ரெட் அலர்ட் எப்போதுமே...
****************************
உலகமெங்கிலும் பல நல்ல
செய்திகள் நடப்பது போல் அதற்கு நிகராகவோ அதை விட அதிகமாகவோ கெட்டதும் துக்கமான
சேதிகளும் துரத்திக் கொண்டே வருகின்றன .
சுனாமி புயல் காற்று பூகம்பம் கொலை கொள்ளை
கற்பழிப்பு அநீதம் ஏமாற்று மோசடி அறியாமை யாவும் தலை விரித்து
தாண்டவமாடுவது
மிக மலிவான அன்றாட சேதிகளாக மாறிவிட்டன.
இதுவெல்லாம் நமக்கு ஒரு செய்தி
சொல்லுகிறது அது உலகம் அழிவின் விளிம்பிற்கு நகர்கிறது என்பதாகும்.
5231 -ﻋﻦ ﺃﻧﺲ ﺭﺿﻲ
اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻷﺣﺪﺛﻨﻜﻢ ﺣﺪﻳﺜﺎ ﺳﻤﻌﺘﻪ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻻ ﻳﺤﺪﺛﻜﻢ ﺑﻪ
ﺃﺣﺪ ﻏﻴﺮﻱ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺇﻥ ﻣﻦ ﺃﺷﺮاﻁ اﻟﺴﺎﻋﺔ ﺃﻥ ﻳﺮﻓﻊ
اﻟﻌﻠﻢ، ﻭﻳﻜﺜﺮ اﻟﺠﻬﻞ، ﻭﻳﻜﺜﺮ اﻟﺰﻧﺎ، ﻭﻳﻜﺜﺮ ﺷﺮﺏ اﻟﺨﻤﺮ، ﻭﻳﻘﻞ اﻟﺮﺟﺎﻝ، ﻭﻳﻜﺜﺮ اﻟﻨﺴﺎء ﺣﺘﻰ
ﻳﻜﻮﻥ ﻟﺨﻤﺴﻴﻦ اﻣﺮﺃﺓ اﻟﻘﻴﻢ اﻟﻮاﺣﺪ
5231. அனஸ் இப்னு மாலிக்(ரலி)
அறிவித்தார்
என் அல்லாத வேறு எவரும்
உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற
செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி அகற்றப்பட்டு
விடுவதும்,
அறியாமை மலிந்துவிடுவதும், விபச்சாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல்
அதிகரித்து விடுவதும்,
ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும்
அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில்
அடங்கும். 161
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 67.
திருமணம்
59 ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ
ﻗﺎﻝ: ﺑﻴﻨﻤﺎ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻣﺠﻠﺲ ﻳﺤﺪﺙ اﻟﻘﻮﻡ، ﺟﺎءﻩ ﺃﻋﺮاﺑﻲ ﻓﻘﺎﻝ: ﻣﺘﻰ
اﻟﺴﺎﻋﺔ؟ ﻓﻤﻀﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺤﺪﺙ، ﻓﻘﺎﻝ ﺑﻌﺾ اﻟﻘﻮﻡ: ﺳﻤﻊ ﻣﺎ ﻗﺎﻝ ﻓﻜﺮﻩ
ﻣﺎ ﻗﺎﻝ. ﻭﻗﺎﻝ ﺑﻌﻀﻬﻢ: ﺑﻞ ﻟﻢ ﻳﺴﻤﻊ، ﺣﺘﻰ ﺇﺫا ﻗﻀﻰ ﺣﺪﻳﺜﻪ ﻗﺎﻝ: «ﺃﻳﻦ - ﺃﺭاﻩ - اﻟﺴﺎﺋﻞ ﻋﻦ
اﻟﺴﺎﻋﺔ» ﻗﺎﻝ: ﻫﺎ ﺃﻧﺎ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: «ﻓﺈﺫا ﺿﻴﻌﺖ اﻷﻣﺎﻧﺔ ﻓﺎﻧﺘﻈﺮ اﻟﺴﺎﻋﺔ»، ﻗﺎﻝ:
ﻛﻴﻒ ﺇﺿﺎﻋﺘﻬﺎ؟ ﻗﺎﻝ: «ﺇﺫا ﻭﺳﺪ اﻷﻣﺮ ﺇﻟﻰ ﻏﻴﺮ ﺃﻫﻠﻪ ﻓﺎﻧﺘﻈﺮ اﻟﺴﺎﻋﺔ .
59. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு
அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர்
வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது
(அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக்
கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக
நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி
(என்னிடம்) கேட்டவர் எங்கே?'
என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது
கூறினார்கள்.'
அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ்
படுத்தப்படும்?'
எனக் கேட்டதற்கு,
'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை
நாளை எதிர்பாரும்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 3.
கல்வியின் சிறப்பு
2 . @@@@@@@
ரெட் அலார்ட்.
இந்நிலையில் உலக அறிவு
ஜீவிகள் என மார்தட்டுபவர்களின் அதிமேதாவித்தனம்
இன்று கன மழை. சூறாவளி
காற்று வீசும். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சுனாமி வரும் என்றெல்லாம் கண்டு
பிடித்து விட்டோம்
என பீதியை உண்டாக்கி விடுகின்றனர்.
ஆனால் அப்படி ஒன்றுமே
நடப்பதில்லை
சில சந்தர்ப்பங்களில்
ஒன்றுமே விபத்துகள் நடக்காது என தப்புக்கணக்கில் மூழ்கி இருக்க மாபெரும் அழிவு
நடந்து முடிந்து விடுகின்றது.
மனிதன் நினைப்பது ஒன்று
இறைவன் நிகழ்த்துவது ஒன்று. மனித அறிவால் எதையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை
தீன் சொல்கிறது.
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ
عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى
الْاَرْحَامِ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَّمَا
تَدْرِىْ نَـفْسٌ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
நிச்சயமாக அந்த (கியாம)
நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன்
கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது
எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும்
அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)
1039 - ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ
ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ، ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ
ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻣﻔﺘﺎﺡ اﻟﻐﻴﺐ ﺧﻤﺲ ﻻ ﻳﻌﻠﻤﻬﺎ ﺇﻻ اﻟﻠﻪ: ﻻ ﻳﻌﻠﻢ ﺃﺣﺪ ﻣﺎ ﻳﻜﻮﻥ
ﻓﻲ ﻏﺪ، ﻭﻻ ﻳﻌﻠﻢ ﺃﺣﺪ ﻣﺎ ﻳﻜﻮﻥ ﻓﻲ اﻷﺭﺣﺎﻡ، ﻭﻻ ﺗﻌﻠﻢ ﻧﻔﺲ ﻣﺎﺫا ﺗﻜﺴﺐ ﻏﺪا، ﻭﻣﺎ ﺗﺪﺭﻱ ﻧﻔﺲ
ﺑﺄﻱ ﺃﺭﺽ ﺗﻤﻮﺕ، ﻭﻣﺎ ﻳﺪﺭﻱ ﺃﺣﺪ ﻣﺘﻰ ﻳﺠﻲء اﻟﻤﻄﺮ .
1039. 'ஐந்து காரியங்களை
அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும்
அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச்
சம்பாதிப்பார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை
அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 15.
மழை வேண்டுதல்
3 . @@@@@@@
ஏன் இவ்வாறான அழிவுகள்
.
நாம்செய்யும் தீய
செயல்களின் விளைவு தான் என்பதை பன்னெடும் காலமாக கடந்து வந்த பாரம்பரிய வரலாற்றை குர்ஆன் போதிக்கின்றது
.
தப்புத் தவறு
செய்பவர்கள் திருந்தி விட வேண்டும். அல்லது அழிந்து இப்புவியை பரிசுத்தமாக்கிட
வேண்டும்..
ظَهَرَ الْفَسَادُ فِى
الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ
الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ⚪
மனிதர்களில் கைகள்
தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும்
தோன்றின;
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே
(தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன்
செய்கிறான்.
