வியாழன், 12 செப்டம்பர், 2019

வாழ்க வாழ்க நல்லாட்சியாளர் வாழ்க.


வாழ்க வாழ்க நல்லாட்சியாளர் வாழ்க.


படைப்புகளில் சிறந்த படைப்பான மனித இனம் சீரோடும் சிறப்போடும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ அரசியல் சாசன சட்ட திட்டங்களை உருவாக்கித் தந்துள்ளது இஸ்லாம்.


இஸ்லாமிய அரசியல் சாசன சட்ட திட்டம் என்பது மக்கள் சுதந்திரம் பாதுகாப்பு நீதி நிறைந்ததாகவும். சுரண்டல் லஞ்சம் ஊழல் அநீதி கொடுமை இவைகளுக்கு சாவுமணியாகவும் இருக்கும் .
இந்த தலைவர்கள் எளிமை அடக்க ஒடுக்கம் நிறைந்தவர்களாகவும் தலைவர்களை தட்டிக்கேட்கும் உரிமை சாமானியனுக்கும் வழங்க கூடியதாக அமைந்திருக்கும்


இத்தகைய அரசியல்சாசன சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பு உருவாகுமானால் நாடு வளம் பெறும் . மக்கள் நலன் பெறுவார்கள். இஸ்லாம் பல கட்டுப்பாடுடன் கூடிய ஒரு ஒழுங்கு முறையை கற்றுத் தருகிறது.

@@@@@@@@

1 . பதவியில் பொறுப்புணர்வு வேண்டும்.
அரசியல் சாசன சட்டம் இறைவன் சொன்ன முறையில் அமைய வேண்டும்.

أَلَا كُلُّكُمْ رَاعٍ ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، فَالْإِمَامُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ،

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
(ஸஹீஹ் புகாரி : 7138.
அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்)


وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَ‌ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْ‌ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ‏

(நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (உங்களுடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகின்றான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 5:49)

2 . @@@@@@@@


நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும் பாரபட்சம் / ஒரு தலைபட்சம் கூடாது.


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌  اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய (இத்தவறான) செயலை நன்கறிந்து கொள்வான்.
(அல்குர்ஆன் : 4:135)

من ابي داود : - 4374عن عائشة قالت: كانت امرأةٌ مخزوميةٌ تستعيرُ المتاعَ وتجحَدُهُ، فأمرَ النبيُّ -صلَّى الله عليه وسلم- بقطعِ يَدِها، وقصَّ نحو حديثِ الليث، قال: فقطع النبيُّ -صلَّى الله عليه وسلم- يدها (1).

سنن النسائي (8/ 73)
4898 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: اسْتَعَارَتِ امْرَأَةٌ عَلَى أَلْسِنَةِ أُنَاسٍ يُعْرَفُونَ، وَهِيَ لَا تُعْرَفُ حُلِيًّا فَبَاعَتْهُ، وَأَخَذَتْ ثَمَنَهُ، فَأُتِيَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَعَى أَهْلُهَا إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ، فَكَلَّمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا، فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُكَلِّمُهُ، ثُمَّ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَشْفَعُ إِلَيَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ؟» فَقَالَ أُسَامَةُ: اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشِيَّتَئِذٍ، فَأَثْنَى عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّمَا هَلَكَ النَّاسُ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ الشَّرِيفُ فِيهِمْ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا»، ثُمَّ قَطَعَ تِلْكَ الْمَرْأَةَ

[حكم الألباني] صحيح الإسناد

மக்ஸூமியா என்ற உயர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி கொஞ்ச தங்க நகையை இரவலாக வாங்கினார் . அதனை விற்று பணத்தை எடுத்துக் கொண்டார்கள் . நகை/பணம் திருப்பித் தர மறுத்துவிட்டார்கள் (இதுவும் ஒரு திருட்டு குற்றம் போல் தான் ) . எனவே அதற்குரிய தண்டனையான மணிக்கட்டு வரை கையை வெட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள். அப்போது இப்பெண் உயர்ந்த குலத்துப் பெண் கையை வெட்டக் கூடாது என்பதற்காகவே நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பிரியமான வளர்ப்பு மகன் (ஸைத் ரலி அவர்களின்)உடைய மகனான உசாமா (ரலி) அவர்களை பரிந்து-சிபாரிசு செய்ய அனுப்பினார்கள் . நபி ஸல் அவர்கள் வன்மையாக கண்டித்தார் இவ்வாறெல்லாம் ஆண்டாணுக்கு ஓர் நீதி அடிமைக்கு ஒரு நீதி என முந்தைய சமுதாயங்கள் பாரபட்சம் காட்டியதால் தான் அழிந்தார்கள் . என்பதாக கண்டிப்பு பிரகடனம் செய்து இந்தப் பெண்ணின் கை துண்டிக் கட்டளையிட்டார்கள்.


