بسم الله الرحمن الرحيم
ஹாஜிகளின் கனிவான கவனத்திற்கு
**********************************************
قال الله تعالي وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ
التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ2:197
قال النبي صلي الله عليه وسلم اللهم انت الصاحب في
السفر والخليفة في الاهل والمال( مسلم)
*********************************************************
தற்காலத்தில் ஹாஜிகள் ஹஜ்ஜூக்குச் செல்ல தயாராகி வருகின்றார்கள் இந்த தருணத்தில் அதுசம்மந்தமான விளக்கங்களை அவர்களுக்கும் மேலும் வருங்காலத்தில் ஹஜ்ஜூச் செய்ய நிய்யத் வைத்துள்ளவர்களுக்கும் ஆர்வத்தை உண்டாக்குவதற்காகவும் அதன் விளக்கங்களை கூறுவது பொருத்தமாகும்.
ஹஜ்ஜூக்கு செல்வதற்கு முன் அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை
@@@@@@@@@@@@@@@
1) தல்பியாவை நன்கு மனனம் செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் ஹஜ்ஜினுடைய சிறந்த அமலே தல்பியாதான்.
2527 - وعن ابن عمر قال : سأل رجل رسول الله - صلى الله عليه
وسلم - فقال : ما الحاج . قال : الشعث التفل فقام آخر ، فقال : يا رسول الله أي
الحج أفضل قال : العج والثج ، فقام آخر فقال : يا رسول الله ما السبيل قال : زاد
وراحلة( رواه في شرح السنة وروى ابن ماجه في سننه إلا أنه لم يذكر الفصل الأخير
நபி ( ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜினுடைய சிறந்த அமல் எது ?என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் தல்பிய்யாதான் ஹஜ்ஜினுடைய சிறந்த அமல் என்று கூறினார்கள்.
5915- صحيح البخاري عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ: ((لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ
شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ
شَرِيكَ لَكَ)). لاَ يَزِيدُ عَلَى هَؤُلاَءِ الْكَلِمَاتِ
5915. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, “லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லப்பைக்க லா ஷரீ(க்)க, ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க“ என்று கூற கேட்டேன். இந்த வார்த்தைகளை விட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை).
தல்பியாவை கூறிய நிலையில் எழுப்பப்படுபவர்
1266- صحيح البخاريٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ- أَوْ
قَالَ فَأَقْعَصَتْهُ- فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: ((اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ
تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ
الْقِيَامَةِ مُلَبِّيًا))
1266. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரின் கழுத்தை முறித்துவிட்டது. (அப்போது நபி(ஸல்) அவர்கள் “அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்...) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.
ஹஜ்ஜூ எல்லா வணக்கங்களை விட ஒரு தனித்துவம் வாய்ந்த வணக்கம் இந்த பயணம் எல்லா பயணங்களை விட ஒரு தனித்துவம் வாய்ந்த பயணம். நம் முன்னோர்கள் ஹஜ்ஜூடைய பயணம் உறுதிசெய்யப்பட்டு விட்டால் அப்பொழுதிருந்தே அதிகம் அல்லாஹ்வை நெருங்க ஆரம்பிப்பார்கள்
இந்த பயணம் வாழ்க்கையில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற பயணம்.
சைய்யிதினா உமர் ( ரலி) கூறினார்கள் மனிதன் செய்கின்ற பயணங்களிலெல்லாம் ஆக சிறந்த பயணம் ஹஜ்ஜூடைய பயணம் என்றார்கள்
2)இந்த பயணத்தைச் செய்யவிருக்கின்றநாம் முதலாவதாக உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும்
*********************************************
ُஅல்லாஹ் திருமறையில் தக்வா என்னும் சாதத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறுகின்றான்.
وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى
وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 2:197)
இஸ்திஃபார் செய்வது
****************************
கறைபடிந்த நம் உள்ளங்களை தூய்மைபடுத்துவதற்கு முதலாவதாக அதிகம் இஸ்திஃபார் செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது இஸ்திஃபார் செய்யனும். குழந்தைகளிடம் நமக்காக பாவ மன்னிப்பு தேடும்படி சொல்லவேண்டும்
உமர் ( ரலி) அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தமக்காக பாவ மன்னிப்பு கேட்கும்படி கூறுவார்களாம் ஏனென்றால் நீங்களெல்லாம் பாவமற்றவர்கள் உள்ளம் தூய்மையானவர்கள் என்பார்களாம்.
அபூஹூரைரா ( ரலி) அவர்களும் இவ்வாரே குழந்தைகளைக் கண்டால் தமக்காக இஸ்திஃபார் செய்யும்படி கூறுவார்கள்.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔ اِنَّهٗ
كَانَ تَوَّابًا
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)
1145-صحيح البخاريِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ
الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي
فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي
فَأَغْفِرَ لَهُ))
1145. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்“ என்று கூறுவான்“. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நல்ல அபிப்பிராயம் கொள்வது
*************************************
நம் உள்ளத்தை சுத்தப்படுத்தக்கூடிய காரியங்களில் இரண்டாவது எல்லா மனிதர்களைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் கொள்ள வேண்டும் உள்ளத்தில் பொறாமை இருக்ககூடாது. பிறரைவிட தம்மை பெரிதாக கருதக்கூடாது.
1569- وعن أَبي هريرة رضي الله عنه: أنَّ النَّبيَّ صلى الله
عليه وسلم قَالَ: ((إيَّاكُمْ وَالحَسَدَ؛ فَإنَّ الحَسَدَ يَأكُلُ الحَسَنَاتِ
كَمَا تَأكُلُ النَّارُ الحَطَبَ)) أَوْ قَالَ: ((العُشْبَ)). رواه أَبُو داود.
6706- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ
قَعْنَبٍ حَدَّثَنَا دَاوُدُ- يَعْنِي ابْنَ قَيْسٍ- عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى
عَامِرِ بْنِ كُرَيْزٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَحَاسَدُوا وَلاَ تَنَاجَشُوا وَلاَ
تَبَاغَضُوا وَلاَ تَدَابَرُوا وَلاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ
وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا. الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ
يَظْلِمُهُ وَلاَ يَخْذُلُهُ وَلاَ يَحْقِرُهُ. التَّقْوَى هَاهُنَا)). وَيُشِيرُ
إِلَى صَدْرِهِ ثَلاَثَ مَرَّاتٍ: ((بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ
أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ
وَمَالُهُ وَعِرْضُهُ)).
5010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள்,
மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்
ஒருமுறை (معروف الكرخ( رح அவர்கள் தங்கள் சீடர்களுடன் கப்பலில் பிரயாணம் செய்கிறார்கள் அப்பொழுது அவ்வழியாக இன்னொரு படகில் சில வாலிபர்கள் கூத்து கும்மாளம் அடித்துக் கொண்டு செல்கிறார்கள் இதைக்கண்ட சீடர்கள் இமாம் அவர்களே இந்த வாலிபர்களின்மீது லஃனத் செய்யுங்கள் எனக்கூறியபோது (معروف الكرخ( رح அவர்கள் கையேந்தி இவ்வாறு துஆச் செய்தார்களாம் யா அல்லாஹ் இவ்வுலகில் இந்த வாலிபர்களை சந்தோஷமாக வைத்தது போல மறு உலகிலும் சந்தோஷமாக வைப்பாயாக ! என்று துஆச் செய்தர்கள். இதைக்கண்ட சீடர்கள் ஏன் இவ்வாறு துஆச் செய்தீர்கள் எனக் கேட்டபோது. யாரையும் தவறான அபிப்பிராயம் கொள்ளக்கூடாது கடைசி நேரத்தில் கூட இவர்கள் திருந்தி நல்லவர்களாக மாறும் வாய்ப்புள்ளது என்றார்கள்.
