بسم الله الرحمن
الرحيم
மேலிருக்கும் கை அதுவே மேலான கை
மேலிருக்கும் கை அதுவே மேலான கை
http://dawoodiaalimkalsangamam.blogspot.in/
قال الله تعالى : مَثَلُ
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ
أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ
يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (261)
عن حكيم بن حزام أَنَّ رَسُولَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَفْضَلُ الصَّدَقَةِ أَوْ خَيْرُ
الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى،
وَابْدَأْ بِمَنْ تَعُولُ»رواه مسلم : 1034
முன்னுரை**************
மனித சமுதாயத்தை இறைவன் படைத்து அவர்களில் சிலரை செல்வந்தர்களாகவும் சிலரை ஏழைகளாகவும் உலகில் வாழ வைத்துள்ளான்.எல்லோரையுமே செல்வந்தராக்கினாலும் அல்லாஹ் உடைய கஜானாவில் எதுவும் குறைந்து விடப்போவதில்லை.மாறாக உலகம் சீராக நடைபெறுவதற்கு சிலரை முதலாளிகளாகவும் சிலரை தொழிலாளிகளாகவும் அமைத்தால் தான் அது செம்மையாக இருக்கும் என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளான் .
وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ
بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَتُ رَبِّكَ
خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ (32) ZUKRUF
.” இவர்களில்
சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில்
சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய
இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும். (43:32)
அதே நேரத்தில் செல்வந்தர்களுக்கு பொருளினால் உண்டான ஜகாத் என்ற கட்டாய தர்மத்தையும் ஸதகா
என்ற நஃபிலான தர்மத்தையும் வரியோர்களுக்கு வழங்கும் படி
செய்து ஏழைகளின் வாழ்விலும் மகிழ்ச்சியை கொடுக்கின்றான் .ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பழமொழிக் கொப்ப ஏழைகளுக்கு உதவி செய்வதின் மூலம் இறைவனின் பொருத்தம் அவர்களுக்கு கிடைக்கிறது . எனவேதான் கண்மணி நாயகம் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்
عن حكيم بن حزام أَنَّ رَسُولَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَفْضَلُ الصَّدَقَةِ أَوْ خَيْرُ
الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ
السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ» مسلم : 1034
மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிட மேலானது . அதாவது கொடுக்கும் கை வாங்கும் கையை விட மேலானது என்றார்கள் .
எனவே புனித ரமலான் மாதத்தில் நாம் செய்கின்ற நற்காரியங்களுக்கு நன்மையும் அதிகம் கிடைக்கின்றது என்ற காரணத்தால் பெரும்பாலும் ஜகாத்துக்களும் ஸதகாக்களும் அதிகமாக இம்மாதத்தில் நிறைவேற்றப்படுகிறது . ஆகையால் அது சம்மந்தமான விளக்கங்களை இந்த வாரத்தில் நாம் தெரிந்து கொள்வோம்.
ஸதகாவின் பொருள் என்ன ?
الصدقة: هي العطية تبتغي بها المثوبة من الله تعالى அல்லாஹ்விடம் நற்கூலியை வேண்டி வழங்கப்படும் வெகுமதிக்கே தர்மம் எனப்படும்.
## @@@@@@@ ##
தர்மம் செய்வதற்கான
நற்கூலிகள்
وَأَنْفِقُوا مِنْ مَا
رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ
لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ
الصَّالِحِينَ (10) وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا
وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (11) سورة المنافقون
بخاري 7512 عَنْ عَدِيِّ بْنِ
حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا
مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ
تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ
عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ
بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا
النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "،
ஸஹீஹ் புகாரி 7512. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்”
(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான்.
அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்.
நீங்கள் உங்கள் வலப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய
செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப் பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள்
முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் முன்னால் பார்ப்பீர்கள்.
உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். எனவே, ஒரு
பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக்
கொள்ளுங்கள்.
