புதன், 20 செப்டம்பர், 2017

ஹிஜ்ரத் ஒரு லட்சிய பயணம்

بسم الله الرحمن الرحيم
ஹிஜ்ரத் ஒரு லட்சிய பயணம்
***************************************
يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ َ‏‏‏2:189
(ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺹ ﻗﺎﻝ قال رسول الله صلي الله عليه وسلم ﺃﻥ اﻟﻬﺠﺮﺓ ﺗﻬﺪﻡ ﻣﺎ ﻛﺎﻥ ﻗﺒﻠﻬﺎ. (رواه مسلم)

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சங்கைக்குரிய பெருமக்களே! சங்கையான ஹிஜ்ரி 1439 ம் ஆண்டின் முதல் மாதமாக முதல்நாளாக இன்றய ஜூம்ஆ உடைய நாள் அமைந்திருக்கிறது.

உலகில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும்  ஒரு தனித்துவம் ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது.
அந்த தனித்துவம் என்பது அந்த சமுதாயத்தின் மொழியில் இன்னும்  உணவு முறையில், பழக்கவழக்கங்களில் வெளிப்படும்.
எனவே தான் ஒவ்வொரு சமுதாயமும் தனது தனித்துவம் பாதுகாக்கப் படுவதை தனது கடமையாக எண்ணுவதை நாம் பார்க்கிறோம். இந்த தனித்துவ கலாச்சாரத்தை எந்த சமுதாயமும் இழந்துவிடக்கூடாது. எந்த சமுதாயம் தனது தனித்துவத்தை இழந்துவிடுகிறதோ அந்த சமுதாயம் உலக மக்களால் இழிவாக பார்க்கப்படும். எந்த சமுதாயம் தனது தனித்துவத்தை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொண்டதோ அவர்கள் உலகில் கண்ணியமான சமுதாயமாக பார்க்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு சமுதாயத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றுதான் அந்த சமுதாயத்தினுடைய வரலாறு. அந்த வரலாற்றை பாதுகாப்பது நமது கண்ணியத்தை உறுதி படுத்தக்கூடியது. இன்று உலகிலேயே தனது கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்காத சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம்  இருக்கிறது. நமது வரலாறு என்ன? நாம் கடந்து வந்த பாதை என்ன? என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. உலகில் உள்ள மற்ற சமூகத்தார்கள் தமது தனித்துவத்தை பாதுகாப்பதற்காக தமது வரலாற்றை பாதுகாப்பதற்காக பத்திரிக்கை  சேனல்களை நடத்துகிறார்கள்.  இன்னும் பல்வேறு வகையில் தமது வரலாற்றை அவர்கள் வெளிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.

வரலாற்றை அறிவதன் அவசியம்
**************************************
வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இஸ்லாமிய சரித்திரத்திலே நடந்த ஒரு சான்று.
இமாம் கதீப் பக்தாதி அவர்கள் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் அவர்களுடைய காலத்திலே நடந்த ஒரு சம்பவம்.

பக்தாதிலே அப்பாசியாக்களுடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இஸ்லாமிய நாட்டில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு ஜிஸ்யா என்று சொல்லக்கூடிய ஒரு காப்பு வரி வருடத்திற்கு ஒரு முறை விதிக்கப்படும். அது ஒரு குறைந்த பட்ச தொகைதான். செல்வந்தராக இருந்தால் நான்கு தீனார். நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவராக இருந்தால் இரண்டு தீனார் ஏழையாக இருந்தால் ஒரு தீனார் இதை அவர்கள் கட்டிவிட்டால் அந்த நாட்டினுடைய  ஒரு முஸ்லிமுக்கு தரவேண்டிய எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கும். மேலும் இராணுவத்தில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியதுமில்லை இது இஸ்லாமிய அரசியலமைப்புச் சட்டம்.

