بسم الله الرحمن الرحيم
வாருங்கள் ரமலானுக்கு தயாராவோம்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ - البقرة: 185
عن عبد الله بن عمرو ان رسول الله صلى الله عليه و سلم قال : "
الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي رب منعته الطعام والشهوات
بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان
" (رواه احمد)
மகத்துவம் நிறைந்த ரமலான் நம்மை எதிர் நோக்கியுள்ளது. நாமும் மகிழ்ச்சியோடும்
உற்சாகத்துடனும் நன்மை செய்யும் ஆவலுடனும் ரமலானை வரவேற்க தயாராக வேண்டும்.
முன்னோர்களாகிய நல்லோர்கள் ரமலானுக்கு முன் ஆறு மாதங்கள் ரமாலானை அடையும்
பாக்கியத்தை கேட்டு துஆ செய்வதும், ரமலான் முடிந்த பின் ரமலான் உள்ளிட்ட ஆறு மாதங்கள் அதில் செய்த நன்மைகள்
ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று துஆ செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.
وَقَالَ مُعَلَّى بْنِ الفَضْلِ: كَانُوا يَدْعُونَ الله سِتَّةَ
أَشْهُرِ أَنْ يُبَلِّغَهُمْ رَمَضَانُ، ثُمَّ يَدْعُونَهُ سِتَّةَ أَشْهُرٍ أَنْ
يَتَقَبَّلَهُ مِنْهُمْ. وَقَالَ يَحْيَى بِنْ أَبِي كَثِيرِ كَانَ مِنْ
دُعَائِهِمْ: (اللَّهُمَّ سَلِّمْنِي إلى رَمَضَانَ وَسَلِّمْ لِي رَمَضَانَ
وَتَسَلَّمْهُ مِنّي مُتَقَبَّلاً) موارد الظمآن لدروس الزمان (1 / 338)
ஏனெனில் இனியொரு முறை இந்த பாக்கியம் நமக்கு கிடைக்குமா என்பது நமக்கு
தெரியாது. கடந்த வருடம் நம்முடன் ஸஹர் உண்ட சிலர் இப்போது
இல்லை. நம்முடன் தொழுகைக்கு வந்த சிலர் இப்போது இல்லை. நம் அருகில் இருந்து
இஃப்தார் செய்த சிலர் இப்போது இல்லை. நம் அருகில் தராவீஹ் தொழுத சிலர் இப்போது
இல்லை.
நம் வாழ் நாளில் ஒரு ரமலானை கூடுதலாக கிடைக்கப் பெற்று அதில் நன்மை செய்யும்
பாக்கியமும் கிடைத்து விடுவது சாதாரண விஷயமல்ல. மறுமையில் நன்மையில் மிகப்பெரிய
வித்தியாசத்தை ஏற்படுத்தி விடும்.
عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ رَجُلَيْنِ مِنْ بَلِيٍّ
قَدِمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ
إِسْلَامُهُمَا جَمِيعًا، فَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ،
فَغَزَا الْمُجْتَهِدُ مِنْهُمَا فَاسْتُشْهِدَ، ثُمَّ مَكَثَ الْآخَرُ بَعْدَهُ
سَنَةً، ثُمَّ تُوُفِّيَ، قَالَ طَلْحَةُ: فَرَأَيْتُ فِي الْمَنَامِ: بَيْنَا
أَنَا عِنْدَ بَابِ الْجَنَّةِ، إِذَا أَنَا بِهِمَا، فَخَرَجَ خَارِجٌ مِنَ
الْجَنَّةِ، فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ الْآخِرَ مِنْهُمَا، ثُمَّ خَرَجَ، فَأَذِنَ
لِلَّذِي اسْتُشْهِدَ، ثُمَّ رَجَعَ إِلَيَّ، فَقَالَ: ارْجِعْ، فَإِنَّكَ لَمْ
يَأْنِ لَكَ بَعْدُ، فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ، فَعَجِبُوا
لِذَلِكَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَحَدَّثُوهُ الْحَدِيثَ، فَقَالَ: «مِنْ أَيِّ ذَلِكَ تَعْجَبُونَ؟» فَقَالُوا:
يَا رَسُولَ اللَّهِ هَذَا كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا، ثُمَّ
اسْتُشْهِدَ، وَدَخَلَ هَذَا الْآخِرُ الْجَنَّةَ قَبْلَهُ، فَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ
سَنَةً؟» قَالُوا: بَلَى، قَالَ: «وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَ، وَصَلَّى كَذَا
وَكَذَا مِنْ سَجْدَةٍ فِي السَّنَةِ؟» قَالُوا: بَلَى، قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ
وَالْأَرْضِ»
(سنن ابن ماجه) (2 / 1293)
தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பலிய்யி கிளையாரிலிருந்து இரண்டு மனிதர்கள் நபி {ஸல்} அவர்களிடம் வந்தார்கள். இருவரும் ஒரே சமயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அவ்விருவரில் ஒருவர் மற்றவரை விட அல்லாஹ்வின் வழிபாடு விஷயத்தில் கடுமையாக
முயற்சிக்கக் கூடியவர்கள். அவ்விருவரில், முயற்சி செய்பவர் அறப்போரில் கலந்து கொண்டு உயிர்த தியாகம் செய்து ஷஹீத்
ஆக்கப்பட்டார். மற்றொருவர், அவருக்குப் பிறகு ஒரு வருடம் வாழ்ந்து பின்னர்
மரணித்தார்.
“நான் கனவில் என்னை சுவர்க்கத்தின் வாசல் அருகிலே அவ்விருவருடனும் இருந்ததைப்
பார்த்தேன். அப்போது சுவர்க்கத்திலிருந்து ஒருவர் வெளியே வந்து அவ்விருவரில்
இறுதியாக மரணித்தவருக்கு சுவர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி அளித்தார்.
பின்னர், மீண்டும் வெளியே வந்து உயிர்த்தியாகம் செய்து
ஷஹீதான முதலாமவருக்கு சுவர்க்கத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கினார்.
பிறகு, அவர் என்னிடம் வந்தார். மேலும், என்னைப் பார்த்து “நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; உங்களுக்கு உள்ளே செல்வதற்கான நேரம் வரவில்லை” என்று கூறினார். இதை நான் காலையில் மக்களிடம்
கூறினேன். மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களுக்கும் தெரிய வந்தது. மக்களும் நபி {ஸல்} அவர்களிடம் சென்று தங்களின் ஆச்சர்யத்தை
வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “எது குறித்து நீங்கள் ஆச்சர்யம் அடைகின்றீர்கள்?” என்று மக்களை நோக்கி வினவினார்கள். அப்போது, மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! முதலாமவர் கடுமையாக
அமல்களில் முயற்சி செய்தார்; அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்து ஷஹீதும் ஆனார். ஆனால், மற்றவரோ இவருக்கு முன்னால் சுவனத்தில் நுழைந்து
விட்டாரே!?” என்று தங்களின் ஆச்சர்யத்திற்கான காரணத்தை
வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “இவர் அவருக்குப் பின்னால் ஒரு வருடம் வாழ வில்லையா?” என மக்களிடம் கேட்டார்கள். அதற்கு மக்களும் “ஆம், வாழ்ந்தார்” என்று ஆமோதித்தனர். அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அவர் ரமலானை அடைந்திருப்பார்; நோன்பு நோற்றிருப்பார்; உபரியான தொழுகைகளை அதிகமதிகம் தொழுதிருப்பார்
இல்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் ”ஆமாம்” என்று பதில் கூறினார்கள்.
ஆகவே தான் அவ்விருவருக்கும் இடையே வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள
மிகப்பெரிய தூரத்தைப் போன்று இடைவெளி உள்ளது” என்று கூறினார்கள்.