(அல்குர்ஆன் : 30:41)
اَوَلَا يَرَوْنَ
اَنَّهُمْ يُفْتَـنُوْنَ فِىْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا
يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ⚪
ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றனர்
என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை; நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
(அல்குர்ஆன் : 9:126)
فَكُلًّا اَخَذْنَا
بِذَنْبِهٖ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا
وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ
الْاَرْضَ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا وَمَا كَانَ اللّٰهُ لِيَـظْلِمَهُمْ
وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْن⚪
َ
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும்
அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும் புயல் மூலமாக கல்மாரியை
அனுப்பினோம்;
அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப்
பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ்
அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
(அல்குர்ஆன் : 29:40)
قُلْ هُوَ الْقَادِرُ
عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ
اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَـعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَاْسَ بَعْضٍ
اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ ⚪
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்:
"உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது பாதங்களுக்குக் கீழிருந்தோ
உங்களுக்கு (யாதொரு) வேதனை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர்
சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள்
அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கின்றான்." அவர்கள்
விளங்கிக்கொள்வதற்காக நாம் (நம்முடைய) வசனங்களை எவ்வாறு பல வகைகளில் (தெளிவு
படுத்திக்) கூறுகின்றோம் என்று நீங்கள் கவனியுங்கள். (அல்குர்ஆன் : 6:65).
நாங்கள் பலசாலிகள்
வலிமை மிக்கவர்கள் என்று கூவிய "ஆத்" என்ற கூட்டம் பெரும் கொடிய சூறாவளி
காற்றால் துவம்சம் செய்யப்படடார்கள்.
நாங்கள் அறிவாற்றல்
நிறைந்தவர்கள் என்று கூவிய "ஹுத்" என்ற கூட்டம் பெரும் கொடிய இடி
முழக்கத்தால் அழித்து ஒழிக்கப்படடனர் .
நாங்கள் அரசு அதிகாரம்
/ அங்கீகாரம் படைத்தவர்கள் என்ற பிர்அவ்ன் & அவன் சஹாக்களும் நீரில்
மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட்னர்.
நாங்கள் பண முதலைகள்
என்று
பெருமையோடு உலா வந்த காரூன் மண்ணில் (பூகம்பத்தால்) விழுங்கப்பட்டான்.
اِنَّاۤ اَرْسَلْنَا
عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ ⚪
நிச்சயமாக நாம் அவர்கள்
மீது,
நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
(அல்குர்ஆன் : 54:19)
تَنْزِعُ النَّاسَۙ
كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِر⚪ٍ
நிச்சயமாக: வேரோடு
பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்தூறைப் போல் (அக்காற்று) மனிதர்களை
பிடுங்கி எறிந்து விட்டது. (அல்குர்ஆன் : 54:20)
فَنَادَوْا صَاحِبَهُمْ
فَتَعَاطٰى فَعَقَرَ⚪
ஆனால் (அம்மக்களோ
ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்)
தரித்து விட்டான். (அல்குர்ஆன் : 54:29)
فَكَيْفَ كَانَ عَذَابِىْ
وَنُذُر⚪ِ
என் (கட்டளையினால்
பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க
வேண்டாமா?)
(அல்குர்ஆன் : 54:30)
اِنَّاۤ اَرْسَلْنَا
عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ ⚪
நிச்சயமாக நாம் அவர்கள்
மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட
வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
(அல்குர்ஆன் : 54:31)
اِنَّاۤ اَرْسَلْنَا
عَلَيْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ نَّجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ ⚪
லூத்துடைய
குடும்பத்தாரைத் தவிர,
மற்றவர்கள் மீது,
நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை
பாதுகாத்துக் கொண்டோம். (அல்குர்ஆன் : 54:34)
وَلَقَدْ جَآءَ اٰلَ
فِرْعَوْنَ النُّذُرُ⚪
ஃபிர்அவ்னின்
கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன. (அல்குர்ஆன் : 54:41)
كَذَّبُوْا بِاٰيٰتِنَا
كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِيْزٍ مُّقْتَدِرٍ ⚪
ஆனால் அவர்கள் நம்முடைய
அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின்
பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். (அல்குர்ஆன் : 54:42)
فَاَمَّا ثَمُوْدُ
فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ ⚪
எனவே, ஸமூது கூட்டத்தார்
(அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். (அல்குர்ஆன் : 69:5)
وَاَمَّا عَادٌ
فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ ⚪
இன்னும், ஆது கூட்டத்தாரோ
பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
(அல்குர்ஆன் : 69:6)
سَخَّرَهَا عَلَيْهِمْ
سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا
صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ⚪
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும்
தொடர்ந்து வீசச் செய்தான்;
எனவே அந்த சமூகத்தினரை,
அடியுடன் சாய்ந்து விட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை
(அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். (அல்குர்ஆன் : 69:7)
فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْ
بَاقِيَةٍ ⚪
ஆகவே, அவர்களில் எஞ்சிய
எவரையும் நீர் காண்கிறீரா?
