بسم
الله الرحمن الرحيم
இஸ்லாமும் அரசியலும்
*******************************
قوله
تعالي:ان الله يأمركم ان تؤدوا الامانات الي اهلها
واذا حكمتم بين الناس ان تحكموا باالعدل....
قوله عليه الصلوة والسلام: يا عبد الرحمن بن سمرة لاتسأل الامارة فانك ان اوتيتها عن مسألة وكلت اليها وانك ان اوتيتها من غير مسألة اعنت عليها ( رواه البخاري
واذا حكمتم بين الناس ان تحكموا باالعدل....
قوله عليه الصلوة والسلام: يا عبد الرحمن بن سمرة لاتسأل الامارة فانك ان اوتيتها عن مسألة وكلت اليها وانك ان اوتيتها من غير مسألة اعنت عليها ( رواه البخاري
***********************************************************
அரசியல் என்பதற்கு குடிமக்களின்
சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுவது என்று அர்த்தம்....
இஸ்லாத்தில் அரசியல் என்பது குடிமக்களுக்காக ஆட்சியாளர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வது என்று விசாலமான பொருள் கொள்ளலாம்....ஆம் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அது எவ்வளவு உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்....

தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு
குடும்பம் பசியோடு இருப்பது கண்டு மிகவும் கவலைப்பட்டு உமர் ரழியல்லாஹு அன்ஹு
எடுத்த நடவடிக்கையும், அந்த ஏழைக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை
அங்கிருந்து நகராமல் இருந்து பணி செய்ததும்;
இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய
செய்தியாகும்.
عن
أسلم أن عمر رضي الله عنه طاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان
يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما
بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟
قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا
فبكى عمر ثم جاء إلى دار الصدقة وأخذ غرارة وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر
وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير
المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول
عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا
من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى
طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع،
وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري
لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم
يضحكون، فلما ضحكوا طابت نفسي
(كنز العمال)
உமர் ரலி அவர்களின் பணியாளர் அஸ்லம் ரஹ்
அவர்கள் அறிவிக்கிறார்கள்....ஒரு நாள் உமர் ரலி அவர்கள் இரவில் மக்களின் நிலையை
அறிய ரோந்து வந்தார்கள் அப்போது ஒரு வீட்டு வளாகத்தில் ஒரு பெண் அவளைச் சுற்றி
குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு முன்னால் தண்ணீர்
நிரப்பப்பட்ட பாத்திரம் இருந்தது கீழே நெருப்பு மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.அதைப் பார்த்த உமர் ரலி
அவர்கள் விசாரித்த போது அந்த பெண்மணி குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருக்கின்றன
அந்தப் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவு இல்லாததால் நெருப்பை மூட்டி தண்ணீர்
நிரப்பப்பட்ட பாத்திரத்தை வைத்திருக்கிறேன்
இதைப் பார்த்து நமக்கு ஏதோ உணவு
தயாரிக்கப்படுகிறது என்று எண்ணி குழந்தைகள் தூங்கி விடுவார்கள்....என்று
கூறினாள்.இதைக் கேட்ட உமர் ரலி
அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. உடனே தனது பணியாளரை அழைத்துக் கொண்டு
வீட்டிற்கு வந்து பைத்துல் மாலிலிருந்து கொஞ்சம் மாவு, கொழுப்பு, பேரீத்தம்பழங்கள்,
நெய், ஆடைகள்,
சில திர்ஹங்களை ஒரு பையில் போட்டு அதை தன் முதுகில் தூக்கி
வைவைக்கும் படி தனது பணியாளரிடம் கூறினார்கள். அதற்கவர் நானே சுமந்து வருகிறேன்
என்றார். ஆனால் உமர் ரலி அவர்கள் என் ஆட்சியில் நடந்த காரியங்களுக்கு நான் தான்
மறுமையில் கேள்வி கேட்கப்படுவேன் என்று தானே சுமந்து வந்தார்கள்.பின்பு அந்தப்
பாத்திரத்தில் சிறிது மாவு, கொழுப்பு,
பேரீத்தம்பழங்களை போட்டு கொதிக்க வைத்து தன் கரத்தாலே
சமைத்தார்கள், அடுப்பூதினார்கள் புகை அவர்களின்
அடர்ந்த தாடியினூடே வருவதை நான் பார்த்தேன். சிறிது நேரத்தில் பாயாசம் போன்ற ஒரு
உணவு தயாரானது அதை தன் கரத்தாலே அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும்
பரிமாறினார்கள் அவர்கள் வயிறு நிறைந்த பிறகு அந்த பிள்ளைகளோடு விளையாடினார்கள்.