என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ
الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ وَاللّٰهُ يَعِدُكُمْ
مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۙ
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று
அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச்
செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;
ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள்
செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று)
வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன். (அல்குர்ஆன் : 2:268)
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ
أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ
فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ
وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (261)
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச்
செலவிடு பவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு
கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்)
இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்.(2:261)
وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآَتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை அடையவும்,தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும்,யார்
தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது,உயரமான
(வளமுள்ள) பு+மியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை
பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே
அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக
இருக்கின்றான்.2:265
بخاري
1897 عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ
مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ
أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ
الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ
دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ
بَابِ الصَّدَقَةِ فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِأَبِي أَنْتَ
وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ
مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ
نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ .
ஸஹீஹ் புகாரி 1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
”ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால்
அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ”அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்)
நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)” என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின்
போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர்
புரிந்தவர்கள் ”ஜிஹாத்”
எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய்
இருந்தவர்கள் ”ரய்யான்”
எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம்
செய்தவர்கள் ”சதகா” எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!” என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ”இறைத்தூதர்
அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள்
அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும்
அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ”ஆம்!
நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள்.
## @@@@@@@ ##
ஸதகாவின் நிபந்தனைகள் & முறைகள்
بخاري 1421 عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ
بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ
عَلَى سَارِقٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ
فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ زَانِيَةٍ فَأَصْبَحُوا
يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ
الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ
فَوَضَعَهَا فِي يَدَيْ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى
غَنِيٍّ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ
وَعَلَى غَنِيٍّ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ
فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا
أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ
فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ
ஸஹீஹ் புகாரி 1421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன்
எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு
திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம்
வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே!
உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர்
தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார்.
மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப்
பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக
உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம்
நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார்.
காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே
அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும்
தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர்
அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத்
திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள்
விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட
தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து
தர்மம் செய்யக் கூடும்” எனக் கூறினார். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
## @@@@@@@ ##
2. ஹலாலான பொருளிலிருந்து தர்மம் வழங்க
வேண்டும்.
مسلم 2389 عن أبي هُرَيْرَةَ، يَقُولُ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَصَدَّقَ أَحَدٌ
بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ، وَلَا يَقْبَلُ اللهُ إِلَّا الطَّيِّبَ، إِلَّا
أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ، وَإِنْ كَانَتْ تَمْرَةً، فَتَرْبُو فِي كَفِّ
الرَّحْمَنِ حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنَ الْجَبَلِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ
فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ»
SAHEH MUSLIM : 1 842. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்
தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம்
செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான்.
அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி
அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் ”தமது குதிரைக் குட்டியை” அல்லது ”தமது ஒட்டகக் குட்டியை” வளர்ப்பதைப் போன்று.-இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
## @@@@@@@ ##
3. தமக்கு பிரியமானதை தர்மம் செய்யவேண்டும்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ
الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ
إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள்
சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி
வகைகள் போன்ற)வற்றிலிருந்தும்,
நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு
செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான
தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும்
உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க
மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம்
உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்
: 2:267)
بخاري 1461 عن أَنَسَ
بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ
الْأَنْصَارِ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ وَكَانَ أَحَبُّ أَمْوَالِهِ
إِلَيْهِ بَيْرُحَاءَ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ
فِيهَا طَيِّبٍ قَالَ أَنَسٌ فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ { لَنْ
تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } قَامَ أَبُو طَلْحَةَ
إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ
اللَّهِ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ{ لَنْ تَنَالُوا الْبِرَّ
حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ } وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ
بَيْرُحَاءَ وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ
اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ أَرَاكَ اللَّهُ قَالَ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَخٍ ذَلِكَ مَالٌ رَابِحٌ
ذَلِكَ مَالٌ رَابِحٌ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا
فِي الْأَقْرَبِينَ فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ
فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ
ஸஹீஹ் புகாரி 1461. அனஸ்
இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக
இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில்
பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது
மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள்
சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ”நீங்கள்
நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே
மாட்டீர்கள்” என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம்
அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி),
நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”இறைத்தூதர்
அவர்களே! அல்லாஹு தஆலா, ”நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை
நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான்
மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக
தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய
மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே ”இறைத்தூதர்
அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக்
கூறினார். நபி(ஸல்) அவர்கள் ”ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே!
இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று
விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான்
பொறுத்தமாகக் கருதுகிறேன்” எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) ”இறைத்தூதர்
அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம்
நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும்
பங்கிட்டுவிட்டார்.
## @@@@@@@ ##
4 . தர்மம் வழங்கும் போது முதலில் குடும்ப உறவுகளுக்கு கொடுக்க வேண்டும்..5 . (தேவைக்கு பின்பு) மிஞ்சிய பொருளிலிருந்தே தர்மம் செய்ய வேண்டும்.
وَيَسْأَلُونَكَ مَاذَا
يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ
لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (02:219)
” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று
அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச்
செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ்
(தன்) வசனங்களை(யும் , அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.(அல்குர்ஆன்
: 2:219)
عن حكيم بن حزام أَنَّ رَسُولَ
اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَفْضَلُ الصَّدَقَةِ أَوْ خَيْرُ
الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ
السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ» مسلم : 1034
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே ”தர்மத்தில் சிறந்தது” ஆகும் . மேல்
கை கீழ் கையைவிடச் சிறந்ததாகும் . உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது
தர்மத்தைத்) தொடங்குங்கள். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்
6. தர்மத்தை சொல்லிக் காட்டுவது கூடாது.அதனால் நன்மை இழப்பும் இறை கோபமும் ஏற்படும் .
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِمَّا كَسَبُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ - 02:264
عَنْ أَبِي
ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ
إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا قَالَ أَبُو
ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْمُسْبِلُ
وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ
- م :154
அபூதர்(ரழி)அவர;கள் கூறினார;கள்.
நபி(ஸல்)அவர;கள் கூறினார;கள். மூவர;அவர;களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான்.அவர;களை
பார;க்கவும் மாட்டான். அவர;களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். மேலும் அவர;களுக்கு
துண்புறுத்தும் வேதனையு முண்டு என்று நபி(ஸல்)அவர;கள் மூன்று முறை கூறினார;கள்.அபூதர;(ரழி)அவர;கள்
அவர;கள் மோசம் போய்விட்டார;கள். நஷ்டமடைந்து விட்டார;கள்.அல்லாஹ்வின்
தூதரே அவர;கள் யார;? என்று கேட்டார;கள். நபி(ஸல்)அவர;கள்
கீழாடையை கரண்டைக்கு கீழ் தொங்க விடுபவன்.செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன்.பொய்
சத்தியத்தின் மூலம் தம் சரக்குகளை விற்பவன் என்று கூறினார;கள்.
முஸ்லிம்: 154.
## @@@@@@@ ##
ஜகாத் : கட்டாயமான(ஏழை வரி–)தர்மத்துக்கு தான் ஜகாத் எனப்படும் . "ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சி அடைதல்", தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்களும் உண்டு.
بخاري1397 عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ
الْجَنَّةَ قَالَ تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ
الصَّلَاةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومُ
رَمَضَانَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا أَزِيدُ عَلَى هَذَا فَلَمَّا
وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَرَّهُ أَنْ
يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا
ஸஹீஹ் புகாரி 1397. அபூ
ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”நான்
சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்” என்றார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு
எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற
வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்” என்றார்கள்.
அதற்கவர், ”என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட
அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்”
என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்)
அவர்கள், ”சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப்
பார்க்கட்டும்” என்றார்கள்.
## @@@@@@@ ##
ஜகாத்தின் நோக்கங்கள் !