எனவே புனித பயணம் மேற்கொள்பவர்கள் யாரைப்பற்றியும் தவறான அபிப்பிராயம் கொள்வது போன்ற காரியங்களை விட்டும் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நமக்கு யாருடனாவது பகைமை இருந்தாலும் அதை சரி செய்து கொள்ள வேண்டும் அவருடன் உண்டான பகைமையை நீக்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாமா இப்னு தைமிய்யா அவர்களுக்கு ஒரு எதிரி இருந்தார் .அவர் இறந்த நேரத்தில் இப்னு தைமிய்யாவிடம் சில மனிதர்கள் வந்து உங்களின் எதிரி இறந்து விட்டார் இனி நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்றார்கள் .அதற்கு இப்னு தைமிய்யா அவர்கள் எந்த ஒரு முஸ்லிமுடைய மரணத்தைக் கண்டும் சந்தோஷமடையக் கூடாது.எனக் கூறிவிட்டு மரணித்தவரின் இல்லம் சென்று அவரின் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு மேலும் சொன்னார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்னை உங்கள் தந்தையைப் போன்று நினைத்துக் கொள்ளுங்கள் உங்களின் எந்த தேவையானாலும் என்னிடம் சொல்லுங்கள் என்றார்களாம்.
எனவே நாம் யாருக்காவது நாவினாலோ கரத்தினாலோ ஏதாவது துன்பம் இழைத்திருந்தால் அதற்காக உள்ளப் பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் ஏதோ ஹஜ்ஜூக்குச் செல்கிறோம் என்ற ஃபார்மாலிடிக்காக கேட்கக் கூடாது.
3) இந்த ஹஜ்ஜூடைய பயணம் முடிவானது முதல் நாம் செய்ய வேண்டிய மூன்றாவது காரியம் நம் இபாதத்துக்களை அதிகமாக்க வேண்டும்
***********************************************
நஃபிலான தொழுகை நோன்புகளை நோற்க வேண்டும் தஹஜ்ஜத் தொழுகையை வழமையாக்க வேண்டும் .ஆனால் நாம் விருந்து போடுவதற்குரிய ஏற்பாடு செய்வதிலும் அனைவர்களையும் விருந்துக்கு அழைக்கும் ஏற்பாட்டிலும் ஈடுபட்டு ஃபர்ளுகளைக் கூட விட்டு விடுகின்றோம்.
4) பயணத்தின் மாண்பை அறிவது
*****************************************
ஹஜ்ஜூக்கு முன்னால் நாம் செய்ய வேண்டிய நான்காவது காரியம் இந்த பயணத்தினுடைய மாண்பை அறிவது. நாம் எப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் இது டூர் செல்கின்ற இடமல்ல இறைக்காதலை வெளிப்படுத்தும் இடமாகும்.
அறியாமைக் காலத்தில் கூட தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும்போது மக்காவின் மகிமையைக் கூறி பாலூட்டுவார்களாம்.
ஆரம்ப காலத்தில் இந்த பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தது எவ்வளவு சிரமப்பட்டு மக்காவிற்கு சென்றார்கள் இன்று இப்பயணத்தை அல்லாஹ் எவ்வளவு எளிதாக்கி வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாமா இப்னு சீரீன் ( ரஹ்) அவர்கள் ஒரு முறை ஹஜ்ஜூக்கு சென்ற சமயத்தில் தாங்கள் அருகில் இருக்கக்கூடிய ஒருவர் இப்னு சீரீனைப் பார்த்து எங்கிருந்து வந்திருக்கிறீர் எனக் கேட்டாராம் அதற்கு அல்லாமா அவர்கள் இராக்கிலிருந்து வந்திருப்பதாக கூறுகின்றார்கள் இதனைக்கேட்ட அந்த மனிதர் நீங்கள் மிக அருகில் இருந்துதான் வந்துள்ளீர்கள் எனக்கூறினார். பிரகு இப்னு சீரீன் அவர்கள் அந்த மனிதரிடம் தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்
எனக் கேட்ட போது அவர் சொன்னார் நான் எனது ஊரை விட்டு கிளம்பி ஐந்து வருடங்களாகிவிட்டது இப்பொழுதுதான் இங்கு வந்து சேர்ந்துள்ளேன் என்றார்.
