بسم الله الرحمن الرحيم
மனோகரமான மண வாழ்க்கை
*******************************************
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ
تُحْبَرُوْنَ
(القران 43:70)
5184- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الْمَرْأَةُ
كَالضِّلَعِ، إِنْ أَقَمْتَهَا كَسَرْتَهَا، وَإِنِ اسْتَمْتَعْتَ بِهَا
اسْتَمْتَعْتَ بِهَا وَفِيهَا عِوَجٌ)).رواه البخار
ரமலான் முடிந்தவுடன் திருமண வைபவங்கள் அதிகம்
நடக்கும் காலம் இது. ஆகையால் திருமணத்தைப் பற்றியும் மனோகரமான மண வாழ்க்கைக்கு தேவையான சில செய்திகளையும் காண்போம்.
மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில்
திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே
காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.
திருமணம் செய்வது நபி வழி.
**********************************
وعن أبي أيوب مرفوعا : { أربع من سنن المرسلين } ،
فذكر منها النكاح ، رواه الترمذي
நான்கு விஷயங்கள் நபிமார்களின் வழிமுறையாகும்.
அதில் திருமணத்தையும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.( நூல் திர்மிதி)
மணவாழ்வு, ஆன்மீகப்
பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.
5073- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ سَمِعَ سَعِيدَ
بْنَ الْمُسَيَّبِ يَقُولُ: سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يَقُولُ رَدَّ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ
مَظْعُونٍ التَّبَتُّلَ، وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا.
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது
பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்
நூல்: புகாரி
5063- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي
مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي
حُمَيْدٍ الطَّوِيلُ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
يَقُولُ جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ
نَحْنُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا
تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ. قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي
أُصَلِّي اللَّيْلَ أَبَدًا.
وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ
أُفْطِرُ.
وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ
أَتَزَوَّجُ أَبَدًا. فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَقَالَ: ((أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي
لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ،
وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي
فَلَيْسَ مِنِّي)).
நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன்
என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது
கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன்
என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத்
தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது
வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 5063
மேற்கண்ட நபிமொழியிலிருந்து முஸ்லிம்களுக்கு
திருமணம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
திருமணத்தின் நோக்கம்
*****************************
திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்லாம் இரண்டு
காரணங்களைக் குறிப்பிடுகின்றது.
1. சந்ததிகளை
பெற்றெடுப்பது
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ
الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا
وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ
الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ
عَلَيْكُمْ رَقِيْبًا
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து
கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து
படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே
பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்
(தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்)
இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது
கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
சந்ததிகளை பெற்றெடுப்பது திருமணத்தின்
நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம் அறியலாம்
2 . தகாத
நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின் மற்றொரு
நோக்கமாகும்.
5066-ُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ
يَزِيدَ قَالَ دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ
فَقَالَ عَبْدُ اللَّهِ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
شَبَابًا لاَ نَجِدُ شَيْئًا فَقَالَ لَنَا رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ
فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ
لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)).
5066. அப்துர் ரஹ்மான்
இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
நானும் அல்கமா
மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி
வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்)
அவர்கள் எங்களிடம் “இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர்
திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத)
பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு
நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்““ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
மறுமையிலும் தொடரும் மணவாழ்க்கை
*****************************************
திருமண பந்தம் இந்த உலகத்தோடு முடிந்துவிடக்
கூடியதல்ல கணவன் மனைவி இருவரும் சுவர்க்கவாசிகளாக இருப்பார்களென்றால் சுவனத்திலும்
அவர்களின் உறவு தொடரும்.
ஒருமுறை ஃபாத்திமா ரலி
அவர்கள் அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் நாளை மறுமைநாளில் ஒவ்வொரு மனிதனையும் அல்லாஹ்
அழைக்கும்போது அவர்களின் தந்தையின் பெயர் சொல்லி இன்னாருடைய மகள் இன்னாரே! என்று
அழைப்பான் அப்போது தங்களை அழைக்கும்போது அபூபக்கர் மகள் ஆயிஷாவே! என்று அழைப்பான்
ஆனால் என்னை அழைக்கும்போது முஹம்மது ( ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவே! என்று அழைப்பான் அப்போது எனக்கு
எவ்வளவு பெறுமையாக இருக்கும் என்றார்களாம். இதனைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள்
ஃபாத்திமாவே நீர் சொல்வது சரிதான் அதே நேரத்தில் சுவனவாசிகளை அல்லாஹ் சுவனத்திற்கு
அனுப்பும்போது ادخلوا الجنة انتم وازواجكم تحبرونநீங்கள் உங்கள் ஜோடிகளோடு சுவனத்தில் சந்தோஷமாக
நுழையுங்கள் என்பான் அப்போது நீ அலி ரலி கரத்தை பிடித்துக் கொண்டு நுழைவாய் நான்
முஹம்மது ( ஸல்) அவர்களின் கரத்தையல்லவா பிடித்துக் கொண்டு சுவனம் நுழைவேன்
அப்போது எனக்கு எவ்வளவு பெறுமையாக இருக்கும் என்றார்களாம்.
