வியாழன், 2 நவம்பர், 2017

சிறு துளி பெரு வெள்ளம்.

بسم الله الرحمن الرحيم

சிறு துளி பெரு வெள்ளம்.
@@@@@@@@@@

ஒருவரிடம் இருந்து அன்பு பாசம் திருப்தி கிடைக்க அவரின் சக்தி/தகுதிக்கு ஏற்ப நாம் அவருக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு சாக்லேட். நண்பருக்கு பேனா. தலைவருக்கு பொன்னாடை. . காலேஜ் முதல்வருக்கு மொபைல். இவ்வாறாக கூடி கூடி செல்லும்.

அப்படி தகுதிக்கேற்ப நாம் வழங்கினாலும் நமக்கு அவரிடமிருந்து திரும்பி ஒன்றும் (நன்றி கூட) கிடைக்கப் போவதில்லை.

அப்படியானால் அல்லாஹ் அபார ஆற்றல் கொண்டவன் . எனவே மனிதன் அவனுக்கு சமர்பிக்கும் அன்பளிப்பு / காணிக்கை எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்க வேண்டும்.

ஆனாலும் கடுகளவு செய்தாலே போதும் என்கிறான்.

செய்ததை மதித்து ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கிறான். அவன் மலையளவு கைமாறு (நன்மை) நமக்கு தருகிறான்.

வாருங்கள் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க தயாராகுவோம் இன்ஷாஅல்லாஹ் . எனவே சிலதை அமல்ச்செய்து செயல் படுத்த வேண்டும். வேறு சிலதை முற்றிலும் தவிற்க வேண்டும்.

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ (160

எவர் இறைவனின் திருமுன் நன்மையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அதைப்போல் பத்து மடங்கு நற்கூலி உண்டு. எவர் தீமையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அவர் செய்த தீமை அளவுக்குத்தான் தண்டனை கொடுக்கப்படும். மேலும், யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது
(அல்குர்ஆன் : 6:160)

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8)
பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் : 99:7-8)

عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ»

ஒரு நல்ல செயல் அது குட்டியானதாக இருந்தாலும் சாதாரணமாக நினைக்காதே.

உன் சகோதரனை மலர்ந்த இன்முகத்துடன் பார்ப்பதும் (மிகப்பெரும்) நன்மையே. ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் .


செயல் படுத்த வேண்டிய அமல்.

1. @@@@@@
தூங்கி விழித்தால் 4ம் 3ம் கலிமா ஓதனும்.

வியாபரம் உடல் நலம்.படிப்பு . கவலை கஷ்டம் என பல பல தேவைகள் . இவைகளுக்கு துஆ செய்ய பொருத்தமான நேரம் படுத்த படுக்கையில் இருந்து எழுந்த உடன் .

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ، فَقَالَ:

لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ،

الحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ،

ثُمَّ قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي، أَوْ دَعَا، اسْتُجِيبَ لَهُ، فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلاَتُهُ "

وفي رواية ابن ماجة  "سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

1154. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'யார் இரவில் விழித்து

A.நான்காம் கலிமாவும்

B.மூன்றாம் கலிமாவும் ஓதி விட்டு

C.பின்பு اللَّهُمَّ اغْفِرْ لِي அல்லாஹும் மக்பிர்லீ இறைவா! என்னை மன்னித்துவிடு

என்றோ, அல்லது வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். பின்பு உளூச்  செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்.
என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்.

பத்தே நிமிடத்தில் மன்னிப்பும் சுவனமும்.

2. @@@@@@

" مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ "

6405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
' سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்

குறிப்பு # நூறு தடவை ஓத பத்தே நிமிடம் போதும்.

3. @@@@@@

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، فَقَالَ أَحَدُكُمْ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ……. حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، ثُمَّ قَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، قَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ "

629. அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஅத்தின் (-தொழுகை அறிவிப்பாளர்) பாங்கு சொல்லும் போது அவரை தொடர்ந்து அவர் சொல்வது போல் நீங்களும் மனப்பூர்வமாகச் சொல்லுங்கள் .

ஆனால் அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் இன்னும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள்.

உங்களில் இவ்வாறு மனப்பூர்வமாகச் கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை.

குறிப்பு. இது மனப்பாடம் செய்யும் அளவில் உள்ள ஒன்றும் அல்ல. சும்மா பின்னாடியே சொன்னால் சுவனம். ஆனால் அதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் ?

