செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

بسم الله الرحمن الرحيم
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ 
31:13
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ  - الترمذي 1874
**********************************************************
குழந்தைச் செல்வம் அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் செல்வமாகும். அவர்களுக்கு அந்தந்த வயதில் எதை நாம் செய்ய வேண்டுமோ எதை கற்றுக் கொடுக்க வேண்டுமோ அதைக்கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின்மீது கடமையாகும்.

அந்த குழந்தைகளின் உள்ளம் காலியாக இருக்கும் பாத்திரத்தைப் போன்று அதில் எதைப்போட்டாலும் ஏற்றுக்கொள்ளும் எனவே அந்த வயதில் நல்ல விஷயங்களை உள்ளத்தில் புகுத்திவிட வேண்டும்.

அந்த பருவத்தில் நாம் கற்றுக்கொடுக்கக்கூடிய கல்வி பசுமரத்தில் ஆணி அரைந்ததைப் போல் அவர்களின் உள்ளத்தில் பதிந்துவிடும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள் இந்த வயதிலேயே தொழுகைக்கு தேவையான சூராக்கள் முக்கியச் சட்டங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட வேண்டும்.

குறிப்பாக தற்பொழுது நமது பிள்ளைகளுக்கு கோடைவிடுமுறை ஆரம்பமாகிவிட்டது இந்நாட்களை அவர்களுக்கு பயனுள்ள வகையில் கழிவதற்கு நாம் ஏற்பாடுசெய்ய வேண்டும்.

குழந்தைகளின் காரணமாக நமக்கு வரக்கூடிய சிரமங்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

لَوْلا عِبَادٌ للَّهِ رُكَّعٌ وَصَبِيَّةٌ رُضَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْبَلاءُ صَبًّا " ، الطيالسي والطبراني وابن منده وأبي عدي وآخرون من حديث مالك بن عبيدة بن مسافع الديلي عن أبيه عن جده ، وأبو يعلى من حديث أبي هريرة ، كلاهما به مرفوعا .
அல்லாஹ்வை ருகூஉச் செய்து வழிபடக்கூடிய அந்த மக்கள் இல்லையென்று சொன்னால். மேயக்கூடிய கால்நடைகள் இல்லையென்று சொன்னால். பால்குடிக்கக்கூடிய குழந்தைகள் இல்லையென்று சொன்னால் நீங்கள் செய்யக்கூடிய பாவங்களுக்காக அதாபு உங்களின்மீது இறங்கியிருக்கும் என்று அண்ணல் நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*நம் கடமை என்ன?*
************************
இப்படிப்பட்ட பாக்கியமான குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

( جاء رجل إلى عمر بن الخطاب – رضي الله عنه – يشكو إليه عقوق ابنه ، فأحضر عمر الولد وابنه وأنّبه على عقوقه لأبيه ، ونسيانه لحقوقه ، فقال الولد : يا أمير المؤمنين أليس للولد حقوق على أبيه ؟ قال : بلى ، قال : فما هي يا أمير المؤمنين ؟ قال عمر : أن ينتقي أمه ، ويحسن أسمه ، ويعلمه الكتاب ( أي القرآن ) ، قال الولد : يا أمير المؤمنين إن أبي لم يفعل شيئاً من ذلك ، أما أمي فإنها ونجية كانت لمجوسي ، وقد سماني جُعلاً ( أي خنفساء ) ، ولم يعلمني من الكتاب حرفاً واحداً 0
فالتفت عمر إلى الرجل وقال له : جئت إلي تشكو عقوق ابنك ، وقد عققته قبل أن يعقك ، وأسأت إليه قبل أن يسيء إليك ؟! ) ( تربية الأولاد في الإسلام – 1 / 127 ، 128 ) 0