ஆகவே மணவாழ்கை மறுமையிலும் தொடரக்கூடிய
புனிதமான வாழ்க்கை ஆகவேதான் அதை சுன்னதாக ஆக்கியுள்ளது மார்க்கம்.
மணமகன் தேர்வு
********************
மணமகனை தேர்வு செய்யும்போது அவனின் நன்நடத்தையே
பிரதானமாக கொள்ளவேண்டும்.
1107-ِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِذَا خَطَبَ
إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِلاَّ تَفْعَلُوا
تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ)).رواه ترمذي
நற்குணமுள்ள மார்கப்பற்றுள்ள மனிதன் உங்களிடம்
பெண்கேட்டால் மணமுடித்துக் கொடுத்து விடுங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் பூமியில்
குழப்பங்களும் அழிவுகளும் உண்டாகிவிடும்.
இன்று மணமகன் தொழுகையாளியா நல்ல குணமுள்ளவனா
என்பதை பார்ப்பதைவிட என்ன சம்பளம் என்ன வேலை சொந்தவீடு உள்ளதா ? உள் நாட்டில் வேலை செய்கிறானா வெளிநாட்டு மாப்பிள்ளையா என்று பொருளாதாரத்தையே
மிக முக்கியமாக பார்க்கின்றார்கள்.
நபி( ஸல்) அவர்கள் நபியாக ஆக்கப்படுவதற்கு
முன்பு தங்களின் 25 ம் வயதில் கதீஜா ரலி அவர்களுடன் அக்கால
முறைப்படி திருமணம் நடந்தது.
அக்காலத்திருமணம் இப்பொழுதுள்ள திருமணத்தைப்
போன்றல்ல மாறாக பெண்வீட்டார் ஒருபுரமும் மாப்பிள்ளை வீட்டார் மறுபுரமும் அமர்ந்து
கொள்வார்கள் பெண்வீட்டார் சார்பாக ஒருவர் எழுந்து பெண்ணின் குலப் பெருமையெல்லாம்
கூறி அதற்குப்பின் இப்பெண்ணை தங்களின் மணமகனுக்கு மணமுடித்துக் கொடுக்க
சம்மதிக்கின்றோம் என்பார். அதற்குப்பின் மணமகன் வீட்டார் சார்பாக ஒருவர் எழுந்து
மணமகனின் குலப்பெருமை செல்வப் பெருமையெல்லாம் கூறி இந்த எங்களின் மகனுக்கு
மணமுடித்துக் கொள்ள நாங்களும் சம்மதிக்கின்றோம் எனக்கூறி அமர்ந்து விடுவார்
திருமணம் முடிந்து விடும்.
இதேபோன்றுதான் கதீஜா ரலி சார்பாக வரகத்துப்னு
நவ்ஃபல் எழுந்துநின்று இந்த ஊரில் மிகப் பெரிய வணிகர் மிகப்பெரிய செல்வச்சீமாட்டி
அவருக்குநிகர் யாருமில்லை என்று அவர்களின் செல்வத்தைப் பற்றியே பேசிமுடித்தார்.
அதன் பின்பு நபி( ஸல்) அவர்களின் சார்பாக
அபூதாலிப் எழுந்து எங்கள் மகன் அமீன். ஸாதிக். என்று நபியவர்களின் நற்குணத்தை
மட்டுமேகூறியதோடு المال ظل زائل
பொருள்ச் செல்வம் இருக்கிறதே அது நீங்கக்கூடிய நிழளைப்போல அது ஒரே இடத்தில்
நிற்காது அதைக் கொண்டு பெருமைபடத் தேவையில்லை என்று குத்திக்காட்டி அமர்ந்தார்.
மணமகள் தேர்வு
********************
மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போதும் அவள்
ஒழுக்கமுடையவளாகவும் நல்ல குணமுடையவளாகவும் இருக்கிறாளா
என்பதையே கவனிக்க வேண்டும் பொருளாதாரத்தையோ குலப்பெருமையையோ உடல் அழகையோ பிரதானமாக
கருதக்கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
5090- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا
وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)).
