உண்மை வானுயர உயர்த்தும்.
பொய்மை
புதைத்து விடும் .
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ 9:11
٤٣- عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍؓ قَالَ: قَالَ
رَسُوْلُ اللهِ ﷺ: كَفَي بِالْمَرْءِ كَذِبًا اَنْ يُحَدِّثَ
بِكُلِّ مَا سَمِعَ.رواه ابوداود
1 . பொய்மை கூடாது
ஏப்ரல் முட்டாள் தின
சிந்தனை
ஏப்ரல் 1 ஐ முட்டாள் தினமாகவும் ஏமாற்று தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று
ஏப்ரல்பூல் என்று சொல்வது கூடாது , இதுவும் ஒரு ஏமாற்று ஆகும் ,
இது உருவானதற்கான காரணம்
கூறுகையில் ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டுமுதல்
கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி
புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல்
எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே
இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளையும் ஏமாற்றுதலையும் உலகம் முழுவதும் பரப்பி வந்தனர் இதுவே
இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வதந்திகளைபரப்புவது. ஏமாற்றுவது. ஏமாறுவது
இவையனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டஒன்று
பொய் ஏமாற்று மோசடி இவைகள்
முனாபிக்கின் தன்மைகள் .
எனவே தான் مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا எவன் ஏமாற்றுகிறானோ (மோசடி செய்கிறானோ) அவன் நம்மை (-இஸ்லாத்தை )சார்ந்தவன் அல்ல (திர்மிதி 1236).
எனவே தான் مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا எவன் ஏமாற்றுகிறானோ (மோசடி செய்கிறானோ) அவன் நம்மை (-இஸ்லாத்தை )சார்ந்தவன் அல்ல (திர்மிதி 1236).
காமெடி -தமாஷ்க்காக கூட
பொய் கூடாது ,
பொய்யின் விடிவு ?
பொய்யின் விடிவு ?
عَنْ مُعَاوِيَةَ بْنِ
حَيْدَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: وَيْلٌ لِلَّذِيْ يُحَدِّثُ
بِالْحَدِيْثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ،وَيَلٌ لَهُ وَيْلٌ لَهُ.
36. மக்களைச் சிரிக்க
வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்கு நாசம் தான் உண்டாகும், அவனுக்கு நாசம் தான்! அவனுக்கு நாசம் தான்!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம்
கேட்டதாக ஹஜ்ரத் முஆவியத்துப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ & அபூதாவூத் 4990 )Via Munthakhab Ahadees.
(திர்மிதீ & அபூதாவூத் 4990 )Via Munthakhab Ahadees.
من ابي داؤد 4991
ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺎﻣﺮ، ﺃﻧﻪ ﻗﺎﻝ: ﺩﻋﺖﻧﻲ ﺃﻣﻲ ﻳﻮﻣﺎ ﻭﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻋﺪ
ﻓﻲ ﺑﻴﺘﻨﺎ، ﻓﻘﺎﻟﺖ: ﻫﺎ ﺗﻌﺎﻝ ﺃﻋﻄﻴﻚ، ﻓﻘﺎﻝ ﻟﻬﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻭﻣﺎ
ﺃﺭﺩﺕ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ؟» ﻗﺎﻟﺖ: ﺃﻋﻄﻴﻪ ﺗﻤﺮا، ﻓﻘﺎﻝ ﻟﻬﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻣﺎ
ﺇﻧﻚ ﻟﻮ ﻟﻢ ﺗﻌﻄﻪ ﺷﻴﺌﺎ ﻛﺘﺒﺖ ﻋﻠﻴﻚ ﻛﺬﺑﺔ
அப்துல்லாஹ்பின் ஆமிர் ரலி
அறிவிக்கின்றார்கள்
என்னுடைய தாய் எனக்கு ஒன்று தறுவதாக கூறி என்னை அழைத்தார்கள் அந்த சமயம் நபியவர்களும் எங்களுடைய வீட்டில்தான் இருந்தார்கள் இதைக்கேட்ட நபி( ஸல்) அவர்கள் நீ உன்மகனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நாடித்தான் அழைத்தீரா? என்றார்கள் ஆம் ஒரு பேரித்தம்பழம் கொடுக்க நாடியுள்ளேன் என்று என் தாய் கூறியதும் (அப்படியானால் சரி) நீ எதையும் கொடுக்கவில்லையானால் பொய் சொன்ன குற்றம் உமக்கு வந்து சேரும் என்றார்கள்..

