தப்புக் கணக்கை திருத்துவோம்.
بسم الله الرحمن الرحيم.
இணைவைப்பை முற்றிலும் தவிர்ந்து கொள்ள
வேண்டும்.
(அது மட்டும்
போதாது) அத்து அல்லாஹ் & ரஸூல் (ஸல்) அவர்களின் ஏனைய கட்டளைக்கும் கட்டுப் பட்டு நடக்க வேண்டும். செய்த நன்மை அழிந்து விடாமல் பாதுகாக்க
வேண்டும் .
எனவே தன்னைப் பற்றியோ பிறறைப் பற்றியோ
தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது ,
அவ்வப்போது அமலை-சொல் & செயலை சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ,
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا
اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللّٰهَ
اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப்
பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப்
பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள்
செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 59:18),
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا
كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا
وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا .
முஃமின்களே! (சந்தேகமான) பல
எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில்
நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை)
நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்,
(அல்குர்ஆன் : 49:12)
@@@@@@@@@
சிலதை மட்டும் உரை கல்லில்
உரசி சுயப் பரிசோதனை செய்வோம்,
@@@@@@@
1 . எதில் அதிகம்
உபயோகின்றோம்
ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ
النَّعِيْمِ
(உங்களுக்கு
இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.(அல்குர்ஆன் : 102:8).
اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ
اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின்
செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.
(அல்குர்ஆன் : 17:36)
வாய்-நாவு & கைவிரல் & கண் & காது & இன்டர்நெட் (mp - gb) 24மணி நேரத்தில் அதிகம் உபயோகிப்பது ?
திக்ர்/குர்ஆன்/தஸ்பீஹ் வேண்டியா.
டிவி / வாட்ஸாப் /பேஸ்புக் வேண்டியா ?
@@@@@@@
2 . மக்கள்
உங்களுடன் இருக்க நினைக்கிறாங்களா . தப்பிச்சு ஓட நினைக்கிறார்களா ?
«ﻳﺎ ﻋﺎﺋﺸﺔ، ﻣﺘﻰ ﻋﻬﺪﺗﻨﻲ ﻓﺤﺎﺷﺎ، ﺇﻥ ﺷﺮ
اﻟﻨﺎﺱ ﻋﻨﺪ اﻟﻠﻪ ﻣﻨﺰﻟﺔ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﻣﻦ ﺗﺮﻛﻪ اﻟﻨﺎﺱ اﺗﻘﺎء ﺷﺮﻩ.
6032. ஆயிஷா(ரலி)
அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள்
வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவர் அந்தக்
கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்'
என்று
(என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் மலர்ந்த
முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான்
(நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும்
தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக
நடந்து கொண்டீர்களே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்)விட்டு விடுகிறார்களோ
அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்' என்று கூறினார்கள். 47
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
@@@@@@@
3 . கண்டிப்பு / தவறை சுட்டிக் காட்டுதலின் போது ? நலினமா & கடினமா எதை கையாளுகின்றாய்,
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ
يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது அஞ்சக்கூடும்.”
(அல்குர்ஆன் : 20:44)
وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا
عُوْقِبْتُمْ بِهٖ وَلَٮِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ
(நம்பிக்கையாளர்களே!
உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் துன்புறுத்தக்
கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள்.
(அதற்கு அதிகமாக செய்யக்கூடாது. தவிர, உங்களைத்
துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துச் சகித்துக்கொண்டாலோ அது சகித்துக்
கொள்பவர்களுக்கு மிக்க நன்றே!
(அல்குர்ஆன் : 16:126),
நீ மூஸா (அலை)அவா்களை விட சிறந்தவனோ
கோபக்காரனா !
அவா்கள் பிா்அவ்னை விட பெரிய தப்பை செய்து
விட்டாா்களா ?
@@@@@@@
4 . மனக்குமுறல் வாங்கி கெட்டிக்கொள்கிறீா்களா ?