பக்தாதிலே அப்பாசிய கலீபாக்களின் ஆட்சியின் போது யூதர்களில் சிலர் கலீபாவிடம் ஒரு கடிதம் கொண்டுவந்து கொடுத்தார்கள். இந்த கடிதம் முஹம்மது ( ஸல்) அவர்கள் ஹஜ்ரி 7 ம் ஆண்டு கைபர் யுத்தம் முடிந்த பின்பு எங்களுக்கு எழுதி கொடுத்த கடிதம் என்றார்கள். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால் யூதர்களிடம் வரி வசூல் செய்யக் கூடாது இது முஹம்மது ( ஸல்) அவர்கள் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த கடிதம் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழே இரண்டு முக்கிய சஹாபாக்களின் சாட்சி கையொப்பமும் இருந்தது. ஒரு சஹாபி முஆவியா பின் அபூசுப்யான் (ரலி) இன்னொரு சஹாபி சஃது பின் அபீமுஆத் (ரலி).

இதைப்படித்த கலீபா திணறிப் போனார்.! இதற்குமுன் இருந்த எல்லா கலீபாக்களும் யூதர்களிடம் வரி வசூல் செய்து வந்துள்ளார்கள்  ஆனால் இந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதே! என்ன செய்வதென்று யோசனை செய்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த மாமேதை இமாம் தீப் பக்தாதியை அழைத்து ஆலோசனை கேட்கிறார். அந்த கடிதத்தை வாங்கிபடித்த இமாம் பக்தாதி அவர்கள் இது பொய்யான கடிதம் என்றார்கள். எப்படி இது பொய்யானது எனக்கூறுகிறீர்கள் எனக்கேட்டபோது. இங்கே சாட்சி கையொப்பமிட்டிருக்கூடிய சஃது பின் முஆத் ரலி ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டே இறந்துவிட்டார் இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பது ஹஜ்ரி 7ஆ ம் ஆண்டு அவர் எப்படி கையெழுத்து போடமுடியும்? இரண்டாவது முஆவியா ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதே ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு மக்கா வெற்றிக்குப்பின்பு தான். எனவே இந்த சம்பவம் நடக்கும் போது சாட்சி கையெழுத்து போட்டுள்ள இருவருமே இல்லை எனவே இது பொய்யான கடிதம் இது யூதர்களின் சூழ்ச்சி அதை கிழித்துப்போடும்படி  இமாம் அவர்கள் கூறினார்கள்.  இங்கே ஒரு வரலாற்றைக் கொண்டுதான் ஒரு சதி முறியடிக்கப்பட்டது. நாம் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு சமுதாயத்திற்கு அவர்களின் கடந்த கால வரலாறு தெரிய ேண்டும்.

இன்றைய முஸ்லிம் சமுதாயமாகிய நமக்கு அந்த வரலாறுகள் தெரியாத காரணத்தினால்தான் இஸ்லாம் குறித்தும் முஸ்லீம்கள் குறித்தும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் எவ்வளவு பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன ? இதை மறுக்க நம்மால் ஏன் முடியவில்லை? காரணம் நமக்கு நம் வரலாறு தெரியாது இது தான் காரணம்.

இன்றைக்கு பாபர் மஸ்ஜிதைப் பற்றி நமக்கு என்ன வரலாறு தெரியும்? முகலாயர்களைப் பற்றி உள்ள உண்மை வரலாறுகளை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா? தெரியவில்லையே! எனவேதான் மீடியாக்களும் பாடப்புத்தகங்களும் நம்மை பற்றி தவறான வரலாற்றை கூறுகிறது நம்மால் அதற்கு பதில் கொடுப்பதற்கு சரியான வரலாறு நமக்கு தெரியாது.

எனவே முஸ்லிம் சமுதாயம் வரலாற்றை தெரிந்து வைத்திருப்பது அவசியம் அந்த வரலாற்றில் ஒரு பகுதிதான் இஸ்லாமிய காலண்டர். இஸ்லாமிய புத்தாண்டு இதைப் பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