(நூல்: இப்னு மாஜா)
நன்மைகளை அதிகரித்துக் கொள்ளவும் பாவங்களை கரைத்துக் கொள்ளவும் மிக வசிதியான, வாய்ப்பான ஒரு மாதம் ரமலான் போன்று வேறில்லை.
ஏனெனில் இம்மாதத்தில் நன்மைகளை அதிகரித்துக் கொள்ளவும் குற்றங்களை குறைக்கவும்
தேவையான ஏற்பாடுகளை இறைவனே முன்வந்து செய்துள்ளான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ
صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ،
فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ
مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ
الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ
" (سنن الترمذي)
(ويا باغي الشر أقصر) معناه يا طالب الشر أمسك وتب فإنه أوان قبول التوبة]
.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்து விட்டால்
ஷைத்தான்களும் மூர்க்கத் தனமான ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின்
வாசல்கள் மூடப்பட்டு விடுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை.
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாசலும்
மூடப்படுவதில்லை 'நன்மையைத் தேடுபவனே முன்னேறி வா! தீமையைத்
தேடுபவனே நிறுத்திக் கொள்!' என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்.
அல்லாஹ்வால் நரகத்திலிருந்து பலர் விடுவிக்கப்படுகின்றர். இவ்வாறு
விடுவிக்கப்படுவது (ரமலானின்) ஒவ்வொரு இரவிலுமாகும்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
(நூல்: திர்மிதி)
அதனால் தான் தீமைகளிலிருந்து விலகி நன்மைகளில் அதிக ஈடுபாடு கொள்வது
பலருக்கும் எளிதாகி விடுவதை அனுபவப் பூர்வமாக நாம் உணர்கிறோம்.
ரமலானில் நிறைந்திருக்கும் தனித்துவங்களும் மகத்துவங்களும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ: «مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ
رَمَضَانَ مِنْ غَيْرِ عُذْرٍ وَلاَ مَرَضٍ، لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ
وَإِنْ صَامَهُ»
(صحيح البخاري)
ஒருவர் ரமலானில் ஒரு நோன்பை, நோயோ தக்க காரணமோ இன்றி விட்டுவிட்டால் அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும்
அதற்கு ஈடாகாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலி அவர்கள் வாயிலாக
அறிவிக்கப்டுகிறது.
(ஸஹீஹுல் புஹாரீ)
عَنْ وَهْبِ بْنِ خَنْبَشٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُمْرَةٌ فِي رَمَضَانَ، تَعْدِلُ حَجَّةً» (سنن ابن
ماجه)
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது (நன்மையில்) ஹஜ்ஜுக்கு ஈடாகும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: இப்னுமாஜா)
1936 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ
الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا
رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ: «مَا لَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي
وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ
تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ
تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» ، قَالَ: لاَ، فَقَالَ: «فَهَلْ تَجِدُ
إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا» . قَالَ: لاَ، قَالَ: فَمَكَثَ النَّبِيُّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالعَرَقُ المِكْتَلُ -
قَالَ: «أَيْنَ السَّائِلُ؟» فَقَالَ: أَنَا، قَالَ: «خُذْهَا، فَتَصَدَّقْ بِهِ»
فَقَالَ الرَّجُلُ: أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا
بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ
أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى
بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ» (صحيح البخاري)
1936. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து
விட்டேன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன்
கூடிவிட்டேன்!" என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம்
இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை!" என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு
சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இல்லை!" என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு
சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும்
அவர், 'இல்லை!" என்றார். நபி(ஸல்) அவர்களிடம்
பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவுள்ள உணவைக் கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்டவர் எங்கே" என்றார்கள். 'நானே!" என்று அவர் கூறினார். 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக
இருப்போருக்கா? (நான் தர்மம் செய்ய வேண்டும்) மதீனாவின்
(கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என்
குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!" என்று கூறினார். அப்போது
நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்:
பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து
விடுவீராக!" என்றார்கள்.
