بسم الله الرحمن الرحيم
இஸ்லாத்திற்கு அடிபணிவோம்
*************************************
وَلَنْ
تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ
إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ
الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(البقرة120)
7320- عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ،
حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ
اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).
**********************************************************
இஸ்லாமிய மார்க்கம் புனிதமான மார்க்கம்.
அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம்.
இப்புனித மார்க்கத்தில் நம்மை பிறக்கச்செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். இந்த மார்க்கத்தின் பிறகாரம் வாழச் செய்து இதன் மீதே மரணிப்பதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!
என்று ஆரம்பமாக துஆச் செய்து கொள்கிறேன் ஆமீன்.
முந்தைய ஷரீஅத்தில் எதனையும் பரீபூரணமாக்கப்பட்டது என்று அல்லாஹ் கூறவில்லை.
நம்முடைய இம்மார்க்கத்தை மட்டும்தான் பரிபூரணமாக்கப்பட்ட மார்க்கம் என்று கூறுகின்றான்.
قوله تعالي:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي
وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கிவிட்டேன்
மேலும் உங்கள்மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன் இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே
( இசைவானதாகத்)
தேர்ந்தெடுத்துள்ளேன்.
عَنْ أَبِي
هُرَيْرَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ: إِنَّ مَثَلِي وَمَثَلَ اْلاَنْبِيَاءِ
مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَي بَيْتاً فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلاَّ
مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ
وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ: هَلاَّ وُضِعَتْ هذِهِ اللَّبِنَةُ؟
رواه
البخاري باب خاتم النبيين، رقم:٣٥٣٥
எனக்கும், எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் உதாரணம், ஒரு மனிதர் ஒரு வீட்டைக் கட்டி அதை எல்லாவகையிலும் அலங்கரித்தார், ஆனால் அவ்வீட்டின் ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவு இடத்தைக் காலியாக விட்டுவிட்டார்.
அவ்வீட்டைச் சுற்றிப் பார்த்த மக்கள் வீட்டின் அழகை பாராட்டினர். ஆயினும், (காலியான அந்த இடத்தில்) ஒரு செங்கல் வைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே!’ என்றும் சொல்லிச் சென்றனர். “நானே (விடுபட்ட)
அந்தச் செங்கலாவேன்.
நான் இறுதி நபியாக இருக்கிறேன்!’ என்று நபி
(ஸல்)
அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா
(ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
முந்தைய சமுதாயத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு நபி.
ஒரு ஊருக்கு ஒரு நபி.
ஏன் ஒரே நேரத்தில் இரண்டு நபிமார்கள்கூட ஒரு கூட்டத்தாருக்கு இருந்துள்ளார்கள் ஆனால் நம் சமுதாயத்திற்கு மட்டும்தான் முழு உலகிற்கும் ஒரே நபி. கியாமத்வரை அவரே நபி.
இருதி நபி.
அணைத்து நபிமார்களுக்கும் தலைமை நபி. இந்த உம்மத்திற்கு இலகுவான ஷரீஅத் சட்டங்களை பெற்றுத்தந்த நபி
இப்படிப்பட்ட உயர்வான மார்கத்தையும் சிறந்த நபியையும் இலகுவான ஷரீஅத் சட்டங்களையும் பெற்றநாம் மற்ற மதங்களின் மூடப்பழக்கங்களை நாமும் பின்பற்றுவது அல்லாஹ் ரசூலின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
இன்று எத்தனையோ பழக்கங்கள் மாற்றார்களிடமிருந்து முஸ்லீம்களிடமும் ஊடுருவியுள்ளது.
7320- عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتْبَعُنَّ
سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ
دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ
وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).
7320. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)
அறிவித்தார். “உங்களுக்கு முன்னிருந்த
(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “இறைத்தூதர் அவர்களே!
(நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?“ என்று கேட்டோம்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “வேறு யாரை?“ என்று (திருப்பிக்)
கேட்டார்கள்.50
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 96.
