திங்கள், 2 மே, 2016

மிஃராஜும் அதன் படிப்பினைகளும்

بسم الله الحمن الرحيم
மிஃராஜும் அதன் படிப்பினைகளும்

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ (17:1)
 عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ  وصححه الألباني في " صحيح سنن الترمذي " 

முன்னுரை
**************


இறைவனைக் கண்குளிரக் காணுவது பேரின்பமாகும். அந்த பேரின்பத்தை பெறுவதற்கு மனிதப் புனிதர்களாகிய நபிமார்கள் கடுமையாக முயற்சித்தார்கள்.
மூஸா நபி ( அலை) அவர்கள் இறைவனிடம் அந்த பேரின்பத்தை நேரடியாகவே கேட்டார்கள்.அச்சம்பவம் பற்றி திருக்குர்ஆன் விளக்குகிறது


وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ‌ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ‌ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا‌ ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ‏  

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்என்று கூறினார்.
(
அல்குர்ஆன் : 7:143)
இப்ராஹீம் நபியவர்கள் மூஸா நபியவர்களின் நிலைக்கு சற்று வேறுபட்டு ஒளிவு மறைவாக அந்த பேரின்பத்தை இறைவனிடம் வேண்டி நின்றார்கள். அச்சம்பவம் பற்றி திருக்குர்ஆன் விளக்குகிறது.

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏  

இன்னும், இப்ராஹீம்: என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்என்று (அல்லாஹ்) கூறினான்.
(
அல்குர்ஆன் : 2:260)
உண்மையில் இறைவன் உயிர்பித்துக் காட்டும் அதிசயத்தை இப்ராஹீம் ( அலை) காண விரும்பவில்லை. அந்த சாக்கில் தன் முகம் காணவே விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்ட இறைவன் அவர்களுக்கு தன் முகம் காட்டாது போக்கு காட்டுகிறான். நான்கு பறவைகளைப்
பிடித்து அறுத்து அந்த அதிசயத்தை நீரே செய்து கொள்வீராக! என்று ஆணையிட்டு ஒதுங்கிக் கொள்கிறான்.அந்த இறைவனைக் கானும் பேரின்பத்தைப் பெறுவதில் நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் மட்டுமே வெற்றி கண்டார்கள்.
மிஃராஜ் பயணம் நபி( ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரஜப் மாதம் பிறை 27 ல் நடந்ததாக பிரபல்யமான கருத்தாக கூறப்படுகிறது.( ஆதாரம்: محمد الرسول اللله)
மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை சென்ற பயணத்திற்கு இஸ்ரா என்றும் பைத்துல் முகத்தஸிலிருந்து ஏழு வானங்களையும் கடந்து சென்றதற்கு மிஃராஜ் என்றும் கூறப்படும்.
இந்த இரவுக்கென்று தனிச்சிறப்பு ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படவில்லை. என்றாலும் மிஃராஜ் நிகழ்வை மக்களுக்கு ஞாபக மூட்டுவதும் தொழுகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுமே நோக்கமாகும்.
கனவா? அல்லது நனவா?
********************************

நபி ( ஸல்) அவர்கள் கனவில் பல தடவை மிஃராஜூக்கு சென்றுள்ளார்கள். உடலுடன் ஒரு தடவை சென்றுள்ளார்கள். அவர்கள் உடலுடனும் உயிருடனும் விழித்த நிலையில் ஒரு தடவை மிஃராஜ் பயணம் மேற்கொண்டார்கள் என்பதற்கு பல ஆதாரங்களை கூறலாம்.
A. காபிர்களிடம் நபி ( ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று வந்த செய்தியை சொன்னபோது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை கிண்டல் செய்தார்கள் பல கேள்விகள் கேட்டார்கள் என்று ஹதீஸில் காண முடிகிறது. உண்மையில் நபியவர்கள் கனவில் சென்றதாக கூறியிருந்தால் காபிர்கள் அதனை மறுத்திருக்க மாட்டார்கள் . அவர்கள் அதனை ஏற்க மறுத்ததே நபியவர்கள் உடலுடன்தான் சென்றார்கள் என்பதற்கு ஆதாரமாகும்.
இதுவரை பைத்துல் முகத்தஸிற்குச் செல்லாத நபி ( ஸல்) அவர்களிடம் அப்பள்ளியைப் பற்றி குரைஷிகள் கேள்வி கேட்டார்கள்