«اﺗﻖ ﺩﻋﻮﺓ اﻟﻤﻈﻠﻮﻡ، ﻓﺈﻧﻬﺎ ﻟﻴﺲ ﺑﻴﻨﻬﺎ ﻭﺑﻴﻦ
اﻟﻠﻪ ﺣﺠﺎﺏ.
2448. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு
(உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு
உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி
வைத்தபோது கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்.
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ: «ﺻﻨﻔﺎﻥ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻨﺎﺭ ﻟﻢ ﺃﺭﻫﻤﺎ، ﻗﻮﻡ ﻣﻌﻬﻢ ﺳﻴﺎﻁ ﻛﺄﺫﻧﺎﺏ اﻟﺒﻘﺮ ﻳﻀﺮﺑﻮﻥ ﺑﻬﺎ
اﻟﻨﺎﺱ، ﻭﻧﺴﺎء ﻛﺎﺳﻴﺎﺕ ﻋﺎﺭﻳﺎﺕ ﻣﻤﻴﻼﺕ ﻣﺎﺋﻼﺕ، ﺭءﻭﺳﻬﻦ ﻛﺄﺳﻨﻤﺔ اﻟﺒﺨﺖ اﻟﻤﺎﺋﻠﺔ، ﻻ ﻳﺪﺧﻠﻦ
اﻟﺠﻨﺔ، ﻭﻻ ﻳﺠﺪﻥ ﺭﻳﺤﻬﺎ، ﻭﺇﻥ ﺭﻳﺤﻬﺎ ﻟﻴﻮﺟﺪ ﻣﻦ ﻣﺴﻴﺮﺓ ﻛﺬا ﻭﻛﺬا»
4316. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த
இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட)
சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து
இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர்
யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய
ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப்
போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ
இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்.
கண்ப்பது / தண்டிப்பது இதிலும் வரம்பு
மீருதல் /அக்கிரமம் /அநீதம் செய்தல் /
பிறரின் மனவருத்தம் இவைகள் இருந்தால்
சொர்க்கம் கேள்விக் குறியாகி விடும்.
@@@@@@@
5 . பூனைக்கும் ஒரு
காலம் வரும்.
3414. அபூமஸ்ஊத்
அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) என் அடிமையை
அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ,
«اﻋﻠﻢ، ﺃﺑﺎ ﻣﺴﻌﻮﺩ، ﻟﻠﻪ ﺃﻗﺪﺭ ﻋﻠﻴﻚ ﻣﻨﻚ
ﻋﻠﻴﻪ»، ﻓﺎﻟﺘﻔﺖ ﻓﺈﺫا ﻫﻮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ،
"அபூ மஸ்ஊதே
நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம்
உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான்
திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே
நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக
(இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ
இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது
"நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 27. சத்தியங்கள்
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் வரம்புமீறினால்
உலகிலேயே (பழிவாங்க) நம் மீது அப்படி நிலை வந்து விடலாம் ,
வராமல் தப்பித்து விட்டாலும் மறுமையில்
கண்டிப்பாக மாட்டிக் கொள்ளலாம் ,
@@@@@@@
6 . சொர்க்கமா /
நரகமா ?
ﻗﺎﻝ: «ﻫﺬا ﺃﺛﻨﻴﺘﻢ ﻋﻠﻴﻪ ﺧﻴﺮا، ﻓﻭﺟﺒﺖ ﻟﻪ اﻟﺠﻨﺔ،
ﻭﻫﺬا ﺃﺛﻨﻴﺘﻢ ﻋﻠﻴﻪ ﺷﺮا، ﻓﻭﺟﺒﺖ ﻟﻪ اﻟﻨﺎﺭ، ﺃﻧﺘﻢ ﺷﻬﺪاء اﻟﻠﻪ ﻓﻲ اﻷﺭﺽ.
1367. அனஸ்(ரலி)
அறிவித்தார்.
ஒரு முறை, மக்கள் ஒரு
ஜனாஸாவைக் கடந்து சென்றபோது,
இறந்தவரின்
நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்)
கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர்.