யூத மதத்தின் தாக்கமோ கிருஸ்தவ மதத்தின் தாக்கமோ இந்து மதத்தின் தாக்கமோ எதுவும் நம்மிடத்தில் வந்து விடக்கூடாது எனவேதான் நபி( ஸல்)
அவர்கள் இவ்வாறு கூறினார்கள்
من تشبه
بقوم فهو منهم
யாராவது ஒருவர் வேறொரு சமுதாயத்திற்கு ஒப்பாக அவருடைய சொல் செயல் அமையுமானால் இவரும் அவர்களைச் சார்ந்தவர் என்று நபி
( ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
வணக்க வழிபாடுகளில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதற்காகவே ஆஷூரா நோன்புடன் இன்னொரு நோன்பையும் சேர்த்து வைக்கும்படி கூறினார்கள்.
عن ابن عباس
رضي الله عنهما، قَالَ: قَالَ رسول الله صلى الله عليه وسلم: ((لَئِنْ بَقِيتُ
إِلَى قَابلٍ لأَصُومَنَّ التَّاسِعَ)). رواه مسلم.
فيه:
استحباب صيام تاسوعاء مع عاشوراء مخالفةً لأهل الكتاب، لأنهم كانوا يصومون اليوم
العاشر فقط ويقولون إنه يومٌ نجى الله فيه بني إسرائيل من فرعون وقومه، فقال النبي
صلى الله عليه وسلم: ((نحن أحقُّ بموسى))، فصامه وأمر الناس بصيامه، وقال:
((خالفوا اليهود صوموا يومًا قبله أو يومًا بعده)).
மதீனாவை சுற்றிலும் யூதர்கள் அதிகம் வசித்து வந்தார்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் யூத பாடசாலை ஒன்று இருந்தது. ஒரு முரை உமர் ரலி அவர்கள் அந்த பாட சாலையை கடந்து செல்கிறார்கள் அவர்களின் காதில் தவ்ராத்தின் உபதேசங்கள் சில விழுகின்றது அது நல்ல உபதேசங்களாக இருக்கிறதே என்று நினைத்து அந்த பாடசாலையில் சில நிமிடம் அமர்கின்றார்கள் அந்த உபதேசம் அவர்களை மிகவும் கவர்ந்தது நீங்கள் வாசித்த அந்த பிறதியில் எனக்கும் ஒன்று தாருங்கள் என்று உமர் ரலி கேட்டபோது அவர்களும் கொடுத்து விடுகின்றார்கள் இதனை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு நபி
( ஸல்)
அவர்களிடம் சென்றார்கள் உமர் ரலி கரத்தில் ஏதோ ஒரு பிறதி இருப்பதைக் கண்டு உமரே! இது என்ன? என்று நபி
(ஸல்)அவர்கள் கேட்டபோது உமர் ரலி நடந்த விபரத்தை கூறினார்கள் அப்போது கடுமையான கோபமுற்ற நபியவர்கள் உமரே!
மூஸா (அலை)
அவர்கள் இப்போது உயிரோடு இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றார்கள்.
عن جابر عن
النبي صلى الله عليه وسلم: حين أتاه عمر فقال: إنا نسمع أحاديث من يهود تعجبنا،
أفترى أن نكتب بعضها؟ فقال: أمتهوكون أنتم كما تهوكت اليهود والنصارى؟ لقد جئتكم
بها بيضاء نقية ولو كان موسى حيا ما وسعه إلا اتباعي. رواه أحمد والبيهقي في كتاب
شعب الإيمان، وهو حديث حسن.
وفي رواية:
أن النبي صلى الله عليه وسلم غضب حين رأى مع عمر صحيفة فيها شيء من التوراة وقال
أفي شك أنت يا ابن الخطاب ألم آت بها بيضاء نقية، لو كان أخي موسى حيا ما وسعه إلا
اتباعي. و قد ورد الحديث من طرق أخرى ضعيفة.
எனவே நபி
( ஸல்)
அவர்கள் நபியாக ஆக்கப்பட்டபின்பு முந்தைய அனைத்து மதங்களும் காலாவதியாகி விட்டது அதை பின்பற்றுவதற்கு அனுமதி இல்லை.
இன்றும் பலவகையான மூடப்பழக்கங்கள் மாற்று மதத்தினர்களிடமிருந்து முஸ்லீம்களிடம் ஊடுருவியுள்ளது.
சகுனம் பார்ப்பது.
