بسم
الله الرحمن الرحيم
வெயில் தரும் பாடம்
**************************
வெயில் தரும் பாடம்
**************************
முன்னுரை: அல்லாஹ் பூமியில் நால்வகை பருவ
நிலைகளை அமைத்துள்ளான். அவை
1-இலையுதிர் காலம்
குளிர்; காலம்.2
வசந்த காலம்.3
கோடை காலம்.4
لإيلاف
قريش(1)إيلافهم رحلة الشتاء والصيف (2) فليعبدوا رب هذا البيت (3) الذي
أطعمهم من جوع وآمنهم من خوف (4)
106:1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி
106:2. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில்
அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:4. அவனேஅவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
இம்மையாகிறது மறுமையின் கண்ணாடியாகும்
அல்லாஹ் இம்மையை மறுமையின் கண்ணாடியாக ஆக்கியுள்ளான். இம்மையில் நாம் காணும் இன்பங்கள் மறுமையின் இன்பங்களையும், இம்மையில் நாம் காணும் துன்பங்கள் மறுமையின் துன்பங்களையும் நினைவுபடுத்தும்.
அல்லாஹ் இம்மையை மறுமையின் கண்ணாடியாக ஆக்கியுள்ளான். இம்மையில் நாம் காணும் இன்பங்கள் மறுமையின் இன்பங்களையும், இம்மையில் நாம் காணும் துன்பங்கள் மறுமையின் துன்பங்களையும் நினைவுபடுத்தும்.
கடும் வெப்பத்திற்கான காரணங்கள்
********************************************
முதலாவது : நரகத்திற்கு மூச்சுவிட வழங்கப்பட்ட அனுமதி
1431- صحيح مسلم عَنْ أَبِي ذَرٍّ قَالَ أَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالظُّهْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَبْرِدْ أَبْرِدْ)). أَوْ قَالَ: ((انْتَظِرِ انْتَظِرْ)). وَقَالَ: ((إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ)). قَالَ أَبُو ذَرٍّ حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ.
1086. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்
கூறியதாவது: )ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை அழைப்பாளர்
லுஹ்ர் தொழுகைக்கு அழைப்புவிடுக்க முற்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”வெப்பம்
தணியட்டும், வெப்பம் தணியட்டும்” அல்லது ”பொறுங்கள், பொறுங்கள்” என்று
கூறிவிட்டு, ”கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு
காரணமாகவே உண்டாகிறது. வெப்பம் கடுமையாகும் போது அது தணியும்வரை தொழுகையைத்
தாமதப்படுத்துங்கள்!” என்று சொன்னார்கள். )எனவே, நாங்கள்
தொழுகையைத் தாமதப்படுத்தினோம்) எந்த அளவிற்கென்றால் குன்றுகள் மீது நிழல்
விழுந்திருப்பதை நாங்கள் கண்டோம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
537-صحيح البخاري عن ابي هريرة رضي الله عنه عن النبي صلي الله
عليه وسلم وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ
بَعْضِي بَعْضًا. فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ
فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا
تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ
537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச்
சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு
விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான்.
கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள்
உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்.” என அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்
عَنْ
أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، قَالَ: كُنْتُ أُجَالِسُ ابْنَ عَبَّاسٍ
بِمَكَّةَ فَأَخَذَتْنِي الحُمَّى، فَقَالَ أَبْرِدْهَا عَنْكَ بِمَاءِ زَمْزَمَ،
فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «الحُمَّى مِنْ
فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ أَوْ قَالَ بِمَاءِ زَمْزَمَ . صحيح
البخاري : 3261
3261. அபூ ஜம்ரா
அள்ளுபயீ(ரஹ்) அறிவித்தார். நான் (மார்க்க
அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு
அப்பாஸ்(ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒரு முறை) என்னைக் காய்ச்சல்
பீடித்தது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) சொன்னார்கள். 'ஸம்ஸம்' தண்ணீரைப்
பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக் கொள் ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்'இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் தான்
உண்டாகிறது. எனவே அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள்
நரக
நெருப்பு மிகக் கடுமையானது
*****************************************
*****************************************
قال الله تعالي : فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَنْ يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرِّ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا لَوْ كَانُوا يَفْقَهُونَ (التوبة : 81)
9:81. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்)
பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக (த் தம் வீடுகளில்) இருந்து
கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர்
புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த
வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது”
என்று (நபியே!) நீர்
கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்)
6562- صحيح البخاريَ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ أَهْوَنَ أَهْلِ
النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ عَلَى أَخْمَصِ قَدَمَيْهِ
جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، كَمَا يَغْلِي الْمِرْجَلُ
وَالْقُمْقُمُ)).