5090. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்““ நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண்
மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க
(நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு
கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
ஒரு முறை அபூஹனீபா ( ரஹ்) அவர்களின் தந்தை
திருமணம் முடிப்பதற்கு முன்பு தன் வாலிப காலத்தில் ஒரு தோட்டத்தின் வழியாக சென்று
கொண்டிருந்தார்களாம் அருகில் இருந்த மாமரத்திலிருந்து ஒரு மாங்கனி கீழே
விழுந்துகிடந்தது அதை எடுத்து சாப்பிட்டு விடுகிறார்கள் ( மரத்தில் உள்ளதை பறித்து
சாப்பிடுவதுதான் குற்றம் தானாக வழியில் விழுந்து கிடந்ததை எடுத்து சாப்பிடுவது
தவறில்லை என்றாலும்) அவர்களின் உள்ளத்தில் ஒரு உருத்தல் ஏற்பட்டு விடுகிறது அதனால்
தோட்டக்காரரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்.
தோட்டக்காரரை சந்திக்கின்றார் பழத்தை சாப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்கின்றார்
ஆனால் தோட்டக்காரர் மன்னிக்க மாட்டேன் அதற்கு பதிலாக தண்டனை தருவேன் என்கின்றார்.
சரி தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்கள் அபூஹனீபாவின்
தந்தை. என் மகளை தாங்கள் மணமுடித்துக் கொள்ள வேண்டும் ஆனால் என் மகளுக்கு இரண்டு
கண்களும் தெறியாது இரண்டு காதுகளும் கேட்காது வாய்பேசாத ஊமை என்றார் தோட்டக்காரர். சரி அல்ஹம்து லில்லாஹ் மணமுடித்துக் கொள்கிறேன் என்றார்கள்
அபூஹனீபாவின் தந்தை. திருமணம் முடிந்தது.
இரவு தன் மனைவியை சந்திக்கச் செல்கிறார் ஆனால்
அங்கு நடந்ததோ ஓர் ஆச்சர்யம் அவர் மனைவி அவருக்கு ஸலாம் கூறி அன்போடு வரவேற்று
அமரவைத்தார். என்ன! உன் தந்தை உன்னை குருடு என்றும் செவிடு என்றும் ஊமை என்றும்
கூறினாரே! ஆனால் நான் வந்தவுடன் என்னைப் பார்த்தாய் சலாம் கூறினாய் என்
ஸலாத்திற்கு பதில்ச் சொன்னாய் பிறகு ஏன் உன் தந்தை உம்மைப் பற்றி பொய் சொல்ல
வேண்டும் என்றார்கள். இதனைக் கேட்ட அப்பெண் இல்லை என் தந்தை பொய் சொல்லவில்லை நான்
எந்த ஒரு அண்ணிய ஆண்களையும் இதுவரை பார்த்ததில்லை அந்த வகையில் நான் குருடி .
இதுவரை எந்த ஹராமான விஷயங்களையும் என்காதால் கேட்டதில்லை அந்த வகையில் நான் ஒரு
செவுடி. எந்த ஒருவரையும் புரம் பேசியதோ ஹராமான்
விஷயங்களை பேசியதோ கிடையாது அந்த அடிப்படையில் நான் ஊமை என்று அந்த பெண் பதில்
கூறினார்களாம்.
எனவே சிந்தித்துபாருங்கள் உங்களுடை மகனுக்கு
மணப்பெண்ணை தேர்வு செய்யும் பொழுது இப்படிப்பட்ட நற்குணமுள்ள பெண்ணை தேர்வு
செய்யுங்கள் அழகும் அந்தஸ்தும் பொருளும் அவை நிரந்தரமானதல்ல என்பதை புரிந்து
கொள்ளுங்கள் உங்களின் வாழ்க்கை சிறப்பாகும்.
மகரும் ஜீவனாம்சமும்
**************************
திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு
ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது.
இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே
பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது
பெண்கள் தான்.
தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும்.
அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர்
தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட
இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً فَاِنْ
طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا
مَّرِیْٓـــٴًﺎ
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு
அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் -
அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
(அல்குர்ஆன் : 4:4)
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள்
கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும்
இல்லை. சில ஊர்களிள் ஆயிரத்து ஒன்று இரண்டாயிரத்து ஒன்று என நிர்வாகிகள் மகர்
தொகையை நிர்ணயம் செய்கின்றார்கள் இது முற்றிலும் தவறானதாகும்.
