செவ்வாய், 26 ஜனவரி, 2016

வான் மறை போற்றும் வலிமார்கள்


வான் மறை போற்றும் வலிமார்கள்

22. 01.2016 ஜும்ஆ


أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ 10:62

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 10:62)
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர்.(10:63)
1 . அவ்லியாக்கள் என்றால் யார்?
الولي : هو كل مؤمنٍ تقيٍّ ؛
இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே!
لقوله تعالى : الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ10:63  ## و لقوله تعالى : ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) புரியாமல் இருக்கிறார்கள் . 8:34
எனவே எல்லா நபிமார்களும் அவ்லியாக்களே !                                             எல்லா ஸஹாபாக்களும் அவ்லியாக்களே !                                                             நான்கு இமாம்களும் அவ்லியாக்களே !
@@@@@@@
2 . அவர்களின் அடையாளங்கள்
وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبير، عن ابن عباس قال:
قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا ذُكر الله".
ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا.
யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்.
حديث إبن ماجه 4109 والإمام أحمد  27601 عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ
உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்)கேட்டார்கள் .ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்(ஆகிரத்)நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல் சொன்னார்கள் என்பதாக அஸ்மா (ரலி)அறிவிக்கிறார்கள் .ஹதீஸ் அஹ்மத் இப்னு மாஜஹ் 4109
@@@@@@@
3 . இறை நேசர்களின் அந்தஸ்து..........
[رواه البخاري] 6021   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
ஸஹீஹ் புகாரி:6502 .எவர் என் நேசரை பகைத்துக் கொண்டாரோ அவருடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்.எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை.என் அடியான் நஃபிலான வழிபாடுகளால் என் பக்கம்  நெருங்கி வந்து கொண்டே இருப்பான்.இறுதியில் அவனை  நான் நேசிப்பேன்.அவ்வாறு அவனை  நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற கண்ணாக,அவன் பற்றுகின்ற கையாக,அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம்  நான் அவனுக்கு  பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை.அவரோ மரணத்தை வெறுக்கிறார்.நானும் [மரணத்தின் மூலம்] அவருக்கு கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
1) هذا الحديث أصل في باب ولاية الله تعالى وهو أعظم وأصح حديث خاص بأولياء الله تعالى .
2)
هذا حديث قدسي كبير الشأن :لما اشتمل عليه من أمور عظام توصل إلى درجة الوِلاية الحقة .
யார் என்னுடைய நேசர்களை பகைத்துக் கொள்கிறார்களோ அவர்களோடு போர் செய்வதாக ரப்புல் ஆலமீன் எச்சரிக்கிறான்.
நஃபிலான வணக்கங்களால் ஒரு மனிதன்எப்படிப்பட்ட இறைநெருக்கத்தை பெற முடியும்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
@@@@@@@
4 . அவர்களின் அமல்கள் உன்னதமானது
எந்த அமலையும் அது சின்னது தானே என எண்ணி கை விடமாட்டாங்க . எந்த  தீயதையும் அது  மக்ரூஹ தானே என எண்ணி செய்ய மாட்டாங்க .
صحيح مسلم  1707  عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ
ஸஹீஹ் முஸ்லிம் 1865.                                         அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். இன்றைய தினம்  ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான்என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லைஎன்றார்கள்.                                 **************                                                    நாகூர் ஷாகுல் ஹமீது (ரஹ்) அவர்கள்  தன்  வளர்ப்பு மகனுடன் மூன்று நாள் பேச வில்லை. காரணம் அவர் ஒரே ஒரு வக்தில் தக்பீர் தஹ்ரீமா தவற விட்டார் என்பதுக்காக .
எனவே பீடி சிகரெட் /மூக்கு போடி போடுவது/துறவரம் என்று மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காதவர்கள் எல்லாம் இந்த அவ்லியாக்களின் பதவியை எட்டிப் பார்க்க முடியுமா ?
