப்படியும் سكني உள்ளது. نفقة  இல்லை.

யார் نفقة سكني   இல்லை என்று கூறுகிறார்களோ அவர்கள் ஆதாரமாக கூறுவது فاطمة بنت قيس  என்ற ஸஹாபிப்பெண்மணியின் ஹதீஸை.

سنن الترمذي 1100 :َ قَالَتْ فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ
طَلَّقَنِي زَوْجِي ثَلَاثًا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا سُكْنَى لَكِ وَلَا نَفَقَةَ
قَالَ مُغِيرَةُ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ فَقَالَ قَالَ عُمَرُ لَا نَدَعُ كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِقَوْلِ امْرَأَةٍ لَا نَدْرِي أَحَفِظَتْ أَمْ نَسِيَتْ وَكَانَ عُمَرُ يَجْعَلُ لَهَا السُّكْنَى وَالنَّفَقَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَنْبَأَنَا حُصَيْنٌ وَإِسْمَعِيلُ وَمُجَالِدٌ قَالَ هُشَيْمٌ وَحَدَّثَنَا دَاوُدُ أَيْضًا عَنْ الشَّعْبِيِّ قَالَ دَخَلْتُ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ فَسَأَلْتُهَا عَنْ قَضَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَقَالَتْ طَلَّقَهَا زَوْجُهَا الْبَتَّةَ فَخَاصَمَتْهُ فِي السُّكْنَى وَالنَّفَقَةِ فَلَمْ يَجْعَلْ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُكْنَى وَلَا نَفَقَةً وَفِي حَدِيثِ دَاوُدَ قَالَتْ وَأَمَرَنِي أَنْ أَعْتَدَّ فِي بَيْتِ ابْنِ أُمِّ مَكْتُومٍ

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْهُمْ الْحَسَنُ الْبَصْرِيُّ وَعَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ وَالشَّعْبِيُّ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَقُ وَقَالُوا لَيْسَ لِلْمُطَلَّقَةِ سُكْنَى وَلَا نَفَقَةٌ إِذَا لَمْ يَمْلِكْ زَوْجُهَا الرَّجْعَةَ

و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمْ عُمَرُ وَعَبْدُ اللَّهِ إِنَّ الْمُطَلَّقَةَ ثَلَاثًا لَهَا السُّكْنَى وَالنَّفَقَةُ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لَهَا السُّكْنَى وَلَا نَفَقَةَ لَهَا وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَاللَّيْثِ بْنِ سَعْدٍ وَالشَّافِعِيِّ و قَالَ الشَّافِعِيُّ إِنَّمَا جَعَلْنَا لَهَا السُّكْنَى بِكِتَابِ اللَّهِ قَالَ اللَّهُ تَعَالَى{
لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ }قَالُوا هُوَ الْبَذَاءُ أَنْ تَبْذُوَ عَلَى أَهْلِهَا وَاعْتَلَّ بِأَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ لَمْ يَجْعَلْ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السُّكْنَى لِمَا كَانَتْ تَبْذُو عَلَى أَهْلِهَا
قَالَ الشَّافِعِيُّ وَلَا نَفَقَةَ لَهَا لِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِصَّةِ حَدِيثِ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ
1110:- ஃபாதிமா பின்து கைஸ் சொன்னார் தனது கணவர் தன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டார் நபி ஸல் அவர்களிடம் நான் முறையிட்ட போது எனக்கு செலவினமும், தங்குமிடமும் என் கணவர் தர வேண்டியதில்லை எனக் கூறி என்னை அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபியின் வீட்டில் இத்தா" இருக்கும் படி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை செவியுற்ற உமர் ரலி அவர்கள் "ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு நாங்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை விட்டு விட மாட்டோம்" என்றார்கள்.

திருமறை குர்ஆனில் வருகிறது
لا تخرجوهن من بيوتهن  ولا يخرجن الا ان ياتين بفاحشة مبينة
முத்தலாக் விடப் பட்ட பெண்கள் (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) நீங்கள் வெளியேற்றி விடவும் வேண்டாம். அவர்களும் வெளியேற வேண்டாம். பகிரங்கமான மானக்கேடான காரியத்தை அவர்கள் கொண்டுவந்தாலன்றி.
உமர் ரலி அவர்களின் கூற்றுக்கிணங்க அந்த பெண்ணுக்கு  نفقة سكني உண்டு.

