வியாழன், 14 நவம்பர், 2019

இறை இல்லங்களை பேணுவோம்.


இறை இல்லங்களை பேணுவோம்.
******************************************
قول الله عز وجل :
"وأن المساجد لله فلا تدعوا مع الله احدا

قول النبي صلى الله عليه وسلم  :
٩- [عن عمرو بن عبسة:] من بنى لله مسجدا ليُذكرَ اسمُ اللهِ فيهِ، بُنِيَ له بيتٌ في الجنةِ، ومن أعتقَ نفسا مسلمةً، كانت فديتهُ من جهنمَ، ومن شابَ شيبةً في سبيلِ اللهِ، كانت له نُورا يومَ القيامةِ"
البغوي (٥١٦ هـ)، شرح السنة ٥/٢٥٥ • حسن غريب • أخرجه الترمذي (١٦٣٥) مختصراً، والنسائي (٣١٤٢) بنحوه، وأحمد (١٩٤٤٠) باختلاف يسير.

புகழனைத்தும் அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் சுப்ஹானஹூ தஆலா  ஒருவனுக்கே! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அகிலத்துக்கு அருட்கொடையாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் சத்தியத்தின் பாதுகாவலர்களான ஸஹாபாக்கள், அவர்கள் வழி நடந்த நல்லடியார்கள், நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்...

உலகத்தில் முதன் முதலில் கடல் நுரைகளை ஒன்றிணைத்து இறைவன் படைத்தது ஒரு பள்ளிவாயிலின் நிலத்தை தான்... திருமறை குர்ஆன் சான்று பகர்கிறது...

إِنَّ أَوَّلَ بَيۡتٖ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكٗا وَهُدٗى لِّلۡعَٰلَمِينَ
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் 3:96)

٣- [عن عبدالله بن عباس:] "إنَّ أولَ لمعةٍ في الأرضِ موضعَ البيتِ، ثم مُدَّتْ منها الأرضُ؛ وأولُ جبلٍ  وُضِعَ  على  وجهِ الأرضِ أبو قبيسٍ، ثم مُدَّتْ منهُ الجبالُ"
الذهبي (٧٤٨ هـ)، ميزان الاعتدال ٢/٥٧٩ • [فيه] عبد الرحمن بن علي القرشي فيه جهالة، قاله العقيلي

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்தார்கள் ; பூமியில் படைக்கப்பட்ட முதல் பகுதி பைதுல்லாஹ்வின் இடம்' பிறகு அங்கிருந்து பூமி முழுக்க நீட்டப்பட்டது; பூமியின் மீது ஊன்றப்பட்ட முதல் மலை அபூகுபைஸ் மலையாகும் பிறகு அதிலிருந்து மலைகள் நீட்டப்பட்டது"...

وقد قال الإمام أحمد « 5/150 » حدثنا سفيان عن الأعمش عن إبراهيم التيمي عن أبيه عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أي مسجد وضع أول قال المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال أربعون سنة قلت ثم أي قال ثم حيث أدركتك الصلاة فصل فكلها مسجد" (وأخرجه البخاري)

ஹஜ்ரத் அபூதர் ரலி அவர்கள் அறிவித்தார்கள். " அல்லாஹ்வின் தூதரே!
முதன்முதலில் இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்ட மஸ்ஜித் எது? என்று நான்  கேட்டேன்.  அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபாவை சுற்றியுள்ள மஸ்ஜித்) என்று.
அதற்குப் பிறகு எது என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் மஸ்ஜிதுல் அக்ஸா(பைதுல் முகத்தஸ்) என்று. இரண்டிற்கும் மத்தியில் எவ்வளவு காலம் இடைவெளி இருந்தது என்று நான் கேட்டேன் அதற்கு நபியவர்கள் நாற்பதாண்டு காலம் என்று பதிலளித்தார்கள். அதற்கு பிறகு எது என்று கேட்டேன் அதற்கவர்கள் உனக்கு எங்கெல்லாம் தொழுகை நேரம் வருமோ அங்கெல்லாம் தொழுது கொள் எல்லாம் மஸ்ஜித் தான் என்று கூறினார்கள்.
(நூல்: புஹாரி)

இந்த ஹதீஸில் முதல் மஸ்ஜித் "மஸ்ஜிதுல் ஹராம்" என்ற தகவலோடு பூமி அனைத்தும் இறைவனுக்கு சொந்தம் எனவே எந்த இடத்திலும் இறைவனை தொழும் பள்ளிவாயிலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவுறுத்தலும் உள்ளது.