நாட்களில் மாதங்களில் நஹ்சு பார்ப்பது.
பூனை குருக்கே சென்றால் செல்லக்கூடிய காரியத்தில் தடை ஏற்படும் என்று நினைப்பது. வீட்டில் ஆந்தை கத்தினால் அக்குடும்பத்தார்களில் யாராவது மரணமடைவார் என்று நினைப்பது. சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை கிரக நாள் எனவே அந்த நாட்களில் எந்த நல்ல காரியமும் நடத்தக்கூடாது என்று என்னுவது இவைகள் அனைத்தும் மாற்றார்களிடமிருந்து முஸ்லீம்களிடம் ஊடுருவிய மூட நம்பிக்கைகளாகும்.
முஹம்மது நபி
( ஸல்)
அவர்களின் மகன் இப்றாஹீம் என்ற குழந்தை மரணமடைந்த பொழுது அன்றய நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது நபியின் மகன் இறந்ததால் தான் சூரியன் துக்கம் அனுஷ்டித்து கிரகணம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள் இந்த மூடநம்பிக்கையை அகற்றுவதற்காக நபியவர்கள் அனைவர்களையும் அழைத்து உபதேசித்தார்கள்.
[1043] عن المغيرة
بن شعبة قال كسفت الشمس على عهد رسول الله ﷺ يوم مات إبراهيم، فقال الناس كسفت الشمس لموت إبراهيم، فقال رسول الله ﷺ: إن الشمس والقمر لا ينكسفان لموت أحد ولا لحياته
فإذا رأيتم فصلوا وادعوا الله
1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி)
அறிவித்தார். நபி(ஸல்)
அவர்களின் காலத்தில்
(அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் “சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை.
எனவே நீங்கள்
(கிரகணத்தைக்)
கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்“ என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 16. கிரகணங்கள்
அதேபோல ஸஃபர் மாதம் பீடை மாதம் என்றும் இந்த மாதத்தில் எந்த நல்ல காரியமும் நடத்தக்கூடாது என்றும் மேலும் இந்த மாதத்தின் கடைசி புதன் கிழமை ஒடுக்கத்து புதன் என்று அந்த நாளில் வீட்டில் முஸீபத் இறங்குகிறது ஆகையால் வீட்டை விட்டு வெளியேறி கடற்கரைக்கோ அல்லது பூங்காவிற்கோ சென்று பீடை கழித்து வரவேண்டும் அந்த நாளில் தட்டில் / மாமரத்து இலையில் துஆ எழுதி அனைவரும் கழுவி குடிக்க வேண்டும் என்றும் இப்படியெல்லாம் ஒரு மூட நம்பிக்கை மக்களிடம் இருந்து வருகின்றது.
இவைகளெல்லாம் மார்க்கத்தில் இல்லாத ஆதாரமற்ற ஒரு மூட நம்பிக்கைகளாகும் எனவே இவைகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
நபி (ஸல்)
அவர்களின் காலத்தில் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதினார்கள்.
ஆயிஷா ரலி கூறுகின்றார்கள் எனக்கும் நபி ( ஸல்) அவர்களுக்கும் திருமணம் நடந்தது ஷவ்வால் மாதத்தில் தான் .
நாங்கள் முதல் முதலாக தாம்பத்தியத்தில் இணைந்ததும் இந்த மாதத்தில்தான்.
ஆனாலும் நபி
( ஸல்)
அவர்களின் மனைவிமார்களில் என்னை விட அதிக பாக்கியம் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை.
அந்த பாக்கியங்களாவன:
A. நபியவர்கள் என்னை மட்டுமே يا عائش யாஆயிஷ்
என்று சுருக்கி செல்லமாக அழைப்பார்கள்.
B. நபியவர்கள் என்னை மட்டுமே يا حميره யாஹுமைரா (செக்கச் சிவந்த சின்னப் பெண்ணே) என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார்கள்.
C. அவர்கள் என்னோடு இருக்கும்போதுதான் அதிகம் வஹி வந்துள்ளது.
D. அவர்களின் கடைசிநேரத்தில் அவர்களின் உமிழ் நீரும் என்னுடைய உமிழ் நீரும் ஒன்று சேர்ந்தது(
நபியவர்களின் கடைசி நேரத்தில் அவர்களுக்கு ஆயிஷா ரலி மிஸ்வாக்கை தங்களின் பற்கலால் நசுக்கி கொடுத்தார்கள்).
