بسم الله الرحمن الرحيم
இறுதி நபியின் இறுதி நாட்கள்
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ (1) وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ
فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا (2) فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ
كَانَ تَوَّابًا (3)
قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ
: أُوصِيكُمْ بِالضَّعِيفَيْنِ : النِّسَاءُ ، وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ
الصَّلاةَ الصَّلاةَ ،
1A . நபி ஸல்
அவர்களின் இறுதி ஹஜ்ஜில் மிகப்பெரும் பேருரை
4406 -
حَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ،
عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الزَّمَانُ قَدِ اسْتَدَارَ
كَهَيْئَةِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ
شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ: ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ،
وَذُو الحِجَّةِ، وَالمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ، الَّذِي بَيْنَ جُمَادَى
وَشَعْبَانَ،
ஷஹீஹ் புகாரி 4406 . அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்
“வானங்களும்
பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு
என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்)
மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும்.
(மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள “முளர்“ குலத்தாரின்
ரஜப் மாதமாகும்“ என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஹஜ்ஜத்துல் வதாவின்போது துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய
நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
أَيُّ شَهْرٍ هَذَا "،
قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ
سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ ذُو الحِجَّةِ»، قُلْنَا: بَلَى،
قَالَ: «فَأَيُّ بَلَدٍ هَذَا». قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ
حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ
البَلْدَةَ». قُلْنَا: بَلَى، قَالَ: «فَأَيُّ يَوْمٍ هَذَا». قُلْنَا: اللَّهُ
وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ
اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ». قُلْنَا: بَلَى،
அப்போது “இது எந்த
மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?“ எனக் கேட்டார்கள்.
நாங்கள் “அல்லாஹ்வும்
அவனுடைய தூதருமே நன்கறிவர்“ என்றோம்.
அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக
இருந்துவிட்டு “இது துல்ஹஜ்
இல்லையா?“ என்று
கேட்டார்கள். நாங்கள் “ஆம்“ என்றோம். (பிறகு) “இது எந்த நகரம்?“
எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்“ என்றோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ
என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு“இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க நாங்கள் “ஆம்“ என்றோம்.
மேலும்இ “இது எந்த
நாள்?“ என்று கேட்டார்கள். நாங்கள்“அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்“ என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ
என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மெளனமாக இருந்துவிட்டு “இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?“ எனக் கேட்க நாங்கள் ஆம் என்றோம்.
قَالَ: " فَإِنَّ دِمَاءَكُمْ
وَأَمْوَالَكُمْ، - قَالَ مُحَمَّدٌ: وَأَحْسِبُهُ قَالَ - وَأَعْرَاضَكُمْ
عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا، فِي
شَهْرِكُمْ هَذَا،
وَسَتَلْقَوْنَ رَبَّكُمْ،
فَسَيَسْأَلُكُمْ عَنْ أَعْمَالِكُمْ،
أَلاَ فَلاَ تَرْجِعُوا بَعْدِي
ضُلَّالًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ،
(பிறகு) “உங்களின்
புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு
புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் -
உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீர்ப்பீர்கள்.
அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்:
எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய்
நீங்கள் மாறிவிடாதீர்கள்.
أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ
الغَائِبَ، فَلَعَلَّ بَعْضَ مَنْ يُبَلَّغُهُ أَنْ يَكُونَ أَوْعَى لَهُ مِنْ
بَعْضِ مَنْ سَمِعَهُ ". ثُمَّ قَالَ: «أَلاَ هَلْ بَلَّغْتُ» مَرَّتَيْنِ
இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன
கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில் இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர்
தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு
(புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு
சீரீன்(ரஹ்) இதை அறிவிக்கும்போது “முஹம்மத்(ஸல்)
அவர்கள் உண்மை கூறினார்கள்“ என்று
கூறுவார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?“ என்று இரண்டு முறை கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்)
கூறினார்.