மனிதனைக்
கஞ்சத்தனத்திலிருந்து தூரமாக்குவது,தூய்மைப்படுத்துவது நரக வேதனை யிலிருந்து
காப்பதும் முஸ்லிமுக்கு தர்ம சிந்தனையை ஏற்படுத்துவது செல்வந்தனுக்கும்
ஏழைக்குமிடையே நேசத்தை நிரந்தரமாக்குவது. ஏனெனில் மனித உள்ளங்கள் தமக்கு உபகாரம்
செய்பவர்களை நேசிப்பதன் மீதே படைக்கப்பட்டுள்ளன.
ஏழை முஸ்லிமின் தேவை நிறைவு செய்யப்பட்டு போதுமான ஒரு நிலையை உருவாக்குவது
மனிதனை பாவங்களை விட்டும் தூய்மைப்படுத்துவது. பாவங்களை அழித்து,பதவிளை உயர்த்துவதற்கும் ஜகாத் காரணமாக அமைகிறது
ஏழை முஸ்லிமின் தேவை நிறைவு செய்யப்பட்டு போதுமான ஒரு நிலையை உருவாக்குவது
மனிதனை பாவங்களை விட்டும் தூய்மைப்படுத்துவது. பாவங்களை அழித்து,பதவிளை உயர்த்துவதற்கும் ஜகாத் காரணமாக அமைகிறது
ஜகாத் கொடுக்காமல்
இருந்தால்
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ
وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ
أَلِيمٍ (34) يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا
جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ
فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ (35)
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த
நாளில் (அவர்கள் ஜகாத் கொடுக்காமல் சேமித்து வைத்த தங்கம்/வெள்ளி செல்வத்தை) நரக
நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும்
சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து
வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று
கூறப்படும்). (அல்குர்ஆன் : 9:35)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ
يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ
لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ
بِلِهْزِمَتَيْهِ يَعْنِي بِشِدْقَيْهِ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا
كَنْزُكَ ثُمَّ تَلَا{ لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ }
புகாரி 1403 :இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய புதையல்'' என்று கூறும்.''
நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ்
தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம்
செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத்
தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம்
மறுமையில் அவர்கள் கழுத்தில் அhpகண்டமாக போடப்படும்.'' என்ற
(திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள் என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்
## @@@@@@@ ##
ஜகாத்திற்கான நிஸாப்!
தங்கம், வௌளி, வியாபாரச் சரக்குகள்,கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், (சேமித்து
வைக்கக் தகுதி உள்ள)பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.ஆனாலும் இரண்டு நிபந்தனை இருந்தால் மட்டுமே கடமையாகும். A .குறிப்பிட்ட நிஸாப்-உச்ச வரம்பை அடைய வேண்டும் . B .ஒரு வருடம் பூர்த்தி யாகி இருக்க வேண்டும் .
குறிப்பு : விளையும் தானியங்களில் & பழங்களில் மட்டும் ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை
بخاري 1484 عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ فِيمَا أَقَلُّ
مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسَةٍ مِنَ الإِبِلِ
الذَّوْدِ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسِ أَوَاقٍ مِنَ الوَرِقِ
صَدَقَةٌ»
புகாரி1484: "ஐந்து வஸக்கு(சுமார் 650
கிலோ)களை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஜகாத் இல்லை . ஐந்து
ஒட்டகங்களை விடக் குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை . ஐந்து ஊக்கியா (சுமார் 612,1/2 கிராம்)களை விடக்குறைவாக உள்ள வெள்ளியில்
ஜகாத் இல்லை.." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1459)
## @@@@@@@ ##
# தங்கத்துக்கு நிஸாப் என்பத்தி ஏழரை 87,1/2 கிராம் .# வெள்ளிக்கு நிஸாப் ஆறு நூற்றி பன்னிரண்டு அரை 612,1/2 கிராம் .
# பணத்துக்கு & சொத்துக்கு நிஸாப் அது வெள்ளியின் நிஸாப் தான்.
ஏன்எனில் தங்கம் வெள்ளி இரண்டு நிஸாபில் எது குறைந்ததோ அதையே பணத்துக்கு & சொத்துக்கு நிஸாபாக கருதப்படும் .