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ، فَجَلاَ اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ)). صحيح البخاري
[طرفه 4710، تحفة 3151]


3886. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் ஹிஜ்ர்என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன்.  என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
ஒருவர் புதிதாக ஒரு இடத்திற்கு கொஞ்ச நேரம் சென்ற சமயத்தில் அதன் அனைத்து அங்க அடயாளங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. என்றாலும் குரைஷிகள் கேட்ட கேள்விக்கு பதி்ல் சொல்லும் தருணத்தில் இறைவன் பைத்துல் முகத்தஸயே நபியவர்களுக்கு நேரடியாக காண்பித்தான்
காபீர்களில் சிலர் அபூபக்கர் ரலியிடம் உங்கள் நண்பர்  முஹம்மத் ( ஸல்) அவர்கள் ஒரே இரவில் பைத்துல் முகத்தஸ் சென்று வந்ததாக கூறுகிறார் அதுபற்றி தாங்கள் கருத்தென்னவென்று கேட்டபோது இதுவென்ன இதைவிட தூரமான இடத்திற்கு சென்று வந்தேனென்று  அவர் கூறினாலும் அதை உண்மை படுத்துவேன் என்றார்கள்.இந்த நிகழ்வை முன்னிட்டே சித்தீக் ( உண்மையாளர்) என்ற பெயர் அவர்களுக்கு வந்தது.
B. நபி( ஸல்) அவர்கள் உடலுடன்தான் மிஃராஜ் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.அபூசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்கும் முன்பு ஹிர்கல் மன்னரிடம் நபியவர்களைப் பற்றி தவறாக எடு்த்துக்கூற முயன்ற போது நடந்த உறையாடல்

قال ابو سفيان قلت : أيها الملك ، ألا أخبرك خبرا تعرف به أنه قد كذب . قال : وما هو ؟ قال : قلت إنه يزعم لنا أنه خرج من أرضنا أرض الحرم في ليلة ، فجاء مسجدكم هذا مسجد إيلياء ، ورجع إلينا تلك الليلة قبل الصباح . قال : وبطريق إيلياء عند رأسقيصر ، فقال بطريق إيلياء : قد علمت تلك الليلة
قال : فنظر إليه قيصر . وقال : وما علمك بهذا ؟ قال : إني كنت لا أنام ليلة حتى أغلق أبواب المسجد . فلما كانت تلك الليلة أغلقت الأبواب كلها غير باب واحد [ ص: 7 ] غلبني ، فاستعنت عليه بعمالي ومن يحضرني كلهم فغلبنا ، فلم نستطع أن نحركه كأنما نزاول به جبلا ، فدعوت إليه النجاجرة فنظروا إليه فقالوا : إن هذا الباب سقط عليه النجاف والبنيان ولا نستطيع أن نحركه ، حتى نصبح فننظر من أين أتى . قال : فرجعت وتركت البابين مفتوحين . فلما أصبحت غدوت عليهما فإذا المجر الذي في زاوية المسجد مثقوب . وإذا فيه أثر مربط الدابة . قال : فقلت لأصحابي : ما حبس هذا الباب الليلة إلا على نبي وقد صلى الليلة في مسجدنا ( ابن كثير)


