بسم الله الرحمن الرحيم
இஸ்லாத்தில் தொழிலாளர்களின் உரிமைகள்
فَإِذَا قُضِيَتِ
الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ الجمعة: 10
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ:«أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» سنن ابن ماجه 2 / 81
மே
தின வரலாறு
1880 - ஆம் ஆண்டுகளில்
அமெரிக்காவில் தொடங்கி, 1890 - ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே
தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1.
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள்
முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை
எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக
வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே
மே தினம்! நன்றி http://www.dinamani.com/
ஆனால், இந்த எட்டு மணி நேர உழைப்பு நிர்ணயம்
என்பது பெரும்பாலும் படித்தவர்களுக்குத்தான் உதவுகிறது. அமைப்பு சாராத்
தொழிலாளர்கள் எனப்படும், தோட்டத் தொழிலாளர்கள், ஆலை ஊழியர்கள், நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக் கூலிகள் என கோடிக்கணக்கான மக்கள்
இன்னமும் ஒரு வேளை உணவுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைக்கவேண்டிய
நிலையில் இருக்கின்றனர்.
இந்த சமூகத்தில் தொழிலாளிகள், உழைப்பாளிகள் தங்களின் சில உரிமைகளை போராடி
நிலைநாட்டினர். போராடி பெறவேண்டிய உரிமைகள் இன்னும் நிறையவே இருக்கிறது.
ஆனால் இஸ்லாமிய பண்பாட்டை பேணுபவராக முதலாளியும் தொழிலாளியும் நடந்து கொண்டால்
போராட்டத்திற்கான தேவை இல்லை. அந்தளவு இஸ்லாம் தொழில் மற்றும் உழைப்பு சார்ந்த
விஷயத்தில் நமக்கு வழிகாட்டியுள்ளது.
உழைப்பு
மற்றும் உழைப்பாளிகள் பற்றி இஸ்லாம்
فَإِذَا قُضِيَتِ
الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ
وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ الجمعة: 10
عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَلَبُ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ
الْفَرِيضَةِ» المعجم الكبير للطبراني 10 /74
“ஹலாலானவற்றைத்
தேடுவ(தற்காக
உழைப்ப)து முதன்மை கடமைக்கு அடுத்த கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்: தபரானி
2072- عَنِ المِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ،
خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ
عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ» صحيح البخاري 3 / 57
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்."
என மிக்தாம்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி 2072.
"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்."
என மிக்தாம்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி 2072.
3406- عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ
عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجْنِي الكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ،
فَإِنَّهُ أَطْيَبُهُ» قَالُوا: أَكُنْتَ تَرْعَى الغَنَمَ؟ قَالَ: «وَهَلْ مِنْ
نَبِيٍّ إِلَّا وَقَدْ رَعَاهَا» صحيح البخاري 4 / 157
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்
(ரலி) அறிவித்தார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ('மர்ருழ் ழஹ்ரான்' என்னுமிடத்தில்) 'அராக்' (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது" என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹுல் புஹாரி :3406
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ('மர்ருழ் ழஹ்ரான்' என்னுமிடத்தில்) 'அராக்' (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது" என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹுல் புஹாரி :3406
2071 - عَنْ عُرْوَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ
عَنْهَا: كَانَ
أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَّالَ
أَنْفُسِهِمْ، وَكَانَ يَكُونُ لَهُمْ أَرْوَاحٌ، فَقِيلَ لَهُمْ: «لَوِ
اغْتَسَلْتُمْ» صحيح البخاري
3 / 57
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஸஹீஹுல் புஹாரி 2071.
