புதன், 28 ஆகஸ்ட், 2019

புத்தாண்டு புத்துணர்ச்சி அளிக்கட்டும்.


புத்தாண்டு புத்துணர்ச்சி அளிக்கட்டும்.
************  **************  **************

قول الله عز وجل: "إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السموات والارض منها أربعة حرم...

قوله عليه الصلاة والسلام : عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ (مسلم)

முஹர்ரம் யுத்தம் தடை செய்யப்பட்ட சிறப்பிற்குரிய 4 மாதங்களில் ஒரு மாதமாகும்.

إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرٗا فِي كِتَٰبِ ٱللَّهِ يَوۡمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَآ أَرۡبَعَةٌ حُرُمٞۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُۚ فَلَا تَظۡلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمۡۚ وَقَٰتِلُواْ ٱلۡمُشۡرِكِينَ كَآفَّةٗ كَمَا يُقَٰتِلُونَكُمۡ كَآفَّةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ⭕

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல நீங்களும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 9:36)

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَات وَالأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ
أن الله حرم الأشهر الحرم الأربعة وهي الثلاثة المتوالية: ذو القعدة، وذو الحجة، والمحرم، والشهر الرابع المفرد: رجب
·          شهر الله المحرم
என்று சொல்லப் படுவதுண்டு...

ஹிஜ்ரத் பயணத்தை நினைவூட்டும் புண்ணியமான மாதம்...

ஹிஜ்ரீ கணக்கின் துவக்க மாதம் உலகில் இறைவன்  நிகழ்த்திய பல நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள மாதம். மாற்றங்களை ஏற்படுத்திய இனிமேலும் இறைவனின் நாட்டத்தால் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் புரட்சி மாதமாக கண்ணியமிக்க மாதங்களில் ஒன்றான முஹர்ரம் நம்மை எதிர்நோக்கி வந்துள்ளது.

ரமலானுக்குப் பின் வணக்க வழிபாடுகளுக்கு சிறந்த காலம், முஹர்ரம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ– مسلم 1982

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவித்தார்கள் : ரமளானுக்கு அடுத்து சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பேயாகும், கடமையாக்கப் பட்ட தொழுகைகளுக்கு பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகை யாகும்" (நூல்: முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ قَالَ شَهْرُ اللَّهِ الَّذِي تَدْعُونَهُ الْمُحَرَّمَ – إبن ماجة 1732

முஹர்ரம் மாதத்தின் மற்றொரு சிறப்பம்சம். அதனுடைய 10 வது நாள். ஆஷூரா.

ஆஷுரா என்றால் மகத்துவம் மிக்க 10 ம் நாள் என்று பொருள். அது முஹர்ரம் 10 வது  நாளை குறிக்கிறது.

·         قال  القرطبي وهو: عاشوراء معدول عن عاشرة للمبالغة والتعظيم، وهو في الأصل صفة لليلة العاشرة،

9 – 10 இரு நாட்கள் நோன்பு வைப்பது சுன்னத்து.


عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم 1915

முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு! என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று ஹகம் இப்னு அல்அஃரஜ் ரஹ் அவர்கள்அறிவித்தார்கள்.

·
·       عن  أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ))  صحيح مسلم (1982).

ஆஷூரா நோன்பை முன் சென்ற ஒரு வருட பாவத்திற்கு அல்லாஹ் பரிகாரமாக்கிடுவான் என்று நான் நம்புகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: முஸ்லிம்)



·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்தார்கள் : நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா உடைய நாளில் நோன்பு நோற்கப் பார்த்து  இது என்ன நோன்பு என்று வினவினார்கள் அதற்கவர்கள் இது நல்ல நாள் இந்த நாளில் தான் பனூ  இஸ்ரவேலர்களை அவர்களின் விரோதிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான் எனவே மூஸா அலை அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உங்களை விட மூஸா அலை அவர்களை பின்பற்ற நாங்கள் மிக தகுதியானவர்கள் எனக் கூறி தானும் நோன்பு நோற்று (பிறரையும்) நோன்பு நோற்கும்படி ஏவினார்கள்...

·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ  - البخاري 2006

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பு ரமளான் மாத நோன்பைத் தவிர வேற எந்த நோன்புகளையும் பிற நோன்புகளை விட சிறப்பித்து கூறியதில்லை...



வருடத்தின் ஆரம்ப நாட்களை நோன்பைக் கொண்டு துவக்கலாம்...

இஸ்லாமிய ஆண்டின் ஆரம்பமும் முடிவும் தியாகங்களைக் கொண்டதாக உள்ளது.
மௌலானா ஜுல்பிகார் அஹ்மது தாமத்பரக்காத்துஹு அவர்கள் கூறுவார்கள்.

முஹர்ரமுடைய மாதமும் தியாகத்தை நினைவு படுத்துகின்ற மாதம் இப்ராஹீம் நபியை நெருப்பு குண்டத்தில் தூக்கி போடப்பட்டது இந்த முஹர்ரமுடைய மாதத்தில்தான், இஸ்மாயீல் நபியை அறுப்பதற்கு கொண்டு செல்லப்பட்டது துல்ஹிஜ்ஜா உடைய மாதத்தில் எனவே இஸ்லாமிய ஆண்டின் ஆரம்பமும் துவக்கமும் தியாகத்தை நினைவூட்டக்கூடியதாக உள்ளது என்பார்கள். துவக்கம் தன்னை இறைவனுக்காக அர்ப்பணிப்பது இஸ்லாமிய ஆண்டின் முடிவு தன் குடும்பத்தை அல்லாஹ்விற்காக அர்ப்பணிப்பது. இந்த தியாக உணர்வு இந்த புத்தாண்டில் நம்மிடம் வரவேண்டும்.

சஹாபாக்களின் ஆர்வம். குழந்தைகளும் நோன்பு...

·       فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: " من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.


மக்காவிலும் இந்தப் பழக்கம் இருந்தது அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரத்தை மக்கா காஃபிர்கள் வேதக் காரர்களிடம் கேட்ட போது அவர்கள் ஆஷூரா நோன்பை வைக்கும் படிக் கூறியதன் பேரில் அந்த நோன்பு கடைபிடிக்கப் பட்டது...