(அல்குர்ஆன் : 69:8)
وَجَآءَ فِرْعَوْنُ
وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَـاطِئَةِ ⚪
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்
இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
(அல்குர்ஆன் : 69:9)
فَعَصَوْا رَسُوْلَ
رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِيَةً ⚪
அதனால், அவர்கள் தம் இறைவனின்
தூதருக்கு மாறு செய்தனர்;
ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
(அல்குர்ஆன் : 69:10)
4 . @@@@@@@
அவர்கள் தான் அப்படி.
நாங்கள் என்ன தவறு
செய்தோம் என்றால்
தீமை அத்து மீறி
விட்டால் விளைவு அபாயகரமாகவே ஆகிவிடும்.
ஒரு தெருவில் பலர்
வசிக்கின்றனர் சிலர் அதை அசுத்தமாக்கி விடுகின்றனர் எனில் அதனால் ஏற்படும்
கிருமிகள் எல்லாரையுமே பாதிக்கும்.
2686 - اﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ
ﺑﺸﻴﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻳﻘﻮﻝ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻣﺜﻞ اﻟﻤﺪﻫﻦ ﻓﻲ
ﺣﺪﻭﺩ اﻟﻠﻪ، ﻭاﻟﻮاﻗﻊ ﻓﻴﻬﺎ، ﻣﺜﻞ ﻗﻮﻡ اﺳﺘﻬﻤﻮا ﺳﻔﻴﻨﺔ، ﻓﺼﺎﺭ ﺑﻌﻀﻬﻢ ﻓﻲ ﺃﺳﻔﻠﻬﺎ ﻭﺻﺎﺭ ﺑﻌﻀﻬﻢ
ﻓﻲ ﺃﻋﻼﻫﺎ، ﻓﻜﺎﻥ اﻟﺬﻱ ﻓﻲ ﺃﺳﻔﻠﻬﺎ ﻳﻤﺮﻭﻥ ﺑﺎﻟﻤﺎء ﻋﻠﻰ اﻟﺬﻳﻦ ﻓﻲ ﺃﻋﻼﻫﺎ، ﻓﺘﺄﺫﻭا ﺑﻪ، ﻓﺄﺧﺬ
ﻓﺄﺳﺎ ﻓﺠﻌﻞ ﻳﻨﻘﺮ ﺃﺳﻔﻞ اﻝﺳﻔﻴﻨﺔ، ﻓﺄﺗﻮﻩ ﻓﻘﺎﻟﻮا: ﻣﺎ ﻟﻚ، ﻗﺎﻝ: ﺗﺄﺫﻳﺘﻢ ﺑﻲ ﻭﻻ ﺑﺪ ﻟﻲ ﻣﻦ
اﻟﻤﺎء، ﻓﺈﻥ ﺃﺧﺬﻭا ﻋﻠﻰ ﻳﺪﻳﻪ ﺃﻧﺠﻮﻩ ﻭﻧﺠﻮا ﺃﻧﻔﺴﻬﻢ، ﻭﺇﻥ ﺗﺮﻛﻮﻩ ﺃﻫﻠﻜﻮﻩ ﻭﺃﻫﻠﻜﻮا ﺃﻧﻔﺴﻬﻢ
2686. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின்
சட்டங்களில்விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின்
நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப்
போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக்
கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள்
தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல்
தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல்
தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடாரியை எடுத்து, கப்பலின் கீழ்த்
தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, 'உனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள்.
அவன்,
'நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம்
தேவைப்படுகிறது. (அதனால்,
கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித்
கொள்வேன்)'
என்று கூறினான். (துளையிடவிடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள்
பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். அவனை அவர்கள்
(கப்பலில் துளையிட)விட்டு விட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக்
கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு
பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 52.
