வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஆட்சியாளர்களை இயக்கிடும் இயந்திரம் நீ.

 بسم الله الرحمن الرحيم

ஆட்சியாளர்களை இயக்கிடும் இயந்திரம் நீ.
**********************************************

قال الله تعالي  : يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏⭕

قال النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، (رواه البخاري )


மனிதனாக படைக்கப்பட்ட நாம் தனித்து விளங்குவது அறிவால் மட்டும் தான் கல்வி என்பது முதன்மையானது கல்வி கற்று உயர்ந்து விட்டால் ஆட்சியாளர்களை இயக்கிடும் இயந்திரமாக நாம் ஆகிடலாம்  ஏனெனில் நாட்டை ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கம் அவர்களின் பணம் பதவிகளை இழக்க நேரிடலாம் அவைகள் பறிக்கப்பட்டு விடலாம் ஆனால் கல்வி என்பது யாராலும் பறிக்கவோ அழித்து விடவோ முடியாதது . கொடுக்க கொடுக்க வளரக்கூடியது அள்ள அள்ள நிறையக் கூடியது. கல்வி என்பது பேரொளி . அறியாமை என்பது காரிருள் . கற்றோர் இறந்தாலும் வாழ்கின்றனர். அறிவிழிகள் வாழ்ந்தாலும் பிணமே. கல்வியைக் கற்றால் உயர்ந்து கொண்டே செல்லலாம்.

எனவே தான்  அல்குர்ஆன் இப்படி சிலாகிக்கின்றது...

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏

அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு கல்வி-ஞானத்தை வழங்குகிறான். எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் (மெய்யாகவே) ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார். (இவற்றிலிருந்து) நல்லறிவுடையோர் தவிர வேறெவரும் சிந்தித்துப் படிப்பினை பெறமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:269)

பணமோ பதவியோ நீடித்து நிலைத்து நிற்காது அது ஒரு நாள் நிற்கும் அடுத்த நாள் காற்றில் புழுதியாக  அடித்துச் செல்லப்பட்டு விடலாம் ஆனால் கல்வி ஞானம் என்பது காலாகாலமாக பன்னூறு ஆண்டுகளாக நிலைத்து நிற்கக் கூடிய நிலையான செல்வம். இதில் உலகக் கல்வியும் தீனுடைய கல்வியும் அடங்கும்.
நாம் பார்க்கிறோம் எத்தனையோ பல இமாம்கள் , மார்க்க விற்பன்னர்கள் , விஞ்ஞானிகள் எத்தனையோ பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதன் காரணமாக இன்றும் அவர்களால் கண்டுபிடித்து தரப்பட்ட அந்த பொருட்கள் உபயோகத்தில் உள்ளன அவர்களைப் பற்றி பாராட்டி பேசும் வரலாறுகளை நாம் வாசித்துக் கொண்டும் பரிமாறிக் கொண்டும் இருக்கிறோம்
எனவே இவர்கள் கல்வியின் காரணமாக மிகப் பெரும் பொக்கிஷம் கொடுக்கப்பட்டுள்ளவார்களாக ஆகி விட்டார்கள்...

عن مُعَاوِيَةَ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ،

அல்லாஹ் ஒருவருக்கு ஒரு நன்மையை நாடினால் அவருக்கு தீனில் கல்வி ஞானத்தை கொடுக்கின்றான் என்பதாக நபி ஸல் அவர்கள் சொன்ன ஒரு பொன்மொழி புகாரி ஷரீஃபில்  79 இடம்பெற்றுள்ளது (அறிவிப்பாளர் முஆவியா ரலி அவர்கள்)

கொடுத்தால்தானே திரும்பக் கிடைக்கும்
தண்ணீர் ஊற்றி பராமரித்தால் தானே மரம் கனி தரும்... கல்விக்காக நாம் முயற்சிப்பதில்லை. எனவே நம்முடைய நிலை இவ்வளவு இழிநிலையாக இருக்கின்றது .