அந்தப் பிள்ளைகள் சிரிப்பதை பார்த்து விட்டு வந்து நான் ஏன் அந்த பிள்ளைகளோடு
விளையாடினேன் தெறியுமா? அந்தப்
பிள்ளைகள் அழுவதை பார்த்த நான் சிரிப்பதையும் பார்த்து என் உள்ளம் சாந்தியடைய
ஆசைப்பட்டேன் என்றார்கள்.
தான் கடமைப்பட்ட சிறிய விஷயமானாலும்
விளம்பரப் படுத்தாமல் செய்யத் துணியாத அரசியல்வாதிகள் நிறைந்த காலகட்டத்தில்.
உதவிக்கு ஆளில்லாமல் பிரசவ வலியால் ஒரு பெண் துடித்த போது உமர் ரழியல்லாஹு அன்ஹு உடனே தன் மனைவியை அழைத்து வந்த சம்பவமும், அச்சமயத்திலும் தன்னை யார் என்றே காட்டிக் கொள்ளாத எளிமை ....படிப்பினைக்குரியது.
[நூல்;ஸஹீஹூல் புகாரி ]

பதவியை
கேட்டுப் பெராதே!
*********************************
*********************************
قوله
عليه الصلوة والسلام: يا عبد الرحمن بن سمرة لا تسأل الامارة فانك ان اوتيتها عن
مسألة وكلت اليها وانك ان اوتيتها من غير مسألة اعنت عليها ( رواه البخاري
6722. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி)
அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) “ஆட்சிப்
பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ
கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது
தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு
வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி
கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத
வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான
பரிகாரத்தைச் செய்து விடு“ என்று கூறினார்கள்.22 இதே ஹதீஸ்
வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி
ஸஹீஹ் புகாரி
7149. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நானும்
என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த)
அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், இறைத்தூதர்
அவர்களே!“ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி(ஸல்)
அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை
(-பதவியை) வழங்கமாட்டோம்“ என்றார்கள்.
[நூல்;ஸஹீஹூல் புகாரி]
[நூல்;ஸஹீஹூல் புகாரி]
மக்கள்
பிரதிநிதிகள் இலஞ்சம் பெறுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@
عن أَبي حُمَيْدٍ السَّاعِدِيُّ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ بَنِي أَسْدٍ يُقَالُ لَهُ ابْنُ الْأُتَبِيَّةِ عَلَى صَدَقَةٍ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ قَالَ سُفْيَانُ أَيْضًا فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ مَا بَالُ الْعَامِلِ نَبْعَثُهُ فَيَأْتِي يَقُولُ هَذَا لَكَ وَهَذَا لِي فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ فَيَنْظُرُ أَيُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْتِي بِشَيْءٍ إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ( بخاري
அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (“அஸ்த்“ எனும்
குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (“ஸகாத்“
வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம்
பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, “இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது;
இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது“ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம்,
“உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து
கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!“
என்று கூறினார்கள்.
பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மாலை
தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ
உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு
(பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த
அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ
நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக
வழங்கப்பட்டது“ என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது
தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு
அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர்
எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்)
சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில்
சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்
நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக்
கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக
இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்“ என்று
கூறிவிட்டு “(இறைவா!உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்“ என்று
கூறினார்கள்.
[நூல்;ஸஹீஹூல் புகாரி]
[நூல்;ஸஹீஹூல் புகாரி]
பதவியில் இருக்கும் போது நமக்கு கிடைக்கும்
அன்பளிப்புகள் அரசாங்கத்தையே சேரும்.எனவே தான் நபி ஸல் அவர்கள் "வீடுகளில்
அமர்ந்திருந்தால் அவர்களுக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? என்று
பாருங்கள் என கண்டித்தார்கள்.