ஒரு மனிதர் ஹஜ்ரத் உமர் ( ரலி) அவர்களிடம் வந்து என் மகன் என் பேச்சை கேட்க மறுக்கின்றான் அவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்.
உடனே அந்த பையனை அழைத்து ஏனப்பா உன் தந்தையின் பேச்சை கேட்க மறுக்கின்றாய் என்று உமர் ரலி கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் ஆம் உண்மைதான் என் தந்தையின் பேச்சை நான் கேட்க வேண்டும் தான் ஆனால் அதற்கு முன்பு நான் ஒரு கேள்வி கேட்கின்றேன் அதற்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றான். ஒரு மகன் என்ற முறையில் என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமை இருப்பது போல என் தந்தையும் எனக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதா இல்லையா? என்றான். ஆம் இருக்கிறது என்றார்கள் கலீபா அவர்கள்.
அவைகளில் முதலாவது திருமணத்திற்கு முன்பு நல்ல தாயை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உமர் ரலி கூறினார்கள். (அதாவது மார்கப்பற்றுள்ள நல்ல பெண்ணை இவர் மணமுடித்தால் குழந்தைகளுக்கும் நல்லதாய் கிடைப்பார்கள்.)

அந்த சிறுவன் கூறினான் என் தந்தை எனக்கு நல்ல தாயை கொடுக்கவில்லை என்றான்.
இரண்டாவதாக ஹஜ்ரத் உமர் ரலி கூறினார்கள் ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல பெயரை சூட்ட வேண்டும் இது அவரின் கடமை என்றார்கள். இதைக்கேட்ட சிறுவன் இதனையும் என் தந்தை செய்யவில்லை என்றான் ( அவன் பெயருக்கு பொருள் பீ வண்டு என்று இருந்ததாம்) (இன்று நம்மில் சிலரும்கூட லேடஸ்டான பெயராக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல பொருள் இல்லாத ஆபாசமான பொருள் கொண்ட பெயரைக் கூட வைத்து விடுகின்றோம்.)

மூன்றாவது கடமை பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பது என்றார்கள். அதற்கு சிறுவன் என் தந்தை குர்ஆனையும் கற்றுக் கொடுக்கவில்லை என்றான்.
இதனைக்கேட்ட உமர் ரலி அவர்கள் அந்த பையனை கண்டிப்பதற்கு பதிலாக அந்த தந்தையை கண்டித்தார்களாம்.

கண்ணியத்திற்குரியவர்களே! நம்முடைய குழந்தைகள் நம்மிடம் ஒப்படைக்தப்பட்ட அமானிதங்களாகும் அவர்களுக்கு எல்லா காலத்திலும் நல்ல தர்பியத் செய்ய வேண்டும் குறிப்பாக விடுமுறை காலங்களை அதற்காக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்குச் செய்த தர்பியத்தை அல்லாஹ் குர்ஆனில் சிறப்பித்து கூறுகின்றான்

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ 
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(அல்குர்ஆன் : 31:13)

يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ ‏ 
என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
(அல்குர்ஆன் : 31:17)

நமது குழந்தைகளுக்கு தீனை பழக்கப்படுத்துவதை விட சிறந்த காரியம் வேறெதுவுமில்லை

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ  - الترمذي 1874
ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கம் கற்பிப்பது ஒரு மரக்கால் தானியம் தர்மம் செய்வதைவிட சிறந்தது என்று நபி ( ஸல்) கூறினார்கள்

عن غمرو بن سعيد بن العاص  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ – الترمذي 1875
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யக்கூடிய அன்பளிப்புகளில் நல்லொழுக்கம் கற்பிப்பதைவிட சிறந்த அன்பளிப்பு எதுவுமில்லை

يُحَدِّثُ  أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة 3661
உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பியுங்கள்

விடுமுறையை பயன்படுத்துவோம்
*************************************
விடுமுறை காலங்களில் அவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க வேண்டும் என்னென்ன விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சில அறிவுரைகள் இங்கே சொல்லப்படுகிறது.

1)முதலாவது நம்முடைய குழந்தைகளுக்கு ஏகத்துவத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கவேண்டும்

(افتحوا على صبيانكم أوَّل كلمة بـ : (لا إله إلا الله) رواه البيهقي
உங்கள் குழந்தைகளுக்கு முதலாவதாக சொல்லிக் கொடுக்கக்கூடிய கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்வாக இருக்க வேண்டும். என்றார்கள்.