# தங்கம்/ வௌளி/ பணம்/சொத்து/வியாபார சரக்கு போன்றவற்றில் நாற்பதில் ஒரு பாகம் ஜகாத் கொடுக்க வேண்டும் .
எனவே A . 87,1/2 கிராம் தங்கம் இருந்தால் 2கிராமும் 187மில்லி ஜகாத் .
B . 100கிராம் (87,1/2 + 12,1/2=100) தங்கம் இருந்தால் இரண்டு அரை கிராம் ஜகாத் கொடுக்க வேண்டும் .
அவ்வாறே ஒருவனிடம் A . 27500 rs மதிப்பில் பணமோ சொத்தோ இருந்தால் 688rs ஜகாத் கொடுக்க வேண்டும் .
B .ஒரு லட்சம் இருந்தால் 2500 rs ஜகாத் கொடுக்க வேண்டும்
ஒரு கிராம் தங்கம் (14/06/2016 ல்) 2861 RS x 87,1/2 = 250337.00 rs
ஒரு கிராம் வெள்ளி (14/06/2016 ல்) 45 RS x 612,1/2 = 27562.00 rs
## @@@@@@@ ##
வியாபாரச் சரக்குகளுக்குரிய
ஜகாத்.வியாபார ஜகாத்திற்குரிய நிபந்தனை : A . நிஸாப் -உச்ச வரம்பை எட்டியிருக்க வேண்டும்(அது வெள்ளிYIN நிஸாப் ஆகும்) . B .ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும் .
வியாபாரத்தை எந்த நாள் ஆரம்பித்தானோ அந்த நாளிலிருந்து வருடம் ஆரம்பமாகி விடுகின்றது.
வியாபாhpகள் ஒவ்வொரு வருடமும் தங்களது இருப்பை விலை மதிப்பீடு செய்வது கடமை . வியாபார சரக்கு அவற்றின் மொத்தக் கிரயத்தில் இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும் . ஒருவனின் வியாபாரப் பொருளின் கிரயமாக ஒரு லட்சம் ரூபாய் இருக்குமானால் அதில் 2500 ரூபாய் ஜகாத் கொடுப்பது கடமையாகும்.
## @@@@@@@ ##
ஷேர் மார்கட் பங்குகளுக்கு ஜகாத் :
இக்காலத்தில் மக்கள் அசையாச் சொத்துக்களிலும் மற்றவற்றிலும் பங்குகள் போடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இன்னும் இவர்களில் சிலர் அப்பங்கு களில் ஒரு தொகையை சில சமயங்களில் பல ஆண்டுகளாக முடக்கி வைப்பவர்களும் இருக்கின்றனர். அத் தொகை கூடவும் செய்யும. இவை வியாபாரப் பொருள்களாகக் கணிக்கப்படுவதால் இப்பங்குகளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். எனவே ஒரு முஸ்லிம் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டு அவற்றிற்குhpய ஜகாத்தை கொடுக்க வேண்டும். அல்லது அவற்றை விற்று அவற்றின் கிரயத்தைப் பெற்றுக் கொள்ளும் போது அந்த வருடங்கள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.
இக்காலத்தில் மக்கள் அசையாச் சொத்துக்களிலும் மற்றவற்றிலும் பங்குகள் போடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இன்னும் இவர்களில் சிலர் அப்பங்கு களில் ஒரு தொகையை சில சமயங்களில் பல ஆண்டுகளாக முடக்கி வைப்பவர்களும் இருக்கின்றனர். அத் தொகை கூடவும் செய்யும. இவை வியாபாரப் பொருள்களாகக் கணிக்கப்படுவதால் இப்பங்குகளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். எனவே ஒரு முஸ்லிம் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டு அவற்றிற்குhpய ஜகாத்தை கொடுக்க வேண்டும். அல்லது அவற்றை விற்று அவற்றின் கிரயத்தைப் பெற்றுக் கொள்ளும் போது அந்த வருடங்கள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.
## @@@@@@@ ##
விளைபொருளுக்குரிய ஜகாத்மணிக்கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும் . (சில பல மாதங்கள்) சேமித்து வைக்கக் தகுதி உள்ள , நிறுக்கப்படக் கூடிய பேரீச்சப் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் ஜகாத் கடமையாகும் .
