வியாழன், 16 நவம்பர், 2017

வாலிபர்களுக்கு வழிகாட்டிய வள்ளல் நபி (ஸல்)

வாலிபர்களுக்கு வழிகாட்டிய
வள்ளல் நபி (ஸல்).

قول الله عز و جل : لقد كان لكم في رسول الله أسوة حسنة...(33:21)
قول النبي صلي الله عليه وسلم :عن عبد الله بن مسعود قال : قال لنا رسول الله صلى الله عليه وسلم { يا معشر الشباب ، من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر ، وأحصن للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء } (رواه البخاري والمسلم )

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அல்லாஹ்வின் திருத்தூதராய் நமக்கு வாழ்வியல் வழிகாட்டியாக அனுப்பி வைக்கப்பட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் சத்திய ஸஹாபாக்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.

நபிகள் பெருமானார் (ஸல்) அலை அவர்கள் இந்த சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்கிறார்கள் அதிலும் மனிதனின் பலம் வாய்ந்த பருவமான வாலிபப் பருவத்திற்கான அவர்களின் வழிகாட்டல்கள் மிகவும் இன்றியமையாத விஷயமாக இருக்கிறது. காரணம் ஒரு சமுதாயத்தின் ஏற்றத்திற்கும், இறக்கத்திற்கும் அந்த பருவம் காரணமாக அமைகிறது.

வாலிபப் பருவம் குறித்து இறைவன் பலம் வாய்ந்த பருவம் என குறிப்பிடுகிறான்.
اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ...
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 30:55)

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்.
روي عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال: ما بعث الله نبيا إلا شابا، ولا أوتي العلم عالم إلا شابا، ثم تلا هذت الآية:(قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم) وقد أخبر الله تعالى به ثم أتى يحيى بن زكريا الحكمة قال تعالى: (وآتيناه الحكـم صـبيا)مريم. وقال تعالى: (إذ أوى الفتية إلى الكهف)وقال جل شأنه: ( إنهم فتية آمنوا بربهم) وقال جل من قائل: (وإذ قال موسى لفتاه) الكهف. ولقد ضرب القرآن الكريم المثل بالشباب ..

அல்லாஹ் எல்லா நபிமார்களையும் வாலிப பருவத்தில் தான் அனுப்பி வைத்தான். மேலும் அனைத்து கல்விமான்களுக்கும் அல்லாஹ் வாலிபப் பருவத்தில் தான் கல்வியை கொடுத்தான். பின்பு பின்வரும் கருத்துடைய ஆயத்துகளை ஓதினார்கள்
இப்ராஹீம் அலை அவர்கள் வாலிபப் பருவத்தில் தன் சமூகத்தாரிடம்  புரட்சி செய்தார்கள்.
யஹ்யா அலை அவர்களுக்கு சிறு பிராயத்திலேயே நபித்துவ கல்வியை தந்தான்.
குகை வாசிகள் வாலிபர்களாகவே இருந்தார்கள்.
மூஸா அலை அவர்களின் உன்னத பயணத்தில் உடன் இருந்தவர் வாலிபர் என குர்ஆன்  வாலிபப் பருவத்தின் உன்னதத்தை குறிப்பிடுகிறது.

குறிப்பாக இக்காலகட்டத்தில் மார்க்க தொடர்பின்றி பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டு சீரழிக்கும் கலாச்சாரங்களால் சீரழிந்து போன வாலிபக் கூட்டத்தை நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உயர்ந்த வழிகாட்டுதல்களை எடுத்துக் கூறி அந்த வாலிபர்களை மார்க்கத்தை கட்டிக் காக்கும் தூண்களாக மாற்றிட வேண்டிய  பொறுப்பு நமக்குள்ளது.

மேலும் மார்க்கத்தின் பெயரில் தவறான வழிகாட்டல்களால் வழிதவறி விழிபிதுங்கி நிற்கும்  வாலிபர்களுக்கும் சரியான வழியை நாம் காட்டிட வேண்டி இருக்கிறது.

வாலிபப் பருவத்தின் ஒழுக்கமான வாழ்விற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் செய்த உபதேசம்.