ரமளான் நோன்பு  கடமையாக்கப் படுவதற்கு முன்பு ஆஷூரா நோன்பு கடமையாக இருந்தது ரமளான் நோன்பு கடமையாக்கப் பட்ட பின்பு விரும்பினால் நோற்கலாம் அல்லது விட்டு விடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.


·       عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ
·       عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ يَوْمَ عَاشُورَاءَ كَانَ يُصَامُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ – مسلم
·    وكان أهل الكتاب يصومونه، وكذلك قريش في الجاهلية كانت تصومه. قال دلهم بن صالح: قلت لعكرمة: عاشوراء ما أمره؟ قال: أذنبت قريش في الجاهلية ذنباً فتعاظم في صدورهم فسألوا ما توبتهم؟ قيل: صوم عاشوراء يوم العاشر من محرم.


இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கும் மற்றொரு தகவல் கஃபாவின் திரை பற்றியது.

ويستفاد من الحديث أيضا معرفة الوقت الذي كانت الكعبة تكسى فيه من كل سنة وهو يوم عاشوراء , وكذا ذكر الواقدي بإسناده عن أبي جعفر الباقر أن الأمر استمر على ذلك في زمانهم , وقد تغير ذلك بعد. فصارت تكسى في يوم النحر , وصاروا يعمدون إليه في ذي القعدة فيعلقون كسوته إلى نحو نصفه , ثم صاروا يقطعونها فيصير البيت كهيئة المحرم , فإذا حل الناس يوم النحر كسوه الكسوة الجديدة .

முன்பு ஆஷூரா நாளில் கஃபாவிற்கு திரை அணிவிக்கப்பட்டது பின்பு துல் ஹஜ் பிறை 10 - ம் நாளில் புது திரை அணிவிக்கப் படும் வழக்கம் மாறியது...

முன்னோர்களின் ஆர்வம்

كان بعض السلف يصومون يوم عاشوراء في السفر، ومنهم ابن عباس وأبو إسحاق السبيعي والزهري،
·       وكان الزهري يقول: " رمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت، ونص أحمد على أنه يصام عاشوراء في السفر".

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலி போன்றவர்கள் பிரயாணத்திலும் ஆஷூரா நோன்பை நோற்றுள்ளார்கள்...

இமாம் ஜூஹ்ரீ ரஹ் அவர்கள் ரமளான் விடுபட்டால் களா உண்டு ஆனால் ஆஷூராவுக்கு களா இல்லை என்று இதை முக்கியத்துவப் படுத்தியுள்ளார்கள்.

இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் பிரயாணத்திலும் ஆஷூரா நோன்பை நோற்க வலியுறுத்துகிறார்கள்.


ஆஷூரா நோன்பில் மற்றொரு சுன்னத்து யூதர்களுக்கு மாறு செய்வது.
அது இன்னொரு நோன்பை சேர்த்து வைத்தல் என்பது ஆகும் எனவே பத்துடன் 9 அல்லது 11 சேர்த்து வைத்தல் சுன்னத்தாகும்.


والسنة في صوم هذا اليوم أن يصوم يوماً قبله أو بعده؛ لقول رسول الله صلى الله عليه وسلم: "لئن بقيت إلى قابل لأصومن التاسع" رواه مسلم.

·       عن عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا :  قال  حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

·       وقد ذكر بعض الفقهاء أن صيام عاشوراء ثلاث مراتب:
·         1ـ صوم التاسع والعاشر والحادي عشر.
2ـ صوم التاسع والعاشر.
3ـ صوم العاشر وحده.



இந்த முஹர்ரம் மாதம் உணர்த்துகின்ற மற்றொரு பாடம் சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்ட மாதம்.
***************************************
உலகில் மாபெரும் சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட மாதமாகும். அடுத்த சர்வாதிகாரி நம்ரூத் அழிக்கப்பட்டதும் இந்த மாதத்தில்தான்.

எனவே இன்று சர்வாதிகாரிகளாக இருக்கக் கூடிய இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் மியான்மர் சர்வாதிகாரிகளுக்கும் அல்லாஹ் சரியான பாடம் புகட்ட வேண்டும். அல்லாஹ் ஃபிர்அவ்னை நம்ரூதை அழித்ததுபோல இந்த சர்வாதிகாரிகளையும் அழித்திடுவானாக! என்று இந்நாளில் துஆ செய்ய வேண்டும்.


ஆஷூராவின் சிறப்பிற்கு காரணம் :

وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون(50)  البقرة

سورة الأعراف تحدث عن تاريخ موسي

عن ابن عباس رضي اللهم عنهمما قال لما قدم النبي صلى اللهم عليه وسلم المدينة وجد اليهود يصومون عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظفر الله فيه موسى وبني إسرائيل على فرعون ونحن نصومه تعظيما له فقال رسول الله صلى اللهم عليه وسلم نحن أولى بموسى منكم ثم أمر بصومه- * بخاري  3649

மூஸா (அலை) அவர்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் பிர் அவ்னின் கொடுமையிலிருந்து செங்கடல் பிளந்து பாதுகாக்கப் பட்டார்கள். அதே கணத்தில் பிரவ்னும் அவனது படைகளும் மூழ்கடிக்கப் பட்ட்டார்கள்.

சிரியாவின் கனான் பகுதியில் வாழ்ந்த யாகூப் (அலை) அவர்களின் பிள்ளைகளுக்கு யூதர்கள்கள்- இஸ்ரேலியர்கள் – பனூ இஸ்ராயீல் என்று பெயர்.

யூசுப் (அலை) அவர்கள் மூலமாக யூதர்கள் அனைவரும் எகிப்தில் குடியேறி ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்கள் அக்கிரமம் செய்யத் தொடங்கவே எகிப்தின் உள்ளூர்வாசிகளான கிப்திகள் யூதர்களை அடக்கி அவர்களை  அடிமைகளாக்கி கடுமையான வேலைகளை வாங்கியதோடு கடும் தொல்லைகளும் கொடுத்தனர். அவர்களை மீட்க மூஸா (அலை) அவர்கள்  அனுப்பப்பட்டார்கள்.