நபி (ஸல்) அவர்களைப்பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். கப்ரில் கேட்கப்படக்கூடிய முதல் இரண்டு கேள்வி அல்லாஹ்வைப்பற்றியும் ரசூலைப்பற்றியும்தான் கேட்கப்படும் இந்த இரண்டும் தெரியவில்லையானால் கப்ரில் கடுமையான வேதனை ஆரம்பமாகிவிடும். எனவே அல்லாஹ்வின் வல்லமை அவன்தான் அனைத்தையும் படைத்தவன் குறிப்பாக குல்ஹுவல்லாஹ் சூராவின் விளக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் அவர்களின் போதனைகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

2) கப்ரின் நிலைபற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும் இவ்வாறு சொல்வது அவர்களை பயமுறுத்தாட்டுவதற்காக அல்ல மாறாக இறையச்சத்தை உண்டாக்குவதற்காகவும் பாவமான செயல்களை அவர்கள் செய்யாமல் இருப்பதற்காகவும் தான்.

உதாரணமாக சிறுநீர் கழித்துவிட்டு சரியாக சுத்தம் செய்யவில்லையானால் கப்ரில் கடுமையாக வேதனை செய்யப்படும் புறம்பேசினால் கோள் சொல்லித்திரிந்தால் பொய்பேசினால் இதற்கெல்லாம் கடுமையாக வேதனை செய்யப்படும் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

1361- صحيح البخاريٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ فَقَالَ: ((إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ)). ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً فَشَقَّهَا بِنِصْفَيْنِ، ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً. فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، لِمَ صَنَعْتَ هَذَا فَقَالَ: ((لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا))

.1361. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?“ என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

قال رسول الله صلي الله عليه وسلم ان عامة عذاب القبر من البول
கப்ருடைய வேதனைக்கான பெரும்பாலான காரணம் சிறுநீர்கழித்துவிட்டு சுத்தம் செய்யாததுதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் காஃபிர்களைப் போன்று நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது சிறுநீர் கழித்தபின் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் கப்ரில் கடுமையான வேதனை உண்டு என்பதை சொல்ல வேண்டும்.

மேலும் கப்ரின் வேதனைக்கான காரணங்கள் வட்டி உண்பது கோள் சொல்வது பொய்பேசுவது தொழாமல் இருப்பது மோசடி செய்வது என்று அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

3) இந்த உலகம் ஒருநாள் அழிந்துவிடும் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் நிலைத்திருப்பான் என்றும்
கியாமத் நாள் உண்டாகுவதைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ ‌  
(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே (55:26)

وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌‏ 

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
(அல்குர்ஆன் : 55:27)

இந்த உலகம் எப்படி அழியும் அல்லாஹ் இந்த உலகத்தை எப்படி சுருட்டுவான் இந்த உலகம் எப்படி பஞ்சுபஞ்சாக ஆகும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

முதல் சூர்
************
முதல் சூர் ஊதப்பட்டவுடன் எல்லாம் அழிந்துவிடுவார்கள். அல்லாஹ் மலக்குல்மவ்த் இடம்  யார் யார் இருக்கின்றார்கள் என்று கேட்பான் அதற்கவர் நான் இருக்கிறேன் ஜிப்ரயீல் இஸ்ராஃபீல் மீக்காயீல் இருக்கிறார்கள் என்பார். ஜிப்ரயீல் உயிரையும் கைப்பற்றும்படி அல்லாஹ் கூறுவான்  இப்பொழுது யார் இருக்கிறார் என்பான் நான் இருக்கின்றேன் மீக்காயீல் இஸ்ராஃபீல் இருக்கிறார் என்று மலக்குல்மவ்த் கூறுவார் மீக்காயீல் இஸ்ராஃபீல் இவ்விருவரின் உயிரையும் கைப்பற்றும்படி அல்லாஹ் கூறுவான் அவர்களின் உயிரும் கைப்பற்றப்படும் இப்போது யார் இருக்கிறார் என்பான் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று மலக்குல்மவ்த் கூறுவார் உம்மைநீரே மரணிக்கச் செய்து கொள்ளும் என்பான்  மலக்குல்மவ்த் அவரே தன் உயிரை வெளியேற்றுவார்  பின்பு அவரும் இறந்துவிடுவார். அல்லாஹ் மட்டும்தான் இருப்பான் நாற்பது ஆண்டுகள் இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இருக்காது. பின்பு இரண்டாவது சூர் ஊதப்படும் படைப்புகள் எழுப்பப்படுவார்கள்.
(நூல்: தப்ஸீர் தப்ரீ)

இதை குழந்தைகளுக்கு ஒரு கதைபோல் சொல்ல வேண்டும்.