6562. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை
செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக்
கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது)
பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும். என
நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்
வெப்பத்தின்
பாதிப்பு
**************************
1. கடும் வியர்வை :
**************************
1. கடும் வியர்வை :
مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ (16) يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ (إبراهيم : 17)
14:16. அவனுக்கு
முன்னால் நரகம் தான் இருக்கிறது இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே
குடிக்கக் கொடுக்கப்படும்.
14:17. அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

2. இலகுவான
ஆடையை மனம் தேடும்.
*****************************************
*****************************************
قال الله تعالي : هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ (الحج : 19
22:19. (முஃமின்களும்
முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்;
ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு
நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும்
நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
நரகத்தை
அஞ்சிய முன்மாதிகள்
************************************
நபி (ஸல்) அவர்கள்:
***************************
************************************
நபி (ஸல்) அவர்கள்:
***************************
6389 صحيح البخاري عن أنس، قال: كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم: «اللهم ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار
நபி (ஸல்) அவர்கள் اللهم
ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار என்று அதிகமதிகம்
பிரார்த்திப்பார்கள். (புஹாரி)
வானவர்மீகாயீல்
(அலை)
********************************
********************************
عن
أنس بن مالك، عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لجبريل: «ما لي لم أر
ميكائيل ضاحكا قط؟ قال ما ضحك ميكائيل منذ خلقت النار» أحمد : 13343
நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்
நான் மீகாயீல் (அலை) அவர்கள் சிரிக்க
கண்டதில்லையே ஏன்? என்று கேட்க, அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நரகம்
படைக்கப்பட்டதிலிருந்து அவர் சிரித்ததில்லை என்றார்கள். (அஹ்மத் : 13343)
நரக வெப்பத்திலிருந்து விடுதலை பெற
1. ஈமான் கொள்ளுதல் மற்றும் இணைவைப்பிலிருந்து விலகி இருத்தல்.
*************************************************
قال تعالى: الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آَمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ (آل عمرانஃ16)
قال الله تعالي: لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم
وقال المسيح يابني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله
عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار (72)
2.நல்லறங்கள் செய்வது மற்றும் அதனை அழித்திடும்
பாவங்களிலிருந்து விலகி இருப்பது
***********************************************
***********************************************
اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ
اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ
நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 21:101)
لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا ۚ وَهُمْ فِىْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۚ
இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 21:102)
لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ؕ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ
(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
(அல்குர்ஆன் : 21:103)
உலகில்
நல்லறங்களை தவற விடுவதால் மறுமையில் ஏற்படும் பாதிப்புகள்
***********************************************
***********************************************
قال الله تعالي :وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ (الأعراف : 50
7:50. நரகவாசிகள்
சுவர்க்கவாசிகளை அழைத்து தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு
அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக்
கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக
அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று
கூறுவார்கள்.
عن أبي بكر الصديق، رضي الله عنه، قال: أصبح رسول الله صلى الله
عليه وسلم ذات يوم فصلى الغداة، ثم جلس حتى إذا كان من الضحى ضحك رسول الله صلى
الله عليه وسلم، ثم جلس مكانه حتى صلى الأولى والعصر والمغرب، كل ذلك لا يتكلم،
حتى صلى العشاء الآخرة، ثم قام إلى أهله، فقال الناس لأبي بكر: ألا تسأل رسول الله
صلى الله عليه وسلم ما شأنه؟ صنع اليوم شيئا لم يصنعه قط، قال: فسأله، فقال: ” نعم
عرض علي ما هو كائن من أمر الدنيا، وأمر الآخرة، فجمع الأولون والآخرون بصعيد
واحد، ففظع الناس بذلك حتى انطلقوا إلى آدم عليه السلام، والعرق يكاد
يلجمهم، مسند أحمد : 15
அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்கள் கூறினார்கள். ஒரு நாள் நபி
(ஸல்) அவர;கள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட்டு
அமர்ந்திருந்தார்கள். நன்பகல் ஆனதும் சிரித்தார்கள். பின்னர; அவிடமே லுஹர்அஸ்ர் மஹ்ரிப் தொழும் வரை அமர்ந்திருந்தார்கள்.
அதுவரை அவர்கள் பேசவில்லை. பின்னர் இஷாவை தொழுது விட்டு தன் குடும்பத்தாரிடம்
சென்று விட்டார்கள். அப்பொழுது மக்கள் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் தாங்கள் நபி
(ஸல்)அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கக்கூடாதா? இது வரை செய்யாததை இன்று செய்தார்களே! என்றனர் அப்போது
அபூபக்ர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்.
