செவ்வாய், 21 நவம்பர், 2017

அண்ணலாரின் அழகிய அறிவுரைகள்

بسم الله الرحمن الرحيم
அண்ணலாரின் அழகிய அறிவுரைகள்
********************************************
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏ 
(القران 51:55)

قال رسول الله صلي الله عليه وسلم (اتّق المحارم تكُن أعبدَ النّاس، وارضَ بما قسَم الله لك تكُن أغنى النّاس، وأَحسن إلى جارك تكُن مؤمنًا، وأحِبّ للنّاس ما تحبّ لنفسك تكن مُسلمًا، ولا تُكثر الضّحك فإنّ كثرةَ الضّحك تُمِيتُ القلب) رواه أحمد، والتّرمذي

ரபீஉல் அவ்வல் முதல் ஜும்ஆ, ரபீஉல் அவ்வல் மாத பிறை பார்த்து விட்டால் பெருமானாரின் பிறப்பு நமக்கு ஞாபகம் வரும். பிறப்பு மட்டும் அல்ல பெருமானாரின் வாழ்வு முழுவதும் நினைவுக்கு வர வேண்டும்.


நபி ஸல் )அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் பேசிய சொல்  நடைமுறை குணங்கள் பழக்க வழக்கங்கள்  அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது  என்றால் நபிஸல் அவர்களைப் போன்று வேறு எந்த தலைவரும் இந்த சிறப்பை அடைய முடியாது. அவர்களின் பண்புகளையும் அவர்களின் அறிவுரைகளையும் ஏற்று நடந்தால் நாமும் நல்லொழுக்கமுள்ள நல்ல மனிதராக ஆகுவோம் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏ 
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
(அல்குர்ஆன் : 51:55)

எனவே நபி( ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு பல்வேறு கட்டங்களில் பல அறிவுரைகளைச் செய்திருக்கின்றார்கள்.
ஹஜ்ரத் முஆத் ரலி அவர்களை எமன் தேசத்திற்கு அனுப்பும்போது பத்து அறிவுரைகளை கூறினார்கள். இதையெல்லாம் நீங்கள் கடைபிடியுங்கள் என்றார்கள். இப்படி ஒவ்வொரு தோழர்களுக்கும் அந்தந்த சந்தர்பத்திற்கு தோதுவாக பல அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.


ஒரு முறை நபி( ஸல்) அவர்கள் செய்த அறிவுரை

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهنّ أو يعلمهنّ من يعمل بهنّ؟)، قال أبو هريرة: فقلت أنا يا رسول الله، فأخذ بيدي فعدّ خمسًا، قال: (اتّق المحارم تكُن أعبدَ النّاس، وارضَ بما قسَم الله لك تكُن أغنى النّاس، وأَحسن إلى جارك تكُن مؤمنًا، وأحِبّ للنّاس ما تحبّ لنفسك تكن مُسلمًا، ولا تُكثر الضّحك فإنّ كثرةَ الضّحك تُمِيتُ القلب) رواه أحمد، والتّرمذي، وحسّنه الألباني.

ஒரு முறை நபி( ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள். தோழர்களே! நான் இங்கு சில அறிவுரைகளை சொல்ல விரும்புகிறேன் என்னிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு செயல்படுத்துவது யார் என்று கேட்டார்கள். ஹதீஸ்கலைகளிலே அதிகமான ஆர்வமுடையவர்கள் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள். உடனே அவர்கள் எழுந்து யா ரசூலல்லாஹ் அதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்கள். இதைக்கேட்ட நபியவர்கள் உமக்கு நான் ஐந்து அறிவுரைகளை கூறுகின்றேன்  அவைகளை வாழ்க்கையில் கடைபிடியுங்கள் என்றார்கள்.

( இந்த ஐந்து விஷயங்கள் அவர்களுக்கு மட்டும் செய்த அறிவுரைகளல்ல உலகில் உள்ள முஃமின்கள் அனைவர்களும் எடுத்து நடக்கவேண்டிய அற்புதமான ஐந்து அறிவுரைகளாகும்)

முதலாவது அறிவுரை
******************************
اتق المحارم تكن اعبد الناس
அல்லாஹ் எதை ஹராமாக ஆக்கியிருக்கின்றானோ அவற்றைச் செய்யாமல் தவிர்ந்திருங்கள் மக்களிலே மிகப்பெரும் வணக்கசாலியாகிவிடுவீர்.

