என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.
قول الله عز و جل :
"يا داود انا جعلناك خليفة في الأرض
فاحكم بين الناس بالحق....
قول النبي صلي الله عليه وسلم :
عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي-
صلى الله عليه وسلم- قال: «مَنْ قَتَلَ مُعَاهَداً لَمْ يَرَحْ رَائِحَةَ
الجَنَّةِ، وَإنَّ رِيحَهَا يُوْجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامَاً».
أخرجه البخاري.
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து எழுபது
வருடங்கள் கடந்து விட்டது ஆனால் சுதந்திரத்தின் பயன்களை நாட்டு மக்கள் முழுமையாக அடைந்து விட்டார்களா? என்றால் அது
கேள்விக்குறியாகவே உள்ளது.
சுதந்திரம் என்றால் வெறும் வெற்று
வாக்குறுதிகளும்' கோப்புகளில் அடைபட்டு கிடக்கும் வெற்று
ஷரத்துகள் மட்டுமல்ல நாட்டு மக்களுக்கான முழுமையான பேச்சுரிமையும், எழுத்துரிமையும், வழிபாட்டு உரிமையும், இந்த நாட்டின் உயரிய தீர்ப்பு மையமான சுப்ரீம் கோர்ட் முதல் உடனடி தீர்வுக்காக
நாம் அணுகும் கிராமப் பஞ்சாயத்துகள் வரை நடைமுறையில் இருக்க வேண்டும் அதை
அரசாங்கம் கவனித்து பாதுகாக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கமே மக்களின் பேச்சுரிமையிலும், எழுத்துரிமையிலும், வழிபாட்டு உரிமையிலும், ஏன் விரும்பிய உணவை உண்பதில் கூட நிர்பந்தத்தை ஏற்படுத்தி அந்த மக்களை
நசுக்கிடுமானால் சுதந்திரம் எங்கே இருக்கிறது ? இந்த நிலைமையில்
தான் நாடு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது .
நாட்டு மக்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை
ஏற்படுத்தி தர வேண்டிய அரசாங்கமே அவர்கள் அனுபவித்து வரும் வசதிவாய்ப்புகளை
எல்லாம் பறித்ததோடு நிற்காமல் தேவையில்லாத வரிகளை எல்லாம் விதித்து இந்த நாட்டில்
இனி ஏழ்மை நிலையில் உள்ள எவரும் வாழ முடியாத அசாதாரணமான நிலையை ஏற்படுத்துமானால்
சுதந்திரமும், அதை கொண்டாடுவதற்கான தார்மீக உரிமையும் எங்கே
இருக்கிறது.
அதிலும் இந்த நாட்டின் சுதந்திரப்
போராட்டத்தற்காக அரும் பாடுபட்ட இஸ்லாமிய சமூகம் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், வாழ்வாதாரத்திற்கும் போராடும் நிலை தான் இன்னும் நீடித்திருக்கிறது.
ஹஜ்ரத் தாவூது அலை அவர்களை மக்களின்
பிரதிநிதியாக இறைவன் அறிவித்த போது கட்டளை பிறப்பித்தான்.
يَا دَاوُودُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي
الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوَىٰ
فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ ۚ إِنَّ الَّذِينَ يَضِلُّونَ عَنْ سَبِيلِ
اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ بِمَا نَسُوا يَوْمَ الْحِسَابِ
(நாம் அவரிடம்
கூறினோம்;) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில்
பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு
(நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்;
அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது)
உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர்
அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக்
கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.
(அல்குர்ஆன் : 38:26)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அடிமைகளை கூட
சுதந்திரமாக வாழ வழிவகுத்தார்கள். ஆனால் சுதந்திரமான மனிதர்கள் கூட இந்நாட்டில் அடிமைகள் போல நடத்தப் படுகிறார்கள்.
அடிமையாக இருப்பவர்களை விடுதலை செய்ய பல
வழிகளையும் கையாண்டார்கள்.
முதலாவதாக சுதந்திரமான ஒருவரை அடிமையாக்குவதை
பெரும் குற்றமாக்கினார்கள்.
