بسم الله الرحمن الرحيم
நபிநேசமே நம் சுவாசம்
************
*** *********
قول الله عز و جل :
***************
"قل أن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم ⚪
قول النبي صلى الله عليه وسلم :
*************************
"لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
" (رواه البخاري)
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனக்கே அவனுடைய சலாத்தும் சலாமும் இறுதித் தூதர்
முஹம்மத் நபி ஸல் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள் சத்திய ஸஹாபாக்கள்
அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உலகை படைத்து அதில் தன்னுடைய சிறந்த படைப்பான மனித
குலத்தை படைத்து அவர்களின் நேர்வழிக்காக பல்லாயிரக்கணக்கான நபிமார்களை
தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான் அவர்களுக்கு முத்திரையாக இறுதித்தூதர் நபிகள்
நாயகம் ஸல் அவர்களை எல்லா மார்க்கங்களையும் முழுமைப்படுத்திடும் படியான இஸ்லாமிய மார்க்கத்தையும், எல்லா வேதங்களின் சாராம்சத்தையும் உள்ளடக்கிய எல்லா காலங்களிலும் பொருந்தும்
படியான திருக்குர்ஆனையும் கொடுத்து கியாமத் நாள் வரை வரக்கூடிய முழு மனித
சமுதாயத்திற்கும், ஜின் வர்க்கத்தினருக்கும் நபியாக அனுப்பி வைத்து
பேருபகாரம் செய்துள்ளான்.
எல்லா நபிமார்களையும் நேசிப்பது அவசியம் என்கினும் நபிமார்களின் தலைவரும் நமது
நேர்வழிக்காக அனுப்பி வைக்கப்பட்டவருமான முஹம்மத் நபி ஸல் அவர்களை நேசிப்பது நமது
ஈமானின் ஒரு பகுதியாகும். நாம் மட்டுமல்ல
எல்லா நபிமார்களும் தங்களது காலத்தில் முஹம்மத் நபி ஸல் அவர்கள் நபியாக
அனுப்பி வைக்கப்பட்டால் அவர்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும்
அல்லாஹ்வால் வாக்குறுதி வாங்கப்பட்டனர்.
இவ்வாறு தான் பின்வரும் ஆயத்திற்கு திருக்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் இப்னு
அப்பாஸ் ரலி அவர்களின் கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.( நூல் :இப்னு கசீர்)
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ
مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ قَالُوْۤا اَقْرَرْنَا
قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ
الشّٰهِدِيْنَ
(நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம்
உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர்
உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது
திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 3:81)
قال علي بن أبي طالب وابن عمه ابن عباس رضي الله عنهما ما بعث الله
نبيا من الأنبياء إلا أخذ عليه الميثاق لئن بعث الله محمدا وهو حي ليؤمنن به
ولينصرنه وأمره أن يأخذ الميثاق على أمته لئن بعث محمد وهم أحياء ليؤمنن به
ولينصرنه وقال طاوس والحسن البصري وقتادة أخذ الله ميثاق النبيين أن يصدق بعضهم
بعضا وهذا لا يضاد ما قاله علي وابن عباس ولا ينفيه بل يستلزمه ويقتضيه
(تفسيرابن كثير)
நபி மீது எப்படி நேசம் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களே நமக்கு
சொல்லிக் காட்டியுள்ளார்கள்.
"لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين
" أخرجه مسلم، وأخرجه البخاري في "كتاب الإيمان"
"باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان"
" நான் உங்களின் பிள்ளைச் செல்வங்களை விடவும் உங்களின் பெற்றோரை விடவும் உங்களுக்கு பிரியமாக ஆகும் வரையில் உங்களில்
எவருடைய ஈமானும் பரிபூரணமடையாது" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள்.
