குர்பானியின் சட்டங்கள்
******************************
இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டே இரண்டு
பொருநாட்கள் மட்டுமே உள்ளன. அவைகளில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்றுஹஜ்ஜூப்
பெருநாளாகும். இவ்விரண்டு பெருநாட்களும் தியாகத்தை நினைவூட்டும் வகையில்
அமைந்தவையாகும். இந்த வகையில்ஹஜ்ஜூப் பெருநாளில் முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற
சமயத்தவர்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற இப்றாஹீம் (அலை)அவர்களின் தியாகத்தை
ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்தும் வகையில் தகுதியுடைய முஸ்லிம்கள் பலிப் பிராணியை
அறுத்துபலியிட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இதன்படி முஸ்லிம்கள்
வருடா வருடம் கடைபிடிக்க வேண்டியகுர்பானியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும்
முக்கியமானதாகும். இதன் அடிப்படையில் குர்பானியின் சட்டங்களில் சிலவற்றைதங்களின்
கவனத்திற்கு கொணர்கிறேன்.
உழ்ஹிய்யாவின் வரலாறு
********************************
قال الله تعالي : فَلَمَّا بَلَغَ مَعَهُ
السَّعْيَ قالَ يا بُنَيَّ إِنِّي أَرى فِي الْمَنامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ
ماذا تَرى قالَ يا أَبَتِ افْعَلْ ما تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شاءَ اللَّهُ مِنَ
الصَّابِرِينَ (102) فَلَمَّا أَسْلَما وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنادَيْناهُ
أَنْ يا إِبْراهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيا إِنَّا كَذلِكَ نَجْزِي
الْمُحْسِنِينَ (105) إِنَّ هذا لَهُوَ الْبَلاءُ الْمُبِينُ (106) وَفَدَيْناهُ
بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108) سَلامٌ عَلى
إِبْراهِيمَ (109) كَذلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (110) إِنَّهُ مِنْ عِبادِنَا
الْمُؤْمِنِينَ (الصافات : 102 - 111)
37:102. பின் (அம்மகன்)
அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன்.
இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே
செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில்
நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு
நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
37:108. இன்னும்
அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:110. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
37:111. நிச்சயமாக அவர்
முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
உழ்ஹிய்யா(குர்பானி) என்றால் என்ன?
***************************************
அரபு மொழி அகராதியின்படி நன்பகல் நேரத்தில்
பலிப்பிராணியை அறுப்பதற்கு உழ்ஹிய்யா எனப்படும். எனினும் இஸ்லாமியமார்க்கத்தில்
உழ்ஹிய்யா என்பது பெருநாள் அன்று அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் எண்ணத்தில்
ஒட்டகம், மாடு, ஆடுஆகியவற்றில்
அறுக்கப்படும் பிராணிக்கே உழ்ஹிய்யா எனப்படுகின்றது.
உழ்ஹிய்யாவின் சட்டம் என்ன?
***********************************
உழ்ஹிய்யா கொடுப்பது ஹனஃபி மத்ஹபின்படி
வாஜிப் ஆகும். ஷாஃபிஈ மத்ஹபின்படி அது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
. உம் இறைவனை
தொழுது, குர்பானியும்கொடுப்பீராக! (அல்குர்ஆன் - 108 : 02 )
5558- عَنْ أَنَسٍ قَالَ ضَحَّى
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ،
فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ،
فَذَبَحَهُمَا بِيَدِهِ.
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்.நபி(ஸல்)
அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக்குர்பானிகொடுத்தார்கள்.
அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு
அல்லாஹ்வின்பெயர் கூறி,தக்பீர் (அல்லாஹ{ அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை
பார்த்தேன். (புஹாரி,முஸ்லிம்)
1589- عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ
قَالَ أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ
عَشْرَ سِنِينَ يُضَحِّي.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ.
நம்முடைய நபியவர்வகள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்தார்கள் ( திர்மிதி)
இந்த நபிமொழி நபியவர்கள் எந்த ஆண்டும்
குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை எனக்கூறுகிறது. இவ்வாறு தொடர்ந்து வழமையாக நபி(
ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்திருப்பது.குர்பானி வாஜிப் என்பதின் மீது
அறிவிக்கிறது.
مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا
يَقْرَبَنَّ مُصَلَّانَا
"
رواه أحمد في "المسند "
வசதியிருந்தும் குர்பானி கொடுக்காதவர்
நம்முடைய தொழும் இடத்திற்கு வரவேண்டாம் என்று நபி( ஸல்) கூறியுள்ளார்கள்
உழ்ஹிய்யாவின் நிபந்தனைகள்.
