வியாழன், 8 டிசம்பர், 2016

சுந்தர நபிமீது சொல்வோம் ஸலவாத்து

  • بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

சுந்தர நபிமீது சொல்வோம் ஸலவாத்து
**********************************************

முன்னுரை:
**************
1.  ஸலவாத்தின் பொருள் விளக்கம்:
ஸலவாத் என்றால் ஈடேற்றம் என்று பொருளாகும். ஸலவாத் என்பது சொல்பவர்களை  பொறுத்து பொருள் மாறுபடும். இதன்படி அல்லாஹ் ஸலவாத் கூறுகின்றான் என்பதற்கு ''அருள்புரிகின்றான் என்றும் மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதற்கு ''பாவமன்னிப்பு கோருகின்றார்கள்"" என்றும் முஃமின்கள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதற்கு ''துஆச் செய்கின்றார்கள்"" என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

2.  ஸலவாத் சொல்வதின் சட்டம்:
*******************************

قال الله تعالي : إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً (الأخزاب : 56)
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலாவத் சொல்கின்றனர். ஆகவே நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்து கூறுங்கள் ஸலாம் கூறுங்கள்.(33:56)
இவ்வசனத்தில் அல்லாஹ் தன் தூதரின் மீது ஸலவாத் கூற முஃமின்களுக்கு ஆணை பிறப்பிக்கின்றான். எனவே ஒரு முஃமின் தன்வாழ் நாளில் ஒரு முறையேனும் நபியின் ஸலவாத் கூறுவது ஃபர்ழ் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.

3.  ஸலவாத்தின் சிறப்புக்கள்
***********************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى الله عَلَيْهِ عَشْرًا» م : 407
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முறை என் மீது ஸலவாத் கூறுபவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகின்றான். (முஸ்லிம்: 407)

4.  ஸலவாத் எப்படி சொல்ல வேண்டும்?
***********************************
عن أبي حُمَيْدٍ السَّاعِدِيُّ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: «قُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ» صحيح مسلم : 407

அபூஹூமைத் அஸ்ஸாயிதி (ரழி) அவர்கள் கூறினார்கள்.அவர்கள் (நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களின் மீது எப்படி ஸலவாத் சொல்வது? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
என்று சொல்லுங்கள் என்றார்கள். (முஸ்லிம்: 407)

5.  ஸலவாத் சொல்ல வேண்டிய சமயங்கள்:
****************************************
1.   தொழுகையின் தஷஹ்ஹூதின் இறுதியில்:

عن فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، صَاحِب رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا»، ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ: - أَوْ لِغَيْرِهِ - «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ، وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ» د :1481

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமல் (புகழாமல்) நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்திக்கக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவர் அவசரப்பட்டுவிட்டார் எனக் கூறி பின்னர் அவரை அழைத்து உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் அவர் தன் இறைவனை கண்ணியப்படுத்தி புகழட்டும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாவத் கூறட்டும் பின்னர் தான் நாடியதை கேட்கட்டும் என்று கூறினார்கள். (அபூதாவூத்: 1481)

2.   ஜனாஸா தொழுகையில் இரண்டாவது தக்பீருக்குப் பின்னால்:

عن أُمَامَةَ بْنُ سَهْلٍ، أَنَّهُ أَخْبَرَهُ رَجُلٌ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ السُّنَّةَ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يُكَبِّرَ الْإِمَامُ ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ بَعْدَ التَّكْبِيرَةِ الْأُولَى سِرًّا فِي نَفْسِهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَخْلُصُ الدُّعَاءَ لِلْجَنَازَةِ فِي التَّكْبِيرَاتِ، لَا يَقْرَأُ فِي شَيْءٍ مِنْهُنَّ، ثُمَّ يُسَلِّمُ سِرًّا فِي نَفْسِهِ. مسند الشافعي

ஜனாஸா தொழுகையில் சுன்னத்தாகிறது இமாம் தக்பீர் சொல்லி முதல் தக்பீருக்குப் பின் சூரத்துல் ஃபாத்திஹாவை தன் மனதிற்குள் ஓத வேண்டும். பின்னர் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலாவத் கூற வேண்டும்….. (முஸ்னதுஷ் ஷாபியீ)

(ஹனபி மத்ஹபில் முதல் தக்பீருக்குப்பின் ஃதனா ஓதினாலே போதுமானது அதிலேயே அல்லாஹ்வை புகழுதல் உண்டாகிவிடுகிறது. இந்த ஹதீஸூம் அல்லாஹ்வை புகழுதல் என்ற அடிப்படையில்தான் அல்ஹம்து சூரா ஓதப்பட்டுள்ளது என்று ஹனபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளது.)