E. அவர்களின் உயிர் பிரிந்தது என் மடியில்தான் என்றார்கள்.
ஆக அரபிகள் பீடை என்று ஒதுக்கிய அந்த மாதத்தில் கல்யாணம் செய்த இவர்கள் மிகப்பெரும் பாக்கியம் பெற்றவளாக ஆகிவிட்டார்கள்.
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ
ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ ﺗﺰﻭﺟﻨﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺷﻮاﻝ ﻭﺑﻨﻰ ﺑﻲ ﻓﻲ ﺷﻮاﻝ
ﻓﺄﻱ ﻧﺴﺎء ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﺃﺣﻈﻰ ﻋﻨﺪﻩ ﻣﻨﻲ ﻗﺎﻝ ﻭﻛﺎﻧﺖ ﻋﺎﺋﺸﺔ ﺗﺴﺘﺤﺐ
ﺃﻥ ﺗﺪﺧﻞ ﻧﺴﺎﺋﻬﺎ ﻓﻲ ﺷﻮاﻝ)
من شرح مسلم
للنووي.
ﻓﻴﻪ اﺳﺘﺤﺒﺎﺏ
اﻟﺘﺰﻭﻳﺞ ﻭاﻟﺘﺰﻭﺝ ﻭاﻟﺪﺧﻮﻝ ﻓﻲ ﺷﻮاﻝ ﻭﻗﺪ ﻧﺺ ﺃﺻﺤﺎﺑﻨﺎ ﻋﻠﻰ اﺳﺘﺤﺒﺎﺑﻪ ﻭاﺳﺘﺪﻟﻮا ﺑﻬﺬا
اﻟﺤﺪﻳﺚ ﻭﻗﺼﺪﺕ ﻋﺎﺋﺸﺔ ﺑﻬﺬا اﻟﻜﻼﻡ ﺭﺩ ﻣﺎ ﻛﺎﻧﺖ اﻟﺠﺎﻫﻠﻴﺔ ﻋﻠﻴﻪ ﻭﻣﺎ ﻳﺘﺨﻴﻠﻪ ﺑﻌﺾ اﻟﻌﻮاﻡ
اﻟﻴﻮﻡ ﻣﻦ ﻛﺮاﻫﺔ اﻟﺘﺰﻭﺝ ﻭاﻟﺘﺰﻭﻳﺞ ﻭاﻟﺪﺧﻮﻝ ﻓﻲ ﺷﻮاﻝ ﻭﻫﺬا ﺑﺎﻃﻞ ﻻ ﺃﺻﻞ ﻟﻪ ﻭﻫﻮ ﻣﻦ ﺁﺛﺎﺭ
اﻟﺠﺎﻫﻠﻴﺔ ﻛﺎﻧﻮا ﻳﺖﻃﻴﺮﻭﻥ ﺑﺬﻟﻚ ﻟﻤﺎ ﻓﻲ اﺳﻢ ﺷﻮاﻝ ﻣﻦ اﻹﺷﺎﻟﺔ ﻭاﻟﺮﻓﻊ
2782. ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்)
அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்)
அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி)
அவர்கள் தங்கள்
(குடும்பப்)
பெண்களை ஷவ்வால் மாதம் (மணமுடித்து)
அனுப்பிவைப்பதையே விரும்புவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 16. திருமணம்
5757- عَنْ أَبِي
هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ: ((لاَ عَدْوَى، وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ، وَلاَ
صَفَرَ)).صحيح البخاري
5757. இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்“
தொற்றுநோய் கிடையாது.
பறவை சகுனம் ஏதும் கிடையாது.
ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது.