لقد كان للنبي صلى الله عليه وسلم في نفس عمر رضي الله عنه منزلة
عالية لا تدانيها منزلة أحد من الخلق فكان صلى الله عليه وسلم أحب الخلق إليه قال
رضي الله عنه للنبي صلى الله عليه وسلم وهو آخذ بيده: يا رسول الله لأنت أحب إليَّ
من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم: (لا والذي نفسي بيده حتى
أكون أحب إليك من نفسك) فقال عمر: فإنه الآن والله لأنت أحب إليَّ من نفسي فقال
النبي صلى الله عليه وسلم: (الآن يا عمر)
ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கரம் பற்றியவராக நீங்கள்
என்னிடம் எல்லா வஸ்துக்களை விடவும் மிகப் பிரியமானவர் ஆனால் என் உயிரை விடவும்
பிரியமாக இல்லை என்றார்கள் அதற்கு நபியவர்கள் "இல்லை உன் உயிரை விடவும்
உன்னிடம் நான் பிரியமாக வேண்டும் என்றார்கள் ஹஜ்ரத் உமர் ரலி கூறினார்கள் இப்போது
நீங்கள் என் உயிரை விடவும் எனக்கு பிரியமாகி விட்டீர்கள் அதற்கு நபியவர்கள்
"இப்போது தான் உமரே" (நீங்கள் உண்மையான நேசம் கொண்டிருக்கிறீர்கள்)
என்று கூறினார்கள்.
புகாரீ ஷரீஃபில் வருகிறது "عضل قارة" என்ற கூட்டத்தினர் நபிகள்
நாயகம் ஸல் அவர்களிடம் வந்து எங்களது கூட்டத்தில் நிறைய நபர்கள் இஸ்லாத்தை
ஏற்றுள்ளார் கள் எனவே அவர்களுக்கு மார்க்கத்தை போதிக்க சில நபர்களை அனுப்பித் தர
வேண்டும் என்று பொய்யாகக் கூறி அழைத்துச் சென்று அவர்களில் சிலர்களை கொலை செய்து
விட்டு சிலர்களை கைதியாக பிடித்துக் கொண்டார்கள் கைது செய்யப்பட்டவர்களில் خبيب بن عدي رضي
என்ற ஸஹாபியும் ஒருவர் இவர்களை காஃபிர்கள் கைதியாக பிடித்து கொலை செய்ய
முற்பட்ட போது அவர் இரண்டு ரக்அத் தொழ அனுமதி பெற்று தொழுது முடித்து விட்டு
கூறினார் "நீங்கள் உயிருக்கு பயந்து நான் தொழுகிறேன் என்று நினைப்பீர்கள்
என்பது இல்லையானால் நான் இன்னும் அதிகமாக தொழுதிருப்பேன்"
இவர் தான் கொலை செய்யப்படும் நேரத்தில் தொழுவதை முதன் முதலில் நடைமுறைப்
படுத்தியவராவார்.
சயீத் இப்னு ஆமிர் இப்னு ஜூதைம் என்பவர் அறிவிக்கிறார் ஹூபைப் ரலி அவர்கள்
கொலை செய்யப்பட்ட சமயம் நானும் அங்கிருந்தேன் காஃபிர்கள் அவருடைய உடலை
சேதப்படுத்தி அவருடைய சதைகளை ஒட்டகத்தில் சுமந்து சென்றார்கள்.
ஹூபைப் ரலி அவர்களிடம் காஃபிர்கள் கேட்டார்கள் உன் இடத்தில் முஹம்மத் இருப்பதை
நீ விரும்புகிறாயா? என்று அதற்கவர்கள் பதிலளித்தார்கள் "
அல்லாஹ்வின் மீதாணையாக நான் வீட்டினரிடத்தில் இருக்க முஹம்மத் நபி ஸல் அவர்களின்
மீது ஒரு முள் தைப்பதைக் கூட நான் விரும்ப மாட்டேன்"
இது தான் ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மீது கொண்டிருந்த பாசம்.
فلما خرجوا به ليقتلوه وقد نصبوا خشبة ليصلبوه، فانتهى إلى التنعيم،
فقال "إن رأيتم أن تدعوني أركع ركعتين"، فأذنوا له، فصلى ثم قال
"والله لولا أن تظنوا إنما طولت جزعاً من القتل لاستكثرت من الصلاة"،
فكان أول من سن الصلاة عند القتل.
قال سعيد بن عامر بن حذيم "شهدت مصرع خبيب، وقد بضعت قريش لحمه
ثم حملوه على جذعة، فقالو: "أتحب أن محمداً رسول الله صلى الله عليه وسلم
مكانك؟" فقال "والله ما أحب أني في أهلي وأن محمداً رسول الله صلى الله
عليه وسلم شيك بشوكة".