இரண்டாவது அறிவுரை
*********************************
وارض بما قسم الله لك تكن اغني الناس
அல்லாஹ் உமக்கு எதை (முடிவுசெய்து) பங்குவைத்து தந்தானோ அதை பொருந்திக்கொள் நீதான் பெரும் செல்வந்தன்

இந்த இரண்டு அறிவுரைகளின் விரிவான விளக்கம் கீழே உள்ள லிங்க்கில் பார்க்கவும்.


மூன்றாவது அறிவுரை
********************************
واحسن الي جارك تكن مؤمنا
உன் அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள் அப்பொழுதுதான் நீ உண்மையான முஃமினாக ஆகுவாய்.
6016- حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي شُرَيْحٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ)). قِيلَ وَمَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: ((الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ))
.6016. அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்  “அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்என்று பதிலளித்தார்கள்.  இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

அண்டை வீட்டாருக்குரிய கடமை
************************************
* عَنْ مُعَاوِيَةَ بْنِ حَيْدَةَ قَالَ:  قُلْت يَا رَسُولَ اللَّهِ، مَا حَقُّ الْجَارِ عَلَيّ؟  قَالَ : ( إنْ مَرِضَ عُدْتَهُ ، وَإِنْ مَاتَ شَيَّعْتَهُ،وَإِذَا اسْتَقْرَضَكَ أَقْرَضْتَهُ، وَإِذَا افْتَقَرَ عُدْتَ عَلَيْهِ، وَإِذَا أَصَابَهُ خَيْرٌ هَنَّأْتَهُ،وَإِذَا أَصَابَتْهُ مُصِيبَةٌ عَزَّيْته،وَلا تَسْتَطِلْ عَلَيْهِ بالبُنْيَانِ فَتَحْجُبَ عَنْهُ الرِّيحَ إلا بِإِذْنِهِ، وَلا تُؤْذِهِ بقتار ريح قِدْرِك إلا أَنْ تَغْرِفَ لَهُ مِنْهَا،وإن اشْتَرَيْتَ فَاكِهَةً فَأَهْدِ لَهُ ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَأَدْخِلْهَا سِرًّا ، وَلا يَخْرُجُ بِهَا وَلَدُك لِيَغِيظَ بِهَا وَلَدَهُ'( رواه الطبراني)
முஆவியா பின் ஹைதா ( ரலி) அறிவிக்கின்றார்கள்.
நான் நபி ( ஸல்) அவர்களிடம் அண்டை வீட்டாருக்கு நான் செய்ய வேண்டிய கடமை என்ன ? என்று கேட்டேன். அவர் நோயுற்றால் நலன் விசாரிக்க வேண்டும். அவர் மரணித்துவிட்டால் ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும். அவர் ஏதாவது கடனுதவி வேண்டினால் கடனுதவி செய்ய வேண்டும். அவருக்கு ஏதாவது நலவு ஏற்பட்டால் வாழ்த்துச் சொல்ல வேண்டும். அவருக்கு சோதனை ஏற்பட்டால் ஆறுதல் கூறவேண்டும். அவருக்கு காற்றோட்டத்தை பாதிக்கும் வகையில் அவர் அனுமதித்தாலே தவிர உன் கட்டிடத்தை உயர்த்திக் கட்டலாகாது. உன் வீட்டின் அடுப்பின் புகை மூலம் அவர்களுக்கு நோவினை தரக்கூடாது.
ஏதாவது பழங்கள் ( தின்பண்டங்கள்) வாங்கினால் அவர்களுக்கும் கொஞ்சம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அதை மறைமுகமாக கொண்டுவர வேண்டும் உன் வீட்டு பிள்ளைகள் அந்த தின்பண்டங்களை அண்டை வீட்டு பிள்ளைகள் பார்க்கும்படி கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
4991 - وعن ابن عباس - رضي الله عنهما - قال : سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول : ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه " . رواه البيهقي في " شعب الإيمان
இப்னு அப்பாஸ் ரலி அறிவித்தார்கள்
நான் அண்ணலார் நவிலக் கேட்டிருக்கிறேன். தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை என்றார்கள்.
6014-َ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ)).
6014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன். 35  என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

