புதன், 16 ஆகஸ்ட், 2017

அந்த 10 நாட்கள்

بسم الله الرحمن الرحيم
அந்த 10 நாட்கள்

وَالْفَجْرِۙ‏ وَلَيَالٍ عَشْرٍۙ‏ (89:1.2)
762- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ)). فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ)). ترمدي
***************************************************
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்தநல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய காலங்களை வழங்கியிருப்பது அவனுடைய மிகப்பெரிய கருணையாகும்.சிறப்புக்குரிய அந்தகாலங்கலாவன:-

1. ரமளான் மாதம்,
2. ரமளானின் கடைசிப் பத்து நாட்கள்.
3. ரமளானின் லைலத்துல் கத்ரு இரவு.
4. ஜும்ஆவுடைய நாள்.
5. ஜும்ஆவுடைய நாளில் இமாம்மிம்பரில் ஏறியது முதல் இறங்குவதுவரை.
6. ஒவ்வொரு நாளும் பிந்திய இரவு.
7. அந்த வரிசையில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்;நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன! அல்லாஹ் கூறுகிறான்
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ
அதிகாலையின் மீது சத்தியமாக:
பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (89:1-2)

அதிகாலையின் மீது சத்தியமாக எனப் பொதுவாக கூறப்பட்டிருந்தாலும் துல்ஹஜ்மாதம் 10 ஆம் நாள் பெருநாள் காலையின் மீது சத்தியமாக என்று பொருள்கொள்ள வேண்டும் என மஸ்ரூக் .முஜாஹித்.முஹம்மது பின் கஅப் போன்ற தாபியீன் விரிவுரையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும். இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக்கூறும் அவசியமில்லை

762- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ)). فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ))رواه . ترمدي
நற்செயல்கள் செய்யப்படும் நாட்களில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைவிட அல்லாஹ்வக்கு பிரியமான நாட்கள் வேறொன்றும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரே! இந்நாட்களின் அமல் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும்  சிறப்பிற்குரியதா எனக் கேட்டனர்.

ஆம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதும் கூட இந்நாட்களின் சிறப்பிற்கு ஈடானது அல்ல என்று கூறிவிட்டு ஆனால் ஒருவர் தனது சரீரத்துடனும்.பொருளுடனும் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டு.உயிரையும். பொருளையும் தியாகம் செய்தவரின்  அமல்களைத் தவிர என்றும் விளக்கமளித்தார்கள்.

துல்ஹஜ் ஆரம்ப நாட்களை விடவும் அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்கள் சிறப்பு வாய்ந்ததாகும்.
****************************************
«969» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ((مَا الْعَمَلُ فِي أَيَّامِ الْعَشْرِ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي هَذِهِ)). قَالُوا وَلاَ الْجِهَادُ قَالَ: ((وَلاَ الْجِهَادُ، إِلاَّ رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ)).
.இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி

மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகள் சங்கமிக்கும் நாட்களாகும்.
***********************************
قال الحافظ ابن حجر العسقلاني ( فتح الباري بشرح صحيح البخاري، 2/534 ): والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه, وهي الصلاة والصيام والصدقة والحج, ولا يتأتى ذلك في غيره.
அல்லாமா இப்னு ஹஜர்(ரஹ்) கூறினார்கள் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து நாட்கள் சிறப்பாக காரணம் அனைத்து முக்கிய வணக்கங்களும்  இந்த நாட்களில் செய்யப்படுகிறது பெருநாள் தொழுகையின் மூலம் தொழுகை என்னும் வணக்கம். 9 ம் நாள் நோன்பு.
ஹஜ்  குர்பானியின் மூலம் ஜக்காத். பிறை 9 ல் தக்பீர் சொல்வதின் மூலம் கலிமா வெளியாகிறது.

துல்ஹிஜ்ஜாவின் பத்து நாட்களில் செய்ய வேண்டிய அமல்கள்:
**************************************
1.  ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவது
1773عن أبي هريرة رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: «العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة» صحيح البخاري:
ஒரு உம்ரா அடுத்து வரும் உம்ராவுக்கிடையே உள்ள குற்றங்களை அழித்து விடும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜூக்கு சுவர்க்கத்தைத்த தவிர வேறு கூலி இல்லை.
والحج المبرور هو الحج الموافق لهدي النبي صلى الله عليه وسلم، الذي لم يخالطه إثم من رياء أو سمعة أو رفث أو فسوق، المحفوف بالصالحات والخيرات.
''ஹஜ்ஜூன் மப்ரூர;”” என்றால் நபிகளாரின் வழிகாட்டுதழின் படி  அமைந்து, பாவங்கள் செய்யப்படாமல், நல்லறங்களால் பாதுகாகக்கப்பட்ட ஹஜ்ஜாகும்.