ஆம். என்னிடம் உலக மற்றும் மறுமையின் காரியங்களில் இனி நடப்பவற்றை பற்றி
எடுத்துக்காட்டப்பட்டது. அப்போது அதில் ஒரே தட்டில் (திடலில்) முன்னோர்களும்
பின்னோர்களும் ஒன்று திரட்டப்படுவார்கள். இதனால் மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி
ஆதம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களின் வியர்வை அவர்களின் வாயை
நெருங்கி இருக்கும்………..(அஹ்மத் : 15)
இம்மையின் வியர்வை மறுமையின் வியர்வையை
நினைவுபடுத்த வேண்டும். இதன்படி வெயிலிலிருந்து காத்துக் கொள்ள நிழலை நாம் தேடுவது
போல் நரகிலிருந்து காத்துக் கொள்ள அமலை நோக்கி விரைய வேண்டு
கடும்
தாகம்:
******************
******************
قال الله تعالي : (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا (الكهف:29،
18:29. (நபியே!)
இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே
விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்.
அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்)
சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள்
(தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக்
கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக்
கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும்
தலத்தில்
அதுவே மிகக் கெட்டதாகும்
*************************************************
*************************************************
பூமி வெப்பமடைவதற்கு இரண்டாவது காரணம்
இப்போது எங்கு திரும்பினாலும் குளோபல் வார்மிங் கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் கேட்கின்றன. உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல் வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங் கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல் சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல் பருவநிலை மாற்றம் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள இதோ ஒரு வழிகாட்டி.

1.புவி
வெப்பமடைதல் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட
பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால் பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி
வெப்பமடைதல். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி
செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல் டீசல் நிலக்கரி போன்ற
புதைபடிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியதும் காடழிப்பும் பசுங்குடில்
வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
பூமி வெப்பமடைவதில் மனிதன் காடுகளை
அழிப்பது மிக முக்கிய காரணமாகும். இதனை இஸ்லாம் வண்மையாக கண்டிப்பதுடன், அது மரம்
வளர்ப்பதை அதிகமதிகம் ஊக்குவிக்கின்றது.
عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن قامت على أحدكم القيامة، وفي يده فسيلة فليغرسها» أحمد : 12902
உங்களில் ஒருவரின் கரத்தில் மரக்கண்று இருக்க
மறுமை வந்து விட்டால் அதனை அவர; நட்டி விடட்டும். (அஹ்மத்:12902
முடிவுரை
*************
*************
உலக வெப்பத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள
கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்.இ தண்ணீர் குடிக்க வேண்டும்.
நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.
பகல் நேரங்களில் இளநீர் மோர் குடிக்கலாம். தண்ணீர் என்றில்லை சூப் ஜூஸ் மோர் என்று கூட எடுத்து கொள்ளலாம்.
உடல் சூட்டை தணிக்க இளநீர் தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய் பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ் தக்காளி எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.
வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள் கிளம்பும் நேரம் தடவி சென்றால் அது பயனளிக்காது.இது ஸ்கின் டாக்டர் சொன்னது. கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.
கையில் எந்நேரமும் குடை (அ) கூளிங் கிளாஸ் இருக்கட்டும்.
கூடுமானவரை வெளியில் செல்வது மாலை நேரங்களில் வைத்து கொள்ளுங்கள்.
.டின் ஜூஸ்களை விடஃப்ரெஷாகா ஜூஸ் வகைகளை வீட்டிலேயே தாயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
ஐஸ்கிரீம் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபிஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர் மோர் எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும்.
டிபன் 8 மணிஇ மதிய
உணவு 12 மணிஇ மாலை சிற்றுண்டி 6 மணிஇ இரவு
உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன்
மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும்.
குளிர்ந்த நீர் பூண்டு பீட்ரூட் மிளகு திராட்சை பைன் ஆப்பிள் மாம்பழம் இவைகளை
கோடையில் தள்ளியே வைக்கவும்
கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும் எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ் ப்ரெஞ்ச் ப்ரை சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்
கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தாகத்துக்கு குளிர்பானங்கள் எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது.
பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை வாங்கித்தரக் கூடாது.
அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ கொஞ்சமாய் வேக
வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது. உருளைக் கிழங்கு தக்காளி வெங்காயம் கடலை வகை கீரைவகைகள் மிளகு இஞ்சி மீன் பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம் மக்னீசியம் பாஸ்பரஸ் குளோரைட் இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபிஇசி உள்ளன. வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு.
வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம். இளநீரில் விட்டமின் பிஇசி சோடியம் பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் இரும்பு காப்பர் பாஸ்பரஸ் கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன. கோடையை சமாளிக்கவும் உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.