@@@@@@@
5 . இறை நேசர்களின் வாழ்வினிலிருந்து  படிப்பினை
உண்மையான முஃமின்களைப் பொருத்தவரை  அவர்களின் வாழ்வின் நோக்கம் இறைப்பொருத்தத்தைப் பெறுவது தான் எனவே நம்முடைய முன்மாதிரிகளாக இறை நேசர்கள் திகள்கிறார்கள்....
மனிதன் படைக்கப் பட்ட நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத் தான் என படைப்பின் தத்துவத்தை மனிதகுலத்திற்கு இறை நேசர்கள் ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
6 . இறை நேசர்களின் தீன் பணி
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.(91:9)
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.) 2:129
# நபிமார்களின் உயர்/உயிர் பணியான இந்த மக்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் تزكية உடைய பணியை சிரமேற்று நடைமுறைப்படுத்திய வலிமார்களுடைய பணி எவ்வளவு போற்றத்தகுந்தது #
@@@@@@@
7 . இவ்வுலகில் இறை நேசர்கள்
நபிமார்கள்,ஸஹாபாக்களுக்கு பிறகு நம்முடைய நான்கு இமாம்களும் செய்த   தீன் பணி மெச்சத் தகுந்தது . அவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாக இருக்கிறது.
நான்கு இமாம்களும் ஃபிக்ஹூ சட்டங்களை ஆய்ந்ததோடு, இரவு நேரங்களை இறைவணக்கத்தில் பகலை நோன்புகளிலும் கழித்து வந்தார்கள்
எனவே அல்லாஹ் இவர்களை தன் மார்க்கத்திற்காக கபூல் செய்து கொண்டான்.பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர்களால் தொகுக்கப்பட்ட மார்க்கச்சட்டங்கள் பாதுகாக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
@@@@@@@
8 . நான்கு இமாம்களை தொடர்ந்து பிற இறை நேசர்கள்
1 .  காஜா முஹீனுத்தீன் ஜிஸ்தீ(ரஹ்) அவர்கள் லாஹூரிலிருந்து லக்னோ வந்தடைவதற்குள் அவர்களின் சொல் / செயல் / நன்னடத்தையை பார்த்து மட்டுமே இஸ்லாத்தை தழுவியவர்கள் தொள்ளாயிரம் நபர்கள் .
2 . ஈராக்கிலிருந்த ஷாஹூல் ஹமீது பாதுஷா(ரஹ்) நாடு நாடாக சென்று தீன் பணி செய்து கொண்டே இறுதியாக தன் சீடர்களோடு தமிழகம் வந்து இங்கு அடக்கமானார்கள் .
3 . முஹ்ஹித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)   கொள்ளை அடிப்பதையே தொழிலாக கொண்ட  கொள்ளையர்களை கூட தன்  நன்னடத்தையால் நேர் வழிக்கு பாதை மாற்றி அமைத்து கொடுத்து தூயவர்களாக மாற்றினார்கள் .
இவ்வாறாக ஆன்மீகத்திற்கு இலக்கணம் எழுதிய இவர்களுடைய இரவுகளெல்லாம் பகலாகிப்போனது.  பகலெல்லாம் மார்க்கக் கல்வியை போதிப்பதில் கழித்தார்கள் . தன்னிடம் பயின்றவர்களெல்லாம் இறை நேசர்களாககிட வேண்டுமென அரும் பாடுபட்டார்கள் .
@@@@@@@
9 . அற்புதங்கள்
அற்புதம் அது நபிக்கு ஏற்பட்டால் அது முஹ்ஜிசா .          ஒரு முஃமினுக்கு ஏற்பட்டால் அது கராமத் .               ஒரு காபிருக்கு ஏற்பட்டால் அது இஸ்தித்ராஜ்                  (-விட்டு பிடித்தல்) ஆகும் .