இத்தனை பாக்கியம் நிறைந்த இந்த கல்வி-ஞானத்தை பெறுவதற்காக வேண்டி முயற்சிக்க வேண்டும் படிக்கவேண்டும் கற்கவேண்டும் சிரமப்பட வேண்டும் .
மிகப்பெரிய நபியாக இருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாம் அறிந்திருப்போம் அவர்கள் பல நாட்கள் பயணம் செய்து தன்னைவிட பதவியில் குறைந்த கித்ர் (ரஹ்) அவர்களிடம் போய் கல்வி கற்று வந்தார்கள் என்ற சரித்திர நாம் அறிவோம் .

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا

அவ்விருவரும் சற்று முன்னேறிச் சென்ற போது மூஸா அலைஹிஸ்ஸலாம் தன் பணியாளரிடம் கூறினார் நமது சிற்றுண்டியை கொண்டு வாரும் இன்றைய பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம் (18:62)

களைத்துப் போகுமளவு நீண்ட பிரயாணம் செய்து நபி மூஸா அலை அவர்கள் கல்வி கற்றுள்ளார்கள்...

முயன்ற அளவே பெற முடியும்.

عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلَاثَةُ نَفَرٍ ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ ، قَالَ : فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا ، وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا ،
فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أَلَا أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلَاثَةِ ،
أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ ، وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ ، وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ

நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்' என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 66.
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

கல்வி கற்பதற்கு போவதில்லை போனாலும் ஓரசாரமாக இருந்துவிட்டு வருகின்றோம் எனவே நம்முடைய பதவியும் நம்முடைய வளர்ச்சியும் குன்றி இருக்கின்றது.


ஆக கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ  وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ ⭕

உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு மேலும் கல்வி ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 58:11 )

ஒன்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை  இரண்டாவது கல்வி ஞானத்தை பெற வேண்டும் இந்த இரண்டையும் ஒரு சேர பெற்றுக் கொண்டால் உங்களை உயர்த்தி வைக்கின்றேன் என்பதாக அல்லாஹ் தரக்கூடிய வாக்குறுதி...

இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் முழுமையான பயனை எதிர்பார்க்க முடியாது அதுதான் இன்றைய பாரத திருநாட்டில் காண்கிறோம்.
முஸ்லிம்களிடம்  உலகக் கல்வியும் போதிய அளவு இல்லை தீனுடைய கல்வியும் இல்லாத ஒரு அவல நிலையை நாம் காண்கின்றோம் . உலகக் கல்வியை படித்திருந்தாலும்  ஐஏஸ் ஐபிஎஸ் போன்ற ஒரு சுமாரான நிலையை எட்டிப் பிடித்திடலாம்.
அதைனை தவற விட்டதால் முஸ்லிம் அல்லாதவர்கள் நம்மை தாழ்த்திக்  கொண்டிருக்கிறார்கள் . எனவே நாமும் இலக்கு வைத்து படித்தால் முன்னேற முடியும் நாம் பெரும் பதவிகளை அடைய முடியும்.  இதற்கான சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்...

பெரும் வல்லரசாக இருந்த கலீஃபா உமர் ரலி அவர்களுடைய ஆட்சி காலத்தில் பார்லிமெண்டில் சட்ட ஆலோசகர்கள் & சட்டம் இயற்ற கூடியவர்கள் இடம் பெற்றிருந்த பெரும் வயதுடைய முதியவர்களுக்கு மத்தியில் ஒரு சின்னஞ்சிறு பையன் இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள் . காரணம் அவர் பெற்ற அந்த கல்வியினால் மட்டுமே.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ، فَقَالَ بَعْضُهُمْ: لِمَ تُدْخِلُ هَذَا الفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ؟ فَقَالَ: «إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ» قَالَ: فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِي مَعَهُمْ قَالَ: وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ مِنِّي، فَقَالَ: مَا تَقُولُونَ فِي إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ، وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا حَتَّى خَتَمَ السُّورَةَ، فَقَالَ بَعْضُهُمْ: أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا، وَقَالَ بَعْضُهُمْ: لاَ نَدْرِي، أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا، فَقَالَ لِي: يَا ابْنَ عَبَّاسٍ، أَكَذَاكَ تَقُولُ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَمَا تَقُولُ؟ قُلْتُ: هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ: إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ فَتْحُ مَكَّةَ، فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ: فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا. قَالَ عُمَرُ: «مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ»

