செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இழப்பு பேரிழப்பு

بسم الله الرحمن الرحيم
இழப்பு பேரிழப்பு
****************************
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏ (2:269)
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ(58:11)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا)     (رواه البخاري )

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனக்கே! என்றென்றும் வற்றாத அவனுடைய கருணையும் சமாதானமும் இறுதித் தூதர் எம்பெருமானார்( ஸல்) அவர்களின் மீதும். இதர நபிமார்களின் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் சத்திய ஸஹாபாக்கள் சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த உலமாக்கள் மீதும் உண்டாவதாக ஆமீன்!

தான் விரும்பிய சட்டங்களை அல்லாஹுதஆலா தன்னுடைய தூதர்களின் வாயிலாக மனிதர்களுக்கு அறிவித்து வந்தான். அந்த வகையில் மனித குலத்துக்கு நிறைவானதோர் மார்க்கத்தையும் வாழ்வியல் சட்டங்களையும் இறுதியாக வந்த கண்மணி நாயகம் ( ஸல்) அவர்கள் மூலமாக இறக்கியருளினான்.
அண்ணல் நபி( ஸல்) அவர்களுக்குப் பிறகு தூதர்களை அனுப்பும் நோக்கம் அல்லாஹ்வுக்கு இருக்கவில்லை எனவே உலகம் உள்ளளவும் தேவைப்படும் எல்லாச் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக கண்மணி நாயகம் ( ஸல்)அவர்கள் மூலம் உலகிற்கு அறிவித்தான்.

நபிகள் நாயகம்( ஸல்) அவர்களுக்குப் பிறகு அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு அண்ணல் நபி( ஸல்) அவர்களின் வாரிசுகளான உலமாக்களைச் சார்ந்தது  அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்ட உலமாக்களின் வாரிசுத் தொடர் நபித்தோழர்கள் மூலம் துவங்கியது.
العلماء هم ورثةالانبياء
நபித்தோழர்களாக அப்போதைக்கிருந்த உலமாக்களிடம் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் இந்த பொறுப்பைத் தனது இறுதி ஹஜ்ஜின்போது ஒப்படைத்தார்கள்.

عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: ((بلِّغوا عني ولو آية،
(رواه البخاري)
3461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.  என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

உலமாக்களின் சிறப்பு
*************************
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌  وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا‌  وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏ 
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:269)

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُّ فِي الدِّينِ - احمد
யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்க விளக்கத்தை தருகின்றான்.

·        عَنِ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مَثَلَ الْعُلَمَاءِ فِي الْأَرْضِ كَمَثَلِ النُّجُومِ فِي السَّمَاءِ يُهْتَدَى بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ فَإِذَا انْطَمَسَتْ النُّجُومُ أَوْشَكَ أَنْ تَضِلَّ الْهُدَاةُ - (رواه  احمد)
உலகில் உலமாக்களுக்கு உதாரணம்.வானில் உள்ள நட்சத்திரங்களைப் போன்றதாகும். தரையிலும் கடலிலும் உள்ள இருட்களில்  அந்த நட்சத்திரங்களைக் கொண்டே  வழிகாட்டப்படுகிறது. அவைகள் ஒளியிழந்துவிட்டால்  வழிதவறிவிடும்.

·        عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ. (رواه مسلم )
நாஃபிஃ ( ரலி) அவர்கள் உஸ்ஃபான் என்னும் இடத்தில் உமர் ( ரலி) அவர்களை சந்தித்தார்கள்.  அவரை உமர் ( ரலி) அவர்கள் மக்காவிற்கு அதிகாரியாக நியமித்திருந்தார்கள். எனவே இந்த கிராமத்திற்கு யாரை அதிகாரியாக நியமித்துள்ளீர்கள் என உமர் ( ரலி) கேட்க அதற்கு நாஃபிஃ ரலி அவர்கள் நான் இப்னு அப்ஜாவை நியமித்துள்ளேன் என்றார். அவர் யார் என்று உமர் ரலி கேட்டார்கள். அவர் எங்களின் அடிமைகளில் ஒருவர் என்றார். அடிமையை இவர்களுக்கு அதிகாரியாக நியமித்துள்ளீரா? எனக்கேட்டபோது அவர் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவராகவும் இல்முல் ஃபராயிலை நன்கு கற்றவராகவும் இருக்கின்றார் என்றார்கள். இதைக் கேட்ட உமர் ரலி அவர்கள் இந்த வேதத்தைக் கொண்டு அல்லாஹ் சிலர்களின் அந்தஸ்த்தை உயர்த்துகிறான்  சிலர்களை தாழ்த்துகிறான் என்றார்கள்.