இறை நேசர்களான  ஸஹாபாக்களின் அற்புதங்கள்
صحيح البخاري 567 عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ كَانُوا أُنَاسًا فُقَرَاءَ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَالِثٍ وَإِنْ أَرْبَعٌ فَخَامِسٌ أَوْ سَادِسٌ وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلَاثَةٍ فَانْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشَرَةٍ قَالَ فَهُوَ أَنَا وَأَبِي وَأُمِّي فَلَا أَدْرِي قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لَبِثَ حَيْثُ صُلِّيَتْ الْعِشَاءُ ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى تَعَشَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنْ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ قَالَتْ لَهُ امْرَأَتُهُ وَمَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ أَوْ قَالَتْ ضَيْفِكَ قَالَ أَوَمَا عَشَّيْتِيهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ قَدْ عُرِضُوا فَأَبَوْا قَالَ فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ فَقَالَ يَا غُنْثَرُ فَجَدَّعَ وَسَبَّ وَقَالَ كُلُوا لَا هَنِيئًا فَقَالَ وَاللَّهِ لَا أَطْعَمُهُ أَبَدًا وَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلَّا رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا قَالَ يَعْنِي حَتَّى شَبِعُوا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ مِنْهَا فَقَالَ لِامْرَأَتِهِ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لَا وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الْآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلَاثِ مَرَّاتٍ فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنْ الشَّيْطَانِ يَعْنِي يَمِينَهُ ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَصْبَحَتْ عِنْدَهُ وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ فَمَضَى الْأَجَلُ فَفَرَّقَنَا اثْنَا عَشَرَ رَجُلًا مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ أَوْ كَمَا قَالَ
A .  ஸஹீஹ் புகாரி: 602 .                                     அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரு(ரலி) அறிவித்தார்.  திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்! எனக் கூறினார்கள். அபூ பக்கர்(ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர்.
(வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும இருந்தோம் என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார்.
அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர்.  உங்கள் விருந்தினரைவிட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?“ என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூ பக்ர்(ரலி), “அவ(விருந்தின)ர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?“ என்று திருப்பிக் கேட்டார்கள். உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்என்று மனைவி கூறினார்.
(என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.  அறிவிலியே!“ “மூக்கறுபடுவாய்!என ஏசினார்கள் . பிறகு மகிழ்வற்ற நிலையில் சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிடமாட்டேன்என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள் .
நாங்கள்(-விருந்தினர்)உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள்.
அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூ பக்கர்(ரலி) பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?“ என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள்.  அதற்கவர் என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள்.
பின்பு நபி(ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள் . காலை வரை அது அங்கேயே இருந்தது.  எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.
 موطأ مالك 1242 عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ
كَانَ نَحَلَهَا جَادَّ عِشْرِينَ وَسْقًا مِنْ مَالِهِ بِالْغَابَةِ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ وَاللَّهِ يَا بُنَيَّةُ مَا مِنْ النَّاسِ أَحَدٌ أَحَبُّ إِلَيَّ غِنًى بَعْدِي مِنْكِ وَلَا أَعَزُّ عَلَيَّ فَقْرًا بَعْدِي مِنْكِ وَإِنِّي كُنْتُ نَحَلْتُكِ جَادَّ عِشْرِينَ وَسْقًا فَلَوْ كُنْتِ جَدَدْتِيهِ وَاحْتَزْتِيهِ كَانَ لَكِ وَإِنَّمَا هُوَ الْيَوْمَ مَالُ وَارِثٍ وَإِنَّمَا هُمَا أَخَوَاكِ وَأُخْتَاكِ فَاقْتَسِمُوهُ عَلَى كِتَابِ اللَّهِ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا أَبَتِ وَاللَّهِ لَوْ كَانَ كَذَا وَكَذَا لَتَرَكْتُهُ إِنَّمَا هِيَ أَسْمَاءُ فَمَنْ الْأُخْرَى فَقَالَ أَبُو بَكْرٍ ذُو بَطْنِ بِنْتِ خَارِجَةَ أُرَاهَا جَارِيَةً
الشرح : قال السبكى:- عن ما سبق وبه كرامتان احدهما:- اخبار انه يموت فى ذالك المرض حيث قال :- انما هو اليوم مال وارث الثانية :- اخباره بمولود يولد به ، وهو جارية (( بنت )
2. ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள்  தனது அன்பு மகள் ஆயிஷா ரலி அவர்களுக்கு பேரீத்தம்பழ தோட்டமொன்றை (தற்காலிக உபயோகம் செய்ய ) அன்பளிப்புச் செய்திருந்தார்கள். மரண வேளையில் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து நான் இந்த நோயில் மரணித்துவிடுவேன் , நான் அன்பளிப்புச் செய்த அந்த தோட்டத்திலிருந்து உனது இரண்டு சகோதரர்களுக்கும், இரண்ட சகோதரிகளுக்கும்,பங்கு தர வேண்டுமென வஸிய்யத் செய்தார்கள். ஹழ்ரத் ஆயிஷா ரலி அவர்கள் தந்தையே எனக்கு அஸ்மா என்ற ஒரு சகோதரி தானே இருக்கிறார்,மற்றொருவர் யார் என கேட்க சொன்னார்கள் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்    தனது மனைவியின் வயிற்றிலிருக்கும் குழந்தை அது பெண் குழந்தை என கருதுகிரென் .