ஹிர்கல் மன்னரிடம் அபூசுப்யான் நபி( ஸல்) அவர்களை பொய்ப்படுத்துவதற்காக பின் வருமாறு கூறினார்.அந்த முஹம்மத் ஒரே இரவில் எங்களுடைய ஊரில் இருந்து புரப்பட்டு உங்களுடைய இந்த மஸ்ஜிதுக்கு வந்து விட்டு அதே இரவில் மீண்டும் எங்களுடைய ஊருக்கு திரும்பியதாக பொய் சொல்கிறார்.அதை நம்புகிறீர்கலாஎன்று கேட்க. உடனே அருகில் இருந்த காவலாலி அந்த இரவைப் பற்றி எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியும் என்று கூற உடனே ஹிர்கல் மன்னர் அந்த காவலாளியிடம் உனக்கு என்ன தெரியும் சொல். என்றார்.அப்போது அந்த காவலாளி நான் எப்போதும் நம் மஸ்ஜிதுடைய பிரதான வாசலை மூடாமல் தூங்க மாட்டேன்.ஆனால் குறிப்பிட்ட அந்த இரவில் வழக்கம் போல மற்ற எல்லாக் கதவுகளையும் மூடி விட்டு பிரதான கதவை மூட முயன்றேன். என்னால் முடியவில்லை.என்னுடைய உதவியாளர்களை அழைத்தேன்.அவர்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சித்தும் அவ்கலளால் நகர்த்தவே முடியவில்லை.பெரிய மலை போன்று கனமாக இருந்தது. பின்பு நான்,ஆசாரிகளை அழைத்து அவர்களும் முயற்சித்தும் பலனில்லை.பின்பு அவர்கள் என்னிடம் இந்த மரத்தின் ஒரு பகுதி வீங்கி தருத்திக் கொண்டிருக்கிறது.காலை வரை போராடினாலும் எங்களால் முடியாது என்று கூறிச் சென்று விட்டார்கள்.நானும் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டேன் காலையில் வந்து பார்த்த போதுதான் மஸ்ஜிதின் ஓரத்தில் வாகனத்தைக் கட்டி வைக்கும் பெரிய கல்லும் அதில் வாகனத்தை கட்டி வைத்த அடையாளத்தையும் பார்த்தேன்.அப்போது நான் நண்பர்களிடம் நிச்சயமாக நேற்று இரவு ஒரு நபியின் வருகைக்காகத்தான் இந்த கதவை மூட முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த நபி நம்முடைய இந்த மஸ்ஜிதில் வந்து தொழுது விட்டுச் சென்றுள்ளார் என்று அப்போதே நான் கூறினேன் என்றார்.
முத்இம் இப்னு அதி என்பவன் நபி( ஸல்) அவர்களை கேலி செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இவ்வாறு கேள்வி கேட்டான். தாங்கள் பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் என்னுடைய காணாமல் போன ஒட்டகங்களை கண்டீரா? என்றான். அதற்கு நபியவர்கள் ஆம்  இன்ன இடத்தில் அந்த ஒட்டகைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றது என்றார்கள். அவ்வாரே அந்த ஒட்டகைகளை தேடிச்சென்றவன் நபியவர்கள் சொன்ன அதே இடத்தில் ஒட்டகைகளை பெற்றுக் கொண்டான்.

மிஃராஜ் பயணத்திற்கான காரணங்கள்
**********************************************

قوله تعالي: لنريه من اياتنا ( بني اسرائيل 1)

உலகில் புதிதாக பதவி ஏற்ற பிரதமர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை தெறிந்து கொள்வது வளக்கம். அதேபோல நபி( ஸல்) அவர்களை ஈருலகிற்கும் நபியாக ஆக்கியிருக்கும் இறைவன் வாணுலகிலுல்ல தன் குத்ரத்துக்களையும் தன் ஹபீபுக்கு காட்ட விரும்புகின்றான் எனவே தான் لنريه من اياتنا என்று கூறுகின்றான்.
மறுமை நாள் உண்டு சொர்கம் உண்டு நரகமுண்டு என்றெல்லாம் கூறும்பொழுது அதைப் பார்த்தவர்கள் யாரவது உண்டா ? ஏன் நபிமார்களாவது பார்த்திருக்கிறார்களாகுறைந்த பட்சம் நபிமார்களின் தலைவராவது பார்த்திருக்கின்றாரா? என்ற கேள்விக்கு விடையாகவும்  இப்பயணம் அமைந்துள்ளது.
கவலை நீக்கம்
*****************

