சோதனையில் சாதனை படைத்தவர்கள் இப்ராஹீம்
(அலை) அவர்கள், நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்.)
قوله تعالى: واذ ابتلي إبراهيم
ربه بكلمات فاتمهن قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي.....
قوله عليه الصلوة والسلام:
ولقد اوذيت في الله وما يؤذي احد .....(رواه الترمذي)
A. ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள்செய்த தியாகங்களை, இறைவனின் சோதனைகளை அவர்கள் சாதனையாக்கிய வரலாற்று உண்மைகளை நாம் நம் வார்த்தைகளால் சொல்வதை விட இறைவனின் வார்த்தைகளால் அதை உள் வாங்குகிற போது அந்த வரலாற்றின் வீரியமும், தாக்கமும் நமக்கு விளங்கும்.
ரப்பு " ஜல்ல ஜலாலுஹூ" திருமறை குர்ஆனில் "இப்ராஹீம் நபியை அவருடைய இறைவன் பல காரியங்களைக் கொண்டு சோதித்தான்
அவர் அவைகளை பரிபூரணப் படுத்தினார்.(வெற்றி கண்டார்) 2:124.
என்று கூறுகிறான்.
எனவே தான் இறைவன் அவர்களை وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً உற்ற தோழமைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
அல்லாஹ்வின் நண்பர் எனும் அந்தஸ்தை பெற எத்தனை சோதனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும் !
நபி இப்ராஹீம் அலை அவர்கள் தங்களின் வாழ்வில் சந்தித்த மூன்றுகட்ட சோதனைகள்
1.தன்னை சோதனைக்கு கொடுத்தார்கள்.
பகுத்தறிவின் தந்தை என்று போற்றப்படும் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் தன்னுடைய இளம் வயதில் அல்லாஹ்வை தேட முற்படுகிறார்கள்.
நட்சத்திரம்,சந்திரன்,சூரியன் போன்ற படைப்புக்களை சிந்தித்து இறுதியில் மறையும் தன்மைகொண்டது இறைவனாக முடியாது, இவைகளை படைத்தவன் ஒருவன் உண்டு என்ற முடிவுக்கு வந்து,ஏகத்துவத்தை இந்த பூமியில் நிலை நிறுத்தினார்கள்.
இனி அடுத்தகட்டமாக தான் அறிந்துகொண்ட ரப்பின்பக்கம் தன் தந்தைக்கு அழைப்பு கொடுத்தார்கள்.அப்போதும் அவர்கள இளம் வயது தான் .
இனி மூன்றாம் கட்டமாக தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு அழைப்பு கொடுக்கிறார்கள். இப்போதும் அவர்கள இளம் வயது வாலிபர் தான் .
இறுதியில் இப்ராஹீம் என்ற இளம் வயது வாலிபரின் வீரியமான தஃவாவின் தாக்கம் நம்ரூத் எனும் அந்நாட்டு மன்னன் வரை அடைந்த போது அவ்வரசன் கொதித்தெழுந்து,பிரமாண்டமான நெருப்புக் குண்டத்தை உருவாக்கி அதில் இப்ராஹீம் அலை அவர்களை தூக்கி எறிய உத்தரவிட்டான் .இப்போதும் அவர்கள இளம் வயது வாலிபர் தான் .
قصص الانبياء لابن كثير : وذلك
أنهم شرعوا يجمعون حطباً من جميع ما يمكنهم من الأماكن، فمكثوا مدة يجمعون له، حتى
أن المرأة منهم كانت إذا مرضت تنذر لئن عوفيت لتحملن حطباً لحريق إبراهيم. ثم
عمدوا إلى جوبة عظيمة، فوضعوا فيها ذلك الحطب وأطلقوا فيه النار فاضطربت وتأججت،
والتهبت وعلا لها شررٌ لم ير مثله قط
ثم وضعوا إبراهيم عليه السلام
في كفة منجنيق صنعه لهم رجل من الأكراد يقال له "هزن
فلما وضع الخليل عليه السلام
في كفة المنجنيق مقيداً مكتوفاً، ثم ألقوه منه إلى النار، قال: حسبنا الله ونعم
الوكيل. كما روى البُخَاريّ عن ابن عبَّاس أنه قال: حسبنا الله ونعم الوكيل، قالها
إبراهيم حين ألقي في النار، وقالها محمد حين قيل له: {إِنَّ النَّاسَ قَدْ
جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُوا حَسْبُنَا اللَّهُ
وَنِعْمَ الْوَكِيلُ، فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنْ اللَّهِ وَفَضْلٍ لَمْ
يَمْسَسْهُمْ سُوءٌ} الآية.
