بسم الله الرحمن الرحيم
http://dawoodiaalimkalsangamam.blogspot.in/
மறை
வந்த இறை மாதம்
ரமளான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ
وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ ….(1852:)
مسند أحمد ط
الرسالة 6626 - عَنْ عَبْدِ اللهِ بْنِ
عَمْرٍو: أَنَّ
رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ
وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ:
أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ
النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ: " فَيُشَفَّعَانِ " وراه الحاكم وصححه
1 .@@@@@@@@@
அல்குர்ஆன் சிறந்தது என்பதனால் அத்துடன்
பட்டது தொட்டது யாவும் சிறப்பு பெற்று விட்டது .
ரமளானுக்கு கிடைத்த சிறப்புகள் யாவும்
திருமறையினாலே கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே தான் இறைவன் ரமளான் மாதம் குறித்து
அருள் மறை குர்ஆனில் அறிமுகப்படுத்துகிற போதே "ரமளான்
மாதம்" இவ்வுலக மக்களுக்கு
நேர்வழிகாட்டக்கூடிய,நன்மை
தீமையை பிரித்தரிவிக்கும் படியான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என
குறிப்பிடுகிறான்.
இந்த வேதத்தை இறைவனிடமிருந்து வாங்கி வந்த
ஜிப்ரயீல் அலை அவர்கள் வானவர்களின் தலைவர்.
இந்த வேதம் அருளப்பட்ட சமுதாயம் இவ்வுலகில்
சிறந்த சமுதாயம்.
இந்த வேதம் எந்த நபிக்கு வழங்கப்பட்டதோ அவர்
நபிமார்களுக்கெல்லாம் தலைவர்.
இந்த வேதம் எந்த இரவில் அருளப்பட்டதோ அது
மகத்துவம் நிறைந்த " லைலத்துல் கத்ர் " இரவு.
இந்த வேதத்தை மனனம் செய்து பாதுகாத்து அதன்
வழி நடந்தோர் நடப்போர் மனித இனத்தில் சிறந்தவர்கள்.
என குர்ஆனோடு தொடர்புள்ள யாவுமே சிறப்பு
பெற்றுள்ளது .
2 .@@@@@@@@@
மேலும் குர்ஆன் மட்டுமே அதன் வசனங்களும்,கருத்துக்களும் , பாதுகாக்கப்பட்டுள்ளது
என இறைவனால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ
وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9) سورة الحجر
யாரும் அதில் மாற்றம் செய்ய முடியாதவாறு
இறைவன் ஹாபிள்களின் உள்ளத்தில்
அதை பாதுகாக்கிறான்.
بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ
الَّذِينَ أُوتُوا الْعِلْمَ (49 سورة العنكبوت)
அகிலத்து மக்கள் “அனைவருக்கும்“ நேர்வழிகாட்ட
அருளப்பட்ட ஒரே வேதம் அருள்மறை குர்ஆன் மட்டுமே. மற்ற வேதங்கள் ஒரு குறிப்பிட்ட
சமூகத்திற்க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அருளப்படக்கூடியதாக இருந்தது. இது குர்ஆனின்
தனிச்சிறப்பு.
الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ (1852:)
3 . @@@@@@@@@
குர்ஆனின் சிறப்புகளை நாம் அடுக்கிக் கொண்டே
போகலாம்
A . வணக்கங்களில் சிறந்தது குர்ஆன் ஓதுவது என்று நபி
ஸல் அவர்கள் கூறினார்கள்.
أفضل العبادة
قراءة القرآن .رواه ابن قانع في " معجم الصحابة " قال الالباني في سلسلة الضعيفة 2516 هذا حديث ضعيف
B . எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறை படிக்கலாம்
இரு முறை படிக்கலாம். அதற்கு மேல் சலிப்பு ஏற்பட்டு விடும்.