“உங்கள்
மானமும்“ என்பதையும்
சேர்த்தே அபூ பக்ரா(ரலி) கூறினார் என எண்ணுகிறேன்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@@@@@@@
1.B இறுதிப் பேருரையின் மற்றொரு பகுதி ஸஹீஹ் முஸ்லிமில் வருகிறது
َقَالَ: .1«إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ،
كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا،
. 2أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ
مَوْضُوعٌ،
. 3وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ، وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ
مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ، كَانَ مُسْتَرْضِعًا فِي بَنِي
سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ،
. 4وَرِبَا الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ رِبًا أَضَعُ رِبَانَا
رِبَا عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ،
. 5فَاتَّقُوا اللهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ
بِأَمَانِ اللهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللهِ وَلَكُمْ عَلَيْهِنَّ
أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ، فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ
ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ،
. 6وَقَدْ تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُ إِنِ اعْتَصَمْتُمْ
بِهِ، كِتَابُ اللهِ،
ஸஹீஹ் முஸ்லிம் 2334 . அத்தியாயம் : 15. ஹஜ்
அறிவிப்பாளர் ஜாபிர் ரலி அவர்கள்
(துல் ஹஜ் ஒன்பதாம் நாள்) சூரியன் உச்சி சாய்ந்ததும் ”கஸ்வா” எனும் தமது ஒட்டகத்தில்
(சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“அரபா”மைதனத்திற்கு முன்புள்ள”உரனா”) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:
”1. உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம்
எந்த அளவு புனிதமானதோ
அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்.
2. அறிக! அறியாமைக்
காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும்.
3.அறியாமைக் காலத்தில்
நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக்
கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக நம்மிடையே
நடைபெற்ற கொலைகளில் (என் குடும்பத்தை சேர்ந்த) ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான
பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக
இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர்.
4. அறியாமைக் காலத்தில்
இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி
செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ்
பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத்
தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
5. பெண்கள் விஷயத்தில்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள்.
அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள்
அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள்.
அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால் நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள்
விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு
அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம்.
உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில் முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள்
அளிப்பதாகும்.
6. உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச்
செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள்.
அது அல்லாஹ்வின் வேதமாகும்” என்று கூறிவிட்டுஇ ”(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ”நீங்கள் (இறைச் செய்திகள் அனைத்தையும் எங்களிடம்)
தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி
விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித்
தாழ்த்திஇ ”இறைவா! இதற்கு நீயே சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள்
இந்த 2334 ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15. ஹஜ்.
இறுதிப் பேருரையின் மற்றொரு பகுதி முஸ்னத் அஹ்மதில் 23489 வது ஹதீஸ் வருகிறது
أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى
عَجَمِيٍّ ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى
عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ (2) عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ،
إِلَّا بِالتَّقْوَى
அறிந்து கொள்ளுங்கள் .யாருமே மொழியால் / நிறத்தால் (இனத்தால்) எந்த சிறப்பும்
பெற முடியாது. இறை பக்தி வைத்து மட்டுமே உயர்வு கிட்டும்.
@@@@@@@
2 . இறுதி பயணத்தின் முன்னறிவிப்பு
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا، قَالَ: كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ،………… فَقَالَ لِي: يَا ابْنَ عَبَّاسٍ، أَكَذَاكَ
تَقُولُ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَمَا تَقُولُ؟ قُلْتُ: هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ: إِذَا جَاءَ نَصْرُ
اللَّهِ وَالفَتْحُ فَتْحُ مَكَّةَ، فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ: فَسَبِّحْ
بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا. قَالَ عُمَرُ: «مَا
أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ»
ஸஹீஹ் புகாரி 4294. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும்
(தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ............. ……….உமர்(ரலி) “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி..
(நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில்
இணைவதை நீங்கள் பார்க்கும்போது……….என்னும் (110-வது “அந்நஸ்ர்“)
அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக்காட்டி “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?“
என்று கேட்டார்கள். சிலர் மௌனம் .சிலர் பொருத்த மற்ற பதில் ……………… “இப்னு அப்பாஸே! நீங்கள்
என்ன கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். நான் “அது அல்லாஹ் தன் தூதர்(ஸல்)
அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும்.
