بِسْمِ
اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
சுற்றுலா பற்றி இஸ்லாம்
*********************************
*********************************
இஸ்லாம் அற நெறி மார்கம் .எனவே தான் மதம்
சார்ந்த வைகளை தாண்டி உலகிலும் வாழ வேண்டிய வாழ்க்கை கலையையும் போதிக்கின்றது .
எனவே (கோடை விடுமுறை-)ஓய்வு நேரங்களை /நாட்களை எவ்வாறு கழிக்க வேண்டும் என்பதையும்
சொல்லி தருகிறது .
صحيح
البخاري6412 عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نِعْمَتَانِ مَغْبُونٌ
فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ
ஸஹீஹ் புகாரி 6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
1 .
@@@@@@@@
ஓய்வு நேரங்களை
/நாட்களை தீனிய்யாத் படிக்க/கம்யூட்டர் கிளாஸ்/ஸ்போக்கன் இங்கிலீஷ்/கைத்
தொழில்/மேலும் ஊர்களை / நாடுகளை சுற்றி உலா வருவது (-சுற்றுலா) போன்றதிலும்
கழிப்பார்கள் .
அந்த சுற்றுலா பற்றி பார்க்க இருக்கிறோம்.
சுற்றுலா சில பல கட்டுப்பாடு /நிபந்தனை களுடன் கூடும்.
கட்டுப்பாடு இன்றிய வாழ்க்கை அது காபிர் (-1. இறை
மறுப்பார்கள் 2.நன்றி கெட்டவர்) களின் பண்பு
لَا
يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ (196) مَتَاعٌ قَلِيلٌ
ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ (197) سورة آل عمران
காபிர்கள்(-1.இறை மறுப்பார்கள் 2.நன்றி
கெட்டவர்கள் உல்லாசமாக/ஆடம்பரமாக பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும்)
நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்.
(அல்குர்ஆன் : 3:196
وَالَّذِينَ
كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الأنْعَامُ وَالنَّارُ
مَثْوًى لَهُمْ } .سورة محمد
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள்,
மிருகங்கள் தின்பதைப் போல் தின்றுகொண்டும்,
(மிருகங்களைப் போல்) சுகத்தை அனுபவித்துக் கொண்டும்
இருக்கின்றார்கள். (எனினும்,) அவர்கள்
செல்லுமிடம் நரகம்தான்.(அல்குர்ஆன் : 47:12)
எனவே அந்த சுற்றுலாவின் நோக்கம் காதல் / மது/தியேட்டர் போன்ற பாவம் செய்யும் நோக்கம் . அல்லது வெறுமென டயம் பாஸ் / உல்லாசம் என்று
மட்டும் இருப்பின் அதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .
قَالَ
الْإِمَامُ أَحْمَد : لَيْسَتْ السِّيَاحَةُ مِنْ الْإِسْلَامِ فِي شَيْءٍ وَلَا
مِنْ فِعْلِ النَّبِيِّينَ وَلَا الصَّالِحِينَ .
வெறுமென உல்லாச சுற்றுலா என்பது தீனில் இல்லை . எந்த
நபியும் (அலை) எந்த ஸாலிஹான நல்லடியார்களும் அவ்வாறு சுற்றித்திரியவில்லை என்பதாக இமாம் அஹ்மத் ரஹ் சொல்கிறார்கள் .
2 .
@@@@@@@@
ஆனாலும்
அந்த சுற்றுலா நற்பயன் தரும் நோக்கில் இருப்பின் அது கூடும்.
1.கல்வி கற்க:மூஸா (அலை) அவர்கள் கில்ர் (ரஹ்) அவர்கள் இடம்
சென்றார்கள்.
2.ஹஜ்/பத்ர்/உஹத் போன்ற போராட்டம் /
3.சொந்த பந்தங்களை சந்திப்பது : யாகூப் (அலை) அவர்கள்
குடும்பத்துடன் யூசுப் அலை அவர்கள் இடம் சென்றார்கள்.
4 .இறைவனின் அத்தாட்சிகளை படைப்ப்புகளை அருள்களை
சிந்திப்பதுக்காக .துல் கர்னைன் உலகை சுற்றிப்பார்த்தது. நமது நபி முஹம்மத்(ஸல்)
அவர்கள் மிஃராஜ் சென்றது .
سنن
أبي داود 2127 عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ
ائْذَنْ لِي فِي السِّيَاحَةِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ سِيَاحَةَ أُمَّتِي الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى
சுற்றுலா செல்ல எனக்கு அனுமதி தாருங்கள் என
ஒரு சஹாபி நபி (ஸல்)அவர்களிடம் வேண்டிக்கொண்டார்
.அதற்கு என் உம்மத்தின் சுற்றுலா என்பது அது இறை வழியில் போராடுவது தான் என பதில்
அளித்தார்கள் .நூல் அபூ தாவூத்: 2127 அறிவிப்பாளர்
அபூ உமாமஹ்(ரலி) .
