வியாழன், 19 மே, 2016

எல்லாம் அவன் செயல்

بسم الله الرحمن الرحيم
  எல்லாம் அவன் செயல்
 *******************************
உலகமே ஒரு தேர்தல் களம் தான் . எனவே நல்ல வளமான வாழ்வு வழங்கியும் . கஷ்டம்  நெருக்கடி கொடுத்தும் சோதனை நடக்கும்.
மாணவர்கள் பரீட்சை எழுதி முடித்து விட்டார்கள் / ஆட்சியாளர்கள் தேர்தலை சந்தித்து முடித்து விட்டார்கள்  .ரிசல்ட்டும் வந்து விட்டது.
உலகில் என்ன நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இ்ல்லாமல் நடைபெருவதில்லை.யார் வென்றாலும். யார் தோற்றாலும் அதன் காரண கர்தா அவன் தான் இதனால் இவர் வென்றார் அவர் வென்றார் அதனால் இவர் தோற்றார் என மக்கள் பரவாலாக பேசினாலும் எல்லாம் அவன் செயல் என்பதே உண்மையாகும். அவன் நாடியவர்களை பதவியில் அமர்த்துகிறான்.
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
(
நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.
(
அல்குர்ஆன் : 3:26)
تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ‏ 
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
(
அல்குர்ஆன் : 67:1)
அடிமையாக விற்கபபட்ட யூசுப் ( அலை) அவர்களை அல்லாஹ் அரசராக்கினான்
*********************************

وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ‌ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ‌  نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ‌ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏ 
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
(
அல்குர்ஆன் : 12:56)
இறைவனுக்கு வழிப்பட்டு நடந்தால் நல்ல ஆட்சியாளர்களை தருவான் ஆட்சியாளர்களின் உள்ளங்களிள் நல்ல என்னங்களை உருவாக்குபவன் அவனே!
******************************

(ضعيف )عن أبي الدرداء قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقول: أنا الله لا إله إلا أنا مالك الملوك وملك الملوك، قلوب الملوك بيدي، وإن العباد إذا عصوني حولت قلوبهم عليهم بالسخط والنقمة فساموهم سوء العذاب، فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك، ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع أكفكم ملوككم. ( طبراني)
பூமி முழுவதும் ஆட்சிசெய்யும் வாய்ப்பை அல்லாஹ் நான்கு நபர்களுக்கு வழங்கினான் அவர்களில் இரண்டுபேர் முஸ்லீம் இரண்டு பேர் காபீர்.
1) சுலைமான் ( அலை) அவர்களுக்கு
***************************
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمانَ وَأَلْقَيْنا عَلى كُرْسِيِّهِ جَسَداً ثُمَّ أَنابَ (34) قالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكاً لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35) فَسَخَّرْنا لَهُ الرِّيحَ تَجْرِي بِأَمْرِهِ رُخاءً حَيْثُ أَصابَ (36) وَالشَّياطِينَ كُلَّ بَنَّاءٍ وَغَوَّاصٍ (37) وَآخَرِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفادِ (38)
2.  துல்கர்னைன் (ரஹ்)அலைஹிஸ்ஸலாம்
**********************************
وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا (83) إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا (84) فَأَتْبَعَ سَبَبًا (85)
இவர்தான் எஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து அட்டூலியம் புரியாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டியவர். அதுபற்றி சூரா கஹ்பில் இறைவன் கூறுகின்றான்.18:94.95
காபிரான இரண்டு பேர்கள்
*********************************
3.)
நம்ரூத் என்ற அரசன் இவன்தான் இப்ராஹீம் நபியை நெருப்புக் குன்றத்தில் தூக்கிப்போட்டவன். இவனுக்கு அல்லாஹ் 400 வருடங்கள் உலகையே ஆட்சி செய்யும் வாய்ப்பை கொடுத்தான்.இவன் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததால் அதற்கு தண்டனையாக இவனின் மூக்கந்தண்டு வழியாக தலையில் ஒரு கொசு நுழைந்து கொண்டு வேதனை கொடுக்கும்படி அல்லாஹ் செய்தான்.இவன் தனக்கு பிரியமானவர்களையெல்லாம் அழைத்து தடியால் தன் தலையில் அடிக்கும்படி கூறுவான் அவ்வாறு செய்தால்தான் அவனுக்கு சுகம். இவ்வாரே 400 வருடம் அல்லாஹ் அவனை வேதனை செய்தான் அதற்குப் பிறகு மரணித்தான்
(
தப்ஸீர் இப்னுகஸீர்)
படிப்பினை: ஆட்சியாளர்கள் மக்களுக்கு அநீதம் செய்வார்களேயானால் மறு உலகில் மட்டுமல்ல இவ்வுலகிலேயே அல்லாஹ் தண்டனை வழங்குவான்
4) புக்துன்நஸ்ர் என்ற அரசன்
*********************************
எந்த அநீதியான ஆட்சி என்றாலும் அதற்கெதிராக மக்கள் திரளா விட்டால் அல்லாஹ் அந்த ஆட்சியை மாற்ற மாட்டான்
**************************************************