யாகூப் நபியுடன் அவரது குடும்பத்தினர் சுமார் 63 பேர் எகிப்தில் குடியேறியதாக இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார்.   மூஸா (அலை) மீட்ட போது யூதர்கள் 6 இலட்சம் பேராக பெருகி இருந்தனர் என்று வரலாற்றின் ஒரு தகவல் சொல்கிறது.

ஆறு இலட்சம் பேர் மிக அற்புதமாக மீட்கப்பட்டனர்.

யூதர்கள் நடந்து செல்ல வசதியாக  கடலில் 12 பாதைகள் ஏற்பட்டதாகவும் . யூதர்கள் பயப்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வகையில் அந்தப் பாதைகளுக்கு இடையே இருந்த சுவர் கண்ணாடி போல இருந்ததாகவும் மஆரிபுல் குர்ஆன் ஆசிரியர் முஃப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள்   கூறுகிறார்கள்.

ஆஷூரா ஈமானிய நாட்களில் ஒரு நாள். சிறந்த நாள்.
அச்சத்தின் விளிம்பில் மூஸா நபியவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்...

فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ⭕

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது "நிச்சயமாக நாம் பிடிபட்டோம்" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் - 26:61)

அல்லாஹ்வின் உதவிக்கு சில தனிச்சிறப்புக்கள் உண்டு.
வெற்றிக்கான காரணிகளை நாம் கற்பனை கூட செய்ய முடியாது.
முழுமையான வெற்றி.
அதன் பிறகு வேறு கவலை இருக்காது.

யூதர்கள் காப்பாற்றப் பட்டார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் கண் முன்னிலையிலேயே பிர் அவ்னும் அவனுடைய ஆட்களும் அழிக்கப் பட்டார்கள். அதற்குப் பிறகு யூதர்கள் பயப்பட  தேவையிருக்கவில்லை.

ஏராளமான தொல்லைகள், சதிச் செயல்கள், அவமரியாதைகளால் முஸ்லிம் உலகு நிராசையின் விளிம்பில் நிற்கிற சூழ்நிலையில் ஆஷூரா வருகிறது.

சமுதாயம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் சக்திக்கு முன்னாள் எந்தச் சக்தியும் வெற்றிபெற முடியாது.
அல்லாஹ் நினைத்தால் அது நடந்தே விடும், சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி...


وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ) [الحج:40]

" அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்"
(அல்குர்ஆன் 22:40)

அல்லாஹ்வின் வாக்குறுதி கிடைத்தே தீரும் என்பதில் முஃமின்களுக்கு தடுமாற்றம் கூடாது. அக்கிரமச் சக்திகளின் கை ஓங்குவது கண்டு அவர்கள் சஞ்சலம் அடையவும் கூடாது.

إنها سُنَّةٌ من سنن الله التي لا تتبدل ولا تتغير،

மூஸா ( அலை) வரலாறு 21 ம் நூற்றாண்டிலும் திருப்பத்தை ஏற்படுத்தும்.


ஆஷூரா தரும் முக்கிய பாடம்...

அரசியல் என்பது நீதியை நிலை நாட்டுவதற்காக, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களுக்கு உதவுவதற்காக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் சின்ன இயக்கம் கூட பெரிய அரசியல் சக்தியாக வளரும்.

யூசுப் (அலை) எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டார். ஆனால் அவரிடம் இந்த (நீதியை நிலை நாட்டுதல் என்ற) உணர்வு இருந்ததால் அவரும் அவருடை குடும்பத்தினரும் எகிப்தின் அரசர்களாக உயர்ந்தார்கள். புகழ் பூக்க வாழ்ந்தார்கள்.


அரசியல் என்பது சுயநலத்திற்கானதாகவோ ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்டதாகவோ மக்களை நியாயமற்ற முறையில் அடக்கியாள்வதாகவோ இருக்குமென்றால் இந்த அரசியல் எவ்வளவு வல்லாட்சியாக இருந்தாலும் சில நாட்களில் அது அழியும். பிர் அவ்னுடைய அரசியல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது.


அரசியலில் ஈடுபட நினைக்கிற யாரும் மறந்து விடக்கூடாத பாடம் இது.

மக்களுக்கு இன்னும் ஒரு செய்தி இருக்கிறது
அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுகிற மக்கள் , ஆக்கிமிக்கப்படுகிறவர்கள், தொல்லைக்குள்ளாகிறவர்கள் ஒன்று பட்டு ஓரணியில் திரண்டால் - இன்றைக்கு அல்லது நாளை அவர்களுக்கு விடுவு கிடைக்கும். புது வாழ்வு பிறக்கும். யூதர்களுக்கு கிடைத்தது போல.

மதச் சார்பற்ற நாடான இந்தியாவில் தங்களது சூழ்ச்சிகளால் ஆட்சியை பிடித்து இந்து ராஷ்டிரமாக மாற்ற முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட இந்துக்களையும் சிறைபடுத்திக் கொன்று குவிக்க ஆரம்பித்து விட்டார்கள் பாசிச சக்திகள் பிர் அவ்ன் தன்னுடைய ஆதாயத்திற்காக யூத குழந்தைகளை கொன்றது போல...

இஸ்லாமிய எதிரிகள்  – இப்போது ஆதிக்கம் பெற்றுத் திகழ்வது போல தோன்றலாம். ஆனால் ஒருநாள் அவர்கள் காணாமல் போவார்கள்.
அநீதி நிலைத்ததாக உலகில் சரித்திரம் இல்லை.

அரசின் உளவுத்துறையினர்   முஸ்லிம்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
NIA - UAPA போன்ற சட்டங்கள் மூலம் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நாட்டின் ஏதாவது ஒரு மூளையில்  சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் இந்தியாவை தகர்க்க சதி செய்தார்கள் என்று பரபரப்பாக பொய் அறிக்கை வெளியாகும். பிறகு அதில் என்ன நடந்தது ஏது நடந்தது என்பது வெளிப்படாமலே போகும்.

இந்த ஆண்டும் சமீபத்தில் கோவையில் இரண்டு இளைஞர்களை லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி என்ற பெயரில்  கைது செய்து இருக்கிறோம் என்பதை இந்திய உளவுத்துறை வெளிக்காட்டியிருக்கிறது.


தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்று தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி மத்திய அரசு தனது பொருளாதார தோல்விகளை திசை திருப்ப முயல்கிறது.

உளவுத்துறையின் இந்தப் போக்கு குறித்து முஸ்லிம்கள் உஷாரடைய வேண்டும். நீதித்துறையை சரியாகவும் விரைவாகவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

முஃமின்கள் ஈமானில் உறுதியோடும் தெளிவோடும் கட்டுப்பாடோடும் இருந்தால் அல்லாஹ்வின் வெற்றி மீண்டும் வரும். இன்ஷா அல்லாஹ்.

ஆக்கிரமிப்பு சக்திகளை அழித்தொழித்து பல புரட்சிகளை ஏற்படுத்திய ஆஷூராவாக எதிர் வரும் ஆஷூராவை அல்லாஹ் ஆக்கி வைப்பானாக.
அவர்களின் சூழ்ச்சிகளை அல்லாஹ் ஃபிர்அவ்னை தீடீரென அழித்தது போல முறியடித்து நம்மையும் நமது ஷரீஅத் சட்டங்களையும் பாதுகாப்பானாக...

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சமுதாய தலைமை காலத்தின் கட்டாயம்

بسم الله الرحمن الرحيم

சமுதாய தலைமை காலத்தின் கட்டாயம்
********************************************
முன்னுரை:
அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரும் அருட்கொடை இஸ்லாமாகும். இம்மார்க்கம் நாம் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அது சொல்லும் முறையில் நாம் வாழ்ந்தால் நமது வாழ்க்கையில் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும். அவ்வாறில்லையெனில் நம்மால் நிச்சயம் வெல்ல முடியாது. சமூக வாழ்வில் நாம் வெற்றி பெறுவதற்கு இஸ்லாம் கூறும் மிக முக்கிய விஷயம் ஒரு தலைமையின் செயல்பட வேண்டும் என்பதே!

அல்லாஹ் கூறுகின்றான்...

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (النساء : 59)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்..

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا خَرَجَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيُؤَمِّرُوا أَحَدَهُمْ» د : 2608
அபூஸயீத் அல்குத்ரிய்யி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பயணத்தில் மூவர் புறப்பட்டால் அவர்களில் தங்களில் ஒருவரை தலைவராக ஆக்கிக் கொள்ளட்டும். (அபூதாவூத்: 2608)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَمَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ مُؤْتَةَ زَيْدَ بْنَ حَارِثَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ قُتِلَ زَيْدٌ فَجَعْفَرٌ، وَإِنْ قُتِلَ جَعْفَرٌ فَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ» قَالَ عَبْدُ اللَّهِ: كُنْتُ فِيهِمْ فِي تِلْكَ الغَزْوَةِ، فَالْتَمَسْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ، فَوَجَدْنَاهُ فِي القَتْلَى، وَوَجَدْنَا مَا فِي جَسَدِهِ بِضْعًا وَتِسْعِينَ، مِنْ طَعْنَةٍ وَرَمْيَةٍ " خ : 4261

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தலைமையேற்கட்டும்)' என்று கூறினார்கள். நான் அந்தப் புனிதப் போரில் அவர்களுடன் (பங்கேற்று) இருந்தேன். நாங்கள் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களைத் தேடிச் சென்றபோது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம். அவர்களின் உடலில் இருந்த காயங்கள், ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங்களுமாக மொத்தம் தொண்ணூற்றுக்கும் அதிகமானவையாய் இருக்கக் கண்டோம்.


1. ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக

நாம் தனியாகவோ, சிறு குழுக்கலாகவோ செயல்படுவதை விட ஒருங்கிணைந்து செயல்பட்டாலே அதிக பலத்தைப் பெற முடியும் இல்லையெனில் முடியாது.

واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون (آل عمران : 103)

நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.


2. பலவீனப்படாமல் இருக்க!

وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ( الأنفال : 46)

அல்லாஹ்வுக்கும்> அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.


3. ஒருமித்த கருத்தில் நிலைகொள்வதற்காக!

4. நமது உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், மீட்டெடுக்கவும்.


தலைமை எப்படி இருக்க வேண்டும்?

1. அறிவிலும், உடலிலும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم (آل عمران : 247)
அவர்களுடைய நபி அவர்களிடம் ''நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!'' என்று கூறினார்கள்; அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்'' என்று கூறினார்.

2. எதிரிகளுக்கும் நன்மையை நாட வேண்டும்.


عن عائشة  رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ، قَالَ: " لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ العَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، فَقَالَ، ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا " (بخاري : 3231)

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், '(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது 'அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். 'கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, 'முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)' என்று கூறினார். உடனே, '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)' என்று சொன்னேன்.

முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்பவர் முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை விரும்புபவராகவும், முஸ்லிம்களில் மாற்றுக் கருத்துடையோர்களை மதித்து, பொது விஷயங்களில் இணைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும். அவ்வாறின்றி அவர்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ பார்ப்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் அரசியல் ரீதியாக நம்மால் வெற்றி பெற இயலாது.

3. சமயோஜிதமாக நடக்கத் தெரிய வேண்டும்.
உ.ம் நயவஞ்கசர்களுடன் நபிகளார் நடந்து கொண்ட முறையைப் போல.

عن جَابِرِ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنَّا فِي غَزَاةٍ - قَالَ سُفْيَانُ: مَرَّةً فِي جَيْشٍ - فَكَسَعَ رَجُلٌ مِنَ المُهَاجِرِينَ، رَجُلًا مِنَ الأَنْصَارِ، فَقَالَ الأَنْصَارِيُّ: يَا لَلْأَنْصَارِ، وَقَالَ المُهَاجِرِيُّ: يَا لَلْمُهَاجِرِينَ، فَسَمِعَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا بَالُ دَعْوَى الجَاهِلِيَّةِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَسَعَ رَجُلٌ مِنَ المُهَاجِرِينَ رَجُلًا مِنَ الأَنْصَارِ، فَقَالَ: «دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ» فَسَمِعَ بِذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ، فَقَالَ: فَعَلُوهَا، أَمَا وَاللَّهِ لَئِنْ رَجَعْنَا إِلَى المَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ عُمَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا المُنَافِقِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ، لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ مُحَمَّدًا يَقْتُلُ أَصْحَابَهُ» وَكَانَتِ الأَنْصَارُ أَكْثَرَ مِنَ المُهَاجِرِينَ حِينَ قَدِمُوا المَدِينَةَ، ثُمَّ إِنَّ المُهَاجِرِينَ كَثُرُوا بَعْدُ، خ : 4905

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்  நாங்கள் 'ஒரு போரில்' அல்லது 'ஒரு படையில்' இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி 'அன்சாரிகளே! (உதவுங்கள்.)' என்று கூறினார். அந்த முஹாஜிர் 'முஹாஜிர்களே! உதவுங்கள்!' என்று கூறினார்.  இந்தப் பேச்சை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செவியேற்று, 'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று . அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குல மோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை' என்று கூறினார்கள். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு 'இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்' என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி(ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர்(ரலி) எழுந்து, 'என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது' என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.