எனவே நம் பயணம் மேலே குறிப்பிட்ட படி நற்பலன்
நோக்கமாக கொண்டு ஓரம் சாராமாக உல்லாச நிய்யத் இருந்தால் பாக்கியம் நிறைந்துவிடும்
صحيح
البخاري 1 عن عُمَرَ بْن الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى
المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا
نَوَى........
ஸஹீஹ் புகாரி 1. ”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.
ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது
.
3
@@@@@@@@
சுற்றுலாவின்
பயன்கள் இறைவனின் அத்தாட்சிகளை படைப்ப்புகளை அருள்களை சிந்திப்பது
قُلْ
سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ
النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ # العنكبوت20
பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து,
அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர்
பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்;
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும்
பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 29:20
اَفَلَمْ
يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ
اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ
وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ [الحج: 46]
ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவைகளைப்) பார்க்க
வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து
கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்)
கேட்கக் கூடிய செவி அவர்களுக்கு உண்டாகி விடும். நிச்சயமாக அவர்களுடைய (வெளிக்)
கண்கள் குருடாகி விடவில்லை. எனினும், நெஞ்சுகளில்
இருக்கும் (அவர்களுடைய அகக்) கண்கள்தாம் குருடாகி விட்டன. (22:46)
4 .
@@@@@@@@
அதாப்
நடந்த இடத்தை உல்லாசமாக ரசிக்க கூடாது
مسند
أحمد -ط الرسالة562 عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ،
قَالَ: ………ثُمَّ سَارَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَتَّى أَتَى مُحَسِّرًا فَوَقَفَ عَلَيْهِ فَقَرَعَ نَاقَتَهُ، فَخَبَّتْ حَتَّى جَازَ
الْوَادِيَ، ثُمَّ حَبَسَهَا،
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அமைதியாக
செல்லுங்கள்.அவசரம் வேண்டாம் என்று கட்டளை இட்டார்கள் .ஆனால் (மக்காவில்)
முஸ்தலிபா மினா இந்த இரண்ட்டுக்கும் இடைபட்ட இடம் வாதி முஹஸ்ஸிர் அருகில் வந்த
உடன் ஒட்டகத்தை சாட்டையால் அடித்து வேகமாக
ஓட்டினார்கள். (நூல். அஹ்மத் 562) .
இதில் தான் அப்ரஹாவின் யானைபடை அழிக்கப்
பட்டார்கள்
5 . @@@@@@@@
பயணம் அது
ஒரு அதாப். எனவே சீக்கிரம் திரும்பனும்
صحيح
البخاري 1804 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «السَّفَرُ قِطْعَةٌ مِنَ
العَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ، فَإِذَا قَضَى
نَهْمَتَهُ، فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ
புகாரி 1804. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும்
பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர்
தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
6 .
@@@@@@@@
அமல்கள்
செய்யாவிட்டாலும் செய்ததாக
கணக்கு .
صحيح
البخاري 2996 سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَرِضَ العَبْدُ، أَوْ سَافَرَ، كُتِبَ
لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا»
புகாரி 2996. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான் ஆரோக்கியமானவனாய் , ஊரிலிருக்கும்போது
செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற நற்பலன் (அமல்கள் செய்யாவிட்டாலும்
அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன்
பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.
இதை அறிவித்த அபூ புர்தா(ரஹ்), ”இதைப்
பலமுறை (என் தந்தை) அபூ மூஸா அஷ்அரீ(ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்” என்று
தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் இப்னு அபீ கப்ஷா(ரஹ்)
அவர்களிடம் கூறினார்கள்.
7 .
@@@@@@@@
இருக்கை/உணவு/பானம்/தங்குமிடம்
பகிர்ந்து அளிக்கனும்
صحيح
مسلم18 - 3258 (1728) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:
بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ، قَالَ: فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ
يَمِينًا وَشِمَالًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ، فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لَا ظَهْرَ لَهُ،
وَمَنْ كَانَ لَهُ فَضْلٌ مِنْ زَادٍ، فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لَا زَادَ
لَهُ»، قَالَ: فَذَكَرَ مِنْ أَصْنَافِ الْمَالِ مَا ذَكَرَ حَتَّى رَأَيْنَا
أَنَّهُ لَا حَقَّ لِأَحَدٍ مِنَّا فِي فَضْلٍ
ஸஹீஹ் முஸ்லிம் 3562. அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில்
இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும்
இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி
கேட்டு)க்கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”தம்மிடம்
தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து
உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக்
கொடுத்து உதவட்டும்” என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு
செல்வங்களைப் பற்றி (தேவைக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவருக்கு அவற்றைக்
கொடுக்கட்டும் என்று) கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு
அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று
நாங்கள் கருதினோம்.
