بسم الله الرحمن الرحيم
எண்ணம் போல் வாழ்வு .
قال الله تعالي: إِنَّ
اللَّهَ لا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ .
قَالَ رَسُول
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قَالَ اللَّهُ: أَنَا عِنْدَ
ظَنِّ عَبْدِي بِي "
நம்மில் பலர் வாழ்வில் தோல்வி மேல் தோல்வி கண்டு துவண்டு போவதை
அறிவோம். . காரணம் வெற்றிக்காண வழிகளை நழுவ விட்டதால் தான்.
இதோ அதன் வழிகள் A. தவக்குல் (-நம்பிக்கை). B.மனஉறுதி . C.விடா முயற்சி . D.அல்லாஹ்வின் நாட்டம்
இவைகள் ஒரு சேர கிடைத்தால் வெற்றி நிச்சயம் இன்ஷாஅல்லாஹ் .
1.@@@@@@@@
எண்ணம் போல் வாழ்வு
«إِنَّمَا الأَعْمَالُ
بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ
إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى
مَا هَاجَرَ إِلَيْهِ»
1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும்
அவர் எண்ணியதே (-நினைத்ததே) கிடைக்கிறது. .
ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால்
அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார்.
எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து
அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 1. இறைச்செய்தியின் ஆரம்பம்
எனவே நம்மால் முடியுமா / பாஸ் (-வெற்றி) ஆயிடுவேனா / அந்த காரியம் கைகூடுமா
/ கைகொடுக்குமா / ரிசர்வேஷன் கிட்டுமா / பேச்சு வார்த்தை முடிவுக்கு வருமா / கையெழுத்து
கிடைக்குமா என்று நினைத்தால் “(இந்)நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்”. ஏனெனில் உறுதி இழந்து
ஒன்றை செய்தால் அதற்கு அல்லாஹ்வின் உதவி கிட்டாமல் போயிடும்.
ஆகவே தவக்கல் (-நம்ம்பிக்கை) வைத்துவிட்டு என்னால் இதை சாதித்து
காட்ட முடியும் . கண்டிப்பாக கைகூடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டால் வெற்றி
நிச்சயம்.
இதோ ஹதீஸே குத்ஸி
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: " قَالَ اللَّهُ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي "
7505. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன (எப்படி)நினைக்கிறானோ
அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.147
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு.
إِنَّمَا
الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى،
ஸஹீஹ் புகாரி 1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே
அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் நினைத்ததே கிடைக்கும் .
2 . @@@@@@@@
வரலாற்றில் சில சான்றுகள் ..
1 # அபூ ஜஹ்ல் உள்பட பெருந்தறு தலை(வர்)கள் செத்து சவம்
ஆவார்கள். அதுவும் எந்த இடத்தில் சாவார்கள் என்பது வரை அடையாளம் காட்டும் அளவுக்கு
மன உறுதி இருந்ததால் அவ்வாறே நடந்து முடிந்தது .
فَقَالَ عُمَرُ:
إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يُرِينَا مَصَارِعَ
أَهْلِ بَدْرٍ، بِالْأَمْسِ، يَقُولُ: «هَذَا مَصْرَعُ فُلَانٍ غَدًا، إِنْ شَاءَ
اللهُ»، قَالَ: فَقَالَ عُمَرُ: فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا أَخْطَئُوا
الْحُدُودَ الَّتِي حَدَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
5511. அனஸ் பின் மாலிக்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
……….. பிறகு உமர் (ரலி) அவர்கள் கூறலானார்கள்.
பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள்.
"அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்" என்று
குறிப்பிட்டார்கள்.
சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன்
மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக
அவர்கள் மாண்டு கிடந்தனர்……….
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51. மறுமை சுவர்க்கம் நரகம்
2 .# சின்னஞ் சிறார்கள்
இரண்டு பேர்கள் மட்டும் சேர்ந்து ஒரு மிகப் பெரும் அரக்கனான வில்லன் அபூ ஜஹ்லை வெட்டி
வீழ்த்தினார்களே.என்னால் முடியும் என்ற மன உறுதி . எனவே
وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى،
ஒவ்வொருவருக்கும் அவர் நினைத்ததே கிடைக்கும் .
