வியாழன், 28 செப்டம்பர், 2017

ஆஷூராவும் அராஜக அரசியலின் பேரழிவும்

بسم الله الرحمن الرحيم

ஆஷூராவும் அராஜக அரசியலின் பேரழிவும்

நீதியே வெல்லும், அராஜகம் அழியும்' நன்றியோடு நடைபோட்டால் வளர்ச்சி. நன்றி கொன்றால் வீழ்ச்சி என்பதையே முஹர்ரம் மாதம் பறை சாற்றுகிறது.

நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு. உலகில் எல்லோருக்கும்  எல்லாம் அனுபவிக்க கிட்டலாம் / இழந்தும் போகலாம்.

உரிய முறையில் கிட்டுமானில் அதற்கு தான் மறுமை என ஒரு நிரந்தர வாழ்வு இன்றி அமையாதது

وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ (35

மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 21:35)

எனவே இது ஒரு சோதனை களம் . மிக எச்சரிக்கை . பதவியை / பொறுப்புகளை சரியாக பயன் படுத்த வேண்டும்.

தவறி அராஜகம் / அநியாயம் செய்ய துணிந்தால் பின் விளைவுகள் உன்னை துரத்தும்.

1 .@@@@@@@

வேண்டாம் அராஜகம்.

அநீதம் கூடாது என இறைவன் தனக்கு தானே ஒரு சட்டம் அமைத்துக் கொண்டான்

عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا،

5033. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45.பெற்றோருக்கு நன்மை செய்வதும்,உறவைப் பேணி வாழ்வதும்.

பிற சமூக மக்களாக இருந்தாலும் அநீதம் கூடாது என கவர்னருக்கு கட்டளை.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى اليَمَنِ، فَقَالَ: «اتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ»

2448. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில்,அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (கவர்னராக -ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்


2 .@@@@@@@

நன்றிக்கு வளர்ச்சி.

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ (7)
அன்றி, உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, "இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அல்குர்ஆன் : 14:7)

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا (147)

 நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப் போகிறான்?அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும்  கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:147)

நன்றியோடு நீதியோடு நடந்த காரணத்தால் படை பலமோ ஆயுத பலமோ ஆட்சிக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமலே பற்பல நூற்றாண்டுகள் செங்கோல் ஆட்சி செய்தார்கள் ஆரம்ப கால இஸ்லாமியர்கள்.

நம் பாரத மண்ணையும் அகண்ட பரதமாக மாற்றி ஆட்சியை நிறுவி எண்ணூறு ஆண்டுகாலம் அற்புதமாக கட்டி ஆண்டார்களே முகலாய முஸ்லிம் மன்னர்கள்.

3 .@@@@@@@

நன்றி கொன்றால் வீழ்ச்சி

وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ.

அன்றி, இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் :6:123)

وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ

மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்: என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம்,என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?

(அல்குர்ஆன் : 43:51)                        .

إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (4)

திண்ணமாக, ஃபிர்அவ்ன் பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான். அதில் வசிப்பவர்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான்;அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டுவிட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரைச் சேர்ந்தவனாக இருந்தான்.(அல்குர்ஆன் : 28:4).

இன்று பர்மா போன்ற சில இடங்களில் அரங்கேறும் துன்பம் முஸ்லிம்களுக்கு புதியது அல்ல.

4 .@@@@@@@

வலை வீசப்படுகிறது.

எலிப் பொறியில் கருவாடு + மீன் தூண்டிலில் தீனிவைத்தது அதை வேட்டையாட என அதற்கு தெரியுமா ?

அவ்வாறே அத்துமீறி அராஜகம் செய்பவர்களை வேட்டையாட  வலை விரிக்கப்பட்டுள்ளன.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ (44)

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.
(அல்குர்ஆன் : 6:44)

فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (45)

இவ்வாறு, அக்கிரமம் செய்த அச்சமுதாயத்தினர் அடியோடு வேரறுக்கப்பட்டார்கள். அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியதாகும். (அவனே அக்கிரமக்காரர்களை வேரறுத்தான்!)(அல்குர்ஆன் : 6:45)

5 .@@@@@@@

அவர்களை கருவறுக்க பிரமாண்டமான தயாரிப்போ ஆயுதமோ வேண்டாம் துச்சமானது போதும்.

1. வளர்த்த கடா முட்டியது.

வல்லரசாக தன்னை மார்தட்டிக் கொண்ட பிர்அவ்னை அழிக்க பால் குடி பருவம் முதல் தானே வளர்த்த சின்ன (பையன்) மூஸா (அலை) அவர்கள்.

وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا إِنَّهُمْ جُنْدٌ مُغْرَقُونَ (24).

(நீங்கள் தப்பித்துச் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். (அதை சீற்படுத்த் வேண்டாம் ஏனெனில்) நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப் பட்டுவிடும்" (என்று கூறி மூழ்கடித்தான்.)
(அல்குர்ஆன் : 44:24)

2 . பெரும் படை யானைகளுடன் படையெடுத்த வந்த அப்ரஹா என்ற அர(க்-)கனை கொள்ள சின்னஞ் சிறு பறவைகள்.

3 . மக்கா மாநகரில் பெரும் பெருச்சாலியாக திரிந்த / முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என கொக்கரித்த அபூ ஜஹ்லுக்கு பத்ரு போரில் சங்கு ஊத  முஆத் இப்னு அமர் ரலி அவர்கள். முஆத்(-முஅவ்வித்)இப்னு அஃப்ரா ரலி அவர்கள் என்ற இரண்டு சிறார்களே.

6 .@@@@@@@

ஏன் தான் இவர்களை எல்லாம் அல்லாஹ் விட்டு வச்சிருக்கானோ என சில ஆதங்கம்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ (42)

இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருத வேண்டாம்! அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்; (அல்குர்ஆன் :14:42)

«إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ: {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ} [هود: 102]

4686. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்குவிட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன்11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

7 .@@@@@@@

பொறுத்திருந்து ரசிப்போம்.
அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டவர்களின் கெதி?
قُلْ لِلَّذِينَ آمَنُوا يَغْفِرُوا لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ اللَّهِ لِيَجْزِيَ قَوْمًا بِمَا كَانُوا يَكْسِبُونَ (14)

(நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: யார் அல்லாஹ்விடமிருந்து கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்கின்றார்களோ அவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் ஒரு சமுதாயத்திற்கு அவர்கள் சம்பாதித்ததற்கான கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காக!

(அல்குர்ஆன் : 45:14)

1.. துரதிஷ்ட வசமாக பெரும் பதவி / பெரும் பொறுப்புகளை பெற்று இருந்த சில பல தலைவர்கள் அட்ரஸ் இல்லாமல் போனார்களே . அது தான் (பதவியை) கொடுத்து கேவலப் படுத்துவது என்பது.

2. . அதே வரிசையில் இன்னும் பலர் காத்து இருக்கிறார்கள் .பொறுத்து இருந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ் .

3 .செத்து நாறிப் போன பிணத்தை போல் எட்டு ஆண்டு கோமா நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன்..

இவர் .2006ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது ஏரியல் ஷரோனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதுமுதல் அவர் கோமா நிலையில் இருந்து வந்தார் எட்டு ஆண்டுகளாக மருத்துவர்களின் சிகிச்சை பராமரிப்பில் இருந்து வந்த  அவருக்கு ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக முக்கிய உறுப்புகள் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்து போயிருந்த நிலையில் மோசமடைந்தது. அவர் 11 ஜனவரி 2014ல் காலமானார். அவருக்கு வயது 85.http://www.bbc.com/tamil/global/2014/01/140111_arialsharon.

4 .சொந்தக் கைகளால் சுட்டு அழிந்தான் .

ஜெர்மனியில் பல இலட்ச நபர்களை அநியாயமாக கொன்று யாருக்கும் அடங்காமல் அலைந்த அராஜகன் ஹிட்லரை துளைத்துக் கட்டியது எந்த படையும் அல்ல. .சொந்தக் கைகளால் சுட்டு அழிந்தான்

அடால்ஃப் இட்லர் (Adolf Hitler, ஏப்ரல்20,1889- ஏப்ரல்30 ,1945) ஜெர்மனியின் நாசிக்கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர்1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர்என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின்செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர்பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் [2] சுட்டுத் தற்கொலைசெய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

8 .@@@@@@@

புதைக்கப் படவில்லை .விதைக்கப் படுகின்றனர் .

"اسلام زنده هوتا هے هر كربلا كي بعد"

இஸ்லாம் சிZந்தா ஓதாஹே ஹர் கர்பலா கே பஹ்த்

"ஒவ்வொரு கர்பலா போருக்குப் பின்னாலும் இஸ்லாம் புத்துயிர் எழுச்சி அடையும்"

என அல்லாமா இக்பால் ரஹ் சொல்வார்கள்.

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (8)

அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந் நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான். (அல்குர்ஆன் : 61:8)

9 .@@@@@@@

ஷியாக்களின் மாரடித்தல் தீ மிதித்தல் கூடாது

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ (195)

உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்  (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:195)

«لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»

1294.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.'
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்)