எனவே “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து“ என்பதில் உள்ள “வெற்றி“ என்பது மக்கா வெற்றியைக்
குறிக்கும். மக்கா வெற்றி தான் (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம்.
எனவேஇ நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து அவனிடம்
பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன்
ஆவான்“ என்பதே இதன் கருத்தாகும்“ என்று சொன்னேன். உமர்(ரலி) “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து
என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்“ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، أَنَّ
رَجُلًا، مِنَ اليَهُودِ قَالَ لَهُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، آيَةٌ فِي
كِتَابِكُمْ تَقْرَءُونَهَا، لَوْ عَلَيْنَا مَعْشَرَ اليَهُودِ نَزَلَتْ،
لاَتَّخَذْنَا ذَلِكَ اليَوْمَ عِيدًا. قَالَ: أَيُّ آيَةٍ؟ قَالَ: {اليَوْمَ
أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ
الإِسْلاَمَ دِينًا} [المائدة: 3] قَالَ عُمَرُ: «قَدْ عَرَفْنَا ذَلِكَ اليَوْمَ،
وَالمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ»
ஸஹீஹ் புகாரி 45. யூதர்களில் ஒருவர்
உமர்(ரலி) அவர்களிடம் “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில்
ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை
நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்“ என்றார். அதற்கு உமர்(ரலி) “அது எந்த வசனம்?“
எனக் கேட்டார்கள்.
அதற்கவர் கூறினார்.
“{اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ
وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا}
(05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) “அவ்வசனம் எந்த நாளில்
எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப்
பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான்
(அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்“ என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
நபி (ஸல்) அவர்களே முன்னறிவிப்பு செய்தார்கள்
«لِتَأْخُذُوا
مَنَاسِكَكُمْ، فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي
هَذِهِ»
உங்களின் ஹஜ் சட்டங்களை முழுமையைக் பி(-ப)டித்து கொள்ளுங்கள் . ஏனெனில்
மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டுமா என்பது தெரியாது என நபி
(ஸல்) அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்.அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள் .
@@@@@@@
3. உயில் எழுதுவது போல் மீண்டும் மீண்டும் முழங்கியது
மூன்று காரியம் பற்றி தாகும்
فَإِنَّ آخِرَ مَا تَكَلَّمَ بِهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ ، قَالَ : أُوصِيكُمْ بِالضَّعِيفَيْنِ :
النِّسَاءُ ، وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ الصَّلاةَ الصَّلاةَ ،
நபி(ஸல) அவர்க ளின் கடைசி வரை கட்டாய
சட்டத்துடன் வலியுறுத்தி உபதேசித் தர்கள் பலஹீனமான இருவகை சாராரில் மிக மிக கவனம்
பொறுப்பு வேண்டும். பெண்கள் . அடிமைகள். மேலும் தொழுகை. .ஹதீஸ் தப்ரானி 166 +
அஹ்மத் 26684
@@@@@@@
4 . மரணத்தின் இறுதி மூச்சில்
(சாபம் என) அபாய சங்கு
ஊதல்
«لَعَنَ اللَّهُ اليَهُودَ
اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»، قَالَتْ عَائِشَةُ: «لَوْلاَ
ذَلِكَ لَأُبْرِزَ قَبْرُهُ خَشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا»
4441. “நபி(ஸல்)
அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக.
அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கிவிட்டார்கள்“ என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு
இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். “தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ“ என்று அவர்கள் அஞ்சினார்கள்“ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@@@@@@@
5 . ஜமாத் தொழுகை மகிமை
. எனவே கைதாங்களாக கால்கள் தரையில் இழுத்த வண்ணம் ஜமாத் தொழுகைக்கு வந்தார்கள் .
أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ
يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ وَهُوَ بَيْنَ الرَّجُلَيْنِ
تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ، بَيْنَ عَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ
وَبَيْنَ رَجُلٍ آخَرَ،
4442. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி)
அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு
அவர்களின் வேதனை அதிகரித்தபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும்
நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் கால்கள் பூமியில்
இழுபட அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்)
புறப்பட்டார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரனா) உபைதுல்லாஹ் இப்னு
அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:
ஆயிஷா(ரலி) கூறியதை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)
அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள்“ஆயிஷா(ரலி)
பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?“ என்று கேட்டார்கள். நான்“இல்லை“ என்று
பதிலளித்தேன். “அவர் தாம்
அலீ இப்னு அபீ தாலிப்“ என்று
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
மேலும் ஆயிஷா(ரலி) கூறினார் .
ஹதீஸின் தொடரை கீழே பார்கவும்
@@@@@@@
6 . அப்பழுக்கற்ற ஒப்பற்ற பரிசுத்த் தூதர்
.
ஒரு நாள் மதீனா
நகர் தனிலே ஓங்கும் மஸ்ஜித் . என்ற பாட்டில் வரும் உக்காஷா ரலி அவர்களின்
சரித்திரம் நெகிழ்வூட்டும் மிக முக்கியம் வாய்ந்தது . ஆதாரம் தப்ராணி 2610.
@@@@@@@
7 .கடைசித் தரிசனம்
عَنْ أَنَس بْن مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ المُسْلِمِينَ
بَيْنَا هُمْ فِي صَلاَةِ الفَجْرِ مِنْ يَوْمِ الِاثْنَيْنِ، وَأَبُو بَكْرٍ
يُصَلِّي لَهُمْ، لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَدْ «كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ، فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ
فِي صُفُوفِ الصَّلاَةِ، ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ»، فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى
عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ، وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ يُرِيدُ أَنْ يَخْرُجَ إِلَى الصَّلاَةِ، فَقَالَ أَنَسٌ -[13]-:
وَهَمَّ المُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ، فَرَحًا بِرَسُولِ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشَارَ إِلَيْهِمْ بِيَدِهِ رَسُولُ
اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ أَتِمُّوا صَلاَتَكُمْ ثُمَّ
دَخَلَ الحُجْرَةَ وَأَرْخَى السِّتْرَ»
4448. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
முஸ்லிம்கள் திங்கட்கிழமையன்று ஃபஜ்ருத் தொழுகையில்
இருக்க அபூ பக்ர்(ரலி) முஸ்லிம்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது ஆயிஷா(ரலி)
அவர்களின் அறையின் திரையை விலக்கிக் கொண்டு திடீரென (வெளியே) வந்தவர்கள் இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் தாம். மக்கள் தொழுகை அணிகளில் நின்று கொண்டிருக்க அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுப்பிறகு
புன்னகைத்தார்கள். அபூ பக்ர்(ரலி) (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத்
தம் குதிகால்களால் பின்வாங்கிச் சென்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த
வரவிரும்புகிறார்கள் என்று அபூ பக்ர்(ரலி) நினைத்துவிட்டார்கள். முஸ்லிம்கள் இறைத்தூதர்(ஸல்)
அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் தம் தொழுகையில் (கவனம் சிதறி) குழப்பத்திற்குள்ளாக இருந்தார்கள்.
எனவே@ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்“ என்று தம் கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு அறைக்குள்
நுழைந்துகொண்டு திரையைத் தொங்கவிட்டார்கள்.
ஸஹீஹ்
புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@@@@@@@
8 .மரண தருவாய் வரை இஸ்திக்பார்-பாவ
மன்னிப்பு
أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ
أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْغَتْ
إِلَيْهِ قَبْلَ أَنْ يَمُوتَ، وَهُوَ مُسْنِدٌ إِلَيَّ ظَهْرَهُ يَقُولُ:
«اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ»
4439 4440. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக்
கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி
தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ
அந்த நோயின்போது அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின்
மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின்
(உடல்) மீது தடவலானேன்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள
@@@@@@@
9 . நல்லோருக்கும் சகராத்
வேதனை உண்டு.