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஸஹீஹுல் புஹாரி 2071.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ، فَقَالَ: «أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ؟»
قَالَ: بَلَى، حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ، وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ
مِنَ الْمَاءِ، قَالَ: «ائْتِنِي بِهِمَا» ، قَالَ: فَأَتَاهُ بِهِمَا، فَأَخَذَهُمَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَقَالَ: «مَنْ يَشْتَرِي
هَذَيْنِ؟» قَالَ رَجُلٌ: أَنَا، آخُذُهُمَا بِدِرْهَمٍ، قَالَ: «مَنْ يَزِيدُ عَلَى
دِرْهَمٍ مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا» ، قَالَ رَجُلٌ: أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ
فَأَعْطَاهُمَا إِيَّاهُ، وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ،
وَقَالَ: «اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ، وَاشْتَرِ بِالْآخَرِ
قَدُومًا فَأْتِنِي بِهِ،» ، فَأَتَاهُ بِهِ، فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ، ثُمَّ قَالَ لَهُ: «اذْهَبْ فَاحْتَطِبْ
وَبِعْ، وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا» ، فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ
وَيَبِيعُ، فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ، فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا،
وَبِبَعْضِهَا طَعَامًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
" هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ
الْقِيَامَةِ، إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ: لِذِي فَقْرٍ
مُدْقِعٍ، أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ، أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ سنن أبي داود (2 / 120
“ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களிடம் அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் யாசகம் கேட்டு வந்தார். உமது வீட்டில்
எதுவும் இல்லையா என நபியவர்கள் கேட்க ஒரு பகுதியை நாம் அணிந்துகொள்கின்ற, வேறொரு
பகுதியை நாம் விரித்துக்கொள்கின்ற ஒரு போர்வையும் நாம் தண்ணீர் அருந்துகின்ற ஒரு
பாத்திரமும் உள்ளது என்றார் அவர். அவ்விரண்டையும் என்னிடம் கொண்டு வாருங்கள்
என்றார்கள் ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
அவர் அவ்விரண்டையும்
அவர்களிடம் கொண்டு வந்தார். தன் கரத்தினால் அவ்விரண்டையும் எடுத்து இவ்விரண்டையும்
யார் வாங்கிக்கொள்வார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
கேட்டார்கள். நான் அவ்விரண்டையும் ஒரு திர்ஹத்திற்கு வாங்கிக்கொள்கிறேன் என்றார்
ஒரு மனிதர். ஒரு திர்ஹத்தை விட அதிகப்படுத்துபவர் யார் என இரண்டு அல்லது மூன்று
தடவைகள் நபியவர்கள் கேட்க இரண்டு திர்ஹங்களுக்கு நான் அவ்விரண்டையும்
எடுத்துக்கொள்கின்றேன் என்றார் ஒரு மனிதர். அவருக்கு அவ்விரண்டையும் கொடுத்துவிட்டு
இரு திர்ஹங்களைப் பெற்றுக்கொண்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
அவ்விரண்டையும் அன்சாரி மனிதரிடம் கொடுத்து அவ்விரண்டில் ஒன்றைக் கொண்டு உணவு
வாங்கி உம் குடும்பத்தவருக்குக் கொடுப்பீராக! மற்றதைக் கொண்டு ஒரு கோடரி வாங்கி
என்னிடம் கொண்டு வருவீராக! என்றார்கள்.
அவர் நபியவர்களிடம்
கோடரியைக் கொண்டு வந்தார். தனது கையினால் அதில் ஒரு கம்பைக் கட்டி (பிடி போட்டு)
பின்னர் நீர் சென்று விறகு வெட்டி விற்பீராக! பதினைந்து நாட்களுக்கு நான் உம்மைக்
காணக் கூடாது என்றார்கள். அம்மனிதர் விறகு வெட்டி விற்கலானார். பத்து திர்ஹங்கள்
கிடைத்து அவற்றில் சிலதைக் கொண்டு ஆடையும் சிலவற்றைக் கொண்டு உணவும் வாங்கிய
நிலையில் நபியவர்களிடம் வந்தார். யாசகம் மறுமை நாளில் உமது முகத்தில் ஒரு
புள்ளியாக வருவதை விட இது உமக்கு சிறந்தது. நிச்சயமாக யாசகம் மூவருக்குத் தான்
பொருந்தும் பரம ஏழை, பழுவான கடன்காரர், கொலைக்கான நஷ்டயீட்டைச் சுமந்து கொண்டவர்
என்றார்கள் ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.” (அறிவிப்பவர்: அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்:
ஸுனன் அபீ தாவூத்)
முதலாளிகளாக
இருப்பவர்கள் தங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும்.