எனவே அந்த பெண் [சிசுவு]க்கும் தன் சொத்திலிருந்து பங்கு தர வேண்டுமென தெளிவுபடுத்தினார்கள்.
நவீன கண்டுபிடிப்புகள் எட்டிப்பார்த்திராத காலத்தில் ஆன்மீக ஞானத்தால் அந்த உயரத்திற்கு அவர்களால் செல்ல முடிந்தது.மேலும்தான் இந்த நோயில் மரணித்துவிடுவேன் . இன்றைய தினத்திலிருந்து இது என் வாரிசுகளின் சொத்து   எனக்கூறியது.
 உமர் (ரலி)கராமத் من كرامات عمر ابن الخطاب رضى الله عنه
http://library.islamweb.net/newlibrary/display_book.php?flag=1&bk_no=132&ID=3462
1- عن قيس بن حجاج عمن حدثه قال :- لما افتتحت مصر اتى اهلها عمرو بن العاص حين دخل بؤونة من اشهر العجم فقالوا ايها الامير لنيلنا هذا سنة لا يجرى الا بها ………. فكتب عمرو الى عمر ابن الخطاب رضى الله عنهما بذالك ، فكتب له :- انك قد اصبت بالذى فعلت ؛ وانى قد بعثت اليك ببطاقة داخل كتابى ؛ فألقها فى النيل ، فلما اخذ عمرو البطاقة فإذا هى فيها (( من عبدالله عمر ابن الخطاب امير المؤمنين الى نيل مصر :-
اما بعد ، فإن كنت تجرى من قبلك ومن أمرك فلا تجر ، فلا حاجة لنا فيك، وان كنت تجرى بأمر الله الواحد القهار وهو الذى يجريك فنسأل الله أن يجريك .
 قال :- فألقى البطاقة فى النيل فأصبحوا يوم السبت وقد أجرى الله النيل ستة عشر ذراعا فى ليلة واحدة ، فكتب الله تلك السنة عن أهل مصر الى اليوم.
2- ومن كراماته انه وقعت النار فى بعض دور المدينة فكتب عمر رضى الله عنه على خرقة يا نار اسكنى بإذن الله ، فألقوها فى النار فانطفأت فى الحال.
3- ومن كراماته ما قاله امام الحرمين رحمة الله عليه فى كتابه (( الشامل )) إن الارض زلزلت فى زمن عمر ابن الخطاب رضى الله عنه - فحمد الله وأثنى عليه والارض ترتجف وترتج ثم ضربها بالدرة ، وقال :-قرى ، ألم أعدل عليك، فاستقرت من وقتها.
