سم الله الرحمن
الرحيم.
தற்போதைய சூழலில் குர்பானி பற்றிய முக்கியச் சட்டங்கள்.
***************************************************************
கேள்வி : 1.
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையா?
பதில்:
ஹனஃபீ மத்ஹபின் படி குர்பானி கடமையானவர்கள் குர்பானியை
நிறைவேற்றுவது வாஜிப் என்னும் கட்டாயக் கடமையாகும்.
فتجب
الأضحية علي حر مسلم مقيم موسر عن نفسه لا من طفله شاة أو بدنة"
(الدر المختار ٢/٢٣١)
மற்ற மத்ஹப்களில் குர்பானி சுன்னத் முஅக்கதாவாகும்
கட்டாயமல்ல. எனினும் வசதியுள்ளவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டுமென்று
வலியுறுத்தப்பட்டுள்ளது
قال الأمام الشافعي
رح : "الضحايا سنة لا أحب تركها"
(كتاب الأم :
٢/٢٤٣)
قال الأمام مالك رح
: "الأضحية سنة وليست بواجبة ولا أحب لأحد ممن قوي علي ثمنها ان يتركها"
(الموطأ ٢/٤٨٧)
கேள்வி : 2
குர்பானி யாரின் மீது கடமையாகும்?
பதில் :
ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது யாரின் மீது கடமையோ அவரின் மீது
குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.
அதாவது துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று
நாட்களில் அத்தியாவசியத் தேவைகள் போக எவரிடம் 612.5 கிராம் வெள்ளியோ, 87.5 கிராம் தங்கமோ
அல்லது அவர் குடியிருக்கும் வீடு, வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள், பயன்படுத்தும்
வாகனம் போக, உபரியான மற்ற பொருட்களோ வியாபாரச் சரக்குகளோ, அல்லது பணமோ 612.5 கிராம்
வெள்ளியின் மதிப்பளவு இருந்தால் குர்பானி கடமையாகி விடும்.
وأما شرائط الوجوب :
منها اليسار وهو ما يتعلق به وجوب صدقة الفطر
(الفتاوي الهندية ٥/٢٩٢)
والموسر في ظاهر
الرواية : من له مئتا درهم أو عشرون دينارا أو شيئ يبلغ ذلك سوي مسكنه ومتاع مسكنه و مركوبه
وخادمه التي لا يستغني عنها
( الهندية ٥/٢٩٢)
கேள்வி : 3 .
குர்பானி பிராணியை வாங்கிய பின் அறுக்க முடியாத நிலை
ஏற்பட்டு விட்டால் என்ன சட்டம்?
பதில்:
குர்பானியுடைய மூன்று நாட்களும் முடிந்து விட்டது.
அப்பிராணியை அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் இப்போது அதனை அப்படியே சதகா
செய்து விட வேண்டும். அல்லது அதன் கிரயத்தை சதகா செய்து விட வேண்டும்.
لو اشتري شاة الأضحية
عن نفسه أو عن ولده فلم يضح حتي مضت أيام النحر كان عليه أن يتصدق بتلك الشاة أو
بقيمتها
(الخانية - ٣/٢٤٣)
ان الشاة المشتراة
للأضحية اذا لم يضح بها حتي مضت الوقت يتصدق الموسر بعينها حية كاالفقير (رد
المختار - ٩/٤٦٥)
கேள்வி:4
தன் குர்பானியை நிறைவேற்றும் பொறுப்பை (வெளியூரிலோ
வெளிநாட்டிலோ உள்ள) வேறு ஆளிடம் ஒப்படைக்கலாமா ?
பதில்
ஆம் : தாராளமாக கூடும். தான் வாங்கிய குர்பானிப் பிராணியையோ
அல்லது அதற்குரிய பணத்தையோ வேறொருவரிடம் ஒப்படைப்பது கூடும் .
ثم بعث بها الى
البيت وفي روايه مع ابي..