ஆனால் எத்தனை முறை ஓதினாலும் கேட்டாலும்
சலிக்காதது திருமறை குர்ஆன் மட்டுமே! நாம் ஒரு நாளில்
தொழுகையில் மட்டும் எத்தனை முறை ஓதுகிறோம்? கேட்கிறோம் ? எப்போதாவது
சலிப்பு ஏற்படுகிறதா? ஏற்படாது
ஏனென்றால் இது இறைவனின் வார்த்தை.....எனவே
தான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وَلَا يَخْلَقُ عَلَى كَثْرَةِ الرَّدِّ
وَلَا تَنْقَضِي عَجَائِبُهُ هُوَ الَّذِي لَمْ تَنْتَهِ الْجِنُّ إِذْ سَمِعَتْهُ
அதிகமாக ஓதுவதால் குர்ஆனில்
சலிப்பு ஏற்படாது . (நூல் 2831திர்மிதீ)
C. எந்த ஒரு மொழியையும் அந்நியர்கள் அதில் ஒரு
புத்தகத்தை மனனமிடுவதோ, அல்லது எழுதுவதோ அசாதாரணமானது.
ஆனால் திருமறையின் விஷயத்தில் மட்டும் இது
மாறுபடுகிறது ஏனெனில்
அகிலத்து மக்களின் நேர்வழிக்காக அருளப்பட்ட வேதம் அனைவரும் படித்துப் பயன் பெறும்
வகையில் இலகுவாக இருக்க வேண்டும் எனவே தான்.
இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (22) AL QAMAR
இந்த குர்ஆனை படிக்கவும்-ஓதவும், மனனமிடவும், அதன்
கருத்துக்களை படித்து விளங்குவதற்கும், நாம் இலகுவாக்கி
வைத்திருக்கிறோம் உங்களில் ஓதுபவர் யாராவது உண்டா?
D . உலகில்
பேரதிசயமாக குர்ஆனை அரபிகள் மனனம் செய்திருப்பதை விட அதிக எண்ணிக்கையில் அரபு மொழி
பேசாத பல இலட்சக்கணக்கான நபர்கள் மனனமிட்டுள்ளார்கள் . அதே
போல குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களில்
அரபியல்லாதவர்கள் அதிகம் இருப்பதும் இதற்கு சான்றாகும்.
4 . @@@@@@@@@
குர்ஆனின்
சவால். * .
பொதுவாகவே அற்புதங்கள் நபிமார்களுக்கு
வழங்கப்படுகிற போது அக்கால மக்கள் எந்தத்துறையில் மேம்பட்டு இருக்கிறார்களோ அதை
மிகைக்கும் படியாக வழங்கப்படும்.
நபி ஸல் அவர்களின் கூட்டத்தார்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்த போதிலும் கவி இயற்றுவதிலும் , இலக்கண இலக்கிய நயமாக பேசுவதிலும் திறன் படைத்தவர்களாக இருந்தார்கள்.
நபி ஸல் அவர்களின் கூட்டத்தார்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்த போதிலும் கவி இயற்றுவதிலும் , இலக்கண இலக்கிய நயமாக பேசுவதிலும் திறன் படைத்தவர்களாக இருந்தார்கள்.
குர்ஆன் அவர்களுக்கு சவால் விடுகிறது
உங்களால் முடிந்தால் குர்ஆனில் உள்ளதைப் போல பத்து சூராக்களை கொண்டு வாருங்கள்
பார்க்கலாம்...பின்பு ஒரு சூராவை கொண்டு வாருங்கள் பார்க்கலாம்...பின்பு இந்த
சவாலை குர்ஆனே முடித்து வைக்கிறது...
நபியே! நீங்கள் கூறுவீராக...மனித வர்க்கமும், ஜின் வர்க்கமும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு இந்த குர்ஆனைப் போல ஒன்றை (ஒரு ஆயத்தை) கொண்டு வர முயற்சித்தாலும் ஒரு போதும் கொண்டு வர இயலாது.....
நபியே! நீங்கள் கூறுவீராக...மனித வர்க்கமும், ஜின் வர்க்கமும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு இந்த குர்ஆனைப் போல ஒன்றை (ஒரு ஆயத்தை) கொண்டு வர முயற்சித்தாலும் ஒரு போதும் கொண்டு வர இயலாது.....