குறிப்பு- ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படை
வசதிகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் ஒதுக்கும் தொகையில் ஒரு பகுதியை
கவுன்சிலர்கள் அபகரித்துக் கொள்வதும், தான்
கவுன்சிலராக இருக்கும் பகுதியில் யார் வீடு கட்டினாலும் தனக்கு ஒரு தொகையை
கொடுக்கும்படி நிர்பந்திப்பதும் இன்று பரவலாக நடைபெற்று வருகிறது
பைத்துல்மால் அலுவலகத்தை சுத்தம் செய்த போது
கீழே கிடந்த ஒரு வெள்ளி நாணயம் தன் மகன் கையில் இருந்ததால் பதறிப்போன உமர்
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை கைப்பற்றி பைத்துல்மாலில்
சேர்த்தார்கள். ..
عن
هشام بن حسان قال:كسح أبو موسى بيت المال فوجد فيه درهما فمر به ابن لعمر بن
الخطاب فأعطاه إياه فرأى عمر الدرهم مع الصبي فقال:من أين لك هذا؟ فقال: أعطانيه
أبو موسى فأقبل عمر على أبي موسى فقال:أما كان لك في المدينة أهل بيت أهون عليك من
آل عمر؟ أردت أن لا تبقي أحد من أمة محمد صلى الله
عليه وسلم إلا طالبنا بمظلمة في هذا الدرهم فأخذ الدرهم فألقاه في بيت المال( كنزالعمال
عليه وسلم إلا طالبنا بمظلمة في هذا الدرهم فأخذ الدرهم فألقاه في بيت المال( كنزالعمال
இன்று அமைச்சர் வந்தால் எத்தனை ஆடம்பரங்கள்
எவ்வளவு அலங்காரமான வாகனங்கள்.....ஆனால் உமர் ரலி அவர்களின் ஆட்சியில்
ஆட்சியாளர்களை எப்படி வைத்திருந்தார்கள்
عن قيس قال : لما قدم عمر رضي الله عنه الشام استقبله الناس وهو
على بعير فقال : يا أمير المؤمنين ! لو ركبت برذونا يلقاك عظماء الناس ووجوههم
فقال عمر : لا أراكم ههنا وأشار بيده إلى السماء (كنز العمال)
ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் ஷாம் தேசத்திற்கு
வந்த போது அவர்கள் ஒட்டகையில் வருவதைப் பார்த்த சில மனிதர்கள்.அமீருல் மு :.
மினீன் அவர்களே! நீங்கள் (மன்னர்களைப் போல) உயர்ரக சாரட் வண்டியில் பிரயாணித்தால்
நன்றாக இருக்குமே உங்களை சந்திக்க பெரிய மனிதர்கள் எல்லாம் வருவார்களே...என்று
வினவிய போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இனி உங்களை நான் இங்கு பார்க்கக்கூடாது
என எச்சரித்து வானை நோக்கி கையை உயர்த்தினார்கள். (அல்லாஹ் பார்க்கிறான். என்பதை
உணர்த்தினார்கள்.)
உயர்ரக
குதிரையை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்த தடை
விதித்தார்கள்..
************************
************************
عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان
ஓட்டுப் போட பணம் வாங்கலாமா
******************************************
******************************************
عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَهْدَى لَهُ
هَدِيَّةً فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ الرِّبَا( احمد)
"
யார் தான் செய்த சிபாரிசுக்காக பணம்
தரப்பட்டு அதை வாங்குவாரோ அவர் வட்டியின் பெரிய வாயிலுக்கு வந்துவிட்டார்.என
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று ஹஜ்ரத் அபூஉமாமா ரலி
அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : அஹ்மத்)
ஏனெனில் ஓட்டு என்பது சிபாரிசு
செய்வதாகும்.இன்னொரு புறம்
ஊழல் அரசியல்வாதி தருவது கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தெரிந்தும் அதை வாங்குவது அவருடைய பாவத்தில் கூட்டாவதாகும்.
ஊழல் அரசியல்வாதி தருவது கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தெரிந்தும் அதை வாங்குவது அவருடைய பாவத்தில் கூட்டாவதாகும்.
. عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه
وسلم أَنَّهُ قَالَ :مَنِ اشْتَرَى سَرِقَةً وَهُوَ يَعْلَمُ أَنَّهَا سَرِقَةٌ
فَقَدْ شْرَكَ فِى عَارِهَا وَإِثْمِهَا( سنن الكبيري
நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி
பெறுவதற்காக பலதரப்பட்ட வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது.
இஸ்லாமிய பார்வையில் வாக்கை நிறைவேற்றுவது ஒரு நல்ல
முஸ்லிமுக்கு அடையாளமாகும்.
அதேசமயம் வாக்குறுதிக்கு மாறுசெய்வது நயவஞ்சகத்தின்
அடையாளமாகும்.
வெற்றிபெற்ற
மு:.மின்களின் குணங்களை வரிசைப் படுத்தும் திருமறை குர்ஆன். .....
@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப்
பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும்
காப்பாற்றுவார்கள்என்றும்கூறுகிறது.
இங்கே வா தருகின்றேன் என.......... தாய் தன்
குழந்தையை அழைக்கிறாள். இந்தக் காட்சியை கண்ணுற்ற நபி ஸல் அவர்கள் அந்தக்
குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகிறாய்? என்று
கேட்டார்கள். அதற்கு அப்பெண் ஒரு பேரீத்தம்பழம் கொடுக்க நாடியுள்ளேன் என்றாள். ஒரு
வேளை நீ எதையும் தரவில்லை என்றால் உன் மீது பொய்க் குற்றம் பதியப்பட்டிருக்கும் என
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
இந்தஹதீஸின் மூலம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
இந்தஹதீஸின் மூலம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும்,முதலாளிகள்
தொழிலாளிகளுக்கும், ஆட்சியாளர்கள் மக்களுக்கும், வழங்குகிற
வாக்குறுதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ....
நபிமார்களின் தனித்துவம் பற்றி பேசும்
குர்ஆன் பல்வேறு இடங்களில் அவர்களின் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை குறித்து
பேசுகிறது.
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது நபிமார்கள்
மற்றும் நல்லடியார்களின் பண்பாகும்.
அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில்...
وَلَنْ يُخْلِفَ اللَّهُ
وَعْدَهُ} [الحج: 47]நிச்சயமாகஅல்லாஹ் தன் வாக்குக்கு மாறு
செய்யவே மாட்டான் என்று கூறுகிறான்.
அதே போல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மூன்று
வாக்குறுதிகளை கூறியிருக்கிறான்.
முதலாவது வாக்குறுதி. இந்த பூமி முழுவதும்
முஃமின்களை நான் ஆட்சியாளர்களாக ஆக்குவேன்.
இரண்டாவது வாக்குறுதி. உங்கள் மார்க்கம் தான்
இந்த உலகம் பூராவும் நிலைத்து நிற்கும் மற்றவைகள் விழுந்து விடும்.
இன்று உலகில் நமது இஸ்லாமிய மார்க்கம் இல்லாத
நாடுகள் இல்லை.
அமெரிக்கா,ஆப்ரிக்கா,ஆசியா, என அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கிறது.
அமெரிக்கா,ஆப்ரிக்கா,ஆசியா, என அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கிறது.
மூன்றாவது வாக்குறுதி.முஃமின்கள் நிம்மதியான
வாழ்க்கை வாழ்வீர்கள். எந்த நாடுகளின் பயம் அச்சுறுத்தல் இன்றி நிம்மதியாக
வாழ்வீர்கள்.
وعد
الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من
قبلهم وليمكنن لهم دينهم الذي
ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا
ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) -
நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை,அவர்களுக்கு
முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில்
அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும்,அவர்களுடைய
அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்என்று அல்லாஹ்கூறுகின்றான்.
எல்லா
சமயத்தாரையும் சமமாக நடத்த வேண்டும்.