4) ஒவ்வொரு நேரத்திலும் ஓத வேண்டிய துஆக்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
தூங்கும்போதும் தூங்கி எழுந்தவுடனும் சாப்பிடும் போதும் பைத்துல்கலா போகும்போதும் என்னென்ன துஆக்கல் ஓதனும் என்பதை கற்றுக் கொடுத்து எல்லா நிலையிலும் இறைவனின் சிந்தனையை உண்டாக்க வேண்டும் எல்லாம் அல்லாஹ்தான் கொடுத்தான் என்கின்ற எண்ணங்களை உருவாக்க வேண்டும்.

கல்விக் கூடங்களில் சொல்லித்தரப்படுகின்ற ரைம்ஸை(பாட்டு) குழந்தைகள் அழகாக சொல்கிறது அதைக்கண்டு நாமும் மகிழ்ச்சி அடைகின்றோம் அதேபோல் எத்தனை குழந்தைகள் துஆக்களை வீட்டில் ஓதுகிறார்கள்? சற்று சிந்தித்துப்பார்ப்பீர்களாக!

5) குழந்தைகளுக்கு வணக்க வழிபாடுகளில் பயிற்சியளிக்க வேண்டும்.
ஸஹாபாக்கள் குழந்தைகளுக்கு ரமளான் நோன்பு நோற்க பயிற்சி கொடுப்பார்கள்.

وَقَالَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ لِنَشْوَانٍ فِي رَمَضَانَ وَيْلَكَ، وَصِبْيَانُنَا صِيَامٌ. فَضَرَبَهُ.
1960-  عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ: ((مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ)). قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ، حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ.

1960. ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பி, “யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

ஸஹாபாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தராவீஹ் தொழுக பயிற்சி கொடுப்பார்கள். இப்பொழுதெல்லாம் தராவீஹ் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது ஆனால் சஹாபாக்களின் காலத்தில் நல்லிரவுவரை ஏன் ஸகர்வரைகூட பலமணி நேரங்கள் நடக்கும் அந்த தொழுகையில் தங்களின் குழந்தைகளையும் தொழுவதற்கு பழக்குவார்கள்.

... عمرو بن شعيب، عن أبيه، عن جده قال: قال رسول الله يَةِ: «مروا صبيانكم بالصلاة في سبع سنين واضربوهم عليها في عشر وفرقوا بينهم في المضاجع،
ஏழு வயதில் குழந்தைகளை தொழும்படி பழக்க வேண்டும் பத்து வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழச் செய்ய வேண்டும்


6) நல்ல குணங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
உண்மை பேசுகின்ற குணம் நன்றி செலுத்துகின்ற குணம் விட்டுக்கொடுக்குகின்ற குணம் இவைகளையெல்லாம் கற்றுக் கொடுக்கவேண்டும்

7)மேலும் பல நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும் நம்முடைய வீட்டிற்கு வந்தாலும் ஸலாம் சொல்லிவிட்டு அனுமதி கேட்டுவிட்டுத்தான் வரவேண்டும் ஏனென்றால் அண்ணிய பெண்கள் யாராவது நமது வீட்டிற்கு வந்திருக்கலாம் அவர்கள் ஒதிங்கிக் கொள்வார்களல்லவா அதற்காக எனவே இதுபோன்ற ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