عن عبد الله بن مسعود قال : قال لنا رسول الله صلى الله عليه وسلم { يا معشر الشباب ، من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر ، وأحصن للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء } (رواه البخاري والمسلم )

ஓ வாலிபர்களே! உங்களில் யார் திருமணம் முடிக்க (உடலால், பொருளாதாரத்தால்) சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் முடிக்கட்டும். அது தான் அவர் பார்வையை தாழ்த்திக் கொள்வதற்கும், மர்மஸ்தானத்தை (முறை தவறிடாமல்) பாதுகாத்துக் கொள்வதற்கும் ஏற்றமானது.
யாருக்கு திருமணம் முடிக்க சக்தி இல்லையோ அவர் நோன்பு நோற்பதை கடைபிடிக்கவும் அது அவருக்கு காயடிப்பாகும். (உணர்வுகளை கட்டுப் படுத்தும் ஆயுதமாகும்) (நூல் : புகாரி, முஸ்லிம்)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள்  ஒழுக்கமான வாழ்விற்கும் வாலிபத்தை பாதுகாப்பதற்கும் திருமணம் மூலம் வழிகாட்டினார்கள்.

நபித் தோழர்களிடம் யாரைக் குறித்தும் குறை கூறக் கூடாது என்ற உயர் பண்புகளை ஏற்படுத்தினார்கள்.

4852 - وعن ابن مسعود - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم : " لا يبلغني أحد من أصحابي عن أحد شيئا ، فإني أحب أن أخرج إليكم وأنا سليم الصدر " (رواه أبو داود )
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகிற போது சில வாலிப ஸஹாபாக்கள்  நபித்தோழர்கள் குறித்து குறை வார்த்தைகளை கூறினார்கள்.

அதற்கு நபிகள் ஸல் அவர்கள் "என் தோழர்களில் யாரும் யாரை குறித்தும்  எந்த விஷயங்களையும் என்னிடம் கூற வேண்டாம் ான் உங்களிடம் பரிசுத்தமான உள்ளத்தோடு  (மனதில் எந்த தீய எண்ணமும் இல்லாமல்) வெளியேற விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
(நூல் :அபூ தாவூத் )

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இந்த உபதேசம் ஸஹாபாக்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடவும், தங்களுக்கிடையே சகோதரத்துவத்தை பேணுவதற்கும் காரணமானது.
இன்று இந்த பண்புகள் உள்ள எந்த தலைமையையும் பார்ப்பது அரிது மேலும் தலைமையை நெருங்க வேண்டுமானால் பிறரை குறைகூறுவதன் மூலம் தான் நெருங்க முடியும் என்ற மோசமான நிலையே உள்ளது.

ஸஹாபாக்களிடம் வீரத்தையும், தியாகத்தையும்  விதைத்தார்கள் .

நம் இளம் தலைமுறையினர் காதல் ஃபேஷன் என்ற பெயரில் சீரழிந்து வருவதை நாம் பார்க்கிறோம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மார்க்கப் பற்றை விதைத்து மார்க்கத்திற்காக  தியாகம் செய்ய ஸஹாபாக்களை தூண்டினார்கள்
எனவே தான் உஹது போர்க் களத்தில் தன் தந்தையின் வீரத்தை பார்த்து சிறுபிள்ளையாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரலி அவர்கள் வாளை தூக்கிக் கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி வந்தார்கள்.

(حديث مرفوع) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى ، أنبا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " عُرِضْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ ، وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً ، فَلَمْ يُجِزْنِي فِي الْمُقَاتِلَةِ ، ثُمَّ عُرِضْتُ عَلَيْهِ يَوْمَ الْخَنْدَقِ ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي فِي الْمُقَاتِلَةِ "

மேலும் ஹஜ்ரத் இப்னு உமர் ரலி அவர்களின் அறிவிப்பு புகாரி ஷரீஃபில் இடம் பெற்றுள்ளது. நான் "உஹது" போரில் வீரர்கள் தேர்வின் போது என்னை எடுத்துக் காட்டினேன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் போரில் கலந்து கொள்ள  எனக்கு மறுத்து விட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது மீண்டும் "ஹஃன்தக்" (خندق)போரில் கலந்து கொள்ள என்னை எடுத்துக் காட்டினேன்  எனக்கு போருக்கு  அனுமதி வழங்கினார்கள்  அச்சமயம் எனக்கு வயது 15 -ஆக இருந்தது. (நூல் : புகாரி)

உலக ஆசைகளில் மனம் லயிக்கும் அரும்பு மீசை பருவத்தில் மார்க்கத்திற்காக தியாகம் செய்ய மீண்டும் மீண்டும் வந்தார்கள் என்றால் நபியின் உபதேசமும் வழிகாட்டலும் எவ்வளவு உயர்ந்த தரத்தில் இருந்திருக்க வேண்டும்!