நம் மீது நமக்கு இருக்கும் அக்கறையை விடவும் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அதிக அக்கறையும் பாசமும் உள்ளது அல்லாஹ்வே
திருமறை குர்ஆனில் கூறுகிறான்.
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا
عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ⚪
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது
அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும்
விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும்
உடையவராக இருக்கின்றார்.
(-Sura At-Tawbah,
Ayah 128)
பொதுவாக நமது உறவுகளிலோ நமது நட்பு வட்டாரத்திலோ நம் மீது அக்கறை
காட்டுபவர்களைத் தான் நாம் அதிகம் பிரியப்படுவோம் அது போல நபிகள் நாயகம் ஸல்
அவர்கள் ஈருலக வாழ்விலும் நம் மீது அக்கறை கொண்டிருந்தார்கள்.
நம் பெற்றோர்கள் பெரும்பாலும் இவ்வுலக வாழ்வில் நமது சந்தோஷமான வாழ்க்கை
குறித்து கவனம் செலுத்துவார்கள் . ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் லட்சிய
வாழ்க்கையான நம்முடைய மறுஉலக வாழ்வில் நாம் நிரந்தரமாக துன்பத்திற்குள்ளாகி விடக்
கூடாது என்று நமக்கு வாக்கிலும், வாழ்விலும், துஆக்களாலும் வழிகாட்டியது மட்டுமல்லாது நமக்கு
மறுஉலகில் "ஷஃபாஅத்" என்ற பேருதவியும் செய்யக் காத்திருக்கிறார்கள்.
எனவே நமக்கும் அவர்களுக்கும் உறவில் உறுதியான "ஈமானிய உறவு" என்ற
வகையிலும்,
நம் மீது அக்கறை கொண்ட "ஆன்மீகத் தந்தை" என்ற வகையிலும்,
நமக்கு ஈருலக வழிகாட்டி என்ற "திறமையின்" அடிப்படையிலும்,
தன் கொள்கையில் உறுதியாக நின்று உலகமே எதிர்த்தாலும் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து
கொடுத்தாலும் பின் வாங்க மாட்டேன் என்ற "தீரத்தின்" அடிப்படையிலும்,
அகம் , புற "அழகின்" அடிப்படையிலும் ,
எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் புகழ்ந்த ⚪وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيم
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான
நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(-Sura Al-Qalam,
Ayah 4)
என்ற "குணத்தின்" அடிப்படையிலும் தலைமேல் வைத்துப் புகழ பிரியத்தை
வெளிப்படுத்த மிகத் தகுதியானவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர்
முஹம்மத் ஸல் அவர்கள்.
ஆனால் அந்தப் பிரியத்தை வெளிப்படுத்தும் விதம் அல்லாஹ்வின் ரஸூல் காட்டித்
தந்த ஸஹாபாக்கள் பின்பற்றிய அழகிய முறையில் ஆகியிருக்க வேண்டும் என்பது மிக அவசியம்.
ஆடையில் நடை உடை பாவனையில் அவர்களுடைய சுன்னத்துகளை புறம்தள்ளி விட்டு பிரியம்
வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை.
1 . சுன்னத்துகளை பின்பற்றுவது.
அகராதியில் சுன்னத் என்பதற்கு பாதை என்று பொருள். ஷரீஅத்தின் நடைமுறையில் நபியவர்களால் வழமையாக நடைமுறைப் படுத்திக் காட்டப்பட்ட கட்டாயமில்லாத செயலுக்கு சுன்னத் என்று
சொல்லப்படும்.
(நூல்:ரத்துல் முஹ்தார்1/103)
முக்கியமான சில சுன்னத்துகள்...
* தாடி வைப்பது.