١٠٨- عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍؒ اَنَّ رَسُوْلَ اللهِ سَاَلَهُ رَجُلٌ فَقَالَ: يَارَسُوْلَ اللهِ اَسْتَاْذِنُ عَلَي اُمِّيْ؟ فَقَالَ: نَعَمْ فَقَالَ الرَّجُلُ: اِنِّيْ مَعهَا فِي الْبَيْتِ، فَقَالَ رَسُوْلُ اللهِ : اِسْتَاْذِنْ عَلَيْهَا فَقَالَ الرَّجُلُ: اِنِّيْ خَادِمُهَا، فَقَالَ رَسُوْلُ اللهِ : اِسْتَاْذِنْ عَلَيْهَا اَتُحِبُّ اَنْ تَرَاهَا عُرْيَانَةً؟ قَالَ: لاَ، قَالَ: فَاسْتَاْذِنْ عَلَيْهَا.
رواه الامام مالك في الموطا، باب في الاستعذان، ص:٧٢٥

108.ஹஜ்ரத் அதா இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் அறிவிப்பாவது, யாரஸூலல்லாஹ்! என் தாயாருடைய வீட்டுக்குள் செல்ல என் தாயாரிடம் அனுமதி கேட்க வேண்டுமா?'' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார், ஆம்'' என்று பதில் அளித்தார்கள். நானும் என் தாயும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறோம்! என்று கூறினார், அனுமதி வாங்கிக் கொண்டே செல்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் தான் அவருக்குப் பணிவிடை செய்கிறேன்'' (அதனால் அடிக்கடி சென்றுவர வேண்டியுள்ளது) என்று மீண்டும் வினவினார். நீர் அனுமதி வாங்கிக் கொண்டே செல்வீராக! ஆடையற்ற நிலையில் உமது தாயாரை நீர் பார்க்க விரும்புவீரா?'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, விரும்பமாட்டேன்'' என்றார் அவர். அப்படி யென்றால் அனுமதி வாங்கிக்கொண்டு செல்லும்!'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(முத்தா இமாம் மாலிக்)

இன்னும் செருப்பு அணிவது ஆடை உடுத்துவது இவைகளின் ஒழுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
813- عن أَبي سعيد الخدْريِّ رضي الله عنه قال: كَانَ رسول الله صلى الله عليه وسلم إِذَا اسْتَجَدَّ ثَوبًا سَمَّاهُ باسْمِهِ- عِمَامَةً أَوْ قَميصًا أَوْ رِدَاءً- يقولُ: ((اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أنْتَ كَسَوْتَنِيهِ، أسْأَلكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ)). رواه أَبُو داود والترمذي، وقال: (حَدِيثٌ حَسَنٌ).
في هذا الحديث: استحباب الدعاء عند اللباس وحمد الله تعالى

.செருப்பு அணிந்தாலும் ஆடை உடுத்தினாலும் முதலில் வலது புரத்தைக்கொண்டே  ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுக்க வேண்டும்.

168 عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ»صحيح البخاري

168. “நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

சாப்பிடும் ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

5376 - عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، يَقُولُ: كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ صحيح البخاري

5376. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

தீமையை விட்டும் தடுக்க வேண்டும்.
**************************************
எல்லாவற்றையும் விட நம்முடைய குழந்தைகளை பாவமான காரியங்களை நெருங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும்
கண்ட கண்ட புத்தகங்கள் படிப்பது. டீவி பார்ப்பது மோசமான காட்சிகளை பார்ப்பது சினிமா பாடல்களை கேட்பது இசையை ரசிப்பது இதுபோன்ற பாவமான காரியங்களை நம்முடையை குழந்தைகள் நெருங்கவிடாமல் பாதுகாப்பதும் இவைகளெல்லாம் ஹராம் என்றும் சொல்லிக் கொடுப்பதும் நமது கடமையாகும்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஹலால் ஹராமை சொல்லிக்கொடுத்துவிட வேண்டும்.

1485-ٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ، فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ، فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً، فَجَعَلَهَا فِي فِيهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ: ((أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَأْكُلُونَ الصَّدَقَةَ)).

1485. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன்(ரலி) ஹுசைன்(ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?“ எனக் கேட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 24. ஸகாத்தின் சட்டங்கள்

பட்டு தங்கம்
*************
ஆண்களாக இருந்தால் பட்டாடை  அணிவது தங்கம் அணிவது ஹராம் என்பதை சொல்லவேண்டும்.
இன்று சிறுபிள்ளைதானே என்று ஆண் குழந்தைகளுக்கு இதை அணிவித்தால் நாளை இதே பழக்கம் அவர்களிடம் வரும் இது தவறு என்று அவர்கள் உணரமாட்டார்கள்.