நாம் இஸ்லாமிய காலண்டரைத் தான் பயன்படுத்த வேண்டும் ஆங்கில காலண்டரை பயன்படுத்தக் கூடாது.
***********************************
உலகில் ஆரம்ப காலத்திலிருந்தே வருடங்களை கணக்கிடுவதற்கு ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு வழிமுறை இருந்திருக்கிறது. நூஹ் அலை கூட்டத்தினர் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டதை வைத்து வெள்ளப் பிரளயத்திற்கு முன்னால் வெள்ளப் பிரளயத்திற்கு பின்னால் என்று வருடங்களை கணக்கிட்டனர். இப்ராஹீம் அலை கூட்டத்தினர் இப்ராஹீம் அலை நெருப்பு குண்டத்தில் போடப்பட்டதை வைத்து வருடங்களை கணக்கிட்டனர். அந்த வகையில் இஸ்லாமிய ஆண்டு எதை அடிப்படையாக வைத்து கணக்கிடுவது என்ற சர்ச்சை உமர் ரலி காலத்தில் ஏற்பட்டது. நபியுடைய காலத்தில் 12 மாதங்கள் இருந்தது ஆனால் எந்த நிகழ்வை வைத்து வருடங்களை கணக்கிட ஆரம்பிப்பது என்று உமர் ரலி காலத்தில்தான் முடிவு செய்யப்பட்டது.

17 வயதினிலே துவங்கிய ஹிஜ்ரீ புத்தாண்டு.
******************
وإنما أرخ عمر بعد سبع عشرة من مهاجرة رسول الله صَلَّى الله عليه وآله وَسَلَّمَ، وذلك أن أبا موسى الأشعري كتب إِلى عمر: إنه يأتينا منك كتب ليس لها تاريخ. قال: فجمع عمر الناس للمشورة، فقال بعضهم: أرخ لمبعث رسول الله صَلى اللهُ عَلَيه وآله وَسَلَّمَ، وقال بعضهم: أرخ لمهاجرة رسول الله صَلَّى الله عليه وآله وَسَلَّمَ، فقال عمر: لا بل نؤرخ لمهاجر رسول الله صَلى اللهُ عَلَيه وآله وَسَلَّمَ، فإن مهاجره فرق بين الحق والباطل.( المنتظم في تاريخ الملوك والأمم)

[ذِكْرُ الْوَقْتِ الَّذِي ابْتُدِئَ فِيهِ بِعَمَلِ التَّارِيخِ فِي الْإِسْلَامِ]
وَالصَّحِيحُ الْمَشْهُورُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ بِوَضْعِ التَّارِيخِ.
وَسَبَبُ ذَلِكَ أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ كَتَبَ إِلَى عُمَرَ: إِنَّهُ يَأْتِينَا مِنْكَ كُتُبٌ لَيْسَ لَهَا تَارِيخٌ. فَجَمَعَ النَّاسَ لِلْمَشُورَةِ، فَقَالَ بَعْضُهُمْ: أَرِّخْ لِمَبْعَثِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -. وَقَالَ بَعْضُهُمْ: أَرِّخْ لِمُهَاجَرَةِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ عُمَرُ: بَلْ نُؤَرِّخُ لِمُهَاجَرَةِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَإِنَّ مُهَاجَرَتَهُ فَرْقٌ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ، قَالَهُ الشَّعْبِيُّ.
(الكامل في التاريخ)
ஹிஜ்ரீ ஆண்டின் மாதங்கள் முஹர்ரமில் தொடங்கி துல்ஹஜ்ஜில் முடிவடைகின்ற 12மாதங்களாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் வருடத்திற்கு அடையாளமாக எந்தப் பெயரைச் சூட்டலாம், ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஒரு ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கியவர் நபித்தோழர்அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள். அன்னார் ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதும் போது அரசின் கடிதங்களில் தேதியிடப்படாமை குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின் விளைவாகஉடனடியாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய காலண்டர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டார்கள்.

எனவே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம் பற்றி நபித்தோழர்களுடன் ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்தை ஹிஜ்ரீ 17 ம் ஆண்டில் ஹஜ்ரத் உமர் (ரலி)அவர்கள் கூட்டினர்கள். அதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படன. அவை ஒவ்வொன்றும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

சிலர் கூறினார்கள் பெருமானார் எந்த ஆண்டு பிறந்தார்களோ அதிலிருந்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிடலாம் என்றார்கள்.