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا    وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ‏ 
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
(
அல்குர்ஆன் : 5:20)
يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏ 
(
தவிர, அவர்) என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்என்றும் கூறினார்.
(
அல்குர்ஆன் : 5:21)
قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَ ‌  وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا‌  فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دَاخِلُوْنَ‏ 
அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்எனக் கூறினார்கள்.
(
அல்குர்ஆன் : 5:22)
قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَ‌ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ‌  ‌ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 
(
அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்என்று கூறினர்.
(
அல்குர்ஆன் : 5:23)
قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا‌ فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ‏ 
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக  நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்என்று கூறினார்கள்.
(
அல்குர்ஆன் : 5:24)
قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ‌ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْـقَوْمِ الْفٰسِقِيْنَ‏ 
என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!என்று மூஸா கூறினார்.
(
அல்குர்ஆன் : 5:25)
‌قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ‌ اَرْبَعِيْنَ سَنَةً‌‌   يَتِيْهُوْنَ فِى الْاَرْضِ‌  فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ 
(
அதற்கு அல்லாஹ்) அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்என்று கூறினான்.
(
அல்குர்ஆன் : 5:26)
ஆட்சியாளர்களிடம் பணிவு வேண்டும்
*************************************
எத்தனை ஆட்சி அதிகாரம் கிடைத்தாலும் இது இறைவன் கொடுத்தது அவனின் உதவியின்றி நாம் எதையும் செய்ய முடியாது என்ற பணிவு வரவேண்டும்
யூசுப் ( அலை) இறைவனிடம் கூறியது போல
رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌  فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌  تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
(
அல்குர்ஆன் : 12:101)
கிட்டிய வெற்றியால் நல்லதை செய்வோம் . அது கைகொடுக்கும் வெற்றியாக்கி தீர்ப்போம் 
***************************************
مسند أحمد22300 :عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " مَا مِنْ رَجُلٍ يَلِي أَمْرَ عَشَرَةٍ فَمَا فَوْقَ ذَلِكَ إِلَّا أَتَى اللهَ مَغْلُولًا، يَوْمَ الْقِيَامَةِ يَدُهُ إِلَى عُنُقِهِ فَكَّهُ بِرُّهُ أَوْ أَوْبَقَهُ إِثْمُهُ أَوَّلُهَا مَلَامَةٌ، وَأَوْسَطُهَا نَدَامَةٌ وَآخِرُهَا خِزْيٌ يَوْمَ الْقِيَامَةِ "
பத்தோ பத்தைவிட கூடுதலாக உள்ள ஒரு கூட்டத்திற்கு ஒருவன் தலைமை பொறுப்பேற்றுக் கொண்ட மனிதன் நாளை மறுமை நாளில் தன் கரங்கள் கழுத்தோடு சேர்த்து விலங்கிடப்பட்ட நிலையி்ல் வருவான். அப்போது அவனின் நல்லரங்கள் அவனை அதிலிருந்து விடுவிக்கும்.அல்லது அவனின் தீய செயல்கள் அவனை படுகுலியில் தள்ளிவிடும்.( ஆகவே ஆட்சியாளர்கள் நற்சேவைகளை அதிகம் செய்ய வேண்டும்)
நல்லதையே ஆதரவு வைப்போம் நல்லதே நடக்கும் 
***************************************
سنن أبي داود 2543   عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِالْأَمِيرِ خَيْرًا جَعَلَ لَهُ وَزِيرَ صِدْقٍ إِنْ نَسِيَ ذَكَّرَهُ وَإِنْ ذَكَرَ أَعَانَهُ وَإِذَا أَرَادَ اللَّهُ بِهِ غَيْرَ ذَلِكَ جَعَلَ لَهُ وَزِيرَ سُوءٍ إِنْ نَسِيَ لَمْ يُذَكِّرْهُ وَإِنْ ذَكَرَ لَمْ يُعِنْهُ
ஒரு தலைவருக்கு அல்லாஹ் நலவை நாடினால் அவருக்கு நல்ல நண்பர்களை( அதிகாரிகள். உதவியாளர்களை) ஏற்படுத்துகின்றான்.தலைவர் ஏதாவது மறந்து விட்டால் அதை அவருக்கு நினைவூட்டுபவராகவும் அவருடைய அலுவல்களுக்கு உதவியாளராகவும் இருப்பார்.
அல்லாஹ் ஒரு தலைவருக்கு தீமையை நாடினால் அவருக்கு தீய நண்பனை ஏற்படுத்துகின்றான் தலைவர் ஏதாவது மறந்து விட்டால் அதை நினைவூட்ட மாட்டான் மேலும் அவரின் அலுவல்களுக்கும் உதவி செய்யமாட்டான்
எனவே நம் நாட்டில் அமைந்திருக்க கூடிய தலைமைக்கு நல்ல அமைச்சர்களைக் கொண்டு உதவிபுறிய நாம் இறைவனிடம் துஆ செய்வோம்
எனவே தேர்தல் / பரீட்சை மூலம் கிட்டிய வெற்றியோ மகிழ்வோ /தோல்வியோ கண்டு துவண்டு போக வேண்டாம் உண்மையான வெற்றி மறுமையின் வெற்றியே!
******************** ***************
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ (19) إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ (20) فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ (21) فِي جَنَّةٍ عَالِيَةٍ (22) قُطُوفُهَا دَانِيَةٌ (23) كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ (24)
 சூரா அல் ஹாக்கஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.