இமாம் ஜலாலுத்தீன் சுயூதி ரஹ் அவர்கள்
தங்களதுالخصائص الكبري என்ற நூலில் பெருமானாரின்
பேரற்புதங்களின் வரிசையில் அருள்மறைக் குர்ஆனுக்கு முதலிடம் தந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் மட்டுமல்ல உலக அழிவு நாள் வரை நிலைத்து
நிற்கும் அற்புதமாக குர்ஆன் உள்ளது.
5 . @@@@@@@@@
குர்ஆனுடைய அறைகூவல் முழக்கம்.
திராணி இருந்தால் தில்லு இருந்தால் இது போல் வேற
ஒரு குர்ஆன் கொண்டு வாங்க .
قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى
أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ
لِبَعْضٍ ظَهِيرًا (88) பனி
இஸ்ரயீல்
“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும்
ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது”
என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன்:17:88)
திரானி
இல்லையா ? ஒரு பத்து சூரா.........
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ
قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ
مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (13) ஹூத்
அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்”
என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து
அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து
உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்”
என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் : 11:13)
திரானி
இல்லையா ? ஒரே ஒரு சூரா.........
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ
مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ
مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (23) அல்பகரா
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில்
நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர
உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும்
கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் : 2:23)
திரானி
இல்லையா ? ஒரே ஒரு ஆயத்தை .........
فَلْيَأْتُوا بِحَدِيثٍ
مِثْلِهِ إِنْ كَانُوا صَادِقِينَ (34)அத்தூர்
ஆகவே, (இவ்வாறெல்லாம்
கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப்
போன்ற ஒரு (ஆயத்தை-)செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். (52:34)
எந்த
கொம்பன் வந்தாலும் கொண்டு வர முடியவே முடியாது .
فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ
تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ
لِلْكَافِرِينَ (24)
(அப்படி)
நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும்
எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே
அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்
: 2:24)
குர்ஆனுடைய இந்த சவால் இன்று வரை முறியடிக்க
முடியாத சவாலாகவே தொடர்வது பேரற்புதம்.
6 . @@@@@@@@@
குர்ஆனுடைய சில அத்தியாயங்கள், வசனங்களின் தனி சிறப்புகள்.
. 15015
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ
القُرْآنِ فِي لَيْلَةٍ؟» فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ
يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «اللَّهُ الوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ القُرْآنِ»
1 . ஸஹீஹ் புகாரி: 5015. அபூ
ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ”ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில்
ஒருவரால் ஓத முடியாதா?” என்று
கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ”எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்” (என்று தொடங்கும் SURATUL
IKLAS112 வது)
குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்” என்று
கூறினார்கள்.
4008 .2 عَنْ أَبِي مَسْعُودٍ
البَدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: «الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ، مَنْ قَرَأَهُمَا
فِي لَيْلَةٍ كَفَتَاهُ»،
2 . ஸஹீஹ் புகாரி :4008. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
”அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு
(மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.
இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி)
அறிவித்தார்.
. 3 جامع الاحاديث : 25875- يا جابر ألا أخبرك بخير
سورة نزلت فى القرآن فاتحة الكتاب فيها شفاء من كل داء أخرجه البيهقى فى
شعب الإيمان عن جابر (2/449 ، رقم 2367) .