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4294.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

அன்று மட்டுமல்ல இதோ இன்றும் உண்டு.
கல்வியால் உயர்ந்து பெரும் பதவிகளை கட்டி ஆள்வது என்பது தொன்மையான ஒரு செய்தியல்ல . இன்றைய காலத்திலும் பாரத நாட்டில் நாம் காண முடியும்.

முதலாவது : ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். தனது படிப்பாலும் தொடர் முயற்சியாலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உயர் பதவியை அடைந்து முதல் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பினார் இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவர் என்ற உயர் பதவியை அடைந்தார்.

இரண்டாவது : ஜாகிர் ஹூஸைன் (Zakir Hussain, 8 பிப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
ஜாகிர் ஹுஸைன், இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ,உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
https://ta.m.wikipedia.org.

மூன்றாவது : மௌலானா அபுல் கலாம் ஆஜாத்  முஹியத்தீன் அகமது (11 நவம்பர் 1888 – 22 பிப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முஸ்லிம்அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவர்.
இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பதவியில் 1947 – 1958 வரை இருந்தார்.


நான்காவது : பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956)  தாழ்தப் பட்டு ஒதுக்கப்பட்ட கீழ்சாதி வர்க்கதினர் இந்தியாவின் சட்டம் ஏற்றும் சட்டத்துரை நிபுணராக ஆனார் டாக்டர் அண்ணல் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

கல்வியால் ஆட்சியாளர்களை இயக்க கூடியவர்களாக மட்டுமல்ல ஆட்சி பீடத்தை அலங்கரிக்க கூடிய பாக்கியம் பெற முடியும்

(ஆடு மாடு) ஒட்டகம் மேய்க்க கூட லாயக்கில்லாதவன் தகுதியற்றவன் என்று பெற்ற தாய் தகப்பனால் முத்திரை குத்தப் பட்ட ஒருவர் (உமர் ரலி அவர்கள்) உலகையே கட்டியாளும் பேரரசராக ஆனார் . அது அவர் பெற்ற கல்வியின் காரணமாக

عَنْ عُمَرَ، قَالَ: كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ وَهِيَ مِنْ عَوَالِي المَدِينَةِ وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ اليَوْمِ مِنَ الوَحْيِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ،

'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். அவரின் முறை வந்தபோது என்னுடைய அன்சாரித் தோழர், சென்றுவிட்டு வந்த என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். 'அவர் அங்கே இருக்கிறாரா?' என்றும் கேட்டார். நான் பதறிப்போய் வந்தேன். அப்போது அவர் (நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரை விவாகரத்துச செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) 'ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறது' என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். 'நபி(ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'எனக்குத் தெரியவில்லை' என்றார். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'தங்களின் துணைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டீர்களா?' என்று நின்ற நிலையில் கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லையே' என்றார்கள். உடனே நான் 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று சொன்னேன்' என உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 89.
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

கல்வியை படிப்பதற்காக சொந்த தொழிலில் கூட ஓரங்கட்டிவிட்டு படித்ததால் மிகப்பெரிய அரசராக ஆனார்கள்.

கல்வியின்றி இறைதியானமோ பணமோ பதவியோ பலன் தராது. அதுவே தண்டனை-கஷ்டம் வந்து சேரவோ . கேலிக்கூத்துக் உள்ளாகும் நிலைக்கோ தள்ளி விட்டு நமக்கு எதிராகவே அமைந்து விடலாம்.

கல்வியின்றி தியானம் A.