எனினும்
காய்கறிகளிலும் சேமித்து வைக்க தகுதி அற்ற (ஆப்பிள்/ஆரஞ்/வாழை போன்ற)பழங்களிலும்
ஜகாத் கடமையில்லை.
A . விளைபொருள்கள் நிஸாப் எனும் உச்சவரம்பை அடைந்து விட்டால்
ஜகாத் கட்டாயமாகும்.
B .ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பது இவற்றில்
நிபந்தனையில்லை.
كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا
أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ
الْمُسْرِفِينَ
ஆகவே அவை காய்க்கும் போது அவற்றின் பலன்(-பழங்)களை புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில்
அதற்குரிய பாகத்தை(-ஜகாத்தை)க் கொடுத்து விடுங்கள்.
வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன்
: 6:141)
விளைபொருள்களின்
ஜகாத் அளவு 650 கிலோவாகும். கோதுமைக்குரிய நிஸாப் (உச்ச வரம்பு அளவு) 552கிலோவாகும்.
இவை
மழை நீர், ஆற்று நீர் போன்ற தண்ணீரால் செலவின்றி நீர்ப்பாசம்
செய்யப்பட்டு விளைந்திருக்குமானால் பத்து சதவீதம் ஜகாத் கடமையாகும்.
நீர்ப்பாசன
செலவு செய்யப்பட்டிருந்தால் ஐந்து சதவீதம் ஜகாத் கடமையாகும்.
உதாரணமாக
ஒருவன் கோதுமையை செலவின்றி நீர்ப்பாசனம் செய்து அதில் அவனுக்கு 800 கிலோ கிடைத்திருக்குமானால் அதில் பத்து சதவீதம் (அதாவது 80கிலோ)கடமையாகும். செலவுடன் பாசனம் செய்திருந்தால் இருபது
சதவீதம் (அதாவது 40கிலோ)கடமையாகும்.
## @@@@@@@ ##
கால்நடைகளுக்கு ஜகாத் :கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வௌளாடு,செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும்.
1 . குறிப்பிட்ட நிஸாப்-உச்ச வரம்பை அடைய வேண்டும் . 2 .ஒரு வருடம் பூர்த்தி யாகி இருக்க வேண்டும் . 3. செலவின்றி தீனி கொடுக்கப்பட வேண்டும் . 4. (சுமை தூக்குதல் ஏறு உழுதல் போன்ற)உபயோகத்திற்காக இருக்க கூடாது .
ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு,வெள்ளாடு இவற்றின் நிஸாப் நாற்பது. மாட்டின் நிஸாப் முப்பது. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.
ஆடுகள் : ஒருவனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அவன் ஒரு ஆடு கொடுப்பது கடமையாகும். 121முதல் 200 வரை இரு ஆடுகளும்,
மாடுகள் : ஒருவனிடம் 30 க்கும் மேல் 39 வரை மாடுகள் இருந்தால் ஒரு வயது பூர்த்தியான ஒரு மாடு , 40க்கும் மேல் 59 வரை இரு வயது பூர்த்தியான ஒரு மாடு ,
## @@@@@@@ ##
(ஆடு
, மாடு
, ஒட்டகம் தவிர உள்ள)மீன் பன்னை/கோழி/ முயல்/ போன்ற கால்நடைகள் செலவுடன் தீனி
கொடுக்கப்டாலும் ஜகாத் கடமை.அவை வியாபாரத்திற்கு உரியவையாக இருக்குமானால் அவற்றின் விலை மதிப்பீடு (வெள்ளியின்)நிஸாபு அடைந்து விட்டால ஜகாத் கடமையாகி விடும் ! எனவே விலை மதிப்பீடு கணக்கிட்டு நாற்பதில் ஒன்றை (இரண்டரை சத வீதம்) ஜகாத் கொடுக்க வேண்டும் .