நபி(ஸல்) அவர்கள் தன் உள்ஹிய்யா ஒட்டகத்தை அபூபக்கர்
சித்தீக் (ரலி) அவரிடத்தில் கொடுத்து மக்காவுக்கு அனுப்பினார்கள் (புகாரி 1699)
ومنها أن تجزئ فيها
النيابة فيجوز للانسان أن يضحي بنفسه وبغيره باذنه (بدائع الصنائع 4/200).
கேள்வி 5.
குர்பானி பிராணியை வாங்கவுமில்லை குர்பானியுடைய நாட்களில்
குர்பானியும் கொடுக்க முடியவில்லையெனில் என்ன செய்வது.
பதில்
குர்பானி கொடுக்க முடியாவிட்டால் அதை அறுக்க
அனுமதிக்கப்பட்ட நாட்கள் கழிந்த பின்பு அதனுடைய விலையை ஸதகா செய்வது வாஜிபாகும்
ولو تركت التضحية
ومضت ايامها تصدق بها حية ناذر۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ الى قوله وإن لم يشتري مثلها حتى مضت
ايامها تصدق بقيمتها لأن الاراقة انما عرفت قربة في زمان مخصوص (فتاوي شامي9/463)
من وجبت عليه
الاضحية فلم يضح حتى مضت أيام النحر فقد وجب عليه التصدق بقيمه شاة (بدائع
الصنائع)4/203
கேள்வி:6
அவ்வாறு சதகா செய்யும்போது முழு ஆட்டுடைய கிரயமா அல்லது
மாடு அல்லது ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்கு விலையா ?
பதில்:
குர்பானி கொடுக்க முடியாததால் அந்த நாட்கள் முடிந்த பின்பு
நடுத்தரமான ஒரு ஆட்டின் விலையை ஸதகா செய்ய வேண்டும் .
பெரிய பிராணியின் ஏழில் ஒரு பங்கு தொகையை ஸதகா செய்வது போதுமாகாது.
அஹ்ஸனுல் ஃபதாவா 7/270 &
ஃபதாவா தேவ்ந்த்15/513 & ஃபதாவா காஸிமிய்யா.
22/243 .244
இதற்குரிய மூல ஆதாரங்கள் முந்திய கேள்வியின் பதிலில்
கூறப்பட்டுள்ளன.
எனினும் சில உலமாக்கள் பெரிய பிராணியின் ஏழில் ஒரு பங்கு கிரயத்தை
ஸதகா செய்வதும் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
(கிஃபாயதுல் முஃப்தி 8/212)
والغنى يتصدق
بقيمتها أي قيمة ما يصلح للتضحية كما في الخلاصه او قيمتة شاة وسط كما في الزاهد
وغيره
الدر المنتقى مع
الجمع
(2/171)
ஆனாலும் அந்த கிரையம் நடுத்தரமான ஒரு ஆட்டின் விலையைவிட
குறையாமல் இருக்க வேண்டும்.
நடுத்தரமான ஆட்டின் விலையைவிட பெரிய பிராணியின் ஏழில் ஒரு
பங்கு தொகை குறைவாக இருக்குமேயானால் அப்போது ஆட்டின் விலையை சதகா செய்வதே
சிறந்ததாகும்.
கேள்வி :7
குர்பானியின் நாட்களுக்கு முன்பே குர்பானிபிராணியின் தொகையை
(ஆடு அல்லது கூட்டு குர்பானி கிரயத்தை) ஸதகா செய்வது
கூடுமா?
பதில்:
கூடாது . ஏனெனில் குர்பானி கடமையானவர் அதன் மூன்று
நாட்களில் குர்பானியை நிறைவேற்றுவது கொண்டு மட்டுமே தன்மீதுள்ள கடமையை
நிறைவேற்றியவராக ஆவார். அவ்வாறின்றி குர்பானியின் நாட்களுக்கு முன்பே குர்பானி பிரானியின்
தொகையை ஸதகா செய்துவிட்டால் அவர்மீதுள்ள குர்பானியின் கடமை நீங்காது.