، عن أبي صالح، عن أبي
هريرة قال قال: صلى الله عليه وسلم "لما ألقي إبراهيم في النار قال: اللهم
إنك في السماء واحد وأنا في الأرض واحد أعبدك".
وذكر بعض السلف أن جبريل عرض
له في الهواء فقال: يا إبراهيم ألك حاجة؟ فقال أمّا إليك فلا
அந்த நெருப்பை மூட்ட பல நாட்கள் விறகு சேமிக்கப்பட்டது.
அந்தகாலத்தில் ஒரு பெண் நோய்வாய்பட்டால் நான் குணமானால் இப்ராஹீமை எறிக்க விறகை
சுமப்பேன் என்று நேர்ச்சை செய்வாளாம்.
இறுதியில் நெறுப்பு கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும்
மின்ஜனீக்" எனும்
கருவிமூலம் இப்ராஹீம் அலை அவர்களை தூக்கி வீசினார்கள்நெருப்பில் தூக்கி எறியப்பட்ட இப்ரஹீம் அலை அவர்களிடம் எந்த சலனமுமில்லை,கவலையுமில்லை,பயமுமில்லை.
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று அல்லாஹ்விடம் பொருப்பு ஒப்படைத்துவிட்டு அமைதியானார்கள்.
நெருப்பில் வீசப்பட்டபோது யா அல்லாஹ்!வானத்தில் வணங்கப்படுபவன் நீ ஒருவன் தான்.பூமியில் உன்னை வணங்கும் ஜீவன் நான் ஒருவன் தான் இருக்கிறேன்.என்று துஆச்செய்தார்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஜிப்ரயீல் அலை அவர்கள் காற்றில் தோன்றி இப்ராஹீமே!உனக்கு ஏதேனும் தேவை உண்டா?நான் நிறைவேற்றுகிறேன் என்றபோது உம்மிடம் எனக்கு எந்த தேவையும் இல்லை,படைத்தவனிடம் தான் என்று பதில் கூறியதாக நல்லோர்களில் சிலர் கூறுகின்றனர்.
இறுதியில்,அந்த நெருப்பை சுகம் தரும் பூஞ்சோலையாக அல்லாஹ் மாற்றினான் என்பது நாமறிந்த செய்தி.
இந்த வரலாற்றின் மூலம் ஒரு செய்தி அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது,அது யாதெனில் அல்லாஹ்வுக்காக நாம் எந்த தியாகத்தை செய்தாலும் அதற்கு மிகச்சிறந்த பகரத்தை அல்லாஹ் தருவான்.
ஆடையின்றி நெருப்பில் வீசப்பட்ட இப்ராஹீம் அலை அவர்களுக்கு தான் நாளை மறுமையில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படும் என பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.மேலும் இப்ராஹீம் அலை அவர்கள் நெருப்பில் போடப்பட்டபோது
روى البخاري عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى
الله عليه وسلم أمر بقتل الوزغ، وقال "كان ينفخ على إبراهيم عليه السلام
பல்லி அதை ஊதி அதிகப்படுத்தியது ஆகவே பல்லியை கொல்லுங்கள்
என நபி ஸல் அவர்கள் உத்தரவிட்டார்கள்.(புகாரி)2.தன் பொருளில் சோதிக்கப்பட்டார்கள்:
அல்லாஹ்வுக்காக உடல் வணக்கம் செய்யும் பலர் பொருள் என்று வரும்போது பின்வாங்கிவிடுவர்,இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அவர்கள் வாழ்கை அமைந்தது.
3.தன் குடும்பத்தை சோதனைக்கு கொடுத்தார்கள்:
صحيح مسلم -58 - (2860) عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَامَ
فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا بِمَوْعِظَةٍ،
فَقَالَ: " يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تُحْشَرُونَ إِلَى اللهِ حُفَاةً
عُرَاةً غُرْلًا، {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا
إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104] أَلَا وَإِنَّ أَوَّلَ الْخَلَائِقِ
يُكْسَى، يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ، ………
5493. இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (எங்களுக்கு) அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:
மக்களே! (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை நாம் மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயமாகச் செய்வோம் (21:104).