وزعم السدي أنه أول بيت وضع على وجه الأرض مطلقاً

وقال القاسمي رحمه الله: ذكر بعض المفسرين أن المراد بالأولية كونه أولاً في الوضع والبناء، ورووا في ذلك آثاراً منها أنه تعالى خلق هذا البيت قبل أن يخلق شيئاً من الأرضين، ومنها أنه تعالى بعث ملائكة لبناء بيت في الأرض على مثال البيت المعمور، وذلك قبل خلق آدم، ومنها أنه أول بيت وضع على وجه الماء عند خلق السماء والأرض، وأنه خلق قبل الأرض بألفي عام...

இமாம் ஸுத்தி(ரஹ்) இந்த ஆயத்திற்கான விளக்கத்தில் பூமியின் மேல் பரப்பில் படைக்கப்பட்ட முதல் வீடே "பைதுல்லாஹ்"
தான் என்கிறார்கள். மேலும் காசிமீ (ரஹ்)
இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக சில குர்ஆன் விரிவுரையாளர்களின் கூற்றுக்களை முன் வைக்கிறார்கள். இவ்வுலகில் முதலில் படைக்கப்பட்ட நிலமும், கட்டிடமும் கஃபா தான், இதற்கு ஆதாரமாக "பூமியில் எந்த பொருட்களையும் படைப்பதற்கு முன்பே கஃபா படைக்கப்பட்டது என்றும், அல்லாஹ் மலக்குகளை வானில் உள்ள "பைதுல் மஃமூர்" பள்ளியை போல பூமியில் ஒரு பள்ளிவாயிலை கட்ட அனுப்பி வைத்தான் அது ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னால் மேலும் பூமியை படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்" போன்ற அறிவிப்புகளை ஆதாரமாக சொல்கிறார்கள்.

உலகில் அல்லாஹ்வின் ரஹ்மத் பைதுல்லாஹ்வின் மீது இறங்கி அங்கிருந்து உலகில் உள்ள எல்லா பள்ளிவாயில்களுக்கும் பங்கு வைக்கப்படுகிறது... அல்லாஹ்வின் கருணை இறங்கும் பள்ளிவாயில்களை பேணி பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாய கடமையாகும்.

وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا
"அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.(அல்குர்ஆன் - 72:18)

٢- [عن أبي هريرة:] مَن بنى للهِ بيتًا يُعبَدُ فيهِ مِن مالٍ حلالٍ؛ بنى اللهُ له بيتًا في الجنَّةِ مِن دُرٍّ وياقوتٍ"(رواه ابن حبان في «المجروحين» (١/٣٧٢)

ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது " யார் அல்லாஹ்விற்காக ஹலாலான பொருளில் அவனை வணங்குவதற்கான
வீட்டை எழுப்புவாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் முத்துக்களாலும் பவளக்கற்களினாலுமான வீட்டை எழுப்புவான்... (நூல் : இப்னு ஹிப்பான்)

இந்த மஸ்ஜித்களை எழுப்புபவர்கள், பராமரிப்பு செய்து பாதுகாக்கும் நிர்வாகத்தினர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ فَعَسَىٰٓ أُوْلَٰٓئِكَ أَن يَكُونُواْ مِنَ ٱلۡمُهۡتَدِينَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
(அல்குர்ஆன் 9:18)

மஸ்ஜித்கள் இன்றைய காலத்தில் நிறைய உருவாக்கப் படுகின்றன இன்னும் சொல்லப் போனால் தேவையை மிஞ்சிய ஆடம்பரம் செய்து உருவாக்கப்படுகின்றது என்கினும் அதைப் பாதுகாப்பதில் குறிப்பாக அவற்றை நிர்வாகம் செய்வதில் மிகுந்த அலட்சியம் காட்டப்படுகிறது. மஸ்ஜித்களை நிர்வகிக்க தகுதியான நபர்களால் பெரும்பான்மையான மஸ்ஜித்கள் நிர்வகிக்கப்படுவதில்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இக்காலத்தில் அதற்கான தகுதியாக சமூக அந்தஸ்தும், பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருப்பதையே நாம் அளவுகோளாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறையச்சமும், வணக்கங்களில் பேணிக்கையும், இறைவனைத் தவிர யாருக்கும் அஞ்சாத துணிவும் உள்ளவர்களே அந்த இறை ஆலயங்களை நிர்வகிக்க தகுதியானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