2227 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: "
قَالَ اللَّهُ: ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ: رَجُلٌ أَعْطَى
بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ
أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ "
( صحيح البخاري)
பாடம் : 106 சுதந்திரமானவரைப்
பிடித்து விற்பது குற்றமாகும்.
2227. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
'மறுமை நாளில்
மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ்
கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக்
கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்
கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
v " கிதாபத்" எனும் பெயரில் எஜமானிடம் ஒரு தொகை தருவதாக கூறி அந்த தொகையை
செலுத்தியவுடன் விடுதலையாகும் வழியை ஏற்படுத்தினார்கள்.
v தன் ஆயுட்காலம்
மட்டும் அடிமையாக இருந்து விட்டு தன் மரணத்திற்குப் பின் விடுதலையாகி கொள்ளலாம்
என்று ஒரு காலக்கெடுவுக்குப்பின் விடுதலையாக வழி ஏற்படுத்தினார்கள்.
v சத்தியம்
முறித்தல் மற்றும் ழிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்) போன்ற குற்றங்களுக்கு
முதன்மை பரிகாரமாக அடிமை உரிமை விடுதலை [குர்ஆனிலிருந்து] அறிமுகப்படுத்தினார்கள்.
v இவை
எல்லாவற்றுக்கும் மேலாக அடிமையை உரிமை விடுவது பற்றி அது பெரும் நன்மைக்குரிய
காரியம் என்ற எண்ணத்தை தம் தோழர்களின் மனதில் நேரடியாகவும் மறைமுகமாகவும்
விதைத்தாரகள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَادَ أَعْمَى أَرْبَعِينَ
ذِرَاعًا كَانَ لَهُ كَعِتْقِ رَقَبَةٍ» المعجم الأوسط
“கண் பார்வையற்ற
ஒருவரை நாற்பது முழம் கைபிடித்து அழைத்துச் செல்பவருக்கு ஒரு அடிமையை உரிமை
விட்டது போன்ற நன்மை கிடைக்கும்”
என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அல்
முஃஜமுல் அவ்ஸத்)
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا، اسْتَنْقَذَ اللَّهُ
بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ»
( صحيح البخاري)
2517. அலீ இப்னு
ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார்.
'ஒரு முஸ்லிமான
(அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர்
உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து
(விடுவித்துக்) காப்பாற்றுவான்'
என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
قَالَ سَعِيدُ بْنُ مَرْجَانَةَ: «فَانْطَلَقْتُ
بِهِ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ، فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ
عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ أَوْ أَلْفَ دِينَارٍ، فَأَعْتَقَهُ» - (صحيح البخاري)
உடனே நான், இந்த நபிமொழியை
அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை
ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ்
இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ
அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப்
பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.
இது நேரடியாக தூண்டிய விஷயம்.
மறைமுகமாக தூண்டியது எப்படி என்றால், பல நன்மையான காரியங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது பற்றி கூறும்போது, அடிமையை உரிமை விட்டது போன்ற நன்மை கிடைக்கும் என்று கூறுவார்கள் இதன் மூலம்
குறிப்பிட்ட ஒரு அமலை செய்யத்தூண்டுவதன் பின்னணியில் அடிமை உரிமை விடுதலை நபிகள்
நாயகம் ஸல் அவர்கள் புனிதப்படுத்தியும் விடுவார்கள்.
அதுமட்டுமல்ல இஸ்லாமிய ஆட்சியின் கீழ்
வாழ்ந்த மாற்று மதத்தினரையும் சுதந்திரமாக வாழ வழிவகை செய்தார்கள்.
عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي-
صلى الله عليه وسلم- قال: «مَنْ قَتَلَ مُعَاهَداً لَمْ يَرَحْ رَائِحَةَ
الجَنَّةِ، وَإنَّ رِيحَهَا يُوْجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامَاً».
(أخرجه البخاري)
"யார் ஒப்பந்தம்
செய்து கொண்டு இஸ்லாமிய நாட்டில் வசிப்பவரை கொலை செய்வாரோ அவர் சுவனத்தின் வாடையை
கூட நுகர மாட்டார் அதன் வாடையை பல்லாண்டு பயண தூரத்தில் தான் பெற்றுக் கொள்ளப்
படும்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரித்தார்கள்.