3.  ஜூம்ஆவுடைய நாளில்:

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ» ن : 1374
உங்கள் நாட்களில் சிறந்தது ஜூம்ஆவுடைய நாளாகும். அந்நாளில்தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். மேலும் அந்நாளில்தான் கைப்பற்றப்பட்டார்கள். மேலும் அந்நாளில்தான் முதல் ஸூர் ஊதப்படும். எனவே என் மீது ஸலவாத்தை அதிகப்படுத்துங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத்து எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிவிட்ட பின் உங்களுக்கு எங்களின் ஸலவாத்து எப்படி எடுத்துக் காட்டப்படும்?என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடலை உண்ணுவதை பூமிக்கு தடை செய்து விட்டான் என்று கூறினார்கள். (நஸயி: 1374)

4.  பாங்குக்குப் பின்:

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى الله عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ، لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ» م : 384
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஅத்தின் (பாங்கு சொல்வதை) நீங்கள் கேட்டால் அவர் சொல்வதைப் போல் நீங்களும் சொல்லுங்கள். பின்பு என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஏனெனில் என் மீது ஸலவாத் கூறுபவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகின்றான். ……… (முஸ்லிம்: 384)

5.  சபையில்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ، وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ، إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً، فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ»: وَمَعْنَى قَوْلِهِ: تِرَةً: يَعْنِي حَسْرَةً وَنَدَامَةً. سنن الترمذي : 3380

எந்த ஒரு கூட்டம் ஒரு சபையில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறவும் என் மீது ஸலவாத் சொல்லவும் இல்லையோ அவர்கள் மீது நஷ்டம் ஏற்பட்டுவிடும். அவன் (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனை செய்வான். மேலும் அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்.     (திர்மிதி: 3380)

6.  நபிகளாரின் பெயர் கூறப்படுகையில்:

عن حسين ، عن النبي صلى الله عليه وسلم، قال: «إن البخيل من ذكرت عنده، فلم يصل علي» صحيح إبن حبان : 909
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடத்தில் நான் கூறப்பட்டு (என் பெயர் சொல்லப்பட்டு)அவர் என் மீது ஸலவாத் கூற வில்லையோ அவரே நிச்சயமாக கஞ்சனாவார். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்: 909)

7.  பள்ளிவாசலில் நுழைகையில்:

عن أبي أُسَيْدٍ الْأَنْصَارِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ  افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، فَإِذَا خَرَجَ فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ " د : 465
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தால் அவர் நபி (லஸ்) அவர்களின் மீது ஸலாவத்  சொல்லட்டும்….. (அபூதாவூத்: 465)

8.  துஆ செய்கையில்
عَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: " كُلُّ دُعَاءٍ مَحْجُوبٌ حَتَّى يُصَلَّى عَلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم - " (صحيح الجامع - وقال الالباني في الصحيحة: هو في حُكْم المرفوع لأن مثله لَا يُقال من قبل الرأي)
ஒவ்வொரு துஆவும் என் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை தடுக்கப்படும்.

6.  ஸலவாத் சொல்வதின் பலன்கள்:
***********************************
•  அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வழிபட்ட நன்மை.
•  மலக்குகளின் அமலுக்கு உடன்பட்ட நன்மை.
•  பத்து நன்மைகள் கிடைக்கின்றது.
•  பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன.
•  பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
•  நபிகளாரின் பரிந்துறை கிடைக்கப் பெறும்.
•  இன்னும் பல…..

7.  ஸலவாத் சொல்லாதிருப்பதன் கேடுகள்:
*******************************************
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الجَنَّةَ» قَالَ عَبْدُ الرَّحْمَنِ: " وَأَظُنُّهُ قَالَ: أَوْ أَحَدُهُمَا " ت : 3545
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடத்தில் நான் (எனது பெயர்) கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூற வில்லையோ அவரின் மூக்கு மண்ணாகட்டுமாக!
عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . ت : 3546

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடத்தில் நான் கூறப்ட்டு அவர் என் மீது ஸலவாத் கூற வில்லையோ அவரே நிச்சயமாக கஞ்சனாவார்.

8.  முடிவுரை:

நபிகளாரின் மீது ஸலவாத் சொல்வோம். அதன் பலனை இம்மையிலும் மறுமையிலும் நிறைவாகஅடைவோம் !