ரமலானுடைய மாதத்தில் நோன்பை முறித்து விட்டால் அது எவ்வளவு பெரிய விபரீதத்தை
ஏற்படுத்தும் அதற்கு பரிகாரமாக இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் என்கினும் ரமலானுடைய
நன்மைகளை அடைந்து கொள்ள முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறிய
முடிகிறது.
(ஸஹீஹுல் புஹாரீ)
v திருக்குர்ஆன் இறங்(க துவங்)கிய மாதம்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ - البقرة: 185
v மேலும் குர்ஆனில் பெயர் கூறப்பட்ட தனிச்சிறப்பிற்குரிய மாதம் ரமலானாகும்
வேறு எந்த மாதத்தின் பெயரும் குர்ஆனில் இடம்பெறவில்லை.
v ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலதுல் கத்ரை தாங்கிய மாதம்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ دَخَلَ رَمَضَانُ، فَقَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ
حَضَرَكُمْ، وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَهَا فَقَدْ
حُرِمَ الْخَيْرَ كُلَّهُ، وَلَا يُحْرمُ خَيْرَهَا إِلَّا مَحْرُومٌ» (سنن ابن
ماجه)
இதோ இந்த மாதம் உங்களிடம் வந்துள்ளது அதில் ஆயிரம் மாதங்களை விட சிறப்பான இரவு
ஒன்று இருக்கிறது அதை இழந்தவர் முழு நன்மையும் இழந்தவரைப் போன்றாவார்.
பாக்கியமற்றவரே அதன் நன்மையை இழப்பார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு மாஜா)
v குற்றங்களை குறைக்கும் மாதம்.
3277 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ رَمَضَانُ
فُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ
الشَّيَاطِينُ»
(صحيح البخاري)
3277. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன.
நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
v பரக்கத் நிறைந்த மாதம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ (سنن النسائي)
'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),
(நூல்: நஸயீ)
v பாவக் கறைகளை அழிக்கும் மாதம்.
37- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ
لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» صحيح البخاري
37. 'நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று
வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ
مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» (صحيح البخاري)
38. 'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு
நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
v இரு பரிந்துரையாளரை பெற்றுத்தரும் மாதம்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ
لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ
الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ
الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ:
«فَيُشَفَّعَانِ» ( مسند أحمد)
'நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், என் ரப்பே! 'நான் இவ்வடியானை பகலில் உணவை விட்டும் மனோ இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன்
எனவே இவனுக்கு என் பரிந்துரையை ஏற்பாயாக' குர்ஆன் கூறும் என் ரப்பே! இரவில் அவனை தூக்கத்தை விட்டும் நான் தடுத்திருந்தேன் இவனுக்கு என் பரி ந்துரையை
ஏற்பாயாக அவைகளின் பரிந்துரை ஏற்கப்படும் என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
v நன்மைகள் அதிகம் செய்ய ஏற்ற மாதம் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம்
நன்மையில் ஈடுபட்டார்கள்.
6 - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي
رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ
رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ» (صحيح البخاري
)
6. 'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.
(சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில்
சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத்
திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும்
நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை
நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கம் உள்ளவர்களாக
இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல
காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இவ்வளவு பாக்கியம் பொருந்திய ரமலான் மாதத்தை சரியான முறையில் பயன் படுத்தவும்
பலன்களை அடையவும் இப்போதிருந்தே நாம் தயாராக வேண்டும்.
ஒரு வியாபார சீசன் என்றால் அதில் முழு ஈடுபாடு கொண்டு அதிக லாபம் பெற
முயற்ச்சிப்போம் அதற்காக முன்கூட்டியே சிந்தித்து முன் தயாரிப்புகள் செய்வோம்
அல்லவா? அது போல வரும் ரமலானை முழுமையாக பயன்படுத்திக்
கொள்ள சரியான திட்டமிடலும் தேவையான தயாரிப்பும் இப்போதே செய்து கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய சில தவறுகள்...
