بسم الله الرحمن الرحيم
மரணத்தை நீ மறக்கலாமா?
***********************************
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ
مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ
وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
(القران62:8)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ
اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ - سنن الترمذي
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின்
நல்லடியார்களே! நாம் வாழுகின்ற இந்த காலத்தில் மரணம் எவ்வளவு விரைவாகவும்
வேகமாகவும் மனித இனத்தை தழுவிக் கொண்டிருக்கிறது என்பதை அன்றாட நிகழ்வாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
மிகச் சிறிய வயதில் கூட இறப்பை சந்திக்ககூடிய
நிலையை நாம் காண்கின்றோம்.இந்த சமுதாயம் முன்னால் சென்ற சமுதாயத்தைப் போன்று நீண்ட
ஆயுட்காலம் கொடுக்கப்பட்டவர்களல்ல. இந்த சமுதாயம்
மிக குறைந்த ஆயுட்காலம் கொடுக்கப்பட்ட சமுதாயம் அதிலும் இருபது வயது முப்பது
வயதிலும் மரணம் வந்தடையக்கூடிய நிலையையும் நாம் பார்க்கமுடிகிறது.
நபி நூஹ் அலை அவர்கள் ஒரு வயதான மூதாட்டியை
கடந்து செல்கிறார்கள். அந்த மூதாட்டி அழுது கொண்டிருப்பதைக் கண்டு ஏன்அழுகின்றீர்
எனக்கேட்கின்றார்கள். அதற்கு அம்மூதாட்டி என் மகன் சிறுவயதிலேயே
இறந்து விட்டான் என்கிறாள். உன் மகனுக்கு எத்தனை வயது என்றார்கள். முன்னூறு வயது
என்றால் மூதாட்டி. பின்பு ஒரு சமுதாயம் வருவார்கள் அவர்களின் ஆயுட்காலமே
அறுபதிற்கும் எழுபதிற்கும் இடைப்பட்டகாலம்தான் என்றார்கள் நூஹ் நபியவர்கள்.
இதைக்கேட்ட மூதாட்டி அப்படியானால் அந்த மக்களுக்கு வீடுகட்ட தேவையில்லை வியாபாரம்
செய்ய தேவையில்லை உலகத்தில் வந்து அமல் செய்துவிட்டு இறந்தால் போதுமே
என்றார்களாம். இதைக்கேட்ட நூஹ் (அலை )அவர்கள் இல்லை இல்லை அவர்களுக்குத்தான்
உலகஆசை மிக அதிகமாக இருக்கும் என்றார்கள்.
ஆனால் இப்பொழுதுள்ள ஆயுட்காலம் அறுபதையும்
எழுபதையும் அடைவது கூட கடினமாக உள்ளது 20 வயதிலும் 30 வயதிலும் மரணம் வந்தடைகிறது இந்த நிலையிலும் நாம் மரணத்தைக் கண்டு படிப்பினை
பெற தயாரில்லை. சில
சஹாபாக்கள் சொல்வார்கள்
"كفي باالموت واعظا"
ஒரு மனிதன் உபதேசம் பெறுவதற்கு மரணம் ஒன்றே
போதும் மரணத்தை விட சிறந்த உபதேசி கிடையாது என்பார்கள்.
பல சஹாபாக்கள் இந்த வாசகத்தை தங்களின்
மோதிரக்கல்லிலே பதிந்துள்ளார்கள்.
உமர் ரலி அவர்களின் மோதிரத்திலும் இவ்வாறு
எழுதப்பட்டிருந்தது.
كفي باالموت واعظا ياعمر ( موطا مالك)
இந்த மரண சிந்தனையைக் கொண்டு எத்தனையோ
திருடர்களும் பாவிகளும் திருந்தி இருக்கின்றார்கள்.
எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும் ஆண்டியாக
இருந்தாலும் மரணத்தை விட்டும் தப்பிக்க முடியாது.
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ
مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ
وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
“நீங்கள் எதை
விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ,
அந்த மரணம் நிச்சயமாக
உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும்
பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 62:8)
மரணம் எந்த நேரமும் வரலாம் காலை நேரத்தை
அடைந்தவன் மாலையை அடைவான் என்று உறுதி கூற முடியாது.
6416- صحيح البخاري عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي فَقَالَ: ((كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ
غَرِيبٌ، أَوْ عَابِرُ سَبِيلٍ)). وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ إِذَا أَمْسَيْتَ
فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ الْمَسَاءَ،
وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ.