·        عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ (رواه الترمذي)

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றி கூறப்பட்டது. இருவரில் ஒருவர் வணக்கசாலி மற்றொருவர் ஆலிம். வணக்கசாலியைப் பார்க்கிலும் ஆலிமுடைய சிறப்பாகிறது  உங்களில் தாழ்ந்தவரைப் பார்க்கிலும் என்னுடைய சிறப்பைப் போன்றது என்றார்கள். மேலும் அல்லாஹ் ஆலிமுக்காக ரஹ்மத் செய்கிறான் வானவர்கள் அவருக்காக பாவமன்னிப்பு கேட்கிறார்கள் இன்னும் வானம் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் புற்றில் உள்ள எறும்பு தண்ணீரில் உள்ள மீன் உட்பட அனைத்தும்  மக்களுக்கு நலவை கற்றுக் கொடுக்கக்கூடிய ஆலிமுக்காக பாவமன்னிப்புத் தேடுகிறது என்றார்கள்.

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا إِلَّا مَنْ أَحْيَاهُ اللَّهُ بِالْعِلْمِ   -( رواه  إبن ماجة)
விரைவில் குழப்பமான ஒரு காலம் வரும். அப்பொழுது ஒருவன் காலையில் முஃமினாக இருப்பான் மாலையில் காஃபிராக மாறிவிடுவான். ஆனால் யாருக்கு அல்லாஹ் கல்வி ஞானத்தை கொடுத்துள்ளானோ அவர்களைத்தவிர என்று நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆலிம்களின் சேவைகள்
************************
இந்த    உலகில்      எண்ணற்ற    பல         முஸ்லிம்     சகோதரர்கள் சேவையாற்றுகிறார்கள். ஆலிம்களும் சேவை செய்கின்றனர். ஆனாலும் சேவையில் உச்சநிலையை பெற்றவர்கள் ஆலிம்கள் தான். ஏனெனில் மற்ற எல்லா நண்பர்களும் சேவை மாத்திரம் தான் செய்கின்றனர். ஆனால் ஆலிம்கள்தான் சேவையும் செய்கின்றனர்.  சேவை செய்பவர்களை உருவாக்கவும் செய்கிறார்கள். இந்த சமுதாயத்தில் யாரெல்லாம் சேவை செய்கின்றார்களோ அவர்கள் ஏதேனும் ஒரு ஆலிமுடைய பேச்சில்,எழுத்தில்,நட்பில் தான்  சேவை மனப்பான்மையை  பெற்றிருப்பார். மேலும் இது அவர்களுடைய வாழ்வில் ஒரு பகுதியாகும். வாழும் இவ்வுலகில் சேவை செய்வதையே வாழ்க்கையாக ஆக்கிகொண்ட சமுதாயம் தான் ஆலிம்கள்.   ஆலிம்களின் உலகில் முன்னோடி சேவையாளர்கள் திருக்குர் ஆனை நூல் வடிவில் தந்த நபித்தோழர் ஜைத் பின் ஸாபித்தும் (ரலி). நபியின் ஹதீஸ் கலை வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்பணித்த அபூஹீரைரா (ரலி) அவர்களும். அந்த ஹதீஸ்களை கிதாப் வடிவில் இஸ்லாமிய உலகிற்கு தந்த இமாம் புகாரி (ரஹ்) போன்ற ஹதீஸ் கலையின் தியாகிகளும் எவ்வித தேடலும் சிரமமும் இன்றி மார்க்கத்தின் பிக்ஹு சட்டங்களை அறிந்து இஸ்லாமிய கடமைகளை சீராக நிறைவேற்ற வழி வகுத்த அறிவுக் கொடை வள்ளல்களான மத்ஹபின் நான்கு இமாம்களும்  ஆலிம்களின் முன்மாதிரி சேவையாளர்கள் ஆவார்கள்.

