வியாழன், 22 பிப்ரவரி, 2018

இது வெறும் காற்றடைத்த பையடா!


بسم الله الرحمن الرحيم
இது வெறும் காற்றடைத்த பையடா!
************************
மனிதனின் நிலைகள் மூன்று

1 பிறப்பிற்கு முந்திய நிலை

2 இறப்பிற்கு பிந்திய நிலை

3 பிறந்தது முதல் இறக்கும் வரையுள்ள நிலை

இவற்றில் முதல் நிலைக்கு ஆரம்பம் என்பது இல்லை.

இரண்டாவது நிலைக்கு முடிவு என்பது இல்லை.

மூன்றாவது நிலைக்கு ஆரம்பமும் இருக்கிறது முடிவும் இருக்கிறது.

ஆரம்பமும் முடிவும் இருக்கிற உலக வாழ்வின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்கள் குறைவுபுரிந்து கொண்டவர்களில் அதன்படி நடப்பவர்கள் மிக குறைவு. அதிகமானவர்களின் நடைமுறைகளும் செயல்பாடுகளும் இந்த உலகம்தான் நிரந்தரம் என்பது போல அமைந்திருக்கிறது

உலக மோகம் மனிதர்களை ஏமாற்றி விடாமல் எச்சரிக்கையாக இருக்க தூண்டும் இறை வசனங்கள்.

يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاوَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏ 
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் : 35:5)

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا  اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ‏ 
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
(அல்குர்ஆன் : 35:6)

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏ 
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 3:185)

ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ‌ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ 
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 15:3)

உவமை கூறுவதில் உவமையற்று விளங்கும் திருக்குர் ஆன் உலக வாழ்க்கைக்கு ஓர் அழகிய உதாரணம் கூறுகின்றது


اِنَّمَا مَثَلُ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا يَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ حَتّٰۤى اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَيْهَاۤ ۙ اَتٰٮهَاۤ اَمْرُنَا لَيْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِيْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ‌  كَذٰلِكَ نُـفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ 
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
(அல்குர்ஆன் : 10:24)

ஆசைப்பட்டதை அடைவதற்காக அல்லும் பகலும் உழைத்த மனிதன் அந்த ஆசை கை கூடிவரும் போது அதை அனுபவிக்க முடியாது அவனுடைய வாழ்க்கை முடிந்துவிடுவதை இந்த உதாரணம் சித்தரிக்கிறது.மழை பொழிந்து வளம் கொழிக்கும் தருணத்தில் அனைத்தும் பதராக மாறிவிடுவதைப் போன்று. அற்ப ஆயுளில் மனித வாழ்வு முடிந்து விடுகிறது.

உலக வாழ்க்கைக்கும் அதன் இன்பங்களுக்கும் இ்மாம் கஸ்ஸாலி( ரஹ்) கூறக்கூடிய  ஓர் உதாரணம்
**************************************
ஒரு மனிதன் கிணற்றுச் சுவரின் ஒரத்தில் இருக்கும் மரக்கிளையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான். கீழே கிணற்றுக்குள் பார்கின்றான் ஒரு முதலை அவன் விழுந்தவுடன் அவனை விழுங்க தயாராக வாயை பிளந்து கொண்டிருக்கிறது.மேலே பார்கிறான் ஒரு சிங்கம் இவனை தாக்க தயார் நிலையில் நிற்கிறது.இதற்கிடையில் இவன் தொங்க கூடிய கிளையை கருப்பு எலியும் வெள்ளை எலியும் கொரித்துக் கொண்டு இருக்கிறது. இவன் கை வலி தாங்காமல் அங்கும் இங்கும் அசைகின்றான் அப்போது இவன் தொங்கும் கிளை ஒரு தேன் கூட்டின் மீதுபட்டு அதிலிருந்து சில தேன் துளிகள் இவன் நாவில் விழுகிறது. மேலே சிங்கம் என்பதுஇஸ்ராயீலைப் போல இவன் ஆயுள் முடிந்தவுடன் உயிரை கைப்பற்ற தயாராக உள்ளார். கீழேஉள்ள முதலை இவனுடைய கப்ரைப் போல இவனுக்காக காத்திருக்கிறது. வெள்ளை எலி கருப்பு எலி இரவு பகல். அது இவன் ஆயுலை குறைத்து வருகிறது. இந்த நிலையில் அவன் சாப்பிடும் தேன் இதுதான் உலக இன்பம் என்றார்கள்.