ஒருமுரை வயதான ஒரு பெண்ணும் ஒரு ஆனும் ஹஜ்ஜூக்காக புறப்பட்டு மக்காவிற்கு அருகில் வந்துவிட்டார்கள் ஒரு அரபியிடம் மக்கா எங்கே கஃபா எங்கே எனக் கேட்டுக் கொண்டே வருகின்றார்கள் இதோ சமீபத்தில்தான் இருக்கிறது எனக்கூற திரும்ப திரும்ப மக்கா எங்கே கஃபா எங்கே எனக் கேட்டுக் கொண்டே வருகின்றார்கள் அவர்கள் முகத்தில் கஃபாவைக் கான அவ்வளவு ஆவல் தென்படுகிறது .அவர்களிடம் உள்ள காய்ந்த ரொட்டியை எடுத்து தண்ணீரில் நனைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள் அந்ந அரபி கூறுகிறார் அந்த ரொட்டியைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன் இது பல நாட்களுக்கு முன்பு சுட்டது என்று. பிறகு அவர்களிடம் தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் எனக்கேட்டபோது நாங்கள் எங்கள் ஊரிலிருந்து கிளம்பி இருபது வருடங்கள் ஆகிவிட்டது நாங்கள் இறைச்சி சாப்பிட்டு இருபது வருடம் ஆகிவிட்டது அதன் சிலவுகளை மீதம் செய்து தண்ணீரில் நனைத்து ரொட்டியை சாப்பிட்டுக் கொண்டே இறை இல்லத்தைக் காணச் செல்கின்றோம் என்றார்கள். ஆனால் இக்காலத்தில் ஹஜ்ஜூக்குச் செல்ல உறுதியாண உடனே விருந்துகள் அதிகமாகி விடுகிறது இலகுவான முறையிலும் பயணம் அமைந்து விடுகிறது சில ஹாஜிகள் சின்னச் சின்ன சிரமங்களைக் கூட பொருத்துக் கொள்ளாமல் புலம்புகின்றனர் இவ்வாறு புலம்புவது நன்றி கெட்ட தன்மையாகும்.
பாகிஸ்தானைச் சார்ந்த அல்லாமா ஜூல்பிகார் அஹமத் தாமத் பரகாத்துஹூ அவர்கள் தாங்களின் ஹஜ் விளக்க பயானில் கூறிய ஒரு சம்பவம்
அரபுநாட்டில் எண்னை வளம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அரபுலகில் கடுமையான வறுமை இருந்தது ஹஜ்ஜூக்கு வரக்கூடியவர்களிடம் அரபுநாட்டு குழந்தைகள் சாப்பாடு வாங்கி சாப்பிடுவார்கள். அவ்வாறு ஒருமுறை பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு பெரியவரும் அவரின் துணைவியாரும் ஹஜ்ஜூக்கு சென்றபொழுது அவர்களிடம் ஒரு அரபு சிறுவன் சாப்பிட்டு வந்தான் ஏழுமாத காலம் அவர்கள் அங்கு தங்கிய பிறகு ஊருக்குச் செல்ல நாடுகிறார்கள் அப்பொழுது அந்த சிறுவனை அழைத்து நாங்கள் நாளை ஊருக்குச் செல்கிறோம் என்று சொன்ன பொழுது அவன் முகம் மாறிவிட்டது கவலை தென்பட்டது அதனைக்கண்ட பெரியவர் தம்பி எங்களுடன் பாகிஸ்தான் வருகின்றாயா? எனக்கேட்டார் அங்கு வந்தால் எனக்கு என்ன தருவீர்கள் என்றான் அதற்கு அப்பெரியவர் உணவு தருவோம் உடை தருவோம் விளையாட்டுப் பொருட்கள் தருவோம் என்றார் அதனைக் கேட்டவுடன் அந்தச் சிறுவன் நீங்கள் என்ன கொடுத்தாலும் அல்லாஹ்வின் இல்லம் இந்த புனித கஃபா அங்கு இருக்குமா? இருக்காதே! அல்லாஹ்வின் இல்லம் இருக்கும் இவ்வூரை விட்டு ஒருபோதும் வரமாட்டேன் எனக்கு எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் சரி என்றான். சிறுவனுக்கு இருக்கும் இறையில்லத்தின்மீதுள்ள அன்பை பாருங்கள். ஆகவே இப்படிப்பட்ட மகத்துவமிக்க இறையில்லத்தைக் காணச்செல்கிறோம் என்கின்ற உணர்வு வரவேண்டும் அதன் மகிமையை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தவ்ஃபீக் வேண்டும்