பழைய பதிவு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
தாஹா நபியின் தனிச்சிறப்புகள்

وما ارسلناك الا رحمة للعالمين(الانبياء 21)
وما ارسلناك الا كافة للناس  بشيرا ونذيرا(سبا34)
صحيح مسلم  + 523 812  عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ
நபி(ஸல்)அவர்களை அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாகவும் அழகிய முன்மாதிரியாகவும் பேருபகாரமாகவும் அல்லாஹ் அனுப்பியுள்ளான் .இம்மையிலும் . மறுமையிலும் நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்களாகத் திகழ்வார்கள் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தனிச்சிறப்புகள் ஏராளம் ஏராளம்.
மற்ற நபிமார்களுக்கு இல்லாமல் நமது நபிக்கு   மட்டும் A. உலகில் B.வழங்கப்பட்ட தனிச் சிறப்புக்கள் .அவ்வாறே மற்ற உம்மத்துகளுக்கு இல்லாமல் இந்த நபியின் உம்மத்துக்கு மட்டுமே A. உலகில் B.மறுமையில் வழங்கப் படும் சிறப்புகள் என நீண்டு கொண்டே போகும் பட்டியல் .
@@@@@@@
1 .  நபி( ஸல்) அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எல்லா நபிமார்களிடத்திலும் எல்லா மனிதர்களிடமும் ஆலமே அர்வாகிலேயே இறைவன் ஒப்பந்தம் செய்தான்

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ (81): آل عمران)
وفي ابن كثير : قال علي بن أبي طالب وابن عمه عبد الله بن عباس، رضي الله عنهما: ما بعث الله نبيا من الأنبياء إلا أخذ عليه الميثاق، لئن بَعَث محمدًا وهو حَيّ ليؤمنن به ولينصرنه، وأمَرَه أن يأخذ الميثاق على أمته: لئن بعث محمد [صلى الله عليه وسلم] (7) وهم أحياء ليؤمِنُنَّ به ولينصرُنَّه.
من مسند أحمد 15156 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ أَصَابَهُ مِنْ بَعْضِ أَهْلِ الْكُتُبِ ، فَقَرَأَهُ عَلَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ وَقَالَ: " أَمُتَهَوِّكُونَ فِيهَا يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً، لَا تَسْأَلُوهُمْ عَنْ شَيْءٍ فَيُخْبِرُوكُمْ بِحَقٍّ فَتُكَذِّبُوا بِهِ، أَوْ بِبَاطِلٍ فَتُصَدِّقُوا بِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَنَّ مُوسَى كَانَ حَيًّا، مَا وَسِعَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي
قوله : مُتَهَوِّكُونَ : التهوك هو الوقوع في الأمر بغير روية، وهو التحير أيضاً
உமர்(ரலி)அவர்கள் நபி(ஸல்அவர்களிடம் தவ்ராத்தில் உள்ளதை படித்துக்காண்பித்த போது நபியவர்கள் உமர் (ரலி) யை கண்டித்தார்கள். உமரே தெளிவான வேதம் உங்களுக்கு வந்திருக்கிறது . மூஸா (அலை) அவர்களே இப்பொழுது வாழ்ந்தால் என்னைத் தான் பின் பற்றியாக வேண்டும்  என்று கூறினார்கள் .
@@@@@@@

2 . மற்ற நபிமார்கள் ஒரு ஊருக்கு / ஒரு நாட்டுக்கு / ஒரு சமுதாயத்திற்கு /குறிப்பிட்ட காலம் வரை  மட்டுமே நபி .

قال الله تعالى: إِنَّا أَرْسَلْنَا نُوحاً إِلَى قَوْمِهِ [نوح:1]# وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُوداً [الأعراف:65] #وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْباً (الأعراف:85]
ஆனால் நம் நபி முஹம்மது (ஸல்)அவர்கள் கியாமத் வரை வரும் முழு மனித & ஜின் இனத்திற்குமே நபி ஆக்கப் பட்டிருகிறார்கள் .
قال الله تعالى : وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ كَافَّةً لِلنَّاسِ بَشِيراً وَنَذِيراً [سبأ:28]        # قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعاً [الأعراف:158]           #تباركَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرا( الفرقان 1)    # وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ [الأنبياء:107]
நபி (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்கும். ஜின் இனத்திற்கும் நபியாக இருப்பதால் மறுமையில் அனைத்து நபிமார்களை விட அதிக நன்மையை பெற்றவர்களாகவும் அதிகமான உம்மத்களை பெற்றவரகளாகவும் திகழ்வார்கள்
@@@@@@@

3 . இறுதி நபி என்ற தனிச்சிறப்பு

ماكان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين(الاحزاب40)

وفي البخاري3271+3535  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِنَّ مَثَلِي وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ، إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ، وَيَقُولُونَ هَلاَّ وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ، وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ)).
புகாரி 3535. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத் தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, “இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?“ என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

وفي البخاري3455+3196 عن ابي هريرة عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
قوله فوا بضم الفاء وبسكون الواو هو فعل أمر من وفى يفي أي أوفوا كما في المرقاة
புகாரி 3455. அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள் .     تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ  பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார்.
“”மேலும் எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை.””
ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (-அரசர்கள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ….
@@@@@@@

4 . நபி (ஸல்) அவர்கள் உம்மத்திற்கு பாதுகாப்பு.