ولما نزل العذاب بقوم يونس عليه السلام لجأوا الى عالم فيهم كان عنده من العلم شىء وكان يونس ذهب مغاضبا فقال لهم قولوا "يا حى حين لا حى يا حى محيى الموتى يا حى لا اله الا أنت" فقالوها فكشف عنهم العذاب

யூனுஸ் நபியின் கூட்டத்தாரை இறைவனின் வேதனை சூழ்ந்த போது அந்த நேரத்தில் யூனுஸ் நபி தன் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருந்தார்கள். அவர்களில் ஒரு ஆலிம் இருந்தார் அவரிடம் மக்கள் ஒதுங்கினார்கள் அவர் மக்களிடம்
"يا حى حين لا حى يا حى محيى الموتى يا حى لا اله الا أنت"
இந்த திக்ரை சொல்லுங்கள் என்றார் அவர்கள் அதை சொன்னார்கள் எனவே அவர்களை விட்டும் அல்லாஹ் வேதனையை நீக்கினான் அவர்களும் ஈமான் கொண்டார்கள்.
(நூல்: ரூஹுல் பயான்)
கோடிகளையும் இலட்சங்களையும் நோக்கமாகக் கொண்டு கல்வியை தேடும் இவ்வுலகில் தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஏழ்மைக்கும் பெயர் போன இந்த மார்க்கக் கல்வியை அல்லாஹ் ரஸூலை நோக்கமாகக் கொண்டு தேடும் சமுதாயம் தான் இந்த ஆலிம்கள்.
மக்களுக்கான ஆலிம்களின் சேவை
***********************
தாயின் கருவரையில் மனிதன் வாழும் போதே அவன் பூரண சுகத்துடன் பிறக்க வேண்டும் என்று ஆலிம் துஆ செய்கின்றார்,அவன் பிறந்த பிறகு அவனுக்கு பெயர் சூட்டல், கல்வி போதித்தல், திருமணம் செய்து வைத்தல், குழந்தை பேறு கிடைக்க துஆ செய்தல், அவனுக்கு நோய் வந்தால் ஓதி பார்த்தல், அவனுடைய வியாபாரம் செழிக்க பிரார்த்தித்தல், இப்படி அவனுடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் இறைவனுக்காக பங்கெடுக்கும் ஆலிம்கள் அந்த மனிதனுக்கு மரணத்திற்கு பின்னும் எல்லோரும் அவனை மறந்த பிறகும் கூட தினமும் காலை அல்லது தொழுகைக்குப் பின் தொழுகையாளிகளை தன்னுடன் நிறுத்தி கொண்டு கப்ரு ஜியாரத்தின் வழியாக இறந்த சகோதரருக்காக துஆ செய்கின்றார்.

மறுமையிலும். சொர்க்கத்திலும்.தொடரும் ஆலிம்களின் சேவை.
************************
وقال رسول الله صلى الله عليه وسلم " إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة، فيقول العلماء بفضل علمنا تعبدوا وجاهدوا، فيقول الله عز وجل: أنتم عندي كبعض ملائكتي اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة "
நபி அவர்கள் சொன்னார்கள் கியாமத்தில் அல்லாஹ் வணக்கசாலிகளையும் போரில் கலந்த போராளிகளையும் பார்த்து நீங்கள் சொர்க்கம் செல்லுங்கள் என்பான் அப்பொழுது உலமாக்கள் இறைவா அவர்கள் எங்கள் இல்மை கேட்டு தான் வணங்கினார்கள் போரிட்டார்கள் அப்படி இருக்கின்ற பொழுது நீ எங்களுக்கு முந்தி அவர்களை சொர்க்கம் அனுப்புகின்றாயே ஏன் என்று கேட்பார்கள் அல்லாஹ் நீங்கள் என்னிடம் எனது சில மலக்குகளின் அந்தஸ்தில் உள்ளீர்கள் எனவே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவான் அந்த உலமாக்கள் மக்களுக்கு ஷபாஅத் செய்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவார்கள் அதற்குப் பின் அவர்கள் சொர்க்கம் செல்வார்கள்,
(நூல்: இஹ்யாவு உலூமித்தீன்)

