புதன், 26 டிசம்பர், 2018

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் அனாச்சாரங்கள்.


بسم الله الرحمن الرحيم

புத்தாண்டு கொண்டாட்டம் எனும்  அனாச்சாரங்கள்.
****************************************

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏  ٢٥-٧٢
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)) (رواه البخاري)

புது வருடத்தை வரவேற்க கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?.

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விடுகிறது. அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது எவ்வகையிலும்  அறிவுப்பூர்வமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, அதை சீர்தூக்கிப் பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே  புத்திசாலியான முஸ்லிமாக இருக்க முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத் தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் கிறிஸ்துவ மதத்தவர்களின் (காலண்டரான) ஜனவரி முதல் தேதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.
அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் அழிவு நாளின் அறிகுறிகளாக எச்சரித்த ஒரு விஷயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

7319- صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).
7319. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமை நாள் வராதுஎன்று கூறினார்கள். உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 96)

7320- صحيح البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).

நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சாணுக்கு சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்” (அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

புத்தாண்டு வாழ்த்து கூறலாமா?
**********************************
பலர் இந்நாளின் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆடு மாடுகளைப் போல எந்த செயல்களையும் அதன் பிரயோஜனம் என்ன இதன் விளைவு என்ன என்று சிந்திக்காமல் பின்பற்றுவது ஃபேஷனாகிப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 25:72)

ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ  4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» ( رواه الترمذي)
எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனேஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மதி).

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ، ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ (صحيح البخاري)

6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
(நூல்: ஸஹீஹ் புகாரி)


ஷரீஅத்தில் தனித்துவம்...
**************************
ﻋﻦ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟» ، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ». ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ  2881 من المشكاة : 3437  (قال الالباني هذا حديث ﺻﺤﻴﺢ)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்என்று கூறினார்கள்.
ஏனென்றால் அல்லாஹ்விற்கு மாறு செய்து எந்த நேர்ச்சையையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை அதே போல தனக்கு சொந்தமில்லாத பொருளில் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் கூடாது" என்றும் அறிவுறுத்தினார்கள்.
(நூல் : அபூதாவூத்)

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள். எனவே தான் வணக்க வழிபாடுகளிலும் "யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உறுதிபடக் கூறினார்கள்.
உம்: ஆஷூரா நோன்பு அதை இரண்டு நோன்பாக நோற்கச் சொன்னார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் அனாச்சாரங்கள்.
***********************************
புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்கப்படுவது  மறு புறம் இவைகளுக்காக சில இஸ்லாமிய பெயர் தாங்கிய  நாடுகள் கூட பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பெருமிதம் கொள்கின்றன.
உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கி செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர்எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப் படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.
மனித சமூகத்தை எப்படியாவது அல்லாஹ்வின் சிந்தனையிலிருந்து அப்புறப் படுத்திட வேண்டுமென்ற ஷைத்தானின் திட்டத்தை அவனுடைய பட்டாளங்களான யூத நஸாராக்கள் நடைமுறைப் படுத்திடும் நிகழ்வாகவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் அதில் நடக்கும் அனாச்சாரங்களும் வெளிப்படுத்துகிறது.

இது கியாமத் நாள்  நெருங்கியதை தெளிவுபடுத்துகிறது.

5437 - (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺇﻥ ﻣﻦ ﺃﺷﺮاﻁ اﻟﺴﺎﻋﺔ ﺃﻥ ﻳﺮﻓﻊ اﻟﻌﻠﻢ ﻭﻳﻜﺜﺮ اﻟﺠﻬﻞ ﻭﻳﻜﺜﺮ اﻟﺰﻧﺎ ﻭﻳﻜﺜﺮ ﺷﺮﺏ اﻟﺨﻤﺮ ﻭﻳﻘﻞ اﻟﺮﺟﺎﻝ ﻭﺗﻜﺜﺮ اﻟﻨﺴﺎء ﺣﺘﻰ ﻳﻜﻮﻥ ﻟﺨﻤﺴﻴﻦ اﻣﺮﺃﺓ اﻟﻘﻴﻢ اﻟﻮاﺣﺪ» . ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ: «ﻳﻘﻞ اﻟﻌﻠﻢ ﻭﻳﻈﻬﺮ اﻟﺠﻬﻞ» . (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ)
கல்வி உயர்த்தப்படுவது. ( கல்விமான்கள் மரணிப்பது) அறியாமை அதிகமாவது.விபச்சாரம் அதிகரிப்பது மதுப்பிரியர்கள் அதிகமாவது. ஆண் இனம் குறைவது பெண் இனம் அதிகமாவது ஐம்பது பெண்களை ஒரு ஆண் நிர்வாகம் செய்யுமளவு அதிகமாகி விடுவது.   இவைகள் அழிவு நாளின் அறிகுறிகளாகும்.

