புதன், 13 ஏப்ரல், 2016

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

بسم الله الرحمن الرحيم
  காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

هُوَ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ الملك: 15
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَافِرُوا تَصِحُّوا وَاغْزُوا تَسْتَغْنُوا-   أحمد  8588
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கி விட்டது.பல பெற்றோர்களுக்கும் இதுதான் விடுமுறை காலம்.எனவே இந்த விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க வேண்டும். காலம் என்பது ஐஸ் கட்டியைப்போன்று  அதை சேற்றில் போட்டால் கறைந்து வீனாகிவிடும் குளிர்பானத்தில் போட்டால் பயனுள்ளதாகிவிடும். மேலும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக் கொப்ப விடுமுறை என்ற வாய்ப்பை நம் பிள்ளைகளுக்கு  பயன் தரும் வகையில் அமைத்துத்தர வேண்டும்.
ஆரோக்கியமும் ஓய்வும் இறைவன் அளிக்கும் மகத்தான அருட்கொடைகள்.அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ   بخاري -6412
ஒய்வும் ஆரோக்கியமும் கிடைக்கிற போது சோம்பேறித்தனம் உருவாகும் அதுவே ஏமாற்றம் என்கிறார் இப்னுல் ஜவ்ஸி

وقال ابن الجوزي : قد يكون الإنسان صحيحا ولا يكون متفرغا لشغله بالمعاش , وقد يكون مستغنيا ولا يكون صحيحا , فإذا اجتمعا فغلب عليه الكسل عن الطاعة فهو المغبون ,
ஓய்வை பலரும் வீணடித்து விடுகிறார்கள்.
சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
1.     ஓய்வை நன்றாக அனுபவிக்க விடுங்கள்
********************************************

சிறுவர் சிறுமியர்களுக்கு ஓய்வு அரிதாகி விட்டது. அவர்களது ஓய்வுக்காலத்தில் கொஞ்சம் ஒய்வும் எடுக்கட்டும். தூங்கட்டும்,விளையாடட்டும்.
சில பெற்றோர் ஓய்வுக்காலத்திலும் ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு பிள்ளைகளை விரட்டுகிறார்கள். அதனால் குழுந்தைகளின் பணி நேரம் முன்பை விட அதிகமாகிவிடுகிறது.
A).வணக்க வழிபாடுகளில் கூட ஓய்வு தேவை

حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ اللَّيْلِ فَاسْتَعْجَمَ الْقُرْآنُ عَلَى لِسَانِهِ فَلَمْ يَدْرِ مَا يَقُولُ فَلْيَضْطَجِعْ   مسلم

1441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இரவில் தொழும்போது (உறக்கம் மேலிட்டு) நாவில் குர்ஆன் வராமல் தடைபட்டு, தாம் என்ன சொல்கிறோம் என்பதை அவர் அறியாத நிலைக்குச் சென்று விடுவாரானால் அவர் படுத்து உறங்கட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்
B)பிள்ளைகளை நல்ல நண்பர்களோடு நல்ல விளையாட்டுக்களை விளையாடுவதற்கும் அனுமதிக்க வேண்டும்
6130-صحيح البخاريِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي.

6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.( ஸஹீஹ் புகாரி)

2901-
صحح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا الْحَبَشَةُ يَلْعَبُونَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِرَابِهِمْ دَخَلَ عُمَرُ، فَأَهْوَى إِلَى الْحَصَى فَحَصَبَهُمْ بِهَا. فَقَالَ: ((دَعْهُمْ يَا عُمَرُ)). وَزَادَ عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ فِي الْمَسْجِدِ.

2901. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தியோப்பியர்கள்) நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், “உமரே! அவர்களைவிட்டு விடுங்கள்என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், இந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றதுஎன்று வந்துள்ளது. ஸஹீஹ் புகாரி
454- صحيح البخاريِ أَنَّ عَائِشَةَ قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى باب حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ.

454. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  அபீசீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்த நிலையில் (வீர) விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.( ஸஹீஹ் புகாரி)
2) நேரத்திற்கு நல்ல உணவு
*********************************


பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பட்டிணிதான் கிடக்கின்றனர்.விடுமுறை காலத்திலாவது ஆரோக்கியமான நல்ல உணவை கொடுக்க வேண்டும்.

قوله تعالي: كلوا وشربوا ولا تسرفوا

இதற்காக வீண் விரயம் இல்லாமல் தாராளமாக செலவு செய்ய வேண்டும்

2358-
صحيح مسلمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ)).

1818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.( ஸஹீஹ் முஸ்லிம்)
3) நல்லொழுக்க பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்
********************************************************


கோடை விடுமுறை என்பதால் கொடூர வெயிலில் பிள்ளைகள் சுற்றித்திரிவது டி வி பார்ப்பது இவைகள் தவிற்கப்பட வேண்டும் .மாறாக தொழுகைக்கு அழைத்துச் செல்வது குர்ஆனை கற்றுக் கொடுப்பது சம்மர் கிளாஸ் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொள்வது மிகவும் பயண்தரும் செயலாகும்
நமது குழந்தைகளுக்கு தீனை பழக்கப்படுத்துவதை விட சிறந்த காரியம் வேறெதுவுமில்லை

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ  - الترمذي 1874
عن غمرو بن سعيد بن العاص  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ – الترمذي 1875
يُحَدِّثُ  أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة 3661
4.பண்பாட்டை பழக்க சிறந்த வாய்ப்பு
*********************************************

உங்கள் குழந்தைகள் உங்களோடு அதிக நேரம் இருக்கிற சந்தர்ப்பம் இது. அவர்களுடன் பொழுதை செலவிட நேரம் ஒதுக்கவேண்டும். பிள்ளைகளின்முன் பெற்றோர்கள் சண்டையிடுவது தவிற்கப்பட வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் பேரன்களை வாரி அணைத்துக் கொஞ்சுவார்கள் வெளியே சென்று வி்ட்டு வந்தால் பாத்திமா ( ரலி) வீட்டில் அவர்களை தேடுவார்கள்
5997- صحيح البخاريِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا. فَقَالَ الأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا. فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: ((مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ)).

5997. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), “எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லைஎன்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்என்று கூறினார்கள். ( ஸஹீஹ் புகாரி)
2044- َ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ شَرَفَ كَبِيرِنَا)).رواه ترمذي
516-  صحيح البخاري عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهْوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا.
516.
அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை உமாமாவைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள். 
ஸஹீஹ் புகாரி
குழந்தைகளின் உணர்வுகளை கவனித்துக் கொண்ட பெருமானார்

707- 
صحيح البخاري عن أَبِي قَتَادَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنِّي لأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ)).

707.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்“.  என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி
இன்றய காலத்தில் பெற்றோர்கள் இந்த கடமையை சரிவரச்செய்வதில்லை.நினைவிருக்கட்டும் பல 
குழந்தைகள் மூர்க்கர்களாவதற்கு காரணம் அவர்களது பெற்றோர்களது அன்பு கிடைக்காததும். குழந்தைகளின் மனோ உணர்வுகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ளாததும் ஒரு காரணமாகும்
குழந்தைக்கு பண்பாட்டை பழக்கப் படுத்துவதில் வாழ்க்கையை கற்றுக் கொடுப்பதில் தந்தையின் பங்கே பிரதானமாகும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
5)இஸ்லாமிய நூல்ககளை வாசிக்கப் பழக்கலாம்
*****************************************