நபி( ஸல்) அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த அவர்களின் மனைவி கதீஜா ( ரலி) அவர்களும் நபயவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களும்  மரணமாகி விட்ட  தருணத்தில் நபி( ஸல்) அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் எதிரிகளின் மூலம் தொல்லைகளும் அதிகமானது இந்த சமயத்தில் தன் ஹபீப் ( ஸல்) அவர்களை வானுலகிற்கு அழைத்து தன்னை நேரடியாக காணக்கூடிய பாக்கியத்தை தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று இறைவன் நாடியும் இப்பயணத்தை அமைத்துத் தந்தான்
புனிதப் பயணம் பற்றி பூமான்நபியின் விளக்கம்
*******************************************************

صحيح البخاريُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُمْ عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِهِ: ((بَيْنَمَا أَنَا فِي الْحَطِيمِ- وَرُبَّمَا قَالَ فِي الْحِجْرِ- مُضْطَجِعًا، إِذْ أَتَانِي آتٍ فَقَدَّ- قَالَ وَسَمِعْتُهُ يَقُولُ فَشَقَّ- مَا بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ- فَقُلْتُ لِلْجَارُودِ وَهْوَ إِلَى جَنْبِي مَا يَعْنِي بِهِ قَالَ مِنْ ثُغْرَةِ نَحْرِهِ إِلَى شِعْرَتِهِ، وَسَمِعْتُهُ يَقُولُ مِنْ قَصِّهِ إِلَى شِعْرَتِهِ- فَاسْتَخْرَجَ قَلْبِي، ثُمَّ أُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مَمْلُوءَةٍ إِيمَانًا، فَغُسِلَ قَلْبِي ثُمَّ حُشِيَ، ُ

3887. அனஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள். நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்... அல்லது ஹிஜ்ரில்... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ்(ரலி), “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்: நான் என்னருகிலிருந்து (அனஸ்(ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத்(ரஹ்) அவர்களிடம், “அனஸ்(ரலி), “இங்கிருந்து, இது வரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?“ என்று கேட்டேன். அதற்கு ஜாரூத்(ரஹ்), “நபி(ஸல்) அவர்களின் நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை... அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை... என்ற கருத்தில் அனஸ்(ரலி) கூறினார்என்று பதிலளித்தார்கள். பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது.
இந்த ஆன்மீக ஆபரேஷன் நபி( ஸல்) அவர்களுடைய சிறு பிராயத்திலும் நடந்தது.
***********************************

صحيح مسلمُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ الْقَلْبَ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَقَالَ هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ. ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لأَمَهُ ثُمَّ أَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ- يَعْنِي ظِئْرَهُ- فَقَالُوا إِنَّ مُحَمَّدًا قَدْ قُتِلَ. فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقَعُ اللَّوْنِ. قَالَ أَنَسٌ وَقَدْ كُنْتُ أَرَى أَثَرَ ذَلِكَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ.

261. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து,அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, ”இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்குஎன்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.
ஸஹீஹ் முஸ்லிம்
விளக்கம்: தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து கழுவப்பட்டதாகிறது . தங்கம் ஹராமாக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை.எனவே இதைவைத்து தங்க பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வரமுடியாது.
புராக்
*********
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((أُتِيتُ بِالْبُرَاقِ- وَهُوَ دَابَّةٌ أَبْيَضُ طَوِيلٌ فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَضَعُ حَافِرَهُ عِنْدَ مُنْتَهَى طَرْفِهِ- قَالَ فَرَكِبْتُهُ حَتَّى أَتَيْتُ بَيْتَ الْمَقْدِسِ- قَالَ- فَرَبَطْتُهُ بِالْحَلْقَةِ الَّتِي يَرْبِطُ بِهِ الأَنْبِيَاءُ- قَالَ- ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ فَصَلَّيْتُ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجْتُ فَجَاءَنِي جِبْرِيلُ- عَلَيْهِ السَّلاَمُ- بِإِنَاءٍ مِنْ خَمْرٍ وَإِنَاءٍ مِنْ لَبَنٍ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقَالَ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَرْتَ الْفِطْرَةَ. صحيح مسلم