முந்தய நபிமார்கள் வாழக்கூடிய காலத்திலேயே அல்லாஹ்வின் தன்டனை அவர்களின் உம்மத்துகளுக்கு வந்து இருக்கு.
ஆனால் நபி(ஸல்)உம்மத்திற்கு அவ்வாறு வரவில்லை . ஏனென்றால் அது அல்லாஹ்வின் வாக்குருதி
قال االله تعالي: وماكان الله ليعذبهم وانت فيهم(الانفال33).
وفي صحيح مسلم4596 +4953 عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ قَالَ صَلَّيْنَا الْمَغْرِبَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قُلْنَا لَوْ جَلَسْنَا حَتَّى نُصَلِّيَ مَعَهُ الْعِشَاءَ قَالَ فَجَلَسْنَا فَخَرَجَ عَلَيْنَا فَقَالَ مَا زِلْتُمْ هَاهُنَا قُلْنَا يَا رَسُولَ اللَّهِ صَلَّيْنَا مَعَكَ الْمَغْرِبَ ثُمَّ قُلْنَا نَجْلِسُ حَتَّى نُصَلِّيَ مَعَكَ الْعِشَاءَ قَالَ أَحْسَنْتُمْ أَوْ أَصَبْتُمْ قَالَ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ وَكَانَ كَثِيرًا مِمَّا يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ
فَقَالَ النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتْ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لِأَصْحَابِي فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمَّتِي مَا يُوعَدُونَ
ஸஹீஹ் முஸ்லிம்  4953.நபி (ஸல்) சொன்னதாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்.
நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு ஆவேன். நான் போய்விட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்.
என் தோழர்கள் என் சமுதாயத்தாருக்குப் பாதுகாப்பு ஆவார்கள். என் தோழர்கள் போய்விட்டால் என் சமுதாயத்தாருக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும்என்று கூறினார்கள்.
@@@@@@@
5 . நம் நபியை பெயர் சொல்லி அழைக்கவில்லை

மற்ற உம்மத்கள் பெயர் சொல்லியே அழைத்தார்கள்
قَالُوا يَا نُوحُ قَدْ جَادَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (32) هود           قَالُوا يَا مُوسَى اجْعَل لَنَا إِلَهاً كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ [الأعراف:138]
إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ [المائدة:112]
நம் நபியை பெயர் சொல்லி அழைக்க கூடாது
قال سبحانه وتعالى:لا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضاً [النور:63]
அல்லாஹ் மற்ற நபிமார்களை பெயர் கூறி அழைக்கிறான்
قَالَ يَا مُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ)  الأعراف:144]
يا إبراهيم * قَدْ صَدَّقْتَ الرُّؤْيا (الصافات:104-105]
يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ (المائدة:110]
ஆனால் நம் நபியை இறை தூதரே/நபியே என நுபுவ்வத்  பெயர் சொல்லி அழைக்கிறான்
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا (45) وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا (46)
َيا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنْ اتَّبَعَكَ مِنْ الْمُؤْمِنِينَ
يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ
@@@@@@@

6 . جوامع الكلم  ஒருங்கிணைந்த (பொருள்களைக்குறிக்கும்) சொற்கள் கொடுக்கப்பட்டார்கள் .