3 . @@@@@@@@

4.மக்களுக்கான பாதுகாப்பு.

குஜராத் மாநிலத்தில் 2000ல் பல்லாயிரம் அப்பாவி முஸ்லிம் கொலை. இன்று வரை காஷ்மீர் மக்கள்  மீது அரசாங்கம் இராணுவத்தை ஏவி விட்டு கலவரம் கலாட்டா கொலை கொள்ளை கற்பழிப்புகளை அரங்கேற்றும் அவல  நிலையில் இன்றைய அரசியல் ஆட்சியாளர்கள்.

3414. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ,
اﻋﻠﻢ، ﺃﺑﺎ ﻣﺴﻌﻮﺩ، ﻟﻠﻪ ﺃﻗﺪﺭ ﻋﻠﻴﻚ ﻣﻨﻚ ﻋﻠﻴﻪ»، ﻓﺎﻟﺘﻔﺖ ﻓﺈﺫا ﻫﻮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ،

"அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது"என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 27. சத்தியங்கள்)

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் வரம்பு மீறினால் உலகிலேயே (பழிவாங்க) நம் மீது அப்படி ஒரு  நிலை வந்து விடலாம் ,
வராமல் தப்பித்து விட்டாலும் மறுமையில் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம்...


4 . @@@@@@@@

லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகின்றது.
ஊழல் மலிந்து விட்டது.

عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :   اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ الْأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ ،
فَلَمَّا قَدِمَ قَالَ : هَذَا لَكُمْ ، وَهَذَا أُهْدِيَ لِي ،
قَالَ : فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ ، فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا ،
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ ، إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ، ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ ، اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ، اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثًا    .

அபூஹுமைத் அஸ்ஸா இதீ(ரலி) அவர்கள் கூறியதாவது:                        நபி (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார்.

فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ ، فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا ،
நபி (ஸல்) அவர்கள், இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கணைத்துக் கொண்டிருக்கும், பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? என்று மும்முறை கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 2597.
அத்தியாயம் : 50. முகாதப்)

படிப்பினை : சின்னது முதல் பெரிய காரியம் வரைக்கும் எல்லாமே இலஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் நடப்பதில்லை.

பெர்த் சர்டிபிகேட் வாங்குவது ' தண்ணீர் கனக்ஷன் , கரண்ட் கனெக்ஷன் , ஊரில் ரோடு போடுவது என எல்லாவற்றிலும் இலஞ்சம் விளையாடுகின்றது.

இதனை தடுப்பதற்காக அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது அந்த குழுவிலும் இதுபோன்ற லஞ்சமும் ஊழலும் நிரம்பி வழிகின்றது என்பதை நாம் பார்க்கின்றோம்.


5 . @@@@@@@@


5. அரசாங்கத்தை தட்டிக்கேட்கும் உரிமை.


வல்லரசையே அசைத்து பார்க்கும் அளவுக்கு பெண்ணுக்கு உரிமை.
அரசாங்கமோ அரசர்களோ சாதாரண ஒரு வார்டு தலைவரோ எந்தத் தவறு/அராஜகம் செய்தாலும் தட்டிக் கேட்க முடியாது / எதிர்த்து குரல் எழுப்ப முடியாது என்ற நிலையில் இன்றும் பார்க்கிறோம்.
ஆனால் அந்த நபி ஸல் அவர்களால் உருவாக்கப்பட்ட உமர் ரலி.
அந்த இரண்டாம் கலீபா உமர் ரலி அவர்களின் ஒரு ருசிகரமான் வரலாறு இதோ. இவர்கள் சின்னச் சிறு சில்லறை விஷயத்திற்கும் வாளை உருவும் கடும் கோபக்காரர் . வல்லரசர்களான சர்வாதிகளான ரோம பாரசீக பேரரசர்களே நடுநடுங்குவார்கள் .
இத்தகைய ஒரு பேரரசர் உமர் ரலி ஒரு சட்டத்தை பாஸாக்கினார்கள் .