“ஸஃபர்“ மாதம் பீடை என்பதும் கிடையாது. என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார். 84
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
ஊடுருவிய கலாச்சாரம் வாஸ்த்து பார்ப்பது
*******************************************
மேலும் மார்க்கப்பற்று உள்ளவர்கள் கூட வீடு கட்டும்போது வாஸ்த்து சாஸ்திரம் பார்க்கின்றார்கள் இதுவும் மாற்றார்களிடமிருந்து ஊடுருவிய மூட நம்பிக்கைகளாகும். அவர்கள் இது சனிமூலை இது அக்னி மூலை வாஸ்துப்படி பெட்ரூம் இங்கேதான் வரவேண்டும் சமையல் அரை இங்கேதான் இருக்க வேண்டும் கழிவரை இங்கே இருக்க கூடாது இப்படியெல்லாம் கூறுவார்கள் அதனை நாமும் ஏற்றுக் கொண்டு அவர்கள் கூறியது பிறகாரமே நம்முடை வீட்டை கட்டுகிறோம் இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
கட்டிடம் கட்டும்போது நாம் கவணிக்க வேண்டியவை கழிவரை மட்டுமே! அவை கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ இருக்கக்கூடாது.
632ِّ عَنْ أَبِي
أَيُّوبَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((إِذَا
أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا
بِبَوْلٍ وَلاَ غَائِطٍ وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا)). قَالَ أَبُو
أَيُّوبَ فَقَدِمْنَا الشَّامَ فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ قِبَلَ
الْقِبْلَةِ فَنَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ قَالَ نَعَمْ. ( صحيح
مسلم)
439. நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கவும் வேண்டாம்;அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் (ரலி)
அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் ஷாம் (சிரியா)
நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம்.
ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்;அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)
அவர்கள் கூறுகின்றார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்)
அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ பின் யஸீத்
(ரஹ்)
அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ
(ரஹ்)
அவர்கள் அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன்.
அதற்கு சுஃப்யான்
(ரஹ்)
அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை
பீடையை விரட்ட பஜ்ர் தொழுவோம். "சூரத்துல்
பகரா"வை ஓதுவோம்.
*********************
எந்த வாஸ்தும் பார்க்க வேண்டியதில்லை அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் விரும்பியவாறு கட்டிடத்தை கட்டலாம் . பின்பு வீட்டில் சூரத்துல் பகரா தொடர்ந்து ஓதி வந்தால் பாதுகாப்பு உறுதி.
عَنْ أَبِي
هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ.
رواه مسلم،
باب استحباب صلاة النافلة في بيته....، رقم:١٨٢٤
மய்யித்துகளை அடக்கம் செய்யும் இடமாக உங்கள் வீடுகளை ஆக்கிவிடாதீர்கள்; அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டு வீடுகளைச் செழிப்பாக்குங்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுமோ அவ்வீட்டை விட்டும் ஷைத்தான் ஓடி விடுகிறான்'' என்று ரஸூலுல்லாஹி
(ஸல்)
அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா
(ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்லிம்)
ஊடுருவிய கலாச்சாரம் தீபாவளி கொண்டாட்டம்
**********************************************
அதேபோல இன்னும் சில தினங்களில் தீபாவளி வர இருக்குகின்றது. ஆனால் இதனை இஸ்லாமிய குழந்தைகளும் பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் மிகவும் கவலைக்குறிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் மாற்றாரின்
மதரீதியான விழாவில் நாம் பங்கெடுப்பது
குஃப்ரை திருப்தி கொள்வதாகும். எனவே அவைகளை தவிற்க வேண்டும்.
قال تعالى:
(والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراماً) [الفرقان: 72
وَقَالَ
أَبُو الْعَالِيَةِ، وَطَاوُسُ، وَمُحَمَّدُ بْنُ سِيرِينَ، وَالضَّحَّاكُ،
وَالرَّبِيعُ بْنُ أَنَسٍ، وَغَيْرُهُمْ:الزور هِيَ أَعْيَادُ الْمُشْرِكِينَ
تفسير ابن كثير
மூன்று வழிமுறையில் தவிற்கலாம்
1.கலந்து கொள்ள முடியாது என உரக்க முழங்க வேணடும். பிர்அவ்ன் முன்பு சொன்னது போல்
قَالُوْا
لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا
فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை
(மேலானவனாக)
நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 20:72)
2 வது வழி முறை
நபி இப்ராஹீம் ]அலை[ அவர்கள், முஷ்ரிகான மக்களின் திருவிழாவிலிருந்து எப்படி நளினமான முறையில் நான் நோயாளி எனக்கூறி நழுவிக்கொண்டார்களோ அதைப்போல.