. Aوفي البخاري 2755عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلي الله عليه وسلم قَالَ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ
.Bانما الاعمال بالنيات
. Cسنن الترمذي 1910 - عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ
@@@@@@@

7. எதிரிகளின் உள்ளத்தில் அவர்களைப்பற்றிய (மதிப்பும்) அச்சமும் ஊட்டப்பட்டார்கள் . உதாரணமா ஒரு சம்பவம்

عُتيبة بن أبي لهـب بن عبد المطلب "عُتيبة" - بالتصغير - ابن عم محمد رسولالإسلام صلى الله عليه وسلم أبو لهب بن عبد المطلب. وأمه أم جميل بنت حرب بن أمية، وهي اخت ابي سفيان ، وهي المذكورة في القرآن بحمالة الحطب[1]‏.
كان الرسول قد زوجه من ابنته أم كلثوم ثم طلقها بغضا للرسول وبعد ان امره ابوه بذلك[2].ولما أراد "عُتيبة" الخروج إلى الشام مع أبيه قال: لآتينَّ محمداً وأوذينَّه فأتاه فقال يا محمد: إِني كافر بالنجم إِذا هوى، وبالذي دنا فتدلى، ثم بصق أمام النبي وطلَّق ابنته "أم كلثوم" فغضب ودعا عليه فقال: (اللهم سلط عليه كلباً من كلابك). فخرج عتيبة مع أصحابه في عير إلى الشام حتى إذا كانوا في طريقهم زأر أسد فجعلت فرائص عتيبة ترعد فقالوا له: من أي شيء ترعد؟ فقال: إن محمد دعا علي وما ترد له دعوة. فلما ناموا أحاطوا به وجعلوه في وسطهم فجاء الأسد فشم رؤوسهم جميعاً حتى انتهى إلى عتيبة فهشم رأسه هشمة فقضى عليه،[3] فتحققت دعوة النبي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم.
அபூலஹப்உடைய மகன் உதைபாவிற்கு நபி(ஸல்)அவர்கள் தன் மகள் உம்முகுல்ஸூம் அவர்களை மணம் முடித்துகொடுத்திருந்தார்கள் .நபியின் மீதுள்ள கோபத்தால் தன் தந்தை அபூலஹபின் கட்டலையின் படி நபியவர்ளின் முன்னிலையில் காரி துப்பியது மட்டுமின்றி உம்மு குல்ஸூம் (ரலி)அவர்களையும் தலாக் விட்டுவிட்டான் நபியவர்கள் கோபமடைந்து யாஅல்லாஹ் உன்னுடைய விலங்குகளில் ஒன்றை இவன்மீது சாட்டுவாயாக என்று பத்ஆ செய்தார்கள்.இவன் ஷாமிற்கு செல்லும்போது இடையில் ஒரிடத்தில் தங்கினான் தன் தங்குமிடத்தை உயரமான இடத்தில் அமைத்துக்கொன்டான். காரணம் கேட்டபொழுது முஹம்மது எனக்கு எதிராக துஆ செய்திருகிராரா் அவரின் துஆ ஏற்கப்படும் எனக்கூறினான் இறவில் தூங்கும் போது ஒரு சிங்கம் வந்தது அதுஅவனைச்சுற்றி உறங்கிக்கொண்டிரக்கும் அனைவரையும் நுகர்ந்து பார்த்துவிட்டு இவனுடைய தலையை மட்டும் கொய்திச்சென்றது.ஒரு காபிருக்கு நபியவர்களின் வார்தையின் மீது பயம் இது நபியவர்களின் தனிச்சிறப்பில் உள்ளது
@@@@@@@
8 . நபி(ஸல்)அவர்களின் முன் பின் பாவங்கள் அனைத்துமே மன்னிக்கப்பட்டு விட்டன.
قوله تعالي: انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبه وما تاخر (الفتح1-2)
மற்ற எந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் இவ்வாறு கூறவில்லை .
எனவே ஒவ்வொரு நபியும் மறுமையில் தாம் செய்து விட்ட தவற்றை நினைத்து نَفْسِي نَفْسِي نَفْسِي நப்சி நப்சி என்பார்கள் .
A . ஆதம் (அலை) ولا تقربا هذه الشجرة  # B . நூஹ் நபி (அலை) உம்மத்திற்கு எதிராக துஆ # C . இப்றாஹீம் நபி தாம் சொன்ன மூன்று பொய்கள் # D . மூஸா நபி ஒரு மனிதனை கொலை செய்தது என எல்லோரும் நடந்த தவறுகளை பற்றி பயந்து அல்லாஹ் இடம் ஷாபாஅத் துக்காக நான் முறையிடமாட்டேன் என கடைசியாக நம் நபி இடம் அனுப்பி விடுவார்கள்
நம் நபி(ஸல்) தன்னை பற்றி பயப்படாமல்  يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي என உம்மத்தை பற்றி கவலை/ முழு மனித இனத்திற்கும் ( شفاعة عظمى ) ஷாபாஅத் செய்வாங்க . அது ஒப்புக் கொள்ளப்படும்
@@@@@@@
9 . . உன்னதமான அற்புதம் உண்டு