உலக பொருட்களை வாங்கித் தர அடம்பிடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில்... நபிகள் நாயகம் ஸல் அவர்கள்  இளம் ஸஹாபிகளின் உள்ளத்தில்  சுவனத்தை எப்படியும்  அடைந்திட வேண்டுமென்ற  ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.

«2805» حدثنا محمد بن سعيد الخزاعي حدثنا عبد الأعلى عن حميد قال سألت أنسا. حدثنا عمرو بن زرارة حدثنا زياد قال: حدثني حميد الطويل عن أنس رضي الله عنه قال غاب عمي أنس بن النضر عن قتال بدر فقال يا رسول الله، غبت عن أول قتال قاتلت المشركين، لئن الله أشهدني قتال المشركين ليرين الله ما أصنع، فلما كان يوم أحد وانكشف المسلمون قال: ((اللهم إني أعتذر إليك مما صنع هؤلاء- يعني أصحابه- وأبرأ إليك مما صنع هؤلاء))- يعني المشركين- ثم تقدم، فاستقبله سعد بن معاذ، فقال يا سعد بن معاذ، الجنة، ورب النضر إني أجد ريحها من دون أحد. قال سعد فما استطعت يا رسول الله ما صنع. قال أنس فوجدنا به بضعا وثمانين ضربة بالسيف أو طعنة برمح أو رمية بسهم، ووجدناه قد قتل وقد مثل به المشركون، فما عرفه أحد إلا أخته ببنانه. قال أنس كنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه: {من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه} إلى آخر الآية.
[طرفاه 4048، 4783، تحفة 671، 4450 أ].
(رواه البخاري )
பத்ரு போரில் கலந்து கொள்ள முடியாத
அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் உஹது போரில்  முஸ்லிம்கள் எதிர்பாராத தாக்குதலால் போர்க் களத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் சமயம் தன்னை முன்னோக்கி வந்த சஅத் (ரலி) அவர்களை பார்த்து சஅதே! எங்கே செல்கிறீர்கள் இதோ உஹது மலை அடிவாரத்தில் நான் சுவனத்தின் வாசனையை நுகருகிறேன் என்று கூறியவாறு போர்க் களம் கண்டு ஷஹீதானார்கள். (நூல்: புகாரி)

உஹது போர்க் களத்தில் முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்படும் நிலையை அறிந்த ஹன்ழலா ரலி அவர்கள் முதலிரவை முடித்த நிலையில் புது மாப்பிள்ளையாக குளிப்பதற்கு கூட அவகாசமளிக்காமல் வாளோடு போர்க் களம் கண்டு ஷஹீதாக்கப்பட்டு மலக்குகளால்  குளிப்பாட்டப்படும் பாக்கியத்தை பெற்றார்கள்.
حنظلة بن أبي عامر (المتوفي سنة 3 هـ)  صحابي منالأنصار من بني ضبيعة من الأوس، أسلم، وخرج إلى غزوة أحد بعد أن سمع النفير وهو جُنُب، فقُتل يومها، قتله شداد بن الأسود الليثي وأبو سفيان بن حرب اشتركا فيه. وقال النبي محمد أن الملائكة غسّلته، فسُمّي غِسِّيل الملائكة.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிகாட்டல்கள் இளைஞர்களுக்கு மட்டுமல்ல வாலிபப் பெண்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வாலிபப் பெண்களுக்கு நல்லொரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது உம்மு சுலைம் ரலி அவர்களின் வாழ்க்கை பாடம்!

بدأت قصة إسلام أبي طلحة يوم أراد أن يخطب أم سُليم، حيث ذهب إليها فلما بلغ منزله، واستأذن إليه، فعرض نفسه عليها. فقالت: إن مثلك يا أبا طلحة لا يُرد، ولكني لن أتزوجك فأنت رجل كافر. فقال: والله ما هذا الذي يمنعكِ مني يا أم سليم. قالت: فماذا إذ؟! قال: الذهب والفضة. يعني أنها آثرت غيره عليه أكثر غنىً منه. قالت: بل إني أشهِدك يا أبا طلحة، وأشهد الله ورسوله؛ أنك إن أسلمت رضيت بك زوجًا، وجعلت إسلامك لي مهرًا.