சாட்சியங்கள்
وَاتَّقُوْا فِتْنَةً لَّا
تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً وَاعْلَمُوْۤا اَنَّ
اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ⚪
நீங்கள் வேதனைக்குப்
பயந்துகொள்ளுங்கள். அது பாவம் செய்பர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (அதில் நல்லோரும் சிக்கி
விடலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள்
உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 8:25)
3346 - ﻋﻦ ﺯﻳﻨﺐ ﺑﻨﺖ
ﺟﺤﺶ، ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻦ ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺩﺧﻞ ﻋﻠﻴﻬﺎ ﻓﺰﻋﺎ ﻳﻘﻮﻝ: «ﻻ ﺇﻟﻪ ﺇﻻ
اﻟﻠﻪ، ﻭﻳﻞ ﻟﻠﻌﺮﺏ ﻣﻦ ﺷﺮ ﻗﺪ اﻗﺘﺮﺏ، ﻓﺘﺢ اﻟﻴﻮﻡ ﻣﻦ ﺭﺩﻡ ﻳﺄﺟﻮﺝ ﻭﻣﺄﺟﻮﺝ ﻣﺜﻞ ﻫﺬﻩ» ﻭﺣﻠﻖ
ﺑﺈﺻﺒﻌﻪ اﻹﺑﻬﺎﻡ ﻭاﻟﺘﻲ ﺗﻠﻴﻬﺎ، ﻗﺎﻟﺖ ﺯﻳﻨﺐ ﺑﻨﺖ ﺟﺤﺶ ﻓﻘﻠﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ: ﺃﻧﻬﻠﻚ ﻭﻓﻴﻨﺎ
اﻟﺼﺎﻟﺤﻮﻥ؟ ﻗﺎﻝ: «ﻧﻌﻢ ﺇﺫا ﻛﺜﺮ الخبث"
3346. நபி(ஸல்) அவர்களின்
துணைவியார்) ஸைனப் பின்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள்
(ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை.
நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது' என்று தம் கட்டை
விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள்.
உடனே,
நான் 'இறைத்தூதர் அவர்களே!
நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்..' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 60.
நபிமார்களின் செய்திகள்
5 . @@@@@@@
தப்பிக்க வழி.....
இந்நிலையில் செய்ய
வேண்டியது என்ன .
படைத்த இறைவன் ஒருவனே
என்ற நம்பிக்கை
வைத்து அவனிடம் துஆ செய்ய வேண்டும் . நம் செயல் பாடுகளை வெகு விரைவாக திருத்த
வேண்டும். நன்றி செலுத்தவேண்டும்.
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ: ﻗﺎﻝ
ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺑﺎﺩﺭﻭا ﺑﺎﻷﻋﻤﺎﻝ ﻓﺘﻨﺎ ﻛﻘﻄﻊ اﻟﻠﻴﻞ اﻟﻤﻈﻠﻢ ﻳﺼﺒﺢ اﻟﺮﺟﻞ
ﻣﺆﻣﻨﺎ ﻭﻳﻤﺴﻲ ﻛﺎﻓﺮا ﻭﻳﻤﺴﻲ ﻣﺆﻣﻨﺎ ﻭﻳﺼﺒﺢ ﻛﺎﻓﺮا ﻳﺒﻴﻊ ﺩﻳﻨﻪ ﺑﻌﺮﺽ ﻣﻦ اﻟﺪﻧﻴﺎ» . ﺭﻭاﻩ ﻣﺴﻠﻢ .
186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: இருள்
மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து
(நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக
இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறை
நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான்.
இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காக தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று
அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் : 1.
இறைநம்பிக்கை
وَاِذْ تَاَذَّنَ
رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ
عَذَابِىْ لَشَدِيْد⚪ٌ
மேலும், உங்கள் இறைவன் இவ்வாறு
அறிவித்திருந்ததையும் நினைவு கூறுங்கள்: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான்
உங்களுக்கு மென்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை
மிகக்கடுமையானதாகும்.”
(அல்குர்ஆன் : 14:7)
مَا يَفْعَلُ اللّٰهُ
بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ وَكَانَ اللّٰهُ شَاكِرًا
عَلِيْمًا ⚪
நீங்கள்
(அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால்
அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும்
இருக்கிறான்.(அல்குர்ஆன் : 4:147)
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ
اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ
الْخٰسِرِيْنَ ⚪
அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே!
எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை
செய்யாவிட்டால்,
நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 7:23).
முன்னோர்களுக்கான வேதனை
பின்னோர்களுக்கான படிப்பினை என்பதை உணர்ந்து செயல்படுவோம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.