3
. சூரா ;.பாத்திஹா;வில்
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது. [ நூல்
தாரமீ + பைஹகீ
.4 المعجم الكبير للطبراني : 145 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَنْ قَرَأَ يس
فِي يَوْمٍ أَوْ لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ"،
4 . அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி யார் பகலிலோ
இரவிலோ சூரா யாஸீனை ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறியுள்ளார்கள். [ நூல்
தப்ரானி.+ திர்மிதீ]
. 5عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من قرأ سورة
الواقعة في كل ليله لم تصبه فاقة أبدا
قلت رواه البيهقي
في شعب الإيمان في الباب التاسع عشر من حديث الحجاج بن منهال ثنا السدي بن يحيى
الشبياني أبو الهيثم عن شجاع عن أبي فاطمة أن عثمان بن عفان عاد ابن مسعود في مرضه
فقال ما تشتكي قال ذنوبي قال فما تشتهي قال وجه ربي قال ألا ندعو لك طبيبا قال
الطبيب أمرضني قال ألا آمر لك بعطائك قال منحتنيه قبل اليوم فلا حاجة لي فيه قال
تدعه لأهلك وعيالك قال إني علمتهم شيئا إذا قالوه لم يفتقروا سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول من قرأ الواقعة كل ليلة لم يفتقر انتهى
5 . சூரா
வாகிஆ: யார் ஒவ்வொரு நாளும் இரவில் சூரா
வாகிஆவை ஓதி வருவார்களோ அவர்களுக்கு வறுமை ஏற்படாது
என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் மரணத்தருவாயில் அவர்களை நோய் விசாரிப்பதற்காக கலீ:.பா உஸ்மான் ரலி அவர்கள் வந்து உங்களுக்கு ஏதாவது மருத்து உதவி தேவைப்படுகிறதா என கேட்க எனக்கு அல்லாஹ் தான் மருத்துவம் செய்ய வேண்டும் என்றார்கள். உங்களுக்கு பின்னால் உங்களுடைய பெண் மக்களுக்கு பைத்துல் மாலிலிருந்து ஏதாவது உதவி செய்யட்டுமா? எனக் கேட்க அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள். கலீ :. பா உஸ்மான் ரலி அவர்களே! எனது பெண்மக்களுக்கு நான் சூரா வாகிஆவை கற்றுக் கொடுத்துள்ளேன்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
"யார் ஒவ்வொரு இரவிலும் சூரா வாகிஆவை ஓதி வருவார்களோ அவர்களுக்கு வறுமை ஏற்படாது என்று. எனவே எனக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று மறுத்து விட்டார்கள்.[நூல் பைஹகீ]
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் மரணத்தருவாயில் அவர்களை நோய் விசாரிப்பதற்காக கலீ:.பா உஸ்மான் ரலி அவர்கள் வந்து உங்களுக்கு ஏதாவது மருத்து உதவி தேவைப்படுகிறதா என கேட்க எனக்கு அல்லாஹ் தான் மருத்துவம் செய்ய வேண்டும் என்றார்கள். உங்களுக்கு பின்னால் உங்களுடைய பெண் மக்களுக்கு பைத்துல் மாலிலிருந்து ஏதாவது உதவி செய்யட்டுமா? எனக் கேட்க அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறினார்கள். கலீ :. பா உஸ்மான் ரலி அவர்களே! எனது பெண்மக்களுக்கு நான் சூரா வாகிஆவை கற்றுக் கொடுத்துள்ளேன்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
"யார் ஒவ்வொரு இரவிலும் சூரா வாகிஆவை ஓதி வருவார்களோ அவர்களுக்கு வறுமை ஏற்படாது என்று. எனவே எனக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று மறுத்து விட்டார்கள்.[நூல் பைஹகீ]
. 6المستدرك للحاكم 3349 - عن أبي سعيد الخدري رضي الله
عنه ، أن النبي صلى الله عليه وسلم قال : « إن من قرأ سورة الكهف يوم الجمعة أضاء
له من النور ما بين الجمعتين » « هذا حديث صحيح الإسناد ولم يخرجاه » رواه الحاكم والبيهقي
[وصححه الألباني
6 . யார் சூரா கஹ்:.பை ஒவ்வொரு ஜூம்ஆ நாளும்
ஓதி வருவாரோ அவருக்கு அது இரு ஜூம்ஆகளுக்கு மத்தியில் பிரகாசமாக இருக்கும் என்று
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்
.7«مَنْ
قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ
دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ»
قال الجلال السيوطي: أخرجه بهذا
اللفظ إلى هنا النسائي
9848، وابن حبان،
والدارقطني، من حديث أبي أمامة، والبيهقي في شعب الإيمان]
7 . குர்ஆனில் ஒரு மகத்தான ஆயத்
உள்ளது.[ஆயத்துல் குர்ஸீ] யார் அதை ஒவ்வொரு :.பர்ளான தொழுகைக்குப் பின்னாலும் ஓதி
வருவாரோ அவர் சுவனம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறு தடையில்லை என்று நபிகள்
நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
7 .@@@@@@@@@
ஓதுவதின் சிறப்புகள் / ஹா;.பிழ்களின் சிறப்புகள்.