وقال يحيى بن معاذ: العلماءأرحم بأمة محمد صلى الله عليه وسلم من آبائهم وأمهاتهم. قيل: وكيف ذلك؟ قال لأن آباءهم وأمهاتهم يحفظونهم من نار الدنيا وهم يحفظونهم من نار الآخرة
யஹ்யா பின் முஆது (ரஹ்) சொன்னார்கள்.  உலமாக்கள் நபியின் உம்மத்தாருக்கு அவர்களின் தந்தை . தாயை விடவும் அதிகம் கருணை காட்டுகின்றார்கள் ஏனெனில் அவர்களின் பெற்றோர் அம்மக்களை உலகத்தின் நெருப்பை விட்டும் தான் பாதுகாக்கின்றார்கள் ஆலிம்களோ மறுமையின் நெருப்பை விட்டும் பாதுகாக்கின்றார்கள்.
(நூல்: இஹ்யாவு உலூமித்தீன்)
இழப்பு பேரிழப்பு
*********************
இத்துனை சிறப்புக்களைக் கொண்ட  இத்துனை சேவைகள் செய்யக்கூடிய ஆலிம்களின் மரணம் இவ்வுலகிற்கு பேரிழப்பாகும் அவர்களின் மரணத்தால் அவர்களின் கல்வியும் அவர்களுடன் சென்றுவிடுகிறது.
موت العالم موت العالم
ஒரு ஆலிமின் மரணம் உலகமே மரணித்ததற்கு சமமாகும் என்பார்கள்.

عن ابي درداء قال قال رسول الله صلي الله عليه وسلم موت العالم مصيبة لاتجبر وثلمة لاتسد وموت قبيلة ايسر من موت عالم وهو نجم طمس( رواه طبراني)

ஓர் ஆலிமின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நிறைவு செய்ய முடியாத குறையாகும். அவர் தம் மரணத்தின் காரணமாக ஒளியிழந்த நட்சத்திரமாக ஆகிவிடுகிறார். ஓர் ஆலிமுடைய மரணத்தை விட ஒரு கோத்திரத்தார் அனைவரின் மரணம் மிகவும் இலேசானது என்று நபி ( ஸல்) கூறினார்கள்.

ஒரு மகான் ஒரு வீதிவழியாக சென்று கொண்டிருந்தார். அவ்வீதியில்  ஒரு செல்வந்தர் வீட்டின் முன்பு மக்கள் ஒன்றுகூடி அழுது கொண்டிருந்தார்கள். ஏன் அழுகின்றீர்கள் என்று மகான் கேட்டார். அதற்கு அவர்கள் இந்த வீட்டில் உள்ள செல்வந்தர் இறந்து விட்டார் என்றார்கள். இதனைக் கேட்ட மகான் செல்வந்தர் தானே இறந்து விட்டார் அவர் சொத்துக்களெல்லாம் இருக்கத்தானே செய்கிறது அவர் எதனையும் எடுத்துச் செல்லவில்லையே பிறகு ஏன் அழவேண்டும் என்றார். ஆனால் ஒரு ஆலிம் மரணித்தால் அழவேண்டும் காரணம் அவருடன் அவர் கற்ற( விலைமதிப்பற்ற ) கல்வியும் சேர்ந்து சென்று விடுகிறது என்றார் அந்த மகான்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا)) (رواه البخاري)