சிலர் பெருமானார் எப்பொழுது இறந்தார்களோ அதிலிருந்து கணக்கிடலாம் என்றார்கள்.

ஹஜ்ரத் உமர் ரலி அனைத்து கருத்துக்களையும் கேட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் நம்முடைய இஸ்லாமிய ஆண்டு என்பது ஒரு சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதாகவோ ஒரு துக்கத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கக்கூடாது. நபி பிறந்தது சந்தோஷம் நபி இறப்பு துக்கம் இவை அனைத்தையும் தாண்டி இஸ்லாமிய ஆண்டு என்பது ஒரு லட்சிய பயணத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் அந்த லட்சிய பயணம்தான் பெருமானார்
வாழ்க்கையில் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் என்று கூறி உமர் ( ரலி) அவர்கள் ஹிஜ்ரத்தை தேர்வு செய்தார்கள்.

மற்ற விஷயங்களும் கூட உலக வரலாற்றிலும், முஸ்லிம் சமூகத்திலும் முக்கியமானவை தான் என்றாலும் அவை அனைத்தையும் விட ஹிஜ்ரத் மிக முக்கியமானது .என்பதே உமர் (ரலி) அவர்களின் முடிவுக்கு காரணம். ஏனெனில்

*ஹிஜ்ரத் இஸ்லாமிய சமுதாயத்தின் மாபெரும்திருப்புமுனை.

* இஸ்லாம் ஒரு தனி நபரால் அல்லது ஒரு சிறிய குழுவினரால் கடைபிடிக்கப்படும் மார்க்கம் என்றில்லாமல்ச மூக வடிவம் பெற காரணமாக இருந்தது ஹிஜ்ரத்.

*இஸ்லாம் ஆட்சி வடிவம்பெற காரணமாகஇருந்தது ஹிஜ்ரத்.

*இஸ்லாம் ஒரு சர்வதேச வடிவம் பெற காரணமாக இருந்தது ஹிஜ்ரத்.

ஹிஜ்ரத் என்பது எது?
****************************
1438 ஆண்டுகளுக்கு முன்னாலே மக்கமா நகரத்திலே மனித புனிதராக அவதரித்த அண்ணல் நபி( ஸல்) அவர்கள் தங்களின் 40 வது வயதில் நபி பட்டம் கொடுக்கப்படுகிறார்கள். இஸ்லாமிய கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொன்ன பொழுது ஊராரும் உற்றாரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள் பல துன்பங்களை கொடுத்தார்கள் அதன் உச்சக் கட்டமாக நபியை கொலை செய்யவும் முடிவு செய்தார்கள் அந்த நேரத்தில்தான் நபியே அந்த ஊரைவிட்டு வெளியேறி விடுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.

وَقَالَتْ عَائِشَةُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ)). فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ الْمَدِينَةِ، وَرَجَعَ عَامَّةُ مَنْ كَانَ هَاجَرَ بِأَرْضِ الْحَبَشَةِ إِلَى الْمَدِينَةِ. فِيهِ عَنْ أَبِي مُوسَى وَأَسْمَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

1871- ٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ أَبَا الْحُبَابِ سَعِيدَ بْنَ يَسَارٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. ((أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ الْقُرَى يَقُولُونَ يَثْرِبُ. وَهْيَ الْمَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ)).
1871. யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 29.

(ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ اﻟﻌﺎﺹ ﻗﺎﻝ قال رسول الله صلي الله عليه وسلم ﺃﻥ اﻟﻬﺠﺮﺓ ﺗﻬﺪﻡ ﻣﺎ ﻛﺎﻥ ﻗﺒﻠﻬﺎ. (رواه مسلم)
ஹிஜ்ரத் செய்வது அதற்கு முன்செய்த பாவங்களை அழித்துவிடும் என்று நபி( ஸல்) கூறினார்கள்.