ﻻ ﺗﻐﺎﻟﻮا ﻓﻲ ﺻﺪاﻕ اﻟﻨﺴﺎء ﻓﺈﻧﻬﺎ ﻟﻮ ﻛﺎﻧﺖ ﻣﻜﺮﻣﺔ ﻟﻜﺎﻥ ﺃﻭﻻﻛﻢ ﺑﻬﺎ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ»

மஹர்” குறிப்பிட்ட அளவை அதிகம் கூடாது என சட்டத்தை அறிவித்தார்கள் ஏனெனில் பெண்கள் மிக அதிகம் மஹர் கேட்பதால் நிறைய வாலிபர்கள் கல்யாணமின்றி தேங்கிவிட்டார்கள். அந்த சட்டத்தை அறிவித்த அதே சபையில் சாதாரண ஒரு பெண்மணி அதுவும் வயசான கிழவி எழுந்து நின்று அரசரை எதிர்த்து கேள்வி கேட்டார் . “(பொற்) குவிய”ல் (அளவிற்கு மஹர்) கொடுப்பதற்கு அல்லாஹ்  (4:20 குர்ஆனில்) அனுமதிக்கிறான் . என்று சொன்னவுடன் அந்த சட்டத்தை வாபஸ் பெற்று எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கொடுக்கலாம் திருத்தினார்கள்.(நூல் இப்னு கதீர்)

وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌  اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏

ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால்  (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு “(பொற்) குவிய”ல் (அளவிற்கு மஹர்) கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா?
(அல்குர்ஆன் : 4:20)
இந்த அளவுக்கு பெண்ணுக்குரிய உரிமையை கொடுத்தாங்க அந்த நபி ஸல் அவர்கள்.


படிப்பினை :

இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் தலைவர்கள் எவ்வாறு என்றால் சாதாரண ஒரு பிரஜை ஒரு குடிமகன் அதுவும் ஒரு பெண் எழுந்து நின்று மக்களுக்கு முன்னாடி அவரை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு.கேள்வி கேட்ட பொழுது அது சரியான நேரத்தில் அதனை ஒத்துக் கொண்டு திருத்திக் கொண்டார் என்ற கேள்வி கேட்டவரை தண்டிக்கவில்லை துன்புறுத்தவில்லை .

ஆனால்  இன்றைய   இந்தியாவின் வரலாறு பார்க்கிறோம்.
இரண்டு வருடத்திற்கு முன்பாக பெங்களூரில் நாட்டினுடைய பிரதமர் போகக்கூடிய அந்த விமானத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னதற்காக ஒரு முஸ்லிம் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார் அல்லது அவர் பணியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டார்...

மேலும் கஷ்மீரில் இன்று நடக்கும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் IAS அதிகாரிகளே பதவி விலகிய இழிநிலைகளை நாம் பார்க்கிறோம்... இது இன்றைய வரலாறு.


6 . @@@@@@@@


பொதுமக்களின் நலனே முக்கியம் . சுயநலமோ குடும்பநலமோ கூடாது .

عن عَلِيّ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا، وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا». حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ»

அலீ(ரலி) அறிவித்தார்.
(என் துணைவியாரான) 'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா(ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி(ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி(ஸல்) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3113.
அத்தியாயம் : 57. குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை

மேலே உள்ள அதே வரலாற்றுத் தொடராக “முஸ்னத் அஹ்மத்”தில் 0838வது ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