அவர்களின் உரிமைகள் என்ன? என்பது பற்றியெல்லாம் இஸ்லாம் அன்றே போதித்தது.
தொழிலாளர்களின்
உரிமைகளை முதலாளிகளும் முதலாளிகளின் உரிமைகளை தொழிலாளிகளும் யாரும் யாருக்கும்
பாதிப்பு ஏற்படுத்தாமல் கொடுக்கச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம் என்றால் அது
மிகையாகாது.
உத்திரவாதமுள்ள ஊதியம்.
இன்றைய
உலகில் சில முதலாளிகள், தொழிலாளர்களிடம்
குறிப்பிட்ட கூலி பேசிவிட்டு வேலை முடிந்த பின் குறைவான கூலி கொடுப்பதையும், சிலர் கூலியே கொடுக்காமல் உழைப்பாளிகளை ஏமாற்றுவதையும்
பார்க்க முடிகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ:۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ وَمَنِ اسْتَأْجَرَ أَجِيرًا فَلْيُعْلِمْهُ أَجْرَهُ "السنن
الكبرى للبيهقي
பணியாளனை நியமிப்பவர் அவருக்கான கூலியை நிர்ணயம் செய்து தெரிவித்து விடட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா (ரலி) பைஹகீ
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ
اسْتِئْجَارِ الْأَجِيرِ وَلَمْ
يُبَيِّنْ، يَعْنِي حَتَّى يُبَيِّنَ لَهُ أَجْرَهُ» المراسيل لأبي داود (1
/ 167)
எவ்வளவு கூலி என்பதை தெளிவு படுத்தாமல்
பணியாளர் நியமனம் செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
என அபூ ஸயீதுல்
குத்ரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
உழைப்பை உறிஞ்சி விட்டு உரிமையை
வழங்காதவருக்கு நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கை.
2270 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قَالَ اللَّهُ
تَعَالَى: ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ، رَجُلٌ أَعْطَى بِي
ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ
أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ " صحيح البخاري (3 / 90
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி
"மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரி
உரிய நேரத்தில் ஊதியம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» سنن ابن ماجه 2 / 81
தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவனுக்குரிய கூலியை கொடுத்து விடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர்(ரலி) இப்னுமாஜா
உடல் நலன், உணர்வு பற்றி அக்கறை வேண்டும்.
2557 عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ
بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَليُنَاوِلْهُ لُقْمَةً أَوْ
لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ» صحيح البخاري (3 / 150)
2557. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார். ஸஹீஹுல் புஹாரி
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார். ஸஹீஹுல் புஹாரி
எனவே சக்திக்கேற்ற வேலை தரவேண்டும்.
அல்லாஹ்வே சக்திக்கு அதிகமாக வணக்க வழிபாடுகளில் கட்டளையிடுவதில்லை.
ஸஹாபாக்களின் வாழ்வில்…
عَنِ
المَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ
حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِنِّي
سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ
فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ
أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا
يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا
يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ»
30صحيح البخاري
அனுசரிக்கும் குணம் உள்ளவராக
முதலாளி இருக்க வேண்டும்.
எத்தனை முறை மன்னிப்பது?
5164 - عَنِ
الْعَبَّاسِ بْنِ جُلَيْدٍ الْحَجْرِيِّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ
عُمَرَ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ، ثُمَّ
أَعَادَ عَلَيْهِ الْكَلَامَ، فَصَمَتَ، فَلَمَّا كَانَ فِي الثَّالِثَةِ، قَالَ: «اعْفُوا
عَنْهُ فِي كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً»
سنن أبي داود
பொருப்புணர்வுள்ளவராக பணியாளர்
இருக்கவேண்டும்.
............................... وَالخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ
رَعِيَّتِهِ
....................... صحيح البخاري
தொழிலாளிக்கும் பொறுப்பு உண்டு. தன் எஜமானரின் பொருட்களுக்கு தொழிலாளி
விசாரிக்கப்படுவார். இப்னு உமர் ரலி. ஸஹீஹுல் புஹாரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.