فلما سمع أبو طلحة كلام أم سليم، انصرف ذهنه إلى صنمه الذي اتخذه من الخشب، يتوجه إليه بالعبادة. هنا قالت أم سليم: ألست تعلم يا أبا طلحة أن إلهك الذي تعبده من دون الله قد نبت من الأرض؟! فقال: بلى. قالت: ألا تشعر بالخجل وأنت تعبد جذع شجرة، جعلت بعضه لك إلهًا، بينما جعل غيرك بعضه الآخر وقودًا يخبز عليه عجينه؟!

قال: ومَن لي الإسلام؟ قالت: أنا أعلمك كيف تدخل فيه: تشهد أن لا إله إلا الله، وأن محمدًا رسول الله، ثم تذهب إلى بيتك فتحطم صنمك وترمي به. ففعل أبو طلحة كل ذلك. ثم تزوج من أم سليم. فكان المسلمون يقولون: "ما سمعنا بمهر قط كان أكرم من مهر أم سليم، فقد جعلت مهرها الإسلام".
யுவதிகள் வாழ்க்கைப் பாதையில் தடுமாறி மார்க்கத்தையும் வீட்டையும் விட்டு வெளியேறி நரகப்படுகுழிகளை தேடி ஓடும் இந்த மோசமான காலத்தில்... தன்னை விரும்பியவர் மதீனாவில் பெரிய செல்வந்தர்,  கட்டுடல் கொண்ட  ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர், அவரைப் போன்ற எந்த ஆணையும் எந்த பெண்ணும் திருமணம் முடிக்க மறுக்க மாட்டாள். ஆனாலும் அபூதல்ஹா ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னாள் உம்மு சுலைம் ரலி அவர்களிடம்  (அனஸ் (ரலி) அவர்களின் தாயார்) தன்னை மணம் முடிக்குமாறு கேட்டுக் கொண்ட போது தான் விதவையாக உள்ள  (வாழ வழியில்லாத) சூழலில் கூட நீங்கள் காஃபிர் நான் ஒரு முஸ்லிமான பெண் எப்படி நான் உங்களை  திருமணம் முடிக்க முடியும்?  என்று மறுத்தார்! என்னிடம் உள்ள பொன்னும்(தங்கம், வெள்ளி) பொருளும் வேண்டாமா?  என கேட்க அதை என் அல்லாதவர் விரும்புவார் என்று கூறியதோடு விடாமல் அவர் வணங்கும் கற்களுக்கும், மரக் கட்டைகளுக்கும் எந்த சக்தியும் இல்லை என்பதை உணர வைத்து அவரை இஸ்லாமிய மார்க்கத்தை தழுவச் செய்த பிறகு தான் திருமணம் முடிக்க சம்மதித்தார். அபூதல்ஹா ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதையே மஹராக மனம் பொருந்திக் கொண்டார்.

முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பேசிக் கொண்டனர் மஹர்களில் உம்மு சுலைமுடைய மஹர் ("இஸ்லாம்") தான் மிகவும் சங்கைக்குரியது என்று...


இதே போல ஹிஜ்ரத் பயணம் கட்டாயமாக்கப் பட்ட காலத்தில் தன்னை விரும்பிய நபரை ஹிஜ்ரத் பயணம் செய்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று கூறிய உம்மு கைஸ் (ரலி)என்ற பெண்மணியின் வரலாற்றிலும் இந்த சமூகப் பெண்களுக்கு பெரும் படிப்பினை இருக்கிறது.  இந்த பெண்ணை திருமணம் முடிப்பதற்காகவே ஹிஜ்ரத் செய்த நபருக்கு "مهاجر أم قيس" என்றே பெயராகிப் போனது.

قال شيخ الإسلام ابن تيمية في الفتاوى (18/253) :
وقد روى أن سبب هذا الحديث أن رجلا كان قد هاجر من مكة إلى المدينة لأجل امرأة كان يحبها تدعى أم قيس فكانت هجرته لأجلها فكان يسمى مهاجر أم قيس فلهذا ذكر فيه أو امرأة يتزوجها وفى رواية ينكحها فخص المرأة بالذكر لإقتضاء سبب الحديث لذلك ، والله أعلم .ا.هـ
ஷைகுல் இஸ்ஸாம் அல்லாமா இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுவார்கள். انما الاعمال بالنيات என்ற ஹதீஸ் சொல்லப் பட காரணம் இந்த நிகழ்வு தான்.