صحيح البخاري وصحيح مسلم هما أصح الكتب بعد كتاب الله -عز وجل- ثبت
فيهما عن النبي -صلى الله عليه وسلم- أنه قال: (قصوا الشوارب وأعفوا اللحى خالفوا
المشركين) من حديث ابن عمر عن النبي -صلى الله عليه وسلم-: (قصوا الشوارب وأعفوا
اللحى خالفوا المشركين)
"மீசையை கத்தரித்து குறைத்துக் கொள்ளுங்கள் தாடியை (வெட்டாமல்)முழுமையாக
விடுங்கள் மேலும் (மீசையை வைத்துக் கொண்டு தாடியை மழிக்கும்)
முஷ்ரிகீன்களுக்கு மாறாக நடந்து கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
* மிஸ்வாக் செய்வது .
عن أبي هريرة رضي الله عنه: عن رسول الله صلى الله عليه وسلم أنه قال:
((لولا أن أشقَّ على أمتي لأمرتُهم بالسواك مع كل وضوء))؛ أخرجه مالك، وأحمد،
والنسائي، وصحَّحه ابن خزيمة، وذكره البخاري تعليقًا.
"என் சமுதாயத்தினருக்கு சிரமம் ஏற்படும் என்பதில்லையானால் ஒவ்வொரு தொழுகைக்கும்
ஒளூச் செய்யும் போது மிஸ்வாக் செய்வதை நான் கடமையாக்கியிருப்பேன்" என்று
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழ்நாளில் கடைசியாக செய்த அமல் மிஸ்வாக் என்பதை
நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றுவதில் ஸஹாபாக்களின்
உயர்நிலை...
***********************************
أَنَّ عَائِشَةَ ، قَالَتْ : إِنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ ، قَالَ : " لَسْتُ تَارِكًا شَيْئًا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِ إِلا عَمِلْتُ بِهِ ، وَإِنِّي لأَخْشَى
إِنْ تَرَكْتُ شَيْئًا مِنْ أَمْرِهِ أَنْ أَزِيغَ "
ஹஜ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா சித்தீகா ரலி அவர்கள்
அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள் செய்த எந்த செயலையும் நான் செய்யாமல்
விட்டதில்லை.ஏனெனில் நபியவர்கள் செய்தவற்றில் எதையேனும் விட்டு விட்டால் நான்
வழிதவறி விடுவேனோ என்று பயப்படுகிறேன்.
(நூல்: புஹாரி)
ஹஜ்ரத் உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டார்கள்
பிறகு,
إنِّي لأَعْلَمُ أَنَّك حَجَرٌ , لا تَضُرُّ وَلا تَنْفَعُ , وَلَوْلا
أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ
நீ ஒரு கல்.உன்னால் (நேரடியாக)பிறருக்கு எந்த பயனையும் தர முடியாது. எந்த ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தவும் முடியாது என்று நான்
நன்கறிவேன் நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நான் உன்னை
முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 1270)
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவா்கள் ஹூதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் மக்காவாசிகளிடம் தூதராகச் சென்றாா்கள்.
அங்குள்ள தலைவர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் கீழாடையை கரண்டைக்குக் கீழ் அணிந்து செல்லுமாறு மக்கள்
கூறியபோது,
என் தோழர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்கள் இப்படித்தான் ஆடை
அணிவார்கள்.அதற்கு மாற்றமாக நான் அணியமாட்டேன்.என்று கூறி மறுத்துவிட்டார்கள்.
ஹஜ்ரத் ஹூதைபா(ரலி) அவர்கள் ஈரானை வெற்றி கொண்டாா்கள். அதற்கு முன்பு அந்த அரசனிடம் பேச்சு வாா்த்தைக்காக
சென்றிருந்தார்கள்.
அரசர் விருந்தளித்தார். சாப்பிடும் போது ஹூதைபா அவர்களின் கை தவறி சிறிது உணவு
கீழே விழுந்து விட்டது. உடனே ஹூதைபா ரலி அவர்கள் அதை எடுத்து சுத்தம் செய்து
சாப்பிட்டார்கள் அதைப் பார்த்து அருகிலிருந்தோர் முகம் சுளித்த போது, அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் கவனிக்கப்
படத்தக்கது.
'أأترك سنة حبيبي لهؤلاء الحمقاء'
"இந்த மடையர்களுக்காக நான் எனது நேசருடைய சுன்னத்தை விட வேண்டுமா?"
சுன்னத்துகளை பின்பற்றுவதில் ஸஹாபாக்களின் உறுதியான வழிமுறையைப் பேண வேண்டும் அதுவே உண்மையான
நேசத்தின் அடையாளமாகும்.