***********************************
குர்பானி கொடுப்பதற்கென சில நிபந்தனைகளை
இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அந்நிபந்தனைகள் காணப்படும் முஸ்லிம்கள் குர்பானிகொடுக்க
வேண்டும். அவைகளில்
1. குர்பானி கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க
வேண்டும். முஸ்லிம் அல்லோதோரின் மீது குர்பானி கடமை இல்லை.
2. பருவ வயதை அடைந்தவராகவும்,புத்தி சுவாதீனமுள்ளவராகவும் இருக்க வேண்டும். இதன்படி எவர் பருவ வயதை அடையவில்லையோ, புத்தி சுவாதீனமுள்ளவராக இல்லையோ அவர்கள் மீது குர்பானி கடமை இல்லை.
3. உழ்ஹிய்யா கொடுப்பதற்கான பொருளதார சக்தி
பெற்றவராக இருக்க வேண்டும். இதன்படி துல்ஹஜ் பிறை 10, 11, 12 ஆகியநாட்களில்
வாழ்க்கைக்குரிய அத்தியாவசிய தேவைகள் போக 87: 1/2 கிராம் தங்கம் அல்லது612:1/2 கிராம் வெள்ளி அல்லது அதனுடைய பெறுமானமுள்ள
ரூபாய்களை பெற்றிருப்பவர்மீதும்.இந்தளவு பெறுமானமுள்ள வணிகப் பொருட்களை
பெற்றிருப்பவர் மீதும்.மேலும் இந்த அளவு பெறுமானம் உள்ள ரூபாய் மதிப்பிற்கு அன்றாட
தேவையைவிட கூடுதலான பொருட்களை பெற்றிருப்பவர் மீது குர்பானி கடமையாகும்.
ஜகாத் கடமையாவதற்கும். குர்பானி
கடமையாவதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா?
***************************************
ஆம் இருக்கிறது.ஜகாத்துடைய அடிப்படை நிஸாபு
ஓர் ஆண்டு கையிருப்பில் இருந்தால்தான் கடமையாகும்.
ஆனால் துல்ஹஜ் பிறை 10.11.12 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் ஜகாத்
உடைய நிஸாப் அளவிற்கு தங்கம் வெள்ளி.பணம்.வியாபாரப் பொருட்கள்.கைவசம் இருந்தால்
உடனே குர்பானி கடமையாகிவிடும்.
எந்தெந்த பிராணிகளை உழ்ஹிய்யாவாக கொடுக்க
வேண்டும்?
*********************************************
ஒட்டகம், மாடு, செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு ஆகிய இம்மூன்று வகையான பிராணிகளில் ஏதேனும்
ஒன்றினைஉழ்ஹிய்யாவாக கொடுக்க வேண்டும்.
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا
لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ
فَاِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا وَبَشِّرِ
الْمُخْبِتِيْنَ ۙ
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து
அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச்
செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக)
ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 22:34)
இவ்வசனத்தில் இடம் பெறும்''அல்அன்ஆம்"" எனும் வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை எடுத்துக் கொள்ளும். மேலும் நபி (ஸல்) அவர்களும்,அவர்களின்
தோழர்களும் இம்மூன்று வகைப் பிராணிகளைத் தவிர மற்றவை எதனையும் அவர்களின்
வாழ்நாளில் குர்பானிக்காககொடுத்ததில்லை.
ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆடு போதுமா?
*******************************************
ஷாஃபிஈ மத்ஹபில் ஒரு ஆட்டை ஒருவர்
தமக்காகவும், தம் குடும்பத்தினர்களுக்காகவும் குர்பானியாக
வழங்கலாம்.
1587- حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ
حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ
يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى
عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَ
الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ
وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ
صَحِيحٌ. وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ
مَالِكُ بْنُ أَنَسٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ
وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ: ((هَذَا عَمَّنْ
لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي)). وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ تُجْزِئُ
الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ
الْمُبَارَكِ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ.