4. பொறுமையுடன் செயலாற்றத் தெரிய வேண்டும்.

மக்காவை வெற்றி கொள்ள நபி (ஸல்) அவர்கள் எத்துனை ஆண்டுகள் பொறுமையுடன் செயலாற்றினார்கள். அதற்கிடையில் எவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்தார்கள்.

5. மக்களை ஒன்றிணைக்கும் கலையைப் பெற்றிருக்க வேண்டும். சிந்தனை மாறுபாட்டால் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருப்பவர்களை உடன்பாட்டுச் சிந்தனையில் சங்கமிக்கச் செய்ய வேண்டும்.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنَا لَمَّا رَجَعَ مِنَ الأَحْزَابِ: «لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ العَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ» فَأَدْرَكَ بَعْضَهُمُ العَصْرُ فِي الطَّرِيقِ، فَقَالَ بَعْضُهُمْ: لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ نُصَلِّي، لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ، فَذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ. خ : 946

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்' என்று கூறினார்கள்.  வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். 'பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழவேண்டாம்' என்று சிலர் கூறினர். வேறு சிலர் 'இந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; எனவே நாம் தொழுவோம்' என்றனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.

عن عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا، وَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا، فَقَالَ لِي: «أَرْسِلْهُ»، ثُمَّ قَالَ لَهُ: «اقْرَأْ»، فَقَرَأَ، قَالَ: «هَكَذَا أُنْزِلَتْ»، ثُمَّ قَالَ لِي: «اقْرَأْ»، فَقَرَأْتُ، فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ إِنَّ القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مِنْهُ مَا تَيَسَّرَ» خ : 2419

ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம்(ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி(ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம்(ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன். (அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்ற அங்கி)யை அவர்களின் கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, '(நபி(ஸல்) அவர்களே!) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை கேட்டேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டு விடு' என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, 'நீங்கள் ஓதுங்கள்' என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின் படி இறக்கியருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.


6. எதிரிகளையும், தம்முடைய தோழர்களையும் சூழலுக்கேற்ப கையாளத் தெரிய வேண்டும்.

ஹூதைபிய்யாவின் வரலாறு  (ஸஹீஹூல் புஹாரி: 2731. 2732. )

7. எதிரிகள் விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ، وَأَجْوَدَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ المَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ، فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ، فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَبَقَ النَّاسَ إِلَى الصَّوْتِ، وَهُوَ يَقُولُ: «لَنْ تُرَاعُوا لَنْ تُرَاعُوا» وَهُوَ عَلَى فَرَسٍ لِأَبِي طَلْحَةَ عُرْيٍ مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ، فَقَالَ: " لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا. أَوْ: إِنَّهُ لَبَحْرٌ " خ : 6033

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.  (ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களை எதிர்கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் சென்றுவிட்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்தவண்ணம், 'பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள்' என்று (மக்களைப் பார்த்துச்) கூறினார்கள். பிறகு, ' '(தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடம் கடல்' என்று கூறினார்கள்.


முடிவுரை: சரியான> அறிவார்ந்த தலைமை முஸ்லிம் சமுதாயத்தில் இல்லாதபடியால் நம்முடைய (முத்தலாக் போன்ற) உரிமைகள் பறிக்கப்படும் போது> நம்முடைய சமுதாய இளைஞர்கள் மீது அநியாயமாக வழக்குகள் போடப்படும் போது> தேர்தல்கள் வரும் சமயம் முஸ்லிம் சமுதாயம் யாருக்கு? ஏன்? வாக்களிக்க வேண்டும் எனும் கேள்வி எழும் போது நாம் யாரின் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்? யார் சொல்வதை கேட்க வேண்டும்? நம்முடைய பிரச்சனைகளை யாரிடத்தில் முறையிட வேண்டும்? என்பன உள்ளிட்ட பல விஷயங்களில் முஸ்லிம் சமுதாயம் திணறிக் கொண்டிருக்கின்றது. மேலும் சிறு சிறு குழுக்காளாக பல குழுக்கள் இயங்குவதால் ஒரு குழுவினருக்கு  வரும் பிரச்சனைகளில் மற்றவர்கள் தலையிடுவதில்லை. ஒட்டு மொத்த சமுதாயப் பிரச்சளை என்று வரும் போதும் முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முடிய வில்லை. ஆதலால் முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த> அறிவார்ந்த தகுதிவாய்ந்த தலைமை தேவை. அது அமைய நாம் முயற்சிக்க வேண்டும். அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஆட்சியாளர்களை இயக்கிடும் இயந்திரம் நீ.

 بسم الله الرحمن الرحيم

ஆட்சியாளர்களை இயக்கிடும் இயந்திரம் நீ.
**********************************************

قال الله تعالي  : يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏⭕

قال النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، (رواه البخاري )


மனிதனாக படைக்கப்பட்ட நாம் தனித்து விளங்குவது அறிவால் மட்டும் தான் கல்வி என்பது முதன்மையானது கல்வி கற்று உயர்ந்து விட்டால் ஆட்சியாளர்களை இயக்கிடும் இயந்திரமாக நாம் ஆகிடலாம்  ஏனெனில் நாட்டை ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கம் அவர்களின் பணம் பதவிகளை இழக்க நேரிடலாம் அவைகள் பறிக்கப்பட்டு விடலாம் ஆனால் கல்வி என்பது யாராலும் பறிக்கவோ அழித்து விடவோ முடியாதது . கொடுக்க கொடுக்க வளரக்கூடியது அள்ள அள்ள நிறையக் கூடியது. கல்வி என்பது பேரொளி . அறியாமை என்பது காரிருள் . கற்றோர் இறந்தாலும் வாழ்கின்றனர். அறிவிழிகள் வாழ்ந்தாலும் பிணமே. கல்வியைக் கற்றால் உயர்ந்து கொண்டே செல்லலாம்.