உணவு வகைகளை அதிகப்படுத்துவது.
மற்ற காலங்களை விட ரமலானில் வகைவகையான பண்டங்களும் பானங்களும் உணவுகளும்
போட்டி போட்டு தயாரிக்கப்படுகிறது.
இதில் இரு வகையில் தவறு ஏற்படுகிறது.
1- அதிகமான உணவு எடுத்துக்கொள்வதால் உணர்வை கட்டுப்படுத்துதல் எனும் நோன்பின்
நோக்கம் தவறுகிறது.
ஏனெனில் இத்தகையோர் சாப்பிடும் வேளைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள் சாப்பாட்டை
குறைப்பதில்லை. இன்னும் சிலர் ஸஹர் வேளையில் பகலெல்லாம் பட்டினி கிடக்க வேண்டுமே
என்று எண்ணி இரண்டு நேர உணவை ஸஹரில் சாப்பிடுவதும், இஃப்தாரில் பகலெல்லாம் பட்டினி கிடந்தோம் என்றெண்ணி இரு வேளை உணவை
சாப்பிடுவதுமாக இருக்கின்றனர். அளவுடன் சாப்பிட வேண்டும் என்று ஹதீஸில்
அறிவுறுத்தப்பட்டிருப்பது நோன்பு வைப்பவருக்கும் சேர்த்துதான் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
2- வகைவகையாக தயாரிப்பதால் தயாரிப்பவர்களின் பெரும் பகுதி பொன்னான நேரம்
நன்மையின்றி கழிகிறது.
சிலருக்கு ஸஹர் இஃதார் நேரங்களில் துஆவுக்கு கூட நேரம்
கிடைப்பதில்லை.
இரவில் அனாவசியமாக விழிப்பதும் பகலில் அதிகமாக தூங்குவதும்.
சிலர் இரவில் வழமையை விட கூடுதலாக ஒரு மணி நேரம் விழித்து விட்டு பகலில்
மூன்று நான்கு மணிகள் தூங்குவது.
சிலர் ஃபஜ்ர் ஜமாஅத்தை தவறவிடுவது.
உடுப்புகள் வாங்க கடைவீதிகளில் நேரங்களை செலவிடுவது.
முன்கூட்டியே உடுப்பு வாங்கும் வேலைகளை முடித்து விடுவது பொருத்தம்
பொய், புறம், கோள், வீண் பேச்சு, விவாதங்களில் ஈடுபடுவது நோன்பை பலனற்றதாக ஆக்கி விடும்.
எனவே மகத்துவமிக்க ரமலானுடைய பொழுதுகளை நல்லமல்களில் கழிப்பதற்கு நாம் முன்
கூட்டியே திட்டமிட்டு நேரங்களை வகுத்து செயல்பட வேண்டும்.
வாருங்கள் ரமலானை நல்லமல்களில் ஈடுபடுத்திட இப்போதே நம்மை பழக்கப்படுத்திக் கொள்வோம்...
குர்ஆன் ஓதுவது, திக்ருகள் செய்வது, நஃபிலான நோன்புகளை நோற்பது,
(ஆனால் ஷஃபானுடைய கடைசியில் நஃபில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
தடுத்துள்ளார்கள் ரமலானுக்கு இடையூறாக ஆகிவிடக் கூடாது என்பதால் வழமையான
நோன்பிற்கு தடையில்லை) தான தர்மங்கள் செய்வது, உறவுகளை அரவணைத்து செல்வது என்று எல்லா விதமான நல்லமல்களிலும் நம்மை பழக்கப்
படுத்திக் கொள்வோம் வல்ல ரஹ்மான் நமது பாவங்களை மன்னித்து, நமது நல்லமல்களை ஒப்புக் கொண்டு அவனுடைய தனிப்
பெரும் கிருபையால் அவனது திருப்தியை நமக்கு தந்தருள்வானாக ஆமீன்.