بسم الله الرحمن
الرحيم
சமூக முன்னேற்றத்தில் பொருளாதாரத்தின் பங்கு
*****************************************
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد
الأولين والآخرين، سيدنا محمدٍ النبي الأمين، وعلى آله وأصحابه أجمعين، وبعد،،
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا
كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
முன்னுரை: பொருளாதாரம் என்பது ஒவ்வொருவரின் தனி மனித வாழ்விலும்;, குடும்ப வாழ்விலும் மற்றும் சமூக வாழ்விலும் தவிர்க்க முடியாதது. பொருளாதாரம் இல்லையெனில் ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழவோ, தன் குடும்பத்தை வாழ வைக்கவோ தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு நன்மைகள் செய்யவோ முடியாது. இதன்படி ஒரு சமூகம் மேம்பட வேண்டுமானால் அச்சமூக மேம்பாட்டிற்கு வேண்டிய காரியங்களை செய்வதற்கு பொருளாதாரம் மிகமிக அவசியமாகும்.
பொருளாதாரத்தை எதிர் நோக்கியுள்ள சமூக அறப்பணிகள்:
நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் அறிவிக்கையின்படி இன்று இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம் சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும்; இன்னபிற விஷயங்களில் மிகமிக பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றன. இந்நிலையை மாற்றி இச்சமூகத்தை உயர் நிலைக்கு கொண்டுவர இச்சமூகத்தில் நாம் ஆற்ற வேண்டிய ஏரலமான பணிகள் நம் முன்னே இருக்கின்றது.
1.ஏழைகள, அநாதைகள் மற்றும் இன்னபிற நலிந்தோர்கள்.
2.
மத்ரஸாக்களை கட்டுதல், அதனை நிர்வகித்தல்.
3.
இஸ்லாமிய கல்வியுடன் கூடிய பள்ளிக்கூடங்கள்.
4.
கல்லூரிகள்
5.
பல்கலைகழகங்கள்
6.
தேவையான இடங்களில் பள்ளி வாசல்கள்.
7.
மருத்துவமணைகள்
8.
அரசியல்
9.
முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரின் நல்வாழ்விற்காக
10.
முஸ்லிம்களின் எண்ணங்களை வெளிப்படுத்த தரமான ஊடகம் (தினசரி பத்திரிக்கை, டி.வி)
11.
மற்றும் பல ........
இவைகளையெல்லாம் திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அறிவு வளமும், பொருளதார வளமும் மிகமிக முக்கியம்.
சமூக வளர்ச்சிக்கு பொருளாதாரத்தை கோரும் இஸ்லாம்:
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا
فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ
وَإِلَيْهِ تُرْجَعُونَ (245)
)கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். (அல்குர்ஆன். 2:245(
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوالَهُمْ فِي سَبِيلِ
اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ
مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضاعِفُ لِمَنْ يَشاءُ وَاللَّهُ واسِعٌ عَلِيمٌ
)الْبَقَرَةِ: 261)
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (அல்குர்ஆன். 2:262)
عن أبي هريرة رضي الله عنه، أن النبي صلى الله عليه
وسلم قال: ' ما من يوم يصبح العباد فيه، إلا ملكان ينزلان، فيقول أحدهما: اللهم
أعط منفقا خلفا، ويقول الآخر: اللهم أعط ممسكا تلفا ' خ : 1442
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர் 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!' என்று கூறுவார் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபித்தோழர்களின் பொருளதார உதவிகள்:
1.