ومنها لايقوم غيرها
مقامها في الوقت حتي لوتصدق بعين الشاة اوقيمتها في الوقت لايجزئه عن الأضحية لان
الوجوب تعلق بالاراقة والاصل ان الوجوب اذا تعلق بفعل معين انه لايقوم غيره مقامه
كما في الصلاة والصوم وغيرهما (بدائع الصنائع 6/264)
கேள்வி: 8
குர்பானி கொடுப்பது பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான்.
ஆனால் ஏதேனும் காரணத்தால் பெருநாள் தொழுகை
நடைபெறாவிட்டால் குர்பானியை எப்போது நிறைவேற்ற வேண்டும் ?
பதில்:
பெருநாள் தொழுகை கடமையுள்ள ஊராக இருந்து ஏதேனும் காரணமாக
ஈத் தொழுகை நடைபெறாவிட்டால் சூரியன் உச்சி சாய்ந்த பின்னரே குர்பானி
கொடுக்க வேண்டும்.
وأول وقتها بعد
الصلاة ان ذبح في مصر ..... وبعد مضي وقتها لولم يصلوا لعذر
(فتاوي شامي 9/386)
கேள்வி 9
நேர்ச்சையுடைய நிய்யத்துள்ளவர் கூட்டு குர்பானியில்
பங்கு வகிக்கலாமா?
பதில்:
நேர்ச்சையுடைய நிய்யத்துள்ளவர் கூட்டு குர்பானியில்
பங்கு வகிக்கலாம். ஆனால் அவருடைய பங்கின் இறைச்சி
முழுவதையும் ஏழைகளுக்கு மட்டுமே ஸதகா செய்வது வாஜிபாகும்.
وَقَدْ ذُكِرَ فِي
بَعْضِ الرِّوَايَاتِ «عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةٌ
وَعَتِيرَةٌ» وَيَسْتَوِي إنْ كَانَ قَصْدُهُمْ جَمِيعًا التَّضْحِيَةَ، أَوْ
قَصَدَ بَعْضُهُمْ قُرْبَةً أُخْرَى عِنْدَنَا، وَعِنْدَ زُفَرَ لَا يَجُوزُ إلَّا
إذَا قَصَدُوا جَمِيعًا التَّضْحِيَةَ (المبسوط للسرخسى)
கேள்வி 10
ஒரு விரை இருக்கும் ஆட்டை குர்பானி கொடுக்கலாமா?
பதில்:
தாராளமாக கூடும்
இரு விரையும் நீக்கம் செய்யப்பட்ட அல்லது காயடிக்கப்பட ஆடு
குர்பானி கொடுப்பதே கூடும் என்ற சட்டத்தின் அடிப்படையில் ஒரு விரை நீக்கம்
செய்யப்பட்டதும் கூடும்
فعامةُ أهل العلم
على جواز التضحيةِ بالخصي وهو ذاهب الخُصيتين، والموجوء وهو مرضوض الخُصية، وإذا
كانت التضحيةُ بالخصيِّ والموجوء جائزة فالتضحيةُ بذاهبِ إحدى الخُصيتين أو
مرضوضها أولى بالجواز.
وعليه؛ فالتضحيةُ
بما ذكرَ في السؤال جائزةٌ بلا كراهة، فعن أبي رافع قال: ضحى رسول اللّه صلى اللّه
عليه وآله وسلم بكبشين أملحين موجوأين خصيين.
وعن
عائشة قالت: ضحى رسول اللّه صلى اللّه عليه وآله وسلم بكبشين سمينين عظيمين
أملحين أقرنين موجوأين. رواهما أحمد
______________________
ایک خصیہ والے جانور
کی قربانی جائز ہے۔
فتاوی محمودیہ میں
ہے:
’’سوال : ایک
فوطہ والے جانور کی قربانی درست ہے یا نہیں؟
جواب : اس کی بھی
قربانی درست ہے‘‘۔ (۱۷ / ۳۵۳، دار الافتاء جامعہ فاروقیہ کراچی) فقط واللہ اعلم
தொகுப்பு: தாவூதி
ஆலிம்கள் ஃபிக்ஹ் ஆய்வுக்குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.