وفي رواية للبخاري ، وغيره : أن عائشة عابت ذلك أشد العيب ، وقالت : إن فاطمة كانت في مكان وحش فخيف على ناحيتها ، فلذلك أرخص لها رسول الله صلى الله عليه وسلم ، وهذه الرواية تدل على أن سبب الإذن في انتقال فاطمة أنها كانت في مكان وحش ، وقد وقع في رواية لأبي داود : إنما كان ذلك من سوء الخلق

ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது فاطمة بنت قيس என்ற ஸஹாபிப்பெண்மணியை நபி ஸல் அவர்கள் வேறு வீட்டில்" இத்தா "
இருக்கும் படி சொல்லக் காரணம் தன் கணவருடைய உறவினர்களுடன் அந்தப் பெண் சண்டையிட்டுக் கொண்டது தான் காரணம். ... மேலும் கணவருடைய نفقة வையும் போதாது என மறுத்து விட்டார் உண்மையில் செலவினமும் கொடுக்கப்பட்டுள்ளது...எனவே முத்தலாக் விடப் பட்ட பெண்ணுக்கு மார்க்கத்தில்   இத்தா முடியும் வரை ஜீவனாம்சம் உண்டு.

இது ஷாபானு என்ற பெண்மனியின் வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மாற்றார்கள் சொல்வது போல அவர்கள் நிர்ணயிக்கும் பெரிய தொகை யோ, அல்லது இத்தாவுக்குப் பின்னும் செலவினமோ கொடுக்கத்தேவையில்லை...இத்தாவுக்குப் பின் அந்தப் பெண் தான் விரும்பிய படி திருமணம் முடித்துக்கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது.....

4. மார்க்கத்தை விளங்காத சிலரால் பிரச்சினையாக்கப்படும் தலாக்;

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை புரியாத சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் தலாக் முதலிடம் வகிக்கிறது.அன்று ஓர் ஷாபானு' இன்று ஓர் ஷாயிராபானு' என நம்மவர்களின் மூலம் தான் மார்க்கச் சட்டங்கள் மாற்றார்களால் ஆட்சேபிக்கப்படுகிறது. சமயத்தில் கோர்ட் படியேறி பொது விவாதத்திற்கும் வந்து விடுகிறது. தற்போது  ஷாயிராபானு என்ற பெண்மணியால் சதிவேலைகள் நடந்து தலாக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டுமென கோர்ட் உத்தரவு வருமளவு சர்ச்சை எழுந்துள்ளது. அதன் இறுதியாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர ஏதுவாக மூன்று தலாக் செல்லாது, என்றும் அதை கடைபிடிப்பவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்ற சட்டவரைவையும் நாடாளுமன்றத்தில்  அமைச்சரவை முடிவு செய்து நடைமுறைப் படுத்துவது குறித்து ஆலோசனை செய்து கொண்டுள்ளது.
ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வின் சட்டம் முடிவானது அதில் யாருக்கும் மாற்றம் செய்ய அதிகாரமில்லை ஏன் நபிக்கு கூட அதிகாரமில்லை என்று அல்லாஹ் திருமறை குர்ஆனில் தெளிவு படுத்தியுள்ளான்.

وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ ۙ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَٰذَا أَوْ بَدِّلْهُ ۚ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰ إِلَيَّ ۖ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 10:15)

5. ஷரீஅத் சட்டங்களை பாதுகாக்க& சர்ச்சைகளை தவிர்க்க தீர்வு;

எப்போது வாய்ப்பு கிடைக்கும் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கலாம்  என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எதிரிகளுக்கு முத்தலாக் விஷயத்தில்    நம்முடைய கவனமின்மை  நல்ல வாய்ப்பாகி விட்டது.  ஷரீஅத் சட்டங்களை பாதுகாத்திட முதலில் நம்மவர்களுக்கு மார்க்கச் சட்டங்களின் மேன்மையை உணர்த்திட வேண்டும். எல்லா நிலைமையிலும்  நாம் தோற்றத்திலும், நடைமுறையிலும் உண்மை முஸ்லிம்களாக இருந்திட வேண்டும்.  நமது மார்க்கத்தின் சட்டங்களை யாருக்காகவும் கைவிட மாட்டோம் என்ற உறுதியும் அதை வலியுறுத்தும் நடைமுறையுமே தற்போது நமக்கு  தேவைப்படுகிறது. அதே நேரம் மாற்றார்களின் தவறான புரிதல்களை நாம் விளக்கப் படுத்தி ஷரீஅத் சட்டத்தை நிலைநிறுத்திட வேண்டும்.  அல்லாஹ் இந்திய மண்ணில் ஷரீஅத் சட்டத்தை பேணி வாழும் மு:.மின்களாக நம்மைத் தேர்ந்தெடுத்துக் கொள்வானாக...ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.