பொதுவாக சிறிது வளர்ந்த பிள்ளைகளை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நல்ல புத்தகங்களை படிக்க அனுமதிக்கலாம்.மேலும் பெருமானார் ( ஸல்) அவர்களின் வரலாறு கலீபாக்கள் வரலாறு சஹாபாக்கள் வரலாறு போன்றவைகளை படிக்கவைக்க வேண்டும். நம் இந்திய திருநாட்டில் பாசிச சக்திகளின் சதி வேளைகளில் ஒன்று நம் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மண்ணர்களின் உண்மை வரலாற்றை மறைத்து தவறான வரலாற்றை புகுத்தி இஸ்லாமியர்கள் மீது வெருப்பை உண்டாக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். அதை இன்றய பாடப்புத்தகளிள் செயல்படுத்தியும் வருகின்றார்கள். எனவே நாம் நம் பிள்ளைகளுக்கு உண்மை வரலாற்றை தெறியப்படுத்த வேண்டும் அதற்கான நூல்களை படிக்க பழக்க வேண்டும்.
6) சுற்றுலா
**************

கோடை விடுமுறையில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஏற்படுவதற்காக சுற்றுலா அழைத்துச் செல்லலாம்.அதே நேரம் ஆடல் பாடல் கூத்து கும்மாளம்  சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்ல கூடாது.
هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ
  
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
(
அல்குர்ஆன் : 67:15)
قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
 
பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(
அல்குர்ஆன் : 6:11)

والاعتبار في آلائه ودقة صنعه وتَدَبُّرِ آثار الأمم السابقة
சுற்றுலா ஆரோக்கியம் தரக்கூடியது என்றார்கள்  நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَافِرُوا تَصِحُّوا وَاغْزُوا تَسْتَغْنُوا-   أحمد  8588
 பயணத்தின் பலன்கள்
****************************

وفي السفر فوائد كثيرة جمعها الشافعي في قوله:
تَغَرَّبْ عن الأوطان في طلب العـلا,  / وسافر ففي الاسفار خمس فوائد
تفرُّج همِّ، واكتســـاب معيشــة -- وعلم. واداب. وصحبة ماجد
பயணத்தில் 5 நன்மைகள்: கவலையை போக்குதல், சம்பாதித்தல், கல்விகற்றல்( عبرة) பல நாட்டவர்களின் பல ஊர் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளுதல்.  அவர்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்
 சினிமா, வீண்களியாட்டங்கள், சூதாடும் இடங்கள் ஆபாசமான இடங்களை தவிருங்கள்

8286 -
، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَا مِنْ خَارِجٍ يَخْرُجُ - يَعْنِي مِنْ بَيْتِهِ - إِلَّا بِبَابِهِ رَايَتَانِ: رَايَةٌ بِيَدِ مَلَكٍ، وَرَايَةٌ بِيَدِ شَيْطَانٍ، فَإِنْ خَرَجَ لِمَا يُحِبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ، اتَّبَعَهُ الْمَلَكُ بِرَايَتِهِ، فَلَمْ يَزَلْ تَحْتَ رَايَةِ الْمَلَكِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ، وَإِنْ خَرَجَ لِمَا يُسْخِطُ اللَّهَ، اتَّبَعَهُ الشَّيْطَانُ بِرَايَتِهِ، فَلَمْ يَزَلْ تَحْتَ رَايَةِ الشَّيْطَانِ، حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ "
مسند أحمد ج 14 ص 42

"யார் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டாலும் வீட்டு வாசலில் இரு பதாகைகள்(பேனர்கள்) காத்திருக்கவே செய்கின்றன.
ஒரு பதாகை மலக்குடைய கையிலிருக்கும். 
இன்னொரு பதாகை ஷைத்தானுடைய கையிலிருக்கும்.
அல்லாஹ் விரும்பும் காரியத்தை நாடி வெளியே செல்பவராக இருப்பின் தன்பதாகையுடன் மலக்கு அவரை பின்தொடர்கிறார். ஆகையால் வீடு திரும்பும் வரை அவர் மலக்கின் பதாகைக்கு கீழேயே இருந்துவிடுகிறார்.
அல்லாஹவுக்கு கோபத்தை ஏற்படுத்தும்  காரியத்தை நாடி வெளியே செல்பவராக இருப்பின் தன்பதாகையுடன் ஷைத்தான் அவரை பின்தொடர்கிறான்.
ஆகையால் வீடு திரும்பும் வரை அவர் ஷைத்தானின் பதாகைக்கு கீழேயே இருந்துவிடுகிறார்".
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் அஹமத்
சேர்ந்து செல்வதே! சிறப்பு
*******************************