உருமாற்றுவது
******************
பெண்குழந்தைகள் ஆண்களின் ஆடையை அணிவதும் ஆண்கள் பெண்களைப்போல கழுத்தில் மைனர்ச்செயின் அணிவது கையில் பிரஸ்லெட் அணிவது இதுவெல்லாம் ஹராம் என்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.

(வெள்ளியினாலான அதிகபட்சம் 3 கிராம் எடையுள்ள சிறிய மோதிரம் மட்டும் அணிந்து கொள்ள ஆண்களுக்கு அனுமதி உண்டு.)

5885-َ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ. تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ.صحيح البخاري

5885. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.  இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி

ஸ்மார்ட் ஃபோனும் நம் குழந்தைகளும்.
*****************************************
ِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ    
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;
(அல்குர்ஆன் : 2:195)

பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் கொடுப்பதை கண்டிப்பாக தவிற்க வேண்டும். இதனால் நம் குழந்தைகளை நாமே சீரழித்துவிடுகிறோம்.கோடை விடுமுறையில் ஓய்வு நேரம் அதிகமாக கிடைக்கிறது பிள்ளைகள் விளையாடட்டும் என்று சில பெற்றோர்கள் வாங்கி கொடுத்துவிடுகிறார்கள்  ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் குழந்தைகள் எதிர்காலத்தில்
ஊனமுற்றவர்களாக ஆகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

*கழுத்தில் ஆப்ரேஷன்* : ஒரு நாளைக்கு 4 / 5 மணி நேரம் தலையை தாழ்த்தி செல்ஃபோன் பார்ப்பதால் 5 வருடத்தில் அந்த குழந்தைக்கு கழுத்தில் ஆப்ரேஷன் செய்யவேண்டிய நிலை வரலாம் மேலும் முதுகுவலி இடுப்புவலி வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

*கண்பார்வை பாதிப்பு:* செல்ஃபோனில் வெளிச்சம் கூடுவதும் குறைவதும் இருப்பதால் குழந்தைகளின் பார்க்கும் திறன் பாதிப்படையும் மேலும் அதன் கதீர்வீச்சால் குழந்தைகளுக்கு கண்புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் திருவண்ணாமலை மருத்துவமனையில் 10 வயதுக்குட்பட்ட 130 குழந்தைகள் கண்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதற்கு காரணம் சிறுவயதில் ஸ்மார்ட் ஃபோன் அதிகம் பயன்படுத்தியதால் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

*தசைகள் செயலற்றுபோவது:* ஒரு நாளைக்கு குழந்தைகள் ஓடியாடி சிறிது நேரமாவது விளையாட வேண்டும். ஆனால்  விளையாடும் நேரத்தை கேம் விளையாடுவதில் வீணடித்து விடுகிறார்கள் இதனால் குழந்தைகளுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமல் போய்விடுகிறது இதன்காரணமாக தசைகள் செயலற்றுபோகும் வாய்ப்புள்ளது நரம்புதளர்ச்சி வரலாம் ஜெரிமான சக்தி குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

*சிறுநீரக பாதிப்பு:* கேம் விளையாடுவதில் மூழ்கிய குழந்தைகள் மலஜலத்தையும் அடக்கிக்கொண்டு விளையாடுகிறார்கள். இதனால் சிறுநீரக பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது.

*மலஜலம் அடக்காதே*
*******************************
மலஜலம் அடக்கிக் கொண்டு தொழுகைக்குகூட வரக்கூடாது என்கிறது மார்க்கம்.