உலக மோகத்தில் மூழ்கி விடாமல் இருக்க அண்ணலார் கூறிய அறிவுரைகள்

صحيح البخاري 6416 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»

ஒருசம்பவம்
***************
நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சொந்த வீடு சொந்த ஊர் கிடையாது அனைத்து ஊர்களுக்கும் சென்று ஏகத்துவத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களிடம் இருந்த பொருள் இரண்டு 1 படுத்து உரங்க ஒரு தலையனை. தண்ணீர் அருந்த ஒரு பாத்திரம். இவைகள்தான் அவர்களிடம் இருந்தது. ஒரு நாள் ஓர் வழியாக போய்க் கொண்டு இருக்கும் பொழுது ஒரு மனிதர் கையில் தலைவைத்து உரங்குவதை கண்டார்கள். ஒரு மனிதன் தலையனை இல்லாமலே உரங்கமுடியுமென்றால் இந்த தலையனை எதற்கு என்று அதையும் தர்மம் செய்து விட்டார்கள். மற்றொரு நாள் ஒரு ஆற்றின் வழியாகச் சென்றார்கள் அங்கே ஒருவன் தன் இரு கரத்தினால் தண்ணீர் அல்லி பருகிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட  அவர்கள் ஒருவன் பாத்திரம் இல்லாமலே தண்ணீர் பருக முடியுமென்றால் இந்த பாத்திரம் எதற்கு என்று அதனையும் தர்மம் செய்து விட்டார்கள்.

وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الآخِرَةِ، وَلاَ تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ اليَوْمَ عَمَلٌ وَلاَ حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلاَ عَمَلٌ
உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுமை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. உலகம் மறுமை இந்த இரண்டிற்காகவும் மக்கள் இருக்கின்றார்கள் நீங்கள் மறுமையின் வாழ்கையில் வெற்றிபெறக்கூடிய மக்களாக ஆகிவிடுங்கள் இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கிவிடக்கூடய மக்களாக ஆகிவிடாதீர்கள் இவ்வுலகம் அமல்ச் செய்யும் இடமாகும் இங்கு கேள்விகணக்கு கிடையாது நாளை மறுமைநாள் கேள்விகணக்குக்குரிய இடமாகும் அங்கு அமல் செய்வது கிடையாது என்று இவ்வுலக வாழ்வைப் பற்றி அலி ( ரலி) கூறுனார்கள்.

صحيح البخاري 6421  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ " رَوَاهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ
புகாரி 6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:  1.பொருளாசை.  2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.  என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பேராசை  பெறும்நஷ்டம்
*****************************
பொருளை தேட வேண்டாமென்று மார்கம் கூறவில்லை. மாறாக உலகச்செல்வங்களை தேடுவதிலேயே மூழ்கி மறுமையை மறந்து விடக்கூடாது என்று அறிவுரை கூறுகின்றது.


صحيح البخاري  6425 -  حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ: أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ، وَهُوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ، كَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ إِلَى البَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَالَحَ أَهْلَ البَحْرَيْنِ، وَأَمَّرَ عَلَيْهِمُ العَلاَءَ بْنَ الحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِهِ، فَوَافَتْهُ صَلاَةَ الصُّبْحِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا انْصَرَفَ تَعَرَّضُوا لَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَآهُمْ، وَقَالَ: «أَظُنُّكُمْ سَمِعْتُمْ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ، وَأَنَّهُ جَاءَ بِشَيْءٍ» قَالُوا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ مَا الفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا، كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا، وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ»

