புதன், 4 செப்டம்பர், 2019

ஆஷூராவில் ஓர் ஆசை


بسم الله الرحمن الرحيم

ஆஷூராவில் ஓர் ஆசை
*****************************

قال الله تعالي: وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ  الخ( يونس ٩٠)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ» معجم ابن الأعرابي

ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு வீடு வேண்டும் வாகனம் வேண்டும் என்று விரும்புகிறான் . அதில் கட்டிடத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை அந்த வீட்டில் பல உபரியான பொருட்கள்களை வாங்கி வைத்து அலங்கரிக்கின்றான் அதே போல வாகனத்தை அலங்கரிக்கின்றான். மனிதனுக்கு உண்ண உணவு தேவை அந்த அசல் உணவோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை அதற்கு சுவையான சால்னாக்கள் காய் கறி கூட்டுக்கள் விதவிதமான சுவைகளில் இணைத்து உட்கொள்கிறான். இதே போலத்தான் வணக்க வழிபாடுகளிலும் பர்ளான கடமையை மட்டும் நிறைவேற்றினால் போதாது நஃபிலான வணக்கங்களும் இணைத்துக் கொள்ளும் போதுதான் அவன் உன்னத அந்தஸ்த்தை அடைய முடியும்.


*நஃபில் வணக்கங்களினால் ஏற்படும் பலன்கள்*
******************************************************

1) பர்ளுகளில் ஏற்படும் குறைகள் நிவர்த்தி செய்ய உதவும்.

عَنْ حُرَيْثِ بْنِ قَبِيصَةَ، قَالَ: قَدِمْتُ المَدِينَةَ، فَقُلْتُ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، قَالَ فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقُلْتُ: إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يَرْزُقَنِي جَلِيسًا صَالِحًا، فَحَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ، قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ: انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ "،
(سنن الترمذي)
கியாமத் நாளன்று, மனிதனுடைய அமல்களில் முதன் முதலாக தொழுகையைப் பற்றி கேட்கப்படும், தொழுகை சரியாக இருந்தால் அவர் வெற்றியடைந்துவிடுவார், தன் நோக்கத்தை அடைந்துவிடுவார், தொழுகை சரியில்லையென்றால், அவர் தோல்வி அடைந்து நஷ்டமும் அடைவார்,
பர்ளுத் தொழுகையில் குறையிருந்தால், பர்ளின் குறைகளை நிவர்த்தி செய்ய எனது அடியானிடம் நஃபில்கள் ஏதேனும் இருக்கிறதா பாருங்கள்'' என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறுவான்,
நஃபில்கள் இருந்தால் அவற்றைக் கொண்டு பர்ளுகளின் குறைகளை நிறைவு செய்யப்படும், இவ்வாறே மற்ற அமல்கள் நோன்பு, ஜகாத், போன்றவைகளின் கணக்கு வழக்கு நடைபெறும்.
(பர்ளான நோன்புகளின் குறை நஃபில் நோன்புகள் மூலம் நிறைவு செய்யப்படும், ஜகாத்தின் குறை நஃபிலான தர்மத்தால் நிறைவு செய்யப்படும்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: திர்மிதி)


2)  இறைவனின் நெருக்கம், மன்னிப்பு கிடைக்கும், பாவத்திலிருந்து தடுக்கும், வியாதியை விரட்டும்.

عَنْ بِلَالٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأَبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، وَإِنَّ قِيَامَ اللَّيْلِ قُرْبَةٌ إِلَى اللَّهِ، وَمَنْهَاةٌ عَنْ الإِثْمِ، وَتَكْفِيرٌ لِلسَّيِّئَاتِ، وَمَطْرَدَةٌ لِلدَّاءِ عَنِ الجَسَدِ» الترمذي.