4. @@@@@@
இரண்டாம் கலிமா

«مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ»

630. அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஅத்தின்(-தொழுகை அறிவிப்பாளரின்) பாங்கை கேட்கக்கூடியவர் (பாங்கு முடிந்த பின்பு 2ம் கலிமா )

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு,லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு,

ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன்,வபில் இஸ்லாமி தீனன்

என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை

5 . @@@@@@

லக்கேஜ்(-நன்மை) தூக்க முடியாத அளவுக்கு

." كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ "

7563.  '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு.

6 . @@@@@@
2ம் கலிமா ஓதினால் எல்லா வாசலும் ஓப்பன் .

«مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ» قَالَ فَقُلْتُ: مَا أَجْوَدَ هَذِهِ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَيَّ يَقُولُ: الَّتِي قَبْلَهَا أَجْوَدُ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ قَالَ: إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا، قَالَ: " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ "

397. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன்.

(பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன்.
உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன்.
அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை

7 . @@@@@@

சுவனத்தில் சீக்கிரம் சீட்டு கிடைக்க உளூவின் தொழுகை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ "

1149. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலேஇஸ்லாத்தில் இணைந்த பின்  நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்'என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்'என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்

8 . @@@@@@

நாயின் காரணம் மன்னிப்பு எனில் மனிதனால் சுவனமே .

قَالَ: غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ، مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ: كَادَ يَقْتُلُهُ العَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ المَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ

وفي رواية " وَدَخَلَتْ مُومِسَةٌ الْجَنَّةَ " المعجم الكبير للطبراني .

3321. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

அப்பெண் சொர்கவாசியாக மாறிவிட்டாள் என தப்ரானியில் ஹதீஸ் உண்டு.

குறிப்பு # கெட்ட பிராணிக்கு உதவியதால் சுவர்க்கம்.

அப்படியானால் மனிதர்கள் அதுவும் ஏழை / அனாதை /  விதவையாக உள்ளோருக்கு உதவினால் கண்டிப்பாக சுவர்க்கம்.

9 . @@@@@@
சும்மா இருந்தாலும் தொழுத மாதிரி தான்.

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " صَلاَةُ الجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ، وَأَتَى المَسْجِدَ، لاَ يُرِيدُ إِلَّا الصَّلاَةَ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ المَسْجِدَ، وَإِذَا دَخَلَ المَسْجِدَ، كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي - يَعْنِي عَلَيْهِ المَلاَئِكَةُ - مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ "

477. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து,தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப் படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை

குறிப்பு# வீட்டிலேயே உளூ செய்து விட்டு போகனும். அப்படி போனால் ஒவ்வொரு கால் எட்டுக்கும் நன்மை.

இகாமத் நேரதில் போகாமல் . முன்னாடியே போய் சும்மா இருந்தாலும் அதுவும் நன்மை.

தொழுகை முடிந்த உடன் வெளியே வர வேண்டாம்.
கொஞ்சம் நேரம் இருக்கனும்.

10 . @@@@@@
மகளிர் க்கு  மட்டும் .

" إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ "

هذا حديث حسن لغيره،

ஒரு பெண் 1. தன் ஐந்து நேரத் தொழுகை சரியாக தொழுது.
2. தன்  ரமலான் நோன்பு சரியாக பிடித்து,
3. (தவறான தொடர்பை தவிர்த்துத்) தன் மர்மஸ்தானத்தை பாதுகாத்து . 4. கணவனுக்கு முழுமையாக கட்டுப் பட்டு நடந்தால்  அவளுக்கு (கண்டிப்பாக சொர்க்கம்.)  சொர்கத்தின் எட்டு வாசல்களில் எந்த வாசல் வழியாக  வேண்டுமாலும் உள்ளே செல்லலாம் ன்று சொல்லப்படும் .musnad ahmad 1661.

குறிப்பு # சகோதரிகளே எல்லாத்திலும் வெற்றி.கணவனில் மட்டும் தோல்வி. அதை மட்டும் சரி செய்தால் நீங்கள் தான் முதலில் சுவனம். பின்பு தான் ஆண்கள்.


முற்றிலும் தவிற்க்க வேண்டிய செயல்.
11 . @@@@@@

அபாயம். ஆபத்து.