فَقَالَ
إِنِّي سَقِيمٌ (الصافات 89)
وَقِيلَ:
أَرَادَ {إِنِّي سَقِيمٌ} أَيْ: مَرِيضُ الْقَلْبِ مِنْ عِبَادَتِكُمُ
الْأَوْثَانَ مِنْ دُونِ اللَّهِ عَزَّ وَجَلَّ.
وَقَالَ
الْحَسَنُ الْبَصْرِيُّ: خَرَجَ قَوْمُ إِبْرَاهِيمَ إِلَى عِيدِهِمْ،
فَأَرَادُوهُ عَلَى الْخُرُوجِ، فَاضْطَجَعَ عَلَى ظَهْرِهِ وَقَالَ: {إِنِّي
سَقِيمٌ} ، تفسير ابن كثير
அதுபற்றி ஸஹீஹுல் புகாரி 3358ம் ஹதீஸில் விரிவாக இப்படி வருகிறது.
இப்ராஹீம் (அலை)
அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை.
அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தின் நலன்கருதி சொன்னவையாகும்
.
அதில் ஒன்று தான் அவரை இணை வைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது நான் நோயுற்றிருக்கின்றேன் என்று
(அவ்விழாவில்கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) பொய்யாக கூறினார்கள்.
3 வது வழிமுறை.
உயிருக்கு ஆபத்து எனில் அனுமதி சின்னதாக உண்டு
அம்மார் பின் யாஸிர் (ரலி)
அவா்களின் பெற்றோறை கொன்றவர்கள், அம்மார்(ரலி)யை மடடும் ஏன் கொல்லவில்லை?
இவர்கள் வாயளவில்
(மட்டுமாவது)
ஷிர்கை ஒத்துக் கொண்டதால் கொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
இவ்வாறு ஏற்படடது பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்
مَنْ كَفَرَ
بِاللّٰهِ مِنْ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّ
بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ
مِّنَ اللّٰهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர்
(மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)
ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்)
எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 16:106)
உங்களுடைய பெருநாட்களில் நாங்கள் கலந்து கொள்கிறோம் எங்களின் திருவிழாக்களில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினாலும் நாம் அந்த விழாக்களை கொண்டாடக்கூடாது
ஒரு முறை குறைஷியர்கள் நபியவர்களோடு சமரசம் செய்துகொள்ள பின்வருமாறு கூறுகிறார்கள்:
நாங்கள் வணங்கும் தெய்வங்களை நீங்கள் சில காலம் வணங்குங்கள், நீங்கள் வணங்கும் இறைவனை சில காலம் நாங்கள் வணங்குகிறோம் எனக் கூறினர். அதற்கு பதிலாக கூறத்தான் அல்லாஹ், நபி (ஸல்)
அவர்களுக்கு குர்ஆனின் 109-வது அத்தியாயமான قل يا ايها
الكافرون சூராவை இறக்கிவைத்தான்.
ذَكَرَ
ابْنُ إِسْحَاقَ وَغَيْرُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ سَبَبَ نُزُولِهَا أَنَّ
الْوَلِيدَ بْنَ الْمُغِيرَةِ، وَالْعَاصَ ابن وَائِلٍ، وَالْأَسْوَدَ بْنَ عَبْدِ
الْمُطَّلِبِ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ، لَقُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا مُحَمَّدُ، هَلُمَّ فَلْنَعْبُدْ مَا تَعْبُدُ،
وَتَعْبُدُ مَا نَعْبُدُ، وَنَشْتَرِكُ نَحْنُ وَأَنْتَ فِي أَمْرِنَا كُلِّهِ،
فَإِنْ كَانَ الَّذِي جِئْتَ بِهِ خَيْرًا مِمَّا بِأَيْدِينَا، كُنَّا قَدْ
شَارَكْنَاكَ فِيهِ، وَأَخَذْنَا بِحَظِّنَا مِنْهُ. وَإِنْ كَانَ الَّذِي
بِأَيْدِينَا خَيْرًا مِمَّا بِيَدِكَ، كُنْتَ قَدْ شَرِكْتَنَا فِي أَمْرِنَا،
وَأَخَذْتَ بِحَظِّكَ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ قُلْ يَا أَيُّهَا
الْكافِرُونَ.القرطبي
விழாவை முன்னிட்டு
அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடலாமா?