3 .#முந்திய ஆட்சியாளர்கள் சேவை வரி சரக்கு வரி என ஏதோ ஏதோ பெயர்
உளறிக் கொண்டு அநியாயமாக மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்து வந்தார்கள். ஆனால் ஹிஜ்ரி
முதல் நூற்றாண்டின் இறுதியில் வந்த உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சிக்கு
வந்த உடனே (ஜகாத்தை தவிர) எல்லா வரிகளையும் தள்ளுபடி செய்தார்கள் .
அநியாயக்கார பழைய அமைச்சர்கள் அய்யோ அய்யோ... நாட்டு பொருளாதாரம் வறுமை கோட்டுக்கு போயிடுமே என ஒப்பாரி வைத்தார்கள்..
அநியாயமான வரிவம்புகள் வேண்டாம் . நியாயமான வரிகள் மட்டும் வசூலிக்க
வேண்டும். இதில் தான் நாடு வளம் பெறும் என்று தன் நம்பிக்கையோடு- உறுதியோடு சொன்னார்கள்
. புதிய அரசர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் .
இரண்டரை ஆண்டு தான் ஆட்சி செய்தார்கள் . பின்பு இறைவனிடம் சேர்ந்து
விட்டர்கள். அவர்களின் எண்ணம் போல் இரண்டரை ஆண்டு
ஆட்சியில் தன்னிறைவு (-பணக்கார) பெற்ற நாடாக / மக்களாகவும் மாற்றி அமைத்தார்கள்
. ஜகாத் கொடுக்க போனால் அதை வாங்க ஆளில்லை . ஏனெனில் மக்கள் எல்லோரும் பணக்காரர்
ஆகிவிட்டனர்.
எனவே وَإِنَّمَا لِكُلِّ
امْرِئٍ مَا نَوَى، ஒவ்வொருவருக்கும் அவர் நினைத்ததே கிடைக்கும் .
4 .# ஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் வாழ்ந்த தாரிக்
இப்ன் ஜியாத் ரஹ் அவர்கள் சின்னஞ் சிறு படையோடு ஷாம் தேசத்தில் இருந்து பல்லாயிரக்
கணக்கான மையில் சென்று பெரும் சாம்ரஜ்ஜியமான இஸ்பெயின் நாட்டை எதிர்த்து அதை வெற்றி
கொண்டு தன் ஆட்சியில் கீழ் ஆக்கினார்கள்.
எனவே وَإِنَّمَا لِكُلِّ
امْرِئٍ مَا نَوَى،، ஒவ்வொருவருக்கும்
அவர் நினைத்ததே கிடைக்கும் .
5 .# யாகூப் (அலை) அவர்கள் தன் மகன் யூசுப் (அலை) அவர்கள் கண்டிப்பாக திரும்பி கிடைப்பார் என்ற நம்பிக்கை
. முயற்சி எனவே திருப்பி கிடைத்தார்கள் .
يَا
بَنِيَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِنْ
رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ
الْكَافِرُونَ (87)
என் பிள்ளைகளே! நீங்கள் சென்று யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரைப்
பற்றித் தீர விசாரியுங்கள்; அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும்
மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள். (அல்குர்ஆன் : 12:87)
எனவே وَإِنَّمَا لِكُلِّ
امْرِئٍ مَا نَوَى،،
ஒவ்வொருவருக்கும் அவர் நினைத்ததே கிடைக்கும் .
3 . @@@@@@@@
எனவே ஐந்து நேரமும் சரியாக தொழுகனும் . கணவனுக்கு கட்டுப் படனும்.
குர்ஆன் கற்றுக் கொள்ளனும். தினமும் ஓதனும். பீடி சிகரெட் / புறம் பேசுவது கைவிட வேண்டும்
என உறுதி எடுக்க வேண்டும். அது போன்று நினத்தால் நினைப்புக்கே ஒரு நன்மை கிட்டி
விடும். அவ்வாறே செயல் பட்டால் பத்து மடங்காக் பெருகும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَرْوِي
عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللَّهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ
ثُمَّ بَيَّنَ ذَلِكَ، #فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ
يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، #فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ
لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ،
#وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ
يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ
بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً»
6491. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில்
(பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை
என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான்.
அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்)
எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக
அல்லாஹ் பதிவு செய்கிறான்.