எனவே அல்லாஹ்வின் உத்தரவிற்கிணங்க தன்னுடைய தோழர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களோடு கரடுமுரடான பாதைகளிலே சென்று மூன்று நாட்கள் ஃதவ்ரு குகையில் தங்கியிருந்து தொடர்ந்து பதினைந்திற்கும் மேற்பட்ட நாட்கள் பயணம் செய்து குபாவை அடைந்து பிறகு அங்கிருந்து மதீனாவை சென்றடைகின்றார்கள் இந்த நிகழ்ச்சிக்குத் தான் வரலாற்றில் ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகிறது.

முதல் ஹிஜ்ரத்
*****************
لما رأى النبي محمد ما يصيب أصحابه من أذى زعماء قريشلهم، بينما كان يحميه عمه أبو طالب من أذى قريش، فقال لأصحابه: «لو خرجتم إلى أرض الحبشة؟ فإن بها ملكا لا يظلم عنده أحد، وهي - أرض صدق - حتى يجعل الله لكم فرجا مما أنتم فيه»،
மக்காவினுடைய கடுமையான தொல்லை தாங்கமுடியாத வேதனை சஹாபிகள் திருநபியிடம் வந்து முறையிடுகிறார்கள். அப்பொழுது தான் நபி ( ஸல்) அவர்கள்.
அபீசினிய நாட்டிலே ஒரு மன்னர் இருக்கிறார் அவர் நல்லவர் என நான் கேள்விப்படுகிறேன் எனவே மிக துன்பத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் வாய்ப்பு இருக்குமேனால் அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். முதன் முதலாக உஸ்மான் பின் மழ்ஊன் ரலி அவர்கள் தலைமையில்  11 ஆண்கள் 4 பெண்கள் அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

இந்த செய்தியறிந்த குறைஷிகள் அபீசினியாவிற்கு தூதுக்குழு ஒன்றை அனுப்புகின்றார்கள் எங்கள் நாட்டிலிருந்து அகதிகளாக சிலர் வந்திருக்கின்றார்கள் அவர்களை அங்கு தங்க அனுமதிக்கக் கூடாது உடனே  வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள்.இதைக் கேட்ட மன்னர் அவர்கள் என் நாட்டிற்கு வந்திருக்கின்றார்கள் என்ன விஷயம் என்று விசாரிக்காமல் எப்படி அனுப்புவது? அவர்களை அழைத்து வாருங்கள் என்றார். கூட்டம் அழைத்து வரப்பட்டது. அவர்கள் யார்? கொள்கைகள் என்ன? எதற்காக மக்காவிலிருந்து அவர்கள் வந்தார்கள் என்ற விபரங்களையெல்லாம் கேட்கிறார்கள்.  ஹஜ்ரத் ஜஃபர் பின் அபூதாலிப் ரலி அவர்கள் அற்புதமான ஒரு கொள்கை பிரகடனத்தை அந்த அரசவையிலே அழகான முறையில் எடுத்துரைக்கின்றார்கள். கேட்டுக் கொண்டிருந்த மன்னர் சொன்னார் مرحبا மக்களே ! நீங்கள் வாருங்கள் இந்த நாட்டிலே எப்படி நீங்கள் தங்க வேண்டுமென்றாலும் அதற்குரிய வசதிகளை நான் செய்து வைக்கின்றேன்.
اشهد انه رسول الله صلي الله عليه وسلم
மக்கமா நகரில் தோன்றி இருக்கக்கூடிய ஹஜ்ரத் முஹம்மது ( ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று   நான் சாட்சி  கூறுகிறேன்.  முன் வேதங்களை படித்திருக்கிறேன் அதில் சொல்லப்பட்ட அடையாளங்களை வைத்து இவரை நபி என்று நம்புகிறேன். நான் இப்பொழுது அரசராக மட்டும் இல்லையென்றால் மக்காவிற்கு சென்று அவர்களின் செருப்பை எடுத்து சுமந்து செல்லக்கூடிய ஊழியனாக நான் என்னை ஆக்கிக் கொள்வேன் என்றார். இந்த முதல் ஹிஜ்ரத் தான் அந்த அரசனிடத்திலும் அந்த மக்களிடத்திலும் இஸ்லாம் போய்ச் சேருவதற்கு காரணமாக இருந்தது.