2482 - ﺣﺪﺛﻨﺎ ﻣﺴﻠﻢ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ ﺑﻦ ﺣﺎﺯﻡ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻴﺮﻳﻦ، ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻛﺎﻥ ﺭﺟﻞ ﻓﻲ ﺑﻨﻲ ﺇﺳﺮاﺋﻴﻞ ﻳﻘﺎﻝ ﻟﻪ ﺟﺮﻳﺞ ﻳﺼﻠﻲ، ﻓﺠﺎءﺗﻪ ﺃﻣﻪ، ﻓﺪﻋﺘﻪ، ﻓﺄﺑﻰ ﺃﻥ ﻳﺠﻴﺒﻬﺎ، ﻓﻘﺎﻝ: ﺃﺟﻴﺒﻬﺎ ﺃﻭ ﺃﺻﻠﻲ، ﺛﻢ ﺃﺗﺘﻪ ﻓﻘﺎﻟﺖ: اﻟﻠﻬﻢ ﻻ ﺗﻤﺘﻪ ﺣﺘﻰ ﺗﺮﻳﻪ ﻭﺟﻮﻩ اﻟﻤﻮﻣﺴﺎﺕ، ﻭﻛﺎﻥ ﺟﺮﻳﺞ ﻓﻲ ﺻﻮﻣﻌﺘﻪ، ﻓﻘﺎﻟﺖ اﻣﺮﺃﺓ: ﻷﻓﺘﻨﻦ ﺟﺮﻳﺠﺎ، ﻓﺘﻌﺮﺿﺖ ﻟﻪ، ﻓﻜﻠﻤﺘﻪ ﻓﺄﺑﻰ، ﻓﺄﺗﺖ ﺭاﻋﻴﺎ، ﻓﺄﻣﻜﻨﺘﻪ ﻣﻦ ﻧﻔﺴﻬﺎ، ﻓﻮﻟﺪﺕ ﻏﻻﻣﺎ ﻓﻘﺎﻟﺖ: ﻫﻮ ﻣﻦ ﺟﺮﻳﺞ، ﻓﺄﺗﻮﻩ، ﻭﻛﺴﺮﻭا ﺻﻮﻣﻌﺘﻪ، ﻓﺄﻧﺰﻟﻮﻩ ﻭﺳﺒﻮﻩ، ﻓﺘﻮﺿﺄ ﻭﺻﻠﻰ ﺛﻢ ﺃﺗﻰ اﻟﻎﻻﻣ، ﻓﻘﺎﻝ: ﻣﻦ ﺃﺑﻮﻙ ﻳﺎ ﻏﻻﻣ؟ ﻗﺎﻝ: اﻟﺮاﻋﻲ، ﻗﺎﻟﻮا: ﻧﺒﻨﻲ ﺻﻮﻣﻌﺘﻚ ﻣﻦ ﺫﻫﺐ، ﻗﺎﻝ: ﻻ، ﺇﻻ ﻣﻦ ﻃﻴﻦ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த 'ஜுரைஜ்' என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். 'நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?' என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), 'இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே' என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், 'நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்' என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, 'இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்' என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), '(இன்ன) இடையன்' என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், 'உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்' என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், 'இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்' என்று கூறிவிட்டார்.
ஸஹீஹ் புகாரி : 2482.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்.

இறைவனுக்கு பிறகு தாய் தந்தைக்கு எந்தளவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளாததால் ஜுரைஜ் (ரஹ்) என்ற இந்த மாமனிதர் பெரும் துன்பத்திற்கு உள்ளார்.


கல்வியின்றி தியானம் B.