سنن الترمذي 2830
- عَنْ عَلِيِّ بْنِ أَبِي
طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ
حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَهُ
فِي عَشْرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ
قَالَ أَبُو
عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيحٍ وَحَفْصُ بْنُ سُلَيْمَانَ يُضَعَّفُ فِي
الْحَدِيثِ
யார் குர்ஆனை ஓதி மனனமிட்டு
அதை வெளிப்படுத்துவாரோ அல்லாஹ் அவர்களை
சுவனத்தில் நுழைவித்து அவருடைய குடும்பத்தைச் சார்ந்த நரகம் வாஜிபான பத்து
நபர்களுக்கு அவருடைய சி:.பாரிசை
ஏற்றுக்கொள்கிறான்.
المعجم الكبير للطبراني -12494 عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:أَشْرَافُ أُمَّتِي حَمَلَةُ
الْقُرْآنِ.
என்
உம்மத்தில் சிறந்தவர்கள் குர்ஆனை [நெஞ்சங்களில்]
சுமந்தவர்கள் Tதான்
என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனை மனனமிடுவதன் சிறப்புகளில் சில;
குர்ஆனை மனனமிடுவதன் சிறப்புகளில் சில;
صحيح البخاري 6 - عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ
أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ
فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»
அருள் மறை குர்ஆனை நாம் அதிகம் ஓதவும்
கேட்கவும் தகுதியான மாதம் இரமளான் மாதமாகும்.ஏனெனில் இந்த மாதத்தில் தான் குர்ஆன்
இறக்கி அருளப்பட்டது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு ரமளானில் ஒவ்வொரு இரவிலும் திருமறையில் அது வரை இறங்கிய ஆயத்துகளை ஜிப்ரயீல் அலை அவர்கள் ஓதிக்காட்டுவார்கள். என்று ஹதீஸில் வருகிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு ரமளானில் ஒவ்வொரு இரவிலும் திருமறையில் அது வரை இறங்கிய ஆயத்துகளை ஜிப்ரயீல் அலை அவர்கள் ஓதிக்காட்டுவார்கள். என்று ஹதீஸில் வருகிறது.
தராவீஹ் தொழுகையில் நீண்ட நேரம் நின்று
வணங்குவது நபி ஸல் அவர்களின் வழிமுறையாக இருக்கிறது.
صحيح مسلم :1337
252 - (804) أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اقْرَءُوا
الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ،
اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ، وَسُورَةَ آلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا
تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا
غَيَايَتَانِ، أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ
عَنْ أَصْحَابِهِمَا، اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ،
وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ». قَالَ مُعَاوِيَةُ:
بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ: السَّحَرَةُ،.
ஸஹீஹ் முஸ்லிம் 1470. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன்
ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான
”அல்பகரா” மற்றும்
”ஆலு
இம்ரான்” ஆகிய
இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ
அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக
(இறைவனிடம்) வாதாடும். ”அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம்
சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள்
செயலிழந்துபோவார்கள்.
இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
الحديث: « يقال
لصاحب القرآن: اقرأ وارقَ، ورتّل كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آية
تقرأ بها ».
குர்ஆன் உடையவருக்கு மறுமையில் குர்ஆனை ஓதிக் கொண்டே அந்தஸ்தில் உயர்ந்து
கொண்டே செல் என்று சொல்லப்படும்.
صحيح مسلم 1561 - عَنْ أَبِى سَعِيدٍ
الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا كَانُوا ثَلاَثَةً فَلْيَؤُمَّهُمْ
أَحَدُهُمْ وَأَحَقُّهُمْ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ ».
குர்ஆனை மனனமிட்டவர் இமாமத் செய்வதற்கு மற்றவர்களை
விட மிகத்தகுதியானவர்.
மேலும் கவிபடிப்பவன் தன் கவியை செவியேற்பதை விடவும் அல்லாஹ் தன் அடியான் அழகிய தொனியில் அருள்மறைக் குர்ஆன் ஓதவதை செவி சாய்க்கிறான் . என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள்.