2 . @@@@@@@
உண்மையின் உறைவிடம் சுவனம்,
பொய்மையின் புதைக்குழி நரகமே.
பொய்மையின் புதைக்குழி நரகமே.
ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﺼﺪﻕ ﻳﻬﺪﻱ ﺇﻟﻰ اﻟﺒﺮ، ﻭﺇﻥ اﻟﺒﺮ ﻳﻬﺪﻱ ﺇﻟﻰ اﻟﺠﻨﺔ، ﻭﺇﻥ اﻟﺮﺟﻞ ﻟﻴﺼﺪﻕ ﺣﺘﻰ
ﻳﻜﻮﻥ ﺻﺪﻳﻘﺎ. ﻭﺇﻥ اﻟﻜﺬﺏ ﻳﻬﺪﻱ ﺇﻟﻰ اﻟﻔﺠﻮﺭ، ﻭﺇﻥ اﻟﻔﺠﻮﺭ ﻳﻬﺪﻱ ﺇﻟﻰ اﻟﻨﺎﺭ، ﻭﺇﻥ اﻟﺮﺟﻞ
ﻟﻴﻜﺬﺏ ﺣﺘﻰ ﻳﻜﺘﺐ ﻋﻨﺪ اﻟﻠﻪ ﻛﺬاﺑﺎ»
6094. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்'
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார்.

(இதைப்
போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக்
கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும்
பொய்யர்' எனப் பதிவு
செய்யப்பட்டுவிடுவார்
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
@@@@@@@
புதைக்குழி செல்லும்
பாதாளம்,
பொய்யாக புனைந்து
புழுகியதால் விளைவு ;
1. பொய் அது மருமகளைப் பற்றியதால் கணவருடன் விரிசல்,இறுதியில் மணவிலக்கு
2.மாமியார் பற்றியதால் பெற்ற தாய் / தந்தை உடன் பகைமை, இறுதியில் முதியோர் இல்லம்,
1. பொய் அது மருமகளைப் பற்றியதால் கணவருடன் விரிசல்,இறுதியில் மணவிலக்கு
2.மாமியார் பற்றியதால் பெற்ற தாய் / தந்தை உடன் பகைமை, இறுதியில் முதியோர் இல்லம்,
இவ்வாறு பொய்
(பாவம்-தீய-கெட்ட)துக்கு தள்ளி விட்டு இறுதியில் நரகம்.
3 . சில மனிதர்கள் கெட்ட தொடர்புகளில் இருந்து
கொண்டு அவர்களை விசாரிக்கும் போது நான் அப்படி இல்லவே இல்லை என்று அபட்டமாக
பொய்யுரைத்து அந்த தவற்றை விட்டும் மீலாமல் இருப்பதின் மூலம் அந்த குடும்பத்திற்கு
அவப்பெயரை பெற்று கேவலத்திற்குள்ளாகி குடும்ப மானத்தை சந்தி சிறிக்க
வைக்கிறது.நரகம் வரை சேர்த்து விடுகிறது .
எனவே பொய்மையை கைவிடுவோம்,
எனவே பொய்மையை கைவிடுவோம்,
3 . @@@@@@@
பொய்மையை கைவிட்டால்
சுவனம் உறுதி.
عَنْ اَبِيْ اُمَامَةَ
ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَنَازَعِيْمٌ بِبَيْتٍ فِيْ رَبَضِ
الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَاِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِيْ
وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَاِنْ كَانَ مَازِحًا، وَبِبَيْتٍ
فِيْ اَعْلَي الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ. رواه ابوداؤد باب في حسن الخلق رقم:٤٨٠٠
(மூன்று
பேருக்கு) மாளிகையை வாங்கித் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என ரஸூலுல்லாஹி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1.தான்
சத்தியத்தின் மீது இருந்தும், வாதம் புரிவதை
விட்டுவிடும் மனிதருக்கு சுவனத்தின் ஓரத்தில் ஒரு மாளிகை.