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக்
கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ
زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا
اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு
பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு
ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து
எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
(அல்குர்ஆன் : 4:20)
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம்
விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ
تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ
اِلَّاۤ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِىْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ وَاَنْ
تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰى وَ لَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ اِنَّ
اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
ஆயினும், அப்பெண்களைத்
தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ
அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்)
மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்)
விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம்
செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக்
கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:237)
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த
உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி
விட்டது.
இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை
கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக்
கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர்.
வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள்
கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை
கேட்கத் துணிய மாட்டான்.
கோணல் எலும்பு
********************
குடும்ப வாழ்வில் சில நேரங்களில் கணவன்
மனைவிக்கு மத்தியில் சிற்சில பிரச்சினைகள் வருவதுண்டு அப்போது விட்டுக் கொடுத்து
போய்விட்டால் பிரச்சினை சுமூகமாகிவிடும் குறிப்பாக ஆண்கள் மென்மையை கடைபிடிக்க
வேண்டும் ஏனென்றால் பெண்கள் கோணலான எலும்பிலிருந்தே படைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.
5184- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الْمَرْأَةُ
كَالضِّلَعِ، إِنْ أَقَمْتَهَا كَسَرْتَهَا، وَإِنِ اسْتَمْتَعْتَ بِهَا
اسْتَمْتَعْتَ بِهَا وَفِيهَا عِوَجٌ)).
5184. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்““ பெண், (வளைந்த) விலா
எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஓடித்தேவிடுவாய்.
(அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். என அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
ஒரு முறை ஒரு தோழர் தனக்கும்
தன் மனைவிக்கும் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையை புகார் செய்வதற்காக உமர் ரலி
அவர்களின் வீட்டிற்கு வந்தார். உமர் ரலி அவர்களின் மனைவி தன் கணவரை வேகமாக
பேசியதையும் உமர் ரலி அமைதியாக இருப்பதையும் கண்டு இங்கேயும் இப்படித்தானா? என்று நினைத்துக் கொண்டு திரும்பிச் சென்று விட்டாராம்.
ஒரு தம்பதிகள் திருமணமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரை ஒருநாள்கூட இருவருக்கு மத்தியில் சண்டை வந்ததே
கிடையாதாம். அந்த கணவரிடம் இது எப்படி உங்களுக்கு மத்தியில் இப்படியொரு பிரியம்
என்று சிலர் கேட்டனர்.
அதற்கு அந்த கணவர் கூறினாராம் எங்களுக்கு திருமணமானகாலத்தில் இருவரும்
சுற்றுலா சென்றிருந்தோம் அப்போது என் மனைவி குதிரை சவ்வாரி செய்ய ஆசைப்பட்டால்
அவளின் ஆசைக்கிணங்க குதிரையில் ஏற்றினேன் சிரிது தூரம் சென்றதும்
குதிரை இடக்கு செய்ய ஆரம்பித்தது இதனைக் கண்ட என் மனைவி குதிரையைப் பார்த்து இது
முதல் தடவை என்றாள். இரண்டாம் முரையும் இடக்குச் செய்தது இது இரண்டாம் தடவை
என்றாள் மூன்றாம் முரையும் இடக்குச் செய்தது இது மூன்றாம் தடவை எனக்கூறி
துப்பாக்கி எடுத்து அந்த குதிரையை சுட்டுத்தள்ளிவிட்டாள் இதனைக்கண்ட நான் என்
மனைவியை திட்டினேன் இதற்காகவா குதிரையை சுடவேண்டும் என கண்டித்தேன் உடனே என் மனைவி
என்னைப் பார்த்து இது முதல் தடவை என்றாள் அன்றிலிருந்து அவள் எது செய்தாலும் நான்
பதில் பேசுவது கிடையாது இதுவரை இது இரண்டாம் தடவை என்று என்னைப் பார்த்து என்
மனைவி சொல்லவே இல்லை என்றாராம்.
எனவே பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்
ஆண்கள்தான் அவர்களை அரவனைத்துச் செல்ல வேண்டும் அவளிடமுள்ள ஒரு குணம்
பிடிக்காவிட்டால் வேறுசில நல்ல குணம் இருக்கும் அவைகளைக் கொண்டு திருப்தியடைந்து
கொள்ள வேண்டும்.
عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي
الله عليه وسلم
لا يفرك مؤمن مؤمنة ان كره منها خلقا رضي منها اخر
அவளின் ஒரு குணம் உமக்கு பிடிக்காவிட்டாலும்
வேறுசில நல்ல குணங்கள் உமக்கு திருப்தியளிக்கும்.