80- ِ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا))
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் "கியாமத்தின் அடையாளங்களிலிருந்து உள்ளதாகும் கல்வி உயர்த்தப் படுவதும், அறியாமை தரிபடுவதும், மதுபானம் அருந்தப் படுவதும், விபச்சாரம் பகிரங்கமாவதும்"

عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا اسْتَعْمَلَتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِذَا ظَهَرَ فِيهِمُ التَّلَاعُنُ، وَلُبْسُ الْحَرِيرِ، وَاتَّخَذُوا الْقَيْنَاتِ، وَشَرِبُوا الْخُمُورَ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ " (رواه البيهقي في شعب الإيمان)
"என் சமூகம் ஐந்து விஷயங்களை செய்தால் அவர்களுக்கு அழிவு வந்து விடும் ஒருவருக்கொருவர் சாபமிடுவது. பட்டாடைகள் அணிவது. அவர்கள்  பாடகிகளை ஏற்படுத்துவது.  மதுபானங்களை அருந்துவது.  ஆண்கள் ஆண்களோடும், பெண்கள் பெண்களோடும் சேர்ந்து இச்சையைத் தீர்த்துக் கொள்வது" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
( நூல் : பைஹகீ  ஷுஅபுல் ஈமான்)

மதுவின் தீமைகள்.
********************
தமிழகத்தில்  புத்தாண்டு தினத்தில் மது விற்பனை ரூ.164 கோடியை எட்டி உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட ரூ.22 கோடி அதிகமாகும்.

புத்தாண்டு தினத்தையொட்டி, டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில், ஆந்திராவில் ரூ. 150 கோடிக்கும், தெலங்கானாவில் ரூ.110 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது
நம் மாநிலங்களிலேயே இவ்வாறென்றால் மேலை நாடுகளில் சொல்லவா வேண்டும்.

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவை ஆட்சி செய்த  முஸ்லிம் மன்னர்களில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தீரர் திப்பு சுல்தான் ரஹ் அவர்கள் மதுவை முற்றிலும் தடை செய்திருந்தார்.
இதன் தீங்கு குறித்து ஹதீஸ்  ஷரீஃபில் வருகிறது.

"الخمر جماع الاثم" (رواه رزين)

"மது ஒட்டு மொத்த தீமைகளின் கூடாரமாகும்"  ( நூல் : ரஜீன்)

ஆனால் மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதால் பள்ளிப் பருவத்தில் உள்ள இளம் தலைமுறையினர் டாஸ்மாக் பார்களில் வலம் வரும் அவலங்களை காண நேரிடுகிறது.

எடுத்த எடுப்பிலேயே மதுவை யாரும் குடிக்க கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது.
ஆக மூன்று கட்டங்களாக அதனுடைய தீமைகளை நன்கு உணரச் செய்தே தடைசெய்தது.

1) முதல்கட்ட நடவடிக்கை
****************************
மது நல்ல பொருள் அல்ல அதன் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று உபதேசம் செய்தது.

மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப் பெறுவதற்கு முன்பு உமர் ( ரலி) அவர்கள். இறைவா! மதுவைப்பற்றி ஒரு தீர்க்கமான முடிவை எங்களுக்கு வழங்குவாயாக! என்று கூறி துஆ செய்தார்கள் அப்போது பின் வரும் வசனம் அருளப்பெற்றது.

يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது
(அல்குர்ஆன் : 2:219)

2.  இரண்டாம் கட்ட நடவடிக்கை
********************************
இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது. தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவேதான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ...

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;
(அல்குர்ஆன் : 4:43)

இந்த வசனம் இறங்குவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

3673- حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ دَعَاهُ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَسَقَاهُمَا قَبْلَ أَنْ تُحَرَّمَ الْخَمْرُ فَأَمَّهُمْ عَلِيٌّ فِي الْمَغْرِبِ فَقَرَأَ: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} فَخَلَطَ فِيهَا فَنَزَلَتْ: {لاَ تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ}

அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார்.(இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ(ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போதுதான் (மேற்கூறப்பட்ட) அல்குர்ஆன் 4:43 வசனம் இறங்கியது அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: அபூதாவூத் (3186)

3) மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மதுவை முற்றிலும் தடை செய்தது.
*******************************
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் : 5:90)

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌  فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ 
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 5:91)

580 -[17] (ﺣﺴﻦ) ﻭﻋﻦ ﺃﺑﻲ اﻟﺪﺭﺩاء ﻗﺎﻝ: ﺃﻭﺻﺎﻧﻲ ﺧﻠﻴﻠﻲ ﻻ ﺗﺸﺮﺏ اﻟﺨﻤﺮ ﻓﺈﻧﻬﺎ ﻣﻔﺘﺎﺡ ﻛﻞ ﺷﺮ. ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ

என்னுடைய உற்றநண்பர் முஹம்மத் ஸல் அவர்கள் எனக்கு உபதேசம் செய்தார்கள் நீங்கள் மது அருந்த வேண்டாம் அது தான்  அனைத்து தீமைகளின் திறவு கோளாக இருக்கிறது என்று ( நூல்இப்னு மாஜஹ் )