1753- ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭَﺿِﻲَ اﻟﻠﻪُ ﻋﻨﻬﺎ، ﻗﺎﻟﺖ: ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝُ: ((ﻻ ﺻَﻼَﺓَ ﺑِﺤَﻀْﺮَﺓِ ﻃَﻌَﺎﻡٍ، ﻭَﻻ ﻭَﻫُﻮَ ﻳُﺪَاﻓِﻌُﻪُ اﻷَﺧْﺒَﺜَﺎﻥِ)). ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ.
ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ: ((ﺇﺫا ﺃﻗﻴﻤﺖ اﻟﺼﻼﺓ، ﻭﺣﻀﺮ اﻟﻌﺸﺎء، ﻓﺎﺑﺪﺅﻭا ﺑﺎﻟﻌﺸﺎء
மலஜலத்தை அடக்கிக் கொண்டும் ( பசியுடன் இருப்பவருக்கு) உணவு தயாராக இருக்கும் நிலையிலும் தொழுகைக்கு வரவேண்டாம் என்று நபி ( ஸல்) கூறினார்கள்.

இஸ்லாமிய நூல்ககளை வாசிக்கப் பழக்கலாம்
*****************************************
பொதுவாக சிறிது வளர்ந்த பிள்ளைகளை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நல்ல புத்தகங்களை படிக்க அனுமதிக்கலாம்.மேலும் பெருமானார் ( ஸல்) அவர்களின் வரலாறு கலீபாக்கள் வரலாறு சஹாபாக்கள் வரலாறு போன்றவைகளை படிக்கவைக்க வேண்டும். நம் இந்திய திருநாட்டில் பாசிச சக்திகளின் சதி வேலைகளில் ஒன்று நம் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மண்ணர்களின் உண்மை வரலாற்றை மறைத்து தவறான வரலாற்றை புகுத்தி இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். அதை இன்றைய பாடப்புத்தகங்களில் செயல்படுத்தியும் வருகின்றார்கள். எனவே நாம் நம் பிள்ளைகளுக்கு உண்மை வரலாற்றை தெரியப்படுத்த வேண்டும் அதற்கான நூல்களை படிக்க பழக்க வேண்டும் அதற்காக இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தலாம்.

முக்கிய பொறுப்புதாரி
*************************
குழந்தைகளின் முக்கிய பொறுப்புதாரி தாய்மார்கள்தான் அவர்கள்தான் இந்த குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் பெரும் பெரும் மகான்களையெல்லாம் உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரிய மகான்களில் ஒருவர் ஹாஜாபக்தியாரி அவர்கள். இவர்கள் ஐந்து வயது சிறுவராக இருக்கும்போது அவர்களின்தாய் மக்தப் மதரஸாவில் அவர்களை சேர்க்கின்றார்கள் உஸ்தாது அவர்கள் அச்சிறுவருக்கு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று ஓத ஆரம்பித்து கொடுக்கின்றார் ஆனால் அந்த சிறுவர் பிஸ்மில்லாஹ் கூறி அல்ஹம்து சூராவும் ஓதி சூரா பகராவையும் ஓதி முடித்தார். உஸ்தாதுக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது அப்பொழுது அந்த குழந்தை  சொன்னது எனக்கு எதுவும் தெரியாது நான் இதை என்தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதைக்கேட்டுக்கேட்டு எனக்கு மனனமாகிவிட்டது என்றது. இதைக்கேட்ட ஆசிரியர் உமக்கு முதலில் பாடத்தை ஆரம்பித்து வைப்பதற்கு மிக தகுதியாணவர் உன்தாய்தான் எனக்கூறி அந்த குழந்தையின் தாயிடம் அழைத்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட தாய்மார்கள்தான் நல்லடியார்களையும் ஸாலிஹீன்களையும் உருவாக்கினார்கள். இன்றைக்கு நமது பெண்களிடம் இத்தகைய தீன் இல்லாத காரணத்தினால் அவர்களே டீவிக்கு அடிமைகளாக நாடகங்களுக்கும் சினிமாவுக்கும் அடிமைகளாக இருக்கின்ற காரணத்தால்தான் நம் குழந்தைகளும் வழிதவறி போய்விடுகின்றார்கள்.

ஆக இந்த விடுமுறைகாலம் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாகும் இந்த நாட்களை வீணாக்காமல் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு போதித்து அவர்கள் எந்த நிலையிலும் ஈமானுடைய பாதையிலிருந்து ஷரீஅதுடைய பாதையிலிருந்து விலகாமல் அவர்களை பாதுகாப்பதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக இந்த நாட்களை பயன்படுத்துவோமாக! ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.