وفي رواية مسند احمد : وَاللهِ لَا أُعْطِيكُمَا وَأَدَعُ أَهْلَ الصُّفَّةِ تَطْوَى بُطُونُهُمْ، لَا أَجِدُ مَا أُنْفِقُ عَلَيْهِمْ، وَلَكِنِّي أَبِيعُهُمْ وَأُنْفِقُ عَلَيْهِمْ أَثْمَانَهُمْ " فَرَجَعَا، فَأَتَاهُمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ دَخَلَا فِي قَطِيفَتِهِمَا، إِذَا غَطَّتْ رُءُوسَهُمَا تَكَشَّفَتْ أَقْدَامُهُمَا، وَإِذَا غَطَّيَا أَقْدَامَهُمَا تَكَشَّفَتْ رُءُوسُهُمَا، فَثَارَا، فَقَالَ: " مَكَانَكُمَا " ثُمَّ قَالَ: " أَلَا أُخْبِرُكُمَا بِخَيْرٍ مِمَّا سَأَلْتُمَانِي؟ "

திண்ணைத் தோழர்கள் இவர்களின் வயிறுகள் பசியால் (சுருங்கி-) சுருண்டிருக்க அவர்களுக்கு கொடுக்காமல் விட்டுவிட்டு உங்களுக்கு தரமாட்டேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக.
அவர்களுக்கே அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பதற்கு என்னிடத்தில் ஏதும் இல்லை . எனவே இந்த அடிமைகளை விற்று அதனுடைய விலையை இவர்களுக்கே நான் செலவழிப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னதால் அந்த இருவரும் (-மகளும் மருமகனும் கைசேதத்துடன் வீடு)   திரும்பிவிட்டார்கள் . அவர்களுடைய வீட்டிற்கு நபி ஸல் அவர்கள் வந்தார்கள் .
நீங்கள் கேட்டதை விட சிறந்ததை சொல்லி தரட்டுமா என்பதாக அது தூங்கும் முன்பு இந்த தஸ்பீஹ்களை ஓதுங்கள்.


7 . @@@@@@@@

எளிமை கடைபிடிக்க வேண்டும். அரண்மனை / மாடமாளிகை கூடாது.


عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ

'நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹ் புகாரி : 382.
அத்தியாயம் : 8. தொழுகை)

படிப்பினை : அவர் மிகப்பெரிய அரசர் . ஆனால் நிம்மதியாக படுப்பதற்காக ஒரு விசாலமான வீடு இல்லை . அத்தியாவசிமாக பயன் பெறுவதற்காக வேண்டி ஒரு சின்ன விளக்கு கூட இல்லாத ஒரு எளிமையான  வாழ்வு.

@@@@@@@

மண் தரையும் ஓலை பாயுமே விரிப்பு.

فَإِذَا الغُلاَمُ يَدْعُونِي قَالَ: أَذِنَ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلْتُ عَلَيْهِ، فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ،…….ثُمَّ رَفَعْتُ بَصَرِي فِي بَيْتِهِ، فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ البَصَرَ غَيْرَ أَهَبَةٍ ثَلاَثَةٍ، فَقُلْتُ: ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ، فَإِنَّ فَارِسَ وَالرُّومَ وُسِّعَ عَلَيْهِمْ، وَأُعْطُوا الدُّنْيَا وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ، وَكَانَ مُتَّكِئًا فَقَالَ: «أَوَفِي شَكٍّ أَنْتَ يَا ابْنَ الخَطَّابِ أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الحَيَاةِ الدُّنْيَا»،

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உமர் ரலி அவர்கள் சொன்னதாக அறிவித்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கம் அந்தப் பாய்க்குமிடையே மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் சலாம் கூறினேன்.........பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று (பதனிடப்படாத) தோல்களைத் தவிர அப்போது நான், 'தங்கள் சமுதாயத்தினருக்கு உலகச் செல்வங்களை தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் - அவர்கள் அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் (உலகச் செல்வங்கள்) தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் (தலையணை மீது) சாய்ந்து உட்கார்ந்து, 'கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள், தம் (நற் செயல்களுக்கான) பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்' என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 2468.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்)

8 . @@@@@@@@

சொத்துக் குவிப்பு . பினாமியாக சொத்து.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ، بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'இரும்புக் கவசம்' என்றும் இன்னோர் அறிவிப்பில், 'இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள்' என்றும் இடம் பெற்றுள்ளது.
ஸஹீஹ் புகாரி : 2916.
அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்


படிப்பினை : சில அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருப்போம் ஒரு நேரத்திற்கு ஒரு சேலை ஒரு செருப்பு என்பதாக வருஷம் முழுவதும் அவர்கள் உபயோகித்த  பொருட்கள் மட்டுமே பல கோடிகளுக்கு சமமாக இருந்தது.