அதேபோல மதீனாவிலும்சரி உலக நாட்டிற்கெல்லாம் திருநபி ( ஸல்)அவர்கள் கடிதம் எழுதியது ஹிஜ்ரத்திற்கு பின்னால்தான்.
எனவேதான் உமர் ரலி அவர்கள் இஸ்லாமிய வருடக்கணக்கை கணக்கிட ஹிஜ்ரத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

சந்திரக்கணக்கே சரியான கணக்கு
***************************************
இஸ்லாமிய ஆண்டு என்பது சந்திரக்கணக்கை அடிப்படையாக கொண்டதாகும். உலகில் எல்லா சமுதாயமும் ஆரம்பத்தில் சந்திரனை அடிப்படையாக கொண்டுதான் மாதங்களை வருடங்களை கணக்கிட்டு வந்தார்கள்.
அல்லாஹ்வும் காலங்களை கணக்கிட பிறையைத்தான் கூறுகின்றான்.

يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ َ‏‏‏
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (2:189)

هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏ 
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 10:5)

ஆங்கில வருடம் தொடங்கிய வரலாறு
*****************************************
இந்த சூரிய ஆண்டு உலகில் நடைமுறைக்கு வந்ததே ஒரு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான்.
கிபி 1582 ல் உலக கிறிஸ்தவ மாநாடு ஒன்று நடக்கின்றது அந்த மாநாட்டில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு நமது தனி அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக இனிமேல் சந்திரகணக்கை நாம் புறக்கணித்து விட்டு  சூரிய கணக்கையே பயன் படுத்த வேண்டும் என்று முடிவுசெய்கிறார்கள் அதற்கு பிறகுதான் சூரிய கணக்கு காலண்டர் வரத் தொடங்கியது.

இஸ்லாமிய நாடுகளைப் பொருத்தவரை ஒரு தொன்னூறு வருடங்களுக்கு முன்பு வரை ஜனவரி பிப்ரவரி என்ற சூரிய கணக்கே கிடையாது. ஆனால் எப்பொழுது கிலாபத்தே உஸ்மானியா தகர்க்கப்பட்டதோ அந்த நேரத்தில் இந்த கிறிஸ்தவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை அழிக்க வேண்டுமானால் முஸ்லீம்களிடையே இந்த சூரிய கணக்கை பரப்ப வேண்டும் அவர்களின் வரலாற்றை பின்வரும்  சமுதாயத்தவர் மறக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்தார்கள் அதன் விளைவாகவே இஸ்லாமிய நாடுகளிலும் சூரிய கணக்கு பரவியது. இன்று நாமும் ஒவ்வொரு காரியத்திலும் சூரிய கணக்கையே பார்க்கின்றோம் வருடத்தில் ஒருமுறை நோன்பு பிடிப்பதற்கும் பெருநாள் கொண்டாடவும் மட்டுமே பிறை கணக்கை பார்க்கின்றோம்.

இரண்டுவகை குற்றம்
***************************
சூரிய கணக்கை பின்பற்றுவது இரண்டு வகையில் குற்றமாகும் . முதலாவது இந்த ஆங்கில மாதங்களின் பெயர்களெல்லாம் ரோமர்கள் வணங்கக்கூடிய பணிரெண்டு கடவுள்களின் பெயர்கள். அவைகளை நாம் பயன்படுத்துவது பாவமான செயலாகும். இரண்டாவது முஸ்லிம்கள் முஸ்லிம்அல்லாதவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் குற்றமாகும்.
عن ابن عمر رضي الله عنه قال النبي صلي الله عليه وسلم من تشبه بقوم فهو منهم (رواه ابوداود)
நாம் ஜகாத் கொடுத்தாலும் பிறை கணக்கின்படிதான் கொடுக்க வேண்டும்.
இத்தா இருப்பவர்களும் பிறை கணக்கின்படிதான் இருக்கவேண்டும்.