புகாரி 6425. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.  பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதருடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு அபூ உபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்என்றார்கள். அன்சாரிகள் ஆம், இறைத்தூதர் அவர்களே!என்று பதிலளித்தார்கள். அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.17


صحيح البخاري 6438 عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، عَلَى المِنْبَرِ بِمَكَّةَ فِي خُطْبَتِهِ، يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلْئًا مِنْ ذَهَبٍ أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ أُعْطِيَ ثَانِيًا أَحَبَّ إِلَيْهِ ثَالِثًا، وَلاَ يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

புகாரி 6438. அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.  அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன்மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

எது உனது சொத்து?
***********************
மனிதன் என் சொத்து என் சொத்து என்கிறான் அவனுக்குறியது எதுவென்று விளக்கும் நபிமொழி

صحيح مسلم 3 - (2958)  عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: أَلْهَاكُمُ التَّكَاثُرُ، قَالَ: " يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي، مَالِي، قَالَ: وَهَلْ لَكَ، يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ؟ "،
ஸஹீஹ் முஸ்லிம் 5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ”மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டதுஎன்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ”ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்...என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.


عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : أُهْدِيَ لَنَا شَاةٌ مَشْوِيَّةٌ ، فَقَسَّمْتُهَا كُلَّهَا إِلَّا كَتِفَهَا ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ ، فَقَالَ : " كُلُّهَا لَكُمْ إِلَّا كَتِفَهَا " ، رَوَاهُ التِّرْمِذِي
ُّ فِي الْجَامِعِ بِلَفْظٍ : أَنَّهُمْ ذَبَحُوا شَاةً ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَا بَقِيَ مِنْهَا ؟ " قَالَتْ : مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا ، قَالَ : " بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا " ، وَقَالَ : حَسَنٌ صَحِيحٌ ، وَمَعْنَاهُ أَنَّهُمْ تَصَدَّقُوا بِهَا إِلَّا كَتِفَهَا .

ஆயிஷா( ரலி) கூறுகிறார்கள் சமைத்தஆடு ஒன்று எங்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது.அதன் சப்பை ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் ( தர்மமாக) பங்கு வைத்து கொடுத்து விட்டேன். நபி ( ஸல்) அவர்கள் வந்த போது அவர்களிடம் அதை கூறினேன்
எதை நீ பங்குவைத்தாயோ அதுதான் நமக்குறியது
என்றார்கள்.

நல்ல நண்பன்
******************
மரணதருணத்தில் இருக்கும் மனிதன் தன் நண்பர்கள் மூவரை அழைத்து. முதல் நண்பனிடம் கேட்டான் நண்பா ! நான் இறந்து விட்டால் நீ என்ன செய்வாய் என்றான். அதற்கு அவன் நீ இருக்கும் வரை உன்னை நண்பனாக கொண்டிருந்தேன் நீ இறந்து விட்டால் வேறொருவனை நண்பனாக்கிக் கொள்வேனென்றான். இதைக்கேட்டு வருத்தமடைந்தான் இவ்வளவுதானா நம்முடைய நட்பு என்றான். பிறகு இரண்டாம் நண்பனிடம் இதே கேள்வியைக் கேட்டான் அதற்கவன் நண்பா! நீ இறந்து விட்டால் நல்ல முறையில் உன்னை குழிப்பாட்டி கபனிட்டு தொழ வைத்து அடக்கம் செய்வேனென்றான். இதைக் கேட்டவுடன் சந்தோஷமடைந்தான் இதையாவது நீ செய்கிறாய் என்றான்.பிறகு மூன்றாவது நண்பனிடமும் இதே கேள்வியை கேட்ட போது. நண்பா! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது நீ இறந்து விட்டால் நானும் உன்னோடு வந்து விடுவேனென்றான். இதைக் கேட்டவன் நீதாண்டா உண்மையான நண்பன் எனக்கூறி பெரும்மகிழ்ச்சியடைந்தான். இந்த நண்பர்களில் முதல் நண்பன்தான் அவனுடைய செல்வம்.  இரண்டாவது நண்பன் அவனுடைய உறவுகள். மூன்றாவது நண்பன் அவன் செய்த அமல். இதே கருத்தை கீழ் வரும் ஹதீஸிலும் காணலாம்


