தியாகங்கள் தொடரட்டும்.
قوله تعالي : من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله
عليه فمنهم من قضي نحبه و منهم من ينتظر...
قوله عليه الصلاة والسلام :
حدثنا أبو نعيم حدثنا زكرياء عن عامر حدثنا عروة
البارقي أن النبي صلى الله عليه وسلم قال الخيل معقود في نواصيها الخير إلى يوم
القيامة الأجر والمغنم
( رواه البخاري )
இந்த மார்க்கம் பல தியாகங்களின் பின்னணியில் நம்மை வந்தடைந்துள்ளது மேலும் அதே தியாகங்களை நாம் தொடருவதாலேயே இது நம் சந்ததிகளுக்கு சேதாரமின்றி போய் சேரும் எனவே ஹஜ்ரத் இப்ராஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்த நாம் அதை தொடருவதில் முனைப்பு காட்ட வேண்டும் .
அல்லாஹ் இந்த தியாக வரலாறுகளை திருமறையில் குறிப்பிடுவதும் இதனால் தான். ஒரு தியாகம் கியாமத் நாள் வரை மக்களால் பின்பற்றப் படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதை நாம் நிதானித்து யோசிக்க கடமைப்பட்டுள்ளோம் .
அல்லாஹ் அந்த தியாகங்கள் தொடர வேண்டும் என்பதால் தான் அதை( குர்பானியை) நடைமுறைப்படுத்த ஏவியுள்ளான் இவைகள் படிப்பதற்கும், பகிர்வதற்கும் மட்டுமான காரியங்கள் அல்ல மாறாக படித்து நடந்து காட்ட வேண்டிய அம்சங்கள்.
அல்லாஹ் ஸஹாபாக்களின் தியாகங்களை புகழ்ந்துரைக்கிறான்.
مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا
اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُمْ مَنْ قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ ۖ
وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.
( அல்குர்ஆன்- 33:23)
உஹது போர் களத்தில் பெரும் உயிர் சேதத்தை சந்தித்த பிறகு அவர்களின் தியாகங்கள் குறித்து இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஏனெனில் பத்ரு போரில்
கைதியாக பிடிக்கப்பட்டவர்களின் விஷயத்தில் பிணைத் தொகை வாங்கிக் கொண்டு விடுதலை செய்யலாம் என்று ஸஹாபாக்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்த போது அதுவே நடைமுறைப்படுத்தப் பட்டது இது விஷயத்தில் இறைவனின் நாட்டம் அவர்கள் அனைவரும் கொலை செய்யப் பட வேண்டும் என்றிருந்தது எனவே அல்லாஹ் ஆயத்தை இறக்கினான்.
مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَىٰ
حَتَّىٰ يُثْخِنَ فِي الْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ
الْآخِرَةَ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.(Sura Al-Anfal, Ayah 67)
لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ
فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
(Sura Al-Anfal, Ayah
68)
« ماكان لنبي أن يكون له أسرى » الآية قال الحاكم صحيح
الإسناد ولم يخرجاه وقال سفيان الثوري عن هشام بن حسان عن محمد بن سيرين عن عبيدة
عن علي رضي الله عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم يوم بدر فقال خير
أصحابك في الأسارى إن شاءوا الفداء وإن شاءوا القتل على أن يقتل عاما مقبلا منهم
مثلهم قالوا الفداء ويقتل منا (رواه الترمذي)
ஜிப்ரயீல் அலை அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் வந்து கூறினார்கள் உங்களுடைய தோழர்களுக்கு அனுமதியுங்கள் அவர்கள் விரும்பினால் பிணைத் தொகை பெற்றுக் கொண்டு கைதிகளை விடுதலை செய்யட்டும் அல்லது அவர்களை கொலை செய்யட்டும் ஆனால் பத்ரில் எதிரிகளுக்கு ஏற்பட்டது போல அவர்களிலும் உயிர்ச் சேதம் ஏற்படும். அதற்கு ஸஹாபாக்கள் பிணைத் தொகையை பெற்றுக் கொண்டு மார்க்கத்திற்காக உயிர் தியாகம் செய்ய பொருந்திக் கொள்கிறோம் என்றார்கள் .
மேலும் உஹது போர்க் களத்தில் அதை உண்மைப் படுத்தினார்கள் இவர்கள் குறித்து தான் இறைவன் பெருமிதமாக குறிப்பிடுகிறான்.
(من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه....)