ஒரு பெண் தன் சாமர்த்தியத்தால் மார்க்கத்திற்கு பயனளித்திட முடியுமானால் எல்லா வகையிலும் அவளை விட உயர்ந்த ஒரு ஆண் இந்த மார்க்கத்திற்காக எவ்வளவு பயனளித்திட முடியும்! அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டமைத்த சமூகமான ஸஹாபாக்கள் சிறப்பாக  செய்து காண்பித்தார்கள்.
மார்க்கத்திற்காக தங்களது வீட்டை, மனைவி, மக்களை பின்பு தாங்கள் பிறந்து வளர்ந்து ஆளான அல்லாஹ்விற்கு பிரியமான பூமியை (மக்காவை) உயிரினும் மேலான கஃபாவை என நிறைய இழந்தார்கள்.  இந்த மார்க்கத்தை பாதுகாக்க தீன் பணி தொடர்ந்திட காஃபிர்களின் தொல்லை தாங்காமல் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் பயணம், பின்பு  மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம்.... இந்த பயணங்கள்  அவர்களுக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. வாகனமில்லை கூட்டிச் செல்ல ஆளில்லை விபரம் தெரிந்தால் பெரும் தொல்லை....
கணவன் ஒரு புறம் மனைவி மக்கள் ஒரு புறம் அவர்களின் நிலை என்னவாகுமோ என்ற பதற்றம் எல்லா சிரமங்களையும் இந்த மார்க்கத்திற்காக சகித்துக் கொண்ட பெருமக்கள் ஸஹாபாக்கள்.

حدثني إسحاق،‏‏‏‏ اخبرنا يعقوب،‏‏‏‏ حدثني ابن اخي ابن شهاب،‏‏‏‏ عن عمه،‏‏‏‏ اخبرني عروة بن الزبير انه،‏‏‏‏ سمع مروان بن الحكم،‏‏‏‏والمسور بن مخرمة يخبران خبرا من خبر رسول الله صلى الله عليه وسلم في عمرة الحديبية،‏‏‏‏ فكان فيما اخبرني عروة عنهما:‏‏‏‏ "انه لما كاتب رسول الله صلى الله عليه وسلم سهيل بن عمرو يوم الحديبية على قضية المدة،‏‏‏‏ وكان فيما اشترط سهيل بن عمرو انه قال:‏‏‏‏ لا ياتيك منا احد وإن كان على دينك إلا رددته إلينا،‏‏‏‏ وخليت بيننا وبينه،‏‏‏‏ وابى سهيل ان يقاضي رسول الله صلى الله عليه وسلم إلا على ذلك،‏‏‏‏ فكره المؤمنون ذلك وامعضوا فتكلموا فيه،‏‏‏‏ فلما ابى سهيل ان يقاضي رسول الله صلى الله عليه وسلم إلا على ذلك كاتبه رسول الله صلى الله عليه وسلم،‏‏‏‏ فرد رسول الله صلى الله عليه وسلم ابا جندل بن سهيل يومئذ إلى ابيه سهيل بن عمرو،‏‏‏‏ ولم يات رسول الله صلى الله عليه وسلم احد من الرجال إلا رده في تلك المدة وإن كان مسلما.... (رواه البخاري)

ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது ஸூஹைல் இப்னு அம்ர் என்ற காஃபிர்களின் தூதுவரோடு உடன்படிக்கை கையெழுத்தாக உள்ளது... உடன்படிக்கை நிபந்தனைகளில் ஒன்று எங்களிடமிருந்து இஸ்லாத்தை ஏற்று யாராவது உங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பிட வேண்டும் என்பதும் உள்ளது. இச்சமயம் ஸூஹைலுடைய மகன் அபூ ஜன்தல் (ரலி) என்ற ஸஹாபி தன்னை காஃபிர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு கைகள்  விலங்கிட்ட நிலையிலேயே முஸ்லிம்களிடம் வந்து சேருகிறார் அவரை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று அவருடைய தந்தை ஸூஹைல் வலியுறுத்துகிறார் நபிகள் நாயகம் ஸல் அவர்களும், ஸஹாபாக்களும் எவ்வளவு எடுத்துக் கூறியும் ஏற்க மறுக்கிறார் நீங்கள் இவரை திரும்ப அனுப்பி வைத்தால் மட்டுமே உடன்படிக்கை கையெழுத்தாகும் என்கிறார். வேறு வழியின்றி நபி ஸல் அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். அவரை இழுத்துச் செல்லப் படுகிறது. அவர் முஸ்லிம்களைப் பார்த்து  முஸ்லிம்களே!மீண்டும் என்னை  காஃபிர்களிடம் ஒப்படைக்கிறீர்களே! என் மார்க்கத்தை விடும் படி அவர்கள் துன்புறுத்துவார்களே என்றார்.....