* தொழுகையின் மூலம் உதவி தேடுவது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரவு நேரங்களில் நஃபிலான வணக்கங்களில் ஈடுபடுவதை
வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது حتي تنتفخ قدماه
அவர்களின் பாதம் வீங்குமளவு தொழுதார்கள் ஆயிஷா ரலி அவர்கள் தங்களின் முன் பின்
பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக அல்லாஹ் அறிவித்திருக்க ஏன் இவ்வளவு சிரமம்
எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்க சொன்னார்கள் "
أفلا أكون عبدا شكورا"
" நான் என் ரப்புக்கு நன்றியுள்ள அடியானாக ஆகியிருக்க வேண்டாமா" என்று.
عن أم المؤمنين عائشة رضي الله عنها: أن نبي الله صلى الله عليه وسلم
كان يقوم من الليل حتى تتفطر قدماه، فقالت عائشة: لمَ تصنع هذا يا رسول الله وقد
غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر؟! قال: ((أفلا أحب أن أكون عبدًا شكورًا))متفق عليه
ولهما من حديث المغيرةِ بن شعبة رضي الله عنه قال: (كان النبي صلى
الله عليه وسلم يصلي حتى تنتفخ قدماه)
* மார்க்கத்திற்காக தியாகம் செய்வது .
***************************************
சமூகப்பணி, பொதுத்தொண்டு, அரசியல், மார்க்கப் போர், போன்ற எல்லா தளங்களிலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நேரடியாக களம் கண்டார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த மார்க்கத்தை நிலை நிறுத்திட அல்லாஹ்விற்காக
அவனுடைய பாதையில் தாங்களே முன்னின்று 27 யுத்தங்களை தலைமையேற்று நடத்தினார்கள். அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின்
தூதரின் பற்கள் உடைபட்டது தலையில் ஆழமான காயம் ஏற்பட்டது .
இந்த தியாகங்கள் தான் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அல்லாஹ்வுடைய நபியின்
வழிமுறையை பறைசாற்றுவதாக அமையுமே தவிர வெறும் வார்த்தைகளால் நாம் அல்லாஹ்வுடைய
நபியை புகழ்ந்துரைப்பதால் மட்டுமே பாசம் வைத்ததாக ஆகாது.
அல்லாஹ்வே கூறுகிறான்.
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ
اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ⚪
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(-Sura Aal-E-Imran,
Ayah 31)
நபியை அவர்கள் காட்டித் தந்த வழியில் அவர்கள் வாழ்நாளில் முக்கியத்துவமாக
கருதி ஈடுபட்ட வழிகளில் பின்பற்றுவதே உண்மையான நேசத்தின் வெளிப்பாடாகும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்த மார்க்க நடைமுறைகளை நமக்கு போதித்தார்களோ
அதற்கு பாதகம் வருகிற போதும் கூட நம்மில் எத்தனை நபர்களின் உள்ளம்
மார்க்கத்திற்காக தியாகம் செய்ய முன் வந்தது என்று நாம் கேட்டுக் கொள்ள கடமைப்
பட்டுள்ளோம். இன்னும் புகழ்பாடல்கள் மட்டுமே சுன்னத் என்று வாதிடுமளவு நம் தியாகம்
சுருங்கிப் போயுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
2 . ஸலவாத் சொல்வது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரைக் கேட்ட உடனே உள்ளத்திலிருந்து அவர்களின்
தியாகங்களை நினைவு கூர்ந்து துஆ செய்யும் விதமாக ஸலவாத்களை கூறுவது அவர்களின் மீது
நாம் பாசம் வைத்திருப்பதின் வெளிப்பாடாகும். அதுவும் அவர்கள் சொல்லித் தந்த ஸஹாபாக்கள் கூறி அவர்கள் ஆமோதித்த வார்த்தைகளாக
இருப்பது சிறப்பம்சமாகும்.