புத்தாண்டை வரவேற்போம்
***************************
மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நம்முடைய மார்க்கத்தில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. இன்று உலகில் ஆங்கில புத்தாண்டு ஆரம்பமாகும் பொழுது பெரும் பெரும் அனாச்சாரங்கள் கேலிக்கூத்துக்கள் நடைபெருகின்றன. இதற்கு நம்முடைய மார்க்கத்தில் எந்த அனுமதியுமில்லை.

இஸ்லாமிய புத்தாண்டு ஆரம்பமாகும் போது நம்முடைய சிந்தனை இவ்வாறு இருக்க வேண்டும் உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களுக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கிறது. அனைத்தையும் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும்தான் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன். என்றும் அவன் நிலைத்திருப்பவன் எனவே அவனிடமே நான் உதவி தேடுவேன் என்கின்ற சிந்தனை நமக்கு இந்த புத்தாண்டு
தினத்தில் வரவேண்டும்.

நல் அமல்களைக் கொண்டு இவ்வருடத்தை முடிக்க வேண்டும் மேலும் ஆரம்பிக்கவேண்டும்.
قال النبي صلي الله عليه وسلم الاعمال باالخواتم
(رواه البخاري)
என்று அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க இவ்வாண்டு முடிந்து புது வருடம் ஆரம்பமாகும் இந்நாளில் நோன்பு,தவ்பா, மற்றும் நஃபில் வணக்கங்களை  நாம் அதிகமாக செய்ய வேண்டும் இதன் மூலம் நம்முடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுகிறது.

இறுதியும் துவக்கமும் சரியாக இருந்தால் இடையில் ஏற்பட்ட தவறுகளை அல்லாஹ் மன்னிக்கின்றான்.

عَنْ أَنَسٍ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ حَافِظَيْنِ رفعَا إِلَى اللَّهِ مَا حَفِظَا مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ ، فَيَجِدُ اللَّهُ فِي أَوَّلِ الصَّحِيفَةِ  وَفِي آخِر الصَّحِيفَةِ  خَيْرًا , إِلا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِلْمَلائِكَةِ : أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي مَا بَيْنَ طَرَفَيِ الصَّحِيفَةِ "
(ﺿﻌﻴﻒ ﺟﺪا.
ﺃﺧﺮﺟﻪ اﻟﺘﺮﻣﺬﻱ (1/183) ، ﻭﺃﺑﻮ ﻳﻌﻠﻰ ﻓﻲ " ﻣﺴﻨﺪﻩ " (146/2) ، ﻭﻋﻨﻪ اﺑﻦﻋﺴﺎﻛﺮ (10/441 - 442) ، ﻭﺃﺑﻮ ﻃﺎﻫﺮ اﻟﻤﺨﻠﺺ ﻓﻲ اﻷﻭﻝ ﻣﻦ " اﻟﻔﻮاﺋﺪ اﻟﻤﻨﺘﻘﺎﺓ "
(2/1) ، ﻭﻋﻨﻪ اﺑﻦ اﻟﻨﺠﺎﺭ (10/123/2) ﻭاﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ " اﻟﺸﻌﺐ " (2/349/4)
ﻋﻦ ﻣﺒﺸﺮ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﻋﻦ ﺗﻤﺎﻡ ﺑﻦ ﻧﺠﻴﺢ ﻋﻦ اﻟﺤﺴﻦ ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻣﺮﻓﻮﻋﺎ.)

நபி(ஸல்) கூறினார்கள் இரவு அல்லது பகலில் தாங்கள் பதிந்த  அடியார்களின் பட்டோலையை அல்லாஹ் பார்வையிட மலக்குகள் எடுத்துச்சென்று, அதன்  ஆரம்பத்திலும் இறுதியிலும் நல் அமல்கள் பதியப்பட்டிருக்கக் கண்டால், இவனுடைய ஆரம்பமும் இறுதியும் நல்லதாக உள்ளது எனவே மலக்குகளே! உங்களை நான் சாட்சியாக வைத்து கூறுகிறேன் இவன் இடைப்பட்ட காலத்தில் செய்த தவறுகளை நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான்.  

வருடத்தின் ஆரம்ப நாட்களை நோன்பைக் கொண்டு துவக்கலாம்.