எனவே தான்  அல்குர்ஆன் இப்படி சிலாகிக்கின்றது...

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏

அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு கல்வி-ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:269)

பணமோ பதவியோ நீடித்து நிலைத்து நிற்காது அது ஒரு நாள் நிற்கும் அடுத்த நாள் காற்றில் புழுதியாக  அடித்துச் செல்லப்பட்டு விடலாம் ஆனால் கல்வி ஞானம் என்பது காலாகாலமாக பன்னூறு ஆண்டுகளாக நிலைத்து நிற்கக் கூடிய நிலையான செல்வம். இதில் உலகக் கல்வியும் தீனுடைய கல்வியும் அடங்கும்.
நாம் பார்க்கிறோம் எத்தனையோ பல இமாம்கள் , மார்க்க விற்பன்னர்கள் , விஞ்ஞானிகள் எத்தனையோ பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதன் காரணமாக இன்றும் அவர்களால் கண்டுபிடித்து தரப்பட்ட அந்த பொருட்கள் உபயோகத்தில் உள்ளன அவர்களைப் பற்றி பாராட்டி பேசும் வரலாறுகளை நாம் வாசித்துக் கொண்டும் பரிமாறிக் கொண்டும் இருக்கிறோம்
எனவே இவர்கள் கல்வியின் காரணமாக மிகப் பெரும் பொக்கிஷம் கொடுக்கப்பட்டுள்ளவார்களாக ஆகி விட்டார்கள்...

عن مُعَاوِيَةَ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ،

அல்லாஹ் ஒருவருக்கு ஒரு நன்மையை நாடினால் அவருக்கு தீனில் கல்வி ஞானத்தை கொடுக்கின்றான் என்பதாக நபி ஸல் அவர்கள் சொன்ன ஒரு பொன்மொழி புகாரி ஷரீஃபில்  79 இடம்பெற்றுள்ளது (அறிவிப்பாளர் முஆவியா ரலி அவர்கள்)

கொடுத்தால்தானே திரும்பக் கிடைக்கும்
தண்ணீர் ஊற்றி பராமரித்தால் தானே மரம் கனி தரும்... கல்விக்காக நாம் முயற்சிப்பதில்லை. எனவே நம்முடைய நிலை இவ்வளவு இழிநிலையாக இருக்கின்றது .

இத்தனை பாக்கியம் நிறைந்த இந்த கல்வி-ஞானத்தை பெறுவதற்காக வேண்டி முயற்சிக்க வேண்டும் படிக்கவேண்டும் கற்கவேண்டும் சிரமப்பட வேண்டும் .
மிகப்பெரிய நபியாக இருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாம் அறிந்திருப்போம் அவர்கள் பல நாட்கள் பயணம் செய்து தன்னைவிட பதவியில் குறைந்த கித்ர் (ரஹ்) அவர்களிடம் போய் கல்வி கற்று வந்தார்கள் என்ற சரித்திர நாம் அறிவோம் .

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا

அவ்விருவரும் சற்று முன்னேறிச் சென்ற போது மூஸா அலைஹிஸ்ஸலாம் தன் பணியாளரிடம் கூறினார் நமது சிற்றுண்டியை கொண்டு வாரும் இன்றைய பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம் (18:62)

களைத்துப் போகுமளவு நீண்ட பிரயாணம் செய்து நபி மூஸா அலை அவர்கள் கல்வி கற்றுள்ளார்கள்...

முயன்ற அளவே பெற முடியும்.

عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلَاثَةُ نَفَرٍ ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ ، قَالَ : فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا ، وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا ،
فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أَلَا أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلَاثَةِ ،
أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ ، وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ ، وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ

நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்' என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 66.
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

கல்வி கற்பதற்கு போவதில்லை போனாலும் ஓரசாரமாக இருந்துவிட்டு வருகின்றோம் எனவே நம்முடைய பதவியும் நம்முடைய வளர்ச்சியும் குன்றி இருக்கின்றது.


ஆக கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ  وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ ⭕

உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு மேலும் கல்வி ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 58:11 )

ஒன்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை  இரண்டாவது கல்வி ஞானத்தை பெற வேண்டும் இந்த இரண்டையும் ஒரு சேர பெற்றுக் கொண்டால் உங்களை உயர்த்தி வைக்கின்றேன் என்பதாக அல்லாஹ் தரக்கூடிய வாக்குறுதி...

இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் முழுமையான பயனை எதிர்பார்க்க முடியாது அதுதான் இன்றைய பாரத திருநாட்டில் காண்கிறோம்.
முஸ்லிம்களிடம்  உலகக் கல்வியும் போதிய அளவு இல்லை தீனுடைய கல்வியும் இல்லாத ஒரு அவல நிலையை நாம் காண்கின்றோம் . உலகக் கல்வியை படித்திருந்தாலும்  ஐஏஸ் ஐபிஎஸ் போன்ற ஒரு சுமாரான நிலையை எட்டிப் பிடித்திடலாம்.
அதைனை தவற விட்டதால் முஸ்லிம் அல்லாதவர்கள் நம்மை தாழ்த்திக்  கொண்டிருக்கிறார்கள் . எனவே நாமும் இலக்கு வைத்து படித்தால் முன்னேற முடியும் நாம் பெரும் பதவிகளை அடைய முடியும்.  இதற்கான சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்...