*******************************************************
*******************************************************
ஜனாதிபதிஉமர் (ரலி)அவர்கள்
ஒரு கூட்டத்தாரின் வாசலைக் கடந்து சென்ற போது கண் தெரியாத வயோதிகமான ஒரு மனிதர்
யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள். விசாரித்த போது அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த
ஒரு யூதர் என தெரிந்து கொண்டார்கள். அவரிடம் நான் பார்க்கும் நிலைக்கு உன்னைக்
கொண்டு வந்தது எது எனக் கேட்டார்கள். இயலாமையும், வயோதிகமும்
என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்றார் இதைக்
கேட்டு கருணையுடன் அவரின் கையை பிடித்து உமர் ரலி அவர்கள்
அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சில பொருட்களை கொடுத்து உதவினார்கள்.பின்னர்
பைத்துல்மால் பொருப்பாளரிடம் அவரை அழைத்துச் சென்று இவரையும் இவர் போன்றவரையும்
கவனித்து உதவி செய்யுங்கள். ஏனெனில்
இவரின் இளமைக் கால சக்திகளை உறிஞ்சி விட்டு வயோதிக காலத்தில் அவருக்கு நாம்
உதவாமல் விடுவது அவரிடம் நேர்மையாக நடந்து கொண்டதாகாது என்றார்கள்.
தீயவர்களை
தலைவர்களாக தேர்ந்தெடுத்தால் ஏற்படும் விளைவுகள்
********************************
********************************
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم
وإذا جارت الولاة قحطت السماء
பொறுப்பாளிகள்குற்றம்புரிந்தால்நாட்டில்மழைதடைப்பட்டுபஞ்சம்வரும்எனநபி (ஸல்)அவர்கள்கூறினார்கள்
(நூல் : தர்ஙீப் தர்ஹீப்
தகுதியானவர்கள்
இருக்க தகுதியற்றவர்களை தேர்ந்தெடுப்பது மோசடியாகும்.
****************************
****************************
وعن
جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لكعب بن عجرة
أعاذك الله من إمارة السفهاء قال وما إمارة السفهاء قال أمراء يكونون بعدي لا
يهتدون بهديي ولا يستنون بسنتي فمن صدقهم بكذبهم وأعانهم على ظلمهم فأولئك ليسوا
مني ولست منهم ولا يردون على حوضي ومن لم يصدقهم بكذبهم
ولم يعنهم على ظلمهم فأولئك مني وأنا منهم وسيردون على حوضي
كعب بن عجرة
நபி(ஸல்)அவர்கள்
என்ற ஸஹாபியிடம் முட்டாள்களின் ஆட்சியை
விட்டும் அல்லாஹ்விடம் உனக்கு நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்றார்கள். அப்போது அவர் முட்டாள்களின் ஆட்சி என்றால் எது என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் எனக்குப்பின்னால் சில
ஆட்சியாளர்கள் வருவார்கள். அவர்கள் என் வழி நடக்க மாட்டார்கள். என் வழிமுறையை
பின்பற்றி நடக்க மாட்டார்கள். யார் அவர்களின் பொய்யை உண்மைப் படுத்துவார்களோ
அவர்களின் அநீதச் செயல்களில் அவர்களுக்கு உதவியாக இருப்பார்களோ அவர்கள் என்னைச்
சார்ந்தவர்கள் அல்ல நானும் அவர்களைச் சார்ந்தவனல்ல .என்னுடைய ஹவ்லுக்கும் அவர்கள்
வர மாட்டார்கள். யார் அவர்களின் பொய்யை உண்மைப் படுத்தாமல், அவர்களுடைய அநீதச் செயல்களில் அவர்களுக்கு உதவி செய்யாமலும்
இருந்தார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் நான் அவர்களைச் சார்ந்தவன்.அவர்கள்
என்னிடம் என் ஹவ்லுக்கு வருவார்கள். [நூல்; தர்கீப்தர்ஹீப்
தீயஆட்சியாளர்களுக்குநபியின்எச்சரிக்கை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
وعن عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به " . رواه مسلم
ஹஜ்ரத் ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
" யா அல்லாஹ் என் உம்மத்தின் காரியங்களுக்கு பொறுப்பேற்பவர் அவர்களிடம்
கடுமையாக நடந்து கொண்டால் நீயும் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்.யார் என்
உம்மத்தின் காரியங்களுக்கு பொறுப்பேற்று அவர்களிடம் மிருதுவாக நடந்து கொள்வாரோ
அவரிடம் நீயும் மிருதுவாகவே நடந்து கொள்வாயாக" என்று நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் துஆ செய்தார்கள். ( நூல்:முஸ்லிம் )