ஒவ்வொரு நபிக்கும் அற்புதம் உண்டு . அது காலம் கடந்து விட்டவை .
ஆனால் நம் நபிக்கு வழங்கப்பட்டவை வாழும் அற்புதங்கள் ஆகும் .
A . சந்திரன் பிளர்நதது .
மக்காவில் குறைஷி களுக்கு சந்திரனை பிளர்ந்து கட்டினார்கள் . அதன் சுவடு இன்றும் சந்திரனில் இருக்கு. . அதுக்கு அரேபியன் பிளவு என அழைக்கப்படுது .
اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
B. அல்குர்ஆன் .
மற்ற வேதங்கள் எழுத்து வடிவில் வழங்கப்டதால் பாது காப்புக்கு முழு வாய்ப்பு. ஆனாலும் கையாடல் நடந்தன .
குர்ஆனோ ஓசை வடிவில் தான் . எனவே கையாடளுக்கு முழு வாய்ப்பு . ஆனாலும் ஒரு எழுத்து கூட மாற்றம் ஏற்பட வில்லை . ஏற்படவும் சாத்தியம் இல்லை
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِالذِّكْرِ لَمَّا جَاءَهُمْ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ (41) لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ (42)  سورة فصلت
உதாரணமாக ஒரு சம்பவம்
وهذه قصة عجيبة: قال يحيى بن أكثم : دخل يهودي على الخليفةالمأمون فتكلم فأحسن الكلام فدعاه المأمون إلى الإسلام، فأبى اليهودي، فلما كان بعد سنة جاءنا مسلماً، فتكلم في الفقه فأحسن الكلام، فقال لهالمأمون : ما كان سبب إسلامك؟ قال: انصرفت من حضرتك -أنا لما خرجت من عندك- قبل سنة وأحببت أن أمتحن هذه الأديان، فعمدت إلى التوراة فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت وأدخلتها الكنيسة فاشتريت مني -راجت واشتروها آل يهود، اشتروها بسرعة- وعمدت إلى الإنجيل فكتبت ثلاث نسخ، فزدت فيها ونقصت وأدخلتها الكنيسة فاشتريت مني -راجت ونفقت مع أنها محرفة، هو بنفسه حرفها- وعمدت إلى القرآن فعملت ثلاث نسخ فزدت فيها ونقصت وأدخلتها على الوراقين فتصفحوها فلما أن وجدوا فيها الزيادة والنقصان رموا بها ولم يشتروها، فعلمت أن هذا الكتاب محفوظ، فكان هذا سبب إسلامي،
யஹ்யா இப்னு அக்ஸம் கூறுகிறார்.கலீபா மஃமூன் ரஷீத் அவர்களின் அரசவைக்கு ஒரு யஹூதி வந்தார் அழகான முறையில் பேசினார். கலீபா அவர்கள் அந்த யஹூதியை இஸ்ஸாத்தின் பக்கம் அழைத்தார். யஹூதி மறுத்து விடடார். ஒரு வருடத்திற்குப் பின் அந்த யஹூதி முஸ்லிமானவராகவும் நன்கு பிக்ஹூ சட்டங்களை பேசுபவராகவும் அரசவைக்கு வந்தார். கலீபா அவர்கள் .நீங்கள் இஸ்லாமை ஏற்க காரணம் என்னவென்று கேட்டபொழுது
அவர்கூறிய பதில்
நான் ஒரு வருடத்திற்கு முன் உங்கள் சபைக்கு வநது சென்றபின் இந்த மார்க்கங்களை சோதித்து பார்க்க விரும்பினேன். தவ்ராத் இன்ஜீல் வேதங்களில் மூன்று பிரதிகளை எழுதி அதில் கூடுதல் குறைவுகளைச் செய்து சிலை வணக்கத்தையும் நுலைத்து விற்பனை செய்தேன்  யஹூதிகளும் நஸாராக்களும் அதை வாங்கினார்கள் வேகமாக விற்பனையானது.அதே போல் திருக்குர்ஆனில் மாற்றம் செய்து விற்பனை செய்ய நாடிய பொழுது  அதில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு ஒருவரும் அதை வாங்க முன் வரவில்லை தூக்கி எரிந்து விட்டார்கள். அதன் மூலம் இந்தவேதம் பாதுகாக்கப்பட்டது என்பதை விழங்கிக் கொண்டேன. இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொன்டதற்கு காரணம் என்றார்
@@@@@@@
10 . மிஃராஜ் பயணம் நபி( ஸல்)அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