வறுமை ஒழிப்புக்கு:
عن جرير بن عبد الله البجلي رضي الله عنه قال: كنا عند
رسول الله صلى الله عليه وسلم في صدر النهار، قال : فجاءه قوم حفاة عراة مجتابي
النمار أو العباء، متقلدي السيوف، عامتهم من مضر، بل كلهم من مضر فتمعر وجه رسول
الله صلى الله عليه وسلم لما رأى بهم من الفاقة، فدخل ثم خرج، فأمر بلالا فأذن
وأقام، فصلى ثم خطب فقال: {يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة}
(النساء: 1)إلى آخر الآية، {إن الله كان عليكم رقيبا} (النساء: 1) والآية التي في
الحشر: {اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله} (الحشر: 18) «تصدق رجل من
ديناره، من درهمه، من ثوبه، من صاع بره، من صاع تمره - حتى قال - ولو بشق تمرة»
قال: فجاء رجل من الأنصار بصرة كادت كفه تعجز عنها، بل قد عجزت، قال: ثم تتابع
الناس، حتى رأيت كومين من طعام وثياب، حتى رأيت وجه رسول الله صلى الله عليه وسلم
يتهلل، كأنه مذهبة، فقال رسول الله صلى الله عليه وسلم: «من سن في الإسلام سنة
حسنة، فله أجرها، وأجر من عمل بها بعده، من غير أن ينقص من أجورهم شيء، ومن سن في
الإسلام سنة سيئة، كان عليه وزرها ووزر من عمل بها من بعده، من غير أن ينقص من
أوزارهم شيء» م : 1017
1848. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாதو (அரை) நிர்வாணிகளானو வட்டமாய் கிழிந்த 'கம்பளி ஆடை' அல்லது 'நீளங்கி' அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 'முளர்'குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே 'முளர்' குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது 'மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்' எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், 'அல்ஹஷ்ர்'
அத்தியாயத்திலுள்ள 'நம்பிக்கையாளர்களே! நீங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்' எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது '(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு 'ஸாஉ' கோதுமை, ஒரு 'ஸாஉ' பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்' என்று கூறி, 'பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்' என்று வலியுறுத்தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு 'ஸாஉ' கோதுமையிலிருந்தும் ஒரு 'ஸாஉ' பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு' என்று கூறினார்கள்.
عن ابن عمر رضي الله عنهما: أن عمر بن الخطاب أصاب أرضا
بخيبر، فأتى النبي صلى الله عليه وسلم يستأمره فيها، فقال: يا رسول الله، إني أصبت
أرضا بخيبر لم أصب مالا قط أنفس عندي منه، فما تأمر به؟ قال: «إن شئت حبست أصلها،
وتصدقت بها» قال: فتصدق بها عمر، أنه لا يباع ولا يوهب ولا يورث، وتصدق بها في
الفقراء، وفي القربى وفي الرقاب، وفي سبيل الله، وابن السبيل، والضيف لا جناح على
من وليها أن يأكل منها بالمعروف، ويطعم غير متمول . خ : 2737
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) கையில் கைபரில் ('ஃதம்ஃக்' என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.)
2.
மக்களின் தாகத்தை போக்குவதற்கு:
وقال النبي صلى الله عليه وسلم: «من يحفر بئر رومة فله
الجنة». فحفرها عثمان، وقال: «من جهز جيش العسرة فله الجنة» فجهزه عثمان. خ
ரூமா (என்னும் மதீனாவில் உள்ள சுவை நீர்) கிணற்றை (தூர் வாரி) எவர் தோண்டு கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தோண்டினார்கள். எவர் வசதியற்ற (தபூக் போருக்கான) படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து (தயார்படுத்தித்) தருகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல உஸ்மான் (ரலி) அவர்கள் அப்படைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.
பள்ளிவாசல் கட்டுவதற்கு:
عن أنس بن مالك، قال: قدم النبي صلى الله عليه وسلم
المدينة فنزل أعلى المدينة في حي يقال لهم بنو عمرو بن عوف، فأقام النبي صلى الله
عليه وسلم فيهم أربع عشرة ليلة، ثم أرسل إلى بني النجار، فجاءوا متقلدي السيوف
كأني أنظر إلى النبي صلى الله عليه وسلم على راحلته، وأبو بكر ردفه وملأ بني
النجار حوله حتى ألقى بفناء أبي أيوب وكان يحب أن يصلي حيث أدركته الصلاة، ويصلي
في مرابض الغنم، وأنه أمر ببناء المسجد، فأرسل إلى ملإ من بني النجار فقال: «يا
بني النجار ثامنوني بحائطكم هذا»، قالوا: لا والله لا نطلب ثمنه إلا إلى الله،
فقال أنس: فكان فيه ما أقول لكم قبور المشركين، وفيه خرب وفيه نخل، فأمر النبي صلى
الله عليه وسلم بقبور المشركين، فنبشت، ثم بالخرب فسويت، وبالنخل فقطع، فصفوا
النخل قبلة المسجد وجعلوا عضادتيه الحجارة، وجعلوا ينقلون الصخر وهم يرتجزون
والنبي صلى الله عليه وسلم معهم، وهو يقول: «اللهم لا خير إلا خير الآخره فاغفر
للأنصار والمهاجره» خ:
428. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்த 'பனூ அம்ர் இப்னு அவ்ஃபு' எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பின்னர் 'பனூ நஜ்ஜார்' கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்கவிட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூ பக்ரு(ரலி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி 'பனூ நஜ்ஜார்' கூட்டத்தினர் 'ா,நின்றதும் இன்னும் என் கண் முன்னே நிழலாடுகிறது.
நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் அபூ அய்யூப்(ரலி) வீட்டுக்கு முன்னாலுள்ள பகுதியில் அவர்களை இறக்கியது. தொழுகையின் நேரத்தை (எப்போது) எங்கே அடைகிறார்களோ அங்கே தொழுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆடுகள் கட்டுமிடங்களில் கூட தொழக் கூடியவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டும் படி ஏவினார்கள்.
பனூ நஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் 'உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இதற்காக விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்றனர். (அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.
அவ்விடத்தில் இணை வைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்கு சில உபயோகமற்ற பொருட்களும் சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி(ஸல்) கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன.
அப்பூமியைச் சமப்படுத்துமாறு கட்டளையிட அதுவும் சமப்படுத்தப்பட்டது. பேரீச்ச மரங்களை வெட்டுமாறு கட்டளையிட அவையும் வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். அதன் இரண்டு ஒரங்களிலும் கற்களை வைத்தனர் பாடிக் கொண்டே (அங்கிருந்த) பாறைகளை அப்புறப்படுத்தினர்.
'இறைவா! மறுமையின் நன்மை தவிர வேறு நன்மை இல்லை! அன்ஸார்களுக்கு, முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக!' என்று கூறியவர்களாக நபி(ஸல்) அவர்களும் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) அவர்களுடன் இருந்தனர்.
4.
போர் செய்வதற்காக!
عن عبد الرحمن بن سمرة، قال: جاء عثمان إلى النبي صلى
الله عليه وسلم بألف دينار - قال الحسن بن واقع: وكان في موضع آخر من كتابي، في
كمه - حين جهز جيش العسرة فنثرها في حجره. قال عبد الرحمن: فرأيت النبي صلى الله
عليه وسلم يقلبها في حجره ويقول: «ما ضر عثمان ما عمل بعد اليوم مرتين»: «هذا حديث
حسن غريب من هذا الوجه» الجامع الترمذي
அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உஸ்ரா போருக்காக உஸ்மான் (ரழி) அவர்கள் ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார்கள. நபி (ஸல்) அவர்கள் அதனை தன் மடியின் பரத்தினார்கள். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதனை (பொற்காசுகளை) தங்களின் மடியில் புரட்டினார்கள். பின்னர் இன்றைய தினத்திற்குப் பின் உஸ்மான் எக்காரியம் செய்தாலும் அது அவருக்கு எவ்வித இடையூரையும் தராது என்று இரு முறை கூறினார்கள். (திர்மிதி: 3701)
பொருளதாரத்தை அடைய என்ன செய்ய வேண்டும்?
பொருளதாரத்தை அடைவதற்கு வணிகமும், விவசாயமும் மிக முக்கிய ஆதாரமாகும். எனவே முஸ்லிம் வணிகர்கள் பெரும் பெரும் வணிகங்களை செய்வதற்கு முன்வர வேண்டும். பெரிய அளவில் வணிகம் எனும் போது ஒரு தனி நபரால் முதலீடு செய்யவும், அதில் ஏற்படும் ஆரம்ப கால இழப்புகளையும் தாங்குவதும் சிரமம்தான். ஆதலால் முஸ்லிம் வணிகர்கள் கூட்டு வணிகம் செய்யவும், உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தவும் தயாராக வேண்டும். மேலும் முஸ்லிம் வணிகக்கூட்டமைப்பு எனும் ஒரு அமைப்பை உருவாக்கி தமிழகம் தழுவிய அளவில் உள்ள முஸ்லிம் வணிகர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதில்
v
பொருளாதார நிபுணர்கள்,
v
உற்பத்தி துறையில் ஆய்வாளர்கள்
v
முதலீட்டாளர்கள்
v
வணிகர்கள்
v
லாபிகள்
v
அரசியல் அதிகாரம்
v
வட்டியில்லா வங்கி
v
மற்றும் இது தொடர்பாக தேவைப்படுவோர்களை அதில் இணைக்க வேண்டும்.
இதனை திறன்பட செயல்படுத்துகையில் மிகப்பெரும் இந்திய வணிகச்சந்தையை நாம் ஆளுமை செலுத்தலாம் . அதன் பலனை நம் சமூகத்திற்கு அர்ப்பணிக்கலாம். இதன் மூலம் சமூக பொருளாதார தேவைகளை நிறைவேற்றி சமூகத்தை முன்னேற்றலாம். மறுமையில் அல்லாஹ்வின் அருளை ஏரளமாக பெறலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.