தஹஜ்ஜத் தொழுகையை அவசியம் தொழுது வாருங்கள்! அது உங்கள் முன்னோர்களில் நல்லோரின் வழிமுறை, இதன் மூலம் உங்கள் இரட்கனின் நெருக்கம் கிடைக்கும், தீமைகளிலிருந்து தடுக்கும், பாவங்கள் மன்னிக்கப்படும், உடலிலிருந்து நோயை விரட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: திர்மிதி)


3) அந்தஸ்து உயர காரணமாகும்
*************************************
ஒரு நிறுவனத்தில் பலரும்  வேலை செய்கின்றனர் என்றால் சிலர் தன் பொறுப்பு என்னவோ அதை மட்டும் கவனிப்பார்கள். இன்னும் சிலர் தன் பொறுப்பைக் கூட சரியாக நிறைவேற்றமாட்டார்கள். வேறு சிலர் தன் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதுடன் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் கூடுதல் அக்கறையுடன் நடந்துகொள்வார்கள் அவருக்கே உயர் பதவிகள் வழங்கப்படும். அப்படி வழங்கப்படுவது தான் நியாயமும்கூட. அது போலதான் இறைவனிடம் உயர்ந்த அந்தஸ்து கிடைக்க உபரியான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.

عَنْ رَبِيعَةَ بْنِ كَعْبٍ الْأَسْلَمِيِّ، قَالَ: كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: «سَلْ» فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ» (صحيح مسلم)

843. ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக! என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!) என்றார்கள். நான் (இல்லை) அதுதான் என்றேன். அதற்கு அவர்கள், அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு (நபில் / சுன்னத் அதிகம் தொழுது) உதவுவீராக! என்று சொன்னார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை)

அந்த  அடிப்படையில் நஃபிலான வணக்கங்கள் அதிகம் செய்வதற்கு மிக உகந்த காலம் இந்த முஹர்ரம் மாதமாகும் இதில் தான் ஆஷூரா என்ற சிறப்பு வாய்ந்த நாளும் உள்ளது அந்நாளில் நோன்பு நோற்பது சுன்னதாகும்.

ஆஷுரா நோன்பு
இது கட்டாயக் கடமையாக இருந்தது ஆரம்பத்தில். அந்த அளவுக்கு முக்கியமான நோன்பாகும்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،: أَنَّ قُرَيْشًا كَانَتْ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي الجَاهِلِيَّةِ، ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصِيَامِهِ حَتَّى فُرِضَ رَمَضَانُ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَفْطَرَ» صحيح البخاري

குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி(ஸல்) அவர்களும் ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் '(ஆஷுரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்!விட்டுவிட விரும்புபவர் அதைவிட்டுவிடட்டும்!" எனக் கூறினார்கள்.அறிவிப்பாளர் ஆயிஷா(ரலி). (நூல்:ஸஹீஹுல் புஹாரி 1893)


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நபி மூஸா [அலை]
நபி நூஹ்[அலை] அவர்களின் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்ட நோன்பு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ» صحيح مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2157)


وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ» صحيح مسلم .........

முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2151)


சிறுவர்களையும் நோன்பு நோற்க வைத்த ஸஹாபாக்கள்
************************************************
1960 عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ: «مَنْ أَصْبَحَ مُفْطِرًا، فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا، فَليَصُمْ» ، قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ العِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ صحيح البخاري

ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (நூல்: ஸஹீஹுல் புஹாரி 1960)


عَنْ دَاوُدَ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " صُومُوا يَوْمَ عَاشُورَاءَ، وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا، أَوْ بَعْدَهُ يَوْمًا "
(مسند أحمد)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: அஹ்மத்)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ»صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

பல அற்புதங்கள் நடந்த நினைவு நாளாகவும் இந்த ஆஷூரா நாள் திகழ்கின்றது.
*************************************************
قَوْلُهُ تَعَالَى: وَجاوَزْنا بِبَنِي إِسْرائِيلَ الْبَحْرَ، قَالَ الْكَلْبِيُّ: عَبَرَ بِهِمْ مُوسَى الْبَحْرَ يَوْمَ عَاشُورَاءَ بَعْدَ مَهْلِكِ فِرْعَوْنَ وَقَوْمِهِ فَصَامَهُ شُكْرًا لِلَّهِ عَزَّ وَجَلَّ، (تفسير البغوي)

* மூஸா நபி [அலை] அவர்கள் ஸாஹிரீன்களிடம் களமிறங்கி வெற்றி கொண்ட அந்த நாளும் ஆஷூரா நாள்தான் என்பது இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களின் கருத்து.

{قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ الاية}
قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: فَحَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ: أَنَّ يَوْمَ الزِّينَةِ الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ وَالسَّحَرَةِ، هُوَ يَوْمُ عَاشُورَاءَ. (تفسير ابن كثير)

قوله تعالى: {يَوْمُ الزِّينَةِ} فيه أربعة أقاويل: أحدها: أنه يوم عيد كان لهم , قاله مجاهد وابن جريج والسدي وابن زيد وابن إسحاق. الثاني: يوم السبت , قاله الضحاك. الثالث: عاشوراء , قاله ابن عباس. الرابع: أنه يوم سوق كانوا يتزينون فيها , قاله قتادة.
(تفسير الماوردي = النكت والعيون)

* ஆதம் [அலை] அவர்களின் நீண்ட கால தவ்பா ஏற்கப்பட்டதும் இந்த நாளில் என்று தஃப்ஸீரில் காணமுடிகிறது.

وَرُوِيَ أَنَّ اللَّهَ تَعَالَى تَابَ عَلَى آدَمَ فِي يَوْمِ عَاشُورَاءَ البحر (المحيط في التفسير)

* ஆறு மாத காலம் வெள்ளத்தில் சிக்குண்டு தவித்த நூஹ் நபி [அலை]  அவர்களின் கப்பல் ஜூதி மலையில் நிலை கொண்டதும் இந்த நாளில் என்று ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர்களில் காணமுடிகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُنَاسٍ مِنَ الْيَهُودِ قَدْ صَامُوا يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ: " مَا هَذَا مِنَ الصَّوْمِ؟ " قَالُوا: هَذَا الْيَوْمُ الَّذِي نَجَّى اللهُ مُوسَى وَبَنِي إِسْرَائِيلَ مِنَ الْغَرَقِ، وَغَرَّقَ فِيهِ فِرْعَوْنَ، وَهَذَا يَوْمُ اسْتَوَتْ فِيهِ السَّفِينَةُ عَلَى الْجُودِيِّ، فَصَامَ نُوحٌ وَمُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَنَا أَحَقُّ بِمُوسَى، وَأَحَقُّ بِصَوْمِ هَذَا الْيَوْمِ "، فَأَمَرَ أَصْحَابَهُ بِالصَّوْمِ (1) رواه أحمد
----------
(1)  ﺿﻌﻴﻒ ﻛﺴﺎﺑﻘﻪ.
ﻭﻫﺬا اﻟﺤﺪﻳﺚ ﺗﻔﺮﺩ ﺑﻪ اﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﺃﻳﻀﺎ.
ﻭﻳﺸﻬﺪ ﻟﻘﺼﺔ ﻣﻮﺳﻰ ﻣﻨﻪ ﺩﻭﻥ ﻗﺼﺔ ﻧﻮﺡ ﻋﻠﻴﻬﻤﺎ اﻟﺴﻼﻡ، ﺣﺪﻳﺚ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻋﻨﺪ اﻟﺒﺨﺎﺭﻱ (2004) ، ﻭﻣﺴﻠﻢ (1130) ،


عَن عبد الْعَزِيز بن عبد الغفور عَن أَبِيه قَالَ: قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم: فِي أول يَوْم من رَجَب ركب نوح السَّفِينَة فصَام هُوَ وَجَمِيع من مَعَه وَجَرت بهم السَّفِينَة سِتَّة أشهر فَانْتهى ذَلِك إِلَى الْمحرم فأرست السَّفِينَة على الجودي يَوْم عَاشُورَاء فصَام نوح وَأمر جَمِيع من مَعَه
( الدر المنثور)