இங்கே இக்கால வாலிப சமூகத்திற்கு பெரும் படிப்பினை உள்ளது.
இழுத்துச் செல்லுப் படும் அபூஜன்தல் (ரலி) என்ற இளம் ஸஹாபி தன் உயிர் போவதை விட ஈமான் பறிபோவது குறித்தே பெரும் கவலை தெரிவித்தார்.
மேலும் இந்த ஒரு தலைபட்சமான உடன்படிக்கையால் மனம் நொந்து போயிருந்த ஸஹாபாக்கள் குறிப்பாக இளைஞர்கள் நபியின் உத்தரவுக்கு பணிந்து தான் தங்களின் உணர்வுகளை அடக்கிக் கொண்டார்கள்.

عن أَبي وَائِلٍ قال: لَمَّا قَدِمَ سَهْلُ بْنُ حُنَيْفٍ مِنْ صِفِّينَ أَتَيْنَاهُ نَسْتَخْبِرُهُ فَقَالَ: اتَّهِمُوا الرَّأْيَ ( وفي رواية : اتَّهِمُوا رَأْيَكُمْ عَلَى دِينِكُمْ ) فَلَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ، وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرَهُ لَرَدَدْتُ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، وَمَا وَضَعْنَا أَسْيَافَنَا عَلَى عَوَاتِقِنَا لِأَمْرٍ يُفْظِعُنَا إِلَّا أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ - قَبْلَ هَذَا الْأَمْرِ - مَا نَسُدُّ مِنْهَا خُصْمًا إِلَّا انْفَجَرَ عَلَيْنَا خُصْمٌ، مَا نَدْرِي كَيْفَ نَأْتِي لَهُ. (متفق عليه)
ஸஹ்ல் இப்னு ஹூனைஃப் என்ற ஸஹாபி (ரலி) அவரிடம் தோழர்கள் நீங்கள் ஏன் ஸிஃப்பீன் யுத்தத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று செய்தியறிய வந்த போது அவர் கூறினார் நீங்கள் உங்கள் எண்ணத்தை சந்தேகியுங்கள்! நான் இந்த போரில் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்றால் அபூஜன்தல் (ரலி) இழுத்துச் செல்லப்பட்ட சமயம் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உத்தரவை மறுத்து  என்னால்  ஏதும் செய்ய முடிந்திருந்தால் ஏதாவது செய்திருப்பேன்.(حق - ம் باطل - ம் அங்கே தெளிவாக இருந்தது) அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமே அனைத்தும் தெரியும். நாங்கள் போருக்கு பயந்து எங்களின் புஜங்களிலேயே வாள்களை தொங்க விடவில்லை மேலும் நாங்கள் அறிந்திருந்த காரியம் (உடன்படிக்கை) இலகுவாகவே அவ்வாறு பொறுமையாக இருந்தோம்.  இதுவெல்லாம் இதற்கு முன்னால்  ஆனால் இப்போது நாங்கள்ஒரு ஓரத்தை அடைக்க சென்றால் இன்னொரு புறத்திலிருந்து பிரச்சினை கிளம்புகிறது.
(ஸிஃப்பீன் யுத்தத்தில் யார் ஹக் யார் பாதில் என்ற குழப்பம் இருந்தது)

என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கட்டளைக்காக நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோம் என்று கூறுவது அவர்களின் வழிப் படும் தன்மையையும், தியாகத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

இது போன்ற தியாகங்களும் தலைமைக்கு கட்டுப்படும் உயர்குணமும் நம் இளைஞர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நபிகள் ஸல் அவர்களின் உத்தரவுக்கு பணிந்து தன் பெற்றோருக்கு பணி செய்த காரணத்தால் ஸஹாபி என்ற உயர்ந்த பட்டத்தை இழந்தாலும் வரலாற்றில் இடம் பிடித்த உவைஸூல் கர்னீ ரஹ் அவர்கள் நமக்கு முன் உதாரணமல்லவா?

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்வை வழிகாட்டியாக ஆக்கிக் கொண்ட வாலிபர்கள் ஜெயம் பெற்றார்கள். புறக்கணித்தவர்கள் நாசமடைந்து போனார்கள்.

நம் வாலிபர்களுக்கு அந்த தூய வழிகாட்டல்களை போதிப்போம் அவர்களையும் ஜெயசீலர்களாக உருவாக்கிடுவோம். வல்ல ரஹ்மான் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.