مسند
أحمد ط الرسالة: 3901 عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:
كُنَّا يَوْمَ بَدْرٍ كُلُّ ثَلَاثَةٍ عَلَى بَعِيرٍ، كَانَ أَبُو لُبَابَةَ،
وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، زَمِيلَيْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ: وَكَانَتْ عُقْبَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، قَالَ: فَقَالَا نَحْنُ نَمْشِي عَنْكَ، فَقَالَ: " مَا أَنْتُمَا
بِأَقْوَى مِنِّي، وَلَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا " (1)
பத்ர் போருக்கு செல்லும் போது ஒரு
ஒட்டகத்தில் மூவர் என (தவணை முறையில்) பயணிக்கனும் . A நபி (ஸல்) அவர்கள B.அலி(ரலி) C.அபூ லுபாபஹ்(ரலி) இம்மூவரும் ஒரு ஒட்டகத்தில் . நபி (ஸல்)
அவர்கள் தன் (தவணை) நேரம் முடிந்து இறங்கும் போது இவ்விருவரும் சொன்னார்கள்
.தாங்களே தொடர்ந்து பயணிக்கவும் .நாங்கள் நடந்து வருகிறோம் என்றார்கள். அதற்கு நபி
(ஸல்) அவர்கள நீங்கள் இருவரும் என்னை விட வலிமை யானவர்கள் அல்ல. நன்மையை பெறுவதில்
உங்களை விட நான் அதிக தேவையற்றவனும் அல்ல. என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களை
ஏறி பயணிக்க (செய்து)விட்டார்கள்
__________
(1) إسناده حسن من أجل عاصم بن بهدلة، وبقية رجاله ثقات رجال
الصحيح.
وفي مرقاة المفاتيح قوله عقبة رسول الله بضم فسكون أي نوبة
نزوله قالا أي أبو لبابة وعلى نحن نمشي عنك أي نمشي مشيا عوضا عن مشيك
8 . @@@@@@@@
பயணத்திலிருந்து
வீடு திரும்பினால் பிள்ளைகள் /மற்றவர்களின் மேல் பாச மழை பொழியனும்
صحيح
مسلم66 - 4455 (2428) عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: "
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ
تُلُقِّيَ بِصِبْيَانِ أَهْلِ بَيْتِهِ، قَالَ: وَإِنَّهُ قَدِمَ مِنْ سَفَرٍ
فَسُبِقَ بِي إِلَيْهِ، فَحَمَلَنِي بَيْنَ يَدَيْهِ، ثُمَّ جِيءَ بِأَحَدِ
ابْنَيْ فَاطِمَةَ، فَأَرْدَفَهُ خَلْفَهُ، قَالَ: فَأُدْخِلْنَا الْمَدِينَةَ،
ثَلَاثَةً عَلَى دَابَّةٍ "
ஸஹீஹ் முஸ்லிம் 4812.அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தை
முடித்துக்கொண்டு (ஊருக்குள்) வரும்போது,அவர்களுடைய
குடும்பத்துச் சிறுவர்களால் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்கப் படுவார்கள். இவ்வாறு
ஒருமுறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது நான் முந்திக்கொண்டு அவர்களிடம்
சென்றேன். உடனே அவர்கள் என்னை (தமது வாகனத்தில்) முன்பக்கத்தில்
ஏற்றிக்கொண்டார்கள். பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர்
அங்கு கொண்டுவரப்பட்டார். அவரைத் தமக்குப் பின்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள்.
நாங்கள் மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தவாறு மதீனாவிற்குள் நுழைந்தோம்.
9 . @@@@@@@@
பயணத்திலிருந்து
வீடு திரும்பினால் 1.முதலில் மஸ்ஜித் 2. ஒரு
விருந்து அல்லாஹ்விற்கு நன்றி செய்யும் விதம்.
صحيح
البخاري3089 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا:
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ
المَدِينَةَ، نَحَرَ جَزُورًا أَوْ بَقَرَةً»، زَادَ مُعَاذٌ، عَنْ شُعْبَةَ، عَنْ
مُحَارِبٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ «اشْتَرَى مِنِّي النَّبِيُّ صلّى
الله عليه وسلم بَعِيرًا بِوَقِيَّتَيْنِ وَدِرْهَمٍ أَوْ دِرْهَمَيْنِ، فَلَمَّا
قَدِمَ صِرَارًا أَمَرَ بِبَقَرَةٍ، فَذُبِحَتْ فَأَكَلُوا مِنْهَا، فَلَمَّا
قَدِمَ المَدِينَةَ أَمَرَنِي أَنْ آتِيَ المَسْجِدَ، فَأُصَلِّيَ رَكْعَتَيْنِ
وَوَزَنَ لِي ثَمَنَ البَعِيرِ
புகாரி 3089. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு
வந்தபோது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை இரண்டு
ஊக்கியாக்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர்
ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகிலுள்ள) ”ஸிரார்”என்னுமிடத்திற்கு
அவர்கள் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி
அறுக்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள். மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசலுக்குச்
சென்று இரண்டு ரக்அத்துகள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (தொழுது முடித்த)
பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத்
தந்தார்கள்.
10 . @@@@@@@@
பெண்
மஹ்ரம் இன்றி பயணிப்பது ஹராம் .அது ஹஜ் பயணமாக இருந்தாலும் சரியே
صحيح
البخاري 3006 عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَخْلُوَنَّ رَجُلٌ
بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَامَ
رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا،
وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً، قَالَ: «اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.