وقال صلى الله عليه وسلم: (الراكب شيطان، والراكبان شيطانان، والثلاثة رَكْبٌ   [أبو داود والترمذي وأحمد]

ஒரு பழமொழி   اختر الرفيق قبل الطريق.
பயணத்தை தேர்வு செய்வதற்கு முன் பயணக் கூட்டாலியை தேர்வு செய் என்கிறது ஒரு பழமொழி.நண்பனின் உண்மையான குணத்தை பயணத்தில் தான் அறிய முடியும்.
அதிகாலையில் கிளம்புங்கள் ;
************************************


دعا الرسول صلى الله عليه وسلم بالبركة لمن يبكرون في أعمالهم، فقال: (اللهم بارك لأمتي في بكورها) [أبو داود والترمذي والنسائي وابن ماجه]
 وكان صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشًا بعثهم في أول النهار. [أبو داود].



பயணத்தில் அல்லஹ் வழங்கிய பயணச் சலுகைகளை 

அனுபவியுங்கள்

قصر الصلاة الرباعية: فيصليها ركعتين،
{وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم إن يفتنكم الذين كفروا} [النساء: 101]


பிரயாணம் செய்பவர் தமது ஊரை விட்டுக் குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாள் நடக்கக்கூடிய தூரத்திலுள்ள ஊருக்கு( சுமார் 45 அல்லது 48 மைல்) புறப்பட்டு விட்டால் மேலும் 15 நாட்களுக்கு குறைவாக தங்கும் நிய்யத் இருக்குமேயானால் அப்படிப்பட்ட முஸாபிர் மீண்டும் தமது ஊர் வந்து சேரும் வரை நான்கு ரக்அத்து பர்லான தொழுகையை இரண்டு ரக்அத்தாக குறைத்துத் தொழலாம்.இதற்குப் பெயர் கஸ்ரு தொழுகை எனப்படும்.
பயணத்தின் போது தொழுகை தவரிவிடாமல் இருக்க ஷாபிஈ மத்கபின் படி ஜம்உ செய்து கொள்வது நல்லது.

-الجمع بين الظهر والعصر (تقديمًا أو تأخيرًا) وكذلك بين المغرب والعشاء.

பயணம் சென்று உறவுகளை சந்தியுங்கள்
*************************************************

6714- صحيح مسلم عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَنَّ رَجُلاً زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ. قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لاَ غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ. قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ)).
5016
.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, ”எங்கே செல்கிறாய்?” என்று அந்த வானவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர், ”இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்என்று கூறினார். அதற்கு அவ்வானவர், ”அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், ”இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்என்று கூறினார். அதற்கு அந்த வானவர், ”நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்என்று சொன்னார். -  மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்

விடுமுறைக் காலத்தில் பெற்றோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய செய்தி:
***********************************


பிள்ளைகள் மற்றவர்களுக்கு தொல்லை தராதவாறு கவனித்துக் கொள்ளுங்கள் தெருக்களில் சுற்றும் 
பிள்ளைகளுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும், தெருவாசிகளுக்கு தொல்லை தரும் பிள்ளைகளுக்கு பெற்றோரே பொறுப்பு

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال:  ((والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن!)) قيل: من يا رسول الله؟ قال:  ((الذي لا يأمن جاره بوائقه)) متفق عليه.
قال رسول الله صلى الله عليه وسلم:  ((من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت)) متفق عليه.

மறந்து விடக்கூடாது
***************************



ஓய்வையும் ஆரோக்கியத்தியத்தையும் அல்லாஹ்விற்கு பொருத்தமான வழியில் கழிப்பதே அதை பயன்படுத்தியதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமான வழியில் கழிப்பது அதை இழப்பதாகும்! அது ஏமாறுதலாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.