ஆனால் சொந்த நாட்டின் சுதந்திரத்திற்கு
பாடுபட்ட சமூகம் உயிருக்கும் உடைமைக்கும்
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வரும் போது சுதந்திர தின
கொண்டாட்டத்திற்கு அர்த்தமில்லாமல் போய் விட்டது.
இந்திய நாட்டின் சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின்
பங்கு :
இந்திய சுதந்திரத்தின் உண்மை வரலாற்றை
அறிந்திருக்கக் கூடிய யாரும் மறக்க மறுக்க முடியாத தியாகத்திற்கு சொந்தக் காரர்கள் முஸ்லிம்கள் குறிப்பாக உலமாக்கள். தன் தாய்நாட்டை அவர்கள் நேசித்ததன் அடையாளமாக இந்த நாட்டின் சுதந்திர உரிமைக்காக பெரும் பொருள் தியாகமும், உயிர் தியாகமும் செய்திருக்கிறார்கள்.
" குஞ்சாலி
மரைக்காயர் "
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத்
திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல
செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன.
அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம்
நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை
விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப்
போரின் முன்னோடி.
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக
இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர்
கான்சாஹிப்.. இவர் யூசுப்கான்,
நெல்லூர்
சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால்
அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி
வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர்
தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக்
கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
'நேதாஜி சுபாஷ்
சந்திர போஸ் அவர்களின் சுதந்திர வேட்கை கொண்ட இராணுவப் படைக்கு பெரும் உதவி
புரிந்தவர் ஒரு முஸ்லிம்'
'வ. உ.
சிதம்பரனாரின் சுதேசி இயக்கத்தின் கப்பல் வணிகம் இயங்குவதற்கு பெரும் பொருளுதவி செய்தவரும் முஸ்லிம் தான்'
'வேலூர் சிப்பாய்
கலகத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்தவர்களில் எண்ணற்றவர்கள் முஸ்லிம்கள்'
"இந்த நாட்டின்
விடுதலைக்காக முதன் முதலாக வெள்ளையர்களே வியக்கும் வண்ணம் போரில் ஏவுகணையை பயன்படுத்திய மாவீரர் திப்பு சுல்தான் ஒரு முஸ்லிம்'
"ஏன் மார்க்கத்தை
பாதுகாக்கும் நோக்கத்தில் ஒரு மதரஸாவை துவக்கி நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேயர்களின் பொருட்களை வாங்கிடக் கூடாது, ஆங்கிலம் கற்கக்
கூடாது என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கி அதற்காக சிறை தண்டனை அனுபவித்த அல்லாமா
காஸிம் நானூதவீ ரஹ் (باني دار العلوم)
ஒரு முஸ்லிம் "
இப்படி இஸ்லாமியர்களின் தியாகங்களை சொல்லிக்
கொண்டே செல்லலாம். ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்தவர்களுக்கு... காட்டித்
தந்தவர்கள் தரும் முத்திரை நீங்கள் இந்தியர்கள் அல்ல. என்ன ஜனநாயகம் இது?
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களை பெரிதும்
பங்கு கொள்ளத் தூண்டியது, அவர்கள் வாழ்கைகை நெறியாக கடைபிடிக்கும்
இஸ்லாம்தான்.
ஏனெனில் ஒரு மனிதன் இன்னொருவனை
அடிமைப்படுத்துவது அல்லது ஒருவன் இன்னொரு மனிதனுக்கு அடிமைப் படுவது ஆகிய இரண்டையும் வேரறுப்பதில் இஸ்லாம் தனித்தன்மையுடன் விளங்குகிறது.
பல்வேறு எடுத்துக்காட்டின் மூலம் இதை
விளங்கலாம்.
1. இஸ்லாத்தின் அடிப்படை தத்துவம் “லா இலாஹ
இல்லல்லாஹு” 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு
யாருமில்லை’ என்பதாகும்.