أَوَكَانَتْ عَائِشَةُ زَوْجُ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ بَيْتِي وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ
قَالَ: «هَرِيقُوا عَلَيَّ مِنْ سَبْعِ قِرَبٍ، لَمْ تُحْلَلْ، أَوْكِيَتُهُنَّ
لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ» فَأَجْلَسْنَاهُ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ
زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ
عَلَيْهِ مِنْ تِلْكَ القِرَبِ، حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا بِيَدِهِ، «أَنْ
قَدْ فَعَلْتُنَّ» قَالَتْ: ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ فَصَلَّى بِهِمْ
وَخَطَبَهُمْ
மேல உள்ள ஹதீஸின் தொடர்
4442. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி)
அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோய்க்காலப் பராமரிப்புக்காக)
என் இல்லத்திற்கு வந்து அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள்) வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத
ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியினால்) மக்களுக்கு
நான் உபதேசம் செய்யக்கூடும்“ என்று
கூறினார்கள். எனவேஇ நாங்கள் அவர்களை ஹஃப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும்
பாத்திரத்தின் மீது அமரவைத்தோம். பிறகு அவர்களின் மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத்
தொடங்கினோம். அவர்கள்ப “(சொன்னபடி)
செய்துவிட்டீர்கள் (போதும்)“ என்று
கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத்
தொழுகை நடத்தினார்கள்; பிறகு
உபதேசமும் செய்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَاتَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّهُ لَبَيْنَ حَاقِنَتِي
وَذَاقِنَتِي، فَلاَ أَكْرَهُ شِدَّةَ المَوْتِ لِأَحَدٍ أَبَدًا، بَعْدَ
النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
4446. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந்திருந்த
நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். எனவே நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எவருடைய
மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவதில்லை.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@@@@@@@
10 . உலகம் வஹ்யின்
ஒளியை இழந்து இருண்டு போகும் இறுதி நேரம் + மிஸ்வாக்கின் சிறப்பு .
دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ،
وَبِيَدِهِ السِّوَاكُ، وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ، وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ
السِّوَاكَ، فَقُلْتُ: آخُذُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ»
فَتَنَاوَلْتُهُ، فَاشْتَدَّ عَلَيْهِ، وَقُلْتُ: أُلَيِّنُهُ لَكَ؟ فَأَشَارَ
بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَلَيَّنْتُهُ، فَأَمَرَّهُ، وَبَيْنَ يَدَيْهِ
رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ - يَشُكُّ عُمَرُ - فِيهَا مَاءٌ، فَجَعَلَ يُدْخِلُ
يَدَيْهِ فِي المَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا
اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ» ثُمَّ نَصَبَ يَدَهُ، فَجَعَلَ يَقُولُ:
«فِي الرَّفِيقِ الأَعْلَى» حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ
4449. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய
(முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே
இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும்
அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும்.
(இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்) என் சகோதரர் அப்துர் ரஹ்மான்
தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்)
அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே
பார்ததுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான்
புரிந்து கொண்டேன். எனவே “உங்களுக்கு
அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?“ என்று
நான் கேட்க அவர்கள் தம் தலையால் ஆம்“ என்று
சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்கஇ அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக்
கடினமாக இருந்தது. நான் “பல் துலக்கும்
குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?“ என்ற கேட்டேன்.
அவர்கள் பதம் தலையால் “ஆம்“ என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன்.
அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய “தோல் பாத்திரம்
ஒன்று“ அல்லது “பெரிய மரக் குவளையொன்று“ இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்)
(தோல் பாத்திரமா? மரக் குவளையா
அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள்
நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு“ என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி
“(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த
தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)“ என்று
பிரார்த்திக்கலானார்கள். இறுதியில்இ அவர்களின் உயிர் கைப்பற்றப்படஇ அவர்களின் கரம்
சரிந்தது.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
சகராத் கடிணமாக இருந்ததால் நபியின்
துஆ .