صحيح مسلم 5 - (2960)  أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ، فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ، يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ»

தீனுடைய காரியங்களிள் அதிகம் ஈடுபடுபவர்களை குறைகூறாதே
********************************
நம்மில் சிலர் தீனுடைய வேலையில் அதிகம் ஈடுபடுபவர்களிடம் . எப்பொழுதும் தாங்கள் தப்லீக் என்று சென்று விடுகிரீர்களே! குடும்மத்தை யார் கவனிப்பது என்று குறை கூறுகிறார்கள். அவ்வாறு சொல்வதை தவிற்க வேண்டும். அவர்கள் அதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள் இவர்கள் தீனுடைய வேலையில் ஈடுபடுவதினால் குடும்பத்திற்கான தேவையை இவர்களின் பிள்ளைகளிடம் இறைவன் அதிகப்படுத்தி தருவான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்பவன் அல்லாஹ்


سنن الترمذي 2267  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَعَلَّكَ تُرْزَقُ بِهِ

நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் அவர்களில் ஒருவர் நபி ( ஸல்) அவர்களின் சபைக்கு வந்து மார்க்க விஷயங்களை கற்ககூடியவராக இருந்தார் மற்றொருவர் சம்பாத்தியம் செய்பவராக இருந்தார்.  சம்பாத்தியம் செய்பவர் நபியிடம் வந்து தன் சகோதரர் ( சம்பாத்தியம் செய்வதில்லை என்பது) பற்றி முறையிட்டார். அவரின் காரணமாக உமக்கு ரிஜ்க் அளிக்கப்படுகிறது என்று நபி ( ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

புதுக்கணக்கு
*****************
மனிதர்கள் ஈடுபடும் துறையில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரலில் புதுக்கணக்கு போடுகிறார்கள்.சிரிய குடும்பத்தை நிர்வகிப்பவர் முதல் நாடாளும் அரசியலார் வரை அனைவரும் புதுக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் சொற்ப லாபமளிக்கும் இந்த துறைகளில் லாபநஷ்டக் கணக்குப் பார்கும் மக்கள் ஏனோ கணக்கற்ற லாபமளிக்கும் மறுமை வியாபாரத்தில் கணக்குப் பார்க்க தவறி விடுகிறார்கள்.

தத்துவமேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு மனிதனும் இரவு துயில் கொள்ளச் செல்லும் போது இன்று எத்தனை நன்மையான காரியங்கள் செய்தோம் எத்தனை பாவமான காரியங்கள் செய்தோமென்று கணக்குப் பார்த்து மறுநாள் நன்மை அதிகமாக வேண்டும் பாவங்கள் குறைய வேண்டுமென்று கூறுகிறார்கள்

அமீருல் மூமினீன் உமர் ( ரலி) அவர்களின் அந்திம காலத்தில் .அவர்கள் பகைவனால் குத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு நண்பர் அமீருல் மூமினீன் அவர்களே! சுவனத்தைக் கொண்டு மங்களச் செய்தி கூறுகிறேன். தாங்கள் நாயகத்தின் பிரதிநிதியாக உயிர் பொருள். ஆவி அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்தவர்களாகவுமிருக்கிறீர்களெனக் கூறினார். அதைச் செவியுற்ற உமர் ( ரலி) அவர்கள். நண்பரே! நான் அவ்வாறு நினைக்கவில்லை எனது நன்மையும் தீமையும் சரி நிகராக ஆகியிருந்தாலே நான் மகிழ்ச்சியடைவேன் என்று பதிலளித்தார்கள்.


வியாழன், 15 பிப்ரவரி, 2018

மரணத்தை நீ மறக்கலாமா?