2.விளையாட்டாகக்
கூடப் பொய் பேசுவதை தவிர்த்தவருக்கு சொர்க்கத்தின் மத்திய பகுதியில் ஒரு மாளிகை.
3. நல்ல குணத்தை மட்டுமே தனதாக்கிக் கொள்கிறோரோ, அவருக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில்
ஒரு மாளிகை.
என ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்-4800)
என ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்-4800)
ﻋﻦ ﺃﺑﻲ ﺫﺭ، ﻗﺎﻝ: ﺃﻣﺮﻧﻲ
ﺧﻠﻴﻠﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺴﺒﻊ:ﺃﻣﺮﻧﻲ ﺃﻥ ﺃﻗﻮﻝ ﺑﺎﻟﺤﻖ ﻭﺇﻥ ﻛﺎﻥ ﻣﺮا، (1)
__________
(1) ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ، ﻭﻫﺬا ﺇﺳﻨﺎﺩ ﺣﺴﻦ.
__________
(1) ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ، ﻭﻫﺬا ﺇﺳﻨﺎﺩ ﺣﺴﻦ.
அபூதர்(ரலி) சொல்கிறார்கள்
என்னுடைய உற்ற நண்பர் -நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஏழு விஷயங்களை செய்து
வரும்படி கட்டளையிட்டார்கள் அதில் ஒன்று தான்
"எப்போதும்) உண்மையே பேச வேண்டும் ,அது கசப்பாக இருந்தாலும்".
நூல் ; அஹ்மது 21415.
நூல் ; அஹ்மது 21415.
4 . @@@@@@@
நடிகனின் மறு பக்கம் ,
6095 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
ﻗﺎﻝ:
" ﺁﻳﺔ اﻟﻤﻨﺎﻓﻖ ﺛﻼﺙ: ﺇﺫا
ﺣﺪﺙ ﻛﺬﺏ، ﻭﺇﺫا ﻭﻋﺪ ﺃﺧﻠﻒ، ﻭﺇﺫا اﺅﺗﻤﻦ ﺧﺎﻥ "
6095. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்'
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. 1.பேசினால் பொய் சொல்வான்; 2.வாக்களித்தால் மாறு செய்வான்; 3.அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (மோசடி செய்வான்)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. 1.பேசினால் பொய் சொல்வான்; 2.வாக்களித்தால் மாறு செய்வான்; 3.அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (மோசடி செய்வான்)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்.
இதோ ஓர் அபாய சங்கு ,
34ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ:
" ﺃﺭﺑﻊ ﻣﻦ ﻛﻦ ﻓﻴﻪ ﻛﺎﻥ
ﻣﻨﺎﻓﻘﺎ ﺧﺎﻟﺼﺎ، ﻭﻣﻦ ﻛﺎﻧﺖ ﻓﻴﻪ ﺧﺼﻠﺔ ﻣﻨﻬﻦ ﻛﺎﻧﺖ ﻓﻴﻪ ﺧﺼﻠﺔ ﻣﻦ اﻟﻨﻔﺎﻕ ﺣﺘﻰ ﻳﺪﻋﻬﺎ: ﺇﺫا
اﺅﺗﻤﻦ ﺧﺎﻥ، ﻭﺇﺫا ﺣﺪﺙ ﻛﺬﺏ، ﻭﺇﺫا ﻋﺎﻫﺪ ﻏﺪﺭ، ﻭﺇﺫا ﺧﺎﺻﻢ ﻓﺠﺮ "
34. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன்
வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை
விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும்.
1.நம்பினால் துரோகம் செய்வான்; 2.பேசினால் பொய்யே பேசுவான்; 3.ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; 4.விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை.