*****************************************
எந்த காரியத்தை நாம் செய்வதானாலும் அல்லாஹ்வுடைய உதவி தவ்ஃபீக் இருக்கவேண்டும் அது இருந்தால்தால் அந்த காரியத்தைச் செய்ய முடியும் அதிலும் குறிப்பாக ஹஜ் உடைய காரியத்தில் அல்லாஹ்வின் தவ்ஃபீக் இல்லாமல் அதைச் செய்ய முடியாது நாம் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டாலும் அரஃபாவில் தங்கினால்தான் ஹஜ் உறுதியாகும்.எனவே அரஃபாவில் தங்கும் வரை யா அல்லாஹ் எனக்கு ஹஜ்ஜூடைய பாக்கியத்தை கொடு என்று துஆச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
25 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு
இலங்கையிலிருந்து ஹாஜிகளின் விமானம் ஒன்று துல்ஹஜ் பிரை 5 ல் புரப்பட வேண்டியது தாமதமாக துல்ஹஜ் பிரை 7 லில் ஜித்தா சென்றது. அங்கு ஹஜ் சம்மந்தப்பட்ட அனைத்து அலுவல்கலும் முடிக்கப்பட்டுவிட்டது விமானம் இரங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது வேறுவழியின்றி அந்த விமானம் இஹ்ராம் கட்டிய ஹாஜிகளுடன் இலங்கைக்கு திரும்பி வந்து விட்டது அவ்வருடம் அந்த ஹாஜிகள் ஹஜ்ஜூ செய்ய முடியவில்லை. எனவே ஹஜ் என்பது அல்லாஹ் உடைய தவ்ஃபீக் ஆகும் இது நம்முடைய பணத்தைக் கொண்டோ அந்தஸ்த்தைக் கொண்டோ அல்ல. இது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் அருளாகும்.
ஒருமுறை ஹஜ்ஜூக்காக மக்காவில் இஹ்ராம் கட்டி மினாவிற்கு செல்வதற்காக ஹாஜிகள் பேருந்திற்காக காத்திருக்கின்றார்கள் பேருந்து வருவதற்கு தாமதமாகின்றது ஒரு ஹாஜி பேருந்து வரும் வரை சற்று நேரம் அரையில் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து படுத்து விட்டார் பேருந்து வந்து விட்டது எல்லோரும் ஏறிச் சென்று விட்டார்கள். லாட்ஜையும் மூடிவிட்டு சென்று விட்டார்கள். இவர் கண் விழித்து பார்கிறார் கதவு பூட்டப் பட்டுள்ளது வேறு எந்த முயற்சியும் பலனழிக்கவில்லை ( செல் போன் இல்லாத காலம்) ஹஜ்ஜூடைய கடமைகளை முடித்து விட்டு ஹாஜிகள் திரும்பி வருகின்றார்கள் அவர்களிடம் தமக்கு ஏற்பட்ட நிலமைகளைக் கூறி கதறி அழுகின்றார். இவர் மக்காவிற்கு சென்று இஹ்ராம் கட்டிய பின்பும் ஹஜ்ஜூ செய்ய முடியவில்லை.எனவே அல்லாஹ்விடம் யா அல்லாஹ் ஹஜ்ஜை நஸீபாக்குவாயாக! என்று துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த பயணத்தில் கஷ்டம் என்பது ஹஜ்ஜினுடைய அம்சங்களில் ஒன்று எந்த சிரமமுமின்றி ஹஜ் செய்ய முடியாது.எல்லா நபிமார்களும் ஹஜ்ஜில் சிரமப்பட்டுள்ளார்கள் பெருமானாரின் ஒட்டகமே ஹஜ்ஜில் காணாமல் போயிருந்தது. நாம் அல்லாஹ்விடம் இந்த பயணத்தை லேசாக்குவாயாக! என்று துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும்.குறிப்பாக ஹஜ்ஜினுடைய ஐந்து நாள் அல்லாஹ்வினுடைய கையில்தான் இருக்கிறது.நாம் திட்டமிட்டபடி அங்கு நடக்காது அல்லாஹ் என்ன நாடியிருக்கிறானோ அதுதான் நடக்கும்.