بسم الله الرحمن الرحيم

மரணத்தை நீ மறக்கலாமா?
***********************************
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ 
(القران62:8)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ - سنن الترمذي

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் வாழுகின்ற இந்த காலத்தில் மரணம் எவ்வளவு விரைவாகவும் வேகமாகவும் மனித இனத்தை தழுவிக் கொண்டிருக்கிறது என்பதை  அன்றாட நிகழ்வாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
மிகச் சிறிய வயதில் கூட இறப்பை சந்திக்ககூடிய நிலையை நாம் காண்கின்றோம்.இந்த சமுதாயம் முன்னால் சென்ற சமுதாயத்தைப் போன்று நீண்ட ஆயுட்காலம் கொடுக்கப்பட்டவர்களல்ல.  இந்த சமுதாயம் மிக குறைந்த ஆயுட்காலம் கொடுக்கப்பட்ட சமுதாயம் அதிலும் இருபது வயது முப்பது வயதிலும் மரணம் வந்தடையக்கூடிய நிலையையும் நாம் பார்க்கமுடிகிறது.

நபி நூஹ் அலை அவர்கள் ஒரு வயதான மூதாட்டியை கடந்து செல்கிறார்கள். அந்த மூதாட்டி அழுது கொண்டிருப்பதைக் கண்டு ஏன்அழுகின்றீர் எனக்கேட்கின்றார்கள்.  அதற்கு அம்மூதாட்டி என் மகன் சிறுவயதிலேயே இறந்து விட்டான் என்கிறாள். உன் மகனுக்கு எத்தனை வயது என்றார்கள். முன்னூறு வயது என்றால் மூதாட்டி. பின்பு ஒரு சமுதாயம் வருவார்கள் அவர்களின் ஆயுட்காலமே அறுபதிற்கும் எழுபதிற்கும் இடைப்பட்டகாலம்தான் என்றார்கள் நூஹ் நபியவர்கள். இதைக்கேட்ட மூதாட்டி அப்படியானால் அந்த மக்களுக்கு வீடுகட்ட தேவையில்லை வியாபாரம் செய்ய தேவையில்லை உலகத்தில் வந்து அமல் செய்துவிட்டு இறந்தால் போதுமே என்றார்களாம். இதைக்கேட்ட நூஹ் (அலை )அவர்கள் இல்லை இல்லை அவர்களுக்குத்தான் உலகஆசை மிக அதிகமாக இருக்கும் என்றார்கள்.

ஆனால் இப்பொழுதுள்ள ஆயுட்காலம் அறுபதையும் எழுபதையும் அடைவது கூட கடினமாக உள்ளது 20 வயதிலும் 30 வயதிலும் மரணம் வந்தடைகிறது இந்த நிலையிலும் நாம் மரணத்தைக் கண்டு படிப்பினை பெற தயாரில்லை. சில
சஹாபாக்கள் சொல்வார்கள்
"كفي باالموت واعظا"
ஒரு மனிதன் உபதேசம் பெறுவதற்கு மரணம் ஒன்றே போதும் மரணத்தை விட சிறந்த உபதேசி கிடையாது என்பார்கள்.
பல சஹாபாக்கள் இந்த வாசகத்தை தங்களின் மோதிரக்கல்லிலே பதிந்துள்ளார்கள்.

உமர் ரலி அவர்களின் மோதிரத்திலும் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
كفي باالموت واعظا ياعمر ( موطا مالك)
இந்த மரண சிந்தனையைக் கொண்டு எத்தனையோ திருடர்களும் பாவிகளும் திருந்தி இருக்கின்றார்கள்.

எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் மரணத்தை விட்டும் தப்பிக்க முடியாது.

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ 
நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 62:8)

மரணம் எந்த நேரமும் வரலாம் காலை நேரத்தை அடைந்தவன் மாலையை அடைவான் என்று உறுதி கூற முடியாது.

6416- صحيح البخاري عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي فَقَالَ: ((كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ)). وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ الْمَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ.
6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இருஎன்றார்கள்.  (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)  “நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடுஎன்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. (நெகிழ்வூட்டும் அறவுரைகள்)

மரண சிந்தனைதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. மரண நேரம்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஆக கைசேதப்படுகிற நேரமாகும்.