இறை இல்லங்களை கைப்பற்றி அவற்றை மாற்றியமைக்க சூழ்ச்சிகள் செய்யப்படும் இக்கால கட்டத்தில் நாம் இதில் கூடுதல் கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம். யார் முதவல்லியாக இருந்தால் நமக்கென்ன என்று நாம் ஒதுங்கிக் கொள்ள இது ஒன்றும் தனிச் சொத்தல்ல...

மாறாக இறைவனை வணங்குவதற்கு மட்டுமே எழுப்பப்படும் மஸ்ஜித் அது எழுப்பப்பட்டது முதல் உலக அழிவு நாள் வரை மஸ்ஜிதாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எனவே தான் கட்டிடங்களுக்கு மேல் எழுப்பப்படும் தொழுமிடங்களை நாம் மஸ்ஜித் என்று சொல்வதில்லை... அது ஒரு தொழுமிடம் எவ்வாறு நம் வீட்டில் ஒரு அறையை தொழுவதற்காக ஏற்படுத்துகிறோமோ அது போலத் தான். அது நாளை வேறு இடமாக மாற்றப்படலாம்.

ஆனால் மஸ்ஜித்களை அவ்வாறு நாமும் மாற்ற முடியாது வேறு யாராவது மாற்ற முனைந்தால் அதற்கு அனுமதிக்கவும் முடியாது...

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் நமது அலட்சியமும் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பாபர் மஸ்ஜித் இடிப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் ஒருவரின் கூற்று...

பாபர் மஸ்ஜிதை இடிக்க முஸ்லிம்களும் தானே காரணம்..!

பாபர் மஸ்ஜிதின் நடு கோபுரத்தை இடித்தவர்களில் ஒருவரான முஹம்மது ஆமிர் (பல்பீர் சிங்) அவர்கள் சென்னை வந்திருந்தபோது பேசியது..

அல்லாஹ்வின் பள்ளியை இடித்த சங்பரிவார்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ, அதில் சிலபங்கு முஸ்லிம்களுக்கும் உண்டு.

ஏனெனில் இது அல்லாஹ்வின் பள்ளி. அவன்தான் நம்மை படைத்தான். அவனை வணங்கி, அவன் கட்டளைப்படி வாழ்வதே நம் வாழ்வின் நோக்கம்.. என்பதையெல்லாம் நீங்கள் எங்களுக்கு கூறவில்லை.

எனவே இடித்தவனுக்கு அதில் எவ்வளவு பங்குள்ளதோ, அதேபோல் சத்தியத்தை மறைத்த உங்களுக்கும் அதில் சிலபங்கு உள்ளது.

மேலும் அவரது உரையில் அங்கு வந்திருந்த முஸ்லிம்களை பார்த்து சில கேள்விகளை கேட்டார்...

# நான் இஸ்லாத்தை ஏற்ற 23 ஆண்டுகளில் என்னுடைய சட்டை 'ஜுப்பா'வாக மாறிவிட்டது.
ஆனால் உங்களில் பலர் ஸஜ்தா செய்தால், இடுப்பு தெரியும் அளவிற்கு குட்டையான ஆடைகளையே அணிந்துள்ளீர்களே! ஏன்..?

# நான் இஸ்லாத்தை ஏற்ற 23 வருடத்தில் என்னிடம் நீண்ட தாடி வந்துள்ளது.
உங்களில் பலரின் முகத்தில் தாடியே இல்லையே! ஏன்..?

பதில் கூறமுடியாமல் அங்கு வந்திருந்த பலரின் தலை கீழே குனிந்தது.

மேலும் முஹம்மது ஆமிர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற இந்த சில ஆண்டுகளில், அழைப்பு பணியை தனது அன்றாட பணியாக ஆக்கிக் கொண்டார்.

2016 வரை 5600க்கும் அதிகமானோர் அவர் மூலம் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

பிறந்ததிலிருந்து முஸ்லிமாக உள்ள நாம், இதுவரை எத்தனை பேருக்கு இந்த சத்திய இஸ்லாத்தை எடுத்து சொல்லியிருப்போம்..?