அந்த செயல் உள்ளோரின்
பரிதாப நிலை,
اِنَّ الْمُنٰفِقِيْنَ
فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்
நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி
செய்யும் எவரையும் நீங்கள் !காணமாட்டீர்கள். (அல்குர்ஆன்
: 4:145)
5 . @@@@@@@
பரீட்சையிலும் காப்பியடித்தல் கூடாது
6095 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
ﻗﺎﻝ:
" ﺁﻳﺔ اﻟﻤﻨﺎﻓﻖ ﺛﻼﺙ: ﺇﺫا
ﺣﺪﺙ ﻛﺬﺏ، ﻭﺇﺫا ﻭﻋﺪ ﺃﺧﻠﻒ، ﻭﺇﺫا اﺅﺗﻤﻦ ﺧﺎﻥ "
நம்பினால் மோசடி-ஏமாற்று செய்வான் (இதுவும்
முனாபிக்கின் அடையாளங்களில் ஒன்று , நூல் புகாரி6095.)
٣٠٠- عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ
اللهِ ﷺ مَرَّ
عَلَي صُبْرَةِ طَعَامٍ، فَاَدْخَلَ يَدَهُ فِيْهَا، فَنَالَتْ اَصَابِعُهُ
بَلَلاً، فَقَالَ: مَا هذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: اَصَابَتْهُ
السَّمَاءُ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ
الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيْ.
300.ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் ஒரு
தானியக் குவியலைக் கடந்து சென்ற போது, தமது புனிதமான கரத்தை அக்குவியலுள் நுழைத்ததும், கையில் ஈரத்தை உணர்ந்தார்கள்.இந்த ஈரம்
எப்படி வந்தது?'' என ரஸூலுல்லாஹி (ஸல்)
அந்தத் தானிய வியாபாரியிடம் கேட்டதற்கு. யாரஸூலல்லாஹ், மழையில் தானியம் நனைந்துவிட்டது'' என்றார் அவர். நனைந்த தானியத்தை, அதை வாங்குபவர் பார்க்கும்படி குவியலின்
மேற்பகுதியில் ஏன் நீர் மாற்றவில்லை? எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல'' (என்னைப் பின்பற்றுபவரில் உள்ளவரல்ல) என்று
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் ; ஸஹீஹ் முஸ்லிம் , நம்மை ஏமாற்றுபவர் நம்மை சார்ந்தவரே அல்ல
என்ற பாடம்,
எனவே தான் பரீட்சையில்
காப்பி அடிப்பதோ அதற்கு துணை போவதோ பாவம் , அது கூடாது ,
6 . @@@@@@@
ஆட்டிப் படைக்கும்
பார்வேடு
اِنَّ الَّذِيْنَ
يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ
اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا
تَعْلَمُوْنَ
இறைநம்பிக்கை கொண்டோரிடையே
மானக்கேடானவை பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும்
துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன்
: 24:19)
தவறான செய்தி பரவ வேண்டும்
என நினைத்தாலே தண்டனை !
அப்படியானால் அதை பார்வேடு-பரப்பினால் நிலைஎன்ன !
அப்படியானால் அதை பார்வேடு-பரப்பினால் நிலைஎன்ன !
பெண்களை அனுமதியோடு
/அல்லது திருட்டுத்தனமாக போட்டோ /வீடியோ எடுப்பதே கூடாது .
அதை ஷேர் & நெட்டில் பதிவது இதுவெல்லாம் மிக கீழ் தரமான செயலாகும்.
உலகிலேயே இதற்கு தண்டனை கிட்டி விடலாம்,
அதை ஷேர் & நெட்டில் பதிவது இதுவெல்லாம் மிக கீழ் தரமான செயலாகும்.
உலகிலேயே இதற்கு தண்டனை கிட்டி விடலாம்,
ﻋﻦ ﺳﻤﺮﺓ ﺑﻦ ﺟﻨﺪﺏ ﺭﺿﻲ
اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﺭﺃﻳﺖ اﻟﻠﻴﻠﺔ ﺭﺟﻠﻴﻦ ﺃﺗﻴﺎﻧﻲ، ﻗﺎﻻ: اﻟﺬﻱ ﺭﺃﻳﺘﻪ ﻳﺸﻖ ﺷﺪﻗﻪ ﻓﻜﺬاﺏ، ﻳﻜﺬﺏ
بالكذبة ﺗﺤﻤﻞ ﻋﻨﻪ ﺣﺘﻰ ﺗﺒﻠﻎ اﻵﻓﺎﻕ، ﻓﻴﺼﻨﻊ ﺑﻪ ﺇﻟﻰ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ "
6096. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் இன்றிரவு (கனவில்) இருவரைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் வந்து (என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றுக்கு விளக்கமளிக்கையில்) 'தாடை சிதைக்கப்பட்ட நிலையில், நீங்கள் பார்த்தீர்களே அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவரிடமிருந்து பரவி உலகம் முழுவதையும் அடையும். எனவே, (நீங்கள் பார்த்த) அந்தத் தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். என்று கூறினார்கள்.