6855- ِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ)). مسلم
அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் அபூதர் ரலி அவர்களிடம் கூறினார்கள்.
அபூதர் ! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்திவிடும் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்.
6017- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ)).
6017. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்  “முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.36
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

13558 عن أنس بن مالك قال : جاء رجل إلى النبي - صلى الله عليه وسلم - فقال : يا رسول الله ، اكسني . فأعرض عنه فقال : يا رسول الله ، اكسني . فقال : " أما لك جار له فضل ثوبين ؟ " . قال : بلى ، غير واحد . قال : " فلا يجمع الله بينك وبينه في الجنة " . رواه الطبراني في الأوسط ،
ஒரு மனிதர் நபி ( ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் என் மானத்தை மறைத்துக் கொள்ள ஒரு ஆடை எனக்கு அணிவியுங்கள் என்றார். இரண்டு ஆடைக்குமேலாக வைத்திருக்கக்கூடிய அண்டை வீட்டார் உமக்கு அருகில் இல்லையா? என்று நபி ( ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் பலர்கள் இருக்கின்றார்கள் என்றார். அப்படியானால் அவர்கள் ( உமக்கு உதவி செய்யாத காரணத்தால்) உன்னோடு சுவனத்தில் நுழையமாட்டார்கள் என்றார்கள்.

((قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ, إِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا, غَيْرَ أَنَّهَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا, قَالَ: هِيَ فِي النَّارِ, قَالَ: يَا رَسُولَ اللَّهِ, فَإِنَّ فُلَانَةَ يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا, وَإِنَّهَا تَصَدَّقُ بِالْأَثْوَارِ مِنَ الْأَقِطِ, وَلَا تُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا, قَالَ: هِيَ فِي الْجَنَّةِ))مشكات المصابيح
ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார் இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் தொழுகைகள் தொழுகின்றாள் நஃபில் நோன்புகள் நோற்கின்றாள்  தர்மம் கொடுக்கின்றாள்  இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள் ஆனால் தன் அண்டை வீட்டாருக்கு தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்.

இதைக் கேட்ட அண்ணலார் அவள் நரகம் புகுவாள் என்று கூறினார்கள். அந்த மனிதர் மீண்டும் கூறினார் .இன்ன பெண் குறைவாக நஃபில் நோன்புகள் நோற்கிறாள் குறைவாக நஃபில் தொழுகைகள் தொழுகின்றாள் பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின்றாள் ஆனால் தன் நாவினால் தன் அண்டை வீட்டாரை துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு அண்ணலார் இவள் சுவனம் புகுவாள் என்று பதிலளித்தார்கள். ( மிஷ்காத்)

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் வீட்டின் அருகில் ஒரு யஹூதி வசித்து வந்தார். இமாம் அவர்கள் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்  அவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்கின்ற நோக்கில் அந்த யஹூதி இரவில் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பார் இது அவரின் வழமையாகவே இருந்தது. ஒரு நாள் இரவில் எந்த சத்தமும் வரவில்லை மறுநாளும் வரவில்லை மூன்று நாட்களுக்குப்பின் அந்த யஹூதிக்கு என்ன ஆனது ஏன் இரவில் எந்த சத்தமும் வரவில்லை என்று விசாரிக்கின்றார்கள். அவர் செய்த ஏதோ ஒரு தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. இமாம் அவர்கள் சிறைக்குச் சென்று அவரை சந்தித்தது மட்டுமல்லாமல் அதிகாரிகளிடம் பேசி அவரை விடுவிப்பதற்கும் ஏற்பாடு செய்தார்கள். விடுவிக்கப்பட்ட அந்த அண்டை வீட்டு யஹூதி நான் சிறையில் அடைக்கப்பட்டது எப்படி தெரியும் என்றார். தினமும் இரவில் தாங்களின் சத்தம் எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கும் கடந்த மூன்று நாட்களாக அது கேட்கவில்லை விசாரித்தேன்  தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது என்றார்கள். அப்போது அந்த யூதர் கேட்டார் என்னுடைய சத்தம் நின்று போனதற்காக தாங்கள் சந்தோஷப்பட்டிருக்க வேண்டுமே தொல்லை தீர்ந்தது என்றல்லவா நினைக்க வேண்டும் அதைவிடுத்து என்னை சந்தித்தது மட்டுமல்லாமல் என்னை விடுவிக்கவும் ஏற்பாடு செய்தீர்களே! என்றார். அதற்கு இமாம் அவர்கள் هذا خلق الاسلام இதுதான் இஸ்லாம் கற்றுத்தறும் பண்பு என்றார்கள்.