இந்த பயணத்தில் நபிமார்களை சந்தித்தார்கள் அவர்களுக்கு இமாமத் செய்தார்கள். இதன் முலம் நபி(ஸல்) அவர்கள்தான் இமாம் மற்ற நபிமார்கள் மஃமூம்கள் என அறிய முடிகிறது
ِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((لَقَدْ رَأَيْتُنِي فِي الْحِجْرِ وَقُرَيْشٌ تَسْأَلُنِي عَنْ مَسْرَايَ فَسَأَلَتْنِي عَنْ أَشْيَاءَ مِنْ بَيْتِ الْمَقْدِسِ لَمْ أُثْبِتْهَا. فَكُرِبْتُ كُرْبَةً مَا كُرِبْتُ مِثْلَهُ قَطّ
ُ قَالَ فَرَفَعَهُ اللَّهُ لِي أَنْظُرُ إِلَيْهِ مَا يَسْأَلُونِي عَنْ شيء إِلاَّ أَنْبَأْتُهُمْ بِهِ وَقَدْ رَأَيْتُنِي فِي جَمَاعَةٍ مِنَ الأَنْبِيَاءِ فَإِذَا مُوسَى قَائِمٌ يُصَلِّي فَإِذَا رَجُلٌ ضَرْبٌ جَعْدٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَإِذَا عِيسَى ابْنُ مَرْيَمَ- عَلَيْهِ السَّلاَمُ- قَائِمٌ يُصَلِّي أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا عُرْوَةُ بْنُ مَسْعُودٍ الثَّقَفِيُّ وَإِذَا إِبْرَاهِيمُ- عَلَيْهِ السَّلاَمُ- قَائِمٌ يُصَلِّي أَشْبَهُ النَّاسِ بِهِ صَاحِبُكُمْ- يَعْنِي نَفْسَهُ- فَحَانَتِ الصَّلاَةُ فَأَمَمْتُهُمْ فَلَمَّا فَرَغْتُ مِنَ الصَّلاَةِ قَالَ قَائِلٌ يَا مُحَمَّدُ هَذَا مَالِكٌ صَاحِبُ النَّارِ فَسَلِّمْ عَلَيْهِ. فَالْتَفَتُّ إِلَيْهِ فَبَدَأَنِي بِالسَّلاَمِ)رواه مسلم.
@@@@@@@
மறுஉலகில் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய தனிச்சிறப்புக்கள்
@@@@@@@
11 . வஸீலா என்ற அந்தஸ்து நமது நபிக்கு மட்டும்தான்
614، ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " §ﻣﻦ ﻗﺎﻝ ﺣﻴﻦ ﻳﺴﻤﻊ اﻟﻨﺪاء: اﻟﻠﻬﻢ ﺭﺏ ﻫﺬﻩ اﻟﺪﻋﻮﺓ اﻟﺘﺎﻣﺔ، ﻭاﻟﺼﻼﺓ اﻟﻘﺎﺋﻤﺔ ﺁﺕ ﻣﺤﻤﺪا اﻟﻮﺳﻴﻠﺔ ﻭاﻟﻔﻀﻴﻠﺔ، ﻭاﺑﻌﺜﻪ ﻣﻘﺎﻣﺎ ﻣﺤﻤﻮﺩا اﻟﺬﻱ ﻭﻋﺪﺗﻪ، ﺣﻠﺖ ﻟﻪ ﺷﻔﺎﻋﺘﻲ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ "رواه البخاري
صحيح مسلم  577 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا  ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ
வஸீலா என்பது சுவனத்தில் உள்ள ஒரு அந்தஸ்த்து
இது நபி(ஸல்)அவர்களுக்கு மட்டும் தான் கிடைககும்.
@@@@@@@
12 . மகாமே மஹ்மூதா என்ற தகுதிக்கு சொந்தக்கார் அவர்கள் மட்டுமே
وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا (79
صحيح البخاري4349 -  عن ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ إِنَّ النَّاسَ يَصِيرُونَ يَوْمَ الْقِيَامَةِ جُثًا كُلُّ أُمَّةٍ تَتْبَعُ نَبِيَّهَا يَقُولُونَ يَا فُلَانُ اشْفَعْ يَا فُلَانُ اشْفَعْ حَتَّى تَنْتَهِيَ الشَّفَاعَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَلِكَ يَوْمَ يَبْعَثُهُ اللَّهُ الْمَقَامَ الْمَحْمُودَ
قوله المقام المحمود إعطاؤه لواء الحمد يوم القيامة .
قلت : وهذا القول لا تنافر بينه وبين الأول ; فإنه يكون بيده لواء الحمد ويشفعروى الترمذي  3548 - عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَبِيَدِي لِوَاءُ الْحَمْدِ وَلَا فَخْرَ وَمَا مِنْ نَبِيٍّ يَوْمَئِذٍ آدَمُ فَمَنْ سِوَاهُ إِلَّا تَحْتَ لِوَائِي وَأَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ وَلَا فَخْرَ
@@@@@@@
13 . ஹெளலுல் கவ்ஸர் தடாகத்திற்கு சொந்தக்காரர் அவர்கள் மட்டுமே
{ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ }

صحيح البخاري 6528+7050 عن  سَهْلَ بْنَ سَعْدٍ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ فَمَنْ وَرَدَهُ شَرِبَ مِنْهُ وَمَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ بَعْدَهُ أَبَدًا لَيَرِدُ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ

وفي رواية أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :ِ قَالَ إِنَّهُمْ مِنِّي فَيُقَالُ إِنَّكَ لَا تَدْرِي مَا بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ سُحْقًا سُحْقًا لِمَنْ بَدَّلَ بَعْدِي

قوله سحقا : بضم السين معناه  بُعْداً و هَلاكا

புகாரி 7050. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்“) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். அதை அருந்துகிறவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள் அவர்களை அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.  என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் தங்களின் அறிவிப்பில் அதிகப்படியாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள் தாம்என்று நபியவர்கள் கூறியதற்கு, “உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாதுஎன்று சொல்லப்படும். உடனே நான், “எனக்குப் பிறகு (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்துவானாக!என்று சொல்வேன்.
@@@@@@@
14 . மற்ற உம்மத்துகளுக்கு இல்லாமல் நபி(ஸல்)  அவர்களின் உம்மத்துகளுக்கு மட்டும் உள்ள சிறப்புக்கள்

1 . خير الأمةவெளியாக்கப்பட்ட உம்மத்களிலேயே சிறந்த உமமத்
2 .غنيمةபோரில் கிடைத்த கனீமத் பொருட்களை பயன் படுத்தலாம்
(முந்திய சமுதாயத்தனரின் கனீமத் பொருட்களை வானத்திலிருந்து நெருப்பு வந்து கரித்துவிடும் .
3 .  பூமி முழுவதும் தொழுகுமிடமாகவும் சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது .
முந்தய சமுதாயத்தினர் எங்கு சென்றாலும் மஸ்ஜிதில் தான் தொழகவேண்டும் . தண்ணீர் கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும்.
நமக்கு சுத்தமான எந்த இடத்திலும் தொழகலாம்.
தண்ணீர் இல்லையென்றாலோ நோய் ஏற்பட்டாலோ தயம்மம் செய்யலாம் .
4 .  ஒட்டு மொத்தமாக இந்த சமுதாயத்தை அழித்த்து விடமாட்டான்.
(முந்தய (நூஹ்-அலை)மின் சமுதாயம் அவ்வாறு அழிக்கப்ட்டுள்ளார்கள்)
5 .  முழு சமுதாயமும் வழிகேட்டில் ஒன்று சேரமாட்டார்கள்
6 . இந்த சமுதாயம் பூமியிலும் மறுமை நாளிலும் சாட்சியாளர்களாக வருவார்கள் (மறுமையில் மற்ற உம்மத்துக்கள் தங்களின் நபி தங்களுக்கு தீனை எத்திவைக்கவில்லை என்று அல்லாஹ்விடம் சொல்லும்போது. இவர்கள் சொல்வது பொய் அவர்களுக்கு அந்த நபி தீனை எத்திவைத்தார் என்று சாட்சி சொல்வார்கள்)
7 .  இவர்களின் தொழுகையின் அணிவகுப்பு  மலக்குகளின் அணிவகுப்பைப் போல உள்ளது .

8 .  கியாமத் நாளில் இவர்களின் நெற்றி மற்றும் ஒழுவின் உறுப்புக்கள் வெண்மையாக ஜொலிக்கும் அதைவைத்து இவர்கள் அடயாளம் காணப்படுவார்கள்.
9 . முதன் முதலில் ஸிராத் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பவர்கள் இந்த உம்மத்துகள் தான்
10 .  முதன் முதலில் சுவனம் செல்பவர்களும் இவர்கள்தான்
11 . இவர்களின் அமல்கள் குறைவாக இருந்தாலும் நன்மைகள் அதிகம்.


12 . குறைவான வயது கொடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சுவனத்தில் அதிகம் செல்பவர்கள் இவர்கள்தான் .  ஏனெனில் சுவனத்தில் மூன்றில் இருமடங்கு இந்த உம்மத்தினரே இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.