2777 -[19] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻟﻌﻦ اﻟﻠﻪ اﻟﺨﻤﺮ ﻭﺷﺎﺭﺑﻬﺎ ﻭﺳﺎﻗﻴﻬﺎ ﻭﺑﺎﺋﻌﻬﺎ ﻭﻣﺒﺘﺎﻋﻬﺎ ﻭﻋﺎﺻﺮﻫﺎ ﻭﻣﻌﺘﺼﺮﻫﺎ ﻭﺣﺎﻣﻠﻬﺎ ﻭاﻟﻤﺤﻤﻮﻟﺔ ﺇﻟﻴﻪ» . ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர்வாங்குபவர்விற்பவர்,   தயாரிப்பாளர்சுமப்பவர்இதன் மூலம் கிடைத்தவருவாயை சாப்பிடுபவர்கள்  மதுவோடு சம்மந்தப்பட்ட அனைவரையும் நபி صلى الله عليه وسلم அவர்கள் சபித்துள்ளார்கள்.  (ஆதாரங்கள் : அபூதாவுத்,, இப்னுமாஜா

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் பாடல் அரை நிர்வாணம் போன்ற அட்டூழியங்கள் அழிவு நாளின்  அறிகுறிகளே!
*****************************************
இவர்கள் குறித்து தான் பின்வரும் ஹதீஸில் வருகிறது.

5704- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا)).

4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்)

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசுகளின் வீண் விரயம்.
**********************************
407 - ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺑﺮﺯﺓ - ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ - ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟ ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟ ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟». ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417). 2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ». )
சில காரியங்கள் பற்றி பதில் சொல்லாத வரை கியாமதில் மனித பாதங்கள்  அசைய முடியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் அதில் தன் வாழ்நாளை எவ்வாறு கழித்தாய்? தான் கற்ற கல்வியை எப்படி செயல்படுத்தினாய்? பொருளை எவ்வழியில் சமபாதித்தாய்? எவ்வாறு செலவழித்தாய்? தன் உடலை (சக்தியை) எவ்வழியில் பயன்படுத்தினாய்.
( நூல் : திர்மிதீ )

இசைக் கருவிகளின் மயக்கம்.
*******************************
புத்தாண்டு இரவில் இசைகளை இசைத்துக் கொண்டும் கேட்டுக் கொ‌ண்டு‌ம் ஆடல் பாடல்கள் விடிய விடிய நடக்கிறது நம்மவர்களும் அதில் கலந்து கொள்ளும் அவலத்தை நாம் பார்க்கிறோம்.
இசைக் கருவிகளையும் பாட்டுகளையும் அல்லாஹ்வின் நினைவை மறக்கடிக்கும் மாபாதகக் குற்றங்கள் என்று திருமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
(அல்குர்ஆன் 31: 6)

قال حبر الأمة ابن عباس رضي الله عنهما: هو الغناء، وقال مجاهد رحمه الله: اللهو: الطبل (تفسير الطبري) وقال الحسن البصري رحمه الله: "نزلت هذه الآية في الغناء والمزامير" (تفسير ابن كثير).
இந்த ஆயத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் பாட்டு இசைக் கருவிகளின் விஷயத்தில் இறங்கியது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

وقال صلى الله عليه وسلم: «صوتان ملعونان، صوت مزمار عند نعمة، وصوت ويل عند مصيبة»
(إسناده حسن، السلسلة الصحيحة 427)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் " இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவை 'மகிழ்ச்சியான நேரங்களில் இசைக்கப்படும் இசையின் ஓசை, இன்னும் துன்பத்தில் வெளிப்படும் (ஒப்பாரியின்) ஓசை"

இன்று இன்ப நேரங்களிலும் துன்ப நேரங்களிலும் இந்த சமுதாயம் கேடு கெட்ட இசைக் கருவிகளின் மயக்கத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

புத்தாண்டு காலண்டர்
***************************
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே புதிய காலண்டர் வாங்குவதும், விற்பதும் அன்பளிப்பாக கூட அச்சிட்டு கொடுப்பதும் முஸ்லிம்களிடையே கூட நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஸ்லாமிய மாதங்களும் தொழுகை நேரங்களும் குறிப்பிடப்பட்ட காலண்டர்களை வாங்க வேண்டும். பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்களின் உருவப்படங்களை அச்சிட்டு விநியோகம் செய்யக்கூடாது.
முஸ்லிம் வியாபாரிகளில் சிலர் தங்களுடைய மாற்று மத நண்பர்களுக்கு அவர்களுடைய தெய்வங்களின் உருவப்படங்களை அச்சிட்டு காலண்டர் அன்பளிப்பாக வழங்குகின்றனர்.இது ஷிர்க்குக்கு துணை போகும் செயலாகும். அதற்கு பதிலாக இயற்கைக் காட்சிகளை அச்சிட்டு தருவது தவறில்லை. ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்.

ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَاب
ِ‏ 
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் : 5:2)

எனவே முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருந்து மாற்றார்களின் கலாச்சாரங்களை தவிர்த்து இறையச்சத்தோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக! ஆமீன்.