**********************************************
மாற்றுமத சகோதரர்களாக இருக்கும் நம் அண்டை வீட்டார் அல்லது நண்பர்கள் அவர்களின் பண்டிகையை முன்னிட்டு உணவுப் பண்டங்கள் கொடுத்தனுப்பும் போது பூஜிக்கப்பட்டதாகவோ அல்லது சந்தேகமோ ஏற்பட்டால் அதை சாப்பிடுவது ஹராம்.
ஆனாலும் காலத்தின் சூழ்நிலை கருதி அதனை வாங்கிக் கொண்டு நாம் சாப்பிடாமல் முஸ்லிம்மல்லாதவர்களுக்கு அதை கொடுக்க வேண்டும்.
அவர்கள் அந்த பண்டங்களை வைத்து பூஜிக்காமல் நமக்கு தனியாக கொடுத்துள்ளார்கள் என்ற உறுதி இருந்தால் சாப்பிடலாம் என்றிருந்தாலும் கூட பேணுதல் என்ற அடிப்படையில் நாம் சாப்பிடாமல் முஸ்லிம்மல்லாதவர்களுக்கு அதை கொடுக்க வேண்டும்.
إِنَّمَا
حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ
لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ
غَفُورٌ رَحِيمٌ
தானாக செத்ததும் இரத்தம் பன்றியின் இறைச்சி அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் சொல்லப் பட்டு
(அறுக்கப்பட்டதும் அல்லது பூஜிக்கப்பட்டதும்
அது அறுக்கப்படும் உயிரிணமோ/மற்றவைகளோ அது) ஹராம் தான்.
வெடி பட்டாசு நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க கூடாது
407 - ﻭﻋﻦ ﺃﺑﻲ
ﺑﺮﺯﺓ - ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ - ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ -
ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟
ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟ ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟».
ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417). 2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ».
)
4 காரியம் பற்றி பதில் சொல்லாத வரை கியாமதில் அசைய முடியாது அதில் 1.எவ்வாறு சம்பாதித் தாய்? 2. எவ்வாறு செலவழிததாய்?
பட்டாசுகளினால் ஏற்படும் பாதிப்பு
***************************************
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசு-படுத்துகின்றன. தீபாவளி அன்றைக்குக் காலையிலும்,தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படிச் சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்தப் புகைமூட்டம் எப்படி உங்களைப் பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.
எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்தப் புகைமூட்டம் இருக்கும்.
நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளைத் தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு,கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:
செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்
காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு
காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்
மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பதக் காற்றுடன் வினைபுரிந்து தோலைப் பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்.
**************************************
அப்படியானால் அவங்களிடம் நட்பு-தொடர்பே கூடாதா? தாராளம் கூடும்.
கண்டிப்பாக வேனும்.
لا يَنْهَاكُمُ
اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم
مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ
يُحِبُّ الْمُقْسِطِينَ
தீன் (இறைமார்க்கம்)
தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை.
திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (60:8)
இஸ்லாத்திற்கு அடிபணிவோம்
*************************************
எனவே மாற்றார்களின் எந்த கலாச்சாரமும் முஸ்லீம்களிடம் வந்து விடக்கூடாது முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கே அடிபணிய வேண்டும் இஸ்லாத்திற்கு அடிபணிதல் என்பது அல்லாஹ்வும் அவன் தூதரும் ஏவியதைச் செய்வதும் தடுத்ததை விட்டும் தவிழ்ந்து கொள்வதுமாகும்.
وَلَنْ
تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ
إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ
الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(البقرة120)
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள்.
(ஆகவே,அவர்களை நோக்கி)
“நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்)
அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
(அல்குர்ஆன் : 2:120)
وَمَنْ
يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْاٰخِرَةِ
مِنَ الْخٰسِرِيْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு)
மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது)
ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(அல்குர்ஆன் : 3:85)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.