2.  நோன்பு நோற்பது
************************
5927عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ( صحيح البخاري:)
நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ் கூறுவதாக)கூறினார்கள். ஆதமுடைய மக்களின் ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியது. நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியது. நானே  அதற்கு கூலி வழங்குவேன். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மனமிக்கதாகும். (புஹாரி: 5927)

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ» ترمدي : 749
அரஃபாவின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும். (திர்மிதி: 749)

குறிப்பு : அரஃபா உடைய நாளில் ஹாஜிகள் அல்லாதவர்களே நோன்பு நோற்க வேண்டும்.
2688- عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ. فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ بِعَرَفَةَ فَشَرِبَهُ.( مسلم)
2066. உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாநாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களாஎன்று நபித்தோழர்களில் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். (அன்றைய தினம்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் இருந்தோம். அரஃபாவிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாலிருந்த ஒரு கிண்ணத்தை நான் கொடுத்தனுப்பினேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلاَئِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلاَءِ))رواه مسلم
2623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்  வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்

3.  இந்நாட்களில் நஃபில் வணக்கங்களை அதிகப்படுத்த வேண்டும்
**********************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ  صحيح البخاري : 6502

4.  தக்பீர் தஹ்மீது, தஹ்லீல் அதிகப்படுத்த வேண்டும்.
****************************
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ»
நபி (ஸல்) அவர்கள் இந்நாட்களை விட வேறு எந்த நாட்களில் உள்ள நல்லறங்களும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானதாகவும், பிரியமானதாகவும் இல்லை. எனவே  இந்நாட்களில் அதிகம் தஹ்லீல், தக்பீர் தஹ்மீது சொல்லுங்கள்.(அபூதாவூத்: 2438)

وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ أَيَّامُ الْعَشْرِ، وَالأَيَّامُ الْمَعْدُودَاتُ أَيَّامُ التَّشْرِيقِ.
وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا.
وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ.
(22:28)வசனத்தில்  அறியப்பட்ட  நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்களாகும் என்று இப்னு அப்பாஸ் ரலி கூறுகின்றார்கள்.

இப்னு உமர்(ரலி ) யும்  ,அபூஹீரைரா (ரலி) யும் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து  நாட்களில் கடை வீதிக்கு சென்றால் தக்பீர் சொல்வார்கள்  அதை பார்த்து மக்களும் சொல்வார்கள் நபிலான தொழுகைக்கு பிறகும் முஹம்மது பின் அலி (ரஹ்) அவர்கள் தக்பீர்  சொல்வார்கள்

மஸாயில்:
*************
துல்ஹஜ் மாதத்தில் பிறை 9 ம் நாள் பஜ்ரிலிருந்து 13 ம் நாள் அஸர் வரை தனியாக தொழுதாலும் , இமாம் ஜமாஅத்தாக தொழுதாலும், முஸாபிராக  இருந்தாலும் ஆண்கள் மிதமான சப்தத்துடனும் பெண்கள் சப்தமின்றியும் ஒவ்வொரு  பர்ளு தொழுகைக்கு பின் தக்பீர்  ஒரு முறை சொல்வது வாஜிப் ஆகும். மூன்று முறை சொல்வது முஸ்தஹப்பு ஆகும்.

5.  தர்மம்  அதிகமாக செய்ய வேண்டும்
******************************************
قال الله تعالي : يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ ( 2:254)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللهُ عَبْدًا بِعَفْوٍ، إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللهُ» صحيح البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தர்மம் பொருளாதாரத்தில் எவ்வித குறைவையும் ஏற்படுத்துவதில்லை.