தங்களது பொருளாதாரத்தை, மனைவி மக்களை, ஏன் உயிரையும் தியாகம் செய்து தியாகச் சீலர்களாக நமக்கு சிறந்த முன்மாதிரியாக அவர்கள் வாழ்ந்து சென்றுள்ளார்கள் அவர்களின் தியாகங்கள் திருமறை குர்ஆனில் ஓதப்படும் ஆயத்துகளாக பதிந்துள்ளது உலகம் அழிந்தாலும் அழியாத அந்த தியாகங்களுக்கு அனந்தர வாரிசுக் காரர்கள் நாம் .
இஸ்லாமியர்களுக்கு ஷஹாதத் இழப்பல்ல பெரும் பாக்கியம்
எனவே தான் இரண்டாம் கலீஃபா உமர் ரலி அவர்கள் இவ்வாறு துஆ செய்பவர்களாக இருந்தார்கள்.
حدثني يحيى عن مالك عن زيد بن أسلم أن عمر بن الخطاب
كان يقول اللهم إني أسألك شهادة في سبيلك ووفاة ببلد رسولك. (رواه المالك في
المؤطا)
"யா அல்லாஹ்; எனக்கு உன் பாதையில் உயிர் தியாகம் செய்திடும் பாக்கியத்தையும் இன்னும் உன் ரஸூலுடைய பூமியில்
மரணிக்கும் பாக்கியத்தை கொடுப்பாயாக"
அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்கள் குறித்து இறைவன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ
اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
(அல்குர்ஆன் - 3:169)
«4261» أخبرنا أحمد بن أبي بكر حدثنا مغيرة بن عبد الرحمن عن
عبد الله بن سعيد عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما قال أمر رسول الله
صلى الله عليه وسلم في غزوة موتة زيد بن حارثة، فقال رسول الله صلى الله عليه
وسلم: ((إن قتل زيد فجعفر، وإن قتل جعفر فعبد الله بن رواحة)). قال عبد الله كنت
فيهم في تلك الغزوة فالتمسنا جعفر بن أبي طالب، فوجدناه في القتلى، ووجدنا ما في
جسده بضعا وتسعين من طعنة ورمية.
[طرفه 4260، تحفة 7718].
"மூதா" போரில் ஜைதுப்னு ஹாரிஸா, ஜஃபர் இப்னு அபூ தாலிப், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என ஒருவர் பின் ஒருவராக ஷஹீதாக்கப் படுவார்கள் என்று தெரிந்தும் இறைவனுக்காக உயிர் தியாகம் செய்ய புறப்பட்ட தன்னலமற்ற தியாகங்களை நாம் நினைவு கூர்ந்து நடந்திட வேண்டும்.
ஆனால் இன்று அந்த தியாகங்கள் குறித்து பேசப்படுவதும் குறைவு அவ்வாறு பேசினாலும் அதற்காக முயற்சிப்பவர்கள் அரிதிலும் அரிதாகிப் போனார்கள் .
உம்மத்தை கட்டமைக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பிலுள்ள நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் கூட ஜூம்ஆ மேடைகளை அலங்கரிப்பதற்காக வேண்டி மட்டுமே இந்த வரலாறுகளை பேசுவதாக தெரிகிறது இல்லையானால் இஸ்லாமியர்களுக்கு எதிராக இவ்வளவு சூழ்ச்சி வலைகள் பின்னப் பட்டிருந்தும் இந்நிலையை அறியாமலும் அல்லது அறிந்திருந்தும் மக்களை விழிக்கச் செய்யாமல் அவர்களில் ஒரு கூட்டத்தை அவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்காமலும் தன் வாழ்வாதாரத்தை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் நம் கடமையை மறந்து வாழ்கிறோம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
ரப்புல் ஆலமீன் திருமறை குர்ஆனில் நம்மை தூண்டி ஆர்வப்படுத்துகிறான்.
وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ
وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ
وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا
تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا
تُظْلَمُونَ
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
(Sura Al-Anfal, Ayah
60)
1910 : حدثنا محمد بن عبد الرحمن بن سهم الأنطاكي أخبرنا عبد
الله بن المبارك عن وهيب المكي عن عمر بن محمد بن المنكدر عن سمي عن أبي صالح عن
أبي هريرةقال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه
مات على شعبة من نفاق قال ابن سهمقال عبد الله بن المبارك فنرى أن ذلك كان على عهد
رسول الله صلى الله عليه وسلم
மேலும் "நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் மார்க்கத்திற்காக தியாகம் செய்யாமல் அல்லது அதைப் பற்றி மனதளவில் கூட எண்ணாமல் யாராவது மரணித்தால் அவர் நயவஞ்கராக மரணிக்கிறார்"
( நூல் : ஸஹீஹூல் முஸ்லிம்)
ஷரீஅத் சட்டத்தில் கை வைத்த பிறகும் தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழித்துக் கொள்ளச் செய்யவே இறைவன் அவர்களுடைய எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து சோதிக்கிறான் இதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் மிகத் துரிதமாக நம் ஷரீஅத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்
பயந்து ஓடுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல அது பெரும் பாவமும் கூட நம் முன்மாதிரிகளான ஸஹாபாக்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மூதா போரில் எதிரிகள் ஒரு இலட்சம் பேர் என்று தெரிந்தும் உறுதியோடு புறப்பட்டுச் சென்றார்கள் பின்னர் அவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் என்று தெரிந்த போது வெறும் 3000 பேர் கொண்ட இந்த படையோடு எதிரிகளை எதிர் கொள்வதா அல்லது நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் தகவல் தெரிவித்து கூடுதலான படையை அனுப்பச் செய்யலாமா? என்று ஆலோசனை செய்தார்கள் இறுதியில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலி அவர்கள் ஓர் ஆக்ரோஷமான வீர உரை நிகழ்த்தி தோழர்களே நீங்கள் எதைப் பார்த்து தயங்குகிறீர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் உயிர் தியாகம் செய்வதையா நம்முடைய இலட்சியத்தில் முதன்மையானது அது தானே....
நாம் உயிரோடு திரும்பிச் செல்வது நம்முடைய இரண்டாவது விருப்பம் தானே இந்த வீர உரைக்குப் பின்னால் மூவாயிரம் பேர் கொண்ட இஸ்லாமியப் படை இரண்டு இலட்சம் பேர் கொண்ட எதிரிப் படையை துவம்சம் செய்த வரலாறு நமக்குரியது.
ஒரு ஆரோக்கியமான உறுதியான சமூகக் கட்டமைப்பிற்கு தியாகம் அவசியம் என்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கட்டமைத்த ஸஹாபாக்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக இருக்கிறது. 13 - வருட காலம் அஹிம்சையாக போராடியவர்கள் மதீனா ஹிஜ்ரதிற்கு பிறகு ஆயுதம் ஏந்தி போராடி ஆட்சியை வென்றெடுத்தார்கள்
இது உலக வாழ்விற்கான தியாகம் மட்டுமல்ல மறுவுலக வாழ்விற்குமான தியாகப் போராட்டமாகும்...
சுவன வாழ்வு அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது என்பதை இறைவனே திருமறையில் குறிப்பிடுகிறான்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا
يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۖ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ
وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا
مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قريب
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
(Sura Al-Baqarah, Ayah
214)
ஆனால் நாம் இன்று எவ்வளவு மன பலம் குன்றி கிடக்கிறோம் இந்த தியாக வரலாறுகளை நாம் எடுத்துக் கூறி குறைந்த பட்சம் நம்மையும், நம்முடைய பொருளாதாரத்தையும், இஸ்லாமிய சமுதாயத்தையும் பாதுகாப்பதற்காக ஏன் ஒன்றிணைந்து செயல்படக் கூடாது! ஒரு பாதுகாக்கும் அமைப்பை ஏன் உருவாக்கிடக் கூடாது!
மார்க்கத்திற்காக போரிடுவது கியாமத் நாள் வரை தொடரும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
2852:حدثنا أبو نعيم حدثنا زكرياء عن عامر حدثنا عروة
البارقي أن النبي صلى الله عليه وسلم قال الخيل معقود في نواصيها الخير إلى يوم
القيامة الأجر والمغنم ( رواه البخاري )
(யுத்தத்திற்கு பயன்படும்)"குதிரையின் நெற்றி முடியில் செல்வம் ( நலவு )கட்டப்பட்டுள்ளது கியாமத் நாள் வரையிலும் (அதாவது)நற்கூலியும், வெற்றிப் பொருளும்...
அந்த நலவுகளை அடைந்து கொள்ள நாம் இறுதி மூச்சு வரையிலும் பாடுபட வேண்டும் தியாக வரலாறுகள் படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் தான்!என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் நாம் நம் எதிரிகளை எதிர் கொள்வதில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் செய்தது போல நம்மை எதிர்க்காத கொள்கையில் முரண்படாத மாற்று மத அன்பர்களுடன் சுமூகம் செய்து கொண்டு அவர்களையும் அரவணைத்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்...
நமக்கான எல்லா முன் உதாரணங்களும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்வில் இருக்கிறது அதை எடுத்து நடந்து சோதனைகளை எதிர் கொண்டு சாதனை படைப்போம் அல்லாஹ் உலமாக்களின் தலைமையில் இந்த சமூகத்தை ஒன்றிணைப்பானாக ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.