259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) என்னிடம் கோவேறு கழுதையைவிடச் சிறியதும், கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் எனும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது கால் குளம்பை எடுத்து (எட்டு) வைக்கும். அதிலேறி நான் பைத்துல் மக்திஸ் (ஜெரூசலேம்) இறை ஆலயம் வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்துவிட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்ட போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டுவந்தார். (அதில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.) நான் பால் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல், ”இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்என்று கூறினார்
சிறுவிளக்கம்
******************

புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்து சென்றதோ அந்த நாடுகள் அடைந்த செழிப்பு....
அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் வற்றாத பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள் எவை என மண்ணியல் வரைபடமாக தயாரித்தனர்.அதில் வளைகுடா நாடுகளே அதிகம் இடம்பெற்றன.அதில் ஆச்சரியம் என்னவென்றால் நபி( ஸல்) அவர்களை சுமந்து சென்ற புராக் வாகனம் எந்தெந்த நாடுகளின் வழியாக பறந்ததோ அந்த நாடுகள் இன்று பெட்ரோல் வளம் கொண்ட நாடுகளாக உள்ளன.
பைத்துல் முகத்தஸில் வாகனத்தை கட்டிவைத்ததின் காரணம் கட்டாமல் விட்டால் ஓடிவிடும் என்பதினாலல்ல அல்லாஹ் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை இல்லாமல் செய்யவில்லை மாறாக மனித சமுதாயம் எந்த காரியத்தைச் செய்தாலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதுடன் முயற்சியும் செய்ய வேண்டும் என்பதையே காட்டுகிறது. ஒரு அறிஞன் சொல்வான் பிரார்தனை செய் சுத்தியலை எடு என்பான் .இந்த கருத்தைத்தான் இந்த நிகழ்வும்  வலியுருத்துகிறது .
ஒவ்வொரு வானங்களிலும் நபிமார்களை சந்தித்தல்
*********************************************************

.
ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِآدَمَ فَرَحَّبَ بِي وَدَعَا لِي بِخَيْرٍ.( مسلم)

பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது ஹஹ யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”ஜிப்ரீல்என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”முஹம்மத்என்று பதிலளித்தார். ”(அவரை அழைத்து வரச்சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், ”(அவரை அழைத்து வரச்சொல்லி என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுஎன்றார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. நான் அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வாழ்த்தி வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
விளக்கம்
***********

முதல் வானத்தில் கதவு தட்டப்பட்டு யார் என கேட்கப்பட்டு நான் ஜிப்ரயீல் என்று பெயர்சொல்லி அனுமதி பெற்ற பின்பே உள்ளே சென்றார்கள் இதன் மூலம் நாம் தெறிந்து கொள்வது என்னவென்றால் எந்த ஒரு வீட்டிற்கு சென்றாலும் முதலில் ஸலாம் கூறி அனுமதி பெற வேண்டும். பெயர் கூறி அனுமதி கேட்க வேண்டும்.மூன்று முறை ஸலாம் கூறி அனுமதி கேட்ட பின்பும் பதில் வராவிட்டால் திரும்பி விடவேண்டும்

4669 -[3] (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻭﻋﻦ ﺟﺎﺑﺮ ﻗﺎﻝ: ﺃﺗﻴﺖ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺩﻳﻦ ﻛﺎﻥ ﻋﻠﻰ ﺃﺑﻲ ﻓﺪﻗﻘﺖ اﻟﺒﺎﺏ ﻓﻘﺎﻝ: «ﻣﻦ ﺫا؟» ﻓﻘﻠﺖ: ﺃﻧﺎ. ﻓﻘﺎﻝ: «ﺃﻧﺎ ﺃﻧﺎ» . ﻛﺄﻧﻪ ﻛﺮﻫﻬﺎ

முதல் வானத்தில் நபி ஆதம் ( அலை) அவர்களை பார்த்தவுடன் 
இவர்கள்தான் உம்முடைய தந்தை ஆதம் இவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என்று ஜிப்ரயீல் அலை நபியிடம் கூற நபி( ஸல்) அவர்கள் ஸலாம் சொன்னார்கள்.
ஒரு இடத்திற்கு வரக்கூடியவர் அங்கு அமர்ந்திருப்பவரை விட சிறப்பிற்குரியவராக இருந்தாலும் அமர்ந்திருப்பவருக்கு வரக்கூடியவரே முதலில் ஸலாம் சொல்லவேண்டும் என்ற வழிமுறையை கற்றுத்தரப் படுகிறது

.

. ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ. فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِابْنَيِ الْخَالَةِ عِيسَى ابْنِ مَرْيَمَ وَيَحْيَى بْنِ زَكَرِيَّاءَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ. ثُمَّ عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ. فَقِيلَ مَنْ أَنْتَ قَالَ جِبْرِيلُ. 
قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِيُوسُفَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا هُوَ قَدْ أُعْطِيَ شَطْرَ الْحُسْنِ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ. ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الرَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ- عَلَيْهِ السَّلاَمُ- قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. 
قَالَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِدْرِيسَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا} ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ. قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. 
قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِهَارُونَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ. ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ. 
قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِمُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَحَّبَ وَدَعَا لِي بِخَيْرٍ. ثُمَّ عَرَجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ فَقِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ. قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا فَإِذَا أَنَا بِإِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الْبَيْتِ الْمَعْمُورِ وَإِذَا هُوَ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لاَ يَعُودُونَ إِلَيْهِ ( مسلم)

( ஹதீஸின் கருத்தை மட்டும் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது)
பிரகு இரண்டாம் வானத்தில் ஈஸா ( அலை) மற்றும் ஜகரிய்யா ( அலை) அவர்களையும் மூன்றாம் வானத்தில் யூசுப் ( அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இ்த்ரீஸ் ( அலை) அவர்களையும். ஐந்தாம் வானத்தில் ஹாரூன் ( அலை) அவர்களையும் ஆறாம் வானத்தில் மூஸா ( அலை) அவர்களையும் சந்தித்து  விட்டு ஏழாம் வானத்தில் இப்ராஹீம் நபியை சந்திக்கின்றார்கள். அங்கே அவர்கள் பைதுல் மஃமூர் பள்ளியின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.ஒவ்வொரு நாளும் அப்பள்ளியில்  எழுபது ஆயிரம் வானவர்கள் நுலைகின்றார்கள் யாரும் திரும்ப வருவதே இல்லை.

ِ ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى وَإِذَا وَرَقُهَا كَآذَانِ الْفِيَلَةِ وَإِذَا ثَمَرُهَا كَالْقِلاَلِ- قَالَ- فَلَمَّا غَشِيَهَا مِنْ أَمْرِ اللَّهِ مَا غَشِيَ تَغَيَّرَتْ فَمَا أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ يَسْتَطِيعُ أَنْ يَنْعَتَهَا مِنْ حُسْنِهَا. فَأَوْحَى اللَّهُ إِلَيَّ مَا أَوْحَى فَفَرَضَ عَلَيَّ خَمْسِينَ صَلاَةً فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَنَزَلْتُ إِلَى مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ خَمْسِينَ صَلاَةً. قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ فَإِنَّ أُمَّتَكَ لاَ يُطِيقُونَ ذَلِكَ فَإِنِّي قَدْ بَلَوْتُ بَنِي إِسْرَائِيلَ وَخَبَرْتُهُمْ. قَالَ فَرَجَعْتُ إِلَى رَبِّي فَقُلْتُ يَا رَبِّ خَفِّفْ عَلَى أُمَّتِي. فَحَطَّ عَنِّي خَمْسًا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقُلْتُ حَطَّ عَنِّي خَمْسًا. قَالَ إِنَّ أُمَّتَكَ لاَ يُطِيقُونَ ذَلِكَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ.- قَالَ- فَلَمْ أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى وَبَيْنَ مُوسَى- عَلَيْهِ السَّلاَمُ- حَتَّى قَالَ يَا مُحَمَّدُ إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ لِكُلِّ صَلاَةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلاَةً. وَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ لَهُ عَشْرًا وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا لَمْ تُكْتَبْ شَيْئًا فَإِنْ عَمِلَهَا كُتِبَتْ سَيِّئَةً وَاحِدَةً- قَالَ- فَنَزَلْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ قَدْ رَجَعْتُ إِلَى رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ مِنْهُ( مسلم)

பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹாஎனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச்சென்றார். அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தன. அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றிருந்தன. அல்லாஹ்வின் கட்டளையால் இனம் புரியாத (நிறங்கள்) அதைச் சூழ்ந்து கொண்டபோது (அதன் அமைப்போ முற்றிலும்) மாறிவிட்டது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரித்துக் கூற முடியாது. அப்போது அல்லாஹ் அறிவிக்க வேண்டியச் சிலவற்றை எனக்கு அறிவித்தான். என்மீது இரவிலும் பகலிலும் (நாள் ஒன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் இறங்கிவந்தேன். அப்போது அவர்கள், ”உங்கள் சமுதாயத்தாருக்கு உம்முடைய இறைவன் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க் கடமையாக்கினான்)என்று நான் பதிலளித்தேன். உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (உங்கள் சமுதாயத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் இதைத் தாங்கமாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப் பட்டிருக்கிறேன்என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று, ”என் இறைவா! என் சமுதாயத்தார்மீது (ஐம்பது வேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து, ”(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்என்று கூறினேன். அப்போது அவர்கள், ”உங்கள் சமுதாயத்தார் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்என்றார்கள். இவ்வாறே நான், என் இறைவனுக்கும் மூசா (அலை) அவர்களுக்குமிடையே திரும்பிச் சென்றுகொண்டிருந்தேன். இறுதியாக, ”முஹம்மதே! இவை இரவிலும் பகலிலும் (நிறைவேற்ற வேண்டிய) ஐவேளைத் தொழுகைகள் ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நற்பலன்) உண்டு. (நற்பலனில்) இவை ஐம்பது வேளைத் தொழுகை(க்கு ஈடு) ஆகும். ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே, அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்துவிட்டால் அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் (குற்றம்) எதுவும் பதியப்படுவதில்லை. (எண்ணியபடி) அதை அவர் செய்து முடித்துவிட்டால் ஒரு குற்றமாகவே அது பதிவு செய்யப்படுகிறதுஎன்று கூறினான். பின்னர் நான் அங்கிருந்து புறப்பட்டு மூசா (அலை) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அ(ல்லாஹ் கூறிய)தை அவர்களிடம் நான் தெரிவித்தேன். அப்போது அவர்கள், ”உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்என்று கூறினார்கள். உடனே நான், ”(பல முறை) என் இறைவனிடம் திரும்பிச் சென்றுவிட்டேன். (இன்னும்) அவனிடம்
(
குறைத்துக் கேட்க) நான் வெட்கப்படுகிறேன் என்று கூறிவிட்டேன். இதை அனஸ் பின் மாலிக் ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.( ஸஹீஹ் முஸ்லிம்)

முடிவுரை
***********

தொழுகை கடமையாக்கப்பட்ட இந்த இரவில் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழுகையை கடைபிடிக்க வேண்டும்

عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه وسلم : « لا إيمان لمن لا أمانة له ، ولا صلاة لمن لا طهور له ، ولا دين لمن لا صلاة له ، إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد »( طبراني)
عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنْ الْفَرِيضَةِ ؟ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ ) ، وصححه الألباني في " صحيح سنن الترمذي "
 

தொழுகையை விட வியாபாரத்தை பெரிதாக கருதுபவர்களுக்கு எச்சரிக்கை
*************************************

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ  

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
(அல்குர்ஆன் : 9:24)


பொழுது போக்கான விஷயங்களில் மூழ்கி தொழுகையை மறந்தவர்கள் ஸகர் என்னும் நரகத்தில் இருப்பார்கள்
*************************************************