100. “நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு
அமீரே ஷரீஅத்தின் இழப்பு பேரிழப்பு
******************************************
பெங்களூர் ஷபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதல்வர்,
தமிழகத்தில் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரபிக் கல்லூரிகளின் முதல்வர்,
கர்நாடகாவின் அமீரே ஷரீஅத்,
ஆல் இந்தியா மில்லி கவுன்ஸிலின் ஆலோசகர், அரபி,உர்தூ, பாரசீக மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ள பன்னூல் ஆசிரியர்,
மவ்லானா, அல்ஹாஜ், முஃப்தீ, ஹாஃபிள், காரீ அஷ்ரஃப் அலி ஹஜ்ரத் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்துள்ளது.
ஒரு மாபெரும் ஆளுமை அமைதியாகிவிட்டது.
எப்போதும் தூய வெண்மையில் அவர்களின் உடைகளும், உள்ளமும்
பெங்களூர் மத்ரஸாவில் அவர்கள் இருந்தால் விடுமுறை விடப்பட்டது போல் அமைதியாக இருக்கும்.
அவர்களின் கவித்துவமான உர்தூ சொற்பொழிவிற்கு நாடெங்கிலும் தீவிர ரசிகர்கள் உண்டு.
ஸஹீஹுல் புஹாரியை அவர்கள் பாடம் நடத்தும் பாங்கை சொல்லி வியந்துசிலாகிப்பார்கள் அவர்களின் மாணவர்கள்.
பாக்கியாத்தின் மீதும் அதன் மூத்த உஸ்தாதுமார்களின் மீதும் அவர்கள் கொண்டிருந்த காதல் வார்த்தைகளுக்குள் அடங்காதவை.
குறிப்பாக மர்ஹூம் கமாலுத்தீன் ஹழ்ரத்,பி.எஸ்.பி ஹழ்ரத்,ஷப்பீர் அலி ஹழ்ரத் ஆகியோர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்,
துவக்கம் முதலே பாக்கியாத்தில் ஓதி அங்கேயே பட்டம் பெற்ற அதன் தவப் புதல்வர்களில் ஒருவர்.
எப்போதும் பாக்கியாத்தின் மகிமைகளை ஆனந்தத்தோடு பேசுபவர்,
உடல்நலக் குறைவால் சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரில் நடைபெற்ற அண்ணல் அஃலா ஹழ்ரத் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழலை சொன்னபோது கண் கலங்கினார்கள்.
தவணை முடிவதை யூகித்தோ என்னவோ மூன்று மாதங்களுக்கு முன் மவ்லானா ராஹேஃபிதாயீ, தொண்டி முஸ்தஃபா ரஷாதி மற்றும் சில உலமாக்களை குழுவாக அழைத்துக் கொண்டு மர்ஹூமான முக்கிய உலமாக்களின் அடக்கத் தளங்களுக்கு ஜியாரத்திற்கு சென்று வந்தார்கள்.
உலமாக்களின் மரணத்திற்குப் பிந்தைய நிலை குறித்து கான் பாகவி ஹழ்ரத் அவர்களின் கட்டுரை மறு வாசிப்பு செய்ய வேண்டிய நேரமிது.
தனது பேராசிரியர்கள் பலரையும் இழந்து நிற்கும் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரி இப்போது அதன் தகுதி மிக்க முதல்வரையும் இழந்திருக்கிறது.
மொத்தத்தில் தென்னிந்தியாவின் ஆளுமை நிறைந்த ஒரு ஆலிம் பெருந்தகை அமைதியாக ஒரு நீடுதுயிலுக்கு பயணமாகிவிட்டார்கள்.

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ
அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
(Sura Al-Mujadila, Ayah 11)
இந்த ஆயத்தில் கூறப்பட்டது போல இறைவன் அவர்களை உலகிலும் கவுரவப் படுத்தியுள்ளான்... அல்லாஹ் நம் பிள்ளைகளையும் மார்க்கக் கல்வியின் மூலம் உயர்த்துவானாக ஆமீன்.
யா அல்லாஹ் ....மர்ஹூமின் பிழைகள் பொறுத்து சுவனத்தின் உயர் பதவிகளை வழங்குவாயாக. ஆமீன்.

முஃப்தீ ஸாஹிப் அவர்களின் வாழ்க்கை குறிப்பு:
**************************************************
பெயர்: முஹம்மது அஷ்ரஃப் அலி
தந்தை பெயர்: ஹஜ்ரத் மௌலானா அல்லாமா அமீரே ஷரீஅத்  அஃப்ஜலுல் உலமா ஷைகுல் உலமா வல் மஷாயிக் ஷைகுத் தரீகத் ஆஷிகே ரசூல் ஹாஃபிழ் காரி  அபுஸ்ஸஊது அஹ்மது ஃபாஜில் பாகவி சிஷ்தி ஸாபிரி (نورالله مرقده)

தாதா பெயர்: ஹஜ்ரத் மௌலானா அல்லாமா ஹாஃபிழ் காரி அப்துஸ் ஸத்தார் ஆலிம் (نورالله مرقده)