அவ்வாறு இப்போது இருக்கக்கூடிய சில பெரிய அரசியல் தலைவர்கள் அவர்கள் ஒரு தடவை போடக்கூடிய ஒரு கோட்டு அது மட்டுமே பல லட்சங்களுக்கு சமமானதாக இருக்கின்றது . இது இன்றைய அரசியல்வாதிகள் இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்றும் பார்த்தோம்.


9 . @@@@@@@@

தலைவரால் மக்களுக்கு எந்த இடையூறும் உண்டாகக் கூடாது தனித்துவம் கூடாது மக்களோடு மக்களாக இருக்க வேண்டும்

سنن النسائي (5/ 270)
3061 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا أَيْمَنُ بْنُ نَابِلٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ عَلَى نَاقَةٍ لَهُ صَهْبَاءَ، لَا ضَرْبَ، وَلَا طَرْدَ، وَلَا إِلَيْكَ إِلَيْكَ»
__________
[حكم الألباني] صحيح

நபி) ஸல்( அவர்கள் ஹஜ்ஜுப்பெருநாளில் தனக்குரிய ஒரு ஒட்டகம் அது சிகப்பும் வெள்ளையும் கலர் இருக்கக்கூடிய ஒரு ஒட்டகத்தின் மீது அமர்ந்த வண்ணம் (மக்கா-மினாவில் பெரிய) ஜம்ராவில் கல்லெறிய நான் கண்டேன். (இங்கு மக்கள் கூட்டம் கடல்போல் நிறைந்திருந்தது யாரையும்) அடிக்கவுமில்லை . விரட்டவுமில்லை. ஓரம்போ ஓரம்போ என்று சொல்லவும் இல்லை.
(ஆக மக்களோடு மக்களாக சேர்ந்து அவர்கள் கல்லெறிந்தார்கள்)
(ஹதீஸ் அறிவிப்பாளர் குதாமஹ் ரலி.)(நூல் திர்மிதி.நஸயீ .இப்னு மாஜஹ்.)

10 . @@@@@@@

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கை சீர் கெடுப்பவர் பதவியில் நீடிக்க முடியாது.

மக்கா வெற்றிக்காக உள்ளே நுழையும் பொழுது இன்று மன்னிப்புடைய தினம் அல்ல பழிவாங்கும் தினம் என்று சொன்ன ஒரே ஒரு முழக்கத்தின் காரணமாக பதவி பறிக்கப்பட்டது.


ஸஅது இப்னு உபாதா (ரழி) அன்சாரிகளின் (கேப்டன் பதவிக்கான) கொடியை ஏந்தியிருந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்கு அருகில் வந்தபோது “இன்றைய தினம் கடுமையான போராட்ட நாளாகும்.

இன்றைய தினம் மானமரியாதை கிழிக்கப்படும் நாளாகும்  இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளைக் கேவலப்படுத்தி விட்டான்” என்று கூறினார்.
இந்த வார்த்தை அபூஸுஃப்யானுக்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அபூஸுஃப்யானுக்கு அருகில் நபி (ஸல்) வந்தபோது “அல்லாஹ்வின் தூதரே! ஸஅது என்ன கூறினார் என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா?” என்று கேட்டார். “அவர் என்ன கூறினார்?” என்று நபி (ஸல்) கேட்க, “இன்னின்னதை அவர் பேசினார்” என அபூ ஸுஃப்யான் (ரழி) விளக்கினார்.

ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ:
ﺑﻞ اليوم ﻳﻮﻡ ﺗﻌﻈﻢ ﻓﻴﻪ اﻟﻜﻌﺒﺔ، اليوم ﻳﻮﻡ ﺃﻋﺰ اﻟﻠﻪ ﻓﻴﻪ ﻗﺮﻳﺸﺎ،
ﺛﻢ ﺃﺭﺳﻞ ﺇﻟﻰ ﺳﻌﺪ ﻓﻨﺰﻉ ﻣﻨﻪ اﻟﻠﻮاء، ﻭﺩﻓﻌﻪ ﺇﻟﻰ اﺑﻨﻪ ﻗﻴﺲ، ﻭﺭﺃﻯ ﺃﻥ اﻟﻠﻮاء ﻟﻢ ﻳﺨﺮﺝ ﻋﻦ ﺳﻌﺪ. ﻭﻗﻴﻞ: ﺑﻞ ﺩﻓﻌﻪ ﺇﻟﻰ اﻟﺰﺑﻴﺮ.

நபியுடன் இருந்த உஸ்மான் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ஆகிய இருவரும் “அல்லாஹ்வின் தூதரே! மேலும், அவர் குறைஷிகளைக் கொன்று குவித்து விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர்.
அதற்கு நபி (ஸல்) அவ்வாறு நடக்காது. இன்றைய தினம் கஅபாவை மகிமைப்படுத்தும் தினமாகும். இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளுக்குக் கண்ணியமளித்த தினமாகும்” என்று கூறிவிட்டு ஒருவரை ஸஅதிடம் அனுப்பி அவரிடமுள்ள கொடியை பிடிங்கி அவரது மகன் "கைஸ்"இடம் கொடுத்தார்கள். அதாவது, கொடி ஸஅதிடம்தான் இருக்கிறது என்று பொருளாகும். ஆனால் சிலர், அந்தக் கொடியை ஜுபைரிடம் நபி (ஸல்) கொடுத்தார்கள் என்கின்றனர்.


குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகிறீர்கள்?” என நபி (ஸல்) கேட்க, “நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரன் மகனாகவும் இருக்கின்றீர்கள்” என பதில் கூறினர்.
நபி (ஸல்) “நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன்.

ﻻ ﺗﺜﺮﻳﺐ ﻋﻠﻴﻜﻢ اليوم اﺫﻫﺒﻮا ﻓﺄﻧﺘﻢ اﻟﻄﻠﻘﺎء.
உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

11 . @@@@@@@@


ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டுமே தவிர அழிக்கவோ அழிவின் விளிம்புக்கு இழுத்துச் செல்வோ கூடாது.

இதோ இஸ்லாமிய ஆட்சியாளர்கள்.

1 .நபி தாவூத் அலை அவர்கள் வெல்டிங் மாஸ்டராக இருந்தார்கள் .
وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْ بَاْسِكُمْ‌ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ‏

இன்னும், (நீங்கள் எதிரிகளுடன் போரிடும்போது,) உங்களுடைய யுத்தத்தில் உங்களை தற்காத்துக் கொள்வதற்காக அணிந்துகொள்ளும் கவசங்கள் செய்வதை உங்களுக்காக நாம் அவருக்குக் கற்றுக்கொடுத்தோம், இதற்காக நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறீர்களா?
(அல்குர்ஆன் : 21:80)



2 . நபி சுலைமான் அலை அவர்கள்  கட்டிடக்கலை இன்ஜினியராக இருந்தார்கள் .

يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ  اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا  وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ‏
அவைகள் (ஸுலைமானாகியா) அவர் நாடிய, மிஹ்ராபுகளை (பள்ளிகள், கோட்டைகள் உயர்ந்த குடியிருப்புத்தலங்கள் ஆகியவற்றை)யும், சிற்பங்களையும், (பெரிய பெரிய தண்ணீர்த்) தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத (நிலையான) பெரிய (சமையல்) பாத்திரங்களையும் அவருக்காகச் செய்து கொண்டிருந்தன: (ஆகவே,) “தாவூதுடைய சந்ததிகளே! (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதற்காக செயல்படுங்கள், மேலும், என்னுடைய அடியார்களில் நன்றிசெலுத்துவோர் (வெகு) சொற்பமேயாவர்” (என்று கூறினோம்).
(அல்குர்ஆன் : 34:13)


وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
(அல்குர்ஆன் : 21:78)


3 . துல்கர்னைன் மிகப்பெரும் இரும்பு சுவரை கட்டி உருவாக்கினார்கள் .

اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌  حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌  حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ‏
நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
(அல்குர்ஆன் : 18:96)

فَمَا اسْطَاعُوْۤا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَـقْبًا‏
எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
(அல்குர்ஆன் : 18:97)


4 . குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் நவாப்புகளும் இந்த பாரத திருநாட்டை கூறுபோட்டு  பிரித்து ஆட்சி செய்துகொண்டிருந்த இந்த திரநாட்டை ஒரே பெல்ட் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து ஒரு அகண்ட பாரத நாடாக  ஒன்றிணைத்த பெருமை முஸ்லிம்களான முகலாய ராஜாக்களுக்கு சொந்தம்  ராஜாக்களுக்கு.

பிரித்தாளும் சூழ்ச்சி சிறுபான்மையினரை நசுக்கும் போக்கு அழிவுக்குள் அகப்படும் ஆட்சியாளர்களின் போக்காகும்.


اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌  اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏
நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ வைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமம் செய்பவனாக இருந்தான்.
(அல்குர்ஆன் : 28:4)


ஃபிர்அவ்ன் / ஹிட்லர் /

மாநிலங்களாக மாவட்டங்களாக ஜாதி வாரியாக கூறு போடக்கூடிய ஒரு அவல நிலையை நாம் பார்க்கின்றோம்.

5 . இன்று இந்தியாவினுடைய தலைநகரில் இருக்கக்கூடிய பார்லிமென்ட் கட்டிடம்
முஸ்லிம்களான முகலாய ராஜாக்களால் உருவாக்கி தரப்பட்டது.

தாஜ்மஹால் / குதுப்மினார் கோட்டைகள் போன்று பல நுட்பமான கட்டிட கலைகளை நுட்பமான பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள முஸ்லிம்களான முகலாய அரசர்களின்  வரலாறை பேசுகின்றன.


6 . ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் அனாதைகளுக்கு ஆதரவற்றவர்களுக்கு உதவும் வண்ணம் பைத்துல் மாலும் உருவாக்கப்பட்டு அவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு முழுமையான முறையில் உதவி செய்யப்பட்டு ஆதரவளிக்கப் பட்டார்கள்.

இரண்டாம் கலீபா உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்  ஒரு ஏழையான குடும்பத்திற்காக தன்னுடைய சொந்த முதுகில் உணவுகளை சுமந்து கொண்டு போய் சேர்த்தார்கள்.


7 . அகதிகளையும் வேலையில்லாத மக்களையும் யாசகம் கேட்கக்கூடிய மக்களையும் கூட தொழிலாளர்களாக தொழிலதிபர்களாக மாற்றியது இஸ்லாம்.

மக்காவிலிருந்து மதினாவுக்கு அகதியாக வந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அதையெல்லாம் உடைய வரலாறு.


8 . இதோ சில நாடுகளின்  அவல நிலை .

நல்ல முறையில் தொழில் செய்யக்கூடிய தொழில் அதிபர்களையும் நடுரோட்டில் இறக்கிவிட்டு இருக்கின்றது.

உயர்ந்த உத்தியோகத்தில்-வேலையிலிருந்த பலரையும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தள்ளி இருக்கின்றது.

பச்சை பசுமையான விவசாய நிலங்கள் எல்லாம் வைத்து வயித்துக்கு சோறு போட்டு வந்த அந்த விவசாயிகளை நடுரோட்டில் (அரை) நிர்வாணமாக ஓட விட்டது


9 . பசுமைப்புரட்சி.

مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لِأَحَدٍ فَهُوَ أَحَقُّ

அன்னை ஆயிஷா(ரலி) கூறினார்.
'யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உமர்(ரலி) தம் ஆட்சிக் காலத்தின்போது இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்' என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2335.
அத்தியாயம் : 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்

படிப்பினை: ஆனால் இன்றோ பசுமையான விவசாய நிலங்களை காடுகளாக மாற்றிவிடுகின்றனர்  நம்முடைய சில ஆட்சியாளர்கள்.


ஆக இஸ்லாம் சொல்லக்கூடிய அந்த முறையில் ஆட்சி அதிகாரங்கள் பேணப்படுமானால் நாடும் மக்களும் வளம் பெறுவார்கள் நலம் பெறுவார்கள் அத்தகைய ஒரு நல்லாட்சியை தருவானாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.