 يَتَسَآءَلُوْنَۙ‏   فِىْ جَنّٰتٍ
(
அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
(
அல்குர்ஆன் : 74:40)
عَنِ الْمُجْرِمِيْنَۙ‏  
குற்றவாளிகளைக் குறித்து-
(
அல்குர்ஆன் : 74:41)
مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏  
உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)
(
அல்குர்ஆன் : 74:42)
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏  
அவர்கள் (பதில்) கூறுவார்கள்: தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
(
அல்குர்ஆன் : 74:43)
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ‏  
அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
(
அல்குர்ஆன் : 74:44)
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏  
“(
வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
(
அல்குர்ஆன் : 74:45)
وَ كُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ‏  
இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
(
அல்குர்ஆன் : 74:46)
حَتّٰٓى اَتٰٮنَا الْيَقِيْنُؕ‏  
உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்எனக் கூறுவர்).
(
அல்குர்ஆன் : 74:47   

புனித இரவுகளில் மட்டும் வணங்கினால் போதுமா?
***********************************************


நம்மில் சிலர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தொழுபவர்களும் உண்டு வருடத்தில் இரண்டு பெருநாளைக்கு மட்டும் வருபவர்களும் உண்டு. சிலர் சிறப்பு இரவுகளை மட்டும் சிறப்பிப்பவர்களும் உண்டு ஆனால் ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகை கட்டாயக் கடமை என்பதை மட்டும் மறந்து விடுகிறார்கள். ஏன் ஒருசிலர் இதுபோன்ற இரவுகளிள் மட்டும் அதிகம் நஃபிலான வணக்கம் செய்து விட்டு காலை பஜ்ரு தொழுகையை தவற விட்டுவிடுகிறார்கள். குறைவான அமலாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்யும் அமலே சிறப்பிற்குறியதாகும்

6465 - صحيح البخاري عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «أَدْوَمُهَا وَإِنْ قَلَّ» وَقَالَ: «اكْلَفُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  “நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?“ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலேஎன்று விடையளித்தார்கள். மேலும், “நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்என்றும் கூறினார்கள். 
ஸஹீஹ் புகாரி

ஹஜ்ரத் சுலைமான்இப்னு அபீஹஸ்மா( ரலி) அவர்கள் ஒரு பெரிய மகான் ஆவார்.அவர்கள் திரு நபி ( ஸல்) அவர்கள் காலத்திலேயே பிறந்திருப்பினும்.சிறு வயதுடையவராக இருந்ததால் நபியவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸ்களைக் கேட்டறியும் வாய்ப்பு கிட்டவில்லை. ஹஜ்ரத் உமர் ( ரலி) அவர்கள் தமது கிலாபத்தின் போது இவர்களை கடைவீதியின் மேற்பார்வையாளராக நியமித்து இருந்தார்கள்.ஒருநாள் ஃபஜ்ருத் தொழுகையில் அவர்கள் காணப்படவில்லை.ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ.ஹஜ்ரத் சுலைமான் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் தாயாரிடம். இன்று பஜ்ருத் தொழுகைக்கு சுலைமான் வரவில்லையே! என்று கேட்டார்கள். இரவு முழுவதும் சுலைமான் நஃபில் தொழுததால் அதிகாலையில் தூக்கம் அதிகமாகிக் கண்ணயர்ந்துவிட்டார்.என்று அந்த தயார் கூறினார்கள். இரவு முழுவதும் நஃபில் தொழுவதைவிட ஃபஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதே எனக்கு மிக விருப்பமானது என்று ஹஜ்ரத் உமர்( ரலி) கூறுனார்கள்.

 

قال صلى الله عليه وسلم ((من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام الليل كله )). اخرجه مسلم 
عن أبو ذر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ((من صلى الصبح فهو في ذمة الله))رواه مسلم . 
الرزق والبركة لمن صلى الفجر جماعة : هذا الوقت وقت البركة في الرزق فإن النبي صلى الله عليه وسلم ((اللهم بارك لأمتي في بكورها ))
اللهم زد في أرزاقنا وبارك لنا فيها ووفقنا للصلاة في جماعة يارب العالمين . 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.