பாருங்கள் தோழர்களே! அண்டைவீட்டாருக்குச் செய்த உபகாரத்தை இதைத்தான் இஸ்லாம் போதிக்கின்றது. ஒரு காலத்தில் முஸ்லீம்களுக்கு அருகில் யூதர்களும் கிருஸ்தவர்களும்கூட வாழ ஆசைப்பட்டார்கள். இன்று அவர்களுக்கு வீடு கொடுப்பதற்கு யோசனை செய்கின்றார்கள்.

قال عبدالله بن مسعود قال رجل يا رسول الله كيف لي أن أعلمَ إذا أحسنتُ وإذا أسأتُ قال النبيُّ إذا سمعتَ جيرانَك يقولون أن قد أحسنتَ فقد أحسنتَ وإذا سمعتَهم يقولون قد أسأتَ فقد أسأتَ
الألباني، صحيح ابن ماجه ٣٤٢١

ஒரு மனிதர் நபி( ஸல்) அவர்களிடம் வந்து யா ரசூலல்லாஹ் நான் நல்லவனா ? கெட்டவனா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது எனக்கேட்டார். நீ நல்லவன் என்று உன் அண்டை வீட்டார் கூறினால் நீ நல்லவனே நீ தீயவன் என்று உன் அண்டை வீட்டார் கூறினால் நீ தீயவனே என்று நபி ( ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

நான்காவது அறிவுரை
********************************
واحب للناس ما تحب لنفسك تكن مسلما
உமக்கு எதை விரும்புகிறாயோ அதையே மற்ற மக்களுக்கும் நீ விரும்பு அவ்வாறு செய்தால் நீ உண்மையான முஸ்லிமாக ஆகிவிடுவாய் என்றார்கள்.

தீனுடைய துன்யாவுடைய எல்லா காரியங்களிலும் நமக்கு எதை விரும்புகிறோமோ அதை எல்லா மக்களுக்கும் விரும்பவேண்டும். நாம் குர்ஆன் ஓதுகின்றோம் அதேபோல எல்லோரும் குர்ஆன் ஓதவேண்டும் நாம் தொழுகிறோம் மற்றும் ஹராம் ஹலால் பேணி நடக்கின்றோம் அதே போல எல்லா மக்களும் நடக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அதேபோல உலக விஷயங்களிலும் நமக்கு எதை விரும்புகின்றோமோ அதை எல்லா மக்களுக்கும் விரும்ப வேண்டும். இவ்வாறு உமக்கு விரும்பக்கூடிய விஷயங்களை உம் சகோதரனுக்கும் விரும்பினால்தான் நீ ஒரு நல்ல முஃமினாக ஆகுவாய் என்று நபி( ஸல்) அவர்கள் கூறியுள்ளாரகள்.

قال النبي صلي الله عليه وسلم .... وتحب له ماتحب لنفسك وتكره له ما تكره لنفسك

மேலும் முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் அன்பு காட்டுவதற்கு அழகிய ஓர் உதாரணத்தை நபி( ஸல்) கூறியுள்ளார்கள்.

مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل الجسد الواحد اذا اشتكي منه عضو تداعي سائره با الحمي والسهر
المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا

முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் பெருமை கொள்ளக்கூடாது பணிவும் பரிவும் காட்டவேண்டும்
***********************************
اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ 
நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.(4:36)

قال النبي صلي الله عليه وسلم ان الله اوحي الي ان تواضعوا حتي لا يفخر احد علي احد ( رواه ابوداود)
عن ابي اوفي رضي:  كان رسول الله صلي الله عليه وسلم يتواضع لكل مسلم ولا يتكبر ان يمشي مع الارملة والمساكين فيقضي حاجتهم

நபி ( ஸல்) அவர்கள் அனைத்து முஸ்லிம்களிடமும் பணிவோடு நடந்து கொள்வார்கள் பெருமை கொள்ளமாட்டார்கள் எந்த ஒரு ஏழை மிஸ்கீன்களின் தேவையானாலும் சென்று அவர்களின் தேவையை நிறைவேற்றுவார்கள்.

மேலும் முஃமின்கள்  யாரும் யாரைப் பற்றியும் கோள் சொல்லவும் கூடாது. கோள் சொல்வதை கேட்பதும் கூடாது.
لا يدخل الجنة قتات
கோள் சொல்லித் திரிபவன் சுவனம் புக மாட்டான்

கலீல் பின் அஹ்மத் ரலி கூவார்கள்:  யார் உன்னிடம் வந்து ஒருவனைப் பற்றி கோள்ச் சொல்கிறானோ அவன் உன்னைப் பற்றி மற்றவரிடம் கோள்ச் சொல்லுவான் என்பதை புரிந்து கொள் என்பார்களாம்.

மேலும் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமை மூன்று நாட்களுக்குமேல் வெறுப்பது கூடாது.
*******************************
لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث فيعرض هذا ويعرض هذا ... وخيرهما الذي يبدأ باالسلام

கருத்து: ஏதாவது சந்தர்ப்த்தில் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் மூன்று நாட்களுக்குள்ளாக அதை சரி செய்து கொள்ள வேண்டும் முதலில் ஸலாம் சொல்லி உறவை பேணுபவர் சிறப்பிற்குரியவராவார்.

நபி ( ஸல்) அவர்கள் ஒரு போதும் தமது சொந்த காரணத்திற்காக யாரையும் கோபித்துக் கொண்டதோ பலிவாங்கியதோ கிடையாது என்று ஆயிஷா ரலி கூறியுள்ளார்கள்.

ما انتقم رسول الله صلي الله عليه وسلم لنفسه قط.....( متفق عليه)

மேலும் யூசுப் (அலை)  அவர்களிடம் அல்லாஹ் கூறினான் உன் சகோதரர்களை மன்னித்து விடுங்கள் அதன் காரணமாக ஈருலகிலும் உங்களின் அந்தஸ்த்து உயர்வடையும் என்றான்.

وفي الخبر قال الله تعالي ليوسف علي نبينا وعليه الصلاة والسلام
«بعفوك عن اخوتك رفعت ذكرك في الدارين» (وصاي الرسول)

يقول ابن عباس رضي الله عنه  ماعفا رجل عن مظلمة الا زاده الله عزا
ஒரு மனிதன் அநியாயக்காரனை மன்னித்தால்  மன்னித்தவனுக்கு கண்ணியத்தை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான்.

[2442-صحيح البخاري عنِ ابن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ)).
2442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்


ஐந்தாம் அறிவுரை
*************************
ولا تكثر الضحك فان كثرة الضحك تميت القلب
அதிகம் சிரிக்காதீர் அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும் என்று இந்த அற்புதமான ஐந்து உபதேசங்களையும் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்களுக்குச் செய்தார்கள்.