இது, நீ
அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமை. வேறு யாருக்கும் அடிமை இல்லை. அதாவது நீ
அல்லாஹ்வையன்றி யாருக்கும் அடிமைப்படவும் கூடாது. நீ யாரையும் அடிமையாக்கவும்
கூடாது. என்ற இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியது. எனவே முஸ்லிம்கள் சுதந்திர
உணர்வை தங்கள் அடி மனதில் சுமந்திருப்பவர்கள்.
இஸ்லாம் ஒரு மனிதனுடைய விடுதலையை ஒருவருக்கு
உயிர் கொடுப்பதற்குச் சமமாக மதிக்கிறது.
தவறுதலாக ஒருவரை கொலை செய்துவிட்டால் என்ன
பரிகாகம் என்பது பற்றி கூறும் இஸ்லாம், ஒரு அடிமையை
உரிமை விட வேண்டும் என்று பணிக்கிறது. [அல்-குர்ஆன் 4:92]
அதன் மூலம் ஒருவரை அடிமைப்படுத்துவது அவனை
சாகடிப்பதற்குச் சமம் என்றும் ஒருவரை விடுதலை செய்வது அவருக்கு உயிர்
கொடுத்ததற்குச் சமம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
ஒரு தனி மனிதனுக்கு இறைவனால்
வழங்கப்பட்டிருக்கும் முறையான சுதந்திரத்தை முடக்கும் அடிமைத்தனம் இஸ்லாத்தில்
அங்கீகரிக்கப்படவில்லை. எனும் போது பல கோடி மனிதர்களை உள்ளடக்கிய ஒரு நாடு
அடிமைப்படுவதை எப்படி அங்கீகரிக்கும்?
தனி மனித சுதந்திர உணர்வு இந்தளவு முஸ்லிம்களின் மனதில் பதிந்திருப்பதாலும், தன் நாட்டுக்கு கிடைக்கும் மதிப்பு தனக்கு கிடைக்கும் மதிப்பென்றும் தன்
நாட்டுக்கு ஏற்படும் இழுக்கு தனக்கு ஏற்படும் இழுக்கென்றும் கருதியதாலும்
சுதந்திரப் போராட்டத்தில் பெரிய அளவில் முஸ்லிம்கள் பங்காற்றினார்கள்.
மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் ஒரு
குறிப்பிட்ட மதக் கலாச்சாரத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும், வந்தே மாதரம் போன்ற இணை வைக்க தூண்டும் பாடல்களை அனைவரும் படிக்க வேண்டும்
என்று கட்டாயப் படுத்துவது போன்ற வழிபாட்டு உரிமைகளை ஊனப்படுத்திடும் நிகழ்வுகள் இங்கே தொடர் கதையாகி வருகிறது.
இங்கே நம் உரிமைகளை மீட்டெடுக்க இன்னொரு
சுதந்திரப் போராட்டம் தேவைப் படுகிறது . அது நமக்கான ஜிகாதாகும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
سنن الترمذى - (ج 8 / ص 345)
2329 - حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ
دِينَارٍ الْكُوفِىُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُصْعَبٍ أَبُو يَزِيدَ
حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِى
سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ مِنْ أَعْظَمِ
الْجِهَادِ كَلِمَةَ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ». قَالَ أَبُو عِيسَى وَفِى
الْبَابِ عَنْ أَبِى أُمَامَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا
الْوَجْهِ.
" மார்க்கப்
போராட்டத்தில் மகத்தானது அநியாயக்கார அரசனிடம் உண்மையை ஓங்கி ஒலிப்பதாகும்"
இன்னும் சுதந்திர தாகம் தணியாத சூழலில்
இந்திய முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தையும், கலாச்சாரத்தையும்
பாதுகாத்திட மற்றொரு போராட்டத்திற்கு தயாராவது காலத்தின் கட்டாயமாகும்.
வல்ல ரப்புல் ஆலமீன் அதற்கான மன உறுதியையும்
தியாக மனப்பான்மையையும் நமக்கு வழங்கிடுவானாக ஆமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.