قَالَ عِكْرِمَةُ: رَكِبَ نُوحٌ عَلَيْهِ السَّلَامُ فِي الْفُلْكِ لِعَشْرٍ خَلَوْنَ مِنْ رَجَبٍ، وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ لِعَشْرٍ خَلَوْنَ من المحرم، فذلك ستة أشهر، وقال قَتَادَةُ وَزَادَ، وَهُوَ يَوْمُ عَاشُورَاءَ، فَقَالَ لِمَنْ كَانَ مَعَهُ: مَنْ كَانَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ، وَمَنْ لَمْ يَكُنْ صَائِمًا فَلْيَصُمْهُ.
وَذَكَرَ الطَّبَرِيُّ فِي هَذَا حَدِيثًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ نُوحًا رَكِبَ فِي السَّفِينَةِ أَوَّلَ يَوْمٍ مِنْ رَجَبٍ، وَصَامَ الشَّهْرَ. أَجْمَعَ، وَجَرَتْ بِهِمُ السَّفِينَةُ إِلَى يَوْمِ عَاشُورَاءَ، فَفِيهِ أَرْسَتْ عَلَى الْجُودِيِّ، فَصَامَهُ نُوحٌ وَمَنْ مَعَهُ         (تفسير القرطبي)

قوله عز وجل: {وقال اركبوا فيها بِاسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيمٌ}
قال قتادة: ركب نوح عليه السلام في السفينة في اليوم العاشر من رجب , ونزل منها في اليوم العاشر من المحرم (تفسير الماوردي)


* யூனுஸ் நபி [அலை]  அவர்களின் சமூகத்தாருக்கு இறங்க இருந்த வேதனை விலக்கிக்கொள்ளப்பட்டது இந்த நாளில் என்று அலி [ரலி] கூறியதாக தஃப்ஸீரில் வருகிறது.

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (يونس 98)

وَعَن عَليّ - رَضِي الله عَنهُ - قَالَ: الحذر لَا يرد الْقدر، وَالدُّعَاء يرد الْقدر؛ فَإِن الله تَعَالَى كشف الْعَذَاب عَن قوم يُونُس بِالدُّعَاءِ. وَعَن عَليّ - أَيْضا - أَنه قَالَ: كَانَ كشف الْعَذَاب يَوْم عَاشُورَاء. (تفسير السمعاني)

وروي عن علي بن أبي طالب رضي الله عنه أنه قال: إن الحذر لا يرد القدر , وإن الدعاء يرد القدر , وذلك أن الله تعالى يقول: {إِلاَّ قَوْمَ يُونُسَ لَمَّاءَامَنُواْ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ} قال عليّ رضي الله عنه ذلك يوم عاشوراء. تفسير الماوردي

* யாகூப் நபி [அலை]  தன்பிள்ளைகள் செய்த தவறுக்கு இஸ்திஃபார் செய்வேன் என வாக்களித்து காத்திருந்து பிறகு இஸ்திஃபார் செய்தது இந்த நாளில் என்று தஃப்ஸீர்களில் வருகிறது.

قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ  قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ  (يوسف)
قَوْلُهُ تَعَالَى: (قالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي) قَالَ ابْنُ عَبَّاسٍ: أَخَّرَ دُعَاءَهُ إِلَى السَّحَرِ. وَقَالَ الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ طَاوُسٍ قَالَ: سَحَرُ لَيْلَةِ الْجُمْعَةِ، وَوَافَقَ ذَلِكَ لَيْلَةَ عَاشُورَاءَ.
(تفسير القرطبي)

وقال طاوس: أخّر إلى السحر من ليلة الجمعة فوافق ذلك ليلة عاشوراء. (تفسير الثعلبي)


இப்படி பல அற்புதங்களை தாங்கி நிற்கும் இரும்பு தூணாக இந்த ஆஷூரா நாள் திகழ்கின்றது.