கவனத்தில் வையுங்கள்! மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள்.................
தவமிருந்து பெற்ற தன் மகனையும், அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற தனது துணைவியையும், இறைவனின் கட்டளையை ஏற்று மனித சஞ்சாரமற்ற அன்றைய மக்கா பாலைவனத்தில் விட்டு திரும்பினார்கள்.
அங்கே அவர்கள் பட்ட சிரமத்தை பொருந்திக் கொண்ட இறைவன் இந்த சமூகத்திற்கு கிடைக்கப் பெறாத" ஜம் ஜம்" நீரூற்றை வழங்கியதோடு இறைவனுக்காக அவர்கள் ஏற்றுக் கொண்ட சிரமங்களை, ஏன்? அவர்களின் அசைவுகளைக் கூட ஹஜ்ஜூடைய கிரியைகளாக்கி கியாமத் வரை வரும் மக்களை பின்பற்றச் செய்து சோதனைகளை பெரும் சாதனையாக மாற்றினான்.
அதற்குப் பிறகும் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள் பருவ வயதை அடைவதற்கு முன்னால் இறைவன் தந்தையையும், மகனையும் சோதித்தான்......
قال الله تعالي: قال يبني اني اري في المنام اني اذبحك فانظر ماذا تري قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين...37:102
(இந்த கேள்வி தன் மகனின் கட்டுப்படும் தன்மையை சோதிக்க)
இஸ்மாயீல் அலை அவர்கள் கூறினார்கள் : தந்தையே தங்களுக்கு ஏவப்பட்டதை செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் பொருமையுள்ளவனாக என்னைக் காண்பீர்.
தவமிருந்து பெற்ற ஆண் மகவை இறைக் கட்டளைக்கு இசைந்து அறுக்கத் துணிந்தார்கள். இப்ராஹீம் அலை அவர்களின் வழிப்படும் தன்மையை பொருந்திக் கொண்ட இறைவன்.
" و ناديناه ان يا ابراهيم قد صدقت الرؤيا انا كذالك نجزي المحسنين".37:104
" நாம் அழைத்தோம் இப்ராஹீமே! நீங்கள் கணவை
மெய்ப் படுத்தி விட்டீர்கள்.
இவ்வாறு தான் நல்லடியார்களுக்கு நாம் கூலி
தருவோம்."
என்று கூறி அதற்குப் பகரமாக சுவனுத்து ஆட்டை அறுக்கச்
செய்து இறைவன் ஒரு பெரிய தியாகச் செயலை நினைவு கூறும் வகையில் நமக்கு குர்பானியை
கடமையாக்கினான். இவ்வாறாக தான் எதிர் கொண்ட எல்லா சோதனைகளையும் சாதனையாக மாற்றியதால் இறை நெருக்கத்தை பெற்று எல்லோருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார்கள்.
கோடான கோடி முஸ்லீம்களின் உள்ளத்திலும் உணர்விலும் கலந்தார்கள்.அவர்களின் வாழ்க்கையிலும், வணக்கத்திலும் இணைந்தார்கள்.
ما كان إبراهيم يهودياً ولا
نصرانياً ولكن كان حنيفاً مسلماً وما كان من المشركين
இப்ராஹீம், யூதராகவோ,கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில்
நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.(அல்குர்ஆன் 3:67)
துல்ஹஜ் மாதத்தில் உலகில் வாழும் முஸ்லீம்கள் ஆற்றும்
விசேஷமான அமல்களுக்கு சொந்தக்காரர் அவர்.திருக்குர்ஆனின் பார்வையில் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள்:
குர்ஆனில் 69 இடத்தில் இப்ராஹீம் என்ற பெயர் வருகிறது.இப்ராஹீம் என்ற பெயரில் தனி சூராவும் உண்டு.
25 சூராக்களில் அவரின் வரலாறு கூறப்படுகிறது.63 வசனங்கள் அவரைப்பற்றி பேசுகிறது.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இறை தூதரின் தியாகவாழ்க்கையை கியாமத்நாள்வரை வரும் மக்களுக்கு பாடமாகவும்,படிப்பினையாகவும் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.