நன்னா பெயர்: ஹஜ்ரத் மௌலானா அல்லாமா ஷைகுல் உலமா வல் மஷாயிக் ஷைகுல் ஹதீஸ் ஷைகுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஃபாஜில் பாகவி சிஷ்தி ஸாபிரி (نورالله مرقده) லால் பேட்டை
பிறப்பு: 1940( -விரிஞ்புரம்)
ஆலிம் ஸனது: பாகவி(1960)
ஃபாஜில் ஸனது: தேவ்பந்தீ(1961)
பைஅத், கிலாஃபத்: தன்னுடைய தந்தை ஹஜ்ரத் மௌலானா அல்லாமா ஆஷிகே ரசூல் ஹாஃபிழ் காரி அபுஸ்ஸஊது அஹ்மது ஃபாஜில் பாகவி சிஷ்தி ஸாபிரி (نورالله مرقده) அவர்களிடமே பெற்றார்கள்.
ஹதீஸ் பாடம் போதித்தல்:
ஹஜ்ரத் முஃப்தீ ஸாஹிப் அவர்கள் ஸபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி-(பெங்களூர்) ஆரம்ப காலத்திலிருந்து ஷைகுல் ஹதீஸாக இன்று வரை சுமார் 51 வருடம் இருந்துள்ளார்கள்.
ஹஜ்ரத் அவர்களின் புனைப்பெயர்கள்:
அமீரே ஷரீஅத்
ஹகீமுல் மில்லத்
ஃபகீஹூல் அஸ்ர்
ஷைகுல் ஹதீஸ்.
ஹஜ்ரத் முஃப்தீ ஸாஹிப் அவர்களின் குடும்ப  சிறப்புகள் பல அதில் ஒன்று:
முஃப்தீ ஸாஹிப் அவர்களின் வீட்டினர்கள் அனைவரும் ஹாஃபிஜே குர்ஆன் ஆகும்.
ஹஜ்ரத் முஃப்தீ ஸாஹிப் அவர்கள் ஹாஃபிழ் , காரி ஆகும்.
முஃப்தீ ஸாஹிப் அவர்களின் தந்தை அபுஸ்ஸஊது அஹ்மது ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஹாஃபிழ் ,காரி ஆகும்.
மேலும் ஹஜ்ரத் அவர்களின் தாதா ஹஜ்ரத்  மௌலானா அப்துஸ் ஸத்தார் ஆலிம்(نورالله مرقده) அவர்கள் ஹாஃபிழ்,காரி ஆகும்.
ஹஜ்ரத் அவர்களின் சிறிய தந்தைகள், சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள்' மாமி மார்கள், அனைவரும் ஹாஃபிழ்களே.....!
ஹஜ்ரத் முஃப்தீ ஸாஹிப் அவர்களின் உடன்பயின்ற உலமா பெருந்தகைகள்:
ஹஜ்ரத் மௌலானா அல்லாமா மீரான் முஹ்யத்தீன் பாகவி ஃபாஜில் பாகவி சிஷ்தி ஸாபிரி (نورالله مرقده) சித்தயன்கோட்டை.( முன்னால் பேராசிரியர்: தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி-பெங்களூர்)( கலீஃபா :ஹஜ்ரத் ஆஷிகே ரசூல் கவ்கபுல் ஹிந்த் காஜா பஷீர் அஹ்மது சிஷ்தி ஸாபிரி (نورالله مرقده) பேர்ணாம்பட்)
ஹஜ்ரத் மௌலானா அல்லாமா ஷைகுல் உலமா வல் மஷாயிக் ஷைகுல் ஹதீஸ் முஹம்மது சித்தீக் அலி பாகவி ஃபாஜில் தேவ்பந்தீ(نورالله مرقده)
( முன்னால் ஷைகுல் ஹதீஸ்: மதரஸா தாவூதீய்யா அரபிக்கல்லூரி-ஈரோடு.   சுமார் 52 வருடம் ஒரே இடத்தில் ஷைகுல் ஹதீஸ் ஆகும்.)( பைஅத்: ஹஜ்ரத் மௌலானா அல்லாமா ஷைகுல் உலமா வல் மஷாயிக் முஹ்யுஸ் ஸுன்னா  ஆஷிகே ரசூல் ஆரிஃபுபில்லாஹ் அப்துல் காதிர் ராய்ப்பூரீ சிஷ்தி ஸாபிரி (نورالله مرقده))
( ஹஜ்ரத் ராய்ப்பூரீ அவர்களின் வஃபாதிற்கு பின்பு ஆரணியில் வாழும் ஆரணி பாவா கமாலுத்தீன் பாகவி சிஷ்தி அவர்களின் கலீஃபா சிஷ்தி பாவாவிடம் பைஅத்தானார்கள்.)

இறப்பு:  ஹி:1438 , துல்ஹஜ் பிறை 15 . ஈஸவி 2017 ,08 ந் தேதி வெள்ளி இரவு வஃபாத் ஆகும்.
அல்லாஹ் ஹஜ்ரத் முஃப்தீ ஸாஹிப் அவர்களின் பொருட்டால் நம்முடைய கல்வி, அமலில் முன்னேற்றத்தை தந்தருள்வானாக.
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.