உலகத்தினுடை பெரும் ஆட்சியாளர்களில் ஒருவர் "மர்வான் இப்னு ஹகம்" அவர் இறக்கும் நேரத்திலே தன்னுடைய வீட்டு மாடியில் இருந்து ஒரு வண்ணானை பார்க்கின்றார் அழுக்கு துணிகளையெல்லாம் வீடு வீடாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கின்றார். ياليتني كنت غسالا நான் இந்த வண்ணானைப் போன்று வாழ்க்கை நடத்தி இருக்க கூடாதா! இந்த ஆட்சி அதிகாரங்களை ஏற்றதால் நாளை மறுமைநாளில் இந்த மக்களைப்பற்றி அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டுமே! என்று கவலைப்பட்டாராம்.

யார் அறிவாளி
******************
மரணத்தை அதிகம் நினைத்து மறுமைக்கான தயாரிப்பை அதிகம் செய்பவரே அறிவாளி

١٣١- عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ.

رواه الترمذي وقال: هذا حديث حسن باب حديث الكيس من دان نفسه...، رقم: ٢٤٥٩
131. “எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி - எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)

عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» ، قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا، أُولَئِكَ الْأَكْيَاسُ» - سنن ابن ماجه

இத்தகைய மரணங்களைக் கண்டும் ஒருவர் திருந்தவில்லை என்றால் அவருடைய இதயம் முத்திரையிடப்பட்ட இதயமாகும்.
"طبع علي قلوبهم فهم لا يفقهون"⚪

ஒரு மனிதன் மரணநேரத்தில் பயமில்லாமல் திடுக்கமில்லாமல் கவலையில்லாமல் அல்லாஹ்வைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இவ்வுலகைவிட்டு பிரிகிறான் என்றால்  அவனுடைய வாழ்க்கையினுடைய ஆக பொன்னான நேரம் அது தான்.

இதைத்தான் நம்முடைய மூத்த உலமாக்களும் சொல்லித் தந்தார்கள். ஒரு மனிதன் கேட்கக்கூடிய துஆக்களில் மிகச்சிறந்த துஆ எதுவென்றால்
யா அல்லாஹ் நான் மரணிக்கின்றபோது எந்த பயமும் இருக்கக்கூடாது. எந்த திடுக்கமும் இருக்க கூடாது. துன்யாவுடைய எந்த சிந்தனையும் இருக்க கூடாது. உன்னுடைய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் என்று அதிகம் துஆச் செய்யுமாறு கற்றுத்தந்துள்ளார்கள்.

பிலால் ரலி அவர்களின் மரணநேரம் அருகிலிருந்த அவர்களின் மனைவி واحزناه எனக்கு வந்த கைசேதமே! என்றார்கள். இதைக்கேட்ட பிலால் ரலி அவர்கள் وافرحاه இது கவலைக்குரிய நேரமல்ல சந்தோஷத்திற்குரிய நேரமாகும் நான் பெருமானார் ( ஸல்) அவர்களையும் என்னுடைய தோழர்களையும் அனைத்திற்கும் மேலாக அல்லாஹ்வையும் நான் சந்திக்கப்போகின்றேன் இது சந்தோஷத்திற்குரிய நேரம் என்றார்கள்.

قال رسول الله صلي الله عليه وسلم : "الموت تحفة للمؤمن" (رواه البيهقي في شعب الإيمان )
மரணம் என்பது ஒரு முஃமினுக்கு கிடைக்கும் பரிசாகும்.

رواه البخاري ومسلم في صحيحيهما كما رواه غيرهما، ولفظه عن أبي هريرة قال: أرسل ملك الموت إلى موسى عليهما السلام، فلما جاءه صكه ففقأ عينه، فرجع إلى ربه فقال: أرسلتني إلى عبد لا يريد الموت، قال: فرد الله إليه عينه وقال: ارجع إليه فقل له يضع يده على متن ثور فله بما غطت يده بكل شعرة سنة، قال: أي رب ثم ماذا؟ قال: ثم الموت، قال: فالآن، فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر، فقال رسول الله صلى الله عليه وسلم: فلو كنت ثم لأريتكم قبره إلى جانب الطريق تحت الكثيب الأحمر.

மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் எதையும் உரிமையோடு பேசுபவர்களாக இருந்தார்கள்.
அவர்களுக்கு மரண நேரம் நெருங்கியபொழுது மலக்குல் மௌத் அவர்களின் உயிரை கைப்பற்ற வருகிறார்.  அப்போது மலக்குல் மௌத்தை மூஸா அலை அடித்துவிடுகின்றார்கள்.  அந்த மலக்கிடத்தில் மூஸா அலை கேட்டார்களாம் நான் அல்லாஹ்வின் நபியாக இருக்கின்றேன் நான் அல்லாஹ்வின் நேசனாக இருக்கின்றேன் எப்படி என் உயிரை அல்லாஹ் கைப்பற்ற விரும்புகிறான் என்றார்கள். இதை மலக்குல்மௌத் அல்லாஹ்விடம் சென்றுகூற அல்லாஹ் இவ்வாறு பதில் சொல்லியனுப்பினான் ஒரு நண்பன் தன் நண்பனை சந்திக்க விரும்பமாட்டானா? என்றான் மேலும் முஸா (அலை) அவர்கள்  தன்னுடைய கையை ஒரு கால்நடையின் முடியின்மீது வைக்கட்டும் தன் கையிற்குள் எத்தனை முடி உள்ளடங்குகிறதோ அதில் ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் ஆயுள் கொடுக்கப்படும் அதற்குப்பிறகு மரணம் என்றான்.  இதைக்கேட்டமூஸா அலை அவர்கள் என்றைக்காவது ஒருநாள் மரணத்தை சந்தித்தாக வேண்டுமானால் நான் என் ரப்பை இப்பொழுதே சந்திக்க விரும்புகிறேன் என்றார்கள்.

மரணம் என்பது  ஒரு நண்பனை தன் நண்பனோடு சேர்த்துவைக்கும் வழியாகும் நல்லடியார்களுக்கும் நபிமார்களுக்கும் மரணம் என்பது ஒரு تحفة வாகும்.

உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல் இருக்க சிறந்த வழி
****************************************
இந்த உலகிலுள்ள பாக்கியங்களில், இன்பங்களில், சுகங்களில் நம் உள்ளங்கள் லயித்து விடாமலும் மறுமையின் பாக்கியங்களில் ஆர்வம் கொண்டு வாழும் படியும் இறைவன் நம்மை பணிக்கிறான்.

இந்த தன்மை நம்மிடம் வரவேண்டுமென்றால் நமக்கு மரண சிந்தனை இருக்க வேண்டும்.

عَنْ، الرَّبِيعِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَوْتِ مُزَهِّدًا فِي الدُّنْيَا وَمُرَغِّبًا فِي الْآخِرَةِ»- مصنف ابن أبي شيبة

உலகப் பற்றை நீக்கி மறுமை காரியங்களில் ஆர்வமூட்ட மரணம் (பற்றிய சிந்தனையே) போதும்”.  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)

மரண சிந்தனை மனிதனை சீர்படுத்தும் ஒரு சிறந்த வழி.எனவேதான் அதை அதிகமதிகம் ஞாபகத்தில் வைத்திருக்கும்படி அல்லாஹ்வும் ரஸூலும் (ஸல்) பணித்திருக்கிறார்கள்.

அதிகம் நினைத்துப் பார்க்கும்படி ஹதீஸ் கூறும் விஷயங்கள்.
**********************
1 மரணம் 2 அல்லாஹ்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ - سنن الترمذي
இன்பங்களை முறிக்கும் மரணத்தை அதிகம் நினையுங்கள் என்று அண்ணல் நபி( ஸல்) கூறியுள்ளார்கள்.

عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " أَكْثِرُوا ذِكْرَ اللهِ حَتَّى يَقُولُوا: مَجْنُونٌ - مسند أحمد
உன்னை பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவிற்கு அல்லாஹ்வை அதிகம் திக்ரு ( நினைப்பீராக) செய்வீராக!