6416. அப்துல்லாஹ் இப்னு
உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப்
பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு“ என்றார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) “நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை
அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய
ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய
நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு“ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. (நெகிழ்வூட்டும் அறவுரைகள்)
மரண சிந்தனைதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. மரண நேரம்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில்
ஆக கைசேதப்படுகிற நேரமாகும்.
உலகத்தினுடை பெரும் ஆட்சியாளர்களில் ஒருவர்
"மர்வான் இப்னு ஹகம்" அவர் இறக்கும் நேரத்திலே தன்னுடைய வீட்டு மாடியில்
இருந்து ஒரு வண்ணானை பார்க்கின்றார் அழுக்கு துணிகளையெல்லாம் வீடு வீடாக தட்டிக்
கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கின்றார். ياليتني كنت غسالا நான் இந்த வண்ணானைப் போன்று வாழ்க்கை நடத்தி இருக்க கூடாதா! இந்த
ஆட்சி அதிகாரங்களை ஏற்றதால் நாளை மறுமைநாளில் இந்த மக்களைப்பற்றி அனைத்து
கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டுமே! என்று கவலைப்பட்டாராம்.
யார் அறிவாளி
******************
மரணத்தை அதிகம் நினைத்து மறுமைக்கான
தயாரிப்பை அதிகம் செய்பவரே அறிவாளி
١٣١- عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ
النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ
الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي
اللّٰهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن باب حديث الكيس
من دان نفسه...، رقم: ٢٤٥٩
131. “எவர் தன்னைக்
கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான்
புத்திசாலி - எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை
மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர்
அறிவற்றவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத்
ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ
عُمَرَ، أَنَّهُ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ
الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» ، قَالَ: فَأَيُّ
الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا،
وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا، أُولَئِكَ الْأَكْيَاسُ» - سنن ابن
ماجه
இத்தகைய மரணங்களைக் கண்டும் ஒருவர்
திருந்தவில்லை என்றால் அவருடைய இதயம் முத்திரையிடப்பட்ட இதயமாகும்.
"طبع علي قلوبهم فهم لا يفقهون"⚪
ஒரு மனிதன் மரணநேரத்தில் பயமில்லாமல்
திடுக்கமில்லாமல் கவலையில்லாமல் அல்லாஹ்வைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல்
இவ்வுலகைவிட்டு பிரிகிறான் என்றால் அவனுடைய
வாழ்க்கையினுடைய ஆக பொன்னான நேரம் அது தான்.
இதைத்தான் நம்முடைய மூத்த உலமாக்களும்
சொல்லித் தந்தார்கள். ஒரு மனிதன் கேட்கக்கூடிய துஆக்களில் மிகச்சிறந்த துஆ
எதுவென்றால்
யா அல்லாஹ் நான் மரணிக்கின்றபோது எந்த பயமும்
இருக்கக்கூடாது. எந்த திடுக்கமும் இருக்க கூடாது. துன்யாவுடைய எந்த சிந்தனையும்
இருக்க கூடாது. உன்னுடைய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் என்று அதிகம் துஆச்
செய்யுமாறு கற்றுத்தந்துள்ளார்கள்.
பிலால் ரலி அவர்களின் மரணநேரம் அருகிலிருந்த
அவர்களின் மனைவி واحزناه
எனக்கு வந்த கைசேதமே! என்றார்கள். இதைக்கேட்ட பிலால் ரலி அவர்கள் وافرحاه இது கவலைக்குரிய நேரமல்ல
சந்தோஷத்திற்குரிய நேரமாகும் நான் பெருமானார் ( ஸல்) அவர்களையும் என்னுடைய
தோழர்களையும் அனைத்திற்கும் மேலாக அல்லாஹ்வையும் நான் சந்திக்கப்போகின்றேன் இது
சந்தோஷத்திற்குரிய நேரம் என்றார்கள்.
قال رسول الله صلي الله عليه وسلم : "الموت
تحفة للمؤمن" (رواه البيهقي في شعب الإيمان )
மரணம் என்பது ஒரு முஃமினுக்கு கிடைக்கும்
பரிசாகும்.
رواه البخاري ومسلم في صحيحيهما كما رواه
غيرهما، ولفظه عن أبي هريرة قال: أرسل ملك الموت إلى موسى عليهما السلام، فلما
جاءه صكه ففقأ عينه، فرجع إلى ربه فقال: أرسلتني إلى عبد لا يريد الموت، قال: فرد
الله إليه عينه وقال: ارجع إليه فقل له يضع يده على متن ثور فله بما غطت يده بكل
شعرة سنة، قال: أي رب ثم ماذا؟ قال: ثم الموت، قال: فالآن، فسأل الله أن يدنيه من
الأرض المقدسة رمية بحجر، فقال رسول الله صلى الله عليه وسلم: فلو كنت ثم لأريتكم
قبره إلى جانب الطريق تحت الكثيب الأحمر.
மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் எதையும்
உரிமையோடு பேசுபவர்களாக இருந்தார்கள்.
அவர்களுக்கு மரண நேரம் நெருங்கியபொழுது
மலக்குல் மௌத் அவர்களின் உயிரை கைப்பற்ற வருகிறார். அப்போது
மலக்குல் மௌத்தை மூஸா அலை அடித்துவிடுகின்றார்கள். அந்த
மலக்கிடத்தில் மூஸா அலை கேட்டார்களாம் நான் அல்லாஹ்வின் நபியாக இருக்கின்றேன் நான்
அல்லாஹ்வின் நேசனாக இருக்கின்றேன் எப்படி என் உயிரை அல்லாஹ் கைப்பற்ற
விரும்புகிறான் என்றார்கள். இதை மலக்குல்மௌத் அல்லாஹ்விடம் சென்றுகூற அல்லாஹ்
இவ்வாறு பதில் சொல்லியனுப்பினான் ஒரு நண்பன் தன் நண்பனை சந்திக்க விரும்பமாட்டானா? என்றான் மேலும் முஸா (அலை) அவர்கள் தன்னுடைய கையை
ஒரு கால்நடையின் முடியின்மீது வைக்கட்டும் தன் கையிற்குள் எத்தனை முடி
உள்ளடங்குகிறதோ அதில் ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் ஆயுள் கொடுக்கப்படும்
அதற்குப்பிறகு மரணம் என்றான்.
இதைக்கேட்டமூஸா
அலை அவர்கள் என்றைக்காவது ஒருநாள் மரணத்தை சந்தித்தாக வேண்டுமானால் நான் என் ரப்பை
இப்பொழுதே சந்திக்க விரும்புகிறேன் என்றார்கள்.
மரணம் என்பது ஒரு நண்பனை தன்
நண்பனோடு சேர்த்துவைக்கும் வழியாகும் நல்லடியார்களுக்கும் நபிமார்களுக்கும் மரணம்
என்பது ஒரு تحفة வாகும்.
உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல் இருக்க சிறந்த
வழி
****************************************
இந்த உலகிலுள்ள பாக்கியங்களில், இன்பங்களில், சுகங்களில் நம் உள்ளங்கள் லயித்து விடாமலும்
மறுமையின் பாக்கியங்களில் ஆர்வம் கொண்டு வாழும் படியும் இறைவன் நம்மை பணிக்கிறான்.
இந்த தன்மை நம்மிடம் வரவேண்டுமென்றால் நமக்கு
மரண சிந்தனை இருக்க வேண்டும்.
عَنْ، الرَّبِيعِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَوْتِ مُزَهِّدًا فِي الدُّنْيَا
وَمُرَغِّبًا فِي الْآخِرَةِ»- مصنف ابن أبي شيبة
“உலகப் பற்றை
நீக்கி மறுமை காரியங்களில் ஆர்வமூட்ட மரணம் (பற்றிய சிந்தனையே) போதும்”. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸன்னஃப்
இப்னு அபீ ஷைபா)
மரண சிந்தனை மனிதனை சீர்படுத்தும் ஒரு சிறந்த
வழி.எனவேதான் அதை அதிகமதிகம் ஞாபகத்தில் வைத்திருக்கும்படி அல்லாஹ்வும் ரஸூலும்
(ஸல்) பணித்திருக்கிறார்கள்.
அதிகம் நினைத்துப் பார்க்கும்படி ஹதீஸ்
கூறும் விஷயங்கள்.
**********************
1 மரணம் 2 அல்லாஹ்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ
اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ - سنن الترمذي
இன்பங்களை முறிக்கும் மரணத்தை அதிகம்
நினையுங்கள் என்று அண்ணல் நபி( ஸல்) கூறியுள்ளார்கள்.
عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " أَكْثِرُوا ذِكْرَ اللهِ حَتَّى يَقُولُوا: مَجْنُونٌ
- مسند أحمد
உன்னை பைத்தியக்காரன் என்று சொல்லும்
அளவிற்கு அல்லாஹ்வை அதிகம் திக்ரு ( நினைப்பீராக) செய்வீராக!
எந்நேரமும் மரணம் நினைவில் இருக்க எளிய பல
நடைமுறைகளை வகுத்துத் தந்துள்ளது நம் மார்க்கம்.