குறைந்தபட்சம் உடன் பழகும் மக்களுக்காவது உண்மையை கூறுவோம்‌.
விளங்குகிறாரோ இல்லையோ.. விரோதியாக மாறாமலாவது இருப்பார்கள்.

நாளை மறுமையில் "இறைவா! இந்த முஸ்லிமுடன் தான் ஒன்றாக படித்தேன், இவருடன் தான் தினமும் பழகினேன், இவர் என் உற்ற நண்பர்..
ஆனால் ஒருநாள் கூட எனக்கு இந்த சத்திய மார்க்கத்தை இவர் எடுத்து சொல்லவில்லை என்றால்..

என்ன பதில் சொல்வோம் நம் எஜமானனிடம்..?

இழந்தது போதும்..
இனியாவது தொடர்வோம் அழைப்பு பணியை..!

மார்க்கத்தில் சொல்லப்பட்ட நல்ல விஷயங்களை நமக்குள் மட்டும் பரிமாறிக் கொள்வதால் இந்த மார்க்கத்தின் மகத்துவம் பல மக்களுக்கு தெரியாமலே வாழ்ந்து வருகிறார்கள்... இன்னொரு புறம் இம்மார்க்கம் குறித்து கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு பிற மக்களின் உள்ளங்களில் நஞ்சு விதைக்கப் படுகிறது இச்சூழலில் நாம் மஸ்ஜித்களை பாதுகாப்பதும்ஷரீஅத் சட்டப்படி வாழ்வதும் பெரும் சவாலாகிக் கொண்டிருக்கிறது...

எனவே மஸ்ஜித்களை பாதுகாக்க சில திட்டங்களை தீட்டி செயல்படுத்து வேண்டியது அவசியமாகிறது.
அவைகளில் சில...

1 . இஸ்லாத்தின் மகத்துவத்தை மாற்று சமுதாய மக்களின் உள்ளங்களில் பதியச் செய்வது.

2 . மஸ்ஜித்களை நிர்வகிக்க தகுதியான நபர்களை தெரிவு செய்வது.

3 . மஸ்ஜித்களை பாதுகாக்க தகுதியான  சட்ட ஆலோசகரை ஒவ்வொரு மஸ்ஜிதிலும் ஏற்பாடு செய்வது.

4 . குறைந்தபட்சம் உள்ளூர் அரசியல் அதிகாரத்தில் நம்மவர்கள் இருப்பது.
மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களாக நம்மவர்களை தேர்ந்தெடுப்பது.

5 . மஸ்ஜித்கள் உள்ள மஹல்லாகளில் நம் செல்வாக்கை உறுதி செய்வது.

6 . மஸ்ஜித்களின் மராமத்து பாதுகாப்பு பணிக்காக ஒரு குழுவை நியமித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவது.

7 . எல்லாவற்றுக்கும் மேலாக மஸ்ஜித்களில் நாம் ஜமாஅத்தாக பேணிக்கையுடன் தொழுவது.

8 . எல்லா நேரங்களிலும் ஒரு காவலாளியை நியமிப்பது.

9 . பள்ளிவாயிலின் மின் சப்ளை, தண்ணீர் சப்ளை உள்ளிட்ட கட்டணங்களை முறையாக செலுத்தி கண்காணிப்பது.

10 . பள்ளிவாயிலுக்கு அடையாளம் தெரியாத நபர் யார் வந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுப்பது.

11 . மஸ்ஜித்களை சுற்றிலும் முஸ்லிம்களின் குடியிருப்புகளை நிரப்பமாக்குவது.

இவைகளைத் தாண்டி இது அல்லாஹ்வின்  பள்ளி என்ற மகத்துவமும், கண்ணியமும் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருப்பது...

இன்னும் பல... இந்த விஷயங்களை ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது.

ஆர் . எஸ். எஸ். அமைப்பின் திட்டம் வெறும் பாபர் மஸ்ஜிதோடு இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வதல்ல இதை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த முதற்கட்ட சோதனை முயற்சி பாபர் மஸ்ஜித்  அவ்வளவு தான்.
மஸ்ஜித்களுக்கு நெருக்கடி தரும் விதமாக வாட்டர் சப்ளை , மின் சப்ளையை நிறுத்தி இடையூறு தருவது, மஸ்ஜித்களின் பாங்கொலி இடையூறு தருவதாக வழக்குகள் பதிவதென்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் மிக முக்கியமான பணியாகும் இதற்கென தனிக் குழு செயல்படுகிறது.