"إن إبراهيم كان امة" நிச்சயமாக இப்ராஹீம் அலை அவர்கள் ஒரு சமுதாயமாக இருந்தார்"
ஒரு சமுதாயம் சேர்ந்து செய்யும் தியாகத்தை தனிமனிதராக அவர் செய்தார்.ஒரு சமுதாயம் சேர்ந்து செய்யும் வணக்கத்தை அவர் தனிஒருவர் செய்தார்.ஒரு சமுதாயத்தின் கட்டுப்பாடு அவரிடம் இருந்தது.(அல்குர்ஆன் 16:120)
"قانتا لله"هதூய்மையான நிரந்தர வணக்கசாலிهஇன்பம் துன்பம்,வெற்றி தோல்வி,சுகம் சந்தோஷம்,போன்ற வாழ்வின் எல்லா தருணங்களிலும் அல்லாஹ்வின் நினைவைவிட்டும் நீங்காதவர். .(அல்குர்ஆன் 16:121)
شاكرا لانعمه....ه
அவனது அருட்கொடைக்கு நன்றி செலுத்துபவர் ( அல் குர்ஆன்-16: 161
நபி ஸல் அவர்களின் பார்வையில் நபி இப்ராஹீம் அலை அவர்கள்:
அல்லாஹுத்தஆலா தன் ஹபீபான முஹம்மத் ஸல் அவர்களை இப்ராஹீம் அலை அவர்களின் மார்க்கத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தையும் பின்பற்ற சொல்லவில்லை.
ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم
حنيفاً '(
முஹம்மதே!) உண்மை வழி யில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப்
பின்பற்றுவீராக!'என்று
உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். .(அல்குர்ஆன்
16:123)
عَنْ أَنَسٍ , قَالَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وُلِدَ لِي اللَّيْلَةَ غُلامٌ
فَسَمَّيْتُهُ بِاسْمِ أَبِي إِبْرَاهِيمَ (رواه مسلم)
எனக்கு நேற்றிரவு ஒரு ஆண் குழந்தை பிறந்தது,அந்தகுழந்தைக்கு என் தந்தை இப்ராஹீம் (அலை)
அவர்களின் பெயர்சூட்டியுள்ளேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.இதன்மூலம் நபி ஸல் அவர்களுக்கு நபி இப்ராஹீம் அலை அவர்களின் மீது எந்தளவு மரியாதையும் அன்பும் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
قال صلى الله عليه وسلم : ( أما إبراهيم فانظروا إلى صاحبكم ) رواه البخاري
நபி ஸல் அவர்கள் மிஃராஜில் நபிமார்களை சந்தித்தநிகழ்வுகளை
குறித்து தம் தோழர்களுக்கு எடுத்துச்சொல்லும்போது,நான் நபி இப்ராஹீம் அலை அவர்களை
சந்தித்தேன்.அவர்கள் தோற்றத்தில் என்னைப்போலவே இருந்தார்கள்.என கூறினார்கள்.
أنا دعوة أبي إبراهيم
(رواه
أحمد (5/262))
நான் என் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால் இங்கு
நபியாக அனுப்பப்பட்டேன் என நன்றியுடன் நாயகம் கூறிய வார்த்தைகளை இங்கு நினைவு
கூறுவது பொருத்தம்.
அவர் வாழும்போது இந்த உம்மத்தை சீர்திருத்தம் செய்ய ஒரு நபி
வேண்டும் என்று துஆச்செய்தவர்
.رَبَّنَا
وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ و
َيُعَلِّمُهُمُ
الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ
الْحَكِيمُ
எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை
அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு
வேதத்தையும், ஞானத்தையும்
கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்
படுத்துவார். நீயே யாவற்றையும் மிகைத்தவன் ஞானம் படைத்தவன் என்றனர். 2:129.
இறுதி உம்மத்தான ஹழ்ரத் முஹம்மத் ஸல் அவர்களின் சமுதாயம்
இப்ராஹீம் அலை அவர்களுக்கு மிக அதிகமாகவே நன்றிகடன் பட்டிருக்கிறது,ஏனென்றால் தவ்ஹீதை ஏற்றுக்கொண்ட
இந்தகூட்டத்திற்கு முஸ்லீம்கள் என்று பெயர் வைத்தவர் அவரே என குர்ஆன் கூறுகிறது.