5063 - ﺣﺪﺛﻨﺎ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺟﻌﻔﺮ، ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﻤﻴﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ اﻟﻄﻮﻳﻞ، ﺃﻧﻪ ﺳﻤﻊ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻳﻘﻮﻝ: ﺟﺎء ﺛﻼﺛﺔ ﺭﻫﻂ ﺇﻟﻰ ﺑﻴﻮﺕ ﺃﺯﻭاﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻳﺴﺄﻟﻮﻥ ﻋﻦ ﻋﺒﺎﺩﺓ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻠﻤﺎ ﺃﺧﺒﺮﻭا ﻛﺄﻧﻬﻢ ﺗﻘﺎﻟﻮﻫﺎ، ﻓﻘﺎﻟﻮا: ﻭﺃﻳﻦ ﻧﺤﻦ ﻣﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻗﺪ ﻏﻔﺮ ﻟﻪ ﻣﺎ ﺗﻘﺪﻡ ﻣﻦ ﺫﻧﺒﻪ ﻭﻣﺎ ﺗﺄﺧﺮ، ﻗﺎﻝ ﺃﺣﺪﻫﻢ: ﺃﻣﺎ ﺃﻧﺎ ﻓﺈﻧﻲ ﺃﺻﻠﻲ اﻟﻠﻴﻞ ﺃﺑﺪا، ﻭﻗﺎﻝ ﺁﺧﺮ: ﺃﻧﺎ ﺃﺻﻮﻡ اﻟﺪﻫﺮ ﻭﻻ ﺃﻓﻄﺮ، ﻭﻗﺎﻝ ﺁﺧﺮ: ﺃﻧﺎ ﺃﻋﺘﺰﻝ اﻟﻨﺴﺎء ﻓﻼ ﺃﺗﺰﻭﺝ ﺃﺑﺪا،
ﻓﺠﺎء ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﻟﻴﻬﻢ، ﻓﻘﺎﻝ: «ﺃﻧﺘﻢ اﻟﺬﻳﻦ ﻗﻠﺘﻢ ﻛﺬا ﻭﻛﺬا،
ﺃﻣﺎ ﻭاﻟﻠﻪ ﺇﻧﻲ ﻷﺧﺸﺎﻛﻢ ﻟﻠﻪ ﻭﺃﺗﻘﺎﻛﻢ ﻟﻪ، ﻟﻜﻨﻲ ﺃﺻﻮﻡ ﻭﺃﻓﻄﺮ، ﻭﺃﺻﻠﻲ ﻭﺃﺭﻗﺪ، ﻭﺃﺗﺰﻭﺝ اﻟﻨﺴﺎء، ﻓﻤﻦ ﺭﻏﺐ ﻋﻦ ﺳﻨﺘﻲ ﻓﻠﻴﺲ ﻣﻨﻲ»

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5063.
அத்தியாயம் : 67. திருமணம்

இம்மூவரும் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதைப்பற்றி அறிவின்றி வணங்கியதால் செய்த வணக்கங்கள் தவறானது என கண்டிக்கப்பட்டார்கள்.

கல்வியின்றி பணமோ பதவியோ பயனில்லை.
வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க நீரின் மேல் பரப்பில் தெர்மாகூல் அட்டைகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தெர்மாகூல் அட்டைகளை மிதக்க விட்டனர். ஆனால் அந்த அட்டைகள் சிறிது நேரத்திலேயே காற்றில் பறந்து கிழிந்தது. மேலும் பல அட்டைகள் கரையோரம் ஒதுங்கியது.
(இது சுமார் பத்தர இலட்சம் ரூபாய் செலவு.)
https://www.google.com/amp/s/www.dailythanthi.com/amp/News/State/2017/04/22115926/Vaigai-dam-Prevent-evaporation-of-water-Project.vpf

கல்வியறிவு இல்லாததால் பெரும் பதவியில் இருந்த சிலர் நகைப்புக்கு உள்ளானார்கள் கேவலப்படுத்த பட்டார்கள்.

எனவே விண்ணுயர உயர்த்தக்கூடிய இந்த கல்வியைக் கற்று ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கக்கூடிய பெரும் பதவிகளையும் ஆட்சியைப் பிடிக்கக் கூடிய ஒரு அதிகாரியாகவும் அதுபோன்று மறுமையில் மிகப்பெரிய நன்மைகளை அடைய கூடிய நல்ல பாக்கியம் தரக் கூடிய மக்களாக ஆக்கி வைப்பானாக... ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.