பயண ஒழுக்கம்
*******************
ஒரு முஸ்லிம் ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கற்றுத் தறுகிறது.அந்த அடிப்படையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக ஹஜ் சம்மந்தமான விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.
ஹஜ்ஜூக்கு முன்னால் தேவையில்லாத சிரமங்களை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.வெளியூருக்கு பிரயாணம் செய்து அனைவர்களிடமும் சொல்லவேண்டும் என்று சிரமம் மேற்கொள்ள வேண்டாம் முடிந்தளவு உள்ளூரில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஹஜ்ஜூக்கு முன்னால் முடிந்தளவு விருந்துகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஹஜ்ஜூக்கு முன்னால் நிறைய பேர் விருந்து போடுகிறார்கள் அதில் மிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள் பெருமானாரின் சுன்னத் என்னவென்றால் பயணத்திலிருந்து திரும்பியபின் விருந்து கொடுப்பதுதான் சுன்னதாகும்.
பயணத்தொழுகை
**********************
பயணத்திற்கு புறப்படும்முன்பு பயணத் தொழுகை தொழுது கொள்ள வேண்டும் பயணம் செய்யக்கூடிய மனிதன் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக தொழுகையைவிட மற்றொன்றை வைத்துவிட்டு செல்ல முடியாது என்று நபி ( ஸல்) கூறினார்கள்.
மேலும் قل ياايها الكافرونசூராவையும் قل هو الله احد சூராவையும் நன்கு தஜ்வீத் முறையில் ஓத கற்றுக் கொள்ள வேண்டும் ஏனென்றால் ஹஜ்ஜினுடை அதிகமான இடங்களில் .தவாஃப் உடைய தொழுகை மற்றும் இஹ்ராமுடைய தொழுகைகளில் இந்த சூராக்களைத்தான் ஓதவேண்டியுள்ளது.
மேலும் வீட்டிலிருந்து புறப்புடும்போது நபி( ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்
اللهم انت الصاحب في السفر والخليفة في الاهل والمال
யா அல்லாஹ் இந்த பயணத்தில் என்னுடைய தோழன் நீதான் என் குடும்பத்திற்கும் நான் விட்டுச் செல்கிற என்னுடைய செல்வத்திற்கும் நீதான் பாதுகாவலன்.
வீட்டிலிருந்து வெளியேறியவுடன் ஏதாவது தர்மம் செய்து கொள்ள வேண்டும்.
ஃபுலைல் இப்னு இயால் ரஹ் கூறுகின்றார்கள் எவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது ஏதாவது தர்மம் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் எல்லா வகையான ஆபத்துக்களை விட்டும் பாதுகாக்கின்றான் என்றார்கள்.
வாகனத்தில் ஏறியவுடன் கீழ் வரும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.
இந்த துஆவை நாவினால் ஓத வேண்டும் வாகனத்தில் பதிவு செய்து ஒதுவது நன்மை அல்ல. நாவினால் ஓதினால்தான் நன்மையாகும்.
****************************************************
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ
وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي
سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ
هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ
الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ
أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ
الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.