مِلَّةَ أَبِيكُمْ
إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ ( 22:78)
صحيح البخاري - (3 / 80)
2217 - عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
" هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ بِسَارَةَ، فَدَخَلَ بِهَا
قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنَ المُلُوكِ -[81]-، أَوْ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ،
فَقِيلَ: دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ،
فَأَرْسَلَ إِلَيْهِ: أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ؟ قَالَ:
أُخْتِي، ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ: لاَ تُكَذِّبِي حَدِيثِي، فَإِنِّي
أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي، وَاللَّهِ إِنْ عَلَى الأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي
وَغَيْرُكِ، فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا، فَقَامَتْ تَوَضَّأُ
وَتُصَلِّي، فَقَالَتْ: اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ،
وَأَحْصَنْتُ فَرْجِي، إِلَّا عَلَى زَوْجِي فَلاَ تُسَلِّطْ عَلَيَّ الكَافِرَ،
فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ "…….." فَقَالَتْ: اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ
قَتَلَتْهُ، فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ، أَوْ فِي الثَّالِثَةِ، فَقَالَ:
وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا، ارْجِعُوهَا إِلَى
إِبْرَاهِيمَ، وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ
السَّلاَمُ، فَقَالَتْ: أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الكَافِرَ وَأَخْدَمَ
وَلِيدَةً "
__________
[تعليق مصطفى البغا]
(فغط) ضاق نفسه وكاد
يختنق حتى سمع له غطيط وهو تردد النفس صاعدا إلى الحلق حتى يسمعه من حوله. (ركض
برجله) حركها وضربها على الأرض. (شيطانا) متمردا من الجن. (آجر) هي هاجر أم
إسماعيل عليه السلام. (كبت الكافر) أذله وأخزاه ورده خاسئا. (أخدم وليدة) أعطى أمة
للخدمة والوليدة الجارية للخدمة كبيرة كانت أم صغيرة]
[2492، 3179، 4796، 6550]
@@@@@@@@@
ஹஜ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை
அடைவதற்காக என்னென்ன துன்பங்களை எல்லாம் அடைந்தார்களோ அதில் சிறிதளவும் குறைவில்லாமல்
நமது நபிகள் நாயகம் ஸல் அவர்களும் இறைப் பாதையில் துன்புறுத்தப் பட்டார்கள்.
2472 عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في
الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد ولقد أتت علي ثلاثون من بين
يوم وليلة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا شيء يواريه إبط بلال قال أبو عيسى
هذا حديث حسن صحيح (رواه الترمذي)
இறைப் பாதையில் நான் பயமுறுத்தப் பட்டேன், துன்புறுத்தப் பட்டேன். வேறு யாரும் இந்த
அளவுக்கு துன்புறுத்தப் படவில்லை.
எனக்கும், பிலால்
ரலி அவர்களுக்கும் ஈரக் குலையை நனைக்கும் அளவுக்கு கூட உணவு இல்லாமல் முப்பது
நாட்கள் கழிந்துள்ளது. என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே கூறினார்கள். (நூல்
திர்மிதீ)
என்றால் அவர்கள் எவ்வித சோதனைகளுக்கு
ஆழ்த்தப் பட்டிருப்பார்கள்.
எந்த ஒரு மனிதனும் தான் கொண்ட கொள்கையில் தன்
குடும்பமும், தன்னைச்
சூழ்ந்துள்ள சமூகமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் தான் கொண்ட
கொள்கையில் வெற்றி கண்டதாக சரித்திரமில்லை...!
ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முதன் முதலாக தனது ஏகத்துவ போதனையை எடுத்துரைத்த போது முதல் எதிர்ப்பே தனது பெரிய தந்தை அபூலஹப் மூலம் தான் வந்தது.
ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முதன் முதலாக தனது ஏகத்துவ போதனையை எடுத்துரைத்த போது முதல் எதிர்ப்பே தனது பெரிய தந்தை அபூலஹப் மூலம் தான் வந்தது.
தனக்கு உதவியாக அரணாக இருந்து வந்த தனது
பெரிய தந்தை அபூதாலிப் கூட மக்கா குரைஷி வமிஷத் தலைவர்களின் நிர்பந்தம் மேலிடவே
இந்த கொள்கையை விட்டு விடக் கூடாதா? என்று
வினவினார். ஆனால் நபிகள் கோமான் ஸல் அவர்கள் என் வலது கையில் சூரியனையும்' இடது கையில் சந்திரனையும், கொடுத்தாலும் நான் ஒரு போதும் விட்டு விட
மாட்டேன் என்று கூறினார்கள் .