جاء من حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع النبي
- صلى الله عليه وسلم -يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه
من صلى علي صلاة صلى الله عليه بها عشرا ثم سلوا الله لي الوسيلة فإنها منزلة في
الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو فمن سأل لي الوسيلة
حلت له الشفاعة (رواه مسلم)
" முஅத்தினுடைய அழைப்பை நீங்கள் செவியுற்றால் அவர் சொல்வதைப் போலவே திரும்பச் சொல்லுங்கள் பின்பு என் மீது
ஸலவாத் சொல்லுங்கள் ஏனெனில் என் மீது யார் ஒரு முறை ஸலவாத் சொல்வாரோ அல்லாஹ் அவர்
மீது பத்து ரஹ்மத்களை பொழிகிறான் பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள் அது
சுவனத்தில் உள்ள மிகப் பெரிய பதவியாகும் அல்லாஹ்வின் குறிப்பான அடியார் ஒருவருக்கே
தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது அது நானாகத் தான் இருப்பேன் என நான் ஆதரவு வைக்கிறேன். யார் எனக்காக வஸீலாவை கேட்பாரோ
அவருக்கு என் சிஃபாரிசு உறுதியாகி விட்டது " என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள்.
* ஸஹாபாக்களையும், நல்லடியார்களையும் கண்ணியப் படுத்துவது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மீதான நேசமும் பாசமும் உண்மையெனில் நபித்
தோழர்கள் குறித்த நம் கண்ணியத்தில் எந்த மாறுதல்களும் ஏற்படக் கூடாது நபிகள்
நாயகம் ஸல் அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து நின்று தங்களின்
பொருளாதாரங்களை குடும்பங்களை இழந்து தன் உயிரையே தியாகம் செய்த அந்த நபித்தோழர்களை
நிந்திப்பது ஒரு போதும் நபிநேசமாகவோ நபிவழியாகவோ இருக்கவே முடியாது எனவே தான்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...
حديث مرفوع) أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْمُبَارَكُ بْنُ أَبِي
الْمَعَالِي الْحَرِيمِيُّ بِبَغْدَادَ ، أَنَّ هِبَةَ اللَّهِ بْنَ مُحَمَّدٍ ،
أَخْبَرَهُمْ أَنْبَأَ أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ عَلِيٍّ ، أَنْبَأَنَا أَبُو
بَكْرٍ أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْقَطيِعِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ ، حَدَّثَنِي
أَبِي ، ثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ، ثَنَا عُبَيْدَةُ بْنُ
أَبِي رَابِطَةَ الْحَذَّاءُ التَّمِيمِيُّ ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ
الرَّحْمَنِ بْنُ زِيَادٍ أَوْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي ،
اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي ، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي ، فَمَنْ
أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ ، وَمَنْ أَبْغَضَهُمْ ، فَبِبُغْضِي
أَبْغَضَهُمْ ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي ، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى
اللَّهَ ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ " . هَكَذَا
رَوَاهُ الْإِمَامُ أَحْمَدُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي مُسْنَدِهِ
" என் தோழர்களை நிந்திக்கும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், என் தோழர்களை நிந்திக்கும் விஷயத்தில் அல்லாஹ்வை
அஞ்சிக் கொள்ளுங்கள். எனக்குப் பின்பு அவர்களை குறை கூறுவதில் ஈடுபடாதீர்கள் யார் அவர்களைப் பிரியப் படுவாரோ என்
மீதான பிரியத்தினாலே அவர்களை பிரியப்படுகிறார், யார் அவர்களை கோபப்படுகிறாரோ என் மீதான கோபத்தினாலேயே அவர்களின் மீது கோபம்
கொள்கிறார், யார் அவர்களுக்கு நோவினை தருவாரோ அவர் திட்டமாக எனக்கு நோவினை தந்து விட்டார், எனக்கு நோவினை தந்தவர் திட்டமாக அல்லாஹ்விற்கு
நோவினை தந்து விட்டார் , யார் அல்லாஹ்விற்கு நோவினை அளித்தாரோ அல்லாஹ்
வெகுவிரைவில் அவர்களை பிடிப்பான்.
(நூல் : அஹ்மத் )
* மேலும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் இறைநேசர்களை பிரியப்படுவதும் நபிகள் நாயகம்
ஸல் அவர்களின் மீது நேசம் கொள்வதற்கான அடையாளமாகும்.