وعن
ابن عباس
رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من ولي شيئا من أمور المسلمين لم ينظر الله في حاجته حتى ينظر في حوائجهم. ( رواه مشكوة عزاه الطبراني
رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من ولي شيئا من أمور المسلمين لم ينظر الله في حاجته حتى ينظر في حوائجهم. ( رواه مشكوة عزاه الطبراني
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
யார் முஸ்லீம்களின் காரியத்திற்கு பொறுப்பேற்று அவர்களின் தேவைகளை பூர்த்தி
செய்யவில்லை என்றால் அல்லாஹ் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டான். (நூல் :
மிஷ்காத், தபரானியில் இந்த கருத்துள்ள ஹதீஸ் உள்ளது)
குடிமக்களின்
சொத்துக்களை அபகரித்துக் கொள்வதன் விளைவுகள்:
@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@
ஹிஜ்ரி 17 –ஆம் ஆண்டு, உமர் (ரலி)ஆட்சிப்பொறுப்பிற்கு
வந்து நான்காண்டுகள் உருண்டோடி விட்டது.
மெல்ல, மெல்ல இஸ்லாம்அருகே இருக்கும் நாடுகளுக்குபரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது. மஸ்ஜிதுன் நபவீ உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால்சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதைஉணர்ந்த உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க நாடி அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிறநபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும்சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம்செய்ய முடியும் என்ற நிலையையும்உணர்ந்தார்கள்.பள்ளியைச் சுற்றிலும் ”உஸாமா (ரலி),
ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ்இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி),அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஸஅத் இப்னுஅபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னுஅப்பாஸ் (ரலி), அப்துர்ர்ஹ்மான் இப்னு அபூபக்ர்(ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி),முஃமின்களின் அன்னையர் நபி {ஸல்} அவர்களின் தூயமனைவியர் ஆகியோரின் வீடுகள் இருந்தன.

உமர் (ரலி) அவர்கள், முஃமின்களின்அன்னையர்
வீட்டை மட்டும் விட்டு விட்டு மற்றெல்வரின் வீடுகளையும், இடங்களையும்வாங்கிட
முடிவெடுத்தார்கள்.வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும்
அழைத்து “ நீங்கள் உங்கள் வீட்டை விலைக்குகொடுத்தீர்கள் என்றால் அதற்குப்பகரமாக மதீனாவின் இன்னொருஇடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கானகிரயத்தையோ முழுமையாகப் பெற்றுக்
கொள்ளலாம்.அல்லது நீங்கள் விரும்பினால் அரசுக்குஅன்பளிப்பாக தரலாம். அரசும்உங்களைநன்றியுணர்வுடன் நடத்தாட்டும். அல்லது நீங்கள்விரும்பினால் அல்லாஹ்விற்காக தருமமாகத்தந்திடுங்கள். கூலி வழங்குவதற்கு அல்லாஹ்போதுமானவனாக இருக்கின்றான்” என்று

இதைக் கேட்ட மாத்திரத்தில் அப்துல்லாஹ்இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும்,
அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும்தங்களின் வீடுகளையும், நிலங்களையும்
அல்லாஹ்விற்காக தர்மம் செய்துவிட்டார்கள்.
மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும்,இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில்

நிலத்தையும் பெற்றுக் கொண்டுஅவர்கள் வசித்த
வீட்டையும், நிலத்தையும் அரசிடம்ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வு நடைபெறுகிற போது,அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்ஊரில் இல்லை.
ஊரில் இருந்து வந்த உடன் உமர் (ரலி)அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச்
இந்த நிகழ்வு நடைபெறுகிற போது,அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்ஊரில் இல்லை.