என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

பொய் பரவி உலகம் "முழுவதையும்" அடையும் அது எவ்வாறு ?
அது தீன்/துன்யா எது
பற்றியோ ஊர்ஜிதம் செய்யாமல் சோஷியல் மீடியாக்கள் மூலம் பகிர்ந்தால்"முழுவதையும்" அடையும் பல பல ஆண்டுகள் தொல்லையாக சுற்றும் .
7 . @@@@@@@
ஆர்வக் கோளாறு கூடாது ,
107 ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﻗﺎﻝ: ﻗﻠﺖ ﻟﻠﺰﺑﻴﺮ: ﺇﻧﻲ ﻻ
ﺃﺳﻤﻌﻚ ﺗﺤﺪﺙ ﻋﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﻤﺎ ﻳﺤﺪﺙ ﻓﻼﻥ ﻭﻓﻼﻥ؟ ﻗﺎﻝ: ﺃﻣﺎ ﺇﻧﻲ ﻟﻢ
ﺃﻓﺎﺭﻗﻪ، ﻭﻟﻜﻦ ﺳﻤﻌﺘﻪ ﻳﻘﻮﻝ: «ﻣﻦ ﻛﺬﺏ ﻋﻠﻲ ﻓﻠﻴﺘﺒﻮﺃ ﻣﻘﻌﺪﻩ ﻣﻦ اﻟﻨﺎﺭ».
107. (தந்தையே! உங்களைப் போன்று நபி(ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட)
இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான்
கேள்விப்பட்டதேயில்லையே! ஏன்?' என்று என்னுடைய தந்தை
ஸுபைர்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப்
பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும்'என் மீது இட்டுக் கட்டிச்
செல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'என்று நபி(ஸல்) அவர்கள்
கூறக்கேட்டிருக்கிறேன்' (எனவேதான் நான் அதிகமாக
அறிவிக்கவில்லை)'என்றார்கள்' என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு
விழிப்புணர்வும்
அல்லாஹ்வின் பயமும் இருந்ததால் ஸஹாபாக்கள் ஹதீஸ் கூட சொல்லாமல்-அறிவிக்காமல்
பேணுதலாக இருநந்தார்கள்.
செய்தி/ஹதீஸ் மிகச்சரியாக
இருந்தாலும் பார்வேடு பர்லு இல்லை,
நம்மில் சிலரோ கிடைத்ததை
எல்லாம் பார்வேடு என்ற போர்வையில் வாந்தி எடுக்கின்னர்,
8 . @@@@@@@
ஒருவர் உண்மை பேசும்
உத்தமரா ?
புழுகும் பொய்யனா சான்று
இதோ.
٤٣- عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍؓ قَالَ: قَالَ
رَسُوْلُ اللهِ ﷺ: كَفَي بِالْمَرْءِ كَذِبًا اَنْ يُحَدِّثَ
بِكُلِّ مَا سَمِعَ.
وفي رواية ابي داؤد 4992 «ﻛﻔﻰ ﺑﺎﻟﻤﺮء ﺇﺛﻤﺎ.
وفي رواية ابي داؤد 4992 «ﻛﻔﻰ ﺑﺎﻟﻤﺮء ﺇﺛﻤﺎ.
ஒருவன் தான் கேட்ட
செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன்
பொய்யன் & பாவம் செய்பவன்
என்பதற்குப் போதுமானதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்)
அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஃப்ஸுப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் & அபூ தாவூத் 4992)
(முஸ்லிம் & அபூ தாவூத் 4992)
தெளிவுரை:-
கேட்டவற்றையெல்லாம் தீர விசாரிக்காமல் பிறரிடம் சொல்வது பொய்யின் ஒருவகையாகும்.