4- ومن كراماته أنه قال لرجل :- ما اسمك ؟ قال :- جمرة، قال:- ابن من ؟ قال:- ابن شهاب ، قال:- ممن؟ قال من الحرقة؟ قال :- أين مسكنك ؟ قال :- الحرة، قال:- بأيها ؟ قال:- بذات لظى فقال عمر رضى الله عنه :- أدرك أهلك فقد احترقوا فكان ذالك
5- وعن كراماته قال الفخر الرازى :- روى أن رسول ملك الروم جاء الى عمر فطلب داره ، فظن أن داره مثل قصور الملوك ، فقالوا :- ليس له ذالك وانما هو فى الصحراء يضرب اللبن ، فلما ذهب الى الصحراء راى عمر رضى الله عنه قد وضع درته تحت راسه ونام على التراب فعجب الرسول من ذالك ، وقال إن أهل الشرق والغرب يخافون من هذا الانسان وهو على هذه الصفة ثم قال فى نفسه :- ان وجدته خاليا فأقتله وأخلص الناس منه فلما رفع السيف أخرج الله من الارض أسدين فقصداه ، فخاف وألقى السيف من يده وانتبه عمر رضى الله عنه ولم ير شيئا فسأله عن الحال فذكر له الواقعة وأسلم
1 . எகிப்தில் நைல் நதி வறட்சியான போது உமர் (ரலி) நதிக்கு ஒரு கடிதம்: நதியே நீ சுயமாக ஓடிக் கொநிருந்தால் நீ எங்களுக்கு தேவையே இல்லை . அல்லாஹ் கட்டளைப் படி ஓடினால் நான் அல்லாஹ் இடம் துஆ-வேண்டுகிறேன் நீ ஓட வேண்டும் என கடிதம் எழுதி அனுப்பி அதை அந்த நதியில் போடுங்கள் என்றார் . அவ்வாறே செய்யப் பட்டது . நதியும் நீரால் நிரம்பி ஓடத் துடங்கியது .
2 . மதீனாவில் தீ பிடித்த போது அல்லாஹ்வின்  அனுமதியைக் கொண்டு அடங்கு எனக் கூறி தீயை அணைத்தது.
3 . பூமி குலுங்கிய போது  நான் உன் மீது நீதம் செலுத்தவில்லையா எனக் கூறி அதை சாந்தப்படுத்தியது.
4 . ஒரு மனிதனின் குடும்பப் பெயரைக் கேட்டு விட்டு உன் வீடு  தீ பிடிக்கப் போகிறது  உன் குடும்பத்தினரைக் காப்பாற்று எனக் கூறியது.
5 . அயல் நாட்டுத் துதராக வந்த எதிரிகளில் ஒருவன் உமர் ரலி அவர்கள் மரத்திற்கு கீழ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது சமயம் பார்த்து அவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் நெருங்கிய போது திடீரென 2 சிங்கங்கள் குறுக்கிட்டு அவனை துரத்தியது    நடுங்கிப்   போன அந்த மனிதர் இந்த அற்புதத்தை பார்த்து இஸ்லாத்தை தழுவினார். என்பது போன்ற எண்ணற்ற வரலாற்று  அற்புதங்கள் உண்டு.
 உஸ்மான் (ரலி)கராமத் من  كرامات عثمان رضي الله عنه
http://library.islamweb.net/newlibrary/display_book.php?flag=1&bk_no=132&ID=3462
ذكر النيسابوري في تفسيره حيث قال : ( وأما عثمان فعن أنس قال : مررت في طريق فوقعت عيني على امرأة ثم دخلت على عثمان فقال : ما لي أراكم تدخلون علي وآثار الزنا عليكم؟! فقلت : أوحي نزل بعد رسول الله صلى
الله عليه وسلم ؟ فقال : لا ولكن فراسة صادقة ) ..
அதே போல ஹஜ்ரத் உஸ்மான் ரலி அவர்கள் சபைக்கு வந்த சிலர்கள் குறித்து விபச்சாரத்தின் பிரதிபலிப்பு அவர்களிடம் தென்படுவதாக கூறினார்கள். விசாரித்த போது ஒருவர் வழியில் பார்த்த ஒரு பெண்ணின் அழகை சிந்தித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. நபிக்குப் பின்பும் வஹீ வருகிறதா ?என எல்லோரும் ஆச்சரியப் பட்டு போனார்கள்
@@@@@@@
10 . அவ்லியாக்களின் வாய் மொழியும் துஆ
நல்லடியார்கள் ஒன்றை வாய் மொழியாக சொன்னாலும் அதையும் அல்லாஹ் துஆ வாக ஏற்று அவ்வாறே நடக்க செய்கிறான் .