اللَّهُمَّ
أَعِنِّي عَلَى سَكَرَاتِ الْمَوْتِ சகராத்
வேளையிலும் (அதனை இலகுவாக்கி) எனக்கு உதவி செய்வாயாக . இப்னு மாஜஹ் 1612.
@@@@@@@
11 . உணர்வு இழந்து கட்டுபாட்டை
இழக்க செய்யும் “செய்தீ”
أَنَّ عَائِشَةَ -[14]-، أَخْبَرَتْهُ:
أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ
بِالسُّنْحِ، حَتَّى نَزَلَ فَدَخَلَ المَسْجِدَ، فَلَمْ يُكَلِّمُ النَّاسَ
حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ، فَتَيَمَّمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُغَشًّى بِثَوْبِ حِبَرَةٍ، فَكَشَفَ عَنْ وَجْهِهِ
ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ وَبَكَى، ثُمَّ قَالَ: «بِأَبِي أَنْتَ
وَأُمِّي، وَاللَّهِ لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا
المَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ، فَقَدْ مُتَّهَا»
4452+4453:.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அபூ பக்ர்(ரலி) “ஸுன்ஹ்“ எனுமிடத்திலுள்ள தம் உறைவிடத்திலிருந்து ஒரு
குதிரை மீது பயணம் செய்து முன்னோக்கி வந்து (மதீனாவை அடைந்து குதிரையைவிட்டு) இறங்கிப்
பள்ளிவாசலுக்குள் நுழைத்தார்கள். மக்களிடம் பேசவில்லை. இறுதியில் என்னிடம் வந்து இறைத்தூதர்(ஸல்)
அவர்களைத் தேடினார்கள். அவர்கள் (இறந்து) யமன் நாட்டுத் துணி ஒன்றினால் போர்த்தப்பட்டிருக்க
அவர்களின் முகத்தைவிட்டு (அத்துணியை) நீக்கி அவர்களின் முகத்தின் மீது தம் தலையைக்
கவிழ்த்து(-தாழ்த்தி) அவர்களை முத்தமிட்டு அழுதார்கள். பிறகு “என் தந்தையும் என்
தாயும் தங்களக்கு அர்ப்பணமாகட்டும். உங்களுக்கு அல்லாஹ் இரண்டு இறப்புகளை ஒன்று சேர்க்கவில்லை.
உங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறப்பைத் தாங்கள் அனுபவித்துவிட்டீர்கள்“
என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@@@@@@@
12 . கட்டுபாட்டுக்குள் கொண்டு
வரும் நிகரற்ற நுண்ணறிவும்
عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أَبَا
بَكْرٍ خَرَجَ وَعُمَرُ بْنُ الخَطَّابِ يُكَلِّمُ النَّاسَ فَقَالَ: اجْلِسْ يَا
عُمَرُ، فَأَبَى عُمَرُ أَنْ يَجْلِسَ، فَأَقْبَلَ النَّاسُ إِلَيْهِ، وَتَرَكُوا
عُمَرَ،
فَقَالَ أَبُو بَكْرٍ: " أَمَّا
بَعْدُ :
فَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ
مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ،
وَمَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ اللَّهَ
فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ،
قَالَ اللَّهُ: {وَمَا مُحَمَّدٌ إِلَّا
رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} [آل عمران: 144]
4454. இப்னு அப்பாஸ்(ரலி)
அறிவித்தார்
(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு)
அபூ பக்ர்(ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை
என்று கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் “உமரே! அமருங்கள்“
என்று அபூ பக்ர்(ரலி)
கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்தார்கள்.
அப்போது மக்கள் உமர்(ரலி) அவர்களை விட்டுவிட்டு
அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப்
புகழ்ந்துவிட்டு
(மக்களே) அறிந்து கொள்ளுங்கள் உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என
நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்து விட்டார்கள்
என்பதை அறிந்துகொள்ளட்டும்.
உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் “அல்லாஹ் என்றென்றும்
உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்“ என்பதை அறிந்துகொள்ளட்டும்.
“அல்லாஹ் கூறினான்;
{وَمَا مُحَمَّدٌ
إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ} முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும்
(என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே அவர் இறந்துவிட்டால்
அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழை மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா?
அப்படி யாரேனும்
தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது;
அன்றியும் அல்லாஹ்
நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்“ (திருக்குர்ஆன் 3:144)
என்றார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ்
அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான்
இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப
ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.
உமர்(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோது தான்
அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்)
சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்)
அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
@@@@@@@
13 .வல்லரசு தலைவர்/அதிகாரி
இறந்துவிடுகிறார் . ஆனால் அவர்க்குறிய சொத்து சில சில்லறை நயா பைசாக்கள் மட்டும் .
«مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ دِينَارًا، وَلاَ دِرْهَمًا، وَلاَ عَبْدًا، وَلاَ أَمَةً،
إِلَّا بَغْلَتَهُ البَيْضَاءَ الَّتِي كَانَ يَرْكَبُهَا، وَسِلاَحَهُ، وَأَرْضًا
جَعَلَهَا لِابْنِ السَّبِيلِ صَدَقَةً»
4461. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ தீனாரையோ
(வெள்ளி நாணயத்தையோஇ பொற்காசையோ) அடிமையையோ அடிமைப் பெண்ணையோ (வேறு எச்செல்வத்தையுமோ)விட்டுச்
செல்லவில்லை; “பைளா“ எனும் தம் கோவேற கழுதையையும்இ தம் ஆயுதங்களையும்இ
வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
«تُوُفِّيَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ
يَهُودِيٍّ بِثَلاَثِينَ»
4467. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
முப்பது “ஸாவு“ வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் காலம்
யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் நபி(ஸல) அவர்கள் இறந்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்.
நபி ஸல் அவர்களுக்கு மாகமம் மஹ்மூதாவை
கொடுப்பனாக. தீனை முழுமையாக பேணி நடந்து நபியின் சிபாரிசு பெரும் பாக்கியவான்களாக
நம்மையும் குடும்பத்தரையும் முஸ்லிம்கள் அனைவரயும் ஆக்குவனாக .
اللهم صل علي محمد وعلي آل محمد
@@@@@@@@@@@@@@@@@@@@@
பொருள் அடக்கம் :
1. நபி ஸல்
அவர்களின் இறுதி ஹஜ்ஜில் மிகப்பெரும் பேருரை
2 .இறுதி பயணத்தின் முன்னறிவிப்பு
3 . (உயில்
எழுதுவது போல்) மீண்டும் மீண்டும் முழங்கியது மூன்று காரியம் பற்றி தாகும்
4 . மரணத்தின்
இறுதி மூச்சில் (சாபம் என) அபாய சங்கு ஊதல்
5 . ஜமாத்
தொழுகை மகிமை . எனவே கைதாங்களாக கால்கள் தரையில் இழுத்த வண்ணம் ஜமாத் தொழுகைக்கு வந்தார்கள்
.
6 .அப்பழுக்கற்ற ஒப்பற்ற பரிசுத்த் தூதர் .
7.கடைசித்
தரிசனம்
8.மரண தருவாய்
வரை இஸ்திக்பார்-பாவ மன்னிப்பு
9.நல்லோருக்கும்
சகராத் வேதனை உண்டு.
10.உலகம்
வஹ்யின் ஒளியை இழந்து இருண்டு போகும் இறுதி நேரம் + மிஸ்வாக்கின் சிறப்பு .
11.உணர்வு இழந்து
கட்டுபாட்டை இழக்க செய்யும் “செய்தீ”
12 . கட்டுபாட்டுக்குள்
கொண்டு வரும் நிகரற்ற நுண்ணறிவும்
13.வல்லரசு தலைவர்/அதிகாரி இறந்துவிடுகிறார் . ஆனால்
அவர்க்குறிய சொத்து சில சில்லறை நயா பைசாக்கள் மட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.