பாவத்தின் ஒரு வகையாகும். இதன் காரணமாக மக்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை நீங்கிவிடுகிறது.
பாவத்தின் ஒரு வகையாகும். இதன் காரணமாக மக்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை நீங்கிவிடுகிறது.
9 . @@@@@@@
பொய் சொல்லுங்க
أن أم ﻛﻠﺜﻮﻡ ﺑﻨﺖ ﻋﻘﺒﺔ
ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﻟﻴﺲ اﻟﻜﺬاﺏ اﻟﺬﻱ ﻳﺼﻠﺢ ﺑﻴﻦ اﻟﻨﺎﺱ، ﻓﻴﻨﻤﻲ
ﺧﻴﺮا، ﺃﻭ ﻳﻘﻮﻝ ﺧﻴﺮا»
2692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 53. சமாதானம்

8588
-ﺃﻥ ﺃﻡ ﻛﻠﺜﻮﻡ اﺑﻨﺔ ﻋﻘﺒﺔ
ﺃﺧﺒﺮﺗﻪ ﺃﻧﻬﺎ ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﻟﻴﺲ اﻟﻜﺬاﺏ اﻟﺬﻱ ﻳﺼﻠﺢ ﺑﻴﻦ
اﻟﻨﺎﺱ ﻓﻴﻨﻤﻲ ﺧﻴﺮا ﺃﻭ ﻳﻘﻮﻝ ﺧﻴﺮا» ﻗﺎﻟﺖ: ﻭﻟﻢ ﺃﺳﻤﻌﻪ ﻳﺮﺧﺺ ﻓﻲ ﺷﻲء ﻣﻦ اﻝﻛﺬﺏ ﻣﻤﺎ ﻳﻘﻮﻝ
اﻟﻨﺎﺱ ﺇﻻ ﻓﻲ ﺛﻼﺙ ، ﻓﻲ اﻟﺤﺮﺏ، ﻭاﻹﺻﻼﺡ ﺑﻴﻦ اﻟﻨﺎﺱ، ﻭﺣﺪﻳﺚ اﻟﺮﺟﻞ اﻣﺮﺃﺗﻪ، ﻭﺣﺪﻳﺚ اﻟﻤﺮﺃﺓ ﺯﻭﺟﻬﺎ،
ﻭﻛﺎﻧﺖ ﺃﻡ ﻛﻠﺜﻮﻡ ﻣﻦ اﻟﻤﻬﺎﺟﺮاﺕ اللاتي ﺑﺎﻳﻌﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ.
மக்கள் பேசும் பொய்களில்
(எதுவும் பேச அனுமதி இல்லை) மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே அனுமதி உண்டு ,
1.போரில் 2. பிணங்கிய மக்களிடையே சமரசம் செய்ய
3. கணவன் மனைவியிடமும் மனைவி கணவனனிடமும் பொய் பேசலாம்.
என்று நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தை நான் கேட்டுள்ளேன் என்று உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் சொன்னார்கள் ,
நூல் ; நஸஈ குப்றா 8588,

கைசேதம் ; சிலரோ பொய் சொல்லி
நட்போடு-நல்லுறவாக உளோரை கெடுக்கிறாங்க.
@@@@@
உயிர் தப்பிக்க பொய்
சொல்லலாம்,
நம் உம்மத்தின் முதல்
ஷஹீத் களான யாஸிர் (ரலி) அவர்கள் & அவர்களின் மனைவி சுமையா
(ரலி) இவ்விருவரையும் காபிர்கள் கொடூரமாக கொலை செய்து
விட்டு இவர்களின் மகன் அம்மார் (ரலி) அவர்களை கொலை செய்ய தயாரானார்கள்.
அம்மாரே (ரலி) இஸ்லாம் & முஹம்மத் (ஸல்) இகழ்ந்து- திட்டி & எங்கள் தெய்வங்களை புகழ்ந்தால் கொலை செய்யாமல் விட்டு விடுகிறோம் என்றார்கள் காபிர்கள் ,
அவரும் வாயால் அப்படி சொல்லி தப்பித்துக் கொண்டார்கள் .