எந்நேரமும் மரணம் நினைவில் இருக்க எளிய பல நடைமுறைகளை வகுத்துத் தந்துள்ளது நம் மார்க்கம்.

வாகனத்தில் பயணிக்கும் முன் ஓதும் துஆவின் மூலம்

وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ، كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا، وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ صحيح مُسلم

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ (13) وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ  [الزخرف: 14]
ரப்பின் பக்கமே நாம் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம். இவ்வாறு ஒதுவதின் மூலம் மரண சிந்தனை ஏற்படும்.

துன்பமான விஷயம் நடந்தால் ஓதும் துஆவின் மூலம்

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ - البقرة: 156

وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَرْجَعَ عِنْدَ الْمُصِيبَةِ جَبَرَ اللهُ مُصِيبَتَهُ، وَأَحْسَنَ عُقْبَاهُ، وَجَعَلَ لَهُ خَلَفًا صَالِحًا يَرْضَاهُ»- المعجم الكبير للطبراني

ஜனாஸாவில் கலந்து கொள்வதன் மூலம்

عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُودُوا الْمَرِيضَ، وَاتَّبِعُوا الْجِنَازَةَ تُذَكِّرُكُمُ الْآخِرَةَ»- مصنف ابن أبي شيبة

கப்ர் ஜியாரத்துக்கு செல்வதன் மூலம்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زُورُوا الْقُبُورَ؛ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْآخِرَةَ»- سنن ابن ماجه

அங்கு சொல்லும் ஸலாம் வாக்கியத்தின் மூலம்

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ» صحيح مُسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்(ஒரு நாள்) மையவாடிக்குப்புறப்பட்டார்கள். (அங்கு போய்)அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின்முஃமினீன்; வ இன்னா இன்ஷாஅல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்(அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்)என்று கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

தூங்கச்செல்லும் போதும் தூங்கி விழிக்கும்போதும் ஓதும் துஆவின் மூலம்

6314 - عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»- صحيح البخاري

6314. ஹுதைஃபா இப்னுஅல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குஉறங்கச் சென்ற பின்னால் தம் (வலக்)கையைத் தம் (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு, 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து  வஅஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியேஇறக்கிறேன்; உயிர் வாழவும்செய்கிறேன்) என்று கூறுவார்கள்.உறக்கத்திலிருந்து எழும்போது'அல்ஹம்து லில்லாஹில்லதீ  அஹ்யானா பஅத மா அமாத்தனா
வஇலைஹிந்நுஷூர்' (எல்லாப் புகழும்அல்லாஹ்வுக்கே. அவன் எங்களைஇறக்கச்
செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி)
அவனிடமே செல்லவேண்டியுள்ளது)என்று கூறுவார்கள்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் உலக மோகங்களில் மூழ்கிவிடாமல் பாதுகாப்பானாக!

மரணத்திற்கு பின்புள்ள வாழ்க்கைக்காக நல் அமல்  செய்யக்கூடிய தவ்ஃபீக்கை தந்தருள்வானாக!

மரணத்தை அதிகம் நினைத்து பாவங்களை விட்டும் தவிழ்ந்து வாழக்கூடிய பாக்கியத்தையும். அறிந்தோ அறியாமலோ பாவங்கள் நிகழ்ந்து விட்டாலும் அதற்கு தவ்பா செய்யக்கூடிய வாய்ப்பையும் தந்தருள்வானாக!

உமர் ( ரலி) சொல்வார்களாம் என்னுடைய நன்மை பாவங்களைவிட. மிகைத்திருக்காவிட்டாலும் இரண்டும் சமமாக இருந்தாலே போதும் என்பார்களாம். அதுபோல அல்லாஹ் நம் பாவங்கள் நன்மைகளைவிட மிகைத்துவிடாமல் பாதுகாப்பானாக!

ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கக்கூடிய நற்பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் அல்லாஹ்  தந்தருள்புரிவானாக! ஆமீன்.