ஊரில் இருந்து வந்த உடன் உமர் (ரலி)அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச்
சந்தித்து மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம்
பேசியதுபோன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமும்
பேசினார்கள்.ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு உமர் (ரலி)
பேசினார்கள்.ஆனால், இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு உமர் (ரலி)
அவர்கள் ”நீர் இடம்
தரவில்லையானால் அரசுஉம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக்
கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!”என்று கூறினார்கள்.இருவருக்கும் பேச்சு முற்றவே, வழக்காக
நீதிமன்றத்தில் தொடுத்தார்கள் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் நீதிபதி உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள்
இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு...உமர் (ரலி) அவர்களை நோக்கி “உமர் (ரலி) அவர்களே!
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ நபிஅவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்....
“அல்லாஹ் நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம்பைத்துல் முகத்தஸ்ஸை கட்ட ஆணை பிறப்பித்தான்.முதற்கட்டமாக அதற்கான இடத்தைதெரிவு செய்யும் பணியை
மேற்கொண்டவர்கள் தாவூத் ( அலை)அவர்கள் தான் அங்கே இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்டஇடம் தேவைப்படுவதால்தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.ஆனால், அவரோ தரமுடியாது என்றுமறுத்து விட்டார். அதற்கு தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்... “மனதிற்குள் இப்படிசசொல்லிக்கொண்டார்களாம் “நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று.உடனடியாக, அல்லாஹ் தாவூத்(அலை) அவர்களிடம் வஹீ மூலம் “என்னைவணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பதுஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி ஆகிய
குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்கவேண்டும்” என்று அறிவித்தான்.பின்னர், அதற்கான இழப்பீடைக்கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல்முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள்
தாவூத் (அலை) அவர்கள்” ஆகவே, உமர் அவர்களே!சற்று நிதானித்து முடிவெடுங்கள்”என்றார்கள்.

இதைக் கேட்டதும், உமர்
(ரலி) அவர்கள்இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும்
வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம்.இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டுநான் ஒரு போது
ம் அபகரிக்க மாட்டேன்”என்றார்கள்.
அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்உமர் (ரலி) அவர்களிடம் “உமர் (ரலி) அவர்களே! ஒரு
மனிதனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையைஅவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக்
காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறுசெய்தேன். மேலும், உங்களை விட மஸ்ஜிதுன்நபவீயின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன்நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல்
இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம்தருகின்றேன்” என்றார்கள்.(நூல் : வஃபாவுல் வஃபா)

அல்லாஹ்வை மறந்து அடுத்தவர்கள்
பொருளை அனுமதியின்றி அபகரிப்பதும்....ஆட்சி அதிகார பலம் கொண்டு பலவந்தமாக மக்களின்
சொத்துக்களை சொந்தம் கொண்டாடுவதும்... வழமையும்
வாடிக்கையாயிருப்போர் கீழ் கண்ட நபி மொழியை கவனிக்கவும்....
அபூ ஸலமா (ரலி) அவர்கள்கூறியதாவது:
“எனக்கும் வேறு சிலருக்கும் இடையே நிலம் சம்பந்தமான
தகராறு இருந்தது.
அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது என்னிடம் ஆயிஷா
(ரலி) அவர்கள் அபூஸலமாவே! பிறரது நிலத்தை எடுத்துக் கொள்ளும் விஷயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.ஏனெனில், நபி ஸல் அவர்கள்" எவர் ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ மறுமையில் அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டி தொங்க விடப்படும் ” என்று கூறினார்கள். (நூல் : புகாரி )

தேர்தல் நெருங்கி விட்ட நிலையில்
வாக்களிக்க இருக்கும் நாம்
தேர்தலில் இலஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத நல்லவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்தலில் இலஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத நல்லவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا (85)سورة النساء
நாம் வாக்களிப்பின் மூலம் சிபாரிசு செய்கிறோம் நல்ல
சிபாரிசுக்கு நன்மையும், தீய
சிபாரிசுக்கு பாவமும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
மேலும் இந்த அமானிதத்தை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாளரை
தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனவே நல்லோர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
வாக்களித்து அவர்களை ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அவர்களின் மூலமாக இந்த நாட்டு
மக்களுக்கும் குறிப்பாக முஸ்லீம் சமூகத்திற்க்கும் நல்ல பல சேவை செய்யும்
பாக்கியத்தை வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.....
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.