ஒரு வீட்டில் கணவன் மனைவிக்கு மத்தியில்
சண்டையே வந்ததில்லையாம் இவர்கள் எப்படி குடும்பம் நடத்துகின்றார்கள் என்று
பார்ப்பதற்காக இரண்டு நபர்கள் அவர்களின் வீட்டிற்கு செல்கிறார்கள் வந்தவர்களை
வரவேற்று அவர்களுக்கு தேனீர் கொண்டுவரும்படி வீட்டுக்காரர் மனைவியிடம் கூறினார்.
தேனீர் பரிமாறப்பட்டது.
விருந்தாளிகள் வந்த நேரம் நன்பகல் நேரம். அந்த
நேரத்தில் தன் மனைவியிடம் ஒரு விளக்கை பொருத்திக் கொண்டு வரும்படி வீட்டுக்காரர்
கூறினார் உடனே மனைவி விளக்கை பொருத்திக் கொண்டு வந்து வைத்தார் அதற்குள்ளாக வீட்டுக்காரர் தேனீரை குடித்து முடித்தார். ஆனால் வந்தவர்கள்
தேனீரை ஒரு மிடரு குடித்துவிட்டு அதற்குமேல் குடிக்கவில்லை.
வந்தவர்கள் இருவரும் வீட்டுக்காரரிடம் எப்படி
இந்த தேனீரை அருந்தினீர்கள் இதில் சர்க்கரைக்கு பதிலாக உப்பல்லவா போடப்பட்டுள்ளது
என்றார்கள். ஆம் உன்மைதான் தாங்கள் இருவரும் எந்த நோக்கத்திற்காக இங்கு
வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன் என் மனைவி
தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை வேண்டுமென்றே போட்டிருக்கமாட்டாள் இரண்டும்
அருகில் இருந்திருக்கும் மரதியாக உப்பை தேனீரில் கலந்திருப்பாள். என் மனைவி
எதார்ச்சையாக செய்யும் சிறு தவறுகளையும் நான் பெரிதுபடுத்துவதில்லை அதேபோல நன்பகல்
நேரம் விளக்கை பொருத்திக் கொண்டுவந்து வைக்கும்படி என் மனைவியிடம் கூறினேன் அவள்
ஏன் எதற்கு? பகலில் நன்றாக வெளிச்சம் இருக்கிறதே! என்று
எந்த கேள்வியும் கேட்கவில்லை என்னுடைய வார்த்தைக்கு உடனே வழிப்பட்டால் இந்த தன்மை
எங்களுக்கு மத்தியில் இருப்பதால்தான் எங்களுக்குள் எந்த சண்டையும்
வருவதில்லை என்றார்.
மரணித்துவிட்ட
தன் அன்பு மனைவி பற்றி
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்.
"40 வருட திருமண
வாழ்க்கையில்
ஒரு தடவை கூட
நாங்கள் சண்டை பிடித்ததில்லை"
"அது எவ்வாறு
சாத்தியம்?"
என்று கேட்டதற்கு,
"எனக்குக் கோபம்
வரும்போது
அவள் மௌனமாய் இருப்பாள்,
அவளுக்கு கோபம் வரும்போது
நான் மௌனமாய் இருப்பேன்"
என்றார்கள்.
மகள் வாழ்க்கையை கெடுக்கும் அம்மாக்கள்
*************************************************
சில நேரங்களில் குடும்பத்தில் ஏதாவது
மனவருத்தம் ஏற்பட்டு ஒரு பெண் தன் தாய்வீட்டிற்கு வந்தால் அவளுக்கு நல்ல
அறிவுரைகள்கூறி பெற்றோர்கள் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் சில
தாய்மார்கள் இப்படியும் அட்வைஸ் செய்வதுண்டு உண்ண உணவும் உடுத்த உடையும் இல்லைனா
அவருக்கு கட்டிவைத்தோம் இங்கேயேஇரு மனைவி
வேண்டுமென்றால் தேடி வரட்டும் எனக்கூறி சிறு பிரச்சினையைக்கூட பெரிதாக்கி தன் மகள்
வாழ்கையையே கெடுத்துவிடும் தாய்மார்களும் உண்டு.
முடிவுரை
************
எனவே திருமணம் என்பது நபிவழியாகும்.
அத்திருமணத்தின் மூலம் பல சந்ததிகளைப் பெற்று கர்ப்பை பாதுகாத்து குடும்பத்தில்
ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகளையும் நளினமான முறையில் சரிசெய்து இவ்வுலகிலும்
நாளை மறுமையிலும் சிறந்த தம்பதிகளாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம்
அனைவர்களும் தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.