அறவே சிரிக்க கூடாது என்பது கருத்தல்ல அதிகம் சிரிக்க வேண்டாம் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
فَلْيَـضْحَكُوْا قَلِيْلاً وَّلْيَبْكُوْا كَثِيْرًا‌ َ‏ 
எனவே குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.9:82

அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும் உள்ளம்தான் அனைத்து உறுப்புக்களுக்கும் அடிப்படையாகும் அது வீணாகிவிட்டால் அனைத்து உறுப்புக்களும் வீணாகிவிடும்.
قال النبي صلي الله عليه وسلم « الا وان في الجسد مضغة اذا صلحت صلح الجسد كله، واذا فسدت فسد الجسد كله. الا وهي القلب

பல் தெரியும் அளவுக்கு சிரிக்காமல் புன்னகையான சிரிப்பே அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் பழக்கமாக இருந்தது.
************************************
1557- صحيح مسلم  كَانَ رسول الله صلي الله عليه وسلم  لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ أَوِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ صلي الله عليه وسلم
1188. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ”நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

عن عبد الله بن الحارث بن جزء قال:  ما رأيت أحدا اكثر تبسما من رسول الله صلي الله عليه وسلم
عن جرير قال ماحجبني النبي صلي الله عليه وسلم منذ أسلمت ولا رآني إلا تبسم ( متفق عليه)
6089. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவித்தார்.  நான் இஸ்லாத்தை தழுவியதிலிருந்த நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.  இதைக் கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

நபி ( ஸல்) அவர்கள் சிலசமயம் தோழர்களிடம் தமாஷ் பண்ணவும் செய்துள்ளார்கள். அப்பொழுதும் கூட  ஏதோ ஒரு கருத்தில் உண்மையைக்கூறியே தமாஷ் செய்வார்கள்.

عن ابي هريرة رضي الله عنه قال قالوا يا رسول الله انك تداعبنا قال اني لا اقول الا حقا
6203- ِ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا، وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ- قَالَ أَحْسِبُهُ فَطِيمٌ- وَكَانَ إِذَا جَاءَ قَالَ: ((يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ)). نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ،

6203. அனஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர்என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள் (எம் விட்டிற்கு வந்தால்), “அபூ உமைரே! பகுதி உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?“ என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

2122- ٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلاً اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ((إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ النَّاقَةِ)). فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ)).رواه الترمذي
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ.

ஒரு முறை ஒரு மனிதரிடம் நபி ( ஸல்) அவர்கள் உன்னை நான் ஒட்டகக் குட்டியின்மீது வாகனிக்கச் செய்வேன் என்றார்கள். அப்போது அவர் யா ரசூலல்லாஹ் ஒட்டகக் குட்டியின்மீது எவ்வாறு வாகனிக்க முடியும் என்றார். அப்பொழுது நபியவர்கள் ஒட்டகம் ஒட்டகக்குட்டியைத் தவிர வேறு ஏதாவதை பெற்றெடுக்குமா ? என்றார்கள்.
( நீ வாகனிக்கக்கூடியது பெரிய ஒட்டகம்தான் என்றாலும் அதுவும் ஒரு ஒட்டகத்தின் குட்டிதானே என்ற கருத்தில் இங்கே தமாஷ் செய்கிறார்கள். )

ஆக மொத்தத்தில் நபியவர்கள் சில சமயம் சிரித்துள்ளார்கள் அந்த சிரிப்பு புன்னகை சிரிப்பாக இருந்துள்ளது. மேலும் தோழர்களிடம் தமாஷ் செய்துள்ளார்கள் அதிலும் உண்மையை கூறுபர்களாக இருந்துள்ளார்கள்.

மூஸா நபியவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களை சந்தித்து கடைசியாக விடைபெறக்கூடி சமயத்தில் தமக்கு ஏதாவது உபதேசம் செய்யும்படி மூஸா நபி ஹிழ்ர் அலை அவர்களிடம் கேட்டார்கள்.
அப்பொழுது ஹிழ்ர் அலை அவர்கள்  செய்த உபதேசம் நீர் புன் சிரிப்பு சிரியுங்கள்  வெடி சிரிப்பு சிரிக்காதீர் . நீர் வீண்  தர்க்கம் செய்வதை விட்டுவிடும். எந்த தேவையுமில்லாமல் ஒரு இடத்திற்குச் செல்லாதீர். தவறு செய்தவர்களை அவர்களுடைய தவற்றின்மீது குத்திக்காட்டாதே. இம்ரானுடைய மகனே! உம் பாவத்தை நினைத்து நீ அழுவாயாக! என்று உபதேசம் செய்தார்கள்.