அப்போதும் நபி(ஸல்) அவர்கள்,
'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது
உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக்
கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில்
அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்'
எனக்
கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாய ம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்.
உங்களை வாழ்த்துபவர்கள் அதிகமா? வெறுத்து ஒதுங்குபவா்களா அதிகமா ?
பரிசோதித்து கொள்ள வேண்டும் ,
@@@@@@@
7 . நல்அமல் நிறையவே
செய்துள்ளேன் என தப்புக்கணக்கு வேண்டாம்.
قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ
اَعْمَالًا
"(பாவமான)
காரியத்தில் இவர்களைவிட நஷ்ட
மடைந்தவர்களை
நாம் உங்களுக்கு அறிவிக்கவா?"
என்று நீங்கள்
கேளுங்கள்.
(அல்குர்ஆன் : 18:103)
اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ
الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا
அவர்கள் (யாரென்றால்) இவ்வுலகில் தவறான
வழியிலேயே முயற்சி செய்துகொண்டு,
தாங்கள்
மெய்யாகவே நல்ல காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 18:104)
🤡🤡🤡
கைக்கு எட்டி வாயிக்கு எட்டவில்லை என்ற கதையாகிடாமல் கொஞ்சம் செய்திருந்தாலும் அது அழியாமல் பாதுகாப்பது முக்கியம்.
وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ
فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا
(இம்மையில்)
அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் யாதொரு நன்மையும்
இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்.
(அல்குர்ஆன் : 25:23).
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ،
ﻗﺎﻝ: «ﺃﺗﺪﺭﻭﻥ ﻣﺎ اﻟﻤﻔﻠﺲ؟» ﻗﺎﻟﻮا: اﻟﻤﻔﻠﺲ ﻓﻴﻨﺎ ﻣﻦ ﻻ ﺩﺭﻫﻢ ﻟﻪ ﻭﻻ ﻣﺘﺎﻉ، ﻓﻘﺎﻝ: «ﺇﻥ
اﻟﻤﻔﻠﺲ ﻣﻦ ﺃﻣﺘﻲ ﻳﺄﺗﻲ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺑﺼﻼﺓ، ﻭﺻﻴﺎﻡ، ﻭﺯﻛﺎﺓ، ﻭﻳﺄﺗﻲ ﻗﺪ ﺷﺘﻢ ﻫﺬا، ﻭﻗﺬﻑ ﻫﺬا،
ﻭﺃﻛﻞ ﻣﺎﻝ ﻫﺬا، ﻭﺳﻔﻚ ﺩﻡ ﻫﺬا، ﻭﺿﺮﺏ ﻫﺬا، ﻓﻴﻌﻄﻰ ﻫﺬا ﻣﻦ ﺣﺴﻨﺎﺗﻪ، ﻭﻫﺬا ﻣﻦ ﺣﺴﻨﺎﺗﻪ، ﻓﺈﻥ
ﻓﻨﻴﺖ ﺣﺴﻨﺎﺗﻪ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﻘﻀﻰ ﻣﺎ ﻋﻠﻴﻪ ﺃﺧﺬ ﻣﻦ ﺧﻄﺎﻳﺎﻫﻢ ﻓﻄﺮﺣﺖ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﻃﺮﺡ ﻓﻲ اﻟﻨﺎﺭ»
5037. அபூஹுரைரா (ரலி)
அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் "المفلس முfப்லிஸ்-) திவாலாகிப்போனவன் என்றால் யார்
என்று உங்களுக்குத் தெரியுமா?"
என்று
கேட்டார்கள். மக்கள், "யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ
இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்)
அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது
பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார்.
ஒருவரை அடித்திருப்பார். ஆகவே,
அவருடைய
நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில
அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன்
நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின்
பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது
போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே
திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி
வாழ்வதும் .
நல்அமல் செய்ய வாய்ப்பை தந்து அதை
அழிந்திடாமல் பாதுகாத்து கபூல் ஆக்குவானாக,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.