வாகனத்தில் பயணிக்கும் முன் ஓதும் துஆவின்
மூலம்
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى
سَفَرٍ، كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا،
وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ،۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
صحيح مُسلم
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا
كُنَّا لَهُ مُقْرِنِينَ (13) وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
[الزخرف: 14]
ரப்பின் பக்கமே நாம் செல்லக்கூடியவர்களாக
இருக்கின்றோம். இவ்வாறு ஒதுவதின் மூலம் மரண சிந்தனை ஏற்படும்.
துன்பமான விஷயம் நடந்தால் ஓதும் துஆவின்
மூலம்
الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ
قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ - البقرة: 156
وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «مَنِ اسْتَرْجَعَ عِنْدَ الْمُصِيبَةِ جَبَرَ اللهُ مُصِيبَتَهُ،
وَأَحْسَنَ عُقْبَاهُ، وَجَعَلَ لَهُ خَلَفًا صَالِحًا يَرْضَاهُ»- المعجم الكبير
للطبراني
ஜனாஸாவில் கலந்து கொள்வதன் மூலம்
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُودُوا الْمَرِيضَ، وَاتَّبِعُوا الْجِنَازَةَ
تُذَكِّرُكُمُ الْآخِرَةَ»- مصنف ابن أبي شيبة
கப்ர் ஜியாரத்துக்கு செல்வதன் மூலம்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زُورُوا الْقُبُورَ؛ فَإِنَّهَا
تُذَكِّرُكُمُ الْآخِرَةَ»- سنن ابن ماجه
அங்கு சொல்லும் ஸலாம் வாக்கியத்தின் மூலம்
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ: «السَّلَامُ
عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ
لَاحِقُونَ» صحيح مُسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்(ஒரு நாள்)
மையவாடிக்குப்புறப்பட்டார்கள். (அங்கு போய்)அஸ்ஸலாமு அலைக்கும் தார
கவ்மின்முஃமினீன்; வ இன்னா இன்ஷாஅல்லாஹு பி(க்)கும்
லாஹிகூன்(அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி
பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து
சேருபவர்கள்தாம்)என்று கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹ்
முஸ்லிம்)
தூங்கச்செல்லும் போதும் தூங்கி
விழிக்கும்போதும் ஓதும் துஆவின் மூலம்
6314 - عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ
مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ، وَضَعَ يَدَهُ تَحْتَ خَدِّهِ، ثُمَّ يَقُولُ:
«اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا اسْتَيْقَظَ قَالَ: «الحَمْدُ
لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»- صحيح
البخاري
6314. ஹுதைஃபா
இப்னுஅல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குஉறங்கச்
சென்ற பின்னால் தம் (வலக்)கையைத் தம் (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக்
கொள்வார்கள். பிறகு, 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியேஇறக்கிறேன்; உயிர் வாழவும்செய்கிறேன்) என்று கூறுவார்கள்.உறக்கத்திலிருந்து எழும்போது'அல்ஹம்து லில்லாஹில்லதீ
அஹ்யானா பஅத மா
அமாத்தனா
வஇலைஹிந்நுஷூர்' (எல்லாப் புகழும்அல்லாஹ்வுக்கே. அவன் எங்களைஇறக்கச்
செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான்.
மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி)
அவனிடமே செல்லவேண்டியுள்ளது)என்று கூறுவார்கள்.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும்
உலக மோகங்களில் மூழ்கிவிடாமல் பாதுகாப்பானாக!
மரணத்திற்கு பின்புள்ள வாழ்க்கைக்காக நல்
அமல் செய்யக்கூடிய தவ்ஃபீக்கை தந்தருள்வானாக!
மரணத்தை அதிகம் நினைத்து பாவங்களை விட்டும்
தவிழ்ந்து வாழக்கூடிய பாக்கியத்தையும். அறிந்தோ அறியாமலோ பாவங்கள் நிகழ்ந்து
விட்டாலும் அதற்கு தவ்பா செய்யக்கூடிய வாய்ப்பையும் தந்தருள்வானாக!
உமர் ( ரலி) சொல்வார்களாம் என்னுடைய நன்மை
பாவங்களைவிட. மிகைத்திருக்காவிட்டாலும் இரண்டும் சமமாக இருந்தாலே போதும்
என்பார்களாம். அதுபோல அல்லாஹ் நம் பாவங்கள் நன்மைகளைவிட மிகைத்துவிடாமல்
பாதுகாப்பானாக!
ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கக்கூடிய
நற்பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் அல்லாஹ் தந்தருள்புரிவானாக!
ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.