: قيل إن الخضر لما ذهب يفارق موسى قال له موسى : أوصني ; قال : كن بساما ولا تكن ضحاكا ، ودع اللجاجة ، ولا تمش في غير حاجة ، ولا تعب على الخطائين خطاياهم وابك على خطيئتك يا ابن عمران .( تفسير للقرطبي)

நபிமார்கள். சஹாபாக்கள். இறைநேசர்கள் சில சமயம் சபையில் சிரித்தாலும் தனிமையில் இறைவனின் அச்சத்தால் அழக்கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள். நாமும் குறைவாக சிரித்து
அல்லாஹ்வின் அச்சத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த நிலை நமக்கு வரவேண்டுமென்றால் மரணசிந்தனை . கப்ரைபற்றிய நினைவுகள் மற்றும் மறுமை கேள்வி. இவைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

2460 ஹஜ்ரத் அபூஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “ஒருமுறை தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் வந்தபொழுது மக்களில் சிலர் பற்கள் தெரியும்படி சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். இன்பங்களை முறித்து விடும் மரணத்தை அதிகமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களை நான் காணும் இந்த நிலை ஏற்படாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே, இன்பங்களை முறிக்கும் மரணத்தை மிகவும் அதிகமாக நினையுங்கள், ஏனேன்றால், “நான் வெருட்சியின் வீடு, நான் தனிமையின் வீடு. நான் மண் வீடு, நான் புழு பூச்சிகளின் வீடுஎன்று ஒவ்வொரு நாளும் கப்ரு கூறிக் கொண்டே இருக்கிறது. முஃமினான அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டதும், கப்ரு அவனிடம், “உன் வரவு நல்வரவாகட்டும்! நீ இங்கு வந்தது மிகவும் நல்லது, என் மீது நடந்து சென்றவர்களில் நீயே எனக்கு மிகப் பிரியமானவனாக இருந்தாய், இன்று நீ என்னிடம் வந்துள்ளாய், எனது சிறந்த உபசரிப்பை நீ கண்டு கொள்வாய்!என்று கூறி மய்யித்தின் பார்வை செல்லும் தூரம் வரை கப்ரு விசாலமாகிவிடும், அந்த மைய்யித்திற்காக, சுவனத்தின் பக்கமாக ஒரு கதவு திறக்கப்படும். ஒரு பாவி அல்லது காஃபிர் கப்ரில் வைக்கப்பட்டதும், “உன் வரவு தீய வரவாகட்டும்’, நீ வந்தது மிகவும் தீயதாகிவிட்டது. என் முதுகின் மேல் நடந்து சென்றவர்களில் நீ தான் என்னுடைய அதிக வெறுப்புக்குரியவனாய் இருந்தாய், இன்று நீ என்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளாய். எனவே நான் உன்னுடன் நடந்து கொள்ளும் முறையைக் கண்டுகொள்வாய்!’’ “என்று கூறி விலா எலும்புகள் ஒன்றொடொன்று பின்னிக்கொள்ளும் அளவு கப்ரு அவனை நெருக்கும்!என்று சொன்னவர்கள். தமது இரு கைகளின் விரல்களையும் ஒன்றொடொன்று இணைத்துக் காட்டி, இதே போல ஒரு புறத்து விலா எலும்புகள் மறுபுறத்து விலா எலும்புகளுடன் பின்னிப் பிணைந்து கொள்ளும் என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். மேலும், அவன் மீது எழுபது விஷப் பாம்புகளை அல்லாஹ் சாட்டிவிடுகிறான், அவற்றில் ஒன்று பூமியின் மீது மூச்சுவிட்டாலும் அதன் (விஷத்தின்) காரணமாக மறுமை நாள் வரை பூமியில் புற்பூண்டுகளே முளைக்காது, அவைகள் நாள் தோறும் அவனைக் கடித்துக் கொண்டும், கொட்டிக் கொண்டும் இருக்கும், மேலும் நபி (ஸல்) அவர்கள் கப்ரு ஒன்று சொர்க்கத்தின் பூஞ்சோலை அல்லது நரகத்தின் படுகுழி’’ என்று கூறினார்கள்’’.( திர்மிதி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.