அவர் எண்ணியதுடன் அதை செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு
நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும்
அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான்.
ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய நினைத்து , (அல்லாஹ்வை
அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு
முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான்.
எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக
ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும்
அறவுரைகள்
# எனவே உறுதி எடுக்க வேண்டும் . அதை செயல் படுத்த
முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் அது நடக்காது.
إِنَّ اللَّهَ لا
يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில்
அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் : 13:11)
# அமல் செய்ய முயற்சித்தால் கண்டிப்பாக முடியும். என்பதை ரமலானில்
நிரூபித்து காட்டியுள்ளோம்.
5 . @@@@@@@@
அமல்களை சீர் செய்து கொள்ளாமல் அல்லாஹ் மன்னிப்பான் என குருட்டுத்
தனமான நம்பிக்கை கூடாது இப்படி செய்வது முட்டாள் தனம்.
فَخَلَفَ مِنْ
بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا الْكِتَابَ يَأْخُذُونَ عَرَضَ هَذَا الْأَدْنَى
وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِنْ يَأْتِهِمْ عَرَضٌ مِثْلُهُ يَأْخُذُوهُ
أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِيثَاقُ الْكِتَابِ أَنْ لَا يَقُولُوا عَلَى اللَّهِ
إِلَّا الْحَقَّ وَدَرَسُوا مَا فِيهِ وَالدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ
يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ (169)
ஆனால் அந்த முந்தைய சந்ததிகளுக்குப் பிறகு தீயோர் அவர்களின்
பிரதிநிதிகளாய் வந்தார்கள். அவர்கள் இறைமறையின் வாரிசுகளாய் இருந்தபோதிலும் இந்த அற்ப
உலகின் (ஹராமான) ஆதாயங்களைப்
பெறுகின்றார்கள். “நாங்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவோம்” என்றும் கூறுகின்றார்கள்.
பிறகும் அதுபோன்ற ஆதாயங்கள் அவர்களிடம் வரும்போது அவற்றையும்
பாய்ந்து பெறுகின்றார்கள். அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும்
கூறக்கூடாது என்று வேதத்தில் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட வில்லையா? மேலும், வேதத்தில் என்ன (எழுதப்பட்டு)
உள்ளது என்பதை அவர்கள் படித்திருக்கிறார்களே! இறையச்சமுடையோருக்கு மறுமை இல்லமே சிறந்ததாகும்.
இதனைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா?(அல்குர்ஆன்:7:169).
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْكَيِّسُ مَنْ دَانَ
نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ
هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ .
தன் மனதை கண்ரோல் செய்து மரணத்திற்கு பின்னுள்ள வாழ்கைக்காக
எவன் ஒருவன் செயல்படுகிறோனோ அவனே புத்திசாலி.
கட்டுப் பாடின்றி மனம் போன போக்கில் நடந்து விட்டு அல்லாஹ்
மன்னிப்பவன் என்னை மன்னிப்பான் என தப்புக் கணக்கு போடுபவன் முட்டாள் என நபி ஸல்
அவர்கள் கூறினார்கள். நூல் திர்மிதி 2383 அறிவிப்பாளர் ஷத்தாத் (ரலி) அவர்கள்.
6 . @@@@@@@@
நம்மால் முடிந்த வரை நல்அமல் செய்தால் அல்லாஹ் மன்னிப்பான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
(102)
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய
முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக (-கட்டுப் பட்டர்களாக) அன்றி மரணமடைய வேண்டாம். (அல்குர்ஆன் : 3:102)
صحيح مسلم 81 - (2877) عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَبْلَ وَفَاتِهِ بِثَلَاثٍ،
يَقُولُ: «لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللهِ الظَّنَّ»
(நல்அமல் செய்து விட்டு பின்பு) அல்லாஹ் கண்டிப்பாக் மன்னிப்பான் என முழு நம்ம்பிக்கயோடு
தான் இறந்து போக வேண்டும் என நபி ஸல் அவர்கள் சொன்னார்கள். நூல் முஸ்லிம்.அறிவிப்பாளர்
ஜாபிர் ரலி அவர்கள்.
மன உறுதியோடு நல்அமல் செய்து இரு உலகிலும் வெற்றி
பெற்றவர்களாக ஆக்குவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.