ஏனெனில் நபி (ஸல்) அவர்களின்காலத்தில் ஒருவர்
ஒரு ஆட்டை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் குர்பானியாக
கொடுப்பார். பின்னர் (அதனை) அவரும்உண்ணுவார்.மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்பார்
என்று அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா,திர்மிதி)
ஹனஃபி மத்ஹபின்பிரகாரம் ஒரு குடும்பத்தில்
எத்தனை பேர் தனித்தனியாக இந்த நிஸாபின் அளவிற்கு செல்வத்தை பெற்றுள்ளார்களோ அத்தனை
பேரின் மீதும் குர்பானி கடமையாகும்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓர் ஆடு அல்லது மாட்டில் பங்குவைத்து குர்பானி கொடுக்க வேண்டும்.
குடும்பத்தில் அனைவருக்கும் ஓர் ஆடு
போதுமாகாது.அதேசமயம் ஒருவர்மீது மட்டும் குர்பானி கடமையாகி மற்றவர்மீது
கடமையாகவில்லை என்றால் ஒரு ஆடு போதுமாகிவிடும். அவர் தனக்கு கொடுக்கும்
குர்பானியில் கடமையில்லாத மற்றவர்களையும் நன்மையில் சேர்த்துத் கொள்ளலாமே தவிர கடமையில் அறவே சேர்த்துக் கொள்ள முடியாது. ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆடு என்ற நபிமொழிக்கு நம்முடைய இமாம்கள் இவ்வாறுதான் விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தை
ஏழுவரின் சார்பில் குர்பானியாக கொடுக்கலாம்.
1584- عَنْ جَابِرٍ قَالَ نَحَرْنَا مَعَ
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ
عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ.رواه الترمدي
ஜாபிர் (ரழி) அவர்கள்கூறினார்கள்.
ஹுதைபிய்யாவின் வருடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு ஒட்டகத்தை ஏழுவரின்
சார்பாகவும், ஒருமாட்டை ஏழுவரின் சார்பாகவும்
(குர்பானிக்காக)அறுத்தோம். (திர்மிதி)
குர்பானி பிராணியில் கவனிக்கப்பட வேண்டிய
முக்கிய நிபந்தனைகள்
*************************************
1. குர்பானி பிராணி மார்க்கம் நிர்ணயித்துள்ள
வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும். இதன்படி ஒட்டகமாக இருப்பின் அதுஐந்து வயதை
நிரம்பியதாகவும், மாடாக இருப்பின் இரு வயதை நிரம்பியதாகவும், வெள்ளாடாக இருப்பின் ஒரு வயதுநிரம்பியதாகவும், செம்மறியாடாக
இருப்பின் ஒரு வருடமோ அல்லது ஆறு மாதங்களோ பூர்த்தியானதாக இருக்க வேண்டும்.ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5194- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ
حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لاَ تَذْبَحُوا إِلاَّ
مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ)).
ஓர் ஆண்டு பூர்த்தியான ஆட்டையே குர்பானி
கொடுங்கள். அது கிடைக்காத போதுசெம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்)ஒரு
வயதிற்குட்பட்டதை அறுத்து குர்பானி கொடுங்கள். (முஸ்லிம்)
இந்த நபி மொழியில்இடம் பெறும் ''முஸின்னஹ்"" என்பதற்கு ஒட்டகமாக இருப்பின் ஐந்து வயது நிரம்பியது
என்றும், மாடாக இருப்பின் இரண்டு வயதுநிரம்பியது
என்றும், ஆடாக இருப்பின் ஒரு வயது நிரம்பியது என்றும்
பொருளாகும்.
5197- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ
الْجُهَنِيِّ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِينَا ضَحَايَا فَأَصَابَنِي جَذَعٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ
أَصَابَنِي جَذَعٌ. فَقَالَ: ((ضَحِّ بِهِ)).
உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள்கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே
குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு(எனது பங்காக) ஒரு
வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான் அல்லாஹ்வின் தூதரே! ஒரு
வயதுக்குட்பட்டவெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது என்று சொன்னேன். அதற்கவர்கள் அதை
நீர் குர்பானி கொடுப்பீராக என்று கூறினார்கள். (முஸ்லிம்)
2. ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இதன்படி குர்பானிப் பிராணிகள் தெளிவான
குருடாகவோ, தெளிவானநொண்டியாகவோ, தெளிவான நோயுற்றதாகவோ, நன்கு மெலிந்ததாகவோ இருக்கக் கூடாது.
கண் குருடானவைகளை. ஒற்றைக்கண் பார்வை
உள்ளவைகளை.மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட கூடுதலாக பார்வை அற்றவைகளை குர்பானி
கொடுப்பது கூடாது.