2812-صحيح المسلمِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ)).
2157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

(பைதுல்லாஹ் என்று கூறுவது போல இம்மாதத்தை "ஷஹ்ருல்லாஹ்" என்று நபி அவர்கள்  கூறியுள்ளார்கள். )

இஸ்லாமிய ஆண்டின் ஆரம்பமும் முடிவும் தியாகங்களைக் கொண்டதாக உள்ளது.
மௌலானா ஜுல்பிகார் அஹ்மது தாமத்பரக்காத்துஹு அவர்கள் கூறுவார்கள்.
முஹர்ரமுடைய மாதமும் தியாகத்தை நினைவு படுத்துகின்ற மாதம் இப்ராஹீம் நபியை நெருப்பு குண்டத்தில் தூக்கி போடப்பட்டது இந்த முஹர்ரமுடைய மாதத்தில்தான், இஸ்மாயீல் நபியை அறுப்பதற்கு கொண்டு செல்லப்பட்டது துல்ஹிஜ்ஜா உடைய மாதத்தில் எனவே இஸ்லாமிய ஆண்டின் ஆரம்பமும் துவக்கமும் தியாகத்தை நினைவூட்டக்கூடியதாக உள்ளது என்பார்கள். துவக்கம் தன்னை இறைவனுக்காக அர்ப்பணிப்பது இஸ்லாமிய ஆண்டின் முடிவு தன் குடும்பத்தை அல்லாஹ்விற்காக அர்ப்பணிப்பது. இந்த தியாக உணர்வு இந்த புத்தாண்டில் நம்மிடம் வரவேண்டும்.

இந்த முஹர்ரம் மாதம் உணர்த்துகின்ற மற்றொரு பாடம் சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்ட மாதம்.
***************************************
உலகில் மாபெரும் சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட மாதமாகும். அடுத்த சர்வாதிகாரி நம்ரூத் அழிக்கப்பட்டதும் இந்த மாதத்தில்தான்
எனவே இன்று சர்வாதிகாரிகளாக இருக்கக் கூடிய இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்களை இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் மியான்மர் சர்வாதிகாரிகளுக்கும் அல்லாஹ் சரியான பாடம் புகட்ட வேண்டும். அல்லாஹ் ஃபிர்அவ்னை நம்ரூதை அழித்ததுபோல இந்த சர்வாதிகாரிகளையும் அழித்திடுவானாக! என்று இந்நாளில் துஆ செய்ய வேண்டும்.

பிறையை பார்த்ததும்
************************
நபி ( ஸல்) அவர்கள்  பிறையைப் பார்த்தவுடன் கீழ் வரும் துஆவை ஓதுவார்கள் அதே துஆவை இந்த புத்தாண்டில் நாமும் பிறையை பார்த்தவுடன் ஓத வேண்டும்.

عَنْ طَلْحَةَ بنِ عُبْيدِ اللَّهِ رضِيَ اللَّه عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كانَ إِذا رَأَى الهِلالَ قَالَ: « اللَّهُمَّ أَهِلَّهُ علَيْنَا بِالأَمْنِ والإِيمَانِ ، وَالسَّلامَةِ والإِسْلامِ ، رَبِّي ورَبُّكَ اللَّه ، هِلالُ رُشْدٍ وخَيْرٍ » (رواه الترمذي

எனவே இஸ்லாமிய புத்தாண்டு என்பது அனாச்சாரங்களைக் கொண்டும் கூத்து கும்மாளங்களைக் கொண்டும் வரவேற்பது அல்ல மாறாக நமது சரித்திரங்களை எல்லாம் நினைவுபடுத்தி முஸ்லீம்களுக்கு பரக்கத்தை, நன்மையை, நிம்மதியை தரக்கூடிய புத்தாண்டாக ஆக்கி அருள்வானாக ! என்று துஆ செய்து வரவேற்க வேண்டும்.
அத்தகைய நற்பாக்கியங்களை இப்புத்தாண்டிலே நம் அனைவர்களுக்கும் ரப்புல் ஆலமீன் தந்தருள்வானாக! ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.