**************************************
"من عادي لي وليا فقد آذيته بالحرب...
யார் அல்லாஹ்வின் நேசர்களை விரோதித்துக் கொள்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்விடம்
போர் செய்ய தயாராகட்டும் என்று அல்லாஹ் ஹதீஸ் குதுஸியின் மூலம் எச்சரிக்கை
செய்கிறான்.
நபியின் மீது காதல் கொண்டு அவர்களை அடிதழுவாது பின்பற்றுவதையே இலட்சியமாக
கொண்டு செயல்பட்ட இறைநேசச் செல்வர்களை பிரியப் படுவது நபிநேசத்தின்
வெளிப்பாடாகும். அதே சமயம் தனக்கு தோன்றுபவர்களை மட்டும் இறைநேசர்கள் என்றும்
தனக்கு பிடிக்காத , விளங்காதவர்களை தரக் குறைவாக விமர்சிப்பதும்
அபாயமானதாகும் ஏனெனில் இறைநேசர்கள் யார் என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே
வெளிச்சமானது நமக்கு தெரியாமல் நமக்கு அருகாமையில் கூட இறைநேசர்கள் இருக்கலாம்
யாரையும் அற்பமாக கருதி வாய்விடக் கூடாது பிறகு அல்லாஹ்வின் கோபப் பார்வைக்கு ஆளாக
நேரிடும்...
* நபிகள் நாயகம் ஸல் அவர்களின் குடும்பத்தினரை நேசம் கொள்வது,
حدثنا أبو الوليد حدثنا ابن عيينة عن عمرو بن دينار عن ابن أبي مليكة
عن المسور بن مخرمة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة
بضعة مني فمن أغضبها أغضبني( رواه البخاري )
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் "ஃபாதிமா என் உடலின் சதைத் துண்டாவார் அவரை கோபப் படுத்தியவர் என்னை கோபப் படுத்தி விட்டார்" என்று
கூறினார்கள்.
عن جابر بن عبدالله رضي الله عنهما قال: رأيت رسول الله صلى الله عليه
وسلم في حجته يوم عرفة، وهو على ناقته القصواء، يخطب، فسمعته يقول: ((يا أيها
الناس، إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا: كتاب الله، وعترتي أهل بيتي)) (
رواه الترمذي)
ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறுதி ஹஜ்ஜில் அரஃபா மைதானத்தில் தங்களது 'கஸ்வா' என்ற ஒட்டகையில் அமர்ந்தவாறு பிரசங்கம் செய்து கொண்டிருக்க நான் பார்த்தேன்
அப்போது அவர்கள் கூற கேட்டேன் " ஓ மக்களே உங்களிடத்தில் அல்லாஹ்வின்
வேதத்தையும், என் குடும்பத்தையும் விட்டுச் செல்கிறேன் அதை
நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள்" ( நூல் :திர்மிதீ )
மேலும் அவர்களின் வமிசத்தினரை பிரியப் படுவது , அரபி மொழியை பிரியப் படுவது என நபி நேசத்தை
வெளிப் படுத்த வேறு பல விஷயங்கள் இருப்பினும் மேற்கூறப்பட்டவைகள் மிக முக்கியமானவை
என்பதை நினைவில் வைத்து நபிகள் பெருமானாரின் பிரியத்தை நம்மிலும் , நம் குடும்பத்திலும் நம் சமூகத்திலும் நம்
வருங்கால சமுதாயத்தினரிடத்திலும் விதைத்து நபிகள் நாயகம் ஸல் அவர்களின்
சுன்னத்துகளை உயிர்ப்பிக்கச் செய்து அவர்கள் வாக்களித்த
المتمسك بسنتي عند فساد أمتي له أجر مئة شهيد
எனது உம்மத்தில் சுன்னத்துகள் மங்கிப்போன குழப்பமான காலத்தில் எனது சுன்னத்தை
யார் கடைபிடித்து வருவாரோ அவருக்கு நூறு ஷஹீதுகளுடைய நன்மை கிடைக்கும். ( நூல் : தப்ரானி )
உயர்ந்த நன்மைகளை அடைந்திடுவோமாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
وآخر دعوانا أن الحمد لله رب العالمين...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.