## @@@@@@@ ##
ஜகாத்தைப் பெறுவதற்கு
தகுதியானவரகள் எட்டு பேர்.அதில் முக்கிய நிபந்தனை முஸ்லிமாக இருக்க
வேண்டும்
إِنَّمَا الصَّدَقَاتُ
لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ
قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ
السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (60)
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை
வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள்
ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின்
பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர் களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ்
விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன் 9:60
1) ஃபகீர்
(பரம ஏழை) :வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கும் குறைவாக வசதி
பெற்றிருப்பவர்2) மிஸ்கீன் (ஏழை) : வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கு மேல் வசதி பெற்றிருப்பவர். எனினும் அவர் போதுமான முழுமையான அளவைப் பெற்றுக் கொள்வதில்லை. இவர்களுக்கு பல மாதங்களுக்கான அல்லது ஒரு வருடத்தில் போதுமான அளவிற்குரிய பணம் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்.
3) ஜகாத் தொகையை வசூலிப்பவர்கள் :
ஜகாத் தொகையை செல்வந்தர்களிடமிருந்து சேகரிப்பதற்காக ஆட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள். அவர்கள் செல்வந்தர்களாயிருந்தால் அவர்களது அந்தஸ்த்திற்கேற்ப அவர்களது வேலைக்குhpய கூலியைக் கொடுக்க வேண்டும்.
4) உள்ளம் ஈர்க்கப்பட்டவர்கள் : தம் மக்களிடத்தில் மாpயாதைக்குhpய தலைவர்களில் எவர்கள் இஸ்லாத்திற்கு வருவார்கள் என்றோ முஸ்லிம்களுக்குத் தொல்லை தராமலிருப்பார்கள் என்றோ எதிர்பார்க்கப்படுகிறதோ அத்தகையவர்கள். இவ்வாறே இஸ்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கும் அவர்களது உள்ளங்கள் இஸ்லாத்தின்பால் கூடுதல் பிடிப்பு ஏற்படுவதற்காகவும், அவர்களின் உள்ளங்களில் ஈமான் உறுதியாவதற்காகவும் அவர்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
5) அடிமை மீட்பு : அடிமைகளை உரிமைவிடுவதற்காகவும் சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காகவும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்.
6) கடன்பட்டவர்கள் : இவர்களுடைய கடன்; அடைப்பதற்காக ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டும்.
ஆயினும் முஸ்லிம்களாயிருப்பதும், கடனை அடைப்பதற்கு வசதியுள்ள செல்வந்தர்களாக இல்லாமலிருப்பதும், அவர்களது கடன் பாவத்திற்குhpயதாக இல்லாமலிருப்பதும் தற்காலிக கடனாக இருப்பதும் விதிமுறையாகும்.
7) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவர்களுக்கு
ஊதியத்தை எதிர்பார்க்காமல் வணக்கமாகக் கருதி போர்புரிபவர்கள். அவர்களின் செலவிற்காக அல்லது ஆயுதங்கள் வாங்குவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும். மார்க்கக் கல்வியைத் தேடுவதும் ஜிஹாதைச் சேர்ந்தது தான். மார்க்கக் கல்வியில் ஈடுபவடுவதை நாடும் ஒரு மனிதன் தன்னிடம் பொருளாதார வசதியில்லாமலிருக்குமானால் அவன் மார்க்கக் கல்வியைத் தேடுவதில் ஈடுபடுமளவிற்கு போதுமான தொகையை மட்டும் ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது கூடும்.
8) வழிப்போக்கன் : ஊருக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்று விட்ட ஒரு பயணி. அவனது ஊரில் அவன் செல்வந்தனாக இருந்தாலும் அவன் ஊர் போய்ச் சேருமளவிற்கு ஜகாத் தொகையிலிருந்து கொடுக்க வேண்டும்.
ஜகாதின் நிதி பள்ளிவாசல் கட்டுவதற்கும் சாலைகளை சீர்படுத்துவதற்கும் செலவிடுவது கூடாது
அல்லாஹ் நம்மை என்றும் மேலேயுள்ள கை உடைய வராக ஆக்கி இரு உலகிலும் வெற்றி ஆக்குவனாக ஆமீன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.