மேலும் ரமளான் மாத்தில் குர்ஆன் இறங்கிய பரக்கத்தினால் மிக உயர்ந்த இறை நெருக்கத்தை பெற்றுத் தரும்படியான நோன்பு என்ற வணக்கம் நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
மேலும் ரமளான் மாத்தில் குர்ஆன் இறங்கிய பரக்கத்தினால் மிக உயர்ந்த இறை நெருக்கத்தை பெற்றுத் தரும்படியான நோன்பு என்ற வணக்கம் நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
مسند أحمد ط
الرسالة 6626 - عَنْ عَبْدِ اللهِ بْنِ
عَمْرٍو: أَنَّ
رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ
وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ:
أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ،
فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ
الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ:
" فَيُشَفَّعَانِ " وراه الحاكم وصححه
ஹதீஸ் ஷரீ :. பில் வருகிறது. நோன்பும், குர்ஆனும்
ஒரு அடியானுக்கு சிபாரிசு செய்யும் நோன்பு சொல்லும்: ரப்பே! ரமளானுடைய பகல்
நேரத்தில் இந்த அடியானை நான் உணவை விட்டும், மனோ இச்சைகளை விட்டும்
தடுத்திருந்தேன் எனவே இவன் விஷயத்தில் என் சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக. குர்ஆன்
சொல்லும் நான் இரவில் அவனுடைய தூக்கத்தை தடுத்து வைத்தேன் என்று அந்த இரண்டின்
சி:.பாரிசும் ஏற்கப்படும். (நூல் : அஹமத் + ஹாகிம்)
நமக்கு சி:.பாரிசு செய்யும் சிறந்த அமல்கள் ரமளானில் நமக்கு விதியாக்கப்பட்டுள்ளது. அதை நாம் பேணிக் கொள்ள வேண்டும். குறிப்பாக குர்ஆன் ஓதுவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நமக்கு சி:.பாரிசு செய்யும் சிறந்த அமல்கள் ரமளானில் நமக்கு விதியாக்கப்பட்டுள்ளது. அதை நாம் பேணிக் கொள்ள வேண்டும். குறிப்பாக குர்ஆன் ஓதுவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
8 . @@@@@@@@@
குர்ஆனுடன் நமது நிலைப்பாடு?.
وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ
إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا (30)
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த
குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று
(நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் : 25:30)
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ
مُعْرِضِينَ (49) كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ (50) فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ
(51)
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே
- இவர்களுக்கு என்ன நேர்ந்தது? ۙஅவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
(அல்குர்ஆன் : 74:49-51)
ஆனால் இன்றைய இஸ்லாமியர்களின் நிலை ரமளானில்
கூட திருமறை குர்ஆனை ஓதாமல் உலக அலுவல்களிலேயே இலயித்திருக்கிறார்கள். ஹா:.பிழ்கள்
விரைந்து தொழுகையை முடிக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ரமளானுடைய :.பஜ்ரு
தொழுகைகளில் பிற மாதங்களின் :.பஜ்ரு தொழுகையில் ஓதுவதை விட குறைவான ஆயத்துகள் ஓதி
தொழுகை விரைந்து முடிக்கப்படுகிறது.
நம்முடைய ரமளானின் பொன்னான பொழுதுகள் பெரும்பாலும் தூக்கத்திலும், வீண் பேச்சுகளிலும் கழிகிறது.
ஒரு ந:.பிலான வணக்கத்திற்கு :.பர்ளுடைய நன்மையும், ஒரு :.பர்ளுக்கு எழுபது :.பர்ளுகளின் நன்மைகளையும் அள்ளித்தரும் ரமளானை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்?என்று சிந்தித்து செயல்படுவோமாக.......ஆமீன்.
நம்முடைய ரமளானின் பொன்னான பொழுதுகள் பெரும்பாலும் தூக்கத்திலும், வீண் பேச்சுகளிலும் கழிகிறது.
ஒரு ந:.பிலான வணக்கத்திற்கு :.பர்ளுடைய நன்மையும், ஒரு :.பர்ளுக்கு எழுபது :.பர்ளுகளின் நன்மைகளையும் அள்ளித்தரும் ரமளானை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்?என்று சிந்தித்து செயல்படுவோமாக.......ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.