காது அறுபட்ட ஆடு மாடுகள்
*********************
மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட கூடுதலாக
காது அறுபட்டவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.பிறப்பிலேயே இரு காதுகள் இல்லாத
வைகளையும்.ஒரு காது இல்லாதவைகளையும் குர்பானி கொடுப்பது கூடாது
விதை அடிக்கப்பட்ட பிராணிகள்
***********************************
விதை அடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி
கொடுப்பது கூடும் என்பது மட்டுமல்ல அது சிறந்ததுமாகும். நபியவர்களும்
விதையடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
எப்பொழுது குர்பானி கொடுக்க வேண்டும்?
**********-******************************
ஹஜ்ஜூப் பொருநாள் தொழுகையை தொழுது
முடித்ததிலிருந்து துல்ஹஜ் பிறை 12
அன்று சூரியன்
மறையும் வரை குர்பானிகொடுக்கலாம்.
5562- حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا
شُعْبَةُ حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ سَمِعْتُ جُنْدَبَ بْنَ سُفْيَانَ
الْبَجَلِيَّ قَالَ شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ
النَّحْرِ فَقَالَ: ((مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا
أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ)).
ஜூன்துப் இப்னு ஸுஃப்யான் அல்பஜலீ
(ரழி)அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் பிறை 10)நாளில் இருந்தேன். அப்போது அவர்கள் பெருநாள் தொழுவதற்கு முன்பே (குர்பானிப்
பிராணியை) அறுத்து விட்டவர் அதன்ஸ்தானத்தில் அதற்கு பகரமாக வேறொன்றை (தொழுகைக்குப்
பின்)அறுக்கட்டும்.(குர்பானிப் பிராணியை) அறுக்காமல் இருப்பவரும்அறுக்கட்டும்
என்று கூறினார்கள்.(புஹாரி)
ஜூபைர் இப்னு முத்இம் (ரழி) அவர்கள்
கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 10,11,12. ஒவ்வொரு நாளிலும் (குர்பானிப் பிராணியை)
அறுக்கலாம். (அஹ்மத்) எனினும் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பெருநாள்தொழுகையை தொழுதப்
பின் குர்பானி கொடுப்பதே மிகச் சிறந்ததாகும்
5560-عَنِ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ
فَقَالَ: ((إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ،
ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ هَذَا فَقَدْ أَصَابَ سُنَّتَنَا،
وَمَنْ نَحَرَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ
النُّسُكِ فِي شَيْءٍ)). فَقَالَ أَبُو بُرْدَةَ يَا رَسُولَ اللَّهِ ذَبَحْتُ
قَبْلَ أَنْ أُصَلِّيَ، وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. فَقَالَ:
((اجْعَلْهَا مَكَانَهَا، وَلَنْ تَجْزِيَ أَوْ تُوفِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ))
. பராஃ(ரலி)
அவர்கள் கூறினார்கள். நாம் முதலில்தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்)
திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடையவழிமுறையைப்
பேணியவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (புஹாரி)
குர்பானி இறைச்சியை பங்கிடும் முறை
***********************************
குர்பானி கொடுப்பவர் அதன் இறைச்சியை மூன்று
பங்குகளாக பிரித்து ஒரு பங்கை தமக்கும், மற்றொரு பங்கை
உறவினர்கள்,நன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கவும், இன்னொறு பங்கை ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது மிகச் சிறந்த பங்கீட்டு
முறையாகும்.மேலும் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதும்
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
**************************************
ﻭﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻌﺸﺮ ﻭﺃﺭاﺩ ﺑﻌﻀﻜﻢ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﻤﺲ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﺑﺸﺮﻩ ﺷﻴﺌﺎ» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ
«ﻓﻼ ﻳﺄﺧﺬﻥ ﺷﻌﺮا ﻭﻻ ﻳﻘﻠﻤﻦ ﻇﻔﺮا» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻣﻦ ﺭﺃﻯ ﻫﻼﻝ ﺫﻱ اﻟﺤﺠﺔ ﻭﺃﺭاﺩ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ
ﻳﺄﺧﺬ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﻻ ﻣﻦ ﺃﻇﻔﺎﺭﻩ» . ﺭﻭاﻩ مسلم
துல்ஹஜ்ஜின் முதல் பிறை துவங்கி விட்டால்
குர்பானி கொடுப்பவர் நகம், முடி முதலிவற்றை குர்பானி கொடுக்கும் வரை
எடுக்கக்கூடாது. இவையாவும் குர்பானி கொடுப்பவர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். இதன்படி செயல்பட்டு அல்லாஹ்வின்அருளைப் பெருவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.