ஆஷூரா குறித்து நபி ஸல் அவர்கள் கூறிய இன்னொரு விஷயம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ ". "
هَذِهِ الْأَسَانِيدُ وَإِنْ كَانَتْ ضَعِيفَةً فَهِيَ إِذَا ضُمَّ بَعْضُهَا إِلَى بَعْضٍ أَخَذَتْ قُوَّةً، وَاللهُ أَعْلَمُ " شعب الإيمان
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ» معجم ابن الأعرابي

ஆஷூரா நோன்பு பற்றி சில சட்டங்கள்
******************************************
பிரை 9.10.11 ஆகிய மூன்று நாட்களும் நோன்பு நோற்கலாம் ( பேனுதலுக்காக)

பிரை 9.10 மட்டும் நோற்கலாம் இதுவே ஹதீஸில் கூறப்பட்ட சுன்னத்தான முரையாகும். 9 ம் நாள் நோற்க முடியாவிட்டால் 10.11 நோற்கலாம்.

* இரண்டு நோன்பு நோற்க முடியாதவர்கள் 10 ம் நாள் மட்டும் நோற்றாலும் அது குற்றமாகாது. அது ஜும்ஆ நாளாக இருந்தாலும் தவறில்லை.

* எவருக்கேனும் ரமலான் நோன்பு களா இருந்தாலும் ஆஷூரா நோன்பை தனியாக நோற்று விட்டு பிறகு களா நோன்பை நோற்கலாம்.

* அல்லது ஆஷூரா நாளில் ரமலானுடைய களா நோன்பை நோற்றால் கலாவும் நிறைவேறும் ஆஷூரா நோன்பின் நன்மையும் கிடைக்க வாய்ப்புண்டு
ஆனாலும் சிறப்பு என்னவென்றால் ஆஷூரா நாளில் ஆஷூரா நோன்பை நோற்றுவிட்டு பிறகு களா நோன்பை தனியாக நோற்பதே சிறந்தது.

* 9. 11 ஆகிய இரண்டு நாட்கள் களா நோன்பையும் 10 ம் நாள் மட்டும் ஆஷூரா நோன்பையும் நிய்யத்து செய்வது நல்லது.

*பிரயாணிக்கு ஆஷூரா நோன்பு நோற்பது அவசியமில்லை மேலும் ஹைலு (மாதவிடாய்) நிபாஸ் உள்ள பெண்களின் மீதும் அந்த நோன்பை  மற்றொரு நாள் நோற்க வேண்டும் என்கின்ற அவசியமுமில்லை.
ஏனெனில் ஆஷூரா நோன்பு தவறினால் களா செய்ய வேண்டிய தில்லை.

* ஒவ்வொரு வருடமும் ஆஷூரா நோன்பை வழமையாக நோற்க கூடிய மனிதர் ஏதோ தங்கடத்தினால் ( நோய். ஹைலு. குழந்தைக்கு பாலூட்டல் போன்ற காரணத்தால்) ஒரு வருடம் நோன்பு நோற்க முடியாவிட்டாலும் அவரின் நிய்யத்தின் காரணமாக நோன்பு நோற்ற நன்மை கிடைத்து விடும் என்று ஹதீஸில் வந்துள்ளது.

اذا مرض العبد او سافر كتب له مثل ماكان يعمل مقيما صحيحا (رواه البخاري ٢٩٩٦)

ஆஷூரா நாளில் விரும்பத்தகாத நிகழ்வுகள்.
*************--**********************
ஷீயாக்கள் இந்த ஆஷூரா தினத்தை குறுகிய கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள். ஹிஜ்ரீ 61-ம் வருடம்  ஹூசைன் ரலி அவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த 16 நபர்களும், அநீதமாக கர்பலா களத்தில் கொலை செய்யப்பட்ட தாங்க முடியாத வடுவை ஏற்படுத்தி விட்ட அந்த கோர நிகழ்வும் அல்லாஹ்வின் நாட்டப்படி இதே நாளில் நிகழ்ந்து விட்டமையால் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து, தேவையற்ற சடங்குகளை கடைபிடிக்கிறார்கள்.  இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இது அறியாமைக் காலத்து பழக்கமாகும்.

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ , قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :    لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ    .

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.'
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1294.
அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.