பெரும் வல்லரசாக இருந்த கலீஃபா உமர் ரலி அவர்களுடைய ஆட்சி காலத்தில் பார்லிமெண்டில் சட்ட ஆலோசகர்கள் & சட்டம் இயற்ற கூடியவர்கள் இடம் பெற்றிருந்த பெரும் வயதுடைய முதியவர்களுக்கு மத்தியில் ஒரு சின்னஞ்சிறு பையன் இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள் . காரணம் அவர் பெற்ற அந்த கல்வியினால் மட்டுமே.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ، فَقَالَ بَعْضُهُمْ: لِمَ تُدْخِلُ هَذَا الفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ؟ فَقَالَ: «إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ» قَالَ: فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِي مَعَهُمْ قَالَ: وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ مِنِّي، فَقَالَ: مَا تَقُولُونَ فِي إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ، وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا حَتَّى خَتَمَ السُّورَةَ، فَقَالَ بَعْضُهُمْ: أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا، وَقَالَ بَعْضُهُمْ: لاَ نَدْرِي، أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا، فَقَالَ لِي: يَا ابْنَ عَبَّاسٍ، أَكَذَاكَ تَقُولُ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَمَا تَقُولُ؟ قُلْتُ: هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ: إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ فَتْحُ مَكَّةَ، فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ: فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا. قَالَ عُمَرُ: «مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ»

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4294.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

அன்று மட்டுமல்ல இதோ இன்றும் உண்டு.
கல்வியால் உயர்ந்து பெரும் பதவிகளை கட்டி ஆள்வது என்பது தொன்மையான ஒரு செய்தியல்ல . இன்றைய காலத்திலும் பாரத நாட்டில் நாம் காண முடியும்.

முதலாவது : ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். தனது படிப்பாலும் தொடர் முயற்சியாலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உயர் பதவியை அடைந்து முதல் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பினார் இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவியை அடைந்தார்.

இரண்டாவது : ஜாகிர் ஹூஸைன் (Zakir Hussain, 8 பிப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
ஜாகிர் ஹுஸைன், இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ,உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
https://ta.m.wikipedia.org.

மூன்றாவது : மௌலானா அபுல் கலாம் ஆஜாத்  முஹியத்தீன் அகமது (11 நவம்பர் 1888 – 22 பிப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முஸ்லிம்அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவர்.
இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பதவியில் 1947 – 1958 வரை இருந்தார்.


நான்காவது : பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956)  தாழ்தப் பட்டு ஒதுக்கப்பட்ட கீழ்சாதி வர்க்கதினர் இந்தியாவின் சட்டம் ஏற்றும் சட்டத்துரை நிபுணராக ஆனார் டாக்டர் அண்ணல் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

கல்வியால் ஆட்சியாளர்களை இயக்க கூடியவர்களாக மட்டுமல்ல ஆட்சி பீடத்தை அலங்கரிக்க கூடிய பாக்கியம் பெற முடியும்

(ஆடு மாடு) ஒட்டகம் மேய்க்க கூட லாயக்கில்லாதவன் தகுதியற்றவன் என்று பெற்ற தாய் தகப்பனால் முத்திரை குத்தப் பட்ட ஒருவர் (உமர் ரலி அவர்கள்) உலகையே கட்டியாளும் பேரரசராக ஆனார் . அது அவர் பெற்ற கல்வியின் காரணமாக

عَنْ عُمَرَ، قَالَ: كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي المَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ اليَوْمِ مِنَ الوَحْيِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ،

'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். அவரின் முறை வந்தபோது என்னுடைய அன்சாரித் தோழர், சென்றுவிட்டு வந்த என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். 'அவர் அங்கே இருக்கிறாரா?' என்றும் கேட்டார். நான் பதறிப்போய் வந்தேன். அப்போது அவர் (நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரை விவாகரத்துச செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) 'ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறது' என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். 'நபி(ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'எனக்குத் தெரியவில்லை' என்றார். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'தங்களின் துணைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டீர்களா?' என்று நின்ற நிலையில் கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லையே' என்றார்கள். உடனே நான் 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று சொன்னேன்' என உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 89.
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

கல்வியை படிப்பதற்காக சொந்த தொழிலில் கூட ஓரங்கட்டிவிட்டு படித்ததால் மிகப்பெரிய அரசராக ஆனார்கள்.

கல்வியின்றி இறைதியானமோ பணமோ பதவியோ பலன் தராது. அதுவே தண்டனை-கஷ்டம் வந்து சேரவோ . கேலிக்கூத்துக் உள்ளாகும் நிலைக்கோ தள்ளி விட்டு நமக்கு எதிராகவே அமைந்து விடலாம்.

கல்வியின்றி தியானம் A.

2482 - ﺣﺪﺛﻨﺎ ﻣﺴﻠﻢ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ ﺑﻦ ﺣﺎﺯﻡ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻴﺮﻳﻦ، ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻛﺎﻥ ﺭﺟﻞ ﻓﻲ ﺑﻨﻲ ﺇﺳﺮاﺋﻴﻞ ﻳﻘﺎﻝ ﻟﻪ ﺟﺮﻳﺞ ﻳﺼﻠﻲ، ﻓﺠﺎءﺗﻪ ﺃﻣﻪ، ﻓﺪﻋﺘﻪ، ﻓﺄﺑﻰ ﺃﻥ ﻳﺠﻴﺒﻬﺎ، ﻓﻘﺎﻝ: ﺃﺟﻴﺒﻬﺎ ﺃﻭ ﺃﺻﻠﻲ، ﺛﻢ ﺃﺗﺘﻪ ﻓﻘﺎﻟﺖ: اﻟﻠﻬﻢ ﻻ ﺗﻤﺘﻪ ﺣﺘﻰ ﺗﺮﻳﻪ ﻭﺟﻮﻩ اﻟﻤﻮﻣﺴﺎﺕ، ﻭﻛﺎﻥ ﺟﺮﻳﺞ ﻓﻲ ﺻﻮﻣﻌﺘﻪ، ﻓﻘﺎﻟﺖ اﻣﺮﺃﺓ: ﻷﻓﺘﻨﻦ ﺟﺮﻳﺠﺎ، ﻓﺘﻌﺮﺿﺖ ﻟﻪ، ﻓﻜﻠﻤﺘﻪ ﻓﺄﺑﻰ، ﻓﺄﺗﺖ ﺭاﻋﻴﺎ، ﻓﺄﻣﻜﻨﺘﻪ ﻣﻦ ﻧﻔﺴﻬﺎ، ﻓﻮﻟﺪﺕ ﻏﻻﻣﺎ ﻓﻘﺎﻟﺖ: ﻫﻮ ﻣﻦ ﺟﺮﻳﺞ، ﻓﺄﺗﻮﻩ، ﻭﻛﺴﺮﻭا ﺻﻮﻣﻌﺘﻪ، ﻓﺄﻧﺰﻟﻮﻩ ﻭﺳﺒﻮﻩ، ﻓﺘﻮﺿﺄ ﻭﺻﻠﻰ ﺛﻢ ﺃﺗﻰ اﻟﻎﻻﻣ، ﻓﻘﺎﻝ: ﻣﻦ ﺃﺑﻮﻙ ﻳﺎ ﻏﻻﻣ؟ ﻗﺎﻝ: اﻟﺮاﻋﻲ، ﻗﺎﻟﻮا: ﻧﺒﻨﻲ ﺻﻮﻣﻌﺘﻚ ﻣﻦ ﺫﻫﺐ، ﻗﺎﻝ: ﻻ، ﺇﻻ ﻣﻦ ﻃﻴﻦ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த 'ஜுரைஜ்' என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். 'நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?' என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), 'இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே' என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், 'நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்' என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, 'இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்' என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), '(இன்ன) இடையன்' என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், 'உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்' என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், 'இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்' என்று கூறிவிட்டார்.
ஸஹீஹ் புகாரி : 2482.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்.