ஆனால் அதை அன்றாடம் செய்கிறோம் .

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»  وفي رواية ابي داؤد " إثما "

கேட்பதை எல்லாம் சொன்னால் அதுவே அவன பொய்யன் / பாவி என்பதற்கு அடையாளமாகும்.

குறிப்பு# இணைய தளத்தில் வருவதை உண்மை/ஆதாரம் உறுதி செய்யாமல் பார்வேட் செய்வது பெரிய தப்பு.


12 . @@@@@@

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، أَوْ مَكَّةَ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ» ثُمَّ قَالَ: «بَلَى، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ». ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ، فَكَسَرَهَا كِسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً، فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا» أَوْ: «إِلَى أَنْ يَيْبَسَا»

216. நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது,கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

13 . @@@@@@

மிருகத்தால் இக்கெதி எனில் மனிதனால்...?

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ»

3318. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) வழியாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்.

குறிப்பு # மிருகத்தால் இப்படி யெனில் .

மாமியார் மருமகள் /அண்ணன் தம்பி ..... இப்படி நடந்தால்  என்னவாகும் நிலைமை.

14 . @@@@@@

எச்சரிக்கை . உஷார் .

«إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ»

6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்.

குறிப்பு# ஷிர்க்கான வார்தை அது (சினிமா) பாட்டாகவோ . தமாஷ் ஆகவோ . தீனில் (புர்கா / தாடி / வட்டி போன்ற ) சட்டம் சரியில்லை . இவை யாவும் நரகில் தள்ளும்.

15 . @@@@@@

ஹஜ் உம்ரா முற்றிலும் இலவசம்

535 -  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ

பஜ்ர் தொழுகை ஜமாத்தோடு தொழுது விட்டு சூரியன் உதயம் (ஆகி 20 நிமிடம்) ஆகும் வரை திக்ர் செய்து அங்கேயே இருந்தால் பூரணமான ஒரு ஹஜ்,மேலும் ஒரு உம்ரா செய்த நன்மை கிடைத்து விடுகிறது ,
ஹதீஸ் (ஹஸன் என்ற தரம் கொண்டதாகும்) நூல் திர்மிதி 535 .அறிவிப்பாளர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.

குறிப்பு # வாரத்தில் ஹஜ் & உம்ரா இரண்டு நாள் செய்ய தயாராகுவோம் . பின்பு கூட்டிக் கொள்வோம் இன்ஷாஅல்லாஹ்.

16 . @@@@@@

مسند أحمد :16173عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، قَالَ: سمعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَبَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى، وَلَمْ يَرْكَبْ فَدَنَا مِنَ الْإِمَامِ، فَاسْتَمَعَ، وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا " (1)

(1) إسناده صحيح، رجاله ثقات رجال الصحيح، غير أن صحابيه لم يخرج له إلا أصحاب السنن.
வெள்ளிக்கிழமை அன்று தலையை கழுகி உடல் முழுவதும் குளித்து . வெகு சீக்கிரம் புறப்பட்டு . வாகனத்தில் ஏறாமல் நடந்தே (ஜும்மாவுக்கு) சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து கொத்பாவை வீனாக்கிடாமல் கூர்மையாக செவியேற்றால் நடந்த ஒவ்வொரு கால் எட்டுக்கும் ஒரு வருடம் முழுவதும் நின்று வணங்கிய நன்மையும் . நோன்பு பிடித்த நன்மையும் கிடைத்து விடும்.
நூல் முஸ்னத் அஹ்மத் 16173 . அறிவிப்பாளர்  அவ்ஸ் இப்ன் அவ்ஸ் ரலி அவர்கள்.

இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதாகும்.

17 . @@@@@@

சகோதரிகளே சுவர்க்கம் வேண்டுமா ?

304 عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى المُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: وَبِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ،

304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்;கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்......என்று நபி(ஸல்) கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

குறிப்பு # யாரையும் திட்டாதீங்க . கணவனை கண் கலங்க விடாதீங்க.

உடனே அமல் செய்ய தொடங்குவது சஹாபாக்களின் நடை முறை. அல்லாதது முனாபிக்குகளின் நடைமுறையாகும் . எனவே குறைந்தது ஏதாவது ஐந்து அமல் செய்ய தொடங்குவோம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.