6.  துல்ஹஜ் பிறை 10 வது நாள் மற்றும் அதனை தொடர்ந்து வரும் இரண்டு நாட்கள் குர்பானி கொடுக்க வேண்டும்.
***********************************
1572- ِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ إِنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا))روا الترمدي.
قَالَ أَبُو عِيسَى: وَيُرْوَى عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ((فِي الأُضْحِيَةِ لِصَاحِبِهَا بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ)). وَيُرْوَى: ((بِقُرُونِهَا)).
துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல் வேறொன்றும் இல்லை.நிச்சயமாக அவை கியாம நாளில் தங்களின் கொம்புகளுடனும். உரோமங்களுடனும்.
குழம்புகளுடனும்( நகங்களுடன்) வரும். நிச்சயமாக குர்பானி கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அக்குர்பானி. அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெற்றுவிடுகிறது. எனவே அதனை மனமுவந்து செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ( ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். ( திர்மிதி)

ﻭﻋﻦ ﺃﻡ ﺳﻠﻤﺔ ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﺫا ﺩﺧﻞ اﻟﻌﺸﺮ ﻭﺃﺭاﺩ ﺑﻌﻀﻜﻢ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﻤﺲ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﺑﺸﺮﻩ ﺷﻴﺌﺎ» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻓﻼ ﻳﺄﺧﺬﻥ ﺷﻌﺮا ﻭﻻ ﻳﻘﻠﻤﻦ ﻇﻔﺮا» ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ «ﻣﻦ ﺭﺃﻯ ﻫﻼﻝ ﺫﻱ اﻟﺤﺠﺔ ﻭﺃﺭاﺩ ﺃﻥ ﻳﻀﺤﻲ ﻓﻼ ﻳﺄﺧﺬ ﻣﻦ ﺷﻌﺮﻩ ﻭﻻ ﻣﻦ ﺃﻇﻔﺎﺭﻩ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ
துல்ஹஜ்ஜின் முதல் பிறை துவங்கி விட்டால் குர்பானி கொடுப்பவர் நகம், முடி முதலிவற்றை குர்பானி கொடுக்கும் வரை எடுக்கக் கூடாது. ( ஹனபி மத்ஹபில் எடுக்காமல் இருப்பது முஸ்தஹப்பாகும்)

( மீதம் உள்ள குர்பானியின் சட்டங்களை இன்ஷா அல்லாஹ் வரும் வாரத்தில் வெளியிடப்படும்)

இந்த வணக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இறைவனை நினைவு படுத்துவதும் அவனை நெருங்குவதுமேயாகும்.

தொழுகையில்
*****************
தொழுகையில் இறைவன் நினைவு கூறப்படுவதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي (طه 14)
நோன்பில்
**************
அருள் வேதம் குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் ரமலானில் நோன்பிருந்து இறைவனை நினைவு கூர்ந்து அவனின் நெருக்கத்தையும் பெறுகின்றோம்.

அது மட்டுமல்ல ரமலானில்
* லா இலாஹ இல்லல்லாஹுவை அதிகமாக கூறுவது.
* பாவமன்னிப்பு கேட்பது
* சுவனத்தை கேட்பது
* நரகை விட்டும் பாதுகாப்பு கேட்பது
ஆகிய நான்கு விஷங்களை அதிகமாக செய்யும்படி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஜகாத்தில்
************
இறைவன் வழங்கியதில் செலவு செய்கிறேன் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஜகாத்திலும் இறைவன் நினைவு கூறப்படுகிறான்.
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (2:3)
ஹஜ்ஜில்
************
ஹஜ்ஜுக்கு முன்னும் பின்னும் ஹஜ்ஜின் போதும் இறைவனை நினைவு கூறப்படுகிறது.
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الحَجِّ أَفْضَلُ؟ قَالَ «العَجُّ وَالثَّجُّ» الترمذي  (العج بالفتح رفع الصوت بالتلبية والثج: سيلان دماء الهدى والأضاحي)
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا جُعِلَ الطَّوَافُ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَرَمْيُ الْجِمَارِ لِإِقَامَةِ ذِكْرِ اللَّهِ»
سنن أبي داود (2 / 179
فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ (2:200)


இறைவனை நினைவு கூறுவதால் ஏற்படும் பயன்கள்.
***********************************
@ மனிதன் பாவம் செய்வதை தடுக்கும்.
@ அல்லது நடந்து விட்ட பாவத்திற்கு இஸ்திஃபார் செய்ய தூண்டும்.
@ உலகம் அழிவிலிருந்து பாதுகாப்பு பெறுவது இறைவனை நினைவு கூறுவதால்தான்.
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللهُ، اللهُ " مسلم
பூமியில் "அல்லாஹ்,அல்லாஹ்" என்றுசொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.

என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் நூல்:முஸ்லிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.