மேலும் அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக வைத்திருப்பது, வணக்க வழிபாடுகளில் சுதந்திரமில்லாத  நிலையை ஏற்படுத்துவது... எனவே அதற்கு தடையாக உள்ள மஸ்ஜித்களையும், ஷரீஅத் சட்டங்களையும், நிர்மூலமாக்குவது...

சுப்ரீம் கோர்டின் தீர்ப்பில் கூட "முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமில்லை" என்று நமக்கே மார்க்கத்தை சொல்லித் தருமளவு அவர்களுக்கு துணிவு வந்து விட்டது. காரணம் பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுக வாய்ப்பிருந்தும் பல காரணங்களை கூறி இருப்பிடத்திலேயே நாம் தொழுது கொள்கிறோம்...

ஆனால் ஜமாஅத்தாக தொழுகை தொழுவதை பல இமாம்கள் வாஜிப் என்று கூறுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஊரில் இருந்து கொண்டு கடமையாக்கப்பட்ட தொழுகைகளை தனித்து தொழுததாக வரலாறு கிடையாது.
தனித்து தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவதற்கு 25 , 27 மடங்கு நன்மை அதிகம் என்று சொல்லப்பட்டது ஜமாஅத் தொழுகையை ஊக்குவிக்கவே!

ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளை தீயிட்டு கொளுத்தி விடலாம் என்று என்மனம் நாடுகிறது என்று கருணையே உருவான நபி ஸல் கூறுகிறார்கள் என்றால் அதன் முக்கியத்துவத்தை என்னவென்று சொல்வது...!

எனவே எதிர்காலம் முஸ்லிம்களுக்கு மிகவும் சவாலானதாகும்... நம் உடமைகளையும், குடும்பத்தையும், ஷரீஅத் சட்டங்களையும் பாதுகாத்திட நெருப்பின் மீது நடைபோட வேண்டும் என்பதை பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்ற சுப்ரீம் கோர்டின் தீர்ப்பும், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவர்களின் வாக்கும் தெளிவுபடுத்துகிறது...

١- [عن أنس بن مالك:] يأتي على النّاسِ زمانٌ الصّابرُ فيهم على دينِه كالقابضِ على الجمرِ (البخاري (٢٥٦ هـ)

"மக்களுக்கு ஒரு காலம் வரும் அப்போது தன் மார்க்கத்தை கடைபிடித்து பொறுமையாக இருப்பது நெருப்புக் கங்கை பிடிப்பது போலாகும்"
(நூல்:புகாரி ஃபீ இலலில் கபீர்)

பாஸிச சக்திகளின் அதிகாரம் இம்மண்ணில் நீடிக்கும் வரை இங்கே நியாயமான தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியாது பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கைகள் அது மூட நம்பிக்கையாக இருந்தாலும் கூட தீர்ப்பில் பெரும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதை இந்நாட்டின் பெரும் நீதிபரிபாலன சபையான ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களின் கடைசி நம்பிக்கையான சுப்ரீம் கோர்டின் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது...

இவ்வுலகமும், அதன் தீர்ப்புகளும் தற்காலிகமானதே! இறைவனின் தீர்ப்பு நாளில் அவனே அதிபதி அவன் தீர்ப்பு மிகவும் நேர்த்தியானது நீதமானது... அங்கே யாரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்... அநீதி இழைத்த யாரும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள்...


ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَـَٔابِ

இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (அல்குர்ஆன் 2:14)

وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.(அல்குர்ஆன் 2: 281)

நம் மார்க்க விழுமியங்களை பாதுகாக்க இப்போதிருந்தே விழிப்புணர்வுடன் செயல்படுவோம்... மஸ்ஜித்களை பாதுகாக்க நம் உயிரையும் தியாகம் செய்திடுவோம்... வல்ல நாயன் அல்லாஹ் அவனது மஸ்ஜித்களையும், மதரஸாக்களையும்,மகாதிப்களையும், இறை தியானக் கூடங்களான ஹான்காகளையும் தன் அருளால் பாதுகாத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்திடுவானாக ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.