சோதனையான கால கட்டங்களை தன் மன உறுதியால்
சாதனையாக மாற்றிக் காட்டினார்கள். கவலைக்குரிய வருடம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வரலாற்று
நிகழ்வுகளை பதிவு செய்த எல்லா வரலாற்றாசிரியர்களும் நீக்க மற குறிப்பிட்ட நிகழ்வு
நபிகள் ஸல் அவர்களுக்கு மக்கா கா:.பிர்களால் துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம்
ஆறுதலாக இருந்த அவர்களின் அருமை மனைவி கதீஜா ரலி அவர்களும், அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களும்
மரணித்த வருடம், மேலும்
தாயி:.ப் நகர மக்களின் புறக்கணிப்பும், நோவினையும், சேர்ந்து கொண்ட அந்த ஆண்டை" عام الحزن"
(கவலைகள் நிறைந்த வருடம்) என்று தான் எல்லா வரலாறுகளும்
பதிவு செய்கிறது. அத்தனையிலும் பொறுமை காத்து இறைவனிடம் " நபியே! நீங்கள் மகத்தான
நற்குணம் கொடுக்கப் பட்டுள்ளீர்கள்" என்ற
நற்சான்றிதழையும், மி:.ராஜ்
என்ற விண்ணுலப் பயணத்தையும், பரிசாகப்
பெற்றார்கள்.
ஷூ:.பயே அபூதாலிப்" என்ற இடத்தில் ஊரை விட்டும் ஒதுக்கி வைத்த
போது இலை தளைகளை சாப்பிட்டு வாழ்ந்தும் கொள்கையை விட்டுத் தராமல் சாதனை மேல் சாதனை
படைத்தார்கள்.
மக்காவிலிருந்து தன் சொந்தங்களால்
துரத்தப்பட்ட போதும் தான் ஹிஜ்ரத் செய்த மதீனா மாநகரில் ஒரு இஸ்லாமிய
சாம்ராஜ்யத்தை உருவாக்கி, எதிரிகளின்
எதிர்ப்புகளை வென்றெடுத்து மக்காவையும் வெற்றி கண்டார்கள்.
மக்காவிலிருந்து தன் சொந்தங்களால்
துரத்தப்பட்ட போதும் எதிர்ப்புகள் பலவற்றை போரின் வாயிலாக எதிர் கொண்டார்கள்.
பத்ருப் போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அடைந்த பொழுதிலும், சில போர்களில் தோல்வியும் ஏற்பட்டது. குறிப்பாக உஹது யுத்தத்தில் நபிகள் நாயகம்
ஸல் அவர்களின் உத்தரவை ஸஹாபாக்களில் சிலர் மீறிய போது பெரும் சோதனையை எதிர்
கொண்டார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டது. எழுபதுக்கும்
மேற்பட்ட ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப் பட்டார்கள்.இருப்பினும் அத்தனை சோதனைகளையும்
தாண்டி அடுத்து வந்த யுத்தங்களில் படை பலம்' பணபலத்தை
விட ஈமானிய பலம் பெரியது என்பதை ஸஹாபாக்களுக்கு உணர்த்தி போர்களில் வெற்றி
கண்டார்கள்.
தான் நபித்துவப் பதவியேற்ற போது தன்னைத் தவிர
யாரும் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் வெறும் 23 ஆண்டு
காலத்தில் அரபு தீபகற்பத்தில் இறைமறுப்பாளனும் இல்லாத அளவுக்கு இறைவனின் பேரருளால்
மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள்.
1400 வருடங்கள்
கடந்த பின்னரும் அவர்கள் கொண்டு வந்த கொள்கையை பின்பற்றும் பெரும் சமுதாயம்
இருக்கும் அளவுக்கு தியாகத்தை செய்துள்ளார்கள்.
முடிவுரை:தியாகங்களினால் தான் இவை சாத்தியமானது. இந்த இரு பெரும் நபிமார்களின் வாரிசுகளான இந்த சமூகம் இந்த தியாக வரலாற்றை படிப்பதினால் மட்டும் இந்த உலகில் நிலைபெற முடியாது. மாறாக அந்த தியாகத்தை நடைமுறைப் படுத்தி அவர்களின் சுன்னத்துகளை சிரமேற்று நாம் கடைபிடித்தால் எந்த சூழ்ச்சிகளிலும் நாம் வெற்றி பெறலாம்.
வல்ல ரப்புல் ஆலமீன் ஹஜ், குர்பானி உள்ளிட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றி அவர்களின் அடிச்சுவற்றை பின்பற்றி வாழ்வதற்கு நமக்கு நல்லுதவி புரிவானாக ஆமீன்.