இறைவனுக்கு பிறகு தாய் தந்தைக்கு எந்தளவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளாததால் ஜுரைஜ் (ரஹ்) என்ற இந்த மாமனிதர் பெரும் துன்பத்திற்கு உள்ளார்.


கல்வியின்றி தியானம் B.

5063 - ﺣﺪﺛﻨﺎ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺟﻌﻔﺮ، ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﻤﻴﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ اﻟﻄﻮﻳﻞ، ﺃﻧﻪ ﺳﻤﻊ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻳﻘﻮﻝ: ﺟﺎء ﺛﻼﺛﺔ ﺭﻫﻂ ﺇﻟﻰ ﺑﻴﻮﺕ ﺃﺯﻭاﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳﺴﺄﻟﻮﻥ ﻋﻦ ﻋﺒﺎﺩﺓ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻠﻤﺎ ﺃﺧﺒﺮﻭا ﻛﺄﻧﻬﻢ ﺗﻘﺎﻟﻮﻫﺎ، ﻓﻘﺎﻟﻮا: ﻭﺃﻳﻦ ﻧﺤﻦ ﻣﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻗﺪ ﻏﻔﺮ ﻟﻪ ﻣﺎ ﺗﻘﺪﻡ ﻣﻦ ﺫﻧﺒﻪ ﻭﻣﺎ ﺗﺄﺧﺮ، ﻗﺎﻝ ﺃﺣﺪﻫﻢ: ﺃﻣﺎ ﺃﻧﺎ ﻓﺈﻧﻲ ﺃﺻﻠﻲ اﻟﻠﻴﻞ ﺃﺑﺪا، ﻭﻗﺎﻝ ﺁﺧﺮ: ﺃﻧﺎ ﺃﺻﻮﻡ اﻟﺪﻫﺮ ﻭﻻ ﺃﻓﻄﺮ، ﻭﻗﺎﻝ ﺁﺧﺮ: ﺃﻧﺎ ﺃﻋﺘﺰﻝ اﻟﻨﺴﺎء ﻓﻼ ﺃﺗﺰﻭﺝ ﺃﺑﺪا،
ﻓﺠﺎء ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﻟﻴﻬﻢ، ﻓﻘﺎﻝ: «ﺃﻧﺘﻢ اﻟﺬﻳﻦ ﻗﻠﺘﻢ ﻛﺬا ﻭﻛﺬا،
ﺃﻣﺎ ﻭاﻟﻠﻪ ﺇﻧﻲ ﻷﺧﺸﺎﻛﻢ ﻟﻠﻪ ﻭﺃﺗﻘﺎﻛﻢ ﻟﻪ، ﻟﻜﻨﻲ ﺃﺻﻮﻡ ﻭﺃﻓﻄﺮ، ﻭﺃﺻﻠﻲ ﻭﺃﺭﻗﺪ، ﻭﺃﺗﺰﻭﺝ اﻟﻨﺴﺎء، ﻓﻤﻦ ﺭﻏﺐ ﻋﻦ ﺳﻨﺘﻲ ﻓﻠﻴﺲ ﻣﻨﻲ»

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5063.
அத்தியாயம் : 67. திருமணம்

இம்மூவரும் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதைப்பற்றி அறிவின்றி வணங்கியதால் செய்த வணக்கங்கள் தவறானது என கண்டிக்கப்பட்டார்கள்.

கல்வியின்றி பணமோ பதவியோ பயனில்லை.
வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க நீரின் மேல் பரப்பில் தெர்மாகூல் அட்டைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தெர்மாகூல் அட்டைகளை மிதக்க விட்டனர். ஆனால் அந்த அட்டைகள் சிறிது நேரத்திலேயே காற்றில் பறந்து கிழிந்தது. மேலும் பல அட்டைகள் கரையோரம் ஒதுங்கியது.
(இது சுமார் பத்தர இலட்சம் ரூபாய் செலவு.)
https://www.google.com/amp/s/www.dailythanthi.com/amp/News/State/2017/04/22115926/Vaigai-dam-Prevent-evaporation-of-water-Project.vpf

கல்வியறிவு இல்லாததால் பெரும் பதவியில் இருந்த சிலர் நகைப்புக்கு உள்ளானார்கள் கேவலப்படுத்த பட்டார்கள்.

எனவே விண்ணுயர உயர்த்தக்கூடிய இந்த கல்வியைக் கற்று ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கக்கூடிய பெரும் பதவிகளையும் ஆட்சியைப் பிடிக்கக் கூடிய ஒரு அதிகாரியாகவும் அதுபோன்று மறுமையில் மிகப்பெரிய நன்மைகளை அடைய கூடிய நல்ல பாக்கியம் தரக் கூடிய மக்களாக ஆக்கி வைப்பானாக... ஆமீன்.