இருந்தாலும் மனதில் பயம் அல்லாஹ் ஆறுதல் கூறி வசனம் இறக்கினான் ,

مَنْ كَفَرَ بِاللّٰهِ
مِنْ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّ
بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ
مِّنَ اللّٰهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி
கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே
இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தின்
மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே
நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும்.
அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
(அல்குர்ஆன் : 16:106)
(அல்குர்ஆன் : 16:106)
3358
-ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ
ﻋﻨﻪ، ﻗﺎﻝ:
" ﻟﻢ يكذب ﺇﺑﺮاﻫﻴﻢ ﻋﻠﻴﻪ
اﻟﺴﻼﻡ ﺇﻻ ﺛﻼﺙ ﻛﺬﺏاﺕ، ﺛﻨﺘﻴﻦ ﻣﻨﻬﻦ ﻓﻲ ﺫاﺕ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ، ﻗﻮﻟﻪ {ﺇﻧﻲ ﺳﻘﻢ} [ اﻟﺼﺎﻓﺎﺕ:
89] ﻭﻗﻮﻟﻪ: {ﺑﻞ ﻓﻌﻠﻪ ﻛﺒﻴﺮﻫﻢ ﻫﺬا [ اﻷﻧﺒﻴﺎء: 63] . ﻭﻗﺎﻝ: ﺑﻴﻨﺎ ﻫﻮ ﺫاﺕ ﻳﻮﻡ ﻭﺳﺎﺭﺓ، ﺇﺫ ﺃﺗﻰ ﻋﻠﻰ ﺟﺒﺎﺭ ﻣﻦ اﻟﺠﺒﺎﺑﺮﺓ، ﻓﻘﻴﻞ
ﻟﻪ: ﺇﻥ ﻫﺎ ﻫﻨﺎ ﺭﺟﻼ ﻣﻌﻪ اﻣﺮﺃﺓ ﻣﻦ ﺃﺣﺴﻦ اﻟﻨﺎﺱ، ﻓﺄﺭﺳﻞ ﺇﻟﻴﻪ ﻓﺴﺄﻟﻪ ﻋﻨﻬﺎ، ﻓﻘﺎﻝ: ﻣﻦ ﻫﺬﻩ؟
ﻗﺎﻝ: ﺃﺧﺘﻲ، ﻓﺄﺗﻰ ﺳﺎﺭﺓ ﻗﺎﻝ: ﻳﺎ ﺳﺎﺭﺓ: ﻟﻴﺲ ﻋﻠﻰ ﻭﺟﻪ اﻷﺭﺽ ﻣﺆﻣﻦ ﻏﻴﺮﻱ ﻭﻏﻴﺮﻙ، ﻭﺇﻥ ﻫﺬا
ﺳﺄﻟﻨﻲ ﻓﺄﺧﺒﺮﺗﻪ ﺃﻧﻚ ﺃﺧﺘﻲ، ﻓﻼ تكذيبيني .............
3358. இப்ராஹீம் (அலை) அவர்கள்
மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு
அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை 1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள்
அழைத்தபோது) நான் நோயுற்றுஇருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல்
தவிர்ப்பதற்காகக்) கூறியதும்- 2.
(சிலைகளை
உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது
யார் என்று கேட்ட போது)'....ஆயினும் இவர்களில்
பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை
வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை)
அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த
மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது
அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி
அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம்
(அலை) அவர்கள் என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம்
சென்று சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர்
(தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ
என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி)
என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள். அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக்
கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன்
கையால் அள்ள முயன்றான். உடனே அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா
(அலை) அவர்களிடம்) அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி)
பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க
அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு இரண்டாவது முறையாக அவர்களை
அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக்
கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி)
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீஙகு செய்ய மாட்டேன் என்று
சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.
பிறகு தன் காவலன் ஒருவனை அழைத்து நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை
ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை
சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள் இப்ராஹீம்
(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை)
அவர்கள் கைகளால் சைகை செய்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ்
நிராகரிப்பாளனின்..... அல்லது தீயவனின்...... சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே
திருப்பி விட்டான்-(33). ஹாஜிராவை பணிப்பெண்ணாக அளித்தான்
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்.
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்.