صحيح البخاري 2703عن أنس أَنَّ الرُّبَيِّعَ وَهِيَ ابْنَةُ النَّضْرِ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا الأَرْشَ، وَطَلَبُوا العَفْوَ، فَأَبَوْا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُمْ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ يَا رَسُولَ اللَّهِ، لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ: «يَا أَنَسُ كِتَابُ اللَّهِ القِصَاصُ»، فَرَضِيَ القَوْمُ وَعَفَوْا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ» زَادَ الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، فَرَضِيَ القَوْمُ وَقَبِلُوا الأَرْشَ
صحيح مسلم 4754 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ
புகாரி 2703: அதே போல ஹஜ்ரத் அனஸ் ரலி அவர்களின் சிறிய தந்தை அனஸ் இப்னு நள்ர் ரலி அவர்கள் தன் சகோதரியின் பல் பழிக்குப் பழியாக உடைக்கப்படவிருந்த போது அல்லாஹ்வின் மீது ஆணையாக  தன் சகோதரியின் பல்உடைக்கப்படாது எனக்கூறினார்கள். அல்லாஹ்  அவர்கள் சொன்னதைப் போலவே அந்த மக்களை சுமூக  உடன் படிக்கைக்கு வரச் செய்தான்.அப்போது நபி ஸல் அவர்கள் இறைவனுக்கு நெருக்கமான சில அடியார்கள் உள்ளார்கள்  அவர்கள்  அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொன்னால் இறைவன் அதை நிறைவேற்றி வைப்பான் எனக்கூறினார்கள் .
# அற்புதம் காபிருக்கு ஏற்பட்டால் அது இஸ்தித்ராஜ் (-விட்டு பிடித்தல்) ஆகும் . உ ம் : தஜ்ஜால் மழை பெய் என சொல்வான் . மழை பெய்து விடும் . ஒரு மனிதனை இரண்டாக வெட்டி கொன்று மீண்டும் உயிர் எழுப்புவான்
எனவே அவ்லியா-நல்லடியார் எனில் கண்டிப்பாக அற்புதம் காட்டியே ஆக வேண்டும் என்பதோ அற்புதம் காட்டுபவர் எல்லாம் அவ்லியா என்றோ எண்ணி விடக்கூடாது
@@@@@@@
11 .  இறை நேசர்கள் பெயரால் நடக்கும்சில……
صحيح البخاري427 عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ
ஸஹீஹ் புகாரி : 427. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்என்று கூறினார்கள்.
தீன்விளக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் தெளிவாக இருக்கிறார்கள் .              
ஆனாலும் பாமரர்களில் சிலர் செய்யும் அபத்தம் :                 கப்ரு கட்டுவது / ஸஜ்தா செய்வது / முதல்வரை MP+MLA மூலமாக தானே தொடர்பு கொள்ளமுடியும்? அப்படி போனால் தானே அவர் சீக்கிரம் கோரிக்கை நிறை வேற்றுகிறார் . எனபதாக  அல்லாஹ் & அவ்லியாக்களை பற்றி எண்ணம் .
فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணமாக்காதீர்கள். அ(ல்லாஹ்வுக்குரிய உதாரணத்)தை நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். 16:74
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், "அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவைகளை வணங்கவில்லை" (என்று கூறுகின்றனர்). 39:3
எனவே அவ்லியாக்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை . அதே சமயம் வரம்பை மீறுவது நபி(ஸல்)அவர்கள் கடுமையாக தடுத்த விபரீத செயல்கள் ஆகும் .
அவர்களை விரோதிப்பது அல்லாஹ்வே போர் பிரகடம் செய்யும்  அளவுக்கு ஆபத்தான செயல். எனவே நடுநிலையாக நடந்து அல்லாஹ் எந்த அவ்லியாக்களுக்கு சுபச் செய்தி சொல்கிறானோ அந்த அவ்லியாக்களை பின் பற்றி நடக்க தவ்பீக் தருவானாக .